Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சார்லி ஹெப்டோ : கருத்துரிமையும் அடிப்படைவாதிகளும் யமுனா ராஜேந்திரன் சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பல…

  2. தூசு தட்டியே காசு பிழைத்தவர் மூனா ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது, அது சிறிதோ பெரிதோ அதை மிகத் துல்லியமாக ஆராய்ந்து முடிவு எடுப்பதில் யேர்மனியர்கள் வல்லுனர்கள். அவர்களுடனான பல ஆண்டுகள் பழக்கத்தினால் இதை நான் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே அதை நான் அறிந்து கொண்டேன். புகலிடம் தேடி யேர்மனிக்கு வந்தபொழுது அவர்கள் எங்களைக் கையாண்ட விதத்திலேயே அவர்களின் திறமையைப் புரிந்து கொண்டேன். எண்பதுகளில் யேர்மனிக்கு புகலிடம் தேடி வந்தபொழுது நிறையவே சிரமப்பட்டிருக்கிறோம். படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் அனுமதி இல்லாமல் வாழ்க்கையில் இரண்டு வருடங்களை முகாம்களுக்குள்ளேயே வீணாக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என்று கனடா, லண்டன் எனப் பலர் பறந்துவிட்டார்கள…

  3. தெரியாத தேவதையால் தீர்வுகளை எட்ட முடியுமா? எரிக் சூல்ஹைம் (தமிழாக்கம்: ரூபன் சிவராஜா) 'தெரியாத தேவதையால்' தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத் தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் 'The hindu' இதழின் இணையத்தளத்தில், 15.01.15 வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. புதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது தமிழர்களுடனும் முஸ்லிம்களுடனுமான நல்லிணக்கமாகும். ஆனால், ஜனாதிபதி சிறிசேன அரசாங்கத்தால் உடனடியாக செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் நிறையவே உள்ளன. தமிழர்களின் மொழி உரிமை மீள் நிலைநாட்டப்படலாம். இராணுத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட பகுதியின் சில பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றலாம். தமிழ் மக்களால…

  4. வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள் நிலாந்தன் மகிந்த ராஜபக்ச இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க மறுத்து படைத்தரப்பின் உதவியைப் பெறக் கூடும் என்றவாறான ஊகங்கள் ஏற்கெனவே மேற்கத்தேய தூதரகங்கள் மத்தியில் காணப்பட்டன. சக்திமிக்க நாடொன்றின் தூதுவர் இது தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரோடு உரையாடியிருக்கிறார். ஆனாலும் கத்தியின்றி இரத்தமின்றி ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அது மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான பிடியை அவர் அமைதி…

  5. இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சி­ மாற்றம் இந்­தி­யா­வுக்கு மகிழ்ச்­சி­யையும் உற்­சா­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை, சீனா­வுக்கு கவ­லை­யையும் கலக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. கடந்த 9ம் திகதி காலையில், அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேற மஹிந்த ராஜபக்ச முடி­வெ­டுத்த போதே, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்றி உறு­தி­யா­யிற்று. உட­ன­டி­யா­கவே புது­டில்­லியில் இருந்து ஜனா­தி­பதி செய­லகம் மூலம் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வாழ்த்துத் தெரி­வித்தார். டுவிட்­ட­ரிலும் வாழ்த்தை பதிவு செய்த அவர் பின்னர், நேர­டி­யா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைத் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்­தினார். அதை­ய­டுத்து, வாழ்…

  6. ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்­பட்ட தோல்வி, இலங்­கையில் ஒட்டு மொத்த நிர்­வாக கட்­ட­மைப்­பு­க­ளை­யுமே, மாற்­றி­ய­மைக்கும் நிலைக்குத் தள்­ளி­யுள்­ளது. காரணம், ஒன்­பது ஆண்­டு­க­ளாக, ஆட்சி செலுத்­திய மஹிந்த ராஜபக்ச தனது செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக எல்லாக் கட்­ட­மைப்­பு­க­ளி­லுமே தனக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளையும், விசு­வா­ச­மா­ன­வர்­க­ளையும் நிய­மித்­தி­ருந்தார். பாது­காப்புக் கட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் எதிர்க்கேள்­விக்கு இட­மற்ற வகையில் அது ராஜபக்ச மய­மாக்­கப்­பட்­டது. 2010ம் ஆண்டு நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவின் தோல்­வியை அடுத்து, அவ­ருக்கு நெருக்­க­மாக இருந்த மூத்த இரா­ணுவ அதி­கா­ரிகள் அனை­வரும் பதவி நீக்­கப்­பட்­டன…

  7. மாவோவின் செஞ்சீனம் ,டெங் சியாவோ பிங்கின் பொருளாதாரக் கொள்கையோடு நிறம் மாறிவிட்டது. தற்போது அந்நாடு ஆசியச் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையே வளைத்துப் போடும் வல்லமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) அளவினையும் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால், சீனா தென் கொரியா ஆசிய நாடுகளே அதிக நன்மையடைகின்றன. இருப்பினும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத்தடை சீனாவையோ அல்லது இந்தியாவையோ பாதிக்கவில்லை. நட்டத்தில் இயங்கியவாறு, பாதீட்டில் தங்கியிருக்கும் மின்சாரசபையையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் கொண்ட இலங்கை போன்ற நாடுகளே எண்ணெய்த் தடையால் பெரிதும் பாதிப்புறுகின்றன. சர்வதேசச் சந்தையில் மசகு எண்…

  8. ஆட்சி மாற்றமும் தமிழரின் நீதிக்கான போராட்டமும் by Niran Anketell படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும். - மார்டின் லூதர் கிங், ஜூனியர் கடந்த வார ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எதிர்பாராத ஒன்றாவே​ அமைந்தது. அந்த திடீர் மாற்றமானது சிறிசேனவுக்கு தம் வாக்குகளை அள்ளிக்கொடுத்த தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித பிரதிபலனை கொண்டுவரும் என்ற கேள்வி எல்லா மக்களினது மனங்களில் முக்கியத்…

  9. மாற்றம்? - நிலாந்தன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO வெற்றிவாதமே மறுபடியும் வெற்றிபெற்றுள்ளது. இதை இன்னும் திருத்தமாகக் சொன்னால் வெற்றிவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம் வெற்றி பெற்றுள்ளது எனலாம். வெற்றிவாதம் எனப்படுவது ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள பொளத்த மேலாண்மைவாதத்தின் ஆகப்பிந்திய வடிவமே அது. கடந்த சுமார் ஐந்தேமுக்கால் ஆண்டுகளாக ராஜபக்‌ஷ அதற்குத் தலைமைதாங்கினார். ஆனால், அவருடைய தலைமையின் கீழ் சிங்கள பௌத்த மேலாண்மைவாதமானது அனைத்துலக அரங்கில் அதிகம் அபகீர்த்திக்குள்ளாகியது. இந்நிலையில், வெற்றிவாதத்தின் பங்காளிகளை வைத்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டை வெற்றிபெற வைத்ததன் மூலம் சிங்கள பெளத்த மேலாண்மைவாதம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டுள்ளது…

  10. எப்போதான் சொல்லுவீங்க..? மூனா தொண்ணூறுகளின் ஆரம்பம். தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை யேர்மனியில் ஆரம்பித்து இருந்தோம். கைகளில் அடக்கமான தொலைபேசிகளோ அல்லது மடிக்கணணிகளோ இல்லாத நேரம். ஆகவே ஓடியோடித்தான் எங்கள் சேவையைச் செய்து கொண்டிருந்தோம். வீடு, குடும்பம், வேலை என்று எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மல்லுக் கட்டிக்கொண்டுதான் எங்களுடைய புனர்வாழ்வுக்கான சேவை இருந்தது. மக்களை நாங்கள் அணுகும் முறையை விரும்பிய பலர், தாயகத்துக்கு சேவை செய்வதில் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். யேர்மனியில் இருந்த தமிழ் மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை மனம் விரும்பி வழங்கினார்கள். இவை எல்லாம் எங்களுக்கு வலிமையான ஊக்க மருந்துகளாகின. அடுத்த கட்டமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை சட்டரீ…

  11. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் என்றும் இல்லாத வகையில் ஆண்ட மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற முழு நாட்டிலும் உள்ள தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாக்களித்து அவரை தோல்வியடைய செய்துவிட்டார்கள். இது ஒவ்வொரு தமிழ் மக்களின் மனக்குமுறலின் வெறுப்பின் வெளிப்பாடாகும். அது மாத்திரம் இல்லாது யுத்தத்தில் போது மரணத்தை தழுவிய லட்சக்கணக்கான ஆத்மாக்களின் சாபமும் அவருக்கு எதிரான செயல்பட்டது எனலாம். மகிந்த ராஜபக்ச குடும்பம், அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்ட அனைத்து அடியாட்களும் அனுபவித்த சுகபோகங்களை கனவில் கூட யாரும் அனுவிக்க முடியாது எனலாம். ஆம் மகிந்தவிற்கு ஆதரவாக செயல்பட்ட அத்தனை கட்சிகளின் தலைமைகள், உறவுகள் ,அடியாட்கள்,அதிகாரிகள் செ…

  12. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது பேன்ற விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்துப்படுகின்றது. அபிவிருத்தி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார். ஆனால், பெருந்தெருக்கள், அதிவேகச் சாலைகள், துறைமுக நகரம் என்ற பெரிய வேலைத் திட்டங்களை நோக்கியதாகவே அபிவிருத்தி காணப்படுகின்றது. சாதாரண மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கட்சிகளின் சந்திப்புகள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தினமும் சந்தித்து உரையாடுகின்றன. தங்கள் பலத்தை எப்படி …

  13. அலரி மாளிகையில் இருந்து அலறியடித்து ஓடிவிட்டார் மகிந்த ராஜபக்ஷே! அவர் 'பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்பாற்றவில்லை; ஊர் ஊராகப் போய் பிராயச்சித்தம் தேடிய கடவுளும் காப்பாற்றவில்லை. 'திருப்பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்பார்கள். திருப்பதி வந்து போனவருக்கு நேர்ந்த திருப்பமோ, திடுக்கிட வைத்தது. ராஜபக்ஷேவின் வலது கையைப் பார்த்தால் தெரியும்... கலர் கலராகக் கயிறுகள் கட்டியிருப்பார். யார் மந்திரித்து கயிறு கொடுத்தாலும் கட்டிக்கொள்வார், யார் ஜோசியம் சொன்னாலும் கேட்டுக்கொள்வார். உடல் நலிவுற்ற நேரத்தில் 24 மணி நேரமும் குடும்ப மருத்துவரை தனது பார்வையிலேயே வைத்துக் கொள்வதைப் போல, ஆஸ்தான ஜோதிடர் தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை எப்போதும் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார். 'இல…

  14. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேல் என்று தேர்தலுக்கு முன் பிசாசோடு தன்னை ஒப்பிட்டு தமிழர்களிடம் ஓட்டுக்காக கையேந்தினார் ராஜபக்‌ஷே. அந்தச் சாத்தானை விரட்டியடித்து ஒட்டுமொத்த குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இலங்கை வாக்காளப் பெருமக்கள். ராஜபக்‌ஷேவுக்கு தமிழர்கள் தந்த தண்டனை என்றே அனைவரும் சொல்கிறார்கள். மைத்ரிபால சிறீசேனவின் தேர்தல் வெற்றி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். மகிந்த ராஜபக்‌ஷே 10 ஆண்டுகளாக சர்வாதிகாரமான ஆட்சியை நடத்தி வந்திருக்கிறார். தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை சகல விதத்திலும் தலைவர்களாகவோ, பொறுப்பாளர்களாகவோ ந…

  15. உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நேரடிப் பார்வையின் கீழ் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியிலும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கும் மத்தியிலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நாட்டில் ஆட்சி மாற்றமா? இராணுவ ஆட்சியா? போன்ற பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது. அதை மெய்ப்பிப்பது போலவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 20 மாவட்டத் தபால் வாக்குகள் எண்ணிக்கை செய்யப்பட்டும் உடனடியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் உடனடியாக மஹிந்தர் வெற்றியடைந்த மாவட்டங்களைத்தான் ஆணையம் முதன் முதலாக 6 மாவட்ட முடிவுகளை அறிவித்தது. காரணம் இராணுவ நகர்வு ஒன்…

  16. இனி வருவது ‘தேன்நிலவுப் பொழுது’ – ச.ச.முத்து அமெரிக்க இரட்டைகோபுரம் மீது விமானங்கள் மோதிய பொழுதில் அமெரிக்க அதிபர். புஸ் ஒரு கோடு கிழித்தார்.எம்முடன் நிற்கலாம். இல்லையென்றால் அவர்களுடனேயே. அதனைப்போன்றதொரு தெரிவே தமிழர்களுக்கு இந்த சிங்களதேச அதிபர் தேர்தலில் கொடுக்கப்பட்டு இருந்தது. அறுபது ஆண்டுகளாக தொடரும் இனப்பாரபட்சம், இனஅடையாளம் சிதைத்தல், இனஅழிப்பு என்பனவற்றை உச்சமாக நிகழ்த்தியவன் ஒரு பக்கம், அவனுக்கு பாதுகாப்பு மந்திரியாக இருந்தவன் இன்னொரு பக்கம். ஆனாலும் தமிழர்கள் தமது சத்திய ஆவேசத்தை வாக்குகளில் காட்டி இருந்தார்கள். இனப்படுகொலையாளி மகிந்த தோற்று அம்பாந்தோட்டையின் தனது சொந்த ஊருக்கு மூட்டை கட்டிவிட்டார். மைத்திரி சிங்கள தேசத்தின் அதிபராக பதவி ஏற்றுமுள்ளார்.…

  17. நடந்து முடிந்த நாட்டின் 7வது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளது. நாட்டின் இனமத பேதங்கள் வேண்டாம், நீதியான சுதந்திரமான நல்லாட்சி வேண்டும், சிறுபான்மையினரை ஒதுக்கக்கூடாது, உண்மையான ஜனநாயகம் வேண்டும் போன்ற பல செய்திகளை உரத்துச் சொல்லியுள்ளது. நிற்க இத்தேர்தலில் தமிழர்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் மேலும் பல செய்திகளைச் சொல்லியுள்ளது. இம்முறை தமிழ்மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தமையே இச்செய்திக்குக் காரணமாகும். 2005ல் மஹிந்த வெல்லவும் 2015ல் மஹிந்த தோற்கவும் காரணம் வடக்கு கிழக்கு மாகாணமே. அதிலும் தமிழ் மக்களே எனலாம். ஆம் 2005ல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென விடுதலைப் புலிகள் கூறியமையினால் மஹிந…

  18. இலங்கையில் கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் இந்தியாவை ஆளும் பாஜக வின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களில் எவரையும் பாஜக கட்சி ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். கடந்த நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, மகிந்த ராஜபக்ச நேபாளத்தில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக் கூறியிருந்தார். இதுபோன்ற…

  19. இலங்கைத் தேசியம் என்ற நீரோட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து விட வேண்டும் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான இடத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டது என்ற நம்பிக்கையும்; உண்டு. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த தோல்வியடைந்தார். -அ.நிக்ஸன்- 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த ராஜபக்ச தோல்…

  20. s ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் ஆணையைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யதன் மூலம் மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். பள்­ளே­வத்தே கம­ரால லாகே மைத்­திரி­பால யாபா சிறி­சேன எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் 1951ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் 3ஆம் திகதி பௌத்த சம­யத்தைப் பின்­பற்றும் மத்­திய தர விவ­சாயக் குடும்­பத்தில் பிறந்தார். தற்­போது இவ­ருக்கு வயது 63. ஜயந்தி புஷ­ப­கு­மாரி என்­ப­வ­ருடன் திரு­மண வாழ்க்­கையில் இணைந்து கொண்ட இவ­ருக்கு இரு மகள்­மாரும் ஒரு மகனும் உள்­ளனர். கல்வி: 1955 இல் பொலன்­ன­றுவ லக் ஷ உயன பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வியைப் பெற்ற இவர் பொலன்­ன­றுவை தப்­போவௌ மகா வித்­தி­யா­ல…

  21. 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தமிழர்களே தீர்மானித்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொண்டுள்ளார். உண்மையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர் என்பதே யதார்த்தமானதாகும். கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும், அதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே தீர்மானித்திருந்தார். குறிப்பாக 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிகுந்த ஆதரவு இருந்தபோதும் அப்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த ந…

    • 2 replies
    • 679 views
  22. ஓயாத அலைகள் காலத்தில் புதுக்குடியிருப்பில் இருந்தபோது போராளியாக இருந்த ஒரு நண்பர் கூறிய தகவல் இது: ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையின்போது, ஆணையிறவு கைப்பற்றப்பட்ட பின்னர், தென்மராட்சியைக் கைப்பற்றுவதற்கு புலிகள் நடவடிக்கை எடுத்த காலம். இரவுடன் இரவாக இரகசியமாக முன்னேறிச் சென்ற புலிகளின் படையணிகள், தென்மராட்சியை யாழ்ப்பாணத்தில் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன. கைதடிச் சந்தியில் இருந்து கோப்பாய் சந்தியை நோக்கிச் செல்லும் பாதையில் புலிகளின் அணியொன்று நிலைகளை அமைக்கிறது. இந்தத் தகவல் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தெரியவந்ததும், மக்கள் திரண்டு செல்கிறார்கள். மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்பு தம்மை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்குமாற…

  23. அரசியல் உரிமைக்கான அறவழி இயக்கம் தொடங்க இதுவே தக்க தருணம்! - பெ.மணியரசன் அறிக்கை! [saturday 2015-01-10 21:00] இலங்கைத் தேர்தல் தரும் பாடம் இதுதான்! தமிழீழ மக்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்! தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை! இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சே படுதோல்வி அடைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தேர்தல் முடிவு தமிழீழத்தில் இராணுவ முற்றுகைக்குள் பணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியியல் உரிமைகள் - அரசியல் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத்தருமா என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், வெற்றுபெற்றுக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.