அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
அரசுகளின் நீதி - நிலாந்தன்:- 20 செப்டம்பர் 2015 அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலக பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில் மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தலைவர்கள…
-
- 0 replies
- 284 views
-
-
Published By: DIGITAL DESK 2 10 AUG, 2025 | 04:56 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் கடந்த மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா புதிய அரசியமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுக்கின்ற, முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கேள்விகளை தொடுத்திருந்தார். அந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது ஆட்சி ந…
-
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
அநுரகுமார முன்னிலையில் 13 வது திருத்தம் பற்றி பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி? December 23, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் கடந்த வருடம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயத்தில் இருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? இலங்கையின் ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு தங்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக புதுடில்லிக்கு செல்வது ஒரு சம்பிரதாயமாக இருந்துவருகிறது. அதன் பிரகாரம் திசாநாயக்கவும் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார். மூன்றாவது தடைவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான உ…
-
- 0 replies
- 284 views
-
-
நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும். மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் அல்லாடுகையில், முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்படைத் தளத்துக்காக மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது, மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்ற பின்னர், இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவல்ல. இது, இறுதி நிகழ்வும் அல்ல! இலங்கை அரசாங்கம் எதிர்கொ…
-
- 0 replies
- 284 views
-
-
'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism) 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது. இக்கவிதைகள் இலங்கையில் இன்னும்…
-
- 0 replies
- 284 views
-
-
ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 24 உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல! ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. இதேபோல, ஆபிரிக்காவெங்கும் அதிவலதுசாரித்துவத்தால் உந்தப்பட்டு, பல வன்முறைகளும் கொலைகளும் நடந்தேறியுள்ளன. ஆபிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு, சில வழிகளில் அதிவலதுசாரித்துவத்துக்கு வாய்ப்பானதாக உள்ளது. ஆபிரிக்கக் கண்டமானது,…
-
- 0 replies
- 284 views
-
-
முரண்பாடுகளும் குழப்பங்களும் கூட்டமைப்பினுள் புதியவையல்ல! "தொடர்ந்தும் அரசிய லில் ஈடுபடுவதற்கான முகாந்திரங்களை விக்னேஸ்வரன் கொண்டிருக்கிறாரா” என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும். விக்னேஸ்வரனின் அபிமானிகளும் அவரை ஆதரிப்போரும் எத்தகைய கேள்விகளுக்கும் அப்பால் வைத்தே விக்னேஸ்வரனை நோக்குகின்றனர்.இதனால்தான் “சரியோ பிழையோ அவர்தான் எங்களுக்கு வேண்டும். அவரால்தான் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத…
-
- 0 replies
- 284 views
-
-
பொய்களை அறிக்கையிடுவது எப்படி? இப்பத்தியின் தலைப்பைப் பார்த்ததும், ஊடகவியலாளர்களுக்கான செயல்நூல் ஒன்றிலிருந்து, சில பந்திகளைத் தவறாகப் போட்டிருக்கிறார்கள் என்று, தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். “பொய்களை அறிக்கையிடுவது எப்படி? பொய்களைத் தவிர்த்து வாசிப்பது எப்படி?” என்பது தான், இத்தலைப்பின் நீண்ட வடிவம். அத்தோடு, சாதாரண வாசகர்களினதும் பொதுமக்களினதும் பங்களிப்பு இல்லாமல், மேற்படி வினாக்களுக்கான விடைகளைக் காண்பதென்பது சாத்தியப்படாது. பொய்களைப் பற்றி எதற்காகத் திடீரென ஆய்வு என்றால், 2017ஆம் ஆண்டை, பொய்களின் ஆண்டு என்றே வர்ணிக்கலாம். எங்கு பார்த்தாலும் பொய்களும் “போலிச் செய்தி” என்ற கூச்சல்களும் நிறைந்த ஆண்டாக, இவ்வாண்டு அமைந்தி…
-
- 0 replies
- 284 views
-
-
-
- 0 replies
- 284 views
-
-
ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் Photo, Swissinfo ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9ஆவது தீர்மானம் இதுவாகும். இலங்கையின் சர்வதேச மதிப்புக்குப் பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படாதிருப்பதை உறுதிசெய்ய அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள்…
-
- 0 replies
- 284 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ் மக்களின் தெரிவு யார்? முத்துக்குமார் பாராளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறித்தாகிவிட்டது. வருமா? வராதா? எனப் பல்வேறு விவாதங்களும் இடம்பெற்ற சூழலில் தேர்தல் வந்துவிட்டது. மைத்திரி அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு தெரிவு மைத்திரிக்கு இருக்கவில்லை. மகிந்தரின் மீள் எழுச்சியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் மைத்திரி தேர்தலைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போட்டார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக மகிந்தர் ஒவ்வொரு நாளும் பலம்பெற்று வருகையில் மேலும் தாமதிப்பது பயன்தராது எனத் தெரிந்து கொண்டார். தென் இலங்கையில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. மகிந்தர் அணி எவ்வளவோ முயன்றும் பிரதமர் வேட்பா…
-
- 0 replies
- 283 views
-
-
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது. வழமைபோல குழப்பம். தேர்தல் முடிவுகளில் இருந்து அந்த கட்சி கற்றுக்கொள்ளவில்லை என்பதனை அந்த செயற்குழு கூட்டம் நிரூபித்தது. இது ஒரு புறமிருக்க, அந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் நடந்தவைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். “கடந்த காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு…. அதனைத் தொடர்ந்து கோத…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கை விடயத்தில்... கேள்விக்குள்ளாகும், சீனாவின் கொள்கைகள்? -யே.பெனிற்லஸ்- 019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வந்தபோது, பீஜிங் மகிழ்ச்சியடைந்தது. சில வருடங்களுக்கு முன்னர், புதிய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த, தனது நாட்டில் சீனச் செல்வாக்கில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதில் முக்கிய நகர்வுகளைச் செய்திருந்தார். பீஜிங்கின் கனவுத்திட்டமான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் (பி.ஆர்.ஐ) ஒரு பகுதியாக கண்கவர் உட்கட்டமைப்புத்திட்டங்களைச் செயற்படுத்தியது. இந்த முயற்சிகள் இலங்கையை இந்தியப் பெருங்கடலில் பீஜிங்கிற்கான மூலோபாய புறக்காவல் நிலையமாக மாற்றியுள்ளன. புவியியல் ரீதியாக, இலங்கை சீனாவிற்கு மலாக்கா ஜலசந்திக்கு…
-
- 0 replies
- 283 views
-
-
ரூபன் சிவராஜா ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகும் என்மனார் புலவர்’ (தொல். 158) ‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது. அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157) என்கிறது தொல்காப்பியம். சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
ந.ஜெயகாந்தன் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்றும், அந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்றும் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளை விடவும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமை முற்றிலும் வித்தியாசமானது என்பதனால் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது ஜனாதிபதித் தேர்தல் முழுநாடும் ஒரே தேர்தல் மாவட்டம் போன்று கணிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவர். அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
கச்சத்தீவில் பறிபோகும் உரிமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாகாது! கச்சத்தீவு புதிய அந்தோணியார் ஆலயம் | படம்: மயூரப்பிரியன் ஒப்பந்த ஷரத்துகள், கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம்பரிய உரிமைகளை உறுதிசெய்பவை கச்சத்தீவு அந்தோணியார், தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்! கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் திறப்பு விழா (டிசம்பர் 23) இன்று நடக்கிறது. ரூ.1 கோடியில் புதிய ஆலயத்தைக் கட்டியிருக்கிறது இலங்கைக் …
-
- 0 replies
- 283 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை காணாமல் ஆக்குவது ? நிலாந்தன்! கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அனைத்துலக சிறுவர் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் ஐநா அலுவலகத்திற்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் ஒரு கவனஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்கள். காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலருடைய ஒளிப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் ஐநா அலுவலகத்தின் வாசலில் நின்றார்கள். சிறுவர் தினம் எனப்படுவது ஒரு கருப்புநாள் என்று அவர் தெரிவித்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவரும் ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சமூக முடக்கம் நீக்கப்பட்ட அன்றைய தினமே ஐநா அலுவலகத்துக்கு முன்பு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.…
-
- 0 replies
- 283 views
-
-
19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன? - யதீந்திரா - on May 2, 2015 படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கக் கூடிய ஒன்றே. ஆனால், வெளியில் வியப்பாக பார்க்கப்படுவது போன்று அவ்வளவு எளிதாக மேற்படி திருத்தம் நிறைவேறிவிடவில்லை. பல்வேறு சமரசங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், ஒரு சில முன்னேற்றகரமான விடயங்களும் மேற்படி சட்டத்திருத்தின் ம…
-
- 0 replies
- 283 views
-
-
நம்பிக்கை வீணடிக்கப்படுமா? இனப்பிரச்சினைக்கு எத்த கைய தீர்வு காணப்படும் என்பது தெளிவில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் களை வீழ்த்துகின்ற தந்திரோ பாய ரீதியில் அரசாங்கம் செயற் பட முற்பட்டிருக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் - இரா ஜதந்திர வியூகங்களின் மூலம் அரசியல் ரீதியாக அழுத்தங் களைப் பிரயோகித்து, தான் விரும்புகின்ற முறையில் ஓர் அரசியல் தீர்வை வழங்கி இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்ற போக்கில் அர சாங்கம் செயற்பட முற்பட்டிருப் பதை உணர முடிகின்றது. நாட்டில் உறுதியான அரசியல் போக்கை ஏற்படுத்தி சமாதானத்தையும், ஐக்கி…
-
- 0 replies
- 283 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-08#page-9
-
- 0 replies
- 283 views
-
-
சிங்களவர்களும் எற்றுக்கொள்ளாத தலைமை | ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் இராகுல தேரர் | Akalankam | IBC நன்றி - யூரூப்
-
- 0 replies
- 283 views
-
-
மலையகம் 200: இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக செயற்பட்டாரா ஜீ.ஜீ ? என்.கே அஷோக்பரன் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின் கீழ், பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதில் அரச, மற்றும் அரச சாரா நிகழ்வுகள் எல்லாம் உள்ளடக்கம். ‘இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு’ என்று மலையக மக்கள் தொடர்ந்து விளிக்கப்பட்டாலும், அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தபாடில்லை. இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை எத்தனை காலத்துக்கு இந்த நாடும், நாட்டு மக்களும் சகித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்? நிற்க! இந்த நாட்டின் ‘குடிமக்கள்’ என்று குறிப்பிடும் போது, இந்நா…
-
- 0 replies
- 283 views
-
-
ராமர் கோயிலுக்கு... சீதா எலியவிலிருந்து, ஒரு கல்? நிலாந்தன். தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை நோக்கியும் மேற்கு நாடுகளை நோக்கியும் புதிய காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். அவ்வாறான புதிய காய்நகர்த்தல்களின் பின்னணியில் வெளிவந்த மிலிந்த மொரகொட தலைமையிலான ஒரு குழு வினரால் தயாரிக்கப்பட்ட ஒன்றிணைந்த மூலோபாயத் திட்டத்தை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். மிலிந்த மொறகொட இலங்கைக்கான இந்தியாவின் தூதுவராக விரைவில் பதவி ஏற்கவிருக்கிறார். அவர் இந்த வாரம் பதவியேற்பார் என்று முன்பு கூறப்பட்டது. எனினும் அது சில கிழமைகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. …
-
- 0 replies
- 283 views
-
-
ஈழத்தமிழரின் அமைதிக்கான பாதுகாப்பு அவர்கள் மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும் 12 Views “போர் மனித மனதிலேயே கட்டமைக்கப்படுவதால், அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் பிரகடனம். இந்த அமைதிக்கான பண்பாட்டை உருவாக்கத் தூண்டும் பிரகடனத்தில் அமைதி என்பது வெறுமனே போர் அற்ற நிலை மட்டுமல்ல நேரான அணுகுமுறையில் இயங்கியல் தன்மையான செயல் முறைகள் மூலமான, உரையாடல்கள் வழி, சிக்கலை ஓருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் ஊடாக விளங்கி, அதனைத் தீர்ப்பதற்கான கூட்டுறவுகளை வளர்க்கும் மனோநிலையை உருவாக்குதல் எனத் …
-
- 0 replies
- 282 views
-
-
Courtesy: I.V. Mahasenan கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர…
-
- 0 replies
- 282 views
-