அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும் - யதீந்திரா சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக வேறு, சொல்லிவருகின்றனர். அது உண்மைதானா என்று நோக்குவதுதான் இப்பத்தியின் நோக்கம். முதலில் தற்போது எழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தியென்பது பலரும் நோக்குவது போன்று ஒரு புதிய விவகாரம் அல…
-
- 0 replies
- 392 views
-
-
மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது? - யதீந்திரா படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய சுவாமியே இக்குழுவினருக்கு தலைமை ஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவின் உயர் மட்டத்தினருக்கு நெருக்கமானவர் என்பது இரகசியமல்ல. ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார் என்பது புதிய தகவலாகும். இது கூட்டமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக…
-
- 0 replies
- 494 views
-
-
முள் படுக்கையில் கூட்டமைப்பு வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப் பலப்பரீட்சை. இங்கு, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரை முன்மொழிய, பதிலுக்கு ஈ.பி.டி.பியும் ரெமீடியசின் பெயரை முன்மொழிந்ததால் திருப்பம் ஏற்பட்டது. மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படாத நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு…
-
- 0 replies
- 443 views
-
-
தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன? - யதீந்திரா படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும், தமிழ் அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிருந்த நிலைமைக்கும் தற்போதிருக்கின்ற நிலைமைக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. முன்னைய முடிவுகளின் போது, ஜயா சம்பந்தனே தமிழரசு கட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். ஆனால், தற்ப…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது புருஜோத்தமன் தங்கமயில் அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியலும், இன்றைக்கு தோல்வியின் அடையாளமாக நோக்கப்படுவதற்கு, சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரியாத, தூரநோக்கற்ற, குறுகிய சுயநல அரசியலே பிரதான காரணம் எனலாம். இலங்கை, உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார - இராஜதந்திர நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அவசரத்தைக் காட்டுகின்றது. அதற…
-
- 0 replies
- 476 views
-
-
பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா? இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக…
-
- 0 replies
- 395 views
-
-
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எம்.எஸ்.எம் ஐயூப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம்: சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், புதிய சட்டம் மோசமானது எனக் கூறுகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் வற்புறுத்தலாலேயே, அரசாங்கம் தற்போது அமலில் உள்ள சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் ஒன்றை வரைந்துள்ளது. இலங்கைக்கு தொட…
-
- 0 replies
- 793 views
-
-
மஹிந்தவும் கோத்தாவும் சம்பந்தனுடன் பேசியது என்ன? இவ்வாரம் இலங்கை அரசியலில் அதிகமாக மக்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட பத்திரிகை செய்திகளில் மிக கவனத்தை ஈர்த்த செய்தியாக பேசப்படுவது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் உரையாடியதாக கூறப்படுகின்ற விடயம் .மற்றொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆற்றிய உரை. இன்னொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வடக்கு பிரச்சினைக்கு தீர்வின்றேல் அங்கு மீண்டும் பிரச்சினை உருவாகலாம் என்ற கருத்து. பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை வடக்கு மற்றும் …
-
- 0 replies
- 473 views
-
-
ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரி…
-
- 0 replies
- 714 views
-
-
இன்றைய கூட்டாட்சியின் விரிவாக்கம்!! வழக்கு இன்றைய பேருரைக்கான தலையங்கம் சமஷ்டி பற்றியது. இந்தச் சொல் பெடரல் என்கின்ற ஆங்கிலச் சொல்லைக் குறிக்கிறதாகத் தமிழிலே பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் அது வடமொழி சார்ந்த ஒரு சொல்லாகும். பொருத்தமான தமிழ்ச் சொல் இல்லையென்றாலும் கூட்டாட்சி அல்லது இணைப்பாட்சி என்ற சொற்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. சமஷ்டியைத் தனது அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் சில வருடங்களுக்கு முன்னர் எமது யாப்பிலே காணப்படும் வட சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றியபோத…
-
- 0 replies
- 901 views
-
-
மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் சிறுபான்மையினர் சிறுபான்மைச் சமூகத்தவர் தம்மை மீள்பார்வை செய்யவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்றுபட வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அண்மைக்கால சம்பவங்களும் முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமா தொடர்பான செய்திகளும் இதனைத்தான் வெளிக்காட்டி நிற்கின்றன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்பொழுதுமே பதியப்படாத அதிர்ச்சிதரும் புரட்சியாக இது காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தவர்களுக்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் காரணமாக இன்றைய அரசாங்கத்தி…
-
- 0 replies
- 496 views
-
-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் நகர்வுகள், ஏமாற்றமளிக்கின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. சிறைச்சாலைகளில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆறு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த உறுதிமொழியை அடுத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. நவம்பர் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்…
-
- 0 replies
- 671 views
-
-
வாழ்வுரிமையைக் காக்கும் வாக்குரிமை..! மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இரு வாரம் கடந்துள்ள நிலையில், அரசியல் களத்தில் தேர்தலுக்கு எஞ்சியுள்ள நாட்களில் என்ன நடக்கும் என்ற கேள்விக் கணைகளோடு நாட்டு மக்களும், அரசியல் அவதானிகளும் ஒவ்வொரு விடியலையும் எதிர்பார்த்தே வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களின்பால் என்றுமில்லாத அக்கறை மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இக்காலங்களில் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நாட்கள், மக்களின் மனச்சாட்சியை பரிசோதிக்கும் பரீட்சைத்தளங்களாக அமைகின்றன. ஒரு மனிதனின் மனச்சாட்சியே அவனுக்கு நீதிபதி. அத்தகைய மனச்சாட்ச…
-
- 0 replies
- 563 views
-
-
ஒருவேளை உணவுக்காக அங்கலாய்க்கும் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன ? (ஆர்.ராம்) உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஒரு சிறிய நிலப்பரப்பாக இருக்கின்றபோதும் அது முகங்கொடுக்காத அனர்த்தங்களும் இல்லை. அவசர நிலைகளும் இல்லை. மழை, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் அவ்வப்போது நிகழ்வதும் உள்நாட்டுப் போர், தீவிரவாதம், இன முரண்பாடுகள், கலவரங்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள், பொருளாதார சரிவுகள், பரிய விபத்துக்கள் என அவசர நிலைமைகள் ஏற்படுவதும் தொடர்கதையாகத் தான் இருக்கின்றது. இந்தப்பின்னணியில் சீனாவின் வுஹானில் ஏற்றெடுத்த கண்ணுக்குத்தெரியாத கொரோனா எனப்படும் விலங்கிலிருந்து வெளியான வீரியமிக்க வைரஸ் கிருமிக்கும், மனிதனுக்கும் இடை…
-
- 0 replies
- 485 views
-
-
நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும் Bharati May 7, 2020 நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும்2020-05-07T10:06:19+00:00Breaking news, அரசியல் களம் இந்திரன் ரவீந்திரன் 2018 நவம்பர் 09 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து, பதவி இறக்கப்பட்ட ரணிலின் பிரதமர் பதவியைப் பாதுகாத்து அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் திரு.சுமந்திரனும் திரு.சம்பந்தனின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிகொடுத்ததில் போய் முடிந்தமைதான் உலகம் அறிந்த அவர்களின் சாணக்கியம். இது ரணிலைக் காப்பாற்றப் போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் சம்பந்தரின் பதவி பறிபோனதில் முடிந்தது. இலங்கை நாடாளுமன…
-
- 0 replies
- 561 views
-
-
இந்தியாவை கையாளல் - யதீந்திரா முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டை பல தரப்பினரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர். இம்முறை ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது, வழமைக்கு மாறாக அதிகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது கொரோனாவின் விளைவு. வீடுகளில் இருந்தவாறே பலரும் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளக் கூடியதாக இருந்ததால், அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் ஒரு சில கலந்துரையாடல்களை செவிமடுக்க முடிந்தது. அதில் ஒன்று – தமிழர் உரிமைச் செயலரங்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையடல். இதில் இளம் தமிழகம் என்னும் அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், இந்தியாவும் ஈழத் தமிழரின் விடுதலையும் (கள நிலைமை கருதி தலைப்பில் ஒரு சிறிய மாற்றம் செ…
-
- 0 replies
- 512 views
-
-
ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில். தமிழ்க் கட்சிகள் எந்தவொரு கருத்து வெளிப்பாடுகளுமின்றி அமைதியாக இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், செப்பெரம்பர் மாத அமர்வு திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைத் தீர்மானம் பற்றி மீளாய்வு செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. மியன்மார், யேர்மன், கம்போடி…
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்- ஒற்றையாட்சி இலங்கையை அமெரிக்கா ஆரத் தழுவுகிறது இலங்கை ஆசியாவின் வயது முதிர்ந்த ஜனநாயகம் என்று மைக் பொம்பியோ புகழாரம் ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும், ராஜபக்ச சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமான அததெரன தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலும் வரிக்குவரி இலங்கையின் இறைமை என்ற சொல்லாடலை உச்சரித்திருக்கிறார். பலமான இறைமை பொருந்திய இலங்கை உலகத்துக்குத் தேவை என்று அவர் கூ…
-
- 0 replies
- 800 views
-
-
விக்கியின் ‘தலைவர்’ முன்மொழிவு தமிழ்த் தேசிய அரசியலில் சாண், ஏற முழம் சறுக்கும் நிலைமைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல், தமிழ்த் தேசியப் பரப்பில் ஐக்கிய அணியொன்றை உருவாக்குவதற்கான கற்பிதத்தினை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஐக்கியத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுவதால், தான் தலைமை தாங்கும் தமிழரசுக்கட்சி மற்றும் தனது கட்சி பிரதான அங்கத்துவம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றினுள் இரட்டை அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளார் மாவை.சோ.சேனாதிராஜா. சேனாதிராஜாவுக்கான அழுத்தங்களும் அவருடைய செயற்பாடுகளும் பற்றி ஏற்கனவே பார்த்தாகிவிட்ட நிலையில் அந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ‘பி…
-
- 0 replies
- 543 views
-
-
அலெப்போவும் சர்வதேச சமூகத்தின் ‘தோல்வியும்’ - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிரியாவின் அலெப்போவில் நடக்கும் பேரழிவை, உலகம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது என்பது தான், உலக முஸ்லிம்களில் கணிசமானோரினதும் உலக மக்களில் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அக்கறை கொண்டோரினதும் குரலாக, அண்மைய சில வாரங்களாக இருந்து வந்தன. இவ்வாறு கவலைப்பட்டோருக்கு நிம்மதியளிப்பது போன்று, சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவில், அந்நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு எதிராகப் போராடிவரும் போராளிகள், தங்களது பின்னடைவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட இழுபறிக்குப் பின்னர், போராளிகளின் கட்டுப்…
-
- 0 replies
- 326 views
-
-
மாகாணசபைத் தேர்தலும் -கிழக்கின் நிலையும் – மட்டு.நகரான் October 21, 2021 மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழர் அரசியலில் கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பில் ஆர்வம் குறைந்திருந்த நிலையிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ள முழுமையான ஆர்வத்துடன் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் செயற்படுவதைக் காணமுடிகின்றது. மாகாணசபைத் தேர்தல் என்பது, இன்று வடகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சூழ்நிலைக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. வடகிழக்கு இணைந்த தமிழ்த் தேசியத்தின் மிக முக்கியமான கோரிக்கையாக வடகிழக்கு இணைந்த மாகாணசபையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாய்கிழியக் கூவியவர்கள்…
-
- 0 replies
- 327 views
-
-
மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா? - நிலாந்தன் 06 ஜூலை 2014 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ்ப் பொதுசனம் நம்புவது போல இது அதன் பரந்தகன்ற பொருளில் ஒரு சக்திமிக்க முழுமையான அனைத்துலக விசாரணைக் குழு அல்ல. ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியில் காட்டிக் கொள்வதைப் போல புறக்கணிக்கத்தக்கதும் அல்ல. இவை இரண்டுக்கும் இடையில் தானிருக்கிறது அதன் முக்கியத்துவம். அரசாங்கம் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது. நாட்டுக்குள்ளிருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பவர்களுக்குக் குறிப்பாகச் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதும், ஏற்கனவே, அரச தரப்புப் பிரதானிகளால் நேரடியாகவும் மறைமுக…
-
- 0 replies
- 496 views
-
-
உண்மை கண்டறியும் ஆணைக்குழு ; தென்னாபிரிக்க அனுபவம் 18 OCT, 2022 | 01:21 PM ஆணைக்குழு என்றதும் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பீற்றர் கெனமன் சுவாரஸ்யமாக கூறிய ஒரு கருத்து எமக்கு நினைவுக்கு வரும்." ஆணைக்குழு நியமனம் என்பது மலசல கூடத்துக்கு போவதை ஒத்ததாக இருக்கும்.அமர்வுகள் இடம்பெறும்.அத்துடன் காரியம் முடிந்துவிடும்." ஆணைக்குழுக்கள் நியமனங்களைப் பொறுத்தவரை, இலங்கையில் பிரத்தியேகமான ஒரு வரலாறே இருக்கிறது.குறிப்பாக, இனநெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விசாரணை செய்வதற்கு இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் பயனுறுதியுடைய விளைபயன்களை தரவில்லை.உண்மைகள் …
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
பொறுப்புக் கூறலில் தவறியுள்ள அரசாங்கம் இலங்கையின் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக உரிய நீதிப் பொறிமுறைக ைள உருவாக்கிச் செயற்படாவிட்டால், சர்வதேச நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பிரதி ஆணையாளர் கேட் கில்மோர் அம்மையார் கோரியிருக்கின்றார். இது, அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடைந்துள்ள கடும் அதிருப்தியின் வெளிப்பாடாகும். இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அடுத்த அறிக்கை வர…
-
- 0 replies
- 335 views
-
-
சுயநிர்ணயம் வென்ற மோரோ மக்கள் போராட்டம் By DIGITAL DESK 5 06 NOV, 2022 | 04:20 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா உலகில் பல இனங்களின் போராட்டம் வெற்றி பெற்றோ அல்லது முற்றிலும் நசுக்கப்பட்டோ உள்ளது. ஆயினும் மோரோ போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இது உயிர்வாழ்வதற்கும், கலாசார அடையாளத்திற்கும், சுயநிர்ணய உரிமைக்கும் தொடர்ச்சியானதொரு போராட்டமாகும். பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் உள்ள மின்டானோ பிரதேசம் அங்குள்ள பிரதானமான தீவுக்கூட்டமாகும். இங்கு 6 மில்லியன் மக்கள் உள்ளனர். பிலிப்பைன்ஸில் முதல் நாகரிகமென மோரோ மக்களை பதிவுசெய்கிறது என்பதையும், அதன் பொருளாதாரம் மற்ற பழங்குடி சமூகங்களை விட மிகவும் முன்னேறியது என்பதையும் வரலாற…
-
- 0 replies
- 711 views
- 1 follower
-