அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
க.வைத்திலிங்கம் கடந்த தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். உண்மைத் தன்மையுடனும் வெளிப்படையாகவும் அவர்கள் வாக்களித்திருந்தனர். யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுத்ததாக இல்லை. மக்கள் சுய விருப்பின் பேரில் வாக்களித்தனர். அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கக் கூடிய சூழ்நிலையம் காணப்பட்டது. கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் கொடுக்கப்பட்ட தீர்ப்பைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை, அவர்களதும் அவர்கள் தொடர்பாக வெளிவரும் சமூக வலைத்தளப் பதிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த தேர்தலுக்குப் பிறகு தமிழ் மக்களாகிய நாம் எங்கிருக்கிறோம்? எமது அரசியல் எதிர்காலம் என்ன? எம்மால் இழைக்கப்பட்ட தவறுகள் எவை? அவை எப்படி ஏற்பட்டன? அதற்கு யார் காரணம்? இழைத்த தவற…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
BY AMAL JAYASINGHE AFP-JIJI இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. தனது கதாநாயர்களாக சேகுவேராவையும் கார்ல்மார்க்சினையும் கருதும் அனுரகுமார திசநாயக்கவிற்கு நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள தனியார் வர்த்தக அமைப்பின் ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியால் சீற்றமடைந்த மக்களின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க பெற்றார். இலங்கை வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக தான் முன்வைத்து…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு லக்ஸ்மன் இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனெனில், அதன் நோக்கத்தை அடைவதில் உள்ள இதுவரையான இழுபாடுகளே அதற்குக் காரணமாகும். அந்த வகையில் தான் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசியம் எய்தவில்லை என்ற முடிவு கிடைக்கும். தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அதன் தோல்வி காரணமாகத்தான் ஆயுதப் போராட்…
-
- 0 replies
- 282 views
-
-
ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர் ஆகியிருக்கிறார். கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அதுவும் அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகி, பெரிய நெருக்கடிகள் இன்றி ஆட்சி செலுத்தினார். ஆனால், ஒபாமா போன்று ரிஷி சுனக்கால், நெருக்கடிகள் அற்ற ஆட்சியை கொண்டு செலுத்திவிட முடியாது. பிரித்தானியாவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், அவர் பிரதமர் பதவிக்கு வ…
-
- 0 replies
- 282 views
-
-
எஸ் எம் வரதராஜன் எனது மதிப்பிற்குரிய நண்பரும் கௌரவ அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள் பாராளுமன்றத்தில் எடுத்துள்ள படம் எனக்கு பல நினைவலைகளை வாசகர்களுடன் பகிரத் தூண்டியது . வீரகேசரி ஊடகவியலாளர் ஒருவரால் திரு மனோ கணேசன் அவர்கள் பிடிக்கப்பட்டுள்ள இப் படத்தில் அவரின் பின்னணியில் உள்ள சுவர் ஒன்றில் பல பிரமுகர்களின் படங்கள் தெரிவதைக் காணாலாம். பாராளுமன்றம் சென்றவர்களுக்கு இவை என்னவென்று தெரியும். நான் செய்தி சேகரிக்கப்பதற்காகாச் சென்றதில்லை . பல தடவை பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் (தகவல்/ ஊடகம்) பங்குபற்றச் சென்றிருக்கிறேன். இரண்டு அமைச்சர்கள் "மீடியா" அமைச்சர்களாக இருந்த வேளை சுயாதீன தொலைகாட்சி சார்பில் பங்குபற்றியுள்ளேன் . அந்நேரம் தொலைபேசியில் படம் எடுக்கும் வசதிகள…
-
- 0 replies
- 282 views
-
-
ஜெனீவா தீர்மானங்களின் காரணத்தை கையாளவேண்டியது அவசியம் Photo, Selvaraja Rajasegar கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்னென்றும் இல்லாத தோல்வையைச் சந்தித்தது. அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராக ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச கருத்தொருமிப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் தெரிவுசெய்யப்பட்ட 47 நாடுகளில் 7 நாடுகளின் ஆதரவை மாத்திரமே இலங்கையினால் பெறக்கூடியதாக இருந்தது. இது தற்போதைய அரசாங்கம் உட்பட வெவ்வேறு அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த இலங்கை மீதான மனித உரிமைகள் பேர…
-
- 0 replies
- 282 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 JUN, 2025 | 03:20 PM ஹரிகரன் 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். ருவாண்டாவின் வரலாறு, இனப்படுகொலையில் எதிர்கொண்ட அழிவுகள், அதற்குப் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து மிகவிரிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அந்த கட்டுரையை எழுதிய கல்லி அலெஸ், 1978 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் வசித்து வருகின்ற- இலங்கையரான தேயிலைத் தோட்டத் தொழிலதிபர். 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஜூவேனல் …
-
- 2 replies
- 282 views
- 1 follower
-
-
அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்நிலையை அமைச்சரவை மாற்றம் தணிக்கக் கூடிய சாத்தியம் கலாநிதி ஜெகான் பெரேரா கடந்தவாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அரசாங்கத்திற்குள் முக்கியமான பொறுப்புகள் கைமாறியிருக்கின்றன. எந்தவிதமான பிரச்சினையுமின்றி இணக்கமான முறையில் அமைச்சுப் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றமையும் மாற்றங்களுக்குள்ளானவர்கள் புதிய பொறுப்புகளை நல்லிணக்கத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான வரவுகளைத் தொந்தரவுக்குள்ளாக்கிக் கொண்டிருந்த பதற்ற நிலை இனிமேல் தணிந்து மேலும் கூடுதலான அளவுக்கு ப…
-
- 0 replies
- 282 views
-
-
தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும் யதீந்திரா நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைத்துத் தரப்பினருக்குமான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இப்படியொரு நெருக்கடி இலங்கையின் அரசியல் அவதானிகள் எவராலும் கணிக்கப்படாத ஒன்று. இலங்கையின் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வந்த அமெரிக்க இந்திய தரப்பினரிடம் கூட இவ்வாறானதொரு கணிப்பு இருந்திருக்குமென்பது சந்தேகமே. புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான ஊடகச் செய்திகளிலும் மகிந்த இரண்டாம் நிலையில் வரக் கூடுமென்றே கணிப்பிடப்படிருந்தது. ஆனால் இறுதியில் அனைவரது கணிப்புக்களும் பொய்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மகிந்த தனது கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்…
-
- 0 replies
- 282 views
-
-
தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால் கலாநிதி ஏ.எம். நவரட்ண பண்டார கடந்த 40 ஆண்டுகளில், உலகம் தேசியவாதம் மற்றும் உலகமயமாக்கலுடன் தொடர்புடைய பெறுமான முறைமை களுக்கு இடையே ஒரு பிளவுபட்ட உறவை அனுபவித்துள்ளது, அதனை சமூக விஞ்ஞானிகள் நவீன சகாப்தத்தின் இரண்டு வரையறுக்கும் அம்சங்களாக அடையாளம் கண்டுள்ளனர், இது கடந்த காலத்தில் முழுமையாக்கும் செயல்முறைகளை உருவாக்குகிறது. இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் – 2022 ஆம் ஆண்டு அரகலய (மக்கள் எழுச்சி) மற்றும் அரச அதிகாரத்தை வைத்திருப்பவராக தேசிய மக்கள் சக்தியின் (என் பி பின் ) எழுச்சி – இந்த உலகளாவிய வளர்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது. மேலே குறிப்பிடப்பட்ட மாறிவரும் உலகளாவி…
-
- 1 reply
- 281 views
-
-
பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து லக்ஸ்மன் தமது உரிமைகளுக்காகப் போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி, அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க அரசால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம் என்ற நிலைப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், “பயங்கரவாதமானது, அதன் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் நாடுகளினது சமுதாயத்தின் சமாதானத்துக்கும் பந்தோபஸ்துக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாதலாலும், அத்துடன் இலங்கையையும், அதன் மக்களையும், அவர்களின் ஆதனங்களையும் பயங்கரவாதச் செயல்களிலிருந்தும் தொடர்புபட்ட செயல்களிலிருந்தும் பாதுகாத்தல் இலங்கை அரசாங்கத்தின் முதன்ம…
-
- 0 replies
- 281 views
-
-
Factum சிறப்பு கண்ணோட்டம் : தாய்வான் – மேற்கு பசுபிக்கின் ஆபரணம் By Digital Desk 5 03 Sep, 2022 | 01:57 PM குசும் விஜேதிலக 1895ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது சீன-ஜப்பானிய யுத்தத்தைத் தொடர்ந்து தாய்வான் தீவினை கைவிட்ட குயிங் வம்சம், ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் முதலாவது குடியேற்றத்தை உருவாக்கியது. "ஜப்பானியமயமாக்கலின்" அனுகூலங்களை வெளிப்படுத்த, "மாதிரி" குடியேற்றத்தை உருவாக்க ஜப்பானியர்கள் திட்டமிட்டனர். வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார கட்டமைப்புகள் மற்றும் பொதுச் சுகாதார சிகிச்சை நிலையங்களின் வலையமைப்புகள் ஆகியன உருவாக்கப்பட்டன. கட்டாய ஆரம்பக் க…
-
- 0 replies
- 281 views
-
-
இனப்படுகொலையும் இரட்டைவேடமும்-பா.உதயன் அமெரிக்காவும் அதன் நண்பர்களும் அடுக்கடுக்காய் பொய் சொல்லுவதில் வல்லவர். அன்று ஒரு நாள் இராக்கில் இரசாயன குண்டுகள் இருப்பதாக சொன்னது போல் இப்போ இஸ்ரேல் போடவில்லை குண்டுகள் மருத்துவ மனையில் என்று மறுபடியும் பொய். இப்படி எத்தனை பொய்கள் உலகத்துக்கு தெரியும். அண்ணன் சொல்லி விட்டார் இனி அவர் தம்பிமாரும் தொடருவார்கள். நீதி நியாயம் எதுகும் இல்லா உலகமாகிவிட்டது. அண்மையில் நோர்வீய ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் நடை பயணம் போகும் போது காணமல் போய் விட்டான் போலீஸ் மக்கள் உட்பட அனைவரும் தேடினார்கள் நாம் எல்லோருமே அவன் உயிரோடு திரும்பி வரவேண்டும் என்றே மன்றாடினோம் ஆனால் துர்அதிஸ்டமாக அவர் இறந்து விட்டான். இது பெரும் அவலம் நோர…
-
- 0 replies
- 281 views
-
-
ஐநா பிரேரணையும் தமிழ்த்தரப்பின் பொறுப்பும்’ – பி.மாணிக்கவாசகம் 44 Views ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை தமிழ் மக்கள் எதிர்கொள்வது எப்படி, அதனை எவ்வாறு கையாளலாம் என்பது இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பொறுப்பு கூறும் விடயங்களிலும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் நீதி, சட்டவாட்சி, சிவில் நிர்வாக, ஜனநாயக நிலைமைகளிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் காரசாரமாக விபரித்திருந்தார். இதனால் அவருடைய அறிக்கை பரந்த அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. அரசாங்கம் உள்ளிட்ட பலதரப்பினருக்கு அது அதிர்ச்சியளிக்கத்தக்காக அமைந்திருந்தது. பாதிக்கப்பட்ட தரப்பினராகிய த…
-
- 0 replies
- 281 views
-
-
ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் Photo, Swissinfo ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9ஆவது தீர்மானம் இதுவாகும். இலங்கையின் சர்வதேச மதிப்புக்குப் பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படாதிருப்பதை உறுதிசெய்ய அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள்…
-
- 0 replies
- 281 views
-
-
ஈழத்தமிழரின் அமைதிக்கான பாதுகாப்பு அவர்கள் மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும் 12 Views “போர் மனித மனதிலேயே கட்டமைக்கப்படுவதால், அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் பிரகடனம். இந்த அமைதிக்கான பண்பாட்டை உருவாக்கத் தூண்டும் பிரகடனத்தில் அமைதி என்பது வெறுமனே போர் அற்ற நிலை மட்டுமல்ல நேரான அணுகுமுறையில் இயங்கியல் தன்மையான செயல் முறைகள் மூலமான, உரையாடல்கள் வழி, சிக்கலை ஓருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் ஊடாக விளங்கி, அதனைத் தீர்ப்பதற்கான கூட்டுறவுகளை வளர்க்கும் மனோநிலையை உருவாக்குதல் எனத் …
-
- 0 replies
- 280 views
-
-
ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை November 5, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தங்களது தவறான ஆட்சிமுறையினதும் பொருளாதார முகாமைத்துவத்தினதும் விளைவாக தோன்றிய முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் ராஜபக்சாக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தன்னந்தனியான உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பைக் கையளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது வழமையான அரசியல் போக்கில் இருந்து ஒரு விலகலாகும். அவ்வாறு அடிக்கடி நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி அண்மைய எதிர்காலத்…
-
- 0 replies
- 280 views
-
-
அரசுகளின் நீதி - நிலாந்தன்:- 20 செப்டம்பர் 2015 அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலக பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில் மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தலைவர்கள…
-
- 0 replies
- 280 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-11
-
- 0 replies
- 280 views
-
-
நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும். மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் அல்லாடுகையில், முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்படைத் தளத்துக்காக மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது, மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்ற பின்னர், இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவல்ல. இது, இறுதி நிகழ்வும் அல்ல! இலங்கை அரசாங்கம் எதிர்கொ…
-
- 0 replies
- 280 views
-
-
21’ எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்; துரோகங்கள்! நஜீப் பின் கபூர் “இங்கு அரசியல் மற்றும் கட்சி யாப்புக்கள்; தலைவர்கள் தன்னலத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன” பொதுவாக நாடுகளின் அரசியல் யாப்பு என்பது அந்த நாட்டு மக்களினதும் தேச நலனையும் மையமாக வைத்து வடிவமைக்கப்படுகின்ற வழிகாட்டலாகத்தான் இருக்க வேண்டும். இதற்குச் சமாந்திரமான இன்னும் பல விளக்கங்கள் சொல்லப்படலாம். அவை என்ன வார்த்தைகளில் உச்சரிக்கப்பட்டாலும் பொதுவான கருத்து இப்படியாகத்தான் அமைய முடியும். அரசர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் அவர்களின் விருப்பு-வெறுப்புக்கு ஏற்றவாறு சட்டங்கள் நாட்டில் அமுலில்…
-
- 0 replies
- 280 views
-
-
கச்சத்தீவில் பறிபோகும் உரிமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாகாது! கச்சத்தீவு புதிய அந்தோணியார் ஆலயம் | படம்: மயூரப்பிரியன் ஒப்பந்த ஷரத்துகள், கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம்பரிய உரிமைகளை உறுதிசெய்பவை கச்சத்தீவு அந்தோணியார், தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்! கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் திறப்பு விழா (டிசம்பர் 23) இன்று நடக்கிறது. ரூ.1 கோடியில் புதிய ஆலயத்தைக் கட்டியிருக்கிறது இலங்கைக் …
-
- 0 replies
- 280 views
-
-
இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்பதும்தான் - நிலாந்தன்:- இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது துக்கம் அனுஷ;டிப்பது மட்டுமல்ல அந்த கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் கோபத்தையும் ஆக்க சக்தியாக மாற்றுவதும்தான். அதை இவ்வாறு ஓர் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதென்றால் அந்தத் துக்கம் அல்லது இழப்பு ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்தும் அதை ஏன் தடுக்க முடியவில்லை என்பதிலிருந்தும் படிப்பினைகளைப் பெறுவதுதான். அதன் மூலம்தான் அவ்வாறான துக்கம் அல்லது பேரிழப்பு இனிமேலும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு இறந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்பது என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இரு பகுதிகளைக் கொண்டது. …
-
- 1 reply
- 280 views
-
-
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன் நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி. இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழ…
-
-
- 1 reply
- 280 views
-
-
பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள் பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும் இன்று தாம் சார்ந்த கட்சியின் படுதோல்விக்கு நகைக்கத்தகு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிய ஊடகவியலாளர்களில் நிலாந்தன் முதன்மையானவர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர் எழுதிய “தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது?” என்ற கட்டுரையில் தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 280 views
-