அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
பிறக்கப் போகும் அடுத்த ஆண்டில், மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருப்பது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் தான். வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், தமிழர்களின் அவலநிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல்கட்சிகளால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், எதையும் சமர்ப்பிக்க முடியாது என்ற போதும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, ஐ.நா மனித…
-
- 1 reply
- 797 views
-
-
இலங்கையை பொறுத்தமட்டில் 2012ஆம் ஆண்டு பொருளாதார நிலை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தது. 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக அமைந்திருக்கும் என பல தரப்பினரின் மூலம் எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், வருட நிறைவில் 6.8 வீத வளர்ச்சியே எய்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நாட்டில் நிலவிய வெவ்வேறான சூழ்நிலைகள், காலநிலை மாற்றம், அரசியல் சூழல், பங்குச்சந்தை நிலைவரம், நாணய மாற்றுக் கொள்கை போன்றவற்றுடன், சர்வதேச நாடுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அமையதியற்ற சூழ்நிலை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்களிப்பு செலுத்தும் துறைகளாக …
-
- 1 reply
- 758 views
-
-
இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்பது ருஷ்ய நாட்டில் ஜார் மன்னள் நடத்திய கொடுங்கோல் ஆட்சி கண்டு கொதித்தெழுந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுப்பிய அனல் கக்கும் கவிதை வரிகள். மனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து குமுறி இடித்த கொடியவர்களின் காட்டாட்சி பாரதியை மட்டுமல்ல ருஷ்யத் தொழிலாளி வர்க்க்த்தையே திரண்டெழ வைத்து மாபெரும் புரட்சியை வெடிக்க வைத்து ஜார் மன்னனையே அரியணையிலிருந்து தூக்கியெறியும் நிலையை உருவாக்கியதுடன் ஒரு புதிய சுதந்திர ஆட்சியையும் தோற்றுவித்தது. இலங்கையிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற வகையிலான ஒரு காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டதை அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. கடந்த மா…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 18 replies
- 1.9k views
-
-
மகிந்த சிந்தனை வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் இராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. * அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்தால் மோசடிக்கு இடம் ஏற்படும் * மாகாணசபை முறையை இந்தியா திணிக்கவில்லை *பண்டாரநாயக்க காலத்திலிருந்து விவாதிக்கப்பட்ட விடயம் அதிகாரப் பகிர்வு * மாகாண சபையை ஒழிப்பதால் சிங்கள முஸ்லிம் இளைஞர்களுக்கும் தவறான செய்தியாகிவிடும் * மகிந்த சிந்தனையில் அளித்த வாக்குதியை நிறைவேற்றுகஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் மக்களின் இறைமையின் செயற்பாடானது பிரிக்கப்பட்டுவிட்டது. அது நாடாளுமன்றத்துக்…
-
- 1 reply
- 565 views
-
-
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர். சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது. லசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளி…
-
- 0 replies
- 951 views
-
-
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் பற்றிய விவாதம் ஒன்றுக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அமெரிக்காவில் ஏற்படப்போகும் அரச நிர்வாக மாற்றங்களை இலங்கை அரசாங்கம் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெறுவதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக மிட் ரோம்னி வெற்றி பெற்றால், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்று அரசாங்கம் கருதியிருந்தது. ஒபாமா வெற்றி பெற்றதும், இலங்கை அரசாங்கத்துக்கு நாடி, நரம்புகள் தளர்ந்து போனது உண்மை. அடுத்து, ஒபாமாவின் இராஜாங்கத் திணைக்கள நியமனங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டன. …
-
- 1 reply
- 831 views
-
-
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு நடந்தது என்ன? மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் 27 டிசம்பர் 2012 மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில.... மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் வவுனியா பொது வைத்தியசாலை 2012–12–12 காலை 9.00 விடுதி இல 12, வவுனியா பொது வைத்தியசாலை. (மனநல மருத்துவர் எஸ். சிவதாஸின் இந்தக் கட்டுரை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது) (இதன் கீழ் உள்ள மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில... என்ற பகுதி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இப்போ இணைக்கப்பட்டுள்ளது.) வன்னியைச் சேர்ந்த 14 வயது பெண் ஒருத்தி மருத்துவவிடுதியிலிருந்து எனது கருத்திற்காக அனு…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களுக்கு என்ன தேவை? : சண் தவராஜா இந்தப் பகுதியில் இனியொரு… இன் பிரதான கருத்தியலுக்கு முழுமையாக உடன்பாடற்ற, முழுமையான தொடர்பற்ற அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்கள் பதியப்படுகின்றன. விவாதத்தை நோக்கமாகக் கொண்டு கருத்துக்களைச் செழுமைப்படுத்தும் நோக்கில் இப் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்குப் பரிகாரமாக ஏதோவொரு தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய சூழலில் சிறி லங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்தத் தீர்வு ஒப்புக்காகவேனும் வழங்கப்பட்டாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எப்பாடு பட்டேனும் அத்தகைய தீர்வு ஒன்றை வழங்காமல் …
-
- 0 replies
- 731 views
-
-
காணாத தேசத்திற்கு இல்லாத வழி : தங்கம் வன்னிப்பகுதியிலிருந்து 109 பெண்கள் இராணுவத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பான செய்தி பற்றி சிதறுசமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை ஊடகங்களில் இச்செய்தியை விமர்சிக்க முடியாத சூழலில் இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் நடைபெறுவது ஒருவகையில் ஆரோக்கியமானதே. தெற்காசிய நாடுகளையொத்த நிலையில் இலங்கையிலும் தந்தைவழிப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூக அமைப்பே காணப்படுவதாக நாம் இன்றும் கொள்ளவேண்டும். இச்சமூக அமைப்பில் பெண்கள் பத்னிகளாக, வீராங்கனைகளாக இன்னபிற புனைவுகளைக்குட்பட்டவர்களாகவோ அல்லது பரத்தையாகவோ, விபச்சாரிகள் போன்ற புனைவுகளுக்குட்பட்டவர்களாகவோ இருக்க …
-
- 0 replies
- 763 views
-
-
சீன - இந்திய - சிறிலங்கா உறவும் இந்திய மாக்கடலும்: தமிழ்நாட்டு தமிழரின் கைகளில்? [ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] சீன-இந்திய-சிறிலங்கா பூகோள மூலோபாய உறவுநிலையானது முக்கியமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கிலேயே தங்கியுள்ளது. இந்தியத் தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரணியாக உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட Foreign Policy Research Institute - FPRI தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள Mark J. Gabrielson, Joan Johnson-Freese ஆகிய இருவரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட…
-
- 2 replies
- 759 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு ஏன்? அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து அவர்களால் பணியாற்ற முடியவில்லை. சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே… கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி அவர்கள் வளர்க்கிறார்கள். பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள் கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்…
-
- 4 replies
- 1.3k views
-
-
விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம் ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான "ஃபிக்கி' பூரிக்கிறது. இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மே…
-
- 0 replies
- 747 views
-
-
நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு http://www.youtube.com/watch?v=xycN1kpUfgQ
-
- 2 replies
- 741 views
-
-
சிறீலங்காவின் யாழ் பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியுடன் கடந்த 21ஆம் திகதி யாழ் பல்கலைச் சமூகம் சந்திப்பொன்றை நடத்தியது யாவரும் அறிந்ததே. இக் கலந்துரையாடலில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட கட்டளை தளபதி அரும்பாடுபடுகின்றார் என்பது இதனூடாக அறியலாம். அரும்பாடு பட்டாவது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என இவர் நினைப்பது பகல் கனவாக அமையும். யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மாவீரர் தினத்தை கொண்டாட முனைந்தார்கள் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்படார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் விடுதலைப் புலிகளின…
-
- 1 reply
- 753 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியதை எப்படி குற்றமாக எடுத்துக்கொள்ள முடியும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது. வன்செயல் எதிலும் ஈடுபடாது அமைதியாக இடம்பெற்ற நினைவுகூரல் நிச்சயமாக பயங்கரவாதமாகாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் நால்வரையும் உடனடியாக விடுதலைசெய்யுமாறு இலங்கை அரசை அது கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் உடனடியாக நீதிம…
-
- 0 replies
- 719 views
-
-
உலக வரலாற்றில் இரத்தம் வடிக்கும் மனிதர்களாக ஈழத்தமிழர்கள் ! எத்தனை எத்தனை ஆண்டுகள் ஈழமக்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள் இந்த உலகை வழி நடத்துகின்றோம் என்னும் அனைத்துலக அரசியல் மேதாவிகள் என்ன செய்கிறார்களோ? ஏன் இன்னும் ஈழத்தமிழ் மக்களின் கண்ணீருடன் பொறுமை, உண்மைக்காக உழைப்பதாக சொல்லும் உலக மேதாவிகள் என்னதான் சொல்ல வருகின்றார்கள்? எம்மை என்ன செய்ய நினைக்கின்றது உலகம், இப்படியே அகதிகளாக எத்தனை காலம் அங்குமிங்கும் மனிதன் ஓடி அலைவது, ஈழத்து பெற்றோர் வெளிநாடுகளை நம்பியா தங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்? வெறும் வெள்ளிக்காசு தரும் சுக வாழ்வை எண்ணி அகதி அந்தஸ்த்து தேடி அலையும் ஓர் இனமாக ஈழத்தமிழினம் பிறரால் பார்க்கப்படுகின்றது அது முற்றிலும் அறிவீனமான ஆழப்பார்வை அற்றோர் …
-
- 0 replies
- 983 views
-
-
[1] முன்குறிப்புகள் இந்தப் பதிவுத்தொடருக்கு " தமிழர்களாய் ஒன்றுபடுவோம்" என்பது பிரதான தலைப்பாகும். தொடர இருக்கும் பதிவுகளுக்கு தனித்தனியான "துணைத்தலைப்புகளும் எண்களும்" தரப்படும். அப்பதிவுகளுக்கான "முன்குறிப்புகள்" இதுவாகும். பரந்துபட்ட பின்னணி கொண்டதாக இப்பதிவுகள் அமையும். முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு என்பது ஈழத்தமிழர்க்கு மட்டுமல்லாமல் உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு சோகமான பின்னடைவாகும். நாம் உண்மையான அரசியல்விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பின், அந்தக் கூட்டுஅனுபவத்திலிருந்து நாம் விலகிநிற்க முடியாது; விதிவிலக்குப் பெறமுடியாது. ஏனெனில் தமிழர்களின் பல்லாயிரக்- கணக்கான ஆண்டு வரலாற்றில் இத்த…
-
- 5 replies
- 1.6k views
-
-
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி? ஆக்கம்: இதயச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உரை, பல அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடி பிடித்ததை சரியென்று நியாயப்படுத்தி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டுமொரு சர்ச்சை அவரது நாடாளுமன்ற உரையால் கிளம்பியுள்ளது. தான் சொல்வது சரியென்பதில், எப்போதும் உறுதியாகவிருக்கும் அரசியல்வாதி அவர். புலிகளைத் திட்டித்தான், சிங்களத்தினதும், வல்லரசாளர்களினதும் ஆதரவினைப் பெறவேண்டுமென நினைத்தால் அதையும் செய்வார் அப்பெருமகன். ஆனால் அவர்களின் சொந்த நலன்கள், எமக்கான பிறப்புரிமையை அங்கீகரிக்காது என்பதுதான் நிஜம். ஆகவே ,இனிமேல்…
-
- 0 replies
- 591 views
-
-
ஐ.நாவில் 'அவதானிப்பு நாடு' அங்கீகாரம் பெற்றுள்ள பலஸ்தீனம்: ஒரு பார்வை ரூபன் சிவராஜா ஐக்கிய நாடுகள் அவையில் 'அவதானிப்பு நாடு' என்ற அங்கீகாரத்தினை இம்மாத ஆரம்பத்தில் பலஸ்தீனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளில் 138 நாடுகள் பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. ஐ.நாவில் முழுமையான உறுப்புரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான முயற்சிகளை பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் தலைவர் முகமட் அப்பாஸ் கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த…
-
- 0 replies
- 596 views
-
-
தாயகத்தில் சிங்களமும் பிராந்தியமும் சர்வதேசமும் செய்து வரும் நகர்வுகளின் அடிப்படையில் பார்த்தால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான ஏது நிலைகளே அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத போதும் மாற்று வழி இன்றி அதனைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால்.. (ஒருவேளை)... இன்றைய நிலவரப்படி.. எந்த அமைப்பு அதனைத் தொடர்வதை விரும்புவீர்கள்..??! கவனிக்கவும்.. இதில் ஒட்டுக்குழுக்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கம் எமக்கில்லை. ஒட்டுக்குழுக்கள் காட்டிக்கொடுப்புகள்.. மக்கள் விரோத நடவடிக்கைகள் என்று எல்லாவற்றையும் முழுமையாக கைவிட்டு இதய சுத்தியோடு செயற்பட்டு அளப்பரிய தியாகங்கள் புரிந்து குறைந்த அளவு அல்லது மக்களுக்கு பாதிப்பு வராத வகையில்…
-
- 33 replies
- 2.7k views
-
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நான்கு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக கடந்த ஜூன் முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இந்திய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவையெல்லாம் இந்தியாவுடன் தரைவழி எல்லைகளைக் கொண்ட நாடுகள் என்ற வகையில், தரைவழி எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள இராணுவத்தின் தளபதி என்ற வகையில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இலங்கையுடன் தரைவழி எல்லை எதையும…
-
- 1 reply
- 974 views
-
-
வடக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அபகரிப்புச் செய்யலாம். ஆனால் இந்த வழியில் எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது" என்கிறார் யாழ்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியற்துறை பேராசிரியர் ஒருவர். சண்டேலீடர் ஆங்கில வாரஇதழில் நிரஞ்சல்லா ஆரியசிங்கவும், கிரிசாந்தி கிறிஸ்தோப்பரும் இணைந்து எழுதியுள்ள செய்திக்கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ‘புதினப்பலகை‘க்காக இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி‘. சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளும் ஏழு மாதங்களும் கடந்த நிலையிலும் கூட வடக்கு கிழக்கில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு …
-
- 1 reply
- 746 views
-
-
"ராகுல் காந்தி என்னை விட வயதில் இளையவர். ஆனால், அவரை நான் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளேன்"- தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடைபெற்ற முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் செல்லபாண்டியனின் நூற்றாண்டு விழா பட திறப்பு விழாவில் இந்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆற்றிய உரை இது. தமிழக காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களும் சிதம்பரத்தின் இந்த அறிவிப்பில் திகைத்துப் போயிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் இருந்தாலும், இரு முக்கிய கோஷ்டிகள் உண்டு. ஒன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையிலான அணி. இன்னொன்று நிதி அமைச்சர் சிதம்பரத்தை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அணி. இந்த இரு அணித் தலைவர்கள் மட்டுமின்றி, சிதம்பரத்திற்கு "ஜென்ம விரோதி" போல் மாறிய …
-
- 3 replies
- 738 views
-
-
கடந்த புதன்கிழமை அலரிமாளிகையில் அமைச்சரவை கூட்டம் முறையாக ஆரம்பமாவதற்கு முன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பான விடயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அமைச்சர்கள் ஆராய்ந்தார்கள். சட்டத்தரணிகள் சங்கத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவிருந்தது தொடர்பாக அமைச்சர்கள் தம் கவனத்தை முதலில் செலுத்தினார்கள். குற்றப் பிரேரணையை எதிர்ப்பதற்கு மேற்கொண்டும் எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அந்தக் கூட்டத்தில் சட்டத்தரணிகள் ஆராய்ந்தார்கள். அதில் ஒரு தீர்மானம் புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை வரவேற்பதில்லை என்பதாகும். நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் வருமாறு: * பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொட…
-
- 1 reply
- 582 views
-