அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை 4 Jan 2026, 11:48 AM 1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது. அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்…
-
- 0 replies
- 300 views
-
-
புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன் ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான். இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு. இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக இருந்தால் அதனை அதிசயம் அல்லது அற்புதம் என்று அழைக்கவேண்டும். யூதர்களின் புலப்பெயர்ச்சி வரலாற்றைக் கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற நூலில் ஓரிடத்தில் கூறப்படுவதுபோல “அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது”. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் ந…
-
- 0 replies
- 192 views
-
-
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும் முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது. பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (…
-
- 0 replies
- 150 views
-
-
தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன். யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன. நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது. ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள்…
-
- 1 reply
- 234 views
-
-
இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! sudumanal வெனிசுவேலாவை சூழும் போர் மேகம் Thanks for image: deutschlandfunk. de இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்…
-
- 0 replies
- 250 views
-
-
2025: உலக நிலவரம் எப்படி இருந்தது? ஜனவரி 1, 2026 –பயஸ் ஃபோஸன் (Pius Fozan) எந்தத் தீர்வும் எட்டப்படாமலேயே இந்த ஆண்டு (2025) முடிவுக்கு வருகிறது. உலகம் எதையெல்லாம் சகித்துக்கொள்ளத் துணிந்துவிட்டது என்பதற்கான நீண்ட பட்டியல்தான் இங்கே எஞ்சி நிற்கிறது. அந்தப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்: காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் 18,457க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் உள்நாட்டுப் போர் சூடானைச் சிதைத்து வருகிறது. உலகில் வெறும் 6.6% மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகச் சூழலில் வாழ்கிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தில் வெறும் 0.001% பேர் (சுமார் 60,000 பேர்) உலக மக்கள் தொகையின் சரிபாதிப் பேர் வைத்துள்ள செல்வத்தைப் போல மூன்று மடங்கு செல்வத்தைத் தங்கள் பிடியி…
-
- 0 replies
- 201 views
-
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..! December 31, 2025 — அழகு குணசீலன் — ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பின் பேரில் விசாரணைக்கு சென்றபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26.12. 2025 அன்று கைது செய்யப்பட்ட அவர் 72 மணித்தியால தடுத்து வைப்புக்கு பின்னர், தொடர்ந்தும் விசாரணைகளுக்காக 2026 ஜனவரி 9 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு இடையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டக்ளஸ் கைது…
-
-
- 9 replies
- 1.3k views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும் December 29, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதுடன் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன. கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு நாள் விஜயமாக கடந்த செவ்வா…
-
-
- 1 reply
- 307 views
-
-
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா? Photo, Anura Kumara Dissanayake fb page வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது. ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட…
-
- 0 replies
- 161 views
-
-
சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன் December 31, 2025 2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில் பதிவாகியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது அதிகாரத்தை பேரனர்த்த நிவாரணங்களை பயன்படுத்தியேனும் அடிமட்டம் வரை கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் மூன்றாந்தர அரசியல் கலாசாரம் அரங்கேறிவருகின்ற அதே வேளை, தமிழ் மக்களின் நீண்டகால அபிலா ஷைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் இவ்வருடம் முழுவதும் கனவுகளாக நாட்கள் கடந்தோடும் காலமாகவே …
-
- 0 replies
- 217 views
-
-
2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன் இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில் “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான். அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலு…
-
- 0 replies
- 204 views
-
-
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் …
-
- 0 replies
- 274 views
-
-
இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? தவிர்ப்பதற்கான 3 வழிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 'திட்வா' புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இது ஒருபுறம் மனித துயரத்தை வெளிப்படுத்தியிருக்கும் அதே வேளையில் மறுபுறம் தொடர்ச்சியான காலநிலை அதிர்ச்சிகளைத் தாங்கும் அளவுக்கு இலங்கையிடம் போதிய நிதி வசதி இல்ல…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! ஷோபாசக்தி இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உ…
-
- 0 replies
- 275 views
-
-
மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? Veeragathy Thanabalasingham December 23, 2025 Photo, Sakuna Miyasinadha Gamage இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது. மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துனபங்களை கேட்டறிந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அந்த மக்களைப் பாதுகாப்பான முறையில் வேறு இடங்களில் குடியேற்றுவது குறித்து பேசினார…
-
- 1 reply
- 284 views
-
-
இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் Published By: Vishnu 23 Dec, 2025 | 02:25 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல…
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து லக்ஸ்மன் தமது உரிமைகளுக்காகப் போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி, அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க அரசால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம் என்ற நிலைப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், “பயங்கரவாதமானது, அதன் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் நாடுகளினது சமுதாயத்தின் சமாதானத்துக்கும் பந்தோபஸ்துக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாதலாலும், அத்துடன் இலங்கையையும், அதன் மக்களையும், அவர்களின் ஆதனங்களையும் பயங்கரவாதச் செயல்களிலிருந்தும் தொடர்புபட்ட செயல்களிலிருந்தும் பாதுகாத்தல் இலங்கை அரசாங்கத்தின் முதன்ம…
-
- 0 replies
- 364 views
-
-
திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வ…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்! அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை.. அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள…
-
-
- 2 replies
- 333 views
- 1 follower
-
-
வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீன…
-
- 0 replies
- 354 views
-
-
அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை! - ------------- *சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்... *டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...? *ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு *ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா? -- ---- ------- இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த …
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை? Eranga Jayawardena/AP Photo இந்தக் கேள்வி உயிர் தப்பிய ஒவ்வொருவரின் மனதிலும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் மனதிலும், மிகவும் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரின் மனதிலும் எதிரொலிக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தும் வலிமிகுந்த உண்மை தெளிவானது: புயல் கண்காணிக்கப்பட்டு, முன்னறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் எச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு அமைப்புகள் பேரழிவுகரமாகத் தோல்வியடைந்தன, இது 640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளுக்கும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதற்கும் பங்களித்தது. இது எச்சரிக்கை இல்லாமல் வந்த கடவுளின் செயல் அல்ல. இது தவிர்க்கப்பட்…
-
-
- 1 reply
- 271 views
- 1 follower
-
-
டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் December 15, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையறாது கூறிவருகிறார். இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி திட்டவட்டமாக கூறிவருகின்ற போதிலும், ட்ரம்ப் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாக இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதி சுமார் 70 தடவைகள் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அவர் இறுதியாக கடந்த புதன்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தின் நகரொன்றில் நிகழ்த்திய உரை…
-
- 0 replies
- 182 views
-
-
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன் டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக் கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள். காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின…
-
- 0 replies
- 278 views
-
-
புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன் புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல் சூழல் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தைப் பலப்படுத்தும். அனைத்துலக அளவில் பெரும்பாலான நாடுகள் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. குறிப்பாக முதலில் உதவியதும் இந்தியா. அதிகம் உதவியதும் இந்தியாதான். தவிர வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் உதவுகிறார்கள். சில புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு நிதி சேர்த்துக் கொடுக்கிறார்கள். அல்லது தாம் சேர்த்த நிதியை தாம் வாழும் நாட்டின் அரசாங்கத்துக்கு ஊட…
-
- 0 replies
- 217 views
-