Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கிழக்கைக் கையாள்வதில் தமிழ் அரசியல் தலைமை தோல்வியடைந்துள்ளதா? - முத்துக்குமார் அரசியல் தீர்வு தொடர்பான கருத்தறியும் குழுவின் சந்திப்புக்களைத் தொடர்ந்து, தமிழ்-முஸ்லிம் உறவு நிலையும், அரசியல் செயற்பாடுகளும் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வாதங்கள் மீண்டும் களத்திற்கு வந்துள்ளன. 'தமிழ் பேசும் மக்கள்' என்ற தமிழ் அரசியலின் மரபு ரீதியிலான எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? அல்லது முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியாக கையாள்கின்ற 'தமிழர்களும், முஸ்லிம்களும்' என்ற எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? என்பதே அந்த விவாதத்தின் கருப்பொருள். இப்பத்தியாளர் கடந்தமாதம் அனுபவ ரீதியாக கண்டு கொண்ட விடயங்களை முன்வைத்து தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார். இக்கருத்துக்கள் முடிந்த முடிவு…

  2. பாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய் March 10, 2016 படம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நீண்டதும், கடுமையானதுமான போராட்டத்தில் இணைவதற்கும் தீர்மானிக்கின்றோம். சிறுமி ஹரிஷ்ணவியின் பாலியல் வல்லுறவும், கொலையும் 2016 பெப்ரவரி 16 அன்…

  3. சமஷ்டியும் சர்வதேச விசாரணையும் ஊடகப் பரபரப்பும் சமஷ்டியை, ஏன் தென்னிலங்கை இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கின்றது?' என்று கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பரொருவர் என்னிடம் கேட்டார். 'இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற தமிழ் மக்களின் கோரிக்கை, ஒரு கட்டத்துக்கு மேல் மெல்ல மெல்ல வலுவிழந்தமைக்கான காரணிகளில் ஒன்றுதான், தென்னிலங்கையின் 'சமஷ்டி' எதிர்ப்புக்குமான காரணி' என்றேன். நண்பர் கொஞ்சமாக கண்களைச் சுருக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார். கீழ் கண்டவாறு நான் பதில் கூறத் தொடங்கினேன், இலங்கையில், 'சர்வதேச விசாரணை' என்கிற சொல்லாடல் ஆளுமை பெறுவதற்கு …

  4. அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும். நிலாந்தன்:- தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார் 'சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்ஸவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது ராஜபக்ஷவே மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அவர் பொதுச்சொத்தைத் தனிச்சொத்தாக்கியது, அதிகாரத்தை தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஏற்றுக் கொள்க…

  5. சம்பந்தனும் ஏமாற்றப்படுவாரா? - யதீந்திரா படம் | ASIAN TRIBUNE தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார். தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 2016 இல் தீர்வு நிச்சயம் என்று வழமைபோல் மேசைகளில் அடித்து, ஒலிவாங்கி அதிரும் வகையில் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு எவரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. சம்பந்தனது நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருந்துவரும் சுமந்திரன் கூட அவ்வாறு எங்குமே கூறியிருக்கவில்லை. ஆனால், …

  6. சிறிலங்காவுக்கு அனைத்து வகையான அழுத்தங்களையும் கொடுப்போம் – நிஷா பிஸ்வால் செவ்வி MAR 03, 2016 ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் மேற்கொள்வோம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் நாள், அமெரிக்கா –சிறிலங்காவிற்கு இடையிலான முதலாவது கூட்டு கலந்துரையாடல் நடந்த பின்னர், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், தொடர்பான அமெரிக்க நிலைப்பாடுகளை விளக்கும் வகையில் இந்தியாவின் India Abroad வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். India Abroa…

  7. பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் வடமாகாணம் – அனைத்துலக ஊடகம் FEB 26, 2016 சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உள்நாட்டின் வடக்கில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் கண்டுகொள்ள வேண்டும். இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்று ஓராண்டு கடந்தநிலையிலும் கூட போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் நாளாந்த வாழ்வில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. ‘வடக்கு மாகாண வீதிகளில் இராணுவ வீரர்கள் …

  8. இராணுவப் புரட்சி குறித்த அச்சத்தில் மைத்திரி, ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ FEB 28, 2016 பலவீனமுற்றிருந்த இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு நோர்வேயின் உதவியைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டளை அதிகாரியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சூடான விவாதத்தைத் தொடர்ந்து கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு கடந்த வாரம் இடம்மாற்றப்ப…

  9. இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கான உத்தியா? நிருபா குணசேகரலிங்கம்:- 28 பெப்ரவரி 2016 இனக் கலப்புத் திருமணங்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறை என வடக்கிற்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அவர், தனது பதவியேற்பின் பின் ஆற்றிய கன்னிப் பேச்சு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றமை பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தமிழ் மக்களிடத்தில் ஓருவகை சலனத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இவ் உரைக்கான பதிலளிப்புக்கள்; அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கிளம்பியிருந்ததனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் இன நல்லிணக்கமும் கலப்புத் திருமணமும் என்ற சிந்தனை ஓர் அரசியல் தீர்வை எதிர்பார்த்து பயணிக்கும் இலங்…

  10. ரணிலை புரிந்துகொள்வது அவசியம் - தெய்வீகன் நல்லாட்சி அரசு ஆட்சி பீடமேறி மகிந்தவின் கறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நாட்டை சீர்திருத்துவதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதை தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முயற்சிகள் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களையும் எவ்வளவு தூரம் முன்னேற்றியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளை கூறலாம். ஆனால், எதிர்வரும் மே மாதத்துடன் போர் முடிந்த ஏழாவது ஆண்டை எட்டப்போகும் தமிழ்மக்களுக்கு தாம் கொடுக்கப்போவதாக அறிவித்த தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் எவ்வளவு தூரம் சிங்கள தேசம் உண்மையாக நடந்திருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி தொடர்ந்து தொங்கியவண்ணமே உள்ளது. இது விடயத…

  11. இந்தியாவை திருப்திப்படுத்தாதுவிட்டால்? - யதீந்திரா தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள், குறிப்பாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (Economic and Technical Cooperation) தொடர்பில், மகிந்த ஆதரவு எதிரணியினர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, இந்தியா தொடர்பான விவாதங்கள் மீண்டும் மேலெழுந்திருக்கின்றன. இவ்வாறான எதிரணி பிரச்சாரங்களுக்கு ரணில் கடுந்தொனியில் பதிலளித்திருக்கின்றார். அதாவது, யார் எதிர்த்தாலும் இந்தியாவுடனும் சீனாவுடனும் உடன்பாடுகளில் கைச்சாத்திட்டே ஆகுவோம் என்றும் ரணில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்ற…

  12. 1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட ‘தனிச் சிங்களச்’ சட்டத்தின் விளைவாக, தமிழர் அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களிடையேயும் ‘பிரிந்து’ செல்வதற்கான எண்ணம் முளைவிடத் தொடங்கியது. 1961 சத்தியாக்கிரக மற்றும் குடியியல் மறுப்புப் போராட்டத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எந்தவொரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, ஆங்காங்கே சிறிய அரசியல் குழுக்களும் அமைப்புக்களும் தோன்றின. இவை பிரிவினை, தனிநாடு என்ற கொள்கைப்பிரசாரத்தை முன்னெடுப்பவையாக அமைந்தன. பிரதான தமிழ் அரசியல் கட்சிகள், இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி …

  13. சுரேஷின் அகற்றமும் மாவையின் நோக்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப். - சுரேஷ் அணி) தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள். இந்தப் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் சேர்த்துக் கொள்ளப்படக் கூ…

  14. இறைவனின் கையில் தான் தமிழரின் தீர்வு! நல்லாட்சி என்பது தமிழரைப் பொறுத்த மட்டில் வார்த்தையில் தான் மலர்ந்திருக்கிறதே தவிர, அரசியல் செயற்பாடுகளில் அல்ல.வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரசியல் தலைவர்கள் மைத்திரி யின் நல்லாட்சி பற்றி என்னதான் புகழ்ந்தாலும்,அந்த நல்லாட்சியால் முழுமையாக நன்மை பெறுவது பெரும்பான்மையின சிங்கள மக்களே ஆவர்.இறையாட்சியை தவிர ஆட்சி வந்தாலும் தமிழர் நிலை ஒருபோதும் மாறாது என்பதைத் தமிழர் தரப்பு முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உரிமை மறுக்கப்பட்ட இனம் ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஒரு சரீரத்தினுடைய வளர்ச்சியைப் போன்றது. ஒரு சரீரத்தின் எந்தப் பாகமாவது பாதிக்கப்பட்டால் …

  15. புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள் படம் | BHANTESUJATHA அறிமுகம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது – ‘மலையகத் தமிழர்கள்’ சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக…

  16. சுமந்திரன் அணி ஜங்கரநேசனை சீண்டிப் பார்க்கிறது - ஈழநாட்டுக்காரன் மௌனத்தைவிட அதிகாரத்தை பலப்படுத்த வேறெதுவும் இல்லை என்று தமிழ்நாடு சினிமா இயக்குநர் இ.மணிமேகலை சொன்னார். இப்பொழுது இது ஜங்கரநேசனுக்குப் பொருந்தும். வடமாகாண சபை அமர்வில் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் விவசாய அமைச்சால் செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் சம்பந்தமானது. அதாவது கடந்த இரு ஆண்டுகளில் விவசாய அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக மக்களுக்காக செலவு செய்துவிட்டார் என்பதனால் அந்த வேலைத் திட்டங்களில் குறை கண்டுள்ளனர். இந்தக் குறைகண்டு பிடிப்புக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது முக்கியமான…

  17. விமான நிலையமா மீள்குடியேற்றமா முன்னுரிமைக்குரியது? நிருபா குணசேகரலிங்கம்:- 14 பெப்ரவரி 2016 பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்…

  18. அசிங்க அரசியலின் உச்சம்? - யதீந்திரா படம் | TAMILNET சில வேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்ற போது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக் கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும் கேட்டால், அவர்களது கேள்வியிலேயே பதிலும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் மேலும் ஒரு படி நோக்கி முன்நகர்ந்தது. இதனை மேலும் நிரூபிக்கும் வகையில் இலங்கையின் மீதான அமெரிக்கப் பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு, அதனை அமுல்படுத்துவதற்கான வாக்குறுதியையும் வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளுக்கு அமைவாகவே அரசாங்கம், தற்போது பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஆட்சி மாற…

  19. தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:- 14 பெப்ரவரி 2016 விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கியபோது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்றஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை குறைந்தவராகவே காணப்பட்டார். ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின் அவர் தயான் ஜெயதிலகபோன்றவர்கள் எதிர்பார்த்திராதஒருவளர்ச்சிக்குப் போhய்விட்டார். தயான் ஜெயதிலக இப்பொழுதும் அவரை ஒரு மென்சக்தி…

  20. தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில், பிற கட்சிகளை நசுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது. அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எபவினால், அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தான் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன். மாகாணசபை உறுப்பினராக இருந்த அவரை, கடந்த ஆண்டு நாட…

  21. ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா ? கடந்தவாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காக எடின்பரோ நகரிற்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்கொற் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம்பற்றிய விபரமறியாத சில தமிழ் இணையதளங்கள் உலகில் அதியுயர் சமஸ்டி நிலவுகிற ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காவே இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. செய்திகளை வெட்டி ஒட்டும் இவ்விணைய தளங்களைப்போலன்றி, அறுபத்தேழு வருடகாலமாக சமஸ்டிக்கோரி…

  22. சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை - யதீந்திரா சில நாட்களாக ஊடகங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட நகல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போன்று, அது வெளியிடப்பட்ட பின்னர் பெரியளவில் விவாதங்களோ அல்லது சர்ச்சைகளோ இடம்பெறவில்லை. ஏனெனில் பெரியளவில் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதுவும் அதில் இல்லை. ஒருவேளை குறித்த யோசனையில் விடுதலைப் புலிகளின் சாயல் தெரிந்திருந்தால், அது ஒருவேளை சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் குறித்த தீர்வு நகலை தயாரிக்கும் நிபுணர்குழுவில் இருந்தவர்கள், மிகுந்த அவதானத்துடன் விடயங்களைக் கையாண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் கூட்டமைப…

  23. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம் – கலாநிதி க. முகுந்தன் FEB 10, 2016 இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன? மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே. ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் …

  24. பலாலியில் தமிழ் மக்கள் குடியிருக்க இராணுவம் உதவுமா? - துன்னாலைச் செல்வம் பலாலி விமானத் தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை பேர் தமது உயிரைக் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த நிலத்தை ஏன் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து கைப்பற்ற வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை இந்த நிலம் தமிழ் மக்களின் தாய் நிலம். இந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் தமது உயிர்களைக் கொடுக்க தயாராக இருந்தார்கள். தமிழ் அரசியல் தலைவர்களின் ஆரோக்கியமற்ற செயற்பாட்டினாலே இந்தப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோகின்றன. இப்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் சிங்கள அரசுடன் சேர்ந்து பலாலியில் பொங்கல் விழா கொ…

  25. தமிழில் தேசிய கீதம் – யாருக்கு வெற்றி? FEB 07, 2016 | கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு சர்வதேச ஊடகங்களில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகாரபூர்வமற்ற தடை விலக்கப்பட்டது என்றும், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் அனுமதி என்றும், சர்வதேச ஊடகங்களில் காணப்பட்ட செய்தி, இலங்கை அரசாங்கம் தொடர்பான ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளியுலகில் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். 67 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு ஒன்றில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.