அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன். adminJuly 9, 2023 காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் க…
-
- 0 replies
- 581 views
-
-
அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியலும் ஸ்ரீலங்கா அரசியலில் 52 நாட்களாக இடம்பெற்ற குழப்பம் முடிவுக்கு வந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மூன்றரை வருடமாகத் தொடர்ந்த மைத்திரி – ரணில் தலைமையிலான “நல்லாட்சி” அக்டோபர் 26 இல் முடிவுக்கு வந்தது. மகிந்த ராஜபக்ஷவின் பதவியேற்பு அந்த நல்லாட்சிக்கு முடிவு கட்டியது. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குத்தான் உரியது என சம்பந்தன் என்னதான் முரண்டு பிடித்தாலும் கூட ரணில் அரசாங்கத்தில் அவர் ஒரு “பகிரங்கப்படுத்தாத பங்காளி”யாக தான் இருக்கிறார். கூட்டமைப்பின் தலைமை சொல்லக்கூடிய விஷயங்களை செவிமடுத்து செயல்படுத்தும்…
-
- 0 replies
- 677 views
-
-
நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும் நிறான் அங்கிற்றல் படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்…
-
- 0 replies
- 239 views
-
-
மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 06:32Comments - 0 போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. அதன்மூலம், தமக்கான ஆதரவுத்தளத்தை, இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது; ஓன்றில் ஒன்று தங்கி வளர்கின்றன. இது உலகெங்கும் பாரிய சவால்களை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் மய்யங்கொண்டு, மேற்குலகில் தனது கைவரிசையைக் காட்டி வந்த இஸ்லாமி…
-
- 0 replies
- 931 views
-
-
மாற்றுத் தலைமை ஒன்றிற்கான சந்தர்ப்பம் தவறவிடப்படுமா? யதீந்திரா மாற்றுத் தலைமை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணமுடியவில்லை. அது தொடர்பான உரையாடல்களும் பெருமளவிற்கு கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக சுருங்கிக்கொண்டு செல்கிறது. இது தொடர்பில் அதிகம் எழுதப்பட்டுவிட்டது. அதிகம் விவாதிக்கப்பட்;டுவிட்டது. ஆயினும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியதான செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை…
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கைப் பொதுமக்கள் முன்னணி சார்பில் அடுத்த தேர்தலில் களமிறங்கப்போகும் அரச தலைவர் வேட்பாளர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சதான் என்பது நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாயிற்று. மகிந்த குடும்பத்தில் இருந்து அதிகார நாற்காலிக்காக வந்திருக்கக்கூடிய மற்றொரு நபராக மீண்டும் குடும்ப ஆதிக்கத்தின் வெளிப்பாடாக வந்திறங்கியிருக்கிறார் கோத்தபாய. மகிந்த அணியிலிருந்து அடுத்த வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எதிர்வுகூறல்களும் நீண்ட நாள்களாகவே இருந்து வந்திருக்கின்றன. …
-
- 0 replies
- 465 views
-
-
‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’ காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 24 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:55 யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம். அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்…
-
- 0 replies
- 642 views
-
-
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆறு தசாப்த காலங்களுக்கு மேற்பட்ட இலங்கையின் இராஜதந்திர உறவுகள் வரலாற்றில், குறுகிய காலப் பகுதிக்குள் (சுமார் பத்து மாதங்கள்) அமெரிக்காவின் அதிஉயர் மட்ட அதிகாரிகள் அதிகமான பயணங்களை இலங்கைத் தீவுக்கு மேற்கொண்டமை இதுவே முதற்தடவை. இது, பூகோள அரசியல் – பொருளாதாரத்தில்…
-
- 0 replies
- 457 views
-
-
அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர் போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண…
-
- 0 replies
- 688 views
-
-
சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 06 , மு.ப. 03:57 எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது. புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியே எடுத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராகவோ, இரா. சம்பந்தனின் முடிவைத் தாண்டியோ சிந்திக்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை உச்சம்பெற்றிருந்த நிலையில், மன்னாரில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில், …
-
- 0 replies
- 987 views
-
-
[size=3][size=5]அருண்மொழிவர்மன்[/size][/size] [size=3][size=4][/size] [size=4]2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் குறித்தான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருப்பது என்னைப் போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.[/size] [size=4…
-
- 0 replies
- 727 views
-
-
‘கஜபா’க்களின் காலம்! இந்தியா புதிதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (கூட்டுப்படைகளின் தளபதி) என்ற பதவியை கடந்த ஜனவரி 1ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது. இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பாரிய போர்களை நடத்தியிருந்த போதிலும், கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னரே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச அளவில், பாதுகாப்பு அதிகா…
-
- 0 replies
- 817 views
-
-
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும் முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது. பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (…
-
- 0 replies
- 152 views
-
-
சுமந்திரனுடன் ஒரு "கருத்தாடல்" | M. A. சுமந்திரன்
-
- 0 replies
- 669 views
-
-
மக்களுக்குச் சேவை செய்ய இத்தனை சண்டைகளா...? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:22 இம்மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியபட்டியல் மூலம் 7 ஆசனங்கள் கிடைத்த போதிலும், அச்சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு, அவற்றில் ஓர் ஆசனமேனும் கொடுக்கப்படவில்லை. அக்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போ…
-
- 0 replies
- 387 views
-
-
விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும் – மு.திருநாவுக்கரசு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — சீனா — பாகிஸ…
-
- 0 replies
- 369 views
-
-
போதுமானதா பிரதமரின் மன்னிப்புக் கோரல்? முதலாவதும் கடைசியுமான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான இறுதிப் பிரசார வேலைகள் நடைபெறும் நிலையில், அவ்வருடம் மே மாதம் 31 ஆம் திகதி, ஆசியாவிலேயே மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம் தீ வைத்து அழிக்கப்பட்டது. 35 வருடங்களுக்குப் பின்னர் அப்போது நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனா…
-
- 0 replies
- 287 views
-
-
ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா? மூன்றிலிரண்டு முடிவெடுக்கட்டும்! – பனங்காட்டான் பனங்காட்டான் ஆங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம். இலங்கைத் தமிழர் அரசியலில் இப்பதம் எப்போதும் சாகாவரம் பெற்றது. மீண்டும் ஜெனிவாக் கூட்டத்தொடர் பற்றியே தமிழரின் அரசியல் கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்காக ஒற்றுமை அல்லது இணக்கம் என்பது தேடப்படுகிறது. இலங்கை நாடாளுமன்ற அரசியலில் உதயமான முதலாவது தமிழர் அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ். அதன் உருவாக்கத் தலைவர் (காலஞ்சென்ற) ஜி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனீவா கால அவகாசம் ஜெனீவாவில் அடுத்தவாரம் கூடவிருக் கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், ‘காலஅவகாசம்’ கோருவதற்கான முயற்சிகளில் அர சாங்கம் இறங்கியிருக்கின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கே, அரசாங்கம் மேலும் காலஅவகாசம் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங் கள சமரவீர கூறியிருந்தார். எனினும், எவ்வளவு காலஅவகாசத்தை அரசாங்கம் கோரவுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், 18 மாத காலஅவகாசம் கோருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியி…
-
- 0 replies
- 605 views
-
-
பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! மறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்ரோன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் தனதாக்கி, தனக்கு எதிராகப் போட்டியிட்ட மேரியன் லீ பென் என்பவரை வென்று பிரான்சின் புதிய அதிபராகியுள்ளார். இவரது வெற்றியானது வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள கடுமையான பதிலையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்வாறான வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதமே டொனால்…
-
- 0 replies
- 438 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா? பல்கலைக்கழகம் என்பது அதன் பெயருக்குப் பொருத்தமானதாகவே இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. கற்கைநெறிகளைச் சுதந்திரமாக அனுபவித்துக் கற்கின்ற ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் என்பதும் இதன் ஒரு கருத்தாகும். ஆனால், பகடிவதை என்பது முக்கியமானதொன்றாகப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகள், அனர்த்தங்கள், பின்னடைவுகள் மிகவும் மோசமானது. அதனால்தான், தற்போது பல்கலைக்கழகங்களில் பகடிவதை தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஈடுபடுபவர்களைப் பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கிவிடுவதுடன், அவர்கள் எந்தவொரு ப…
-
- 0 replies
- 428 views
-
-
தேவையற்றதாக மாறி விட்டதா வடமாகாண சபை? இந்தியத் தூதுவர் புத்திமதி கூறும் அளவுக்கு வடக்கு மாகாணசபையின் ஒற்றுமை சந்தி சிரிக்க வைத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்தியத் தூதர் தரன்ஜித்சிங்º, வடக்கு முதலமைச்சரையும் சந்தித்து உரையாடியுள்ளார். இதன் போதே வடக்கு மாகாண சபையில் ஒற்றுமையாகச் செயற்படுமாறும், அப்போது தான் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும், வடக் கின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றத்தைக் காணமுடியுமெனவும், முதலமைச்சருக்கு இந்தியத்தூதுவர் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தன்னிச்சையாகச் செயற்…
-
- 0 replies
- 442 views
-
-
இந்தியத் தூதரகம் நிறுத்தியதா? அப்படியானால், உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கப் பிரேரணை சமர்ப்பித்துப் பரீட்சிக்கலாமே! தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் பகிரங்கக் கேள்வி நாடாளுமன்ற நடைமுறை விதிமுறைகள் (Practical Terms) மற்றும் அங்கு நடைபெறவுள்ள அல்லது நடைபெற்ற விவாதங்களின் முக்கியமற்ற தன்மை அல்லது பிரதானப்படுத்தக்கூடிய விவாதங்கள் (Highlighted Debates) எது என்பதை நாடாளுமன்றச் செய்தியாளர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற விவாதங்களில் பேசும், அல்லது பிரேரணை, சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து விவாதங்களை நடத…
-
- 0 replies
- 312 views
-
-
தமிழர் வரலாற்றில் ஏமாற்றங்கள் லக்ஸ்மன் மாற்றங்கள், தமிழர் வரலாற்றில் மறக்கப்பட முடியாத, மாற்றப்பட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அது நம்மவர்களாலும் நண்பர்களாலும், எதிரிகளாலும் கூட நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நமது முயலுமைகள் பயனற்றுப் போதல் என்பதும், எதிர்பாராமலே நம் எதிர்பார்ப்புகள் நிகழாமல் போதலும், நிகழாமலாக்கப்படுவதும் இந்த ஏமாற்றங்களுக்குள் அடக்கம். இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட பெரும்பான்மையினரின் நெருக்குதல் நடவடிக்கைகளால் உருவானதே இனப்பிரச்சினையாகும். அதனைக்கூட, இந்த நாட்டுக்குள் அவ்வாறு ஒரு பிரச்சினையுமில்லை என்று சொல்லும் தலைவரே நமது நாட்டில் இருக்கிறார். இதற்கு குறிப்பிட்டளவு தமிழர்களும் உடந்தை. வரலாற்றுக் காலம்தொட்டு ஏம…
-
- 0 replies
- 332 views
-