Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யாழ்ப்பாண குடாக்கடல் மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் டைனமைற் மூலம் மீன்பிடி என்பது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் சாதாரண விடயமாகும். டைனமைற் ரக வெடி பொருட்களை நீர்மட்டத்திற்கு மேலாக வெடிக்க வைப்பதன் மூலமாக எதிர்பாராத அதிர்வ லைக்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மீன்களையும் கொன்று அறுபடை செய்வதே அந்த நுட்பமாகும். அந்தவகையிலேயே தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி, ஜெலிக்னைற் குச்சிகள் கடத்தப்பட்டு பிடி படுகின்ற கதை அமைகின்றது. யாழ். குடாக்கடலில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் இத்தகைய டைனமைற் மீன்பிடியை கடற்படையின் மூலம் முன்னெடுப்பது ஒன்றும் புதிதல்ல. தேவையான வெடிபொருட்களுக்காக எறிகணையொன்றை வெட்டிப்பிளக்க முற்பட்டு இருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததும் பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கலாம். …

  2. பிரதம நீதியரசருக்கே அரசிடமிருந்து நீதி கிடைக்காதபோது தமிழருக்கு எப்படி நீதி கிடைக்கும்? முத்துக்குமார் பிரதம நீதியரசர் விவகாரத்தின் முதலாம் அத்தியாயம் முடிவிற்கு வந்துவிட்டது. புதிய நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஒரு பெயருக்கு இருக்கின்ற பாராளுமன்ற பேரவையும் அதற்கான சம்மதத்தை வழங்கிவிட்டது. பேரவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ரணில் விக்கிரமசிங்காவும், சுவாமிநாதனும் கூட்டத்திற்குச் செல்லாமலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுபோல பெரும்பான்மை ஆதரவுடன் சம்மதம் வழங்கப்பட்டுவிட்டது. 18வது திருத்தத்தின்படி பாராளுமன்றப் பேரவைக்கு அதிகாரம் எதுவும் கிடையாது. வெறும் அவதானிப்புக்களைக் கூறுவது மட்டும்தான் அதன் கடமை. எதிர்க்கட்சி உறுப்…

  3. புலிகளை வெற்றி கொள்ள உதவியது புலனாய்வு ஒருங்கிணைப்பே – சிறப்பு அதிரடிப்படை கட்டளைஅதிகாரி [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான நிமால் லெகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட மிகப் பெரிய வெற்றியில் புலனாய்வு முக்கிய பங்கை வகித்திருந்தது. இந்த விடயத்தில் சிறிலங்கா பாதுகாப்…

  4. அடர்ந்து வளர்ந்திருக்கும் வனாந்தரத்திற்கும், வனாந்தரத்திற்கு நடுவே மழை வெள்ளத்தால் நிரம்பிக்கிடக்கும் ஒரு ஒடுங்கிய மண்சாலைக்கும் பின்னால் நாகரீக வேடுவர்களாய் மாற்றப் பட்டிருக்கும் மக்களின் கதை அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வடக்கின் வசந்தம் வீசாமல், அபிவிருத்தியினால் அலங்கரிக்கப்படாமல் அலங்கோலப்பட்டிருக்கும் ஒரு கிராமம் புதிய குடியிருப்பு என்ற மிகப் பின்தங்கிய கிராமம். kilinochchi people 2013கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னர் தோன்றிய, இன்றுவரை அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல கிராமங்களில் இதுவும் ஒன்று. மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் நிலமற்ற மக்களை கொண்டு 2011ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த புதிய குடியிருப்பு கிராமத்தில் இன்று 60ற்கும் மேற்…

    • 1 reply
    • 2.6k views
  5. அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை தொடுத்திருக்கிறது. மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் வழித்தாக்குதல்களை நடத்தியது. 250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடநத 5 நாட்களாக தாக்கிய பிறகும் இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் வசிக்கும் டயாப…

    • 6 replies
    • 808 views
  6. ஈழப்படுகொலை ஓர் ஊடகவியலாளரின் சாட்சியம் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: என்.கே. மகாலிங்கம் அதிபயங்கரமான படுகொலைகள் நடந்த அந்தப் பொன்னிற மணல் பிரதேசத்திலிருந்து தப்பி வருகிறார் லோகீசன். ஆறு அடி உயரம். மழிக்கப்படாத தாடி. நீண்ட குழம்பிய தலைமுடி. இருபத்தேழு வயது. தன் தந்தையை ஒரு குழந்தையைப் போல் தூக்கி வருகிறார். தன் தலைக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கும் துப்பாக்கிக் குண்டுகளை அவர் கவனிக்கவில்லை. காலடியில் கிடக்கும் செத்த உடல்களைக் கவனிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இப்போது தண்ணீர்த் தாகம். பயங்கரமான தண்ணீர்த் தாகம். அது மட்டுந்தான் அவருக்கு இப்போது நினைவிலிருக்கிறது. அது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். கொடுமையான வெயில் எரிக்கும் பின் மதியம். …

  7. மறதியின்மேல் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் மு. புஷ்பராஜன் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெம், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டார். “இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்குவகித்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து ஒரு சமாதான முயற்சியை 2009 ஜனவரி மாதத்தில் மேற்கொண்டதாகவும் அதன்படி சர்வதேச அமைப்பு அல்லது அமெரிக்கா, இந்தியா அல்லது வேறொரு நாடு, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு ஒரு கப்பலை அனுப்புவதென்றும் போரில் எஞ்சியிருந்த பொதுமக்கள், விடுதலைப்புலிகள் அனைவரையும் புகைப்படத்துடன் பதிவுசெய்து கொழும்புக்குக் கொண்டுசெல்வதாகவும், பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்த்து அ…

  8. 'அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. அதிகாரம் இல்லாமல் எதுவும் இல்லை' என்ற நிலைமை எம் அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அந்த அதிகாரமும் அரசியலும் அதனோடு இணைந்து தொழிற்படும் அறிவு அல்லது மார்க்கமும் யாருக்காக? எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை வைத்துத்தான் நாம் அதிகாரத்தில் அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. ரிசானா என்ற சிறுமி, கொல்லப்படுவதற்காக விமானம் ஏறி சவூதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையைப் போக்கத்தான் அவள் சென்றாள். சென்ற இடத்தில் அவளை அறியாமல் ஏற்பட்ட ஒரு சம்பவம்... அதற்கு கிடைத்த தண்டனை மரணம். 'சட்டமியற்றும் அதிகாரம் என்பது இஸ்லாமிய இறையில் நம்பிக்கையின் படி அல்லா…

  9. இந்த மதம் அந்த மதம் என்றில்லை எல்லா மதமும் தனக்கேயுரிய சர்வாதிகார அரக்க குணங்களுடன்தான் இருக்கின்றன. நமக்குள்ளிருந்த கடவுளை கொன்றுவிட்டு மதத்தை கட்டிக்கொண்டு மாறடிப்பவர்களாகத்தான் மாறிவிட்டோம். மற்ற மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போதெல்லாம் கூடி கும்மியடிப்பதும், தன்னுடைய மதத்தைப்பற்றி யாராவது ஏதாவது சொல்லிவிட்டால்.. கிடந்து தையா தக்கா என்று குதிப்பதும்தான் மதவாதிகளின் வாடிக்கையான செயலாக இருக்கிறது. அதற்கு இந்து இஸ்லாமிய கிறித்தவ எக்ஸட்ரா எக்ஸட்ரா பேதமேயில்லை. சில நாட்களுக்கு முன் ரிஸானா என்கிற பெண்ணை சவூதி அரேபியா அரசாங்கம் மரணதண்டனை என்கிற பெயரில் மிக கொடூரமான முறையில் தலையை வெட்டி கொன்றது. இதை கண்டித்து இணையமெங்கும் ஏகப்பட்ட எதிர்ப்பலைகளை காணமுடிந்தது.…

  10. முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள தமிழ் கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கடந்த திங்கட்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தி முழுப் பூசனிக…

    • 0 replies
    • 1k views
  11. பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் இறுக்கமான நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டுமாயின் , அது தனது பலமென்று கருதும் சர்வதேச சக்திகளின் போக்குகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் . அந்தவகையில் சிங்களத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத , நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கும் சீனாவைப் புரிந்து கொண்டாலே போதும். ஆதலால்,முதலில்ஆசியாவை நோக்கி நகரும் புவிசார் அரசியலின் தவிர்க்கமுடியாத பார்வை, தென்சீனக் கடலிலும், இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் ஆழமாகப் பதிவதை கவனிக்க வேண்டும். இலங்கை தேசிய இனப் பிரச்சினையில், மேற்குலகின் வகிபாகம் காத்திரமான பங்கினை வகிக்கப்போகிறது என்பதனை ஏற்றுக்கொண்டு ,அதனடிப்படையில் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போர், ஆசியாவில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்க…

    • 0 replies
    • 650 views
  12. Wednesday, January 16, 2013 ஒபாமாவும் சித்திரவதையும் Obama and torture ஒபாமா நிர்வாகம் அதன் தாராளவாத மற்றும் “இடது” ஆதரவாளர்களின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஊகங்களுடன் தன் இரண்டாம் பதவிக்காலத்தினை ஆரம்பிக்க தயாரிக்கையில், மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய குற்றங்களைத் தொடர்வதுடன் தீவிரப்படுத்துவதையும் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முதல் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஒபாமாவும் அவருடைய தலைமை அரசாங்க வழக்குத்தொடுனருமான எரிக் ஹோல்டரும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் CIA ஆல் நடாத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற குற்றங்கள் நடத்தப்பட்டவற்றை குறித்த அனைத்து விசாரணைகளையும்…

  13. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதைச் செய்ய நினைத்ததோ, அதைச் செய்துவிட்டது. பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பமானபோதே, அது எங்குபோய் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஏனென்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஓர் அரசாங்கத்துக்கு முன்னால்- ஆண் ஒருவரைப் பெண் ஆக்குவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் செய்ய முடியும் என்று கூறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை விடவும், மிகையான அதிகார…

  14. கொள்கை நோக்கும் விட்டுக்கொடுப்பும் கூட்டுச்சேர்வும் வெற்றிக்கான அடிப்படைகள் தத்தர் 'நெருப்பில் பூத்த மலர்கள் வெய்யிலில் வாடுவதில்லை'. ஈழத்தமிழர் நெருப்பில் பூத்த மலர்கள். அவர்களின் தியாகங்கள் அளப்பெரியவை. இழப்புக்கள் மிகப்பெரியவை. அவர்களின் துயரங்கள் மிகப்பெரியவை. வலியும் வேதனையும் அப்படியே அளப்பெரியவை. கனவிலும் நனவிலும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்திருப்பவர்கள். உறங்காத கண்களும் ஆறாத மனமுமாய் துயர்தோய்ந்த வாழ்க்கைச் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழர் அரசற்ற தேசிய இன மக்கள் மட்டுமல்ல அவர்களுக்காகக் குரல்கொடுக்க உலகில் எந்தவொரு அரசும் இல்லாத மக்களும்கூட. சர்வதேச உறவென்று ஒன்று அரசியல் அகராதியில் சொல்லப்படுகின்றதே ஆயினும், நடைமுறையில் சர்வ அரசுகளு…

  15. காட்டாற்றை தடுக்கவென அதன் குறுக்கே வீழ்ந்ததாம் ஒரு மரம். ஆனாலும் அதனையும் அடித்துதள்ளிக்கொண்டே எதுவுமே நிகழாதது போல தன் பாதையில் வேகமெடுத்துப் பாய்ந்துகொண்டேயிருந்தது அந்தக்காட்டாறு. ஊடகங்களும் காட்டாறு போன்றவைதான். அவை சவால்களையும், தடைகளையும், வலிகளையும் சந்தித்தாலும் கூட தம் பயணத்தில் தடம் மாறுவதில்லை. (சூழ்நிலையின் மாறுதல்களுக்கேற்ப தம் குரல்களின் தொனியையும் மாற்றும் பச்சோந்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் அவற்றை ஊடகங்கள் என்று அடையாளப்படுத்துவது, நேர்மையான ஊடகங்களை அவமானப்படுத்துவது போலாகிவிடும். வேண்டுமானால் ஊது குழல்கள் என்று சொல்லலாம்.) இலங்கையில் அதிக வன்முறைகளை எதிர்கொண்ட ஊடகமான உதயன் மீது இன்னொரு கோழைத்தனமான தாக்குதல் வடமராட்சியில் அரங்க…

    • 0 replies
    • 581 views
  16. -கே.சஞ்சயன் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு வந்த நாட்டில், நீதித்துறை இப்போது செல்லாக்காசு போன்று மதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை வாசம் அனுபவித்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தில் உள்ள அவரது அமைச்சரவை சகாக்களே, பகிரங்கமாக நீதிமன்றங்களை, நீதிபதிகளை, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கின்ற நிலை காணப்படுகிறது. அதுவும், உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள், கருத்துகள் எல்லாம் கண்டபடி விமர்சிக்கப்படுகின்றன. அரச ஊடகங்களிலேயே, இத்தகைய விமர்சனங்கள் தாராளமாக வெளியாகின்றன. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக முக்கிய அரசியல்வாதி ஒ…

  17. ஒபாமாவின் இரண்டாவது தவணையில் இலங்கை எத்தகைய முக்கியத்துவத்தை பெறக்கூடும்? - யதீந்திரா ஜோன் கெரி வெளிவிவகாரச் செயலராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த இரண்டு பதவிநிலைகளான பாதுகாப்புச் செயலர் மற்றும் மத்திய புலனாய்வு முகவரகத்தின் (CIA) பணிப்பாளர் ஆகியவற்றுக்கான புதிய பெயர்களை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அறிவித்திருக்கின்றார். இதனடிப்படையில், புதிய பாதுகாப்புச் செயலராக சக் ஹெகல் (Chuck Hagel) மற்றும் சி.ஐ.ஏயின் பணிப்பாளராக ஜோன் பிரனன் (John Brennan) ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னாள் அமெரிக்க செனட்டரான ஹெகல், அமெரிக்க வட்டாரங்களில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்னும் விமர்சனத்தை பெற்றிருப்பவர். சில விமர்சனங்களுக்கு மத்தியிலேயே இவரது பெ…

  18. மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் : மோகனராஜன் இன்றைய உலகில் மக்களை பிளவுபடுத்தி ஏமாற்றி சுரண்டி, துன்படுத்தி இலாபம் சேர்க்கும் இரண்டு அரசியல் கருத்தேற்புகளாக மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் காணப்படுகின்றன. இவை ஒன்றை ஒன்று பயன்படுத்திக் கொண்டு ஒன்றின் மேல் மற்றொன்று பயணிக்கின்றன. இவை மக்களை அடையவும், மக்களுடைய புரட்சிகரமான எண்ணத்தை மழுங்கடிக்கவும் உலகமயமாதல் நவ-தாராண்மைவாதம், பின்நவீனத்துவம் எனும் மாயைகளின் ஊடாக மக்களை தம்வசப்படுத்தல், அடிமைத்தனமான எண்ணங்களையும் சுயநலத்தினையும் கொண்ட பண்பாட்டு சீரழிவான சமூகத்தை கட்டியெழுப்புதல் என்பவற்றில் வெற்றி பெற்றுள்ளன என்றே கூற வேண்டும். மதம் எங்கு சமூகத்திற்கு எதிராக செயற்பட தொடங்குகின்றதோ அங்கு மத அடிப்படைவாதம…

  19. ஸ்ரீலங்காவின் அரசதலைமையினாலும் அதன் பாராளுமன்றின் மூன்றில் இரண்டிலும் அதிகமான பெரும்பான்மை பலமான பௌத்த சிங்கள பாசிச வெறியர்களாலும் , அந்நாட்டின் அதி உயர் கட்டமைப்புகளில் மிக முக்கியமானதாக உள்ள நீதித்துறையே முற்றுமுழுதாக சீர்குலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஜனநாயகத்தை ஆழக்குழி தோண்டிப்புதைத்துவிட்டு காட்டாச்சியை முழுமையாக உறுதிப்படுத்துவதான சர்வாதிகாரத்தை தன் தலையில் வைத்தாடுகிறார் மஹிந்த. இதன் மூலமாக அவர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் பல செய்தியைகளை உரக்கக்கூறி உள்ளார். இதில், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை அல்லது குறிப்பாகக் கூறுவதாயின் தமிழர்களை தவணை முறையில் அழித்தொழிப்பதற்கான வலுவினை சிங்கள அரசு உறுதிப்படுத்தி விட்டது என்பதுவே முக்கியமான செய்த…

    • 2 replies
    • 663 views
  20. சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி ரிசானாவுக்கு முதலில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாகச் சென்ற ஒரு ஏழைப் பெண்பிள்ளைக்கு மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றிய கொடுஞ்செயல் கேட்டு உலகம் முழுவதும் நெக் குருகிப் போயுள்ளது. ரிசானாவின் மரணதண்டனையை நிறை வேற்ற வேண்டாம் என சவூதி அரசிடம் பலரும் கருணை மனுக்களை அனுப்பியிருந்த நேரத்தில், ரிசானா மூதுரில் உள்ள தனது வீட்டுக்கு விரைவில் திரும்புவார் என்று நம்பியிருந்த வேளையில், கழுத்துவெட்டி அவருக்கான மரண தண் டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு கண்ணீர் வடிக்காத உள்ளங்கள் இருக்க முடியாது. என்ன செய்வது! ரிசானா ஒரு ஏழை பிள்ளை. தன் வறுமையை போக்குவதற்காக தன் குறைந்த வயதிலும் வீட்டுப் பணிப்பெண்…

  21. Ranjan and AHRC blame govt for Rizana execution [Friday, 2013-01-11 09:58:36] Opposition Member Ranjan Ramanayake who was among those campaigning for the release of Rizana Nafeek blamed the governemnt for failing to prevent the exeuction. Mr Ramanayake told a press conference held at the Opposition Leaders Office that if it acted seven years ago and proved that the mistake was on the hands of the people who sent this underage girl she would still be alive. "Rizana has paid for this ordeal with her life which the real culprits who sent her (the fake agency) are not punished," he said. MP Ramanayake said that the government took seven years to tra…

  22. பல்கலைக்கழக மாணவர் புரட்சி: விடுதலையை வென்றெடுக்கும் தந்திரங்களும் தோற்கடிக்கும் தந்திரங்களும் - பிரம்மாதவன் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் விடுதலை செய்யப்படவில்லை என்று வானொலியில் வாசிக்கப்பட்ட செய்தியைக் கேட்டது முதல் மனம் உள்ளுக்குள் குமுறத் தொடங்கியது. அதுவே இப்பத்தியின் ஆரம்பமாயும் ஒரு விடயத்தை பகிரங்கமாக இச்சந்தர்ப்பத்தில் சொல்லிவிடவும் வழிகோலியது. ஒரு போராடும் இனத்தில் புரட்சியின் வித்துக்கள் மட்டுமே கருவறையிலும் பள்ளிக்கூட அறைகளிலும் கல்லறைகளிலும் என எல்லாச் சூழலிலும் ஆரோக்கியமாகவே இருக்கவல்லன. பள்ளிக்கூட அறைகளில் மட்டுமே அது துளிர்விட ஏதுவான சாதகச்சூழுல் நிரம்பிக் காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில யாழ் பல்கலைக் க…

  23. நீதி தேவதை சிலுவையில் அறையப்படலாம். அவள் அந்த நேரத்தில் பரம பிதாவே இவர்கள் தாம் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும் எனக் கூறமாட்டாள். அவள் உயிர்த் தெழும் போது பெரு நெருப்பாகக் கொழுந்து விட்டெரிந்து தீமைகளை அழிப்பாள் என்பது மட்டும் நிச்சயம். 1966 1967 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகை சமூகத்தையும் சமூகத்தில் இடம்பெறும் அநியாயங்களையும் துணிச்சலுடன் அழகு தமிழில் அடுக்கு மொழியில் காரசாரமாக விமர்சித்த காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இது அதிகமாக விற்பனையாகும் வார இதழாக இருந்தது மட்டுமன்றி இது எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்குமள…

    • 0 replies
    • 635 views
  24. பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் உயர் நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சட்ட வியாக்கியானமானது சட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேவேளை அது இதுவரை நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டமியற்றும் துறைக்கும் இடையில் நிலவி வந்த பிணக்கை அரசியல் நெருக்கடியாக மாற்றிவிட்டது என்றே தெரிகிறது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானது சட்டங்கள் அல்லவென்றும் எனவே அவற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நீதியரசர் ஒருவருக்கு எதிராக நீதி விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் வியாக்க…

    • 0 replies
    • 524 views
  25. Started by akootha,

    தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் தொடர்ச்சியாகவே பெரும்பான்மைச் சமூகத்தினரால் பேணப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த வகையில் முயற்சி எடுத்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் தலையிட்டுச் சீர்குலைப்பதற்கும் அரசு பின் நிற்பதில்லை. இராணுவமயமாக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழ் மக்கள் எப்போதும் அடக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதில் அரசு குறியாக இருக்கிறது. அவர்களது நாளாந்தக் கடமைகளில் இராணுவத் தலையீடுகளும் நெருக்கடிகளும் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஏதோ ஒரு வகையில் சாட்டுப்போக்குச் சொல்லி அரசு தமிழ் மக்கள் மீதான கெடுபிடியைத் தொடராகக் கைக்கொண்டு வருகிறது. அதன்மூலம் அவர்களது எழுச்சி, உணர்வ…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.