அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
இந்தியாவின் பணப் பெறுமதி அழிப்பும் அதன் அமுல்படுத்தலும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆரம்பத்திலிருந்தே, கருத்துகளைப் பிளவுபடுத்தக்கூடிய ஒருவராக இருந்தார். ஒன்றில் அவரை முழுமையாக ஆதரிப்பவர்களாகவோ அல்லது அவரை முழுமையாக எதிர்ப்பவர்களாகவோ தான், இந்தியர்கள் காணப்பட்டனர். தற்போது அவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை ஒழிக்கும் செயற்பாடும், அவ்வாறான கருத்துகளையே பெற்றுள்ளன. இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாக, 500, 1,000 ரூபாய்த் தாள்கள், அதிரடியாக இல்லாது செய்யப்பட்டன. இரவு விடுக்கப்பட்ட அறிவிப்பு, நள்ளிரவு முதலேயே அமுலுக்கு வந்தது. பழைய பணத்தை, புதிய நாண…
-
- 0 replies
- 426 views
-
-
தென்கொரியா: கிளர்ந்தனர் மக்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது அன்றாட நிகழ்வல்ல. அதிலும் மிகுந்த பணிவையும் அமைதியையும் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வீதியில் இறங்குவதென்பது ஒரு வலிய செய்தியை எப்போதுமே சொல்லும். மிகவும் வளர்ச்சியடைந்த சமூகங்கள் எனச் சொல்லப்படும் சமூகங்களிலிருந்து மக்கள் போராட்டங்கள் எழும்போது, அந்த நாடுகள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்ட விம்பங்கள் உடைந்து நொருங்குவது இயல்பு. இதனால்தான், அவ்வாறான நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிற போது, அவை ஊடகங்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. அவ்வாறு மறைக்கப்படும் போராட்டங்கள் கவனத்தை வேண்டுவன; ஏனெனில், அது அதிகார வர்க்கத்தை நெருக்கட…
-
- 0 replies
- 452 views
-
-
சித்திரவதைகளை முற்றாக தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கையில் இரகசிய முகாம்கள் இருந்தனவா என்றும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றனவா எனவும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கியநாடுகள் குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஆரம்பமானது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டபோதே இவ்வாறான கேள்விகளை அந்தக்குழுவின் உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். இலங்கையின் யுத்தகாலத்தில் இரகசிய முகாம்கள் பேணப்பட்டதா? பொறுப்புக்கூறல் பொறிமுறையின்…
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கையின் மத மற்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அங்கவீனமுற்ற படையினரை சிலர் தங்கள் அரசியல் நோக்கங்களிற்காக பயன்படுத்த முனைந்துள்ளமை, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே அவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், பௌத்த மதகுருமார் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அதிகளவிற்கு வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளமை மற்றும் சமூக ஊடகங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பரந்துபட்ட அளவில் காணப்படுவது போன்றவையே குறிப்பிட்ட சம்பவங்களாகும் என அற…
-
- 1 reply
- 413 views
-
-
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட, இருவருமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரே மேடையில் பேசுவதை தவிர்த்தே வந்தனர், இந்த நிலைமையானது இருவருக்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுடன் அதனையே நம்புமாறும் நிர்பந்தித்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை தமிழரசு கட்சியால் தருணம் சரியல்ல, என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன் பங்குகொண்ட…
-
- 0 replies
- 394 views
-
-
காட்டுமிராண்டி பௌத்த துறவிகளின் தொடரும் வன்முறை எதிர்கொள்ளப்பட வேண்டும்! 11/16/2016 இனியொரு... மட்டக்களப்பில் தமிழ்க் கிராம சேவரைத் நடுத்தெருவில் வைத்துத் திட்டித்தீர்த்த காட்டுமிராண்டி பௌத்த பிக்கு தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இலங்கை அரசு இன்று பேசிவரும் நல்லிணக்கம் என்ற கருத்தியலின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த பௌத்த துறவி தனியாள் இல்லை. இன்றைய இலங்கையின் சிங்கள பௌத்த மனோ நிலையின் மொத்த உருவம் தான் இவர். யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவர்களைக் கொலை செய்வதற்கான துணிவை வழங்கியதும், பௌத்த துறவியை பொலிஸ் முன்னிலையில் பேச வைத்ததும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியல் தான். ஆக, இப் பௌத்த துறவி நல்லிணக்கம் என்று இலங்கை அரசு கூறும் அழகான வார்த்தை சிங்கள…
-
- 0 replies
- 559 views
-
-
எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் எ…
-
- 0 replies
- 525 views
-
-
கூட்டமைப்பை நோக்கி கூச்சல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்தித்து நிற்கின்றன. கானல் வெளியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தவர்கள் கொள்ளும் எரிச்சலுக்கு ஒப்பானது அந்த ஏமாற்றம். விளைவு, காட்டுக் கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதுமான கருத்துகளையும் விமர்சனங்களையும் வேண்டி நிற்கின்ற தருணத்திலேயே, இந்தக் கூச்சல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்குப் பெறுமதியான (கனதியான) தீர்வினைப் புதிய அரசியலமை…
-
- 0 replies
- 389 views
-
-
அதிபராகும் ஹிலாரியின் கனவு கலைந்தது எப்படி?
-
- 0 replies
- 484 views
-
-
அமெரிக்க மக்களின் தீர்ப்பு குறித்து எம்மவர்கள் ஆளமாக பதட்டப்படுவதும் அமெரிக்க மக்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போன்று தள்ளி நிற்பதும் தெரிகிறது. அமெரிக்க மக்களின் அரசியல்வாதிகள் மீதான விசவாசத்தின் கடைசி பின்னகர்தல் கறுப்பு இனத்தவரை இருமுறை ஐனாதிபதியாக்கியது என்பதை அரசியல்வாதிகள் உணராததன் வெடிப்பே இது. இது அடுத்த வருடம் பிரான்சிலும் எதிர்பார்க்கலாம். இரண்டாவது சுற்றுக்கே தேவையேற்படாமலும் போகலாம். எம்மவரின் பதட்டம் புரிந்து கொள்ளக்கூடியதே. அடுத்தவரின் நிழலில் வாழத்தலைப்படும் இனத்தின் தளம்பல்நிலை இது. தனக்கென்று ஒரு நிலமில்லாத இனத்தில் 10 வீதம் மக்களே ஒரு இனத்தின் விடுதலைக்கு பங்காளிகளாக வரக்கூடிய ஒரு இனத்தில் இதைவி…
-
- 16 replies
- 1.3k views
-
-
நல்லிணக்க செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் இனவாத சக்திகள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன. அரசாங்கமானது அரசியலமைப்பை மாற்றியமைத்து பிரச்சி னைக்கு தீர்வுகாண்பதற்கான முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்த முயற்சிகளைக் கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையி…
-
- 0 replies
- 217 views
-
-
அபாய சங்கு முகம்மது தம்பி மரைக்கார் மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளின் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பௌத்தர்கள் யாருமில்லாத தமது பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, அங்குள்ள மக்கள்தான் பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். ஆனால், அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அதுகுறித்து அக்கறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. …
-
- 1 reply
- 501 views
-
-
விடிவு வராது: இப்போதைக்கு ‘வீடியோ’தான் தெய்வீகன் மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான - இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது. “தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான்; உங்கள் எல்லோரையும் கொன்றொழிப்பேன்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் குழறும் அந்த மதகுருவின் பேச்சுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் அந்தக் கிராமசேவகர் சிலைபோல நிற்கிறார். தொடர்ந்தும் தனது குரூரமான முகபாவங்களால் திரட்டிய பல கெட்டவார்த்தைகளை அந்தக் கிராம சேவகரின் மீது கொட்டித்தீர்க்கிறார் அந்தப் பிக்கு. அந்தக் கிராமசேவகர் எந்தப் பதிலும்…
-
- 0 replies
- 309 views
-
-
வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் அறிமுகமானது. ஈழத் தமிழ் மக்கள்மீது மிகக் கொடிய இனப்படுகொலை போரை நடாத்திவிட்டு அந்தப் போரரையே நல்லிணக்கத்திற்காக நடத்தியதாக கூறியவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் கலாசார உரிமை மீறல்களையும் தீவிரவாக முன்னெடுத்தபோது அதற்கு நல்லிணக்க நடவடிக்கை என்றே பெயர் சூட்டினார் மகிந்த ராஜபக்ச. உலகில் மனிதாபிமானத்திற்காக, இனப்படுகொலை போர்…
-
- 0 replies
- 709 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் அதிர்ச்சி தரும் முடிவும் அவர் கோடீஸ்வர வர்த்தகர். ரியல் எஸ்டேட் துறையில் பெரும் உடமைகளுக்கு சொந்தக்காரர். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சியின் மீது அவரது கவனம் குவிகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசியல் பற்றிப் பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்த கறுப்பின மனிதரை சாடுகிறார். அந்த இளைஞன் அமெரிக்காவில் பிறக்கவில்லை. அமெரிக்கப் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவன் அந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறான் என்றால், அதனை விடவும் மோசடி இருக்க முடியாது என்கிறார். அடுத்து, அந்தக் கறுப்பின மனிதரான அமெரிக்க ஜனாதிபதியின் முறை. பத்திரிகை…
-
- 4 replies
- 843 views
-
-
ஆவா குழு விவகாரம் தொடர்பிலான சர்ச்சை யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. இந்தக் குழுவை யார் உருவாக்கினார்கள். அதன் நோக்கம் என்ன, அதன் பின்னணி என்ன என்ற விடயங்களில் தொடர்ந்தும் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு சில மேஜர்தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டதாகும். இதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய …
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ; முடிவுகள் சொல்லும் செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வரை கொழும்பில் பணியாற்றிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரியொன்றின் செய்தியாளரான நண்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாளான கடந்த திங்கட்கிழமை முகநூலில் பதிவொன்றைச் செய்திருந்தார். ‘அபிப்பிராய வாக்கெடுப்புகள் பலவற்றில் டொனால்ட் ட்ரம்பை விடவும் ஹிலாரி கிளின்டனே முன்னணியில் நிற்பதாகத் தோன்றினாலும் மக்கள் செல்வாக்கில் இருவருக்கும் இடையிலான வெளி குறுகிக்கொண்டே வருகின்றது. 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால், ஹிலாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்…
-
- 0 replies
- 484 views
-
-
ஹிலாரிக்காக தேங்காய் உடைக்கிறார் சிவாஜிலிங்கம் என்றவுடன் பொங்கி எழுந்தார்கள் பலரும். அரைவேக்காடு இப்படித்தான் பலதும் செய்யும் என்றார்கள். இப்ப நம்ம சுமேந்திரனே இப்படிச்சொல்கிறார். ”ட்ரம்பின்” வெற்றி இலங்கை மீதான அமெரிக்க அழுத்தத்தை குறைக்கும். ஆனால் நாம் சமாளிப்போம் -#சுமந்திரன் அப்போ சிவாஜிலிங்கம் தேங்காய் உடைத்தது தமிழர் நன்மை கருதித்தானே? ஒருவன் செய்வது எல்லாம் தப்பு என்று நாம ஒரு முடிவை எடுத்து வைத்துக்கொண்டு அவர் செய்வது அனைத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கப்படாது கண்டியளோ...
-
- 5 replies
- 654 views
-
-
ட்ரம்பின் குரல் எப்படி பெரும்பான்மை அமெரிக்கர்களின் குரலானது? அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் கடன்காரர், 18 வயதை எட்டும் கல்லூரி மாணவர்களில் 70% பேர் கடனாளிகள் “கோர்பச்சேவ், கதவைத் திறங்கள்; கோர்பச்சேவ், இந்தச் சுவரை இடித்துத் தள்ளுங்கள்” - அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், அப்போது மேற்கு பெர்லின் என்று அழைக்கப்பட்ட நகரில் பேசியது, 12.06.1987. “மிகச் சிறந்த, பெரிய, அழகிய நாளை (எதிர்காலம்) நமதே” ஃப்ளோரிடா மாநிலத்தின் ஆர்லாண்டோ நகரில் உள்ள வால்ட் டிஸ்னி கேளிக்கை நகரில் 1964 முதல் நாளது வரை பாடப்படும் நிகழ்ச்சியின் தொடக்கப் பாடல். “எதிர்காலம் என்பது, கடந்த காலத்தைப் போல இருக்காது” - ஓஹியோ கிராமப் பக…
-
- 0 replies
- 564 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வரவு –- செலவுத்திட்டத்தின் கரிசனை என்ன? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகை அளிக்கப்படவில்லை. போரினால் நிர்க்கதியான மக்கள் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு உள்ளேயே உள்வாங்கப்படுகின்றனர். இதனை நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு–செலவுத்திட்டமும் வெளிப்படுத்தியுள்ளது. காரணம், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை விசேடமாகப் போசிப்பதற்கான ஏற்பாடுகளை வெளிப்படையாக வரவு–செலவுத்திட்டத்தில் சுட்டிக்காட்ட முடியவில்லை. போர் முடிவடைந்து தற்போது ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வடக்குக் கிழக்கில் யுத்தத்தின் அவலங்கள் நிறைவடைந்தே…
-
- 0 replies
- 451 views
-
-
புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல் ஊருக்குள் பெரிய ஆஜானபாகுவான ஆட்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ‘மைனர்கள்’, வெளியூருக்கு சென்று அவமானப்பட்டு வருவார்கள். ஊர் எல்லைக்குள் வந்ததும், மீண்டும் வீரமும் தற்பெருமையும் பேசத் தொடங்கி விடுவார்கள். தனது உடம்பில் இருப்பது அடிபட்ட காயமல்ல, மாறாக வெளியூர் சண்டியனுக்கு அடித்தபோது ஏற்பட்ட கீறல்கள் என்பது போலிருக்கும் அவர்களது பேச்சுக்கள்! அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமான மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் கடந்த இரு வாரங்களாக சர்ச்சைகளையும் வார்த்தை மோதல்களையும் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தி இருக்கின்றது. …
-
- 0 replies
- 803 views
-
-
சர்ச்சையைக் கிளறிய சீனத்தூதுவர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் கடந்த முதலாம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்கள் குழுவொன்றுடன் நடத்திய சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களே இந்த நிலைமைக்கு முக்கியமான காரணமாகும். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீனத் தூதுவர் அளித்திருந்த பதில்கள், சீனாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அப்பால் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் தொனியையும், கேள்வி எழ…
-
- 0 replies
- 468 views
-
-
முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள நல்லாட்சி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் இனவாதிகளினால் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார்கள். பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். இதனை அன்றைய அரசாங்கம் பாராமுகமாக இருந்தது. ஆளு் தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கைகளை விடுத்தார்களேயன்றி, அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு வலுவற்றவர்களாகவே இருந்தார்கள். இந்நிலையில் ஆட்சி மாற்றம்தான் முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த வழி என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் வந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் சுயமாகவே மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 413 views
-
-
ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? அமெரிக்காவில் கடந்தவாரம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நம்பிக்கையையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்டிருந்த பெரும்பாலான ஊடகங்களினது கருத்துக்கணிப்புகளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் பிரசாரங்களின் போது, பலசமயங்களில் கோமாளித்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அவர். ஆனாலும், அவரது தீவிரமான கருத்துகள்- பெரும்பான்மையான வ…
-
- 0 replies
- 421 views
-
-
தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வது – நிலாந்தன் புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் சி…
-
- 0 replies
- 332 views
-