அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கண்டிய நடனம்தான் பிரச்சினையா? ப. தெய்வீகன் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் இரண்டு பெரிய முகாம்கள் உள்ளன. அங்குள்ள பத்திரிகை நிறுவனமொன்றுƒ மற்றையது, யாழ். பல்கலைக்கழகம் என, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். அமைச்சராக அவர் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் சலுகைகளுக்கு விலைபோகாத யாழ். மக்கள், விடுதலைப்புலிகளின் பக்கமே தமது ஆதரவைத் தொடர்ந்தும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தபோது, அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். டக்ளஸ் கூறினார் என்பதற்காக, அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றில்லை. ஏனெனில், ஒரு காலத்தில் யாழ்ப்பா…
-
- 0 replies
- 390 views
-
-
மக்களின் பசியோடு விளையாடும் ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்...?” என்று கேள்வியெழுப்புகின்றார். நல்லாட்சிக் காலத்தில், எதிரணி வரிசையில் இருந்த ராஜபக்ஷ(ர்கள்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில், ஆற்றப்பட்ட உரையின் காணொளி அது. அந்த உரை நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே, ராஜபக்ஷர்களின் அரசாங்கம், நாட்டு மக்களை சமையல் எரிவாயுவுக்க…
-
- 0 replies
- 389 views
-
-
மே 2009 இற்குப் பின்னான ஐந்து ஆண்டுகளில் உலகும் ஈழத் தமிழ்ச் சமூகம் 31 மே 2014 செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக் காலம் முழுவதும் அந்நியரால் அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமாணமோ மாறாது மொழியும் இனமும் காக்கப்பட்டே வரலாறு நகர்ந்து வந்துள்ளது. அவ்வாறே 2009 இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் தமிழின அழிப்பு கேட்பாரின்றித் தொடர்கின்றது. தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய இலங்கை அரசு, அவர்களின் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்திரித்து உலக அனுசரணையினைப் பெற்றது; ஈற்றில் பாரிய இனப்படுகொலையினை நிகழ்த்தி 150000 தமிழ் மக்களை 2 வருட காலத்தில் கொன…
-
- 0 replies
- 389 views
-
-
ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியின் பாடங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வெளிநாட்டு தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,“ராஜபக்ஷக்களை மக்கள் தெரிவுசெய்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்? மக்கள் விரும்பவில்லையானால் அவர்களை விரட்டுவார்கள்.சகல ராஜபக்ஷக்களும் கூண்டோடு விரட்டியடிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார். தற்போது நேர்காணலின் அந்த குறிப்பிட்ட பகுதியின் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக உலாவருகிறது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ராஜபக்ஷக்கள் அரசியலில் பங்கேற்று வந்தபோதிலும், ஒரு குடும்பமாக அவர்கள் அரசியலில…
-
- 0 replies
- 389 views
-
-
கௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளவியலாத ஆற்றாமை, கருத்துகளை வன்முறையால் எதிர்கொள்கிறது. அது கருத்துரைப்போரைக் கொல்கிறது. கருத்துரைப்போரைக் கொல்வதன் மூலம், கருத்துகளைக் கொல்லலாம் என, அது மடத்தனமாக நம்புகிறது. அந்த மடமை, மக்களை என்றென்றும் முட்டாள்களாக்கலாம் எனவும் நினைக்கிறது. அதன் மடச் செயல்கள் திட்டமின்றி நடப்பனவல்ல. அவை திட்டமிட்டே அரங்கேறுகின்றன; ஆனால், என்றென்றைக்குமல்ல. இந்திய மூத்த ஊடகவியலாளரும் மனித உரிமைப் போராளியும் இந்து அடிப்படைவாதத்தை தயவுதாட்சன்யமின்றி விமர்சித்து வந்தவருமாக கௌரி லங்கேஷ், கர்நாடகத்தில் கடந்தவாரம், அவரது வீட்டு வாசலில் வைத்து, சுட்டுக்க…
-
- 0 replies
- 389 views
-
-
ஜெனிவாவுக்கான அறிக்கையிலும் முரண்படும் தமிழ்த் தலைமைகள் – அகிலன் September 7, 2021 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான பிளவு மீண்டும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒரே குரலில் ஜெனிவாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. முரண்படும் தமிழ்த் தலைமைகள்; இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் நான்காகப் பிளவுபட்டு தமது அறிக்கைகளைத் தனித்தனியாக ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கின்றன. இதில் ஐந்தாவதாக அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சி இந்த அணிகள் எதற்குள்ளும் செல்லாமல் தனித்து நிற்கின்றது. …
-
- 0 replies
- 389 views
-
-
தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதா கூட்டமைப்பு? தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துகின்ற இரகசியச் சதித் திட்டம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறதா? கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஐம்பது நாட்களு…
-
- 0 replies
- 389 views
-
-
வாக்குகளை பெறுவதற்காக பிரபாகரனைப் பற்றி பேசுவது அமைச்சர்களை அல்லது ஜனாதிபதியை சந்திக்கும்போது அரசியல் அமைப்புக்கு அமைவாக பேசி சமாளிப்பது போன்ற இரட்டைவேட அரசியல், 60 ஆண்டுகால போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் செயல்- உணர்ச்சிவசப்பட்டு வாய்கிழிய பேசாமல், அறிவுபூர்வமாக செய்ய வேண்டிய மூன்று வேலைத் திட்டங்கள்- -அ.நிக்ஸன்- தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கமும் சிங்கள கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாதம் பேசுகின்றனர் என்பது வெளிப்படை அவ்வாறே தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய இனவாதம் பேசி வாக்குகளை பெறுகின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால் சிங்கள கட்சிகளை பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் பேசி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்ததும் குறைந்தபட்சம…
-
- 0 replies
- 389 views
-
-
மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ? யதீந்திரா தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில் மகிந்த தரப்பின் வெற்றி வாய்பிலும், எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இதுவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஆனால் மகிந்த தரப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. கிடைக்கும் தகவல்களின்படி அது இலகுவான ஒன்றல்ல ஆனால் மகிந்த தரப்பு தனது முழு ஆற்றலையும் வளங்களையும் பயன்படுத்தி, தங்களின் வெற்றியை எந்தளவிற்கு பெருப்பிக்க முடியுமோ அந்தளவிற்கு பெருப்பிக்கவே முயற்சிக்கும். பொதுவாக ஒன்றின் பலம் என்பது பிறிதொன்றின் பலவீனத்தில்தான் தங்கியிருக்கின்றது. அரசியலில் ஒவ்வொரு விடயத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். மகிந்தவின் வெற…
-
- 0 replies
- 389 views
-
-
பேரவையின் எழுக தமிழ் – 2019 – எதிர்கொள்ளப் போகும் உண்மையான சவால்? - யதீந்திரா இலங்கைத் தீவு மீண்டுமொரு தீர்க்கமான தேர்தல் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்ற சூழலில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை மீண்டுமொரு எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் வெற்றி தோல்வி எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இது வெற்றியளிக்குமாக? ஒரு வேளை வெற்றியளிக்காவிட்டால் அது விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்திவிடாதா? இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் பேரவையால் இதனை திறம்பட முன்கொண்டு செல்ல முடியுமா ? இப்படியான கேள்விகளை ஆங்காங்கே காண முடிகிறது. முதலில் இவ்வாறான கேள்விகள் ஏன் வெளிவருகின்றன என்று பார்ப்போம்! 2016இல் இடம்பெற்ற எ…
-
- 0 replies
- 389 views
-
-
வடகிழக்கில் பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள், இராணுவத்திற்கு இணையானவை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- கடந்த சில நாட்களின் முன்னர், ஈழத்தில் மத முரண்பாடுகளைத் தூண்டும் சில நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் பெத்த விகாரைகளை அமைத்து தங்கியுள்ள சில பிக்குகளே வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் இரத்தம் சிந்துவதற்குக் காரணமாக இருந்த பேரினவாத மதவாத மேலாதிக்க வன்முறைவெறி, அழிவற்று, பலமாகவும் சட்டப் பாதுகாப்போடும் வன்முறைப் பசியோடும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் மத – இனக் கலவரம் ஒன்று ஏற்பட…
-
- 0 replies
- 389 views
-
-
அரசியலில் பொய்கள் ? - யதீந்திரா சர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர், சர்வதேச அரசியலில் தலைவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை விபரிக்கும் வகையில் ஒரு நூலை எழுதியிருந்தார். அந்த நூலின் பெயர் தலைவர்கள் ஏன் பொய் சொல்லுகின்றனர் : சர்வதேச அரசியலில் பொய்கள் பற்றிய உண்மை (Why leaders lie : the truth about lying in international politics) இந்த நூல் பிரதானமாக அமெரிக்க தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே விடயங்களை ஆராய்கின்றது. ஆனால் இந்த நூலின் உள்ளடக்கம் அனைத்து நாட்டுச் சூழலுக்கும் பொருந்தக் கூடியது. அவர் பொய்களை வகைப்படுத்தியிருக்கின்றார். அதவாது நாட்டின் நலன்களுக்காக கூறப்படும் பொய்களும் இருக்கின்றன. வெறும் சுயநலன்களுக்கா…
-
- 0 replies
- 389 views
-
-
என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா? நிலாந்தன். adminJanuary 26, 2025 தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாடு நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக உரையாற்றியிருக்கிறார். ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்பாடு செய்வது அநேகமாக இதுதான் முதல் தடவையோ தெரியவில்லை. விமான நிலையத்தில் சிறீதரன் சிறிது நேரம் மறித்து வைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். அதேசமயம் அது தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும். அந்தக் கருத்துக்கள் சரியா பி…
-
- 0 replies
- 389 views
-
-
எம்மை நாமே பரிபாலித்து வர அரசியல் யாப்பு இடமளிக்க வேண்டும் கடந்த கால கொடிய யுத்தத்தின் காரணமாக இருப்பை, பொருள் பண்டங்களை, வீடு, காணி, நீர் நிலைகள் என அனைத்தையும் எம் மக்களுள் பலர் இழந்துள்ளார்கள். தத்தமது கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியவர்களை பறிகொடுத்தவர்கள் பலர். உடல் அங்கவீனம் அடைந்தவர்கள் பலர். பலதரப்பட்ட கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறி வாழ்வதற்குரிய அடிப்படை உதவிகள் ஏதும் அற்ற நிலையில் மிகவும் அல்லலுறுவதை நாம் நன்கு அறிந்துள்ளோம். இம் மக்களுக்கு வடமாகாண சபையின் நிதியில் இருந்து சிறிய உதவிகளையாவது வழங்க நாம் முன்வந்தாலும் எமது சிறிய…
-
- 0 replies
- 389 views
-
-
எவ்வாறு அமையப்போகிறது வடமாகாணசபைத் தேர்தல்? வடக்கு மாகாண சபை, தனது ஆயுள் முடிவடைவதற்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்தவருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இத்தகையதொரு பின்னணியில், வடக்கு மாகாண சபைக்காக நடைபெறப்போகும் புதிய தேர்தலை பெரும்பான்மைக் கட்சிகள் இலக்கு வைத்து அதற்கேற்ப காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. தென்னிலங்கைக் கட்சிகளின் வடக்கு நோக்கிய வருகை கூட்டு அரசின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்…
-
- 0 replies
- 389 views
-
-
விகிதாசரத் தேர்தல்— தற்போதைய நிலையில் கிழக்குத் தமிழர்களுக்கே ஆபத்து- -அ.நிக்ஸன்- தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாகக் கூட வந்துவிடக் கூடாதென்ற நோக்கிலேயே 1982இல் ஜே.ஆர் ஜயவர்தனா விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தார் என்றொரு கதையுண்டு. ஆனாலும் ஆசன எண்ணிக்கையில் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தத் தேர்தல் முறையில் முதன் முதலாக 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சிறந்த உதாரணம். ஆனால் அன்று ஜே.ஆர் நினைத்தைவிட இன்று புதிய புதிய சிங்களக் கட்சிகள் உருவாகி அனைவருமே குறைந்தளவு ஆசனங்களையேனும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.. அத்துடன் முஸ்லிம் மக்கள் தங்களுக்கெனத் தனித்துவமாகக் கட்சிகளை உருவாக்கிப் பலவ…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழரசு கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை> கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்> சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் 31ம் திகதி அன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது> வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சீ.வி.சிவஞானம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுக்க மு…
-
- 2 replies
- 388 views
-
-
மஹிந்த போய்விட்டார்; இனி சஜித் பொறுப்பேற்க வேண்டும்! புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றுவிட்டது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை (09) விலகினார். அவர் பதவி விலகியவுடன் அரசாங்கமும் பதவி இழந்துவிட்டது. ஆனாலும், ஜனாதிபதி பதவியில் இன்னமும் கோட்டாபய ராஜபக்ஷவே இருக்கிறார். ராஜபக்ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் பிரதான கோஷமான ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டுவோம்’ என்கிற விடயம் இன்னமும் முடிவின்றி தொடர்கின்றது. ராஜபக்ஷர்களை முற்றாக விரட்டும் வரையில், போராட்டங்களை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தென் இலங்கை மக்கள் எழுச்சியின் செய்தி. ராஜபக்…
-
- 0 replies
- 388 views
-
-
புதிய அரசியல் அமைப்பும் மக்கள் ஆணையும் நிறைவேற்று அதிகாரம் என்ற கருத்து எழ ஆரம்பித்த காலத்தில் இருந்தே முரண்பாடுகளும் எழ ஆரம்பித்தன. இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலிருந்து கிடைத்த மிக முக்கியமான ஒரு படிப்பினை என்னவெனில் நாட்டின் மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு நபர் தனது சொந்த முக்கியத்துவம், சட்டபூர்வத் தன்மை மற்றும் அதிகாரம் என்பன தொடர்பான மிகை அளவிலான ஓர் எண்ணத்தை கொண்டிருக்க முடியும் என்பதாகும். 1970களின் தொடக்கத்தின் போதே ஜனாதிபதி ஆட்சி முறை குறித்து கலந்துரையாடப்பட்டது. அதேபோல் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை தொடர்பிலும் ஆரம்பம் முதற்கொண்டு குழப்பகரமான நிலைமை நிலவி வருகின்…
-
- 0 replies
- 388 views
-
-
ஜெயசங்கரின் விஜயம் : தமிழர் தரப்பிற்கு கூறியதும் தமிழர் தரப்பு விளங்கிக்கொள்ள வேண்டியதும் - யதிந்திரா இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கரின் கொழும்பு வருகையைத் தொடர்ந்து, இந்திய – இலங்கை விவகாரம் மீளவும் பேசு பொருளாகியிருக்கின்றது. இந்தியாவின் எதிர்பார்ப்புக்கள் தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் இதனால் இந்திய – இலங்கை உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சில அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கிழக்கு கொள்கலன் முனையத்தை எந்தவொரு நாட்;டுக்கும் விற்கும் நோக்கம் இல்லையென்று தெரிவித்திருக்கின்றார். அதே வேளை, ஜெயசங்கர் கொழும்பில் தங்கியிருக்கும் போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச, கிழக…
-
- 0 replies
- 388 views
-
-
கந்தையா அருந்தவபாலன் இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடா…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும் April 13, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — கடந்தவார இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒரு தசாப்த காலத்திற்குள் நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு இந்திய பிரதமராக மாத்திரமல்ல, ஒரேயொரு வெளிநாட்டுத் தலைவராகவும் மோடியே விளங்குகிறார். கடந்தவார விஜயத்துக்கு முன்னதாக அவர் மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்திருந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜயம் 28 வருடங்களுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவரின் இலங்கைக்கான முதலாவது இரு தரப்பு விஜயமாக அமைந்தது. ( அதற்கு முதல் இறுதியாக இர…
-
- 0 replies
- 388 views
-
-
சாதனையும் வேதனையும் நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜினாமா செய்வதிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதிலும், அது சாதனைகள் புரிந்திருப்பதாகவே கருதப்படுகின்றது. ஆனால் இந்த சாதனைகள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வழிவகுப்பதாகத் தெரியவில்லை. மத்திய வங்கி விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்டார் என அரசாங்கத் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வெளிவிவகார அமைச்சசர் ரவி கருணாநாயக்க தனது …
-
- 0 replies
- 388 views
-
-
இடைக்கால அரசாங்கக் கனவு கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 12 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 ‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள் அமைச்சரும், நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகி, திரிசங்கு நிலையில் இருக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான எஸ்.பி. திஸாநாயக்கவின் இல்லத்தில், கடந்த மூன்றாம் திகதி, ஓர் இராப்போசன விருந்து இடம்பெற்றிருந்தது. அதில், மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட…
-
- 0 replies
- 388 views
-
-
தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றை, தாம் மீறி விட்டதாகவும் அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த உரையில் ஹரீஸ் தெரிவித்திருந்தார். “ரணிலின் பஸ்ஸில் ஏறக் கூடாது என்று, மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசத்தை, நாங்கள் மீறி விட்டோம். அதற்காக, சமூகத்திடம் மன்னிப்புக் கோருகிற…
-
- 0 replies
- 388 views
-