அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
பூனைக்கு மணி கட்டுவது யார்? Dec 21, 2015 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாக்கிய முரண்பாடுகள் இப்போது, உட்கட்சி விவகாரம் என்பதையும் தாண்டி, சர்வதேச விவகாரமாக மாற்றம் பெற்றிருக்கிறது. அண்மையில் வடக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்த இந்தியத் தூதுவர் வை.கே..சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் யாழ்ப்பாணத்தில் நீண்டதொரு பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட, வடக்கு மாகாண முதலமைச்சர், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கக்கூடாது என்றும் அரசியல் தீர்வுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணம் இது என்று இந்தியத் தூதுவர் குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 1.4k views
-
-
மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம் படம் | UNHCR “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர் அனுஷா, பாடசாலையில் எனது பெயர் திலினி” – இது ஒரு சிறுமியின் பதில். “என் அம்மாவின் பெயர் சரோஜா, அப்பாவின் பெயர் பெருமாள், எனது வீட்டுப் பெயர் ஷோபா, பாடசாலைக்கு கிஷானி” – இது மற்றொரு சிறுமியின் பதில். “அம்மாவின் பெயர் குமாரி, அப்பா செல்லமுத்து, மஞ்சு என என்னை வீட்டில் அழைப்பார்கள், ஆனால், பாடசாலையில் நான் தேஷாணி” – இது இன்ன…
-
- 0 replies
- 917 views
-
-
Tears of Gandhi 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை மீது இந்திய அமைதிகாக்கும் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலால் 60இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள், நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நடத்தப்பட்ட கோரப் படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி நினைவுகூரப்பட்டது. அண்மையில் – கடந்த 2015 ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆப்கானிஸ்தான், குண்டூஸ் மாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது அமெரிக்க வான் தாக்குதலால் 13 வைத்தியசாலை ஊழியர்…
-
- 0 replies
- 684 views
-
-
அமெரிக்காவும்.... அப்பமும்...! [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 08:15.08 PM GMT ] இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க உயரதிகாரிகளுக்கு இப்போது அப்பம் ஒரு முக்கியமான உணவாக மாறிவிட்டது. இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த நிஷா பிஸ்வால், சமந்தா பவர், தோமஸ் சானொன் என்று முக்கியமான அமெரிக்க இராஜதந்திரிகள் அனைவருமே அப்பத்தைச் சுவைத்து விட்டுத் தான் சென்றனர். அதுமட்டுமன்றி, இதனை அப்பம் இராஜதந்திரம் என்றும் கூட, வெளிப்படுத்தி வருகின்றனர். அப்பம் இராஜதந்திரம் என்ற பதம் இப்போது கொழும்பு இராஜதந்திர மட்டத்தில் மட்டுமன்றி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வரை பிரபலமாகி விட்டது. இந்த அப்பம் இராஜதந்திரம் இலங்கைக்கு அறிமு…
-
- 0 replies
- 682 views
-
-
அரசாங்கத்திடம் கூட்டமைப்பு முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டதா அல்லது இணங்கிச் செல்வதற்கான இரகசிய உடன்பாடு ஏதும் உண்டா? - யதீந்திரா வடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சிவமோகன், சாள்ஸ் நிமலநாதன் மற்றும் சிறிநேசன் ஆகியோரே குறித்த இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தை மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவ…
-
- 0 replies
- 488 views
-
-
காணி நிலம் வேண்டும் - நிலாந்தன் இம்மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா.நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும் நிபுணத்துவ அறிவும் மிக்கவர் என்று கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துக்கான ஒரு பொருத்தமான கொள்கையை வகுப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. இக்கூட்டம் நடத்தப்படுவதற்கு முதல் நாள், அதாவது நவம்பர் 30 ஆம் திகதி யாழ். நூலக கேட்போர் கூடத்தில் ஒரு அறிக்கை வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது. வவுனியாவைத் தளமாகக் கொண்டியங்கும் 'மாற்றம் நிறுவனம்' இவ்வறிக்கையை வெளியி…
-
- 0 replies
- 789 views
-
-
ரணிலின் ஒப்பரேசன் II நிர்மானுசன் பாலசுந்தரம் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சிறிலங்காவின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் சனவரி 8ம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001ல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக நுட்பமான முறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். சர்வதேச பாதுகாப்பு வலை திட்டத்தின் ஊடாக புலிகளை உலகளாவிய ரீதியில் பலவீனப்படுத்திய ரணில், கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை தனது வலையில் சிக்கவைத்ததனூடாக புலிகளை உள்நாட்டில் பலவீனப்படுத்தினார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கசக்கத் தொடங்கியுள்ள காதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் எதுவரை நீடிக்கப் போகின்றன? அரசாங்கத்தின் மீது அதிருப்தியையும், குற்றச்சாட்டுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் கூறத் தொடங்கியுள்ளது தான் இந்தக் கேள்வி எழுந்துள்ளமைக்கு முக்கியமான காரணம். தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் என்ற வகையிலும், இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகளின் அடிப்படையிலும், கூட்டமைப்புக்கு ஏமாற்றமும் கோபமும் இருப்பது நியாயமானது. நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது வெளிப்படையான கோபத்தை அதிகளவில் வெளிப்படுத்…
-
- 3 replies
- 1k views
-
-
யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்? உள்ளக ஆக்கிரமிப்பைத் தடுக்க யார் உளர்? தயாளன் கடந்த 30 ஆம் திகதி மாற்றம் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் 'நிலமும் நாங்களும்' எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு முதல்வரும் கலந்து கொண்டிருந்தார். மீள்குடியேற்றத்துக்கு தடையாகவுள்ள விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் பிரித்தானிய மனித உரிமைகள் குழு 'ஐயமின்றி எம்மால் ஒன்று கூறமுடியும். அரசாங்கமானது தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் குடியிருத்த முனைந்துள்ளது' எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாக முதல்வர் கூறினார். அத்துடன் '1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி? - யதீந்திரா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர்கள் பிரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில் தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தந்தை செல்வநாயகத்தின் மருமகனையே தன்னுடைய ஆலோசகராக்கிய ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வழிவந்தவர்களின் பிரித்தாளும் தந்திரோபாய பொறிக்குள் (Strategic trap) தமிழரசுக் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து விட்டதா என்னும் கேள்வி தொடர்பில் பதில் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. அண்மைக்க…
-
- 0 replies
- 521 views
-
-
ருத்ரகுமாரனின் கேள்விக்கு என்ன பதில்? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளில் ஒன்றான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரண்டாவது அரசவையின் நான்காவது நேரடி அமர்வை இம் மாதம் 4, 5, 6 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் மாநகரில் நடத்தியிருக்கிறது. ஒரு தொகுதி அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவிலிருந்து நேரடி காணொளி இணைப்பின் மூலம் இம் அமர்வில் பங்கு பற்றியிருக்கின்றனர். இம் அமர்வை மக்கள் பார்க்கக்கூடிய வகையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இம் அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் ஆரம்ப உரையினையும் நிறைவுரையினையும் ஆற்றியிருக்கிறார். அவரின் உரைகளின்…
-
- 0 replies
- 805 views
-
-
அகதி அரசியல் - அரசியல் அகதிகள் தொ. பத்தினாதன் ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்களிப்பு தமிழ்நாட்டுக்கும் உண்டு. தட்டையாக, நெட்டையாக, குட்டையாகப் பல பரிமாணங்களும் உடையன தமிழகப் போராட்டங்கள். அதேபோல் கறுப்பு - வெள்ளை என்று மட்டுமல்லாது பல வர்ணங்களையும் கொண்டது அது. இத்தொடர் போராட்டங்களை அவதானிக்கும்போது ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகத் தென்படுகிறது; அதாவது ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ஈழத்தமிழருக்குக் கிடைத்த நன்மைகளை விட போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்குத்தான் பல நன்மைகள் கிடைத்துள்ளன. விதிவிலக்காக …
-
- 0 replies
- 939 views
-
-
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆறு தசாப்த காலங்களுக்கு மேற்பட்ட இலங்கையின் இராஜதந்திர உறவுகள் வரலாற்றில், குறுகிய காலப் பகுதிக்குள் (சுமார் பத்து மாதங்கள்) அமெரிக்காவின் அதிஉயர் மட்ட அதிகாரிகள் அதிகமான பயணங்களை இலங்கைத் தீவுக்கு மேற்கொண்டமை இதுவே முதற்தடவை. இது, பூகோள அரசியல் – பொருளாதாரத்தில்…
-
- 0 replies
- 455 views
-
-
நல்லிணக்கத்துக்கான சம்பந்தனின் இருமுனைப் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சில காலமாக நிலவி வரும் கருத்து முரண்பாடுகள், சில வெளிநாடுகளின், குறிப்பாக இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி வட மாகாணத்துக்குச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்த விடயத்தைப் பற்றி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி இருக்கிறார். அந்த அளவுக்கு அது இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கிறது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்ததோர் நிலைமை உருவாகியிருக்கும் இந்தத் தருணத்தில், பிரதான தமிழ் அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 0 replies
- 503 views
-
-
இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக தென்னிலங்கையில் மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் மேம்பாடடைந்து வருகின்றது. இந்த வளர்ச்சியை சிங்கள மக்கள் மட்டும் போராடிப் பெறவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சேர்ந்து பெற்ற வெற்றி இது. தமிழ் வாக்குகள் இல்லை என்றால் மாற்றம் நிகழ்ந்திருக்காது. அதாவது தமிழ் மக்கள் வாக்களித்திருக்காவிட்டால் …
-
- 0 replies
- 240 views
-
-
பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா? DEC 12, 2015 | 3:05 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில், நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும், வகையிலான பேரம் பேசும் பலத்தை வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்கள் கூட்டமைப்புக்குக் கொடுத்திருந்தனர். ஆனால், அந்தப் பேரம் பேசும் பலத்தை கூட்டமைப்பு இதுவரை பயன்படுத்தியிருக்கிறதா? – அந்த பலத்தை வைத்து இதுவரை எதனைச் சாதித்துள்ளது? என்ற கேள்விகள் பரவலாக எழுந்திருக்கிறது. சில…
-
- 1 reply
- 641 views
-
-
கைகொடுக்கத் தயங்குவது நியாயமா? DEC 14, 2015 சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. அதேவேளை, இன்னும் சிலரின் மனங்களில் உள்ள வக்கிரங்களையும் இந்தப் பெருந்துயர் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவுமில்லை. சில மணிநேரத்துக்குள் கொட்டித் தீர்த்த பெருமழையின் பாதிப்பு இலட்சக்கணக்கான மக்களை சூனிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த மழைக்கான காரணம் என்ன, இந்தப் பேரழிவுக்கான பொறுப்பு யார், ஏனிந்த அழிவை எதிர்கொள்ள நேரிட்டது என்று எல்லா ஊடகங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன, விவாதங்கள் தொடர்கின்றன. அவரவர் அறி…
-
- 0 replies
- 687 views
-
-
வாழைப்பழ யுத்தம்! வாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது? பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை அரசுகளையே, வாழைப்பழ குடியரசு என்று அழைக்கின்றனர். இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ஓ.ஹென்றி. ஹோண்டுரஸ் நாட்டின் பொம்மை அரசைக் குறிக்க அவர் வாழைப்பழக் குடியரசு என்னும் பதத்தைப் பயன்படுத்தி…
-
- 0 replies
- 2.2k views
-
-
நிலைமாறுகால நீதி: நான் ஊமையாய்ப் போன கனங்கள் 1 இலங்கைத்தீவின் நல்லிணக்கக் கதவுகளை திறப்பதற்கான அடித்தள வேலைகளை இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்காக அவர்கள் என்ன விலை கொடுப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இனிமேல் இலங்கை அரசுக்கு எதிராகவோ, அதன் கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவொரு தீவிரமான தரப்புகளும் மேலெழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. இதனால்தான் கோடிகோடியாய் கொட்டியேனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசு முயல்கிறது. நீதியால் முடிக்க வேண்டியதை நிதியினால் முடிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், முயற்சியின் அளவுக்கு அது பலன் தருமா? இம்முயற்சி இதயபூர்வமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்ற பலத்த சந்தேகங்கள் சாதாரண மக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன?- யதீந்திரா தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை, தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவிநிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்திருக்கின்…
-
- 1 reply
- 820 views
-
-
தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா? கலாநிதி சர்வேந்திரா கடந்த வெள்ளிக்கிழமை 27.11.2015 அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்றன. தமக்காக உயிர்நீத்த மாவீர்களுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதில் மக்கள் உணர்வுபூர்வமாய் ஈடுபட்டனர். மாவீரர்நாள் அறிமுகப்படுத்தப்பட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை உலகமெங்கும் கவனத்தைப் பெறுவதாக அமைந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் 2008 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆற்றிய இறுதி மாவீரர்நாள் உரையை இவ் வருட மாவீரர் நாள் அன்று மீள வாசித்துப் பார்த்தேன். அதில் இந்தியாவுடன் நட்பினை ஏற்படுத்துவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் இடையீடு; நமது உரைகல் என்ன? - யதீந்திரா by Jathindra - on December 1, 2015 படம் | SLGUARDIAN சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அமெரிக்க உயர்மட்டத்தினர் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இதன் உச்சமாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் விஜயம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடுமென்னும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாயிருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமிக்க…
-
- 0 replies
- 938 views
-
-
அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது முத்துக்குமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இனச்சுத்திகரிப்புப் பிரச்சாரம் அவுஸ்ரேலியாவரை தாக்கம் செலுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் கூட்டமொன்றில் அவரை பேசவிடாது தடுத்திருக்கின்றனர். ஜனநாயக ரீதியாக இளைஞர்களின் செயல்பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களிடமிருந்த தேசிய உணர்வை குறைத்து மதிப்பிடமுடியாது. வெறுமனே சுமந்திரனின் கருத்துக்கெதிரான செயல்கள் என்பதாக அல்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால போக்குகள் பற்றிய ஒட்டுமொத்த அதிருப்தியின் விளைவு என்றே அதனைக் கூறவேண்டும். எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் இணக்க அரசியலுக்குச் சென்றமை, …
-
- 1 reply
- 656 views
-
-
அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா? by Rev. M.Sathivel - on November 30, 2015 படம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப் பேராட்டங்கள் அரசியல்வாதிகள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளால் கைவிடப்பட்டன. பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களை முகாம் காவலாளிகளும் காடையர்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவே 28 ப…
-
- 1 reply
- 906 views
-
-
விக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா? யதீந்திரா படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதுமே மேற்படி சூடான தமிழ் அரசியலுக்குக் காரணம். இவ்வாறான வாதப்பிரதிவாதங்களால் தமிழ் மக்கள் அடையப்போகும் நன்மை என்ன என்பதற்கு …
-
- 1 reply
- 1.6k views
-