அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
‘போட்டுத் தள்ளும்’ மனநிலையை வளர்ப்பது எது? “...போராட்ட காலத்தில், குறிப்பாக போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைவும் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அபரிமிதமானது; மெச்சத்தக்கது. தமிழ்ச் சூழலில், அவ்வாறான நிலை அதற்கு முன்னர் இருந்திருக்கவும் இல்லை. எனினும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களிடையே நம்பிக்கையீனமும் முரண்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டி அதிகரித்திருக்கின்றது. ஒருவரிடத்திலோ, சமூகத்திடமோ நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கடந்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் சிறுபகுதி கூட, தற்போது காட்டப்படுவதில்லை. இது சமூகத்தின் தோல்வி நிலைகளில் முக்கியமானது.…
-
- 0 replies
- 520 views
-
-
தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்? - யதீந்திரா படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன் என்னும் புனைப்பெயருடைய வேலாயுதம் சசிதரனின் மனைவியான அனந்தி, வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவர். நீதிபதி விக்னேஸ்வரனிலும் பார்க்க அனந்தி அதிக விருப்பு வாக்குகளை பெறுவார் என்றே அப்போது எதிர்பார்…
-
- 2 replies
- 718 views
-
-
ஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம் ரொபட் அன்டனி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இலங்கையின் வரவு செலவுத்திட்ட சம்பிரதாயங்களுக்கும் வழமைக்கும் மாறான முறையில் வித்தியாசமான அணுகுமுறையுடனான வரவு செலவுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது பொது மக்களை திருப்திப்படுத்துவதற்கான நிவாரணங்கள் குறைந்த அதேவேளை பொருளாதார ரீதியில் வர்த்தகர்களை ஊக்குவிக்கின்ற, முதலீடுகளை அதிகரிக்கின்ற, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளை முன்னேற்றுகின்ற வகையில் பல்வேறு பரிந்துரைகளுடன் வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிகவும் வித்தியாசமான ஒரு அணுகுமுற…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள் - க. அகரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது, கடந்த காலங்களில் இத்தனை புரட்சிமிக்கதாக எவராலும் பார்க்கப்படவில்லை. எனினும் இம்முறை தேர்தல், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததான ஒரு தோற்…
-
- 0 replies
- 411 views
-
-
உக்ரெய்ன் – ரசிய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம்- இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா –சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சிறிய நாடான இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இரட்டைத் தன்மை என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்– -அ.நிக்ஸன்- ரசிய – உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட…
-
- 0 replies
- 299 views
-
-
தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன். வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரு செய்தி வெளியாகியிருந்தது.வட மாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை வடக்கு மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் பாதுகாப்பானதா என்பது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தர வேண்டும் என்றும்பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்படும் குடிநீர் தொடர்பிலும் அறிக்கை தருமாறும் ஆளுநர் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது. மேலும்,வடமாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள்,மாகாண மற்றும் மத்திய…
-
- 1 reply
- 798 views
- 1 follower
-
-
சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி…
-
- 0 replies
- 249 views
-
-
நல்லிணக்கத்திற்கு வித்திட்ட நல்லாட்சி முப்பது வருடத்திற்கும் மேலாக இந்நாட்டில் குடிகொண்டிருந்த யுத்தமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கை நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது. எனினும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தினை கடந்த அரசாங்கம் தமது கவனயீனத்தினால் இழந்தது. நாட்டின் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருந்த சிங்களம் – தமிழ், சிங்களம் -– முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. அதன் உச்ச கட்டமாக 2014ஆம் ஆண்டு அளுத்கமை, பேருவளை நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தினை நோக்கலாம். இந்த சம்பவத்திற்கு பின்புலமாக கடந்த ஆட்சியா…
-
- 0 replies
- 454 views
-
-
கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன். படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.பொதுவாக படைப்புலனாய்வுத்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கு மாறு வேடங்களிலும் வரும். அல்லது வெளிப்படையாகவும் வரும் 2009க்கு பின் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட்டங்களில்,ஏன் இலக்கிய கூட்டங்களில்கூட படைப்புலனாய்வுத்துறை வெளிப்படையாக தன் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்டு.வொய்ஸ் ரெக்கோர்டரை வெளிப்படையாகவே அங்குள்ள ஒலிபெருக்கி பெட்டிகளின் மீது வைப்பதுண்டு. ஊர்வலங…
-
- 1 reply
- 459 views
-
-
கோட்டா தொடர்ந்து இருந்திருந்தால்... எம்.எஸ்.எம் ஐயூப் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பற்றி ஆய்வுகளை நடத்தி, அடிக்கடி பெறுமதி வாய்ந்த அறிக்கைகளை வெளியிடும் ‘வேடிட்டே ரிசேர்ச்’ என்ற அரச சார்பற்ற புத்திஜீவிகள் சபை, கடந்த வருடம் இடம்பெற்ற பொதுமக்கள் போராட்டத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பொன்றை நடத்தி, அதன் பெறுபேறுகளை அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதன்படி, இலங்கை மக்களில் 60 சதவீதமானோர், ‘அரகலய’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட அப்போராட்டத்தால் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை என்று தெரிவித்து இருந்தனர். 29 சதவீதமானோர் எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. 11 சதவீதமானோர் மக்கள் எழுச்சியால், மக்களின் அபிலாஷைகள் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளனர். அவர்கள்…
-
- 1 reply
- 438 views
-
-
சந்திரிகாவிற்கு பாவமன்னிப்பு வழங்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முத்துக்குமார் தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பேருரையினை நிகழ்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினை அழைத்திருக்கின்றது. அவர் 'யுத்ததத்தின் முடிவு சமாதானமாகாது' என்ற தலைப்பில் தனது நினைவுப் பேருரையை ஆற்றியிருக்கின்றார். தந்தை செல்வா தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு காலகட்டத்தை நகர்த்திய பெருமைக்குரியவர். 1949 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்றுவித்ததன் மூலம் தமிழ் இன அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் என்ற கட்டத்திற்கு வளர்த்துச் சென்றார். மக்களை இணைத்த வெகுஜனப் போராட்டம் என்ற அரசியல் அணுகுமுறையினை ஆரம்பித்து வைத்தார். தந்தை செல்…
-
- 4 replies
- 685 views
-
-
விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:37Comments - 0 மண்ணில் ஆடும் ஆட்டங்கள் போதாதென்று, விண்ணிலும் அதற்கான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. மண்ணில் தனது ஆதிக்கத்தை இழப்போர், விண்ணிலாவது தமது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முனைகின்றனர். உலகம் பட்டினியில் தவிக்கையில், மிகுந்த பொருட்செலவில் விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி தொடங்கியுள்ளது. “மண்ணை வெற்றி கொண்ட மனிதன், விண்ணையும் வெற்றி கொள்வான்” என்ற பெருமைப் பேச்சுகளுடன், இந்தப் போட்டி அரங்கேறுகிறது. கேள்வி யாதெனில், நாம் மண்ணை வெற்றி கொண்டோமா என்பதுதான். இன்று, நாம் வாழும் பூமி, நமது எதிர்கால சந்ததியினர் வாழ இயலாத இடமாக மாறியிர…
-
- 0 replies
- 676 views
-
-
ஈழத் தமிழருக்கான விடிவு என்பது.. வெறும் கானல் நீராகிவிடுமா? ஓர் சிறு அரசியல்-இராணுவ ஆய்வு! -மு.வே.யோகேஸ்வரன் 9 2009 இல் புலிகள் மீது இலங்கை அரசப் படைகள் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்பது, இலங்கை மட்டும் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்று எவனாவது சொன்னால் அவனுக்கு மண்டையில் மசாலா இல்லை என்றுதான் அர்த்தம். கடந்த 35 வருடங்களாக இலங்கை என்னும் இனவாத நாடு…புலிகளை அழிக்க போட்ட திட்டங்கள் ஒன்றா இரண்டா? ஆனால், அழித்தார்களா புலிகளை? இல்லை..அவர்களைப் பொறுத்தவரை அது பகல் கனவாக இருந்தது.. புலிகளின் இராணுவ பரிணாம வளர்ச்சியை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புலிகளை இலங்கையாலோ அல்லது இந்தியாவாலோ தனித்து நின்றோ,அல்லது சேர்ந்தோ ஒருபோதும் அழிக்க முடியாது என…
-
- 0 replies
- 522 views
-
-
தேர்தலும் 60 ஆண்டுகால இனப் பிரச்சினையும் அ.நிக்ஸன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO நாடாளுமன்றத் தேர்தல் இனப்பிரச்சினை பற்றிய தீர்வு விடயங்களையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் கைவிட்டுள்ள தன்மையை காணக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே இனப்பிரச்சினை பற்றிய விடங்கள் முக்கியமாகப் பேசப்படும். அது இரண்டு வகைப்படும். ஒன்று, இனவாத நோக்கில் வேறு சமூகங்களைத் தாழ்த்துவது. இரண்டாவது, யுத்தத்தைத் தீவிரப்படுத்தல். இந்த இரண்டு வகையிலும் யுத்தத்தை தீவிரப்படுத்தல் என்பது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பேசப்படுவதில்லை. ஆனால், யுத்த வெற்றிக்கான உரிமைகள் கோரப்பட்டன. நிலைமை மாறியது இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் …
-
- 0 replies
- 186 views
-
-
ஆரவாரமின்றி நாட்டுக்குள் நுழைந்துள்ள உலக பயங்கரவாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 253 அப்பாவிகளின் உயிர்களை கொடூரமாகக் குடித்திருக்கின்றது. பயங்கரவாதத்தின் இந்தப் பிரவேசம் குறித்து சர்வதேச உளவுத் தகவல்களின் மூலம் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை நாட்டின் பாதுகாப்புத்துறை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய உளவுத் தகவல்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் உளவுத் தகவல்களும் கூடிய கால இடைவெளியில் பயங்கரவாதிகளின் உருவாக்கம் குறித்தும், அவர்களின் நோக்கங்கள் குறித்தும் தகவல்களை வழங்கியதுடன் எதிர்கால நிலைமைகள் குறித்த எச்சரிக்கையையும் விடு…
-
- 2 replies
- 894 views
-
-
மத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு Maatram Translation on May 17, 2019 பட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடியவர்கள் சோவியத்களின் வெளியேற்றத்தை அடுத்து, பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, தங்களுக்குள் ஒரு மிகக் கசப்பான உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தார்கள். இது அந்ந…
-
- 0 replies
- 498 views
-
-
நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார் அமித்ஷா. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார். சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார். 2014 இந்திய பொதுத் தேர்தல் ஜூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் …
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை 'றோ' சீர்குலைக்கிறது? – கூட்டமைப்பின் பதில் என்ன? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சியின் கொரடாவுமான அனுரகுமார திசநாயக்க, யாழ்ப்பாணம் இந்திய வெளியக உளவுத்துறையான 'றோ'வின் கூடாரமாகிவிட்டதாகவும் (Den of RAW) அங்கு முகாமிட்டிருக்கும் 'றோ' முகவர்கள் யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை சீர்க்குலைத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுன அடிப்படையிலேயே ஓர் இந்திய எதிர்ப்புவாத சிங்கள அரசியல் கட்சியாகும். 1971இலும் பின்னர் 1989இலும் தெற்கில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மேற்படி அமைப்பு, சிங்கள இளைஞர்களை கவர்வதற்கு முன்வைத்த பிரதான போதனைகளின் ஒன…
-
- 0 replies
- 205 views
-
-
ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, மு.ப. 04:37 Comments - 0 எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ‘ராஜபக்ஷக்கள் எதிர் இன்னொருவர்’ என்கிற நிலையை, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் தரப்புக்கு எதிராக, வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதும், அவரை மக்களிடம…
-
- 0 replies
- 976 views
-
-
வேட்பாளர் இருவருமே உண்மை பௌத்தர்கள், பேரினவாத சிங்களவர் என்ற அடிப்படையில் இவர்களிடம் காணப்பட்ட வேற்றுமைதான் என்ன? இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் இழைத்த தவறுதான் என்ன? வரலாற்றுக் கால பௌத்த சிங்கள மன்னன் ஒருவன் மீண்டும் நாட்டை ஆளப் பிறந்துள்ளானா, என ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்ப்பதுபோல் மக்கள் பார்த்த ஒரு நிகழ்வாக நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோத்தபாய ராஜபக் ஷவின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெற்றிருந்தது. பழைய ராசதானியான அநுராதபுரத்தில் சிங்கள பௌத்த மன்னர்களின் வரலாறுகளை நினைவூட்டும் ருவன்வெலிசாயவுக்கு அருகில், புனித வெள்ளரசு மர நிழல் தெறிக்கும் மேற்படி புனித மண்ணில், பௌத்த குருமார் புடைசூழ வரலாற்று முக்கிய…
-
- 0 replies
- 404 views
-
-
நேட்டோவின் 70 ஆண்டுகள்: குருதி தோய்ந்த வரலாறு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 05 உலக வரலாற்றின் பாதையில், சில அமைப்புகள், குறித்த காலத்தின் தேவைகருதி உருவாக்கப்படுபவை. அவை, காலம் கடந்து நிலைக்கும் போது, அதன் தேவையும் காலப் பொருத்தமும் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, சில தவறுகளை அவ்வமைப்புகள் செய்யத் தூண்டப்படுகின்றன. அத்தவறுகள் சிறுதவறுகள் அல்ல; பெருந்தவறுகள் என்ற உண்மையை, அவை உணரத் தொடங்கும் போது, காலம் கடந்திருக்கும். உலகில் இயங்குகின்ற இராணுவக் கூட்டமைப்புகளில் மிகவும் பலமானதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டு, ‘நேட்டோ’ ஆகும். ‘வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு’ எனப்படும…
-
- 0 replies
- 709 views
-
-
போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும் மீநிலங்கோ தெய்வேந்திரன் May 23, 2025 | Ezhuna இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்…
-
- 0 replies
- 194 views
-
-
ஹாலிவுட் விரும்பாத உண்மைக் கதை – கொரோனாவிடம் தொற்றுப் போன அமெரிக்கா !: வரதன் 04/29/2020 இனியொரு... ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா தோற்கடிக்காத ஒரு நபரோ, நாடோ, உயிரோ இந்த பூமியில் மட்டுமல்ல, நமது பால்வெளி மண்டலத்திலே கூட இல்லை. அமெரிக்க நாயகர்கள் செய்யாத சாகசம் இல்லை. இருப்பினும் ஒரு வைரஸ் நிஜ அமெரிக்காவை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த நிலைகுலைவிற்கு காரணம் ஏழை நாடுகளில் கூட இருக்கும் பொது சுகாதாரக் கட்டமைப்பு அங்கே இல்லை என்பதுதான். இலாபத்தை இலட்சியமாக வரித்திருக்கும் ஒரு சுகாதார அமைப்பின் தோல்வியை அமெரிக்க கொரோனா வைரஸ் நெருக்கடி நிரூபித்திருக்கிறது. அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ புள்ளிவிவரங்கள் உருவாக்கியிருக்கும் வலிமையை கோவிட் 19…
-
- 0 replies
- 780 views
-
-
தேர்தல் களத்தில் பெண்கள் -கௌரி நித்தியானந்தம் இலங்கை சட்டமன்றத்துக்காக 1931இலிருந்து இதுவரை அறுபது பெண்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் கடந்த மூன்று நாடாளுமன்றங்கள் ஒவ்வொன்றிலும் தலா 13 பெண்கள் மாத்திரமே அங்கம் வகித்திருந்தனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையில் வெறும் 5.7 சதவீதம் மாத்திரமே ஆகும். உலக அரங்கில் பெண் தலைவர்களைக் கொண்ட நாடுகளாக தற்போது இருபதுக்கும் அதிகமான நாடுகள் இருக்கின்றன. அதிலும் கியூபா, பொலிவியா, உகண்டா போன்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் சன…
-
- 11 replies
- 1.3k views
-
-
அஸ்தமித்துப்போன ஆர்வம் .. வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது, மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில், 140 ஆசனங்கள் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வசமாகியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வெறும் எட்டு ஆசனங்களுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சியாகியது. எதிர்க்கட்சித் தலைவராக அ. அமிர்தலிங்கம் பதவியேற்றார். ஐக்கிய தேசிய கட்சி, தெற்கில் சிங்கள மக்களது அமோ…
-
- 0 replies
- 574 views
-