Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத்தினால் தமிழகத்தில் நிகழும் தீமைகள் – பாஸ்கர் இலங்கையிலும், இந்தியப் பெருங் கடலைச் சார்ந்தும் சீனாவின் ஆதிக்கம் கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக ஓங்கி வருவது நமக்குத் தெரிந்ததே. குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஆயுதப் போரிற்குப் பின் தமிழர்களின் இருப்பிடமும், அவர்களின் அரசியல் மற்றும் அதிகாரமும் சிங்கள அரசாங்கத்தின் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அதனையடுத்து சீனா, தன்னுடைய ஆதிக்கத்தைப் பொருளாதார ரீதியாகவும், கட்டுமானப் பணிகள் ஊடாகவும் தனது நகர்வுகளை இலங்கையில் முன்னெடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் தான் அம்பாந்தோட்டைத் துறை முகம், கொழும்புத் துறைமுக நகரம், வடக்கில் உல்…

  2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு ஐநாவில் ஒரு குரல் | லீலாதேவி ஆனந்த நடராஜா! "இந்த அரசாங்கங்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பி சர்வதேசம் மீண்டும் மீண்டும் காலத்தை கொடுத்துகொண்டும் உள்ளக விசாரணைக்கு வலுச் சேர்த்துக்கொண்டும் இருக்கிறது." - CMR வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் லீலாதேவி ஆனந்த நடராஜா Sept 12 ஆரம்பமாகி October 7வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்றிருக்கும் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் திருமதி.லீலாதேவி ஆனந்த நடராஜா அவர்களுடனான நேர்காணல்.

  3. மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை நவரஞ்சினி நடராஜா மற்றும் தவச்செல்வி [ig=http://maatram.org/wp-content/uploads/2015/05/IMG_7155-800x365.jpg] படம் | Maatram Flickr கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது. நீதிமன்றக் கட்டடத்தைத் தாண்டிய போதே வழமைக்கு மாறான இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக இருந்தது. இராணுவ மயமான யாழ்ப்பாணக் கோட்டை, காலனித்துவ கால…

  4. கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு Veeragathy Thanabalasingham on July 23, 2023 Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்குப் பிறகு இந்த வாரத்துடன் நான்கு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தல…

  5. "இனவாதம்" என்ற வைரசை வைத்துக் கொண்டு... கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்?? பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. அதனால்தான், அது கடனை அடைக்க கடன்வாங்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் விளைவாகவே அது சீனாவிடம் நெருங்கிச் சென்றது. இப்போது சீனாவின் முதலீடுகளாகக் காணப்படும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்ற பல விடயங்களை இந்தியா உட்பட ஏனைய நாடுகளுக்குத் தருவதற்கு சிறீலங்கா தயாராகக் காணப்பட்டது. ஆனால், அந்த முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா போன்ற நாடுகள் தயாராக இல்லாத ஒரு பின்னணியில்தான் சீனா அங்கே முதலீடு செய்தது. எனவே,…

  6. முற்றுகைக்குள் திருகோணமலை இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைத்த நிலஅபகரிப்புகள் ஓக்லாண்ட் நிறுவகம் - தமிழில் ரஜீபன் சிங்கள அரசாங்கம் வடக்குகிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் தாயகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்ந்தும் விஸ்தரிக்கின்றது. 15 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும், இந்த பகுதிகள் பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன. இந்த நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பை தீவிரப்படுத்துகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களை குட…

  7. சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: பின்னணியும் எதிர்பார்ப்புகளும் – பி.மாணிக்கவாசகம் December 27, 2021 சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: இலங்கைக்கான சீனத் தூதுவர் இந்த வருடத்தின் (2021) இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட 3 நாள் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த வருடத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த யாழ்ப்பாண விஜயம் அதி முக்கியத்துவம் மிக்கதாகவும், இலங்கையின் போக்கில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி இட்டிருப்பதாகவும் அமைகின்றது. சீனாவின் எந்தவொரு நடவடிக்கையும் தன்னலம் மிகுந்ததாகவும் தனது வல்லரசுப் போக்கை நிரந்தரமாக நிலை நிறுத்து தற்காகவுமே அமைந்திருக்கும். சீனாவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவர் களுக்கு அதன் இந்…

  8. புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரம் சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா தேச நலன் என்ற போர்வையில் ஈழத்தமிழர் விவகாரத்தை ஓரக் கண்ணால் பார்க்கும் டில்லி ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரசியாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஆனால் இதுவரையும் சீனா ரசியாவுக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்காத சூழலில், ரசியாவை ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் முன்னிலையில் தனித்துவம் மிக்கதாகக் காண்பிக்கவே சீனா முற்படுகின்றது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உலக அரசியல் …

    • 0 replies
    • 254 views
  9. உண்மையையும் உறவையும் தேடுவோரின் உள்ளக்குமுறல் நாட்டின் தெற்குப் பகுதியின்மீது, சமீபத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய பாரிய இழப்புகளின் அதிர்வு அலைகளும் கவலைகளும் இன்னமும் தொடர்ந்தவாறே உள்ளன. பொதுவாக அனர்த்தங்கள் இரண்டு வகைப்படுகின்றன. முதலாவது, இயற்கையாக நிகழ்வது; இயற்கையின் நியதி. இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது மனிதனால் ஏற்படுத்தப்படுவது. மனித சக்தியினால் ஓட்டு மொத்தமாகத் தடுத்து நிறுத்தக் கூடியது. நம் நாட்டின் தேசிய இன‍ங்களில் ஒன்றாகிய தமிழ் இனம், கடந்த காலங்களில் இரண்டாவது வகையான அனர்த்தத்தில் சிக்கிச் சிதறி பல ஆயிரம் மேன்மையான உயிர்களைக் காவு கொடுத்து விட்டது. மே…

  10. தமிழர்களை மேலும் வதைப்பது நியாயமா? இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வை வழங்­காது இழுத்­த­டிப்­ப­தன் மூல­மாக நாட்­டில் இன்­னு­மொரு ஆயுத மோத­லுக்­குத் தூபம் இடப்­ப­டு­கின்­ற­தா­வென்ற சந்­தே­கம் எழும்­பி­யுள்­ளது. நீண்ட ஆயுத மோதல் ஒன்று இடம்­பெற்று முடி­ந்து 10 ஆண்­டு­கள் பூர்த்­தி­யா­கப் போகின்றன. இந்­தப் போரி­னால் ஏற்­பட்ட அழி­வு­கள் கணக்­கிட முடி­யா­தவை. இந்த நாடு சகல துறை­களி ­லும் பின்­தங்கி நிற்­ப­தற்கு நீண்டு சென்ற ஆயு­தப் போரே கார­ண­மெ­னச் சொல்ல முடி­யும். நாட்­டின் அரிய வளங்­கள் யாவற்­றை­யும் இந்­தப் போர் ஈவி­ரக்­க­மின்ற…

  11. மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்து முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே மஹிந்த அரசாங்கம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடக்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களைப் பெருவாரி…

  12. திசராணி குணசேகர “மழையைத் தேடுகிறேன் மழையைத் தேடுகிறேன்." – கில் ஸ்கொ ட்-ஹே ர ன் (அமெரிக்காவில் குளிர்காலம்) ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களவர்கள் அல்லாத இலங்கையர்களிடம் விண்ணப்பிக்க முடியுமா? தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து உலுக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை பாராளுமன்றத் தேர்தல் காலமென இந்த வாரம், நிறுத்தியிருந்தது. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பல கொடுப்பனவுகளை நிறுத்தி…

  13. பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன். adminMay 18, 2025 ஆரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை. புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை. புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை. அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை. மக்கள் பரவலாக அதை வாங்கி அருந்துவதும் உண்மை. இன்று முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக மக்கள் திரள்வார்கள் என்பதும் உண்மை. ஒரு தேசம் என்பது அப்படித்தான…

  14. உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன? http://www.nillanthan.com/wp-content/uploads/2021/12/copy.jpg கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயேட்சைக்குழுவாக அது தேர்தலில் போட்டியிட்டது. எனினும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவான தமிழ்தேசிய நிலைப்பாட்டை அக்கட்சி வெளிப்படுத்தியது.தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதே என்பதனை அந்த தேர்தல் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியது. தேர்தலில் அச்சுயேச்சைக் குழு மூன்று ஆசனங்களைப் பெற்றது.எனினும் பிரதேச சபையை கை…

  15. வடபகுதி கடலில் ஆபத்தானவை... சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்! கடந்த சில நாட்களாக வடக்கில் சீன மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்கள் அகல கால் பதிப்பதாகவும் இது ஈழத்தமிழர் நலன்களுக்கும் அதற்கு அப்பால் இந்திய இறையாண்மைக்கும் அச்சுறுதலை ஏற்படுத்தலாம் எனவும் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சி உறுப்பினர் ஒருவர் மிகுந்த உசாராகப் பேசியிருந்தார். அத்துடன் இந்தியா தமது தொப்புள்கொடி உறவுகளாம், அதனால் இந்தியா பக்கமே தாங்கள் நிற்போம் இந்தியாவுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் விளாசித்தள்ளியிருந்தார். இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் (4.7.2021)பாக்கு நீரிணைக்கடலில் தொப்புள்கொடி உறவுகள் வட மராட்சி கிழக்கு மீனவர்க…

  16. கூட்டமைப்புகள் சந்திக்ககூடிய அரசியல் சார்ந்த சவால்கள்

  17. 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் படும்பாடு Veeragathy Thanabalasingham on October 11, 2022 Photo, DNAINDIA அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்தவாரம் இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. இப்போது அக்டோபர் 20,21 திகதிகளில் அந்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தும் நோக்கிலான இந்தத் திருத்தச் சட்டமூல வரைவை (நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இது அரசியலமைப்புக்கான 21ஆவது தி…

  18. ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள் January 26, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலம் இருக்கின்ற போதிலும், ஆட்சிமுறையில் அகங்காரம் இல்லாத ஆரோக்கியமான ஒரு போக்கைக் காணக் கூடியதாக இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் கொண்டிருந்த முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் ஆட்சிமுறையின் எதிர்மறையான அனுபவங்கள் எமது நாட்டு மக்களுக்கு இருக்கிறது. முன்னைய போக்குகளில் இருந்து வேறுபட்ட முறையில் தங்களது ஆட்சிமுறை இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் அரசாங்கத்தின் மற்றைய தலைவர்களும்…

  19. தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் September 10, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. 38 பேர் போட்டியிடுகின்ற போதிலும், அவர்களில் பலரை பொதுவெளியில் காணவில்லை. பிரதான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்களை நாடுபூராவும் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பிரதான வேட்பாளர்களாக விளங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து அபிவிருத்திப்…

  20. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் இலங்கை குறித்த அறிக்கை இலங்கையின் மனித உரிமை நிலவரத்தினை மிகைப்படுத்தப்பட்ட – எதிர்மறையான விதத்தில் சித்தரிக்கின்றது- வெளிவிவகார அமைச்சு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ‘உலக அறிக்கை 2022’ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் வருடாந்த அறிக்கை குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. மனித உரிமைகள்…

    • 0 replies
    • 252 views
  21. பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் பேரவையொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை தமிழ் கட்சித் தலைவர்களிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்வைத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, டெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டி.சித்தார்த்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். . தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் போன்றோர் இவ்வாறான மன்றத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

  22. ஜனாதிபதித் தேர்தல்:தமிழ்மக்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பார்களா? - நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக கணித விஞ்ஞானப் பிரிவுகளைச் சேர்ந்த கல்வி நிலையங்களுக்கு என்னென்ன பெயர்கள் என்று பார்த்தால், விஞ்ஞான மண்டபம்; விஞ்ஞான உலகம்; விஞ்ஞான சமுத்திரம்; விஞ்ஞான நீரோட்டம். விஞ்ஞான மூலை, இணைந்த கணிதத்தில் வெற்றி, மிஸ்டர் பிஸிக்ஸ்,……இப்படியே நீண்டு கொண்டு போகும். இப்பெயர்கள் யாவும் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்கள் தொடர்பான ஒரு சமூகத்தின் அபிப்பிராயங்களைக் காட்டுபவை. இந்நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் முன்னணி தனியார் பாடசாலைகள் சிலவற்றில் கணித அல்லது விஞ்ஞானப் பட்டதாரி ஒருவர்தான் அதிபராகவும் இரு…

  23. இலங்கைக்கு ஜனாதிபதி முறை பொருத்தமானதா? நாடாளுமன்ற முறை பொருத்தமானதா? January 20, 2016 Photo, Selvaraja Rajasegar ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்களை சந்தோசப்படுத்துவதற்காகவன்றி சுதந்திரத்தை மதிக்கும் பிரஜைகளை சந்தோசப்படுத்துவதற்காகவே ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசின் அடித்தளம், அரசியல் இலக்குகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை ஜனநாயகமயமாக்கும் ஓர் அரசியல் யாப்பு சீர்த்திருத்தமொன்றுக்கூடாக மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும். இலங்கையில் தற்பொழுது இடம்பெற்று வரும் அரசியல் யாப்பு தொடர்பான உரையாடலில் தவிர்க்க முடியாத விதத்தில் எழுப்பப்பட்டு வரும் ஒரு கேள்வி ஜனாதிபதியை மையமாகக் கொண்டிருக்கும் தற்போ…

  24. திட்டமிடப்பட்ட இனப்படுகொலை இன்னும் தொடர்கிறதா?

  25. தேர்தல் காலத்திலும் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய கூட்டமைப்பின் கொள்கைகள் http://epaper.virakesari.lk/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.