அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
2009 மே க்கு பிறகு நடந்த பல மாற்றங்கள் பல தமிழர்களின் எல்லைகளை மீறிய செயல்கள் என்பது இலங்கை பிரச்சனைகள் கவனிப்பவர்களுக்கு சொல்லாமே விளங்கும் விடையம் ஆகும். அதே போல நாங்களும் மாற்றங்களை எதிர் பார்த்து செய்த கருமங்கள் பல. ஆனால், மாற்றங்கள் என்னவோ சாண் ஏறி முழம் சறுக்கிய கதையாகவே உள்ளது. அத்தோடு கூட்டமைப்பு அரசாங்துடனான பேச்சு, மீள் குடியேற்றம், புலம் பெயர்ந்த உறவுகள் உறவு, சுண்ணாகம் குடி நீர் பிரச்சனைகள்,உட்கட்சி உரசல்கள்.. ....... இன்ன பல விடயங்களில் ஒரு தெளிவற்ற போக்கை கொண்டிருப்பதும் ஒன்றும் மறைவான விடயம் அல்ல. எனது நண்பர்கள் சிலர் - அதே போல் உங்களுக்கும் இருக்க கூடும்; மேற்குறிப்பிட்ட காரணங்களால் கூட்டமைப்பையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வாருவதற்காகவும், கயேந…
-
- 1 reply
- 666 views
-
-
ஆட்சி மாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்? கலாநிதி சர்வேந்திரா ஆட்சி மாற்றம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. சுதந்திரக் கட்சியின் நெருக்கடி ஒரு பிளவை நோக்கிக் கட்சியை இட்டுச் செல்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெருக்கடிக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. இன்னும் சிறிது காலத்தில் இந் நெருக்கடி தனது இயல்பான வளர்ச்சியை அடையும் நிலைமைகளே தெரிகின்றன. ஆட்சி மாற்றத்தின் பின் சுதந்திரக் கட்சிக்குள் உள்முரண்பாடுகள் வளர்வது ஏன்? கூட்டமைப்புக்குள் நெருக்கடிகள் தோற்றம் பெறுவதற்கான காரணங்கள் எவை? இக் கேள்விகளுக்கு ஒரு பதில் தேடும் முயற்சியாகவே இன்றைய பத்தி அமைகின்றது. இதில் சுவாரசியமான விடயம் என்னவ…
-
- 0 replies
- 545 views
-
-
மகிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா? யதீந்திரா ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்றுநோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பான அச்சுறுத்தலிலிருந்து புதிய அரசாங்கத்தால் எந்த வகையிலும் விடுபட முடியவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியாதவொரு சூழல் தெற்கின் அரசியல் அரங்கில் வெளிப்படையாகவே தெரிகிறது. மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்றபோதும் அவரது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை. கட்சியின் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவுடனேயே இருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தி…
-
- 0 replies
- 547 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்; பிளவு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகி வருகின்றது:- 21 ஜூன் 2015 தமிழில் - குளோபல் தமிழ் செய்திகள்:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அம்பாறையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை அவரிற்கு சண்டே டைம்ஸில் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்த விடயம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த வார சண்டே டைம்ஸில் தினேஸ் புதிய அரசியல் கூட்டணியொன்றை மகிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து தெரிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்திலிருந்து சிறிசேன் தினேஸ் குணவர்த்தனவை உடனடியாக தொடர்புகொண்டு சண்டேடைம்ஸ் பார்த்தீர்களா என கேட்டார்,அதற்கு தினேஸ் இன்னமும் அதனை வாசிக்கவில்லை என்றார், பின்னர் ஜனாதிபதி அதில் …
-
- 0 replies
- 417 views
-
-
விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள் ஆக 5, 2013 1 “புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்கமுடியவில்லை. எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களு…
-
- 12 replies
- 1.1k views
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, நிவாரணம் தருகிறோம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு மயங்கி வாக்களிக்க தயாராவார்கள். இந்த வேளையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிட இருக்கும் தமிழ் வேட்பாளர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வடக்கு கிழக்கில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சி…
-
- 0 replies
- 885 views
-
-
இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்) தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அது(வும்)தான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போக்கில் தற்போது விரிந்துள்ள புதிய இராஜதந்திரக் களம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தோடு அது, விரைவாக எம்மை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டாலும், சில காலத்துக்குப் பின்னர் …
-
- 0 replies
- 489 views
-
-
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண் உறவு முறைச் செல்வாக்கு! [ Wednesday, 10 June 2015 ,11:26:39 ] என்.சரவணன் நிறைவேற்றப்படவிருக்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு அறிவித்துள்ளது. மாகாண சபை வேட்பாளர்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தும் வகையில் அதன் முதற்கட்டம் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில பெண்கள் அமைப்புகள் இது ஒரு மைல்கல் என்று அறிவித்திருப்பது அந்த அமைப்புகளின் இடையறா போராட்டத்தின் வெளிப்பாடே. அதேவேளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று சில அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இல…
-
- 0 replies
- 1.7k views
-
-
அரசியல் விடயங்களில், குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சிலசந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒருஉடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே தெரியப்படுத்தப்பட்டால், வெளிச்சக்திகள் வேறு காரணிகளை உட்புகுத்தி அதனைக் குழப்பிவிடும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. உடன்பாடு கண்டபின்போ ஏனையோர் அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஆயினும், அரசியலில் இரகசியம் காப்பது இன்னொருவகையில் பார்க்கப் போனால் ஆபத்து நிறைந்ததாகும். பொதுமக்களின் பார்வைக்கு அப்பால் பேரங்கள் பேசப்படும்போது, பேசுபவர் ஏதாவதொரு சன்மானத்திற்கு மயங்கி தனது நிலைப்பாட்டினை விட்டுக் கொடுக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அல்லது ஒருவர் மற்றக் கட்சித…
-
- 0 replies
- 383 views
-
-
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வத்; குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான தூதுவர் சொல்ஹெய்மும் பங்குபற்றியிருக்கிறார். இது ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இதில் பங்குபற்றியவர்கள் மற்றும் பங்குபற்றிய நிறுவனங்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் இது அதிகப…
-
- 0 replies
- 287 views
-
-
இந்த மண்ணில் என்ன நடக்கின்றது? [ சனிக்கிழமை, 13 யூன் 2015, 02:46.37 AM GMT ] “கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்” என்று கூறித் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாகக் கம்பன் புகழுக்காகக் கம்பன் விழா நடந்து வருகின்றது. இலங்கையிலும் கம்பன் விழா சிறப்பாக நடந்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது சிறிது காலம் நடைபெறவில்லை. கொழும்பில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டும் கொழும்பில் விழாச் சிறப்பாக நடந்துள்ளது. தமிழகத்திலிருந்து அறிஞர்கள் வந்திருந்தனர். பாராட்டுக்குரியதே. அதே நேரம் இந்திய மத்திய அரசான பாரதிய ஜனதாக் கட்சியின் இல.கணேசனும் அழைக்கப்பட்டிருந்தார். நோக்கம் என்ன என்பது புரியவில்லை. அதே போல் நவலங்கா சமசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருண…
-
- 0 replies
- 289 views
-
-
ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளைச் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அமெரிக்காவின் எதிர்நிலைப்பாடு வலுவான தாக்கத்தினைஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது. சிறிலங்காவின் இன்றைய அரசின் பங்காளியாகவும் தமிழர்களின் இனப்பிரச்சினை விடையத்திற்கு தீர்வுகாணும் குழுவின் தலைவியாகவும் விளங்கும் சந்திசிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துலக அளவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா தடைசெய்வதற்கு சந்திரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த இலக்சுமன் கதிர்காமரின் அதிதீவிர செயற்பாடே காரணமாக அமைந்திருந்தது. சிங்களத்தின் தமிழர் விரோத செ…
-
- 0 replies
- 478 views
-
-
சிங்கள பாசிச அரசின் கபடம் நிறைந்த சர்வதேச நகர்வுகள் – ஈழத்து நிலவன் - கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நாட்டில் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது? எதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது தொடர்பாக பேச்சுக்களில் கலந்துகொண்ட தனிமனிதர்களோ அல்லது அவர்களினுடைய அமைப்போ இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் In Transformation Initiative அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது சந்தேகங்களை எழுப்பி இருந்ததுடன், தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த கூட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளத…
-
- 0 replies
- 461 views
-
-
தமிழ்ப் பகுதிகளை விட்டு படையினரை வெளியேற்றம் செய்யக் கூடிய சக்தி தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?- நிலாந்தன் (கட்டுரை) புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும், இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. வட மாகாண முதலமைச்சர் கூறி வருவது போல பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான மூலகாரணம் படைமயப்பட்ட ஒரு சூழல்த…
-
- 0 replies
- 454 views
-
-
பொறுப்புக்கூறலுக்கு அப்பால்: இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம் - அகிலன் கதிர்காமர் மற்றும் மகேந்திரன் திருவரங்கன் இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது. போரின் கடைசிக் கட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான பிரச்சினையாகப் பார்க்கும் தன்மை பல ஆண்டுகளாகவே, பல செயற்பாட்டாளர்களிடமும் காணப்பட்டது. சக்திவாய்ந்த நாடுகள், சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து சில அரசசார்பற்ற அமைப்புக்கள் (என் ஜி ஒ க்கள்) மற்றும் நாட்டில் இருக்கும் சில துணிவுமிக்க செயல்முனைவர்கள் ஆகியோர் சர்வாதிக…
-
- 0 replies
- 399 views
-
-
சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் இராஜதந்திர இலக்கு: தோல் இருக்க சுளை பிடுங்கும் தந்திரம் தத்தர் சர்வதேச நிலைமைகளையும் உள்நாட்டு நிலைமைகளையும் சரிவர இணைத்து ஈழத் தமிழினத்தை ‘தோல் இருக்க சுளை பிடுங்கும்’ வகையில் இன அழிப்பில் வெற்றிபெற சிறிசேன-ரணில்-சந்திரிகா அரசாங்கம் கனகச்சிதமான மூலோபாயங்களை வகுத்துள்ளது. இதனை சரிவர அடையாளம் காணவேண்டியது முதற்கண் அவசியமாகும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒரு விபத்தல்ல, அது இராஜபக்ஷாக்களின் மூளையில் உதித்த ஒரு கண்டுபிடிப்பும் அல்ல. 1987ஆம் ஆண்டு ஜே.ஆர். - லலித் அதுலத்முதலி அரசாங்கத்தில் Operation Liberation என்ற பெயரில் இனப்படுகொலை இராணுவ நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் முதல் கட்டமாக Operation Liberation Vadamarachchy என்ற பெய…
-
- 0 replies
- 476 views
-
-
அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பது குறித்து கா.சிவபாலன் அண்மைக்காலமாக தமிழ் அரசியல்வாதிகள் ஆய்வாளர்களின் பேச்சுக்களை, கட்டுரைகளை அவதானிக்கும்போது அடிப்படையில் பல பிழைகளை (fundamentally flawed) காணக்கூடியதாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் பேச்சில் தளம்பல் நிலையும், தாங்கள் கொண்டுள்ள கொள்கையில் அல்லது அவர்களின் அல்லது அவர்களைப் பின்பற்றுவோரின் முயற்சியில் பிழைகளும், சரியோ பிழையோ அவற்றை அடைவதற்காண வழிகளை சரியாக கூறமுடியாமையையும் காணலாம். எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் தன்னுடைய எழுத்தில் பிழை காணும் ஒரு விமர்சகரைப்பற்றி பேசும்போது, 'நான் 200 சிறுகதைகளை பெற்றவள், 4 நாவல்களை பெற்றவள், 8 குறுநாவல்களை பெற்றவள், எனக்கு இந்த இரும்பூரில் (Birmingham) தமிழ் படித்த துரும்பன், இவற…
-
- 1 reply
- 422 views
-
-
புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். 'வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப் பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. அதே சமயம் நீங்கள் உங்களுடைய கட்டுரையில் தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்படும் உள்ளூர் தலைமைத்துவங்களைப் ப…
-
- 0 replies
- 206 views
-
-
போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறுதலும் ஊடக சுதந்திரமும் by Niran Anketell - on June 1, 2015 படம் | Photo, Lakruwan Wanniarachchi, GETTYIMAGES உலகின் பல பாகங்களிலே ஊடக சுதந்திர தினமானது தமது ஊடகப்பணியை ஆற்றும்போது கொலையுண்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதால் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அப்படிப் பலியானவர்களின் தொகையானது எனது பேச்சிலோ இப்படியான ஒரு நிகழ்விலோ குறிப்பிட்டுச் சொல்லிமுடியாதபடிக்கு அதிகமானதாகும். இங்கு அமர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் இன்றும் அதேபோன்ற ஆபத்துக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்தும் வருகின்றனர். இருண்ட காலகட்டங்களிலுங்கூட பாதுகாக்கப்பட்டு வந்துள்ள தொழிற்துறையில் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலே, பெரும் விலை கொடுத்த இந்தப் பிராந்தி…
-
- 0 replies
- 244 views
-
-
சயனைட் குப்பி போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கு வழிகோலிய நாள் ஜூன் 5 ஜூன் 5 ஈழத்தமிழினத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் பல பதிவுகளைக் கொண்ட நாளாகும். ஜூன் 5 தான் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாளாகும். ஆயுதப் போராட்ட காலத்திலும் பல சாதனைகளை வெற்றிச் சமர்களைக் கண்ட நாளாக ஜூன் 5 திகழ்கின்றது. ஆயுதப் போராட்டம் எழுச்சி பெறவும் சயனைட் என்கின்ற கொடிய நஞ்சு போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கும் இந்த நாள் தான் வழிகோலியது என்பதில் மிகையில்லை. மலையகத்தில் வாழ்ந்த மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் ஜக்கிய தேசியக் கட்சி 1948 ல் பறித்து மக்களை நாடற்றவர்களாக்கியதுடன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உறுப்பினர் எண்ணிக்கையையும் குறைத்தது. இந் நேரத்தில் தான் தந்தை செல்வா '…
-
- 0 replies
- 408 views
-
-
"நாங்கள் விதைக்கிறோம்... அவர்கள் விற்கிறார்கள் !” டி.அருள் எழிலன், படம்: என்.ஜி.மணிகண்டன் விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் விறுவிறுப்பாக வளைய வருகிறார் சீமான். 'மாற்றத்துக்கான எளிய மக்களின் மாநாடு’ நடத்திய பூரிப்பு தெரிகிறது. ''2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி'' என்கிறார். என்னதான் திட்டம் வைத்திருக்கிறார் மனிதர்?! ''வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, 'நாம் தமிழர்’ கட்சியை உருவாக்கினோம். சில காலம…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத் தமிழருக்கான விடிவு என்பது.. வெறும் கானல் நீராகிவிடுமா? ஓர் சிறு அரசியல்-இராணுவ ஆய்வு! -மு.வே.யோகேஸ்வரன் 9 2009 இல் புலிகள் மீது இலங்கை அரசப் படைகள் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்பது, இலங்கை மட்டும் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்று எவனாவது சொன்னால் அவனுக்கு மண்டையில் மசாலா இல்லை என்றுதான் அர்த்தம். கடந்த 35 வருடங்களாக இலங்கை என்னும் இனவாத நாடு…புலிகளை அழிக்க போட்ட திட்டங்கள் ஒன்றா இரண்டா? ஆனால், அழித்தார்களா புலிகளை? இல்லை..அவர்களைப் பொறுத்தவரை அது பகல் கனவாக இருந்தது.. புலிகளின் இராணுவ பரிணாம வளர்ச்சியை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புலிகளை இலங்கையாலோ அல்லது இந்தியாவாலோ தனித்து நின்றோ,அல்லது சேர்ந்தோ ஒருபோதும் அழிக்க முடியாது என…
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், ச…
-
- 0 replies
- 317 views
-
-
நடுக்கடலில் நாதியற்று ஒரு இனம் – எஸ்.ஜே.பிரசாத் (சிறப்பு கட்டுரை) 2015 ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை போட்டார்கள் ஆனால் எங்கு போவது… தெரியாது! ஒரு இனம்… நடுக்கடலில் நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. யாரும் அவர்களை கவனிப்பதாக இல்லை… அவர்களை ரோஹிங்யாக்கள் என்கிறார்கள். ஆம்… மியன்மாரில் ஒரு இனத்துக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தக் கூட்டம் படகுகள் ஏறி புறப்பட்டது… ஆனால் எங்கு போவதென்று அவர்களுக்கு தெரியாது. எங்கேயாவது போவோம் தப்ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
பர்மா: சிறுபான்மை ரொகிங்யா மக்கள் மீது பாயும் பவுத்த பயங்கரவாதம் ரூபன் சிவராஜா பர்மாவின் பெரும்பான்மை பவுத்த கடும்போக்கு சக்திகளால் அந்நாட்டின் வட பிராந்தியமான Rakhine மாநிலத்தில் வாழ்ந்துவரும் Rohingya (ரொகிங்யா) இன சிறுபான்மை மக்கள் மீது பாரிய படுகொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ரொகிங்யர்கள் தமக்கெனத் தனியான மொழியைக் கொண்டுள்ள இஸ்லாமியப் பின்னணியுடைய மக்கள் குழுமம் ஆவர். கிட்டத்தட்ட 55 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்டுள்ள பர்மாவில் 800 000 வரையான ரொகிங்யா இன மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் மொத்த மக்கட்தெகையில் 90 வீதமானவர்கள் பவுத்த மதப் பின்னணியுடையவர்கள். 2 வீதமானவர்கள் ரொகின்யர்கள். ஏனையோர் கிறிஸ்தவ மற்றும் இந்துமதப் பின்னணியுடையவர்களாவர்.…
-
- 0 replies
- 454 views
-