அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும் ஒரு வகையான யுத்தம்தான். அதில், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும், உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதும், அந்த வாய்ப்புகளைத் தமக்கேற்றவாறு பயன்படுத்துவதும்தான் மிகச் சிறந்த அரசியல் தந்திரோபாயமாகும். 2009 யுத்த முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலின் பேரம் பேசும் சக்தி என்பது, கணிசமாக வீழ்ச்சி கண்டிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களால்த்தான், …
-
- 0 replies
- 432 views
-
-
இனவாத தொழுநோய் மாறாதவரை நாட்டுக்கு விமோசனம் இல்லை கலாநிதி சூசை ஆனந்தன் கடந்த இரு மாதங்களாக காலி முகத்திடலில் சுனாமி அலைகள் போல சீறி எழுந்த “கோட்டா கோ ஹோம்” என்ற மக்கள் எழுச்சி அலைகள் இப்போ பின்வாங்கி ஓய்ந்து போயுள்ளது.இதன் விளைவு, மகத்தான வெற்றிபெற்று சிம்மாசனத்தில் அமர்ந்து “நீங்கள் தேடிய தலைவன் நானே” என்று மார்தட்டிய ஒருவர் நாட்டைவிட்டு தப்பி ஓடி அகதியாய் அலைகின்றார்.ஏற்கனவே தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்றோடிய ஒருவர் ஆட்சிப் பீடம் ஏறியுள்ளார். இரும்புத் திரைக்குப் பின்னாலிருந்து தமக்கு வேண்டாத ஒருவர் தூக்கப்பட்டு வேண்டிய ஒருவர் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளார் போலவே படுக…
-
- 0 replies
- 314 views
-
-
புலிகள் இயக்கத்தினரை பூண்டோடு நிர்மூலமாக்கிய சூத்திரதாரிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இறுதி யுத்தத்தின் முன்னராக அமைப்புகளின் கையில் இருந்த 155 million டாலர் பணம் எங்கே??? கனேடிய தமிழ் மக்களை மனஉளைச்சல் கொண்ட ஓர் இனமாக மாற்றிய அராஜக தமிழ் அமைப்புகள்
-
- 0 replies
- 300 views
-
-
பேய்க் கூத்தும் கூஜாவும் சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன. இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது. பேய்களைப் பிடித்து கூஜாவுக்குள் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், பேய்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கி விட்டார்களோ என்கிற அச்சம், எல்லா மட்டங்களிலும் எழத் தொடங்கியுள்ளன. அம்பாறை நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை (26), பேய்களின் இனவாதக் கூத்துகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன்போது, அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள…
-
- 0 replies
- 356 views
-
-
பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது பொருளாதாரத் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதன் ஊடாக, அரசியல் உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை அவர்களது மனங்களிலிருந்து மெல்ல அகற்றி விடலாம் என்ற எண்ணப்பாடுகள், ப…
-
- 0 replies
- 315 views
-
-
பதின்மூன்று- ரணிலின் விளக்கத்தை நம்பிய இராஜதந்திரிகள் -அரசியல் தீர்வாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனை தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் பதின்மூன்று பற்றிப் பேச வேண்டும் என்று கூறிக் காலத்தைக் கடத்திவிடும் உத்திகளையே ரணில் கையாளுகிறார். இந்த ஆபத்தான அரசியல் பொறியை (Political Trap) உடைத்து தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்புக்கே உண்டு. சஜித்துக்கும் ஜே.வி.பிக்கும் அந்தத் தேவை இல்லை- அ.நிக்ஸன்- …
-
- 0 replies
- 793 views
-
-
சுமந்திரனின் சமஷ்டி கடந்த சனிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சுமந்திரன் சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவுப் பேருரை ஆற்றினார். சமஷ்டியின் விஸ்தீரணம் என்ற தலைப்பிலான அந்த உரையை அவர் அதிகம் சிரத்தையெடுத்து தயாரித்து வந்திருந்தார். தமிழ் அரசியல்வாதிகளில் தமது பேச்சை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்து பேசுபவர்கள் குறைவு. அப்படி தயாரித்துக் கொண்டு வந்திருந்தாலும் பலபேச்சுக்கள் அவையில் இருப்பவர்களை புத்திசாலிகளாகக் கருதி தயாரிக்கப்பட்டவை அல்ல. ஆனால் சுமந்திரன் தான் கூறவரும் கருத்தை தர்க்க பூர்வமாக முன்வைப்பவர் அது தொடர்பான தொடர்ச்சியான பகிரங்க விவாதங்களுக்கும் தயாராகக் காணப்படுபவர். சனிக்கிழமை அவர் ஆற்றிய உரைக்காக அவர் பல்வேறு நாடுகளின் …
-
- 0 replies
- 578 views
-
-
தமிழர்களின் தேக்கநிலையை உடைப்பது எப்படி? | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 451 views
-
-
தொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்… April 7, 2019 சட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்…
-
- 0 replies
- 1k views
-
-
உயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்.. June 16, 2019 யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஒருவர் யாழ் மாவட்டகட்டளைத் தளபதியிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார் ‘ஒருகாலம் எந்த படைத்தரப்பிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரினோமோ அதேபடைத்தரப்பு இப்பொழுது பெண்கள் பயிலும் பாடசாலைகளின் வாயிலில் காவலுக்குநிற்கிறது’ என்று. அதற்கு கட்டளைத ;தளபதி சொன்னாராம் அவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் அங்கேநிற்கிறோம் என்று. யாழ். சர்வமதசங்கத்தைச் சேர்ந்த ஓர் இந்துமத தலைவருக்கும் மேற்சொன்ன தளபதி அவ்வாறுதான் கூறியிருக்கி…
-
- 0 replies
- 321 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதித் தேர்தல் கால குதிரை ஓட்டம் சூடு பிடித்திருக்கின்றது. தேர்தல் முடியும் வரையில் யார் எந்தப் பக்கம் தாவுவார்கள் என்பதை கண்காணிப்பதே கட்சிகளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை நோக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் திரட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகளவு நிகழ்ந்து வருகின்றது. ஏற்கனவே, ராஜபக்ஷக்களின் கட்சியான பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலோடு சங்கமித்துவிட்டார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவோடு இருக்க, பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ரணில் பக்கம் சென்றுவிட்டார்கள். இவ்வாறான அச்சுறுத்தலை …
-
- 0 replies
- 548 views
- 1 follower
-
-
பொது வேட்பாளருக்கான கோரிக்கை..! ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்த விதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர். அவர்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறுதியான ஓர் அரசியல் கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சார்ந…
-
- 0 replies
- 590 views
-
-
கோத்தாபய வெற்றி பெற உதவிய தரப்புகள் – நிலாந்தன்… November 24, 2019 கோத்தாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கடைசி கட்டத்தில் சஜித் பிரேமதாச மேற்கொண்ட பிரச்சார உத்திகள் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது என்று செய்திகள் வெளிவந்தன. எனினும் சிங்கள ஆசிரியர்கள் மத்தியில் வேலை செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரமுகர் ஒருவர் கோத்தபாயதான் வெற்றிபெறுவார் என்பதனை முன்கூட்டியே கூறியிருந்தார். அதுபோலவே சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவ்வாறு கூறியிருந்தார்கள். கிழக்…
-
- 0 replies
- 539 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை முருகானந்தன் தவம் இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள். இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் கொளுந்து விட்டெறிந்த தமிழர் சொத்துக்களும், இதயங்களை உறைய வைத்த கொடூர தாக்குதல்களும் உயிருடன் கொளுத்தப்பட்டவர்களின் கதறலும், காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை தலைநகர் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்? வருடத்தின் 12 மாதங்களில் ‘கறுப்பு ஜூலை’யாக தமிழர்…
-
- 0 replies
- 177 views
-
-
அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே இடமில்லை. இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் எம்மால் தீர்க்கப்பட்டுள்ளன. இது பற்றி இந்தியாவுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்திய பெருங்கடலில் இந்திய – சீன மோதல் ஏற்படாதென்று ஆருடமும் கூறியிருக்கின்றார். சீன அரச நிறுவனமான, தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தினால் (Communication Construction Company Limited – CCCC) 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறு…
-
- 0 replies
- 409 views
-
-
தொலைந்ததோ திறப்பு; அடி வாங்குவதோ பூட்டு காரை துர்க்கா / 2020 மே 19 சிறப்பான வாழ்வுக்கு அடிப்படையே, நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்ற உணர்வு ஆகும். ஆனால், ஈழத் தமிழ் மக்கள் வாழ்வில் 1956, 1958, 1972, 1977, 1981, 1983 என ஒவ்வோர் ஆண்டும், அவர்களது பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. தங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒவ்வொரு துன்பியல் நிகழ்வுகளையும் கவலைகளுடனும் துயரங்களுடனும் அவர்கள் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அதுபோலவே, இவற்றுக்கு முழுமையாகச் சிகரம் வைத்தது போல, 2009ஆம் ஆண்டு மே மாத முள்ளிவாய்க்கால் கொடூரங்களும் ஏக்கங்களுடனும் கனவுகளுடனும் கடந்த 11 ஆண்டு காலமாகக் கடந்து செல்கின்றது. எங்களுக்கு விடிவு கிடைக்காதா, எங்களுக்காக உலகம் தன…
-
- 0 replies
- 729 views
-
-
ஜனாதிபதியை கடுமையாக விமர்சிக்கும் இரு இராஜதந்திரிகள்; சர்வதேச அளவிலும் எதிரொலிக்குமா? தயான் ஜயதிலக்க மற்றும் தமாரா குணநாயகம் ஆகிய இருவரும் கடுமையான ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள். இவர்கள் இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், ஜயதிலக்க இலங்கைக்கான பிரான்ஸின் தூதராகவும், தமாரா குணநாயகம் இலங்கைக்கான கியூபாவின் தூதராக பணியாற்றியுள்ளனர். தமாரா குணநாயகம் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நீண்டகால நண்பி. போர் வீரர்களின் நினைவு விழாவில் போது கோத்தாபய நிகழ்த்திய உரையை இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். “நாட்டுக்காக …
-
- 0 replies
- 466 views
-
-
சம்பந்தனின் கனவு பலிக்குமா? -கார்வண்ணன் திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதேவேளை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான ஆணையை கோரி வருகிறது. வடக்கினதும், தெற்கினதும் இன்றைய பிரதான அரசியல் கோசமாக, புதிய அரசியலமைப்பு மாறியிருக்கிறது. ஆனால் இரா.சம்பந்தன் கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும், மகிந்த ராஜபக்ச கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும் ஒரே மாதிரியானவை அல்ல. அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கக் கூடிய, தமிழ் மக்களுக்கு …
-
- 0 replies
- 460 views
-
-
ஒரு சகாப்தத்தின் முற்றுப்புள்ளி : கேள்விக்குறியாகும் தாய்லாந்தின் எதிர்காலம் சர்வதேச விவகாரம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துல்யாதெவ் மரணித்து விட்டார். ஏழு தசாப்த காலம் அரியணையில் அமர்ந்திருந்த சகாப்தத்தின் முற்றுப்புள்ளி, ஒரு தேசத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறிக்கு ஆளாகியிருக்கிறது. தமது குடிகளால் தெய்வீகக் குணாம்சம் பொருந்தியவராக மதிக்கப்படும் மாமனிதர். மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு தாய்லாந்து தேசத்தை ஒருமுகப்படுத்தி வைத்த தலைவர் என்ற பெருமைகள் ஏராளம். பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்து, தாய்லாந்தை நடுத்தர அளவிலான வருமானம் ஈட…
-
- 0 replies
- 471 views
-
-
கருப்பு ஒக்டோபருக்கு 30 வருடங்கள்; நாம் இப்போது எங்கே நிற்கிறோம்? Shreen Abdul Saroor on October 14, 2020 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடபுல முஸ்லிம்கள் 75,000 பேர் இரண்டு வாரக் காலப்பகுதியினுள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட துயரம் நடந்தேறிய ஒக்டோபர் மாதத்தினைக் கருப்பு ஒக்டோபர் என்றால் அது மிகையாகாது. என் குடும்பமும் அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் ஒன்றுதான். அதிகமான குடும்பங்கள் 500 ரூபா பணத்துடன் சில உடுதுணிகளை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. சில குடும்பங்கள் வெறுங்கையுடன் வெளியேறியிருந்தன. தென் மாகாணத்தின் எல்லையினை நெருங்கும் வரை போக்குவரத…
-
- 0 replies
- 656 views
-
-
"Let China sleep, for when she wakes, she will shake the world." -Napoleon Bonaparte 200 வருடத்துக்கு முதல் நெப்போலியன் சொன்னான் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் சீனாவை அப்படியே தூங்க விடுங்கள். அது எப்பொழுது முழித்து எழும்புகிறதோ அப்போது உலகம் தாங்காது என்றான்.சீனாவின் ரகன் இப்போது முழித்துக் கொண்டது.ஏனைய அதிகார பலம் மிக்க நாடுகளாய் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டார்கள்.மீண்டும் ஒரு பனிப் போர் ஆரம்பமாக இருக்கிறது. இந்து சமுத்திரத்தின் வாசலில் இருந்து இலங்கையோடு சேர்த்து இந்து சமுத்திரத்தின் குரல் வளையை இறுக்கப் பிடித்து விட்டது சீன கம்யூனிச பூதம். இனி இதிலிருந்து விடுபடுவதென்பது இலகுவல்ல.பண இராயதந்திரத்தின்(money diplomacy)மூலம் பல ஆசிய நாடுகளை வளைத்து விட்டது சீ…
-
- 0 replies
- 631 views
-
-
ஊமையாகிவிட்ட இந்திய அறிஞரைப் பார்த்து வெட்கித் தலை குனிகிறது உலகு முதலாவது கேள்வி : ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஒரு கோடி மாணவர்கள் தமிழகத்தில் உண்ணாவிரதமிருந்தார்களே அப்போது இந்தியக் கல்வியியலாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்..? அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் திருதராஷ்டிரானாக இருந்த இந்திய நடுவண் அரசின் நடவடிக்கையை கண்டித்து, தகுதி குறைந்த அரசியல் தலைவர்களுக்கு சரியாக வழிகாட்டியிருக்க வேண்டிய கூட்டுப்பணியை இந்திய கல்வியியலாளர்கள் செய்யவில்லை. பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உபகதை கூறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்கள் தம்போன்ற விஞ்ஞானிகளை இணைத்து நாட்டு மக்களுக்கு கூட்டறிக்கை விடத்தவறியது, மாணவர்களுக்கும், தமிழின…
-
- 0 replies
- 789 views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியலில் கால் நூற்றாண்டுகால தந்தையின் தீர்க்கமான பங்கு – அகிலன் 59 Views 26.04.2021 அன்று தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் விதமாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. தனிச் சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது. அதனை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சியாக “இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா என தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அழை…
-
- 0 replies
- 328 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் விடயத்தில் கட்சிகள் மத்தியில் இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் கு-ழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் இவ்விடயத்தில் முரண்பாடான தன்மை நிலவி வருகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதா என்ற விடயத்தில் இன்னமும் பூரண இணக்கப்பாடு ஏற்படாத நிலைமை காணப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழு கடந்த செவ்வாய் மற்-றும் புதன்கிழமை களில் க…
-
- 0 replies
- 206 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல் லக்ஸ்மன் யுத்தம் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதனால் மௌனமாகி 12 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னமும் நம்முடைய தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் தமக்குரிய நீதியை வழங்குவார்கள் என்ற ஏக்கமான எதிர்பார்ப்புடனேயே இருந்து வருகின்றனர். ஓவ்வொரு வருடத்தினது பெப்ரவரி மாதத்திலும், செப்ரம்பர் மாதத்திலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தே இருப்பதும் ஆவல் உச்சம் பெற்றிருப்பதும் வழக்கம். அதே போன்றே மாற்றங்களும் ஏமாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது. 2020இல் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட புதிய அரசாங்கம் உருவாகி கடந்த பெப்பரவரி மாதம் வரையில் இலங்கையில் வெளிநாட்டமைச்சராக தினேஸ் குணவர்தன இருந்தார். செப்டெம்பர் மாதத்தில் பேராசி…
-
- 0 replies
- 292 views
-