Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜே.வி.பியின் தலைவர் அநுர குமாரவிற்கு உருவாகியிருக்கும் மக்கள் ஆதரவு அலையில் சற்று தடுமாறி போயிருப்பது ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் தான். ஜே.வி.பியினரால் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற முடியாது என்றாலும் ஏனைய கட்சிகள் பெறும் வாக்கு வீதத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக அது உருவெடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மூன்று பிரதான கட்சிகளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கட்சியாக ஜே.வி.பி உள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது சதவீத வாக்குகளை எவரும் பெற முடியாது போகுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியை தெரிவு செய்வதில் தாக்கம் செலுத்தும் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள ஜே.வி.பிக்கு ஆதர…

    • 0 replies
    • 345 views
  2. தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா? ‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள். இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர்…

  3. Published By: VISHNU 22 SEP, 2024 | 03:37 AM லோகன் பரமசாமி சர்வதேச நாடுகள் மத்தியில் இவ்வருடம் இடம்பெற்று வரும் தேர்தல்களின் பட்டியலில் இலங்கையில் இவ்வாரம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கைத் தேர்தல் அத்தீவின் தென்பகுதியில் வெறும் உதிரி வேட்பாளர்களின் தேர்தல் களமாக பார்க்கப்பட்டிருந்த போதிலும் ஒருதேசமாக தமிழ்பொது வேட்பாளரின் வருகை ஏற்கனவே பிராந்திய அரசியலில் தாக்கத்தை விளைவிக்க ஆரம்பித்துவிட்டது. பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அலகுகளையும் மீண்டுமொரு முறை ‘ஈழத்தமிழர்’ விவகாரத்தில் கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதற்கு முக்கிய ஆரம்ப…

  4. தமிழ் முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு -செல்வரட்னம் சிறிதரன் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமாகும். இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். ஆயினும் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை பேரினவாத சிந்தனையில் தோய்ந்துள்ள சிங்களவர்கள் விரும்பவில்லை. அதனை அவர்கள் முழுமையாக எதிர்க்கின்றார்கள். சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேச கோட்பாட்டையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. இந்தக் கோட்பாட்டை ஏற்று வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், அந்த இணைப்பின் ஊடாக ஒரு…

  5. அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது. பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொட…

  6. இமாலயப் பிரகடனம்-எடுப்பார் கைப்பிள்ளையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை படும்பாடு December 19, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகத் தீவிரமான முகவராகச் செயற்பட்ட ‘உலகத் தமிழர் பேரவை’ (Global Tamil Forum) கடந்த ஏப்ரல் மாதம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் வைத்து ‘சிறந்த இலங்கைக்கான சங்க’ப் பௌத்த குருமார்கள் சிலருடன் இணைந்து ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயரில் 27.04.2023 திகதியிட்ட ஒரு கூட்டுப் பிரகடனத்தைத் தயாரித்து அதனை இப்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 07.12.2023 அன்று கையளித்துள்ளது. இப்பிரகடனத்தில் மாகாண மட்டத்தில் போதுமான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்தும் புதிய அரசியல…

  7. 2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வைப்பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன. அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும…

    • 0 replies
    • 344 views
  8. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. இப்போது மைத்திரி பாலவின் வருகையை தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் பிரதிநிதியாகக் கருதி எதிர்ப்பதா, அல்லது ராஜபக்சேதான் இனப்படுகொலைக்குக் காரணம் என்பதால் அவர் வருகையை மட்டுமே எதிர்க்கவேண்டும் என்று பொருள் கொள்ளலாமா என்று கேட்டால் தெளிவான பதில்களை நாம் கண்டடைய முடியாது. எப்படியிருந்தபோதிலும் ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகு ஈழ ஆதரவுப் போராட்டத்தின் வீரியம் சற்று குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை …

  9. அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும் முருகானந்தன் தவம் ‘‘கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’’ என்பார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின் வழியாகத் தமிழ் அரசியல்வாதியாக வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தனது கொள்கையில்லாத, தில்லாலங்கடி அரசியல் மூலமும் தனது சமூக ஊடகம் மூலமும் இன்று இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களினால் நன்கறியப்பட்டவராக , விமர்சனங்களுக்குட்பட்டவராக உருவெடுத்துள்ளார். அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.துணிச்சலான அரசியல்வாதியாக, கோமாளித்தன அரசியல்வாதியாக, புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் செய்யும் அரசியல்வாதியாக, உண்மையை ஒளிவு, மறைவின்றி பேசும் அரசியல்வாதியாக, பொய், புரட்டுக்கள் நிறைந்…

    • 2 replies
    • 344 views
  10. விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை இந்திய ஒன்றியத்திற்கு புலிப்படை ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது. ? வ.கௌதமன் விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை. அத்துமீறிய எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் அவை அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்திய ஒன்றியத்திற்கு புலிப்படை ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது என தமிழ்ப்பேரசு கட்சியின் வ.கௌதமன் வேண்டுகோள் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது அமெரிக்காவும் சீனாவும் பா…

    • 0 replies
    • 344 views
  11. வெறுப்பை நியமமாக்குதல் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், "அதிகார மாற்றத்துக்கான பிரிவு" என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும். அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பின்புலத்தில் மேற்கொள்வதே, அப்பிரிவின் தேவை. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பின் அவ்வாறான பிரிவுக்கு, நியூ ஜேர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தலைமை வகித்தார். ஆனால், வாக்கெடுப்புத் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அந்தப் பிரிவின் நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்தி, தேர்த…

  12. ‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா? இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும், பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள், முழு நாட்டையும் உலுப்பி விட்டிருக்கின்றன. இதன் தாக்கத்தால், கொழும்பு தொடர்ந்தும் கொதித்துக் கொண்டிருக்கின்றது. காலையில் ஒரு செய்தி, மதியம் வேறு ஒரு செய்தி, மாலையில் பிறிதொரு செய்தி என செய்திகள் சிறகடிக்கின்றது. …

  13. தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன - எம். ஏ. நுஃமான் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இன்றி; சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இன்றி, எல்லா மக்களும் இதன் வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர். அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய மாற்றம் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்…

  14. கூட்டு முடிவுக்குள் தலைவர்கள்

  15. இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கான உடனடியானதும் நீண்ட காலத்துக்குமான இலக்குகளுக்கு தீர்வு காணுதல் மோசமான அரசாங்கத்தின் விளைவுகளை அனுபவித்தவர்களுக்கு அதிகளவுக்குத் தேவைப்படும் உதவியை மறுத்து மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், தற்போதுள்ள துன்பங்களை அதிகரிக்காமல் நிலையான வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும் முன்னோக்கி செல்வதற்கான பாதையை வழங்க சர்வதேச சமூகம் உதவ முடியும். சஷிங்க பூர் இலங்கை தற்போது பல தசாப்தங்களின் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய…

    • 0 replies
    • 343 views
  16. COLUMNSசிவதாசன் ‘சனல் 4’ விவகாரம்: ராஜபக்சக்களின் அதிர்ஷ்டம் சிவதாசன் “‘சனல் 4’ ராஜபக்சக்களுக்கு எதிராக வன்மத்துடன் செயற்படுகிறது” என்கின்றனர் ராஜபக்ச குடும்பத்தினர். “‘சனல் 4’ புலம் பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக இயங்குகிறது என்கிறார் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. “உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு இலங்கை தயார்” என்கிறார் ஜனாதிபதி விக்கிரமசிங்க. போதாததற்கு நாட்டை விட்டுத் தப்பியோடி மீள வந்த வாயில்லாப் பிராணி கோதாபயவையே வாய் திறக்க வைத்துவிட்டது ‘சனல் 4’. சூத்திரதாரி மஹிந்த அதிர்ஷ்டம் தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருக…

  17. ஈழத்தில் 2009 ல் எங்கள் ஆயுத பலத்தை இழந்தோம். இப்போ அரசியல் பலத்தையும் இழந்திருக்கிறோமா. அப்படி இப்படி நாம் அது எல்லாம் இல்லை என்று பூசி மொழுகினாலும் சில தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எதிர்காலத்தில் இது நிரந்தரமான தோல்வியாக இருக்காமல் நாம் மாற்றி அமைக்க வேண்டுமானால் நாம் விட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல் விடா கொண்டன் கொடாக் கொண்டனாக இருக்காமல் இனியாவது ஒற்றுமையோடு பயணியுங்கள். தமிழ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதோ போல் புலத்திலும் நிலத்திலும் உள்ளவர்கள் நம்மை நாமே தாழ்த்தியபடி ஆளுக்கு ஆள் மாறி மாறி தேசியம் தெருவில் கிடக்கிறது என்பதும் தமிழ் இனவாதத்தால் வந்த வினை என்பதும் இப்படி தேசியம், தேசம் …

  18. யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல கடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. பல்வேறுபட்ட குழுக்கள் புதிய கூட்டணிகளை அமைத்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சி செய்வதாகக் கடந்த சில நாட்களில் வெளிவந்த செய்திகள் கூறின. ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தொடரும் என, குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் சிலர் கூறினர். மற்றும் சிலர், ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்கப் போகிறது எனக் கூறினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்ச…

  19. வடக்கு – கிழக்கு: தொல்பொருளியல் வன்முறையும் மாற்று அரசியற் பார்வையின் முக்கியத்துவமும் Mahendran Thiruvarangan on July 12, 2020 பட மூலம், president.gov.lk கடந்த ஆண்டு காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் அமைக்கப்பட்ட ஒரு காணிக் கமிசன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களினது, காணி தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்தக் கமிசனின் அமர்வு ஒன்று முல்லைத்தீவிலே இடம்பெற்ற போது, அங்கு பேசிய ஒருவர் பின்வரும் கருத்தினை வெளியிட்டார்: “தொல்பொருளியல் திணைக்களத்தினைச் சேர்ந்தோர் இரவு வேளைகளில் வருவார்கள். அப்போது எதையாவது புதைத்து விட்டுச் செல்வார்கள். அடுத்த நாள் அதனை…

  20. வட-கிழக்கு நில ஆக்கிரமிப்பும் நிலைகுலைந்த தமிழர் தலைமையும் கலாநிதி சூசை ஆனந்தன் வடக்கில் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்திருந்தன.முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பிக்குவின் உடல் தகன விவகாரம், இப்போது திருகோணமலை கோணேஸ்வர கோயிலை மாசுபடுத்தும் விவகாரங்கள், ஏற்கனவே பறிபோன கன்னியா வெந்நீரூற்று விவகாரம்…இவைகள் இப்பிரபஞ்சத்தில் மிகவும் மோசமான இழி நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு மதவாத தொழுநோய் பிடித்த நாடு சிறிலங்கா என்பதை நிரூபிக்க போதும். வடகிழக்கில் இன்று ஏற்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு,மற்றும் நினைத்தவாறு புத்த விகாரைகள் கட்டுதல் போன்ற அரா…

    • 0 replies
    • 343 views
  21. வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்து அழிக்கும் செயற்பாடுகள், காலத்துக்குக் காலம் வெளித்தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலம் வரையில், இந்திய ரோலர்களின் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள், தற்போது தென்இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வடமராட்சி கிழக்கு மீனவர்கள், பாரம்பரிய முறையிலான கரையோர மீன்பிடியையும் நவீன முறையிலான ஆழ்கடல் மீன்பிடியையும் ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாத வகையில்…

  22. அமையப்போகும் அரசியலமைப்பு மக்கள் தீர்ப்பால் அங்கீகரிக்கப்படவேண்டும் என கூறுவது ஏன்? http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-11#page-19

  23. பிரதமர் ரணில் தப்பிப் பிழைத்துவிடுவார்? நாட்டில் திடீர் திடீ­ரென அர­சியல் பூகம்­பங்கள் ஏற்­ப­டு­வதும் பின்னர் அவை புஸ்­வா­ன­மாகப் போய்­வி­டு­வதும் நாட்டு மக்கள் அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். அந்­த­வ­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை இன்று, நாளை என்று ஆரம்­பித்து ஒரு­வாறு எதிர்­வரும் 4ஆம் திகதி விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கைய­ளித்­துள்ளார். எனினும் குறித்த பிரே­ர­ணையில் மஹிந்த ராஜபக் ஷ கையொப்பம…

  24. ஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தேவையான அணுகுமுறை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. படத்தின் காப்புரிமைREUTERS அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் …

  25. அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை -க. அகரன் உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில், பௌதீகவள அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே அணுகப்பட வேண்டியுள்ளது. ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.