அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு! ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரு…
-
- 0 replies
- 599 views
-
-
உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள மோதலும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய கவனமும் அமெரிக்க - ரஷ்ய மோதலினை இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் செல்லும…
-
- 0 replies
- 580 views
-
-
‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை அரசியலோடு ஒப்பிடும் போது, இந்திய அரசியல், மிகவும் சுவாரசியம் மிக்கது. அதிலும் தமிழ்நாட்டு அரசியல், இன்னுமின்னும் சுவாரசியம் வாய்ந்தது. அதுவும் அண்மைக்கால அரசியல், இன்னமும் சுவாரசியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா ஜெயராம் காலமானதைத் தொடர்ந்து, அவரின் நெருங்கிய தோழியாகப் பல ஆண்டுகள் காணப்பட்ட சசிகலா, புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி, தமிழக அரசியலை மேலும் குழப்பத்துக்கும் புதிய நாடகங்களுக்கும் வித்திட்டுள்ளது. இலங்கையின் தமிழ் அரசியலைப் போன்றே, தமிழ்நாட்டு அரசியலிலும் ஜெயலலிதாவ…
-
- 0 replies
- 682 views
-
-
தீர்வை மேலும் மேலும் வலியுறுத்தும் படுகொலைச் சதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனைப் படுகொலை செய்வதற்காகச் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, அச்சதிகாரர்களைப் போலவே, இந்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிகிறது. அந்தச் செய்தியைத் தத்தமது அரசியல் சித்தாந்தங்களுடன் பொருந்தும் வகையில் வியாக்கியானம் செய்வதில் உள்ள கஷ்டத்தினாலேயே, அவ்வாறு சிலர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே சிலர், அவ்வாறு ஏதும் நடந்து இருக்க…
-
- 1 reply
- 428 views
-
-
தகவல் அறியும் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா? - அதிரதன் சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அது தொடர்பான அடிப்படையான விடயங்கள்கூட இதுவரையில் அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த மூன்றாம் திகதி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் மட்டக்களப்பில் காணாமல் போனோர்களின் உறவினர்கள், கிழக்குப்பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயம், சிறைச்சாலைகள், மாவட்டச் செலயகம் என்பவற்றுக்குச் சென்று, தங்களது விண்ணப்பங்களைக் கையளித்திருந்…
-
- 0 replies
- 530 views
-
-
தொடரும் ஏமாற்றம் -செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக த…
-
- 0 replies
- 870 views
-
-
கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம் தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்ப தில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன. கொழும்பு, காலி முகத்திடலில் பெரும் இராணுவ அணிவகுப்புடன் வெற்றி…
-
- 0 replies
- 490 views
-
-
போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன் 02/06/2017 இனியொரு... வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிற…
-
- 0 replies
- 531 views
-
-
நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும் - கருணாகரன் “2020இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக. “2020இல் இலங்கை என்று ஒரு நாடு, அநேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு, இன்னும் குட்டி குட்டியாப் பிரிஞ்சு, ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும் அமெரிக்காவுடையதும் ரஷ்யாவுடையதும் இந்தியாவினுடையதும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும். “இலங்கைக் கொடி எங்கும் பறக்காது. அப்படிப் பறந்தாலும், அது ஏதோ ஓர் ஒதுக்குப் புறத்தில்தான் அசைந்து கொண்டிருக்கும். பறக்கும் திராணியெல்லாம் அதற்கிருக்காது. இங்கே உள்ளவர்கள் எல்லாம், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் காரில் போகவும் விசா எடுக்கவும் எல்லையில் கடவு…
-
- 0 replies
- 502 views
-
-
வடமாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் கூற்றச்சாட்டுக்கள் ! அபிவிருதிப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றதா ? "தமிழ் பேசும் மக்களின் குரல்"
-
- 0 replies
- 307 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-02-05#page-9
-
- 0 replies
- 570 views
-
-
பொசுங்கிய புரட்சிக் கனவு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், நான்காவது நாள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவினால் முடித்து வைக்கப்பட்டமை பலருக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. சிலருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. சமூக ஊடகங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் பலரும் வெளியிடுகின்ற கருத்துக்களில், இருந்து ஏமாற்றத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. மேலும், பலரது மனோநிலையை, ஆழ்மன விருப்பங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட் டம், அரசாங்கத்தினால் நிறுத்தப்…
-
- 0 replies
- 839 views
-
-
தொலைந்து வரும் அதிகாரக் கனவு - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கில், அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் கடந்த மாதம் 27ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் பேரணியில், உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது அவர் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை. இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலங்கள் எவற்றைக் கொள்வனவு செய்தாலும் அவை அரசுடமையாக்கப்படும் என்பது அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விடுத…
-
- 0 replies
- 531 views
-
-
வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:- February 5, 2017 1 Min Read ‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். வடமாகாண சபையானது இனப்படுகொ…
-
- 0 replies
- 438 views
-
-
யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்
-
- 1 reply
- 604 views
-
-
சந்தி சிரிக்கும் முஸ்லிம் அரசியல் ! - பைஸ் - உண்மையில் இங்கு கவலை என்னவெனில் முஸ்லிம் சமூகம் இன்று ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. அவற்றுக்குத் தீர்வு காணவோ அல்லது அவை பற்றி சண்டை பிடிக்கவோ எவரும் முன்வரவில்லை. மாறாக தத்தமது தனிப்பட்ட நலன்களுக்காக போராடுவதிலேயே அனைவரும் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள். தனி நபர் விடயங்களில் காட்டும் அக்கறையை சமூக விவகாரங்களில் காட்டினால், அவற்றுக்காக சண்டை பிடித்திருந்தால் இன்று எவ்வளவோ உரிமைகளை சமூகம் வென்றெடுத்திருக்கும். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் தனித்துவக் கட்சியின் இன்றைய நிலை சந்தி ச…
-
- 1 reply
- 508 views
-
-
டொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தமும் ராஜபக் ஷவின் அரசியலும் கொள்கைகளும் கண்டனத் துக்குள்ளானவையாக இருக் காமல் கவர்ச்சியானவையாக இருக்கக்கூடும். தற்போதைய அமெரிக்க அரசாங்கம் ராஜபக் ஷ அரசாங்கத்தை கண்டிக் கின்ற அதேவேளையில் விடு தலைப்புலிகளை எவ்வாறு இவர்கள் அழித்தொழித்தார்கள் என்பதை கற்றுக்கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக்கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர்மட்ட நிர்வாகப்பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்திருக்…
-
- 0 replies
- 600 views
-
-
விடிவே கிடைக்காதா ? ரொபட் அன்டனி ஐ.நா.செயற்குழுவின் முக்கிய பரிந்துரைகள் *பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தர ணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும். * எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது. *உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திற்குட்பட்ட சட்ட மொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். *பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையை கண்டறியும் நிறுவனத்தை உருவாக்கவேண்டும். * ஹெபியஸ்…
-
- 0 replies
- 410 views
-
-
அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியா? நாட்டில் இடம்பெற்ற யுத்த குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று தேவையென்ற அழுத்தம் வலிமைப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் போராளிகள் இன்னும் செயற்படுகிறார்கள். வெளிநாட்டளவில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறுவது போக்கை திசைத் திருப்பும் ஒரு ராஜதந்திர உபாயமாகவே கருதப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கும் 12 ஆயிரம் முன்னாள் புலிகளைக் கைது செய்யுங்கள். இவர்கள் சர்வதேச அமைப்புகளுடனும் ஏனைய புரட்சிகர செயற்பாட்டாளர்களுடனும் செயற்பட்டு வருகின்றார்கள் என கடு…
-
- 0 replies
- 457 views
-
-
வடிவம் மாறும் போராட்டம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்தே கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை எரியும் பிரச்சினையாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நல்லாட்சியில் அமைச்சராகப் பதவி வகிக்கின்ற மனோ கணேசன் யுத்த மோதல்கள் உச்சகட்டத்தில் இடம்பெற்ற காலப்பகுதியில் வெள்ளைவேன்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்காக உரத்து குரல் எழுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு மிக மோசமான உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. எந்த நேரத்திலும் அவரும் வெள்ளை வேனில் கடத்தப்படலாம், எந்த நேரத்திலும் அவருடைய உயிருக்கு மோசம் ஏற்படலாம் என்ற பயங்கரமான ஒரு சூழலில் அவர் காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காகச் செயற்பட்டிருந்தார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அவரும…
-
- 0 replies
- 489 views
-
-
சர்ச்சைக்குரிய உரை மீண்டும் ஆட்சிக்கு மகிந்த ராசபக்ச - கருணா |
-
- 1 reply
- 439 views
-
-
சுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி, அண்மையில் வெளியானது. பல்வேறு மட்டங்களிலும் இது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் செய்தியின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் செல்லும் வழியில், அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், எனினும் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலிருந்து அவர், அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார் என்று…
-
- 0 replies
- 562 views
-
-
வடக்கிலும் தெற்கிலும் அதிகாரப் போட்டிகளே தீர்வுக்கு முட்டுக்கட்டை அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பனிப்போர், வெளியில் தெரியும் அளவுக்கு உக்கிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அது, எந்த அளவுக்கு என்றால் கட்சித் தலைவர்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 0 replies
- 395 views
-
-
சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஆறாம் திகதி, தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகம் சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நன்றியுரை ஆற்றிய, வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில் முதன்முறையாகத் தகவல் வெளியிட்டார். கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்மராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட தற்…
-
- 0 replies
- 669 views
-
-
காத்தான்குடி படுகொலை நியாயமானதா? இன்று காத்தான்குடி பள்ளிவாசலில் அப்போதைய முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா, கரிகாலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை வெட்டி கொலைசெய்தனர். ஆனால் அது ஜீரணிக்க முடியாத, மனிதநேயத்தை நேசிப்போர் ஏற்றுகொள்ள கூடியதல்ல. காலங்கள் கடந்தாலும் அதற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பு கோரினர். ஆனால் கருணா, கரிகாலன் அவர்கள் அத்தகைய கொலைகளை செய்ய முடிவெடுத்தது ஏன் என இந்த கட்டுரையை #வாசியுங்கள். திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு…
-
- 5 replies
- 5.4k views
-