அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
மேற்கு சகாரா: பாலைவனத் துயரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒரு நாட்டின் உருவாக்கம் காலச்சுழலால் மட்டுமன்றி அதன் வரலாற்றின் வரைபினாலும் தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் அல்லாத அனைத்தும் முக்கியம் பெற்ற காலத்தில் நாடுகள் கொலனிகளாகின. தசாப்தங்கள் கடந்த பின்னும் கொலனியாதிக்கம் விட்டுச்சென்ற வலித்தடங்கள் இன்னும் துயருடன் தொடர்கின்றன. குரங்கு அப்பம் பிரித்த கதையாய் ஆபிரிக்காவைக் கொலனியாதிக்க சக்திகள் கூறுபோட்டதன் துர்விளைவுகளை ஆபிரிக்க மக்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள். மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவின் மெக்ரெப் பிராந்தியத்தில் உள்ள பிரதேசமாகும். இது வடக்கே மொராக்கோவையும் வடகிழக்கே அல்ஜீரியாவையும் கிழக்கிலும் தெற்கிலும் மொரிட்டானியாவையு…
-
- 0 replies
- 453 views
-
-
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாராளுமன்றமும் அதற்குள்ள அதிகாரமும் புதிய அரசியலமைப்பும் ஓர் ஆய்வு இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இன்று வரை மூன்று அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 1948 ஆம் ஆண்டு முதல் சோல்பரி அரசியல் சட்டத்தின் கீழும் 1972ஆம் ஆண்டு முதல் முதலாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டு முதல் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும் ஆளப்பட்டு வந்தது. தற்போது அமுலில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் அடுத்த பட்ஜெட் தொடருக்கிடையில் மாற்றப்படவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆகவே நாலாவது அரசியலமைப…
-
- 0 replies
- 2.4k views
-
-
அரசியல் மயப்படுத்தபட்ட சிந்தனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் வடபகுதியில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பு சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. ஊடகங்களில் இது, தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்தது. அரசியல் மட்டங்களிலும் புத்திஜீவிகள் மட்டத்திலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவமானது இரண்டு இனங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்த ஒரு மோதலாக இருந்த போதிலும்,இன அடையாளத்தை முதன்மைப்படுத்திய அரசியல் நோக்கில் இதனை சீர்தூக்கிப் பார்த்ததன் விளைவாக அது ஊதிப் பெருத்து, பெரியதொரு விவகாரமாகியது. பல்கலைக்கழகம் ஒன்றில் …
-
- 0 replies
- 429 views
-
-
பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பலியிடலால் உருப்பெற்ற தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று அத்தனை இழப்புக்களையும் கேவலப்படுத்துவாத தன்னை வெளிப்படுத்திவருகிறது. வெறும் தன்முனைப்பு வாதங்களுக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விவாதங்களைச் சுட்டிக்காட்டலாம். வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்கு பொருத்தமான இடம் எது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓமந்தையை சிபாரிசு செய்திருந்தார். ஆனால், கொழும்பின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அவருடன் இணைந்து நிற்கும் …
-
- 0 replies
- 494 views
-
-
சம்பந்தனின் விருப்பில் ஹக்கீம் பாடிய தாலாட்டு! தமிழ் மக்களை 'கட்டாய சுய உறக்கத்துக்குள்' வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல் உரிமைப் போராட்டங்களில் மூர்க்கமாக ஈடுபட்ட தரப்பான தமிழ் மக்களை உறக்க நிலையில் வைத்திருப்பதன் மூலம், போராட்ட குணத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் நீர்த்துப் போகச் செய்யலாம் என்பது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் எதிர்பார்ப்பு. அதற்காகவே, தமிழ் மக்களை நோக்கி அபசுரங்களுடனான தாலாட்டுக்கள் தொடர்ச்சியாகப் பாடப்படுகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மறைந்த முருகேசு சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தின நிகழ்வு கரவெட்டியில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. அங்கு நி…
-
- 0 replies
- 272 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? வாழ்வா …. சாவா…. “அரசாங்கத்துக்கு பல பிரச்சினைகள் உண்டு. தனியே தமிழ் மக்களின் பிரச்சினையை மட்டும் அது பார்க்கவில்லை. நாடு முழுவதிலுள்ள பல பிரச்சினைகளுக்கு அது முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே அதற்குக் கால அவகாசம் கொடுக்க வேணும். நாங்கள் அதை அவசரப்படுத்த முடியாது. அவர்கள் நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறேன் “நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்” என்றெல்லாம் அரசாங்கத்தின் மீதான தன்னுடைய அபரிதமான நம்பிக்கையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்…
-
- 0 replies
- 521 views
-
-
தமிழ் மக்களுக்கு 'போக்கிமொன்' சொல்லும் செய்தி என்ன? ப. தெய்வீகன் உலகம், கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாதத்தின் கொடும்பிடியில் சிக்கி பல உயிர்களை இழந்திருக்கிறது. அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அரசியலிலும் பல அதிரடி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், கடந்த ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகையில் பல இலட்சக்கணக்கானவர்களை தன் பக்கம் திரும்ப வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. 'போக்கிமொன்' எனப்படும் ஒரு விளையாட்டின் அறிமுகம்தான். இந்த விளையாட்டு, கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி திறன்பேசி அப்பிளிக்கேசன்களிலும் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது தங்களது திறன்…
-
- 0 replies
- 452 views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 423 views
-
-
மன்னாரில், சம்பந்தர் சொன்னது என்ன? நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச்சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் இதைப்போன்ற வேறொரு சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த சந்திப்பில் அரசியல் கட்சி தலைவர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும், மதகுருக்களும் பங்குபற்றியிருந்தார்கள். அ…
-
- 3 replies
- 768 views
-
-
வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க எல்லா விதமான காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், தமிழ் மக்கள் திருப்திப்படும் விதத்தில் அந்த தீர்வை பெற்றுக் கொடுப்பதில் சர்வதேசமும் அரசாங்கமும் ஒரு புள்ளியில் கொள்கையளவில் இணக்கம் கண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கில் எந்த அடிப்படையிலான தீர்வுப் பொதியை வழங்கினாலும், அதற்கு அங்கு வாழும் முஸ்லிம்களின் சம்மதம் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கின்றது. சிங்கள மக்கள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும், முஸ்லிம்களை திருப்திப்படுத்தாத எந்த தீர்வும், தமிழர்களுக்கு எதிர்பார்த்த அனுகூலத்தை கொண்டு வரமாட்டாது என்பதை எல்லா தரப்பினரும் புரிந்து கொண்ட…
-
- 0 replies
- 811 views
-
-
1983 ஜுலை 23: நெஞ்சில் காயாத இரத்தம்! கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து முப்பத்திரண்டு வருடங்களாகின்றன. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது. இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இரண்டு நிலங்கள் என…
-
- 0 replies
- 502 views
-
-
நாட்டில் முற்றிலுமாக மட்டுமல்ல, சரி பாதியளவு கூட இனவாதத்தை இல்லாது செய்ய முடியாது என்பதற்கு அண்மைய நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையில் இனவாதம் இன்று நேற்று புகுத்தப்பட்ட ஒன்றல்ல. அது இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சத்தின் அடிப்படை கோட்பாடே இனவாதம் தான். மஹாநாமதேரர் தொடங்கி வைத்த இந்த இனவாதம் இன்று பாடசாலைகள் தொட்டு பல்கலைக்கழகங்கள் வரை வியாபித்து நிற்கின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும், சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கைகலப்பை பலரும், பலவிதமாக பேசியிருக்கலாம். பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டதும் உண்மை. சிலர் மாணவர்களின் பிரச்சினையில் அரசியல் கலக்ககூடாது என்…
-
- 0 replies
- 614 views
-
-
உரிமையை போராடியே பெற முடியும்!! Nerukku Ner | Ep 9 Part 1 | IBC Tamil TV முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 443 views
-
-
சிறிலங்காவிற்கு இவ்வாண்டு அதிகளவில் வெளிநாட்டு உதவியை வழங்கிய சீனா, தொடர்ந்தும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்குவேன் என உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அதிருப்தி வலுவடைந்து வரும் நிலையிலும் சீனா இவ்வாறானதொரு உறுதியை வழங்கியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அண்மையில் மேற்கொண்ட சந்திப்பின் போது, சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஜூலை 10 அன்று முடிவிற்கு வரும் வகையில் சிறிலங்காவிற்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் ஜி, சிறிசேனவின் ஆட்சியின் போது சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த முதலாவது சீ…
-
- 0 replies
- 978 views
-
-
கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜயநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்தே, இந்தக் கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணம். புதிய அரசியலமைப்புக்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்து கொண்டு, லால் விஜேநாயக்க வெளியிட்ட கருத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் தல…
-
- 0 replies
- 451 views
-
-
உலகப் பொலிஸ்காரனின் பொலிஸ் பிரச்சினை கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையில், வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, இரு பிரிவினருக்குமிடையிலான உறவுகள், சிறுபான்மையினரின் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு ஆகியன தொடர்பான கரிசனை அல்லது கலந்துரையாடலொன்று ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தான், இலங்கை மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் சிறுபான்மையினரின் உரிமை தொடர்பாக அடிக்கடி கருத்துத் தெரிவித்து, அவ்வப்போது ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட நாடான அமெரிக்காவிலும், சிறுபான்மையினரின் உரிமை தொடர்பான கலந்துரையாடல்கள் ம…
-
- 0 replies
- 529 views
-
-
நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், இலங்கை வந்து சென்றிருக்கின்றார். அண்மைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அதிக நேசத்தோடு அழைக்கப்படும் இராஜதந்திரியாகவும் அவர் இருக்கின்றார். பல நேரங்களில் அவர், வெளிநாட்டு இராஜதந்திரி என்கிற நிலைகள் கடந்து உள்ளூர் அரசியல்வாதி போல வலம் வருகின்றார். அவரை கோயில்களிலும், விகாரைகளிலும் காண முடிகின்றது. ஏன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட காண மு…
-
- 6 replies
- 635 views
- 1 follower
-
-
கொழும்பின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கி சீரழியப்போகிறதா கூட்டமைப்பு? யதீந்திரா பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பலியிடலால் உருப்பெற்ற தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று அத்தனை இழப்புக்களையும் கேவலப்படுத்துவாத தன்னை வெளிப்படுத்தி வருகிறது. வெறும் தன்முனைப்பு வாதங்களுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விவாதங்களை சுட்டிக்காட்டலாம். வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்குப் பொருத்தமான இடம் எது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஓமந்தையை …
-
- 1 reply
- 520 views
-
-
பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கும் வகையில் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான அனுமதியை சிறிலங்காவின் அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை கொழும்பிலுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக வெளியிட்டார். சிறிலங்கா அமைச்சரவையின் இந்த தீர்மானமானது, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மீளிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட, மேலும் மோசமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதையே சுட்டிக்காட்டுவதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தத் தகவலானது மங்கள சமரவீரவால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துடன் ஒப்பிடும் போது முரண்பாட்டைத்…
-
- 1 reply
- 777 views
-
-
1956 அறுபதாண்டுகளின் பின்னும் தாக்கம் செலுத்தும் தனிச்சிங்கள சட்டம்! அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொ…
-
- 0 replies
- 837 views
-
-
கண்டிய நடனம்தான் பிரச்சினையா? ப. தெய்வீகன் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் இரண்டு பெரிய முகாம்கள் உள்ளன. அங்குள்ள பத்திரிகை நிறுவனமொன்றுƒ மற்றையது, யாழ். பல்கலைக்கழகம் என, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். அமைச்சராக அவர் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் சலுகைகளுக்கு விலைபோகாத யாழ். மக்கள், விடுதலைப்புலிகளின் பக்கமே தமது ஆதரவைத் தொடர்ந்தும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தபோது, அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். டக்ளஸ் கூறினார் என்பதற்காக, அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றில்லை. ஏனெனில், ஒரு காலத்தில் யாழ்ப்பா…
-
- 0 replies
- 390 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது. குறிப்பாக, பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கேற்ற வகையில் கடந்த ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது விரிசலடைந்திருந்த மேற்குலக நாடு…
-
- 0 replies
- 596 views
-
-
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மை நிலை - -ஷிரால் லக்திலக- ஜனாதிபதியின் இணைப்பாளரும், சிரேஸ்ட்ட சட்டத்தரணியுமான ஷிரால் லக்திலக சிங்களத்தில் ராவய பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ் வடிவம் இது. இதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அனுப்பி வெளியீட்டிற்காக அனுப்பிவைத்தமைக்கு அமைவாக இங்கு வெளியிடப்படுகிறது... விக்டர் ஐவன், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜயசூரிய மற்றும் மனுவர்ண ஆகியோர்களின் கட்டுரைக்கான பதில் கட்டுரையாகவே இக்கட்டுரை அமைகின்றது. இவர்களின் பகுப்பாய்வானது 'நல்லாட்சி அரசாங்கம் சரிவடைந்து இரண்டாக பிரியும் ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றமை அரசாங்க…
-
- 0 replies
- 535 views
-
-
நீண்ட இழுபறிக்கு மத்தியில் வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையா? தாண்டிக்குளமா? இழுபறி நிலைக்கு சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடமாகாண பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களின் தனித்தனியான கருத்துகளின் படி ஓமந்தையில் அமைய வேண்டும் என 21 பேரும் தாண்டிக்குளத்துக்கு 05 பேரும், 13 பேர் வாக்களிப்பில் பயத்தில் ஒதுங்கிக்கொண்டதும் ஒருவர் நடுநிலை வகித்ததோடு சம்பந்தனின் கூற்றுப்படி ஜனநாயக ரீதியான தீர்ப்பே இறுதி முடிவாகும் என்பதற்கு அமைவாக ஓமந்தை தீர்மானிக்கப்பட்டது. வடமாகாணசபையின் அமர்வு நேற்று 12.07.2016 நடைபெற்ற போது இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தாண்டிக்குளத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் சீறிப்பாய்…
-
- 0 replies
- 423 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர் நாயகத் தெரிவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. புதிய செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் போது பால்நிலைச் சமத்துவமும் தற்போது கவனத்திற் கொள்ளப்படுகிறது. இத்தெரிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், சீனா மற்றும் ரஸ்யா போன்றன முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான அதிகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையே கொ…
-
- 2 replies
- 1.9k views
-