அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முடியுமா? பா.கிருபாகரன் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியாது. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நாட்டையும் அரசியலையும் மக்களையும் குழப்பி பிரேரணையிலும் மண்கவ்விய மகிந்த ஆதரவு பொது எதிரணியினர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித…
-
- 0 replies
- 358 views
-
-
ஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம் ரொபட் அன்டனி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இலங்கையின் வரவு செலவுத்திட்ட சம்பிரதாயங்களுக்கும் வழமைக்கும் மாறான முறையில் வித்தியாசமான அணுகுமுறையுடனான வரவு செலவுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது பொது மக்களை திருப்திப்படுத்துவதற்கான நிவாரணங்கள் குறைந்த அதேவேளை பொருளாதார ரீதியில் வர்த்தகர்களை ஊக்குவிக்கின்ற, முதலீடுகளை அதிகரிக்கின்ற, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளை முன்னேற்றுகின்ற வகையில் பல்வேறு பரிந்துரைகளுடன் வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிகவும் வித்தியாசமான ஒரு அணுகுமுற…
-
- 0 replies
- 358 views
-
-
புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும் வட, கிழக்குக்கு வெளியேயுள்ள மாகாணங்கள் அல்லது மாவட்டங்களில் மலையகம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் சாதகமான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டாலும் பெரும்பாலான மாவட்டங்களில் இனவாத தீ கொழுந்து விட்டெரியும் சூழ்நிலையொன்றை உருவாக்க இனவாதிகளும் மதவாதிகளும் மஹிந்த தரப்பினரும் தேசிய மிதவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கின்ற பேரின புத்திஜீவிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான யதார்த்தம். புதிய அரசியல் அமைப்பிற்கு பாராளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்று நிறைவேற்றப்பட்டாலும் பெரும்பான்மை …
-
- 0 replies
- 357 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் காட்டப்படும் தாமதம் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டில் தாமதப்போக்கு காட்டப்படுகின்றதோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் எந்தவொரு விடயங்களும் உறுதி செய்யப்படவில்லை. அனைத்தும் பேச்சு மட்டத்திலும் யோசனைகள் முன்மொழியப்பட்ட நிலையிலுமே காணப்படுகின்றன என்று தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்தச் செயற்பா…
-
- 0 replies
- 357 views
-
-
ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்? கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில் பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வை மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களின் தவல்களின்படி மேற்படி நிகழ்விற்காக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் நான்கு கட்சிகள் மற்றும் கூட்டமைப்பிற்கு எதிர் நிலையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அழைக்கப்…
-
- 0 replies
- 357 views
-
-
பந்தாடப்படும் கேப்பாப்புலவு முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதிகளில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள், வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். …
-
- 0 replies
- 357 views
-
-
தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன. இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 …
-
- 1 reply
- 357 views
-
-
யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன் ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன. பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது. ஆயுத மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் விடிகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர் ஊராக வருகிறது. அதுதான் தண்ணீர் விற்கும் வாகனம். அதுவும் இசையோடுதான் வருகிறது. அதாவது நீரை விலைக்கு வாங்கும் ஒரு சமூகமாக நாங்கள் எப்பொழுதோ மாறி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கலாநிதி ஆறு.திருமுருகன் இதுதொடர்பாக பகிரங்கமாக பேசியிருந்தார். ”ஆலயங்களில் காணப்படும் பொதுக் கிணறுகளில் உள்ள நீரை தீர்த்தம் என்று கூறி ஊர் முழுதும் அருந்தியது. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வடிக்கப்பட…
-
-
- 4 replies
- 357 views
- 1 follower
-
-
இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியும், தமிழ்த்தரப்பும் – பி.மாணிக்கவாசகம் 88 Views இராணுவ உளவியல் நிர்வாக வழிப்போக்கும், இனங்களைப் பிரித்தாளும் ஆட்சி முறையிலான ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் சிறுபான்மை தேசிய இன மக்களை மட்டுமல்லாமல் பெரும்பான்மை இன மக்களையும் பதம் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. சிங்கள பௌத்த மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள போதிலும், சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்கு அரசு தவறியிருப்பதாகவே தென்பகுதியில் உணரப்படுகின்றது. குறிப்பாக கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடல்களுக்கு எரியூட்டும் விவகாரத்திற்கு முடிவு காணாமல் இழுத்தடிக்கின்ற அரசாங்கத…
-
- 0 replies
- 357 views
-
-
கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது. அரசமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையின் …
-
- 0 replies
- 357 views
-
-
மறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்:- தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ், பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டார்கள். விடுதலைப்புpகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை புரிந்தார்கள் அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும், அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முஸ்…
-
- 0 replies
- 357 views
-
-
ஜெனீவா -2018 – என்ன காத்திருக்கிறது? நிலாந்தன்…. ஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events) தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய நிகழ்வில் பெரியளவு முக்கியத்துவம் கிடைக்காதுதான். பதிலாக பக்க நிகழ்வுகளில்தான் தமிழ் மக்கள் தமது குரலை வலிமையாகவும், உரத்தும் ஒலிக்க முடியும். பக்க நிகழ்வுகள்,நிழல் அறிக்கைகள்(shadow reports) போன்றவை அரசற்ற தரப்புக்கள் தமது நியாயத்தை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள்தான். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் தமது பயங்களையும், சந்தேகங்களையும், நியாயங்களையும் மேற்படி …
-
- 0 replies
- 357 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளதை, நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 69 லட்சம் மக்களின் வாக்குகளினால் அதிகாரத்தை கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, அந்த பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு, 2 கோடி மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர். சிங்கள மக்களின் பெரும்பான்மை வா…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது -க. அகரன் அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல் முறைமையானது, நீண்ட காலப் பகையாளிகளை, அன்னியோன்னியம் ஆக்கியுள்ள நிலையில், இனம் சார்ந்த கருத்தியல் கொண்டவர்களை, நிரந்தரப் பகையாளிகளாகவும் உருவாக…
-
- 0 replies
- 357 views
-
-
பேய்க் கூத்தும் கூஜாவும் சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன. இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது. பேய்களைப் பிடித்து கூஜாவுக்குள் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், பேய்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கி விட்டார்களோ என்கிற அச்சம், எல்லா மட்டங்களிலும் எழத் தொடங்கியுள்ளன. அம்பாறை நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை (26), பேய்களின் இனவாதக் கூத்துகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன்போது, அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள…
-
- 0 replies
- 357 views
-
-
ராஜபக்ஷக்கள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; சுமந்திரன் நேர்காணல் போருக்குப் பின்னரான தசாப்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஆறு இடங்களை இழந்திருக்கிறது. பாராளுமன்றில் கூட்டமைப்பின் இருப்பு பலவீனமடைந்து, ராஜபக்ஷக்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கைக்கான வாய்ப்புகள் என்ன? கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான…
-
- 0 replies
- 357 views
-
-
டிரம்ப்பால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள்… தவிப்பில் உலக நாடுகள்! 7 Mar 2025, 7:05 AM பாஸ்கர் செல்வராஜ் கடந்த வாரம் உலகம் கற்பனை செய்து பார்த்திராத இரு சம்பவங்களைக் கண்டது. ஒன்று ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐநா தீர்மானத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து எதிர்த்தது. இரண்டாவது உலக ஊடகங்களின் முன்னால் உக்ரைன் அதிபரும் அமெரிக்க அதிபரும் போரையும் அமைதியையும் மையப்படுத்தி கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டது. உக்ரைன் போரை தலைமையேற்று நடத்திய அமெரிக்கா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததும் அதன் பின்னால் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் ஐநாவில் ரஷ்ய எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதும் யாரும் எண்ணிப் பார்த்திராத ஒன்று. அதுமட்டுமல்ல வார்த்தைப் போரில் ஈட…
-
- 0 replies
- 356 views
-
-
பொறுப்புக் கூறலுக்கு நம்பகத்தன்மை வேண்டும் தற்போது ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் 37ஆவது கூட்டத்தொடர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழமையாகவே பயங்கரவாதிகளுடனான தார்மீக யுத்தம் எனக் கூறிவந்த அரசு இப்போது அவ்விதம் கூறமுடியாத நிலையில் இருக்கிறது. காரணம் அகிம்சையோடு நிராயுதபாணிகளாக அண்டி, ஒன்றாகக்கலந்து வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகக் கணிக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிந்தவின் ஆட்சிக்கால இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இச்செய்கை, மைத்திரி ஆட்சிக்கு வந்தது முதல் இற்றைவரை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எந்த பாதுகாப்பும் இல்லை. போர்க்குற்றத்தை ஏற்றுக்க…
-
- 0 replies
- 356 views
-
-
5 வருட முயற்சி பலிக்குமா? அன்று காலை நாடு ஒருபரபரப்பான சூழலில் காணப்பட்டது. முழு நாடும் புதிய பிரதமர் பதவியேற்பதையும் புதிய அமைச்சரவை பதவியேற்பதையும் தொலைக்காட்சியூடாக பார்ப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மை பலத்தை பெறாவிடினும் கூடிய ஆசனங்களான 106 எம்.பி.க்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டிருந்தது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைப்பார் என்றும் பிரதமராக பதவியேற்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் முழு நாடும் ஏன் சர்…
-
- 0 replies
- 356 views
-
-
இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர், அவர்களின் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், முப்படைகளையும் களமிறக்குவேன் என்று எச்சரித்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய…
-
- 0 replies
- 356 views
-
-
கொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா.? கொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள், கொழும்பு தமிழ் தலைமைகளால் ஆளப்படுகின்ற ஒரு சூழலுக்குள் செல்லுவது சரிதானா? கொழும்புத் தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு எவ்வாறான நன்மைகளைச் செய்து உள்ளார்கள்? அவர்களால் வரலாற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து ஆராய வேண்டிய ஒரு அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பை தனது சொந்த இடமாகக…
-
- 0 replies
- 356 views
-
-
பொதுத் தேர்தல் களம் – 2024 November 8, 2024 — சின்னத்தம்பி குருபரன் — நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாறு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது. படித்த இலங்கையர் ஒருவரைத் தமிழர் சார்பாகத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி 1878 இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் வை.விசுவநாதபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் இராமநாதனும் பிரபல சட்டத்தரணி பிறிட்டோவும் போட்டியிட்டனர். தெரிவுக்கான விவாதம் நீடித்துக் கொண்டு போகவே ஆறுமுக நாவலர் தலையிட்டுச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததனால் பொன்னம்பலம் இராமநாதன் தெரி…
-
- 0 replies
- 356 views
-
-
அரசியலில் கொள்கைகள் அல்ல புள்ளிவிவரங்களே முக்கியம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 18 பேர், அரசாங்கத்திலிருந்து விலகி, எதிர்க்கட்சியினரோடு அமர இருப்பதாக, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஒன்றிணைந்த எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். ஆனால், இன்றுவரை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவரும் எதிர்க்கட்சியின் பக்கம் தாவவில்லை. தாம் கூறியவாறு அரசாங்கத்தை விட்டு, ஏன் எவரும் செல்லவில்லை என்பதை, ஒன்றிணைந்த எதிரணியினர் தெளிவுபடுத்தவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினர…
-
- 0 replies
- 356 views
-
-
தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் – உண்மைதானா? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்கள் மீதான தடையை நீக்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பில் நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை வெறுமனே பொருளாதார நெருக்கடியின் விளைவாக மட்டும் நோக்கினால், அது முழுமையான பார்வையாக இருக்காது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சிலர் மீதான தடைநீக்கப்பட்டது. கோட்;டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து மீளவும் தடைவிதிக்கப்பட்டது. இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதை தொடர்ந்து மீளவும் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் சம…
-
- 0 replies
- 356 views
-
-
காசாவில் அமெரிக்கா வகுக்கும் திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 356 views
-