Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தேசிய பாதுகாப்பும் 19ஆவது திருத்தச்சட்டமும் by A.Nixon புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் குற்றம் சுமத்தியிருந்தன. ஆதரிக்கவேண்டிய தேவை வர்த்தமானி அறிவித்தலின் மூலப்பிரதியில் கூறப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுதல் என்பதும், ஜன…

  2. பேரினவாதமும் காக்கிச் சட்டையும் உரசினால்தான் தமிழ்த் தலைமைகளின் இரத்தம் கொதிக்குமோ? – நடராஜா குருபரன்... 28 ஏப்ரல் 2015 யாழில் தற்போது வாள் வெட்டுடன் கூடிய வன்முறைக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.; இரவானதும் ஊருக்கு ஊர் கத்திகளோடு, கட்டுக்கடங்காத காளைகள் திரியத் தொடங்கி விடுகின்றனர். அந்த நேரம் யார் கண்ணில் தென்படுகின்றார்களோ அவர்களை வெட்டிச் சாய்ப்பதுவே இவர்களது வேலையாகிப் போகிறது என்கின்றனர் கிராம மக்கள்.யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்கள் 9 பேரை நேற்று முன்தினம் இனந்தெரியாத சில குண்டர்கள் சுதுமலை சந்தியில் வைத்து வெட்டியும், போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாரியாகத் தாக்கியும் உள்ளனர். வெட்டப்பட்ட மாணவன் ஒர…

  3. சிங்களம் சர்வதேசத்தோடு போராட தொடங்கிவிட்டது.... அப்போ தமிழர்கள்? [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:06.02 PM GMT ] ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று. இப்போது அதே பழமொழி இலங்கை அரசியலுக்கு நன்றாக பொருந்துகின்றது. ஆம் இலங்கை அரசியல் தற்பொழுது எப்படி நகர்ந்து கொண்டிருக்கின்றது? யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி? என்று சாதாரண பாமர குடிமகனிடம் கேட்டால் விழிபிதுங்கி நிற்பான். இதுவே இன்றைய நிலை. ஆனால் இதுவொன்றும் இலங்கை அரசியலில் புதிதானதல்ல. இலங்கை பூகோள ரீதியில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்ற நாடு ஆகையால் …

  4. தந்தை செல்வநாயகம் அவர்களின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 18.12.1949அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் அமைப்புத் தீர்மானத்தை பிரேரித்துப் பேசிய தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகமற்ற முறையில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளை நீதியாகவும் ஜனநாயக ரீதியாக…

    • 0 replies
    • 451 views
  5. குழம்பும் தென்னிலங்கை – தமிழர் பிரச்சனை என்னாகும்? யதீந்திரா இலங்கை அரசாங்கம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நாளுக்குநாள் தென்னிலங்கை அரசியலில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாரம் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்து. ஆனால் பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதமிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன. பா…

  6. ஆட்சி மாற்றமும் வடமாகாணசபையும்: சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள் நிலாந்தன் இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான். இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான். இதில் எதிர்ப்பைக் காட்டும் எவரும் முழுநேர செயற்பாட்டாளர்கள் இல்லைத்தான். ஆனாலும் இலங்கைத் தீவின் வயதால் மிக இளைய ஒரு மாகாண சபைக்கு வந்த ஒரு முக்கிய சோதனையாக இதைக் குறிப்பிடலாம். இன்று இக்கட்டுரையானது குடிநீரில் என்ன கலந்துள்ளது என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கப்போவதில்லை. அது துறைசார் நிபுணர்களின் ஆய்வுக்குரிய ஒரு பரப…

  7. தமிழரசு கட்சி, தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது? யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தசாப்தகால வயதுண்டு. ஆனாலும் ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரை தசாப்தகால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில், தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிடவும் அதிக கனதியுடைய தேவையாக மாறியிருக்கிறது. இவ…

  8. மைத்திரியை வலுப்படுத்தும் மேற்கு நாடுகள்! புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவடைவதற்கு முதல்நாளான கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் ஐநாவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நிர்வாகப் பொறுப்பை மூத்த இராஜதந்திரியான அன்ட்ரூ மான் வகித்து வருகிறார். அவரும், பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவராக உள்ள லோறா டேவிஸ், ஜேர்மன் தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோருமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். 100 நாட்களை புதிய அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதற்கு பாராட…

  9. மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு எமது விசேட செய்தியாளர் ஜெரா 100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பை மையப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர்களின் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் திட்டம் பற்றி அடிமுடி எதுவும் தெரியாது. காரணம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதாரணர்களை இலக்குவைத்தவை மிகச் சாதாரணம். அத்துடன் 100 நாள் திட்டத்தின் அனேக சாரங்கள் ஆட்சியியலுடனும், அதன் இருப்பைத் தக்கவைத்தலுடன் தொடர்புபட்டது. எனவேதான் தமிழ் புத்திஜீவிகளிடமிருந்து இந்த 100 நாள் திட்டம் பற்றியும் 100நாட்களின் ஆட்சி பற்றியும் கொழும்புமிரர் வினவ திட்டமிட்டது. இந்த ஆட்சி மாற்றம் இலங்கை மக்களால் கொண்டுவரப்பட்ட போதிலும், மேற…

  10. அமெரிக்காவின் கனவை தகர்த்தெறிகின்றார்களா ராஜபக்சாக்கள்? உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது. இந்த நாட்டில் இன்னார் தான் ஆட்சியில் இருக்க வேண்டும், எம்மை பகைப்பவர்கள், எவராக இருந்தாலும் அவர் எந்த பலத்தைப் பெற்றிருந்தாலும் அவரின் செல்வாக்கை சரித்து தன் கொள்ளைக்கு அல்லது தனக்கு ஏற்றவனாய் ஒருத்தனை பதவியில் அமர்த்தும் சிந்தினையில் உள்ளவன் அமெரிக்க ஜனாதிபதி. இதன் தாக்கத்தினை எகிப்திலும், லிபியாவிலும் காண முடிந்தது. இதன் அடுத்த அங்கமே இலங்கையில் ராஜபக்சாக்களை ஓரம் கட்டுதல். வீழ்த்துதல் என்னும் இராஜதந்திரம். தன் உலக வல்லரசை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய ஆதிக்கத்தை பரப்புவதற்காகவும் படாத பாடுபடுகின்றது அம…

  11. நாதியற்ற தமிழன்..! ஈழத்தின் பூர்வீகக்குடிகளான தமிழன் செத்துமடிந்து கொண்டிருக்கின்றான். [ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 06:26.57 AM GMT ] உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்...! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை…

  12. விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்…..... தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்! விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்…. குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்….. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக…

  13. "பொறுத்திருந்து பாருங்கள்" மகிந்த ராஜபக்ஸ - விசேட தமிழாக்கம் ரஜீபன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளார் என்கின்றனர் அவரது உதவியாளர்கள். இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத தோல்வியை தழுவிய பழுத்த அரசியல்வாதியான ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றார், தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது முடிவை அவர் இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் அவர் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு விஜயம் மேற்கொள்ளும் நூற்றுக்கணக்கான ஆதராவாளர்களை சந்தித்துவருகின்றார், மேலும் அவர் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று மாகாணசபை மற்றும் ஊள்ளுராட்சி அமைப்புகளின் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர…

  14. சீனாவுடனான போர்ப்பயிற்சியை இலங்கை மறைக்க முனைவது ஏன்? கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015 என்பதாகும். சீனா தனது கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு பெருமளவு வளங்களை ஒதுக்கி பல்வேறு நாடுகளையும் தன்பக்கம் திருப்பி வருகிறது. அது முற்றிலும் வணிக நோக்கம் கொண்ட திட்டம் என்றே சீனாவினால் கூறப்பட்டு வந்தாலும், அதன் பின்னால் மிகப்பெரிய இராணுவ ஆதிக்க நோக்கம் ஒழிந்து கிட்டப்பதாக பொதுவான விமர்சனங்கள் உள்ளன. இலங்கையும் இந்த கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து கொள்ள முன்னைய ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் புதிய ஆட்சி அமைந்த பின…

  15. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்தவது? தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்துவதா அல்லது தமிழ்த் தேசிய சிறுபான்மையினராக அடையாளப்படுத்துவதா அல்லது சிறிலங்கர் என்ற அடையாளத்துக்குள் தம்மைக் கரைத்துக் கொள்வதா? இதில் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் தெரிவை எடுத்திருந்தார்கள் என்பதனை வரலாறு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னரான காலத்தில் தமிழர்கள் தம்மைத் தேசமாக அடையாளப்படுத்தும் கூட்டுணர்வில் இருந்து விடுபடச் செய்து சிறுபான்மையினராகவோ அல்லது சிறிலங்கராகவோ சிந்திக்கவும் அடையாளப்படுத்தவும் வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபச்ச முன்வைத்த «ஒரு நாடு ஒரு மக…

  16. இலங்கையின் வடக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்பில் வடக்கு மாகாண சபை முதல் சர்வதேச நாடுகள் வரை குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் சாதாரணமானதல்ல என்றும் பல்வேறு திட்டங்களை பின்புலமாக கொண்டது என்றும் பல்வேறுபட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் உள்ள குளோபல் செய்தியாளர் ஒருவர். குறிப்பிடுகிறார் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரம் என வருணிக்கப்பட்ட கிளிநொச்சியில் புதுவருட தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் சில நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். வடக்கில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவு காணப்படுகிறது என்பதை காட்டுவதற்கே இந்த நிகழ்வு என்கிறார் வடக்கில் உள்ள அரசியல் அவதானி ஒருவர். இதை இராணுவத்தின் அரசியல் நிகழ்வு என்றும் அவர் அட…

    • 0 replies
    • 578 views
  17. அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன? இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய நிலையைக் கண்காணிப்பதிலும், இலங்கை தொடர்பான தனது நிலைப்பாடு நடுநிலையானது என்பதை வெளிப்படுத்துவதிலும் அமெரிக்கா இப்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் தொழிலாளர் விவகாரம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை மதிப்பீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதுபோலவே வரும் ஜூன் மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை இலங…

  18. விடுதலைப் புலிகளின் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு-ஒரு பார்வை (2002-2015) 2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக, அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக, ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன அந்த சந்திப்பை. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு திகதி கு…

  19. அரசாங்கம் வீழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ஏன் சொன்னார்? அரசாங்கம் வீழ்ச்சி அடைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர், தனது அரசாங்கம் வீழ்ச்சியடைகிறது எனக் கூறியதற்குள் அவரின் இயலாமை தெரிகிறதா? அல்லது தேசிய அரசாங்கம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது என்பதைக் குறிக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. கூடவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் போக்கு ஆளுமையற்றது என்பதைச் சொல்லாமல் சொல்வதற்காக அரசு கீழ் இறங்கிப் போகின்றது என்ற வார்த்தையை ஜனாதிபதி மைத்திரி பிரயோகித்தாரா? என்றெல்லாம் எண்ணத்தோன்றும். எதுவாயினும் மகிந்த ராஜபக்­ இருந்த கதிரையில் இன்னொருவர் இருப்பதாக இருந்தால், அவர் மகிந்தவைவிட மிகவும் வல்லமை பொருந்தியவராக, அதிரடியான …

  20. லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை! மார்க்ஸ். அ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் எனக் கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் (செப் 16, 1923 – மார்ச் 23, 2015) மரணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசிர் அராஃபத், நெல்சன் மண்டேலா ஆகியோருக்குப் பிறகு அதிக உளவில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக அவரது இறுதி அஞ்சலி அமைந்தது. தமிழகத்திலும் கூட ஆங்காங்கு தன்னிச்சையாக மக்கள் ஃப்லெக்ஸ் போர்டுகள் வைத்து அஞ்சலி செலுத்தினர். தீவிரத் தமிழ்த் தேசியவாதியாகிய வைகோ கண்ணீர் ததும்ப அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். “நல் ஆளுகைக்கான” விளம்பர மாதிரியாக (poster boy of good governance) ‘ஃபைனான்சியல் டை…

  21. இந்திய - சீன - அமெரிக்க போட்டிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி, குறுகிய நேர இலங்கைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த மார்ச் 24ஆம் திகதி பகல், சில மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்த அவரது பயணத்தின் போது, சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன. எனினும், அவரது பயணத்தின் நோக்கம் குறித்து அதிகம் பேர் அக்கறை கொள்ளவில்லை. அவர் தனது பயணத்தின்போது, மத்தள சர்வதேச விமான நிலையத்தை, குத்தகைக்குப் பெறுவதற்கு விருப்பம் வெளியிட்ட பின்னர் தான், அவரது வருகையின் சூத்திரம் பலருக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. அம்…

  22. ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? - யதீந்திரா படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில் ஒரு குறித்த இலக்கை முன்னிறுத்தி இயங்குவோர், அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான புறச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அவ்வாறானதொரு புறச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படை என்னவென்றால், எங்களின் பயணத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை, அதேவேளை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதுதான் அந்த அடிப்படையாகு…

  23. போருக்குப் பின்னரும் பிளவுபட்டுக் கிடக்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார். இவ்வாறு அமெரிக்கா ஊடகமான ‘லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்’ இல் SHASHANK BENGALI என்ற ஊடகவியலாளர் தனது யாழ்ப்பாணத்துக்கான பயணம் குறித்து விபரித்துள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. சிறிலங்காவின் மிகவும் அழகான தென் கரையோரத்திலிருந்து வடக்கிலுள்ள யாழ்ப்பாணம் வரை நீண்டுசெல்லும் வீதியானது செப்பனிடப்பட்டு ம…

  24. வீண்சுமையை ஏற்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சவின் ஆடம்பரத் திட்டங்கள் சிறிலங்காவில் இது தொடர்பாக முன்னர் கேள்வியெழுப்பியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர். ஏனெனில் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தார்.இவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் சிறிலங்கா விழித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் ஊடகத்தில் SHASHANK BENGALI எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கரையோரத்திலுள்ள, புதர்க்காடுகளையும், காட்டு மிருகங்கள் மற்றும் வேற்று நாட்டுப் பறவைகளின் சரணாலயத்தையும் கொண்ட பின்தங்கிய அம்…

  25. திடீரென ஒரு நல்ல செய்தி. ”கொழும்பு மிரர் வேலைசெய்யத் தொடங்கீற்றுது”. ஓம். சில தினங்களாக கொழும்பு மிரர்இணையத்துக்கு சூனியம் வச்சிட்டாங்கள். வெட்டிக்கொண்டு வர படாதபாடுபடவேண்டியாயிகிட்டுது. அப்படித்தான் ஆசிரியர் சொன்னார், விட்ட இடத்திலிருந்தும் ஆரம்பிக்கவேணும், அதேநேரத்தில் நிகழ்காலத்தையும் பிரதிபலிக்க வேணும் எண்டு. உடனடியாக ஒரு ஸ்டோரி பண்ணோனும். என்ன செய்யலாம், வடக்கிற்கான ரணிலின் பயணத்தில இருந்து ஆரம்பிப்பம். அதுவும் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்கும் மையமான யாழ்ப்பாணத்தின் இளையவர்கள் ரணிலின் யாழ்ப்பாண வருகை பற்றி என்ன நினைக்கிறார்கள்? சமூகவலைதளங்களில், ஊடகங்களில் தமிழர் அரசியல் பற்றி எழுதிவரும் இந்தத் தலைறையினரின் சிலரை சிக்கெனப் பிடித்தேன். பேஸ்புக்கில். செந்தூரன், இது…

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.