Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. குறிப்பாக, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், செயலற்ற தன்மையினாலும், பணவீக்கம் மோசமாக அதிகரித்து, விலைவாசிகள் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளன. இது சாதாரண மக்களின் வாங்கும் …

  2. நாட்டுப்பற்று எனும் ‘முகமூடி’ -என்.கே. அஷோக்பரன் பிரித்தானிய அறிஞர் சாமுவல் ஜோன்ஸன், “நாட்டுப்பற்று (patriotism) என்பது, அயோக்கியர்களின் கடைசிச் சரணாலயம்” என்று, 1775இல் தெரிவித்திருந்தார். இப்படிச் சொன்னதன் மூலம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களை ஜோன்ஸன் குறை சொல்லவில்லை. மாறாக, நாட்டுப்பற்று எனும் முகமூடியைப் பயன்படுத்தும், ‘பசுத்தோல் போர்த்திய நரிகளையே’ அவர் கடிந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனுக்கும் தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய சுற்றம், தன்னுடைய சமூகம், தன்னுடைய இனம், தன்னுடைய மொழி, தன்னுடைய மதம், தன்னுடைய பண்பாடு, தன்னுடைய கலைகள், தன்னுடைய அடையாளம் என்று, தான் சார்ந்தவை சார்ந்த பிரக்ஞையும் ஈர்ப்பும் பெருமையும் காணப்ப…

  3. விகடன் டீம் – நிலாந்தன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கோத்த…

  4. வட இலங்கையில் தமிழரசு அமையுமா, அச்சப்படும் சிங்கள அரசாங்கம் ? இக்பால் செல்வன் இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தீவில் சமாதானம் நிலவுவதாகப் பலரும் நம்பி வந்தாலும் கூட, உண்மையான சமாதானத்தை இன்னமும் இலங்கை வாழ் மக்கள் பெறவில்லை. இலங்கைத் தீவு என்பது சிங்களம், தமிழ் பேசும் பலவித மக்கள் குழுமி வாழும் ஒரு தேசமாகும். ஒவ்வொர் பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சார, மத, மொழி மற்றும் வாழ்வியல் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. தமிழ் புலி பயங்கரவாதிகளின் தலைமையில் ஒரு தேசம் உருவாவதை பன்னாட்டு அரசுகள் விரும்பவில்லை, அத்தோடு தமிழ் புலிகள் இலங்கைத் தீவில் நீண்டதொரு சமாதானத்துக்கு ம…

  5. ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல் சேரன் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடி…

  6. கல்குடா எதனோல் உற்பத்தி தொழிற்சாலை - மக்களுக்கு யார் விளக்கம் சொல்வது? - அதிரதன் வறுமையைப் பற்றியும், வருமானப்பிரச்சினை பற்றியுமே எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனை, எத்தனை பேரிடம் இருக்கிறது என்றால் கேள்விக் குறியாகிறது. மட்டக்களப்பு, வறுமையில் முதலிடம் வகிப்பதாகவும் வருமானக்குறைவு, வீட்டுப்பிரச்சினைகள் கொண்ட மாவட்டமாகவும் கருதப்படுகின்றது. ஒன்றை இழந்தால்தான் மற்றென்றைப் பெறமுடியும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதெல்லாம் கூடப் பலருக்கு மறந்துபோய் விட்டது. ஏன் இந்த விடயத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று யோசிக்கத் தோன்றலாம். ஒரு முறை கொழும்பு சென்ற வேளை, முச்சக்க…

  7. தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாகப் பயணிக்கமுடியுமா? - முத்துக்குமார் தேர்தல்கள் இலட்சிய அரசியலைச் சிதைக்கும் ஒரு கருவி என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கு இடதுசாரி அரசியலோ, தேசிய இன அரசியலோ விதிவிலக்காக இருந்ததில்லை. இலட்சிய அரசியலின் எதிரிகள் அதனைத் தோற்கடிக்க எப்போதும் தேர்தல் அரசியலையே பயன்படுத்த முனைவர். தேர்தல் அரசியலில் ஈடுபடும்வரை இடதுசாரி இயக்கம், இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி வலுவானதாக இருந்தது. அவை எப்போது தேர்தல் அரசியலைத் தேர்ந்தெடுத்ததோ, அன்றிலிருந்தே சிதையத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலும், சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு சில வருடங்களும், இடதுசாரி இயக்கங்கள் வலிமையான அமைப்புகளாக இலங்கையில் இருந்தன.…

  8. எதற்காக இந்த மாற்றம்? கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வீடுகள் அல்லது வீதிகளில் இறக்கும் காட்சிகளை எவ்வித தணிக்கையுமின்றி, சமூக வலைத்தலங்கள் அல்லது தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக, கடந்த சில வாரங்களாக பார்க்க நேரிட்டுள்ளதென்றால், அதற்கென தனியாக மனத் தைரியமும் திடகாத்திரமும் எமக்கு கணடிப்பாக தேவையாகவுள்ளது. அல்லது மனதைக் கல்லாக்கிக்கொண்டு, உணர்வுகளை மறுத்துப்போகச் செய்த பின்னர் தான் இவற்றையெல்லாம் பார்க்கவோ, அனுபவிக்கவோ வேண்டும்.எவ்வளவு மனவலிமையுடையவராக இருந்தாலும் எமது நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் உள்ளிட்ட தகனச்சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணக்குவியல்களைப் பார்த்தால் ஒரு கணம் இதயம் ஸ்தம்பித்து விடும். பல மாதங்களுக்கு முன்னர் எமது…

    • 0 replies
    • 762 views
  9. "முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை தோற்கடித்த மகிந்த தேர்தல் யுத்தத்தில் மக்களிடம் தோற்றுப்போனார்"குளோபல் தமிழ் செய்திகளுக்காக பிரியதர்தசன் வடக்குத் தேர்தலும் தமிழ் மக்களின் தீர்ப்பும் இதை ஒரு போராட்டம் என்றே குறிப்பிடவேண்டும். ஆழ்கடலில் தவிப்பவனுக்கு சிறு துரும்பும் ஓடம் என்பதுபோல இன்று ஈழத் தமிழர்கள் இந்த உலகத்தால் தள்ளப்பட்ட சூன்ய அரசியல் வெளிக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு போராட்டமாவே செய்து முடித்திருக்கின்றனர். அதுவும் இரக்கமற்ற கொடிய இலங்கை அரச படைகளின் துப்பாக்கிகளின் நிழலில்தான் வடக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தலின் பொழுது வாக்களிப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட பொழுது மக்களை அச்…

  10. இலங்கைக்குத் தேவை ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஒரு புதிய பாதை இன­வா­த­மும், மதச் செருக்­கும் இந்த நாட்­டின் சமூக பொரு­ளா­தார முன்­னேற்றத்துக்கு இரட்­டித்த சாபக்­கே­டாய் இருந்து வந்­து­ள்ளன. நாட்­டின் கடந்த நூற்­றாண்டு கால வர­லாற்றை நோக்­கு­வோ­மா­யின், இந்த நிலை­மை­யா­னது ஆரம்ப கட்­டத்­தி­லேயே தோற்­றம் பெற்று, வெவ்­வேறு வடி­வங்­க­ளில் இற்­றை­வரை நிலவி வரு­கி­றது, 1948ஆம் ஆண்டு நாடு சுதந்­தி­ர­ம­ டைந்­ததை அடுத்து, குறிப்­பாக கொரியா நாட்­டில் நடை­பெற்ற போர் மற்­றும் சீனா­வு­டன் செய்து கொண்ட இறப்­பர்- – அரசி ஒப்­பந்­தம் போன்ற நிலை­மை­கள் வாயி­லாக, பொரு­ளா­தார வளர்ச்சி அறி­கு­றி­கள் தென்­பட்­டன. எனி­னும், பின்பு சிங்­கள மேலா­திக்­கச் சிந்…

  11. கண் அரசியல்! - நிலாந்தன் “ 35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கடந்த 10 ஆம் திகதி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமில்ல அண்மை வாரங்களாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவ்வாறு ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் பாகிஸ்தானில் அடித்துக…

  12. தென்னாசிய வட்டகை ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திக­திய நடா­ளு­மன்ற அமர்வு கடும் வாதப் பிர­தி­வா­தங் கள் மத்­தி­யில் சூடு பிடித்திருந் தது. அந்த வேளைய அரச தலை­வர் ஜே.ஆரின் தலைமை யிலான ஐ.தே.கட்சி அரசு, இந்­தி­யா­வு­டன் செய்து கொள்ள விருந்த ஒப்­பந்­தம் குறித்த விவ ரங்­களை நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­விக்க வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­யி­னர் சபை­யில் கடும் வற்­பு­றுத்­தல் மேற்­கொண்­ட­னர். நில­மை­யைச் சமா­ளிக்­கும் நோக்­கில் அரசு நாடா­ளு­மன்ற அமர்வை ஓகஸ்ட் 18 ஆம் திக­தி­வரை ஒத்­தி­ வைத்து எதிர்க்­கட்­சி­யி­ன­ரது எதிர்ப்­பைத் தற்­கா­லி­க­மாக முறி­ய­டித்­தது. நான்கு நாள்­கள் கழித்து ஜுலை 28…

  13. இலங்கை தனது எரிசக்தி தொடர்பான இறைமையை இழக்கப்போகின்றது – முன்னிலை சோசலிஸ கட்சி ———- திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் என்ன இடம்பெறுவது என்ன? ———– Oil Tank Farm இலங்கை எரிசக்தி தொடர்பான தனது சொத்துக்களை தொடர்ந்தும் தனியார்களிற்கு விற்பனை செய்து வருவதால் இலங்கை எரிசக்தி தொடர்பான தனது இறைமையை இழக்கும் என முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையின் 99 எண்ணெய் குதங்கள் தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்,என தெரிவித்துள்ள முன்னிலைசோசலிஸ கட்சியின் புபுது ஜயகொட இந்தியாவுடன் இது குறித…

  14. ஏமாற்றப்படும் கூட்டமைப்பு! இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கையறு நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவே தோன்­றுகின்றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்­டி­ருந்த நம்­பிக்கை அற்றுப் போயி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். இந்த அரசின்…

  15. புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து சம்பந்தன் தலைமையிலான அணியினர் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டனர் என்பது தெளிவு. சம்பந்தன் தனதுரையில் பிறிதொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார் அதாவது, புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மக்களின் விரும்பத்தினை அறிந்து கொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு விடப்பட…

  16. அவர்கள் என்னைத் தேடி வந்தபோது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடு வழமைக்குத் திரும்பிவிட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களை வரிசையில் நிற்காமல் பெறமுடிகின்றமை, உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளமை, போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து அகன்றுள்ளமை போன்றன நிலைமை, சீராகியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இங்கு நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி இன்னமும் கேட்கப்படாமலேயே இருக்கிறது. நாட்டை இந்த நெருக்கடிக்குத் தள்ளிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா? இல்லையெனில், எதன் அடிப்படையில் நாடு வழமைக்குத் திரும்பி விட்டது என்று நாம் நம்புகிறோம்? இப்போது நாட்டில் நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோமா? இ…

  17. கடப்பாடுகளை மறந்த அரசு உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடந்து கிட்­டத்­தட்ட மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலை­யிலும், கொழும்பு அர­சியல் அரங்கில் தோன்­றிய கொந்­த­ளிப்பு இன்­னமும் அடங்­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஏற்­பட்ட பின்­ன­டைவு, கூட்டு அர­சாங்­கத்தின் நிலையை கேள்­விக்­குள்­ளாக்­கி­யது. இரண்டு கட்­சி­க­ளுக்­குள்­ளேயும், உள்­மு­ரண்­பா­டு­களைத் தோற்­று­வித்­தது. இது கட்­சிகள் சார்ந்து உரு­வா­கிய பிரச்­சினை. அதே­வேளை, கூட்டு அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சிகள், பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரண…

  18. இரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா? June 1, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த வடமாகாண முதலமைச்சர் யார் என்ற சர்ச்சைகள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் உயர்பீடத்தால் தற்போது சடுதியான புதிய நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவை சேனாதிராசாவை தவிர்த்து, புதிய- நிர்வாக பரிச்சயமுள்ள ஒருவரை அரங்கிற்கு கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. யார் அந்த புதிய முகம்? அவரை அரங்கிற்கு கொண்டு வர முயற்சிப்பவர் யார்? ஆளை சொல்வதற்கு முன்னர், இந்த விவகாரம் குறித்த சிறிய பிளாஷ்பேக் ஒன்றை சொல்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தான்தானென மாவை…

  19. கன்பூசியஸ் நிலையம் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஊடுருவல் கருவி? - யதீந்திரா அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் ஒரு சக்தியாக சீனா எழுச்சியடைந்துவருகின்றது. இதில் தற்போது எவருக்குமே சந்தேகமில்லை. இன்றைய சீனாவின் எழுச்சியின் முதல் பகுதி டெங்சியோ ஒபியின் காலமென்றால், அதன் அடுத்த கட்டத்தை நகர்த்துபவராக தற்போதை சீனத் தலைவர் சி.ஜின்பிங்கின் இருக்கின்றார். சீன வரலாற்றில் மாவோவிற்கு பின்னர் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக சி.ஜின்பிங் நோக்கப்படுகின்றார். சீனாவை ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைச் செய்யும் இலக்கில், ஜின்பிங்கின் நிர்வாகமானது, ஆக்கோரசமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்க …

  20. 2009 இற்குப் பின்னரான புவிசார் - அரசியல் - பொருளாதாரம் பிறிக்ஸ் மாநாட்டு முடிவுகளும் இலங்கையின் எதிர்பார்ப்பும் பிறிக்ஸில் இலங்கை இணைய வேண்டுமென்ற உதயகம்பன்பிலவின் கோரிக்கையின் பின்னணி? புதுப்பிப்பு: செப். 01 11:56 உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில், ஆறு நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிறிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்ட வலுவான கூட்ட…

  21. போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறுதலும் ஊடக சுதந்திரமும் by Niran Anketell - on June 1, 2015 படம் | Photo, Lakruwan Wanniarachchi, GETTYIMAGES உலகின் பல பாகங்களிலே ஊடக சுதந்திர தினமானது தமது ஊடகப்பணியை ஆற்றும்போது கொலையுண்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதால் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அப்படிப் பலியானவர்களின் தொகையானது எனது பேச்சிலோ இப்படியான ஒரு நிகழ்விலோ குறிப்பிட்டுச் சொல்லிமுடியாதபடிக்கு அதிகமானதாகும். இங்கு அமர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் இன்றும் அதேபோன்ற ஆபத்துக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்தும் வருகின்றனர். இருண்ட காலகட்டங்களிலுங்கூட பாதுகாக்கப்பட்டு வந்துள்ள தொழிற்துறையில் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலே, பெரும் விலை கொடுத்த இந்தப் பிராந்தி…

  22. 24 MAR, 2024 | 05:07 PM நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் அரசாங்கம் நிதியுதவிகளைப் பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததொரு விடயம். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் பொறிமுறைகள் தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளதால், அதன் காரணமாக, வரிகளை அதிகமாக அறவிட்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தும், மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொண்டும் நெருக்கடிகளைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. அந்நிய செலாவணியை அதிகரிக்க அண்மைக்காலமாக சில நாடுகளுக்கு விசா முறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அந்நாட்டு உல்லாசப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டது.…

  23. சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும் July 9, 2024 – கருணாகரன் — “சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன. பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேச…

  24. சர்வதேச விசாரணைகளை அமெரிக்கா முன்னர் பெயருக்குத் தூக்கிப் பிடித்திருந்தாலும் கூட, இன்று அதைத் தேவையற்றது என்று கூறுவது எதற்காக என்பதை இக்கட்டுரை கூறுகிறது, கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்றவாளிகள் இயல்பாகவே குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு தம்மீதிருக்கும் குற்றத்தை அகற்ற தம்மாலான அனைத்தையும் செய்வார்கள். புலிகள் மீது போர்க்குற்றங்களுக்கான பொறுப்புச் சுமத்தப்பட்டாலும் அவர்கள் இன்று இல்லை. ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றத் தரப்பினர் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் அவர்கள் "தார்மீகப் பொறுப்பெடுத்தல்" பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறா…

  25. 05 OCT, 2024 | 12:29 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக தேர்தல்களில் வாக்குறுதி அளித்து மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் எவருமே அதை ஒழிக்கவில்லை என்பது அண்மைக்கால வரலாறு. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.