Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாகாணத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் அணிதிரளுங்கள்; சுரேஷ் பிறேமச்சந்திரன் 6 Views மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படுகின்றது. இந்தப் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிறேமச்சந்திரன் அறைகூவல் விடுத்திருக்கிறார். மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்தல் என்ற போர்வையில் மத்திய அரசு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றிவருகின்றது. இந்தப் போக்கு கண்டனத்திற்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்று தெரிவித்துள்ள சுரேஷ் பிறேமச்சந்திரன் அரசின…

  2. எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் April 20, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களின…

  3. நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில் May 8, 2021 139 Views வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம், நினைவுச் சின்னங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத் தமிழ்த் தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின் வெறுமைத் தன்மை திட்டமிட்டு தக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதை யாரும் அறியாமல் இல்லை. முள்ளிவாய்க்காலில் உள்ள உருவச் சிலையும் ஒரு கூட்டு அழிவின் படிவமாக உள்வாங்கப்படவில்லை. இனப் படுகொலைச் சொல…

  4. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று நம்பின. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகால நடைமுறையின் பின்னான அனுபவம் அதற்கு எதிர்மாறான பதிலையே தந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு அரசியல் கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல், சிங்கள-பௌத்த அரசியலின் பொறிமுறையைப் புரிந்து கொள்ளாமல் மேலேழுந்தவாரியாக ஆட்சி மாற்றத்தின் மூலம் எல்லாவற்றையும் கையாண்டுவிடலாம் என்று எண்ணியமை முற்றிலும் தவறாக முடிந்துள்ளது. இலங்கையில் மாறி மாறி ஆ…

    • 0 replies
    • 276 views
  5. திசராணி குணசேகர “மழையைத் தேடுகிறேன் மழையைத் தேடுகிறேன்." – கில் ஸ்கொ ட்-ஹே ர ன் (அமெரிக்காவில் குளிர்காலம்) ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களவர்கள் அல்லாத இலங்கையர்களிடம் விண்ணப்பிக்க முடியுமா? தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து உலுக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை பாராளுமன்றத் தேர்தல் காலமென இந்த வாரம், நிறுத்தியிருந்தது. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பல கொடுப்பனவுகளை நிறுத்தி…

  6. இன்றைய நெருக்கடி: கல்லுளிமங்கன்களுடன் காலம் கழித்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த பல வாரங்களாக எழுதிவந்த ‘ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை’ தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, சமகால நெருக்கடிகளின் பல்பரிமாணம் தொடர்பாக, இப்பந்தி அலசுகிறது. கடந்த ஒருவார காலத்துக்குள், இலங்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடியை, வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது, முழுமையான ஒரு பார்வையாகாது. இது, நான்கு நெருக்கடிகளின் கூட்டு விளைவு. முதலாவது, அரசியல் நெருக்கடி; இரண்டாவது, ஆட்சியியல் - நிர்வாக நெருக்கடி; மூன்றாவது, பொருளாதார நெருக்கடி; நான்காவது, சமூக நெருக்கடி. ஓன்றோடொன்று பின்னிப்பிணைந்த இந்த நெருக்கடி…

  7.  தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போரின் பின்பான அமைதி நிரந்தரமானது என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இல்லை. போரின் பின்பான அமைதி ஜனநாயகத்தை நோக்கி நகர்வது போல் தோன்றினும் அதன் திசை சர்வாதிகாரத்தை நோக்கியதாகலாம். அமைதியை உருவாக்க வழியமைத்த போர், சர்வாதிகாரக் கூறுகளைத் தன்னுள் மறைத்துள்ளது. போரின் போது போர்ச் செய்திகளே கவனம் பெறுவதால், சர்வாதிகாரச் செயற்பாடுகள் கவனம் பெறுவதில்லை. அமைதி என்பது யாருக்கானது என்ற கேள்வி எழும் போது, சர்வாதிகாரம் பற்றிய கேள்வியும் கூட எழும். சமாதானம் போரினும் கொடியதாகலாம் என வரலாறு எமக்குப் பன்முறை உணர்த்தி…

  8. மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான் November 26, 2024 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும் என்பதற்காகவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.அதில் ஆயுதப் போராட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது. இந்த நாட்டில் தமிழர்கள் சுயகௌர வத்துடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ வேண்டிய வயதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய் திருக்கின்றார்கள்.தன் இனம் தன்…

  9. ரணிலின் நேசக்கரம் குறித்து சந்தேகிக்கும் தமிழ் கட்சிகள் By NANTHINI 18 NOV, 2022 | 04:33 PM (மீரா ஸ்ரீனிவாசன்) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ 10) பாராளுமன்றத்தில் தமிழ் கட்சிகளுக்கு நேசக்கரம் நீட்டி, இவ்வாரம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்ததுடன், அடுத்த வருடம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு (பெப்ரவரி 4) முன்னதாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணப்போவதாகவும் உறுதியளித்தார். ஆனால், அவரின் அழைப்பு குறித்து தமிழ் அரசியல்வாதிகள் பெருமளவுக்கு ஐயுறவு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கான திகதியும் அறிவிக்கப்படவில்லை.…

  10. பேச்சுவார்தைக்குப் போதல் – நிலாந்தன். “பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16–17 ஹவானாவில் நடைபெற்றது.அதில் Stjepan Mesić பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார்.அவர் கூறியது ஒரு குரேஷியா யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழ் யதார்த்தம் அதுவல்ல. தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சிங்களத் தரப்போடு பேசி வருகிறார்கள். கடந்த நூற்றாண்டின் முற்கூறில் தொடங்கி இந்த நூற்றாண்டின் முற்கூறு வரையிலுமான ஒரு நூற்றாண்டு கால அனுபவம் அது.இதில் ஆகப் பிந்திய அனுபவம் 2018 ஆம் ஆண்டு மைத்திரிப…

  11. ரஸ்யா மீதான தாக்குதல் போரை மாற்றுமா? | அரசியல் களம் |போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 276 views
  12. இடைக்கால, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பும்... "சிஸ்ரம் சேஞ்சும்" – நிலாந்தன். இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும் தவிர, டலஸ் அழகப் பெரும,சரத் பொன்சேகா,அனுரகுமர,அனுரா பிரியதர்சன யாப்பா போன்றவர்களும் போட்டியிடுவதில் நாட்டத்தோடு காணப்படுகிறார்கள். சம்பிக்க ரணவக்கவிற்கும் அந்த ஆசை இருப்பதாக கருதப்படுகிறது ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராஜபக்சக்களை அவர் பாதுகாக்கிறார்.எனவே ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாப்பார்கள். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும். ஆனால் இங்கே உள்ள பிரச்ச…

  13. மனித உரிமைகள் பேரவை, ஈஸ்டர் தாக்குதல், இலங்கை நிலை மற்றும் பல சமகால அரசியல் நகர்வுகள் குறித்து எம். ஏ. சுமந்திரன் கலந்துரையாடியிருந்தார்.

  14. சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்யும் யோசனையும் அதிலுள்ள பேராபத்தும் - யதீந்திரா யாழ் வடமாராட்சி மீனவர்கள் சம்மேளணம் அண்மையில் தீன்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது. அதாவது, சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் யோசனையை கைவிடுங்கள். அதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அத்துடன் காலப்போக்கில் எங்களுடைய உள்ளுர் மீன்பிடியே இல்லாமல் போய்விடும். சீனா அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித் துறையின் மீது அதிக ஈடுபாட்டை காண்பித்துவருகின்றது. பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் தொழில்களை இழந்திருந்த சந்தர்ப்பங்களில், மீனவர்களுக்கு உலர் உணவுகளை வழங்கியது அத்துடன், இலவசமாக டிசல் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈட…

  15. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை குறித்து ஒரு மீள்பார்வை Veeragathy Thanabalasingham on October 3, 2022 Photo, AFP எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அதில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய பிறகு லண்டனில் இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நெவில் டி சில்வா அவருடன் கலந்துரையாடியபோது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிம…

  16. அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது… Veeragathy Thanabalasingham on May 17, 2023 Photo, AFP, Saudigazette இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக் காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக்கூட்டத்தில் இணைய வழியாக உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணக்கூடிய அரசியல் செயற்திட்டம் ஒன்று வகுக்கப்படும் என்றும் இவ…

  17. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அநுரகுமார அரசின் தடுமாற்றம் – அகிலன் December 8, 2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னா் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்று தடவைகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்துத் தரப்பி னராலும் வெறுக்கப்படும் அந்த சட்டம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட, இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவா்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களுக்குள் அதிகரித்துள்ளது. எதிா்க்கட்சியாக இருந்து எதிா்ப்பு அரசிய லைச் செய்யும் போது சொல்பவை அனைத்தையும் அதிகாரத்துக்கு வந்தால் செய்ய முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பயங்கரவாதத் தடைச் சட்…

  18. மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா? யதீந்திரா தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, தாங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் ஆட்டு மந்தைகள் போல் தலையை ஆட்டிக் கொண்டிருப்பர். எனவே தங்களால் மக்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியுமென்றே அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. சம்பந்தன் முன்னைய தேர்தல்களின் போது எதைச் சொன்னாரோ அதையே தற்போதும் சொல்லிவருகிறார். மக்கள் சுயநிர்ணய உரிமையை வ…

  19. சர்வதேச அவதானிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும் நியூயோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி தற்போது ஜனாதிபதி சர்வதேசத்திடம் நிதானமான மெதுவான பயணத்துக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டாகும்போது முன்னேற்றத்தை வெ ளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரி‍மை பேரவை வலியுறுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு தீர்க்கமானதாகவே அமையப்போகின்றது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் அமெ­ரிக்கா வந்­துள்ள நிலையில் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய…

  20. நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார், கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது. ”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிக…

  21. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் …

  22. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள் Veeragathy Thanabalasingham on August 17, 2023 Photo, THE TIMES OF INDIA இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில தடவைகள் குறிப்பிட்டிருந்தோம். கடந்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வைக் காணப்போவதாகக் கூறிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப…

  23. சம்பந்தனின் விருப்பில் ஹக்கீம் பாடிய தாலாட்டு! தமிழ் மக்களை 'கட்டாய சுய உறக்கத்துக்குள்' வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல் உரிமைப் போராட்டங்களில் மூர்க்கமாக ஈடுபட்ட தரப்பான தமிழ் மக்களை உறக்க நிலையில் வைத்திருப்பதன் மூலம், போராட்ட குணத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் நீர்த்துப் போகச் செய்யலாம் என்பது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் எதிர்பார்ப்பு. அதற்காகவே, தமிழ் மக்களை நோக்கி அபசுரங்களுடனான தாலாட்டுக்கள் தொடர்ச்சியாகப் பாடப்படுகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மறைந்த முருகேசு சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தின நிகழ்வு கரவெட்டியில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. அங்கு நி…

  24. ஏர் இந்தியா பங்குகளை விற்க, அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்தபட்ச விற்பனை விலையாக அரசு தீர்மானித்துள்ளதாகவும், யாருக்கு விற்பது என்பது குறித்து அரசு இறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஐம்பது விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக டாட்டா குழுமம், ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் ஆகிய இருவரும் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1242095

  25. Published By: VISHNU 19 DEC, 2023 | 10:52 AM போ . இராஜரெட்ணம் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இளைஞர்கள் பலரை வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல நிர்பந்தித்துள்ளது. இந்த போக்கு தொடர்பில் நாம் சற்று விரிவாகப் பார்ப்போமானால், இளம் இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, சிறந்த பொருளாதார வாய்ப்புகளின் கவர்ச்சியாகும். பல வளர்ந்த நாடுகள், உள்நாட்டில் கிடைப்பதை விட அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. தகவல் தொழிநுட்பம், நிர்மானம் மற்றும் நிதி போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.