அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
இலங்கை அரசும் சரி.. தமிழக அரசும் சரி.. மதுவினால்.. கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடிய ஆபத்தான சூழல் இருந்தும்.. மதுக்கடைகளை திறப்பது ஏன்..?!
-
- 0 replies
- 567 views
-
-
பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. எனினும் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இன்றியமையாத சேவையொன்றை அவரால் செய்ய முடிந்திருக்கின்றது. மேலும், அவரின் பெயர் தொடர்ச்சியாக பிபிசி நிறுவனத்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பிபிசி சேவையின் ஊழியர் ஒழுங்குவிதியிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் விடுபட்டிருக்கும் …
-
- 0 replies
- 439 views
-
-
ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் - ட்ரம்பா ? பைடனா ? - சதீஷ் கிருஷ்ணபிள்ளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்த உலகிற்கும் மிக முக்கியமான நாள். அன்றைய தினம் அமெரிக்க மக்கள் தமது வரலாற்றின் 59ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கிறார்கள். இந்தத் தேர்தல் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். இது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவாகப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய போட்டி மாத்திரம் அல்ல. மாறாக, சீர்குலைந்த ஜனநாயகத்தில் எஞ்சியிருக்கும் விழுமியங்களைத் தக்க வைப்பதா அல்லது அமெரிக்க தேசம் எதேச்சாதிகார சிக்கலுக்குள…
-
- 0 replies
- 373 views
-
-
ஜெனிவா: நீறு பூத்த நெருப்பு - கே. சஞ்சயன் இம்மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது. பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், கடந்த 2015 செப்டெம்பர் - ஒக்ரோபர் மாதங்களில் நடந்தபோது, இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ள கூட்டம் இது. அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இந்த மீளாய்வு நடக்கவுள்ளது. 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே இந்த மீளாய்வின…
-
- 0 replies
- 542 views
-
-
மீண்டும் மீண்டும் சூடு காணும் பூனைகள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக அனுபவம் இன்மையின் விளைவுகளாக இவற்றைக் கொள்ளலாம். அதனால்தான், விடயங்கள் சாதகமாக நடக்கும் போது, அதற்கான பெருமையை சுவீகரித்துக்கொள்வதில் அவர் காட்டும் அவசர ஆர்வம், விடயங்கள் பிழைக்கும் போது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் இருக்கவில்லை. மாறாக, விடயங்கள் பிழைக்கும் போது, அதற்கான பொறுப்பை மற்றவர்கள் மீதும், மக்கள் மீதும் சாட்டுகின்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் அணுகுமுறை, அவரை அறியாமலேயே வௌிவந்திருந்தமையை அவரது பேச்சுகளிலு…
-
- 0 replies
- 479 views
-
-
விலகிவரும் புறச்சூழல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப்பெறும் நேரமும் காலமும் நெருங்கியுள்ளதாக கனவு காணப்படுகிறது. ஆனால் அதற்கான அகச்சூழ்நிலையும் புறச்சூழ்நிலையும் நாளுக்கு நாள் விலத்திக்கொண்டு போவதைப்போன்ற ஒரு பிரமையே இப்பொழுது முன்நிற்கின்றது. ஒற்றையாட்சியென்ற நிலையிலிருந்து அரசாங்கம் மாறக்கூடாது, என்று கூறும் கடும் போக்காளர்களின் பிடி இறுகிக்கொண்டிருக்கிறது. இன்னுமொரு புறம், வட– கிழக்கு இணைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கூறும் இன்னுமொரு தரப்பினர். இதற்கு நடுவில் இடைக்கால அறிக்கை அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ் இடைக்கால அறிக்கை தொடர் பில் தமிழ் மக…
-
- 0 replies
- 589 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியின் தென்கிழக்காசிய பயணம் அமெரிக்க - சீன உறவுகள் மேலும் வலுவடையுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 12 நாட்கள் அரச பயணம் ஒன்றினை மேற்கொண்டு தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குப் புறப்பட்டுள்ளார். இவரின் பயணம் ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசியன் மாநாட்டிற்கும் சமூகமளிப்பதாகும். வியட்நாமில் ஏ.பி.ஈ.சி. மாநாடு11-, 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் வியட்நாமில் விஜயத்தை முடித்துவிட்டு பிலிப்பைன்ஸ் நோக்க…
-
- 0 replies
- 405 views
-
-
சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும் சதீஷ் கிருஷ்ணபிள்ளை இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்த சமயம், மியன்மாரில் பேஸ்புக் பற்றிய தருஸ்மான் அறிக்கை வெளியானது. மியன்மாரின் கலவரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்சுகி தருஸ்மான் தலைமையிலான ஐ.நா. அதிகாரிகள், தாம் அறிந்த விடயங்களை பகிரங்கமாக அறிவித்தார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் பேஸ்புக்கின் வகிபாகம் தீர்க்கமானது என தருஸ்மான் தெரிவித்தார். அவர் பேஸ்புக்கை பயங்கரமான மிருகம் என்று வர்ணித்ததுடன், இந்த சமூக வலைத்தளம் கசப்புணர்வையும், முரண்பாடுகளையும் வெகுவாகத் தீவிரப்படுத்தியதென சாடினார…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர் http://www.kaakam.com/?p=1136 இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் கேவலமான பல செயற்பாடுகளின் பின்னணியில் சில புலம்பெயர் அமைப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமையால் மீளவும் அதுபற்றி பேச வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்” மிக வலுவான அரணாக உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் இன்று “தமிழீழம் கேட்காத” அரசியல் கட்சிகளின் கொடி தூக்கிகளாக மாறியிருக்கிறார்கள் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்கள். புலிகள் அமைப்பு இயங்கு நிலையில் இ…
-
- 0 replies
- 863 views
-
-
பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் சேவை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது நினைப்பில் இருந்தது. இந்த கப்பல் சேவை ஆரம்பிப்பதன் ஊடாக, இருநாட்டுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். அத்துடன், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும். தமிழ்நாட்டுடன் இன்னும் தொப்புள் கொடி உறவில் இருப்போருக்கு அது வரபிரசாதமாகவே அமையும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான விமானச் சேவைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்குச் சென்று திரும்பு…
-
- 0 replies
- 491 views
-
-
சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / நீண்ட யுத்தமொன்று, அதன் கடைசிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு, இலட்சக் கணக்கானோர் இடம்பெயரக் காரணமான யுத்தத்தின் முடிவு நெருங்குகிறது. இந்த யுத்தத்தை யார் முன்னெடுத்தார்களோ, யார் தொடக்கினார்களோ, நடைபெற்ற அனைத்து அவலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யாரோ, அவர்கள் இன்று அமைதி பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் பெண்கள், குழந்தைகள் பற்றியும் பேசுகிறார்கள். உலகம் மாறிவிட்டது; அமெரிக்கா தொடக்கிய போரில், அது, அவமானகரமான தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது கெடுபிடிப்போருக்குப் பி…
-
- 0 replies
- 789 views
-
-
யூதர்கள் ஏன் இத்தனை கொடூரமானவர்களாக இருக்கின்றார்கள்? யூதர்கள் ஏன் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள்? யூதர்களை இந்த உலகம் ஏன் வெறுக்கின்றது? யூதர்கள் ஏன் மிகக் கொடூரமாக செயற்படுகின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முயல்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 28 Sep 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. https://www.ibctamil.com/articles/80/106810
-
- 0 replies
- 684 views
-
-
ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? - யதீந்திரா படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில் ஒரு குறித்த இலக்கை முன்னிறுத்தி இயங்குவோர், அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான புறச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அவ்வாறானதொரு புறச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படை என்னவென்றால், எங்களின் பயணத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை, அதேவேளை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதுதான் அந்த அடிப்படையாகு…
-
- 0 replies
- 246 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 01:36 GMT ] [ நித்தியபாரதி ] கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதேமாதத்தில் நடந்தேறிய சில சம்பவங்களால் ஐரோப்பிய மொழி மூலத்தைச் சேர்ந்த புதிய சொல் ஒன்று, சிங்களம் மற்றும் சில தென்னிந்திய மொழிகளுக்குக்குள் நுழைந்து கொண்டது. இன்று யாராவது சிங்கள பேச்சு வழக்கில் (எம்டன்) 'Emden' என்று சொன்னால் அந்த வார்த்தையானது குறிப்பிட்ட நபர் நரியைப் போன்று குள்ளப் புத்தி உடையவர் என்றே அர்த்தம். சிறிலங்காத் தாய்மார்கள் தமது குழப்படிக்காரப் பிள்ளைகளை மிரட்டுவதற்கு 'Emden billa' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். 1914 ஓகஸ்ட் 04ம் நாள், ஜேர்மனி மீது பிரித்தானியா போரை ஆரம்பிப்பதாக அறிவித்ததன் பின்னர், முதலாம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்தமுறைதான். அது ஒன்றுக்கு மேற்படட தரப்புக்களால் முன்னெடுக்கப்படுவதும் இந்த முறைதான். அதுமட்டுமல்ல,அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான். இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிரயோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர். மு.திருநாவுக்கரச…
-
- 0 replies
- 314 views
-
-
தமிழருக்கு தேசிய மக்கள் சக்தி காட்டும் திசை தெளிவாக இருக்க வேண்டும் October 19, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 21.09.2024 அன்று நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்காவைத் தெரிவு செய்ததன் மூலம் இந்நாட்டு அரசியலில் ஒரு முறைமை மாற்ற-பண்பு மாற்ற எதிர்பார்ப்பைக் குறிப்பாக ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற-சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி முறையாகப் பேணக் கூடிய-வாரிசு அரசியலற்ற ஓர் அரசாங்கம் அமைய வேண்டுமென்ற அவாவை தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை வடக்குகிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஜனாதிபதித் தேர்தல்களைவிடவும் இம…
-
- 0 replies
- 373 views
-
-
‘தியாகம்’ செய்கிறாரா சோனியா? எம். காசிநாதன் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று ‘அறிக்கைப் போர்’ வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளூராட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதும், இந்தக் குழப்பம் தொடங்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014 தவிர மூன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கவுக்கும் திடீரென்று பிரச்சினை வர, உள்ளூராட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமே காரணமா என்பதை நம்ப இயலவில்லை. மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் முதல…
-
- 0 replies
- 847 views
-
-
1956 அறுபதாண்டுகளின் பின்னும் தாக்கம் செலுத்தும் தனிச்சிங்கள சட்டம்! அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொ…
-
- 0 replies
- 829 views
-
-
எதிர் முனைப்பட்ட அணி திரட்டல்களும் புதிய கட்சிகளின் தோற்றத்துக்கான வாய்ப்புகளும் இலங்கையில் தெற்கிலும் வடக்கிலும் மக்களை அணி திரட்டும் இரு வெவ்வேறு அரசியல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரு அணித்திரட்டல்களுமே முற்றிலும் முரண்பட்ட நோக்கங்களைத் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஒன்றை மற்றையது பரஸ்பரம் வசதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அத்துடன் இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம். தென்னிலங்கையில்…
-
- 0 replies
- 304 views
-
-
நல்லிணக்கபுரம்? நிலாந்தன்:- யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன. இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீள் குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் …
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கையில் கொரோனா குறித்த உண்மை மறைக்கப்படுகிறதா ? -என்.கண்ணன் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் கவனம் முழுமையாக ஒன்று குவிக்கப்பட்டிருந்த சூழலில், கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் தனது கைவரிசையைக் காண்பித்து விட்டது. ஒன்றுக்கு இரண்டு மிகப்பெரிய கொத்தணிகள்- அதுவும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலேயே உருவாகியிருந்த போதும், அது விஸ்வரூபம் எடுக்கும் வரையில், யாருக்கும் தெரியாமலேயே இருந்து விட்டது. எழுமாற்றான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், சந்தேகத்துக்குரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், இரண்டு கொத்தணிகளுமே- கையை மீறிச் செல்லும் நிலை ஏற்பட்ட பின்னர் தான் கண்டுபிடிக்கப…
-
- 0 replies
- 437 views
-
-
குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம் -எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது. இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தின…
-
- 0 replies
- 884 views
-
-
ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம் - கே.சஞ்சயன் இந்தியாவில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள ஒரு வெற்றிடத்தைப் போலவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது. இந்தளவுக்கும், ஜெயலலிதா ஒன்றும் தீவிரத் தமிழ்த் தேசியப் பற்றாளரோ, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு தீவிரமான ஆதரவை அளித்து வந்தவரோ இல்லை. 1980 களின் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்ற போது, தமிழ்நாடு தான், அதன் பின்தளமாக விளங்கியது. போராட்டத்துக்கான வளங்களும் அங்கிருந்தே கிடைத்தன. பயிற்சிகளும் அங்கேயே அளிக்கப்பட்டன. அகதிகளாக இடம்பெயர்ந்த ம…
-
- 0 replies
- 462 views
-
-
மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி. ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமது பூர்வீக இடமான ஹம்பாந்தோட்டையைப் பொருளாதார, அரசியல் கேந்திரம்மிக்க இடமாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். ஏற்கெனவே, ஜனாதிப…
-
- 0 replies
- 237 views
-
-
நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்… May 22, 2021 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைரஸ் தொற்று இருந்தது. கடந்த ஆண்டு நினைவு கூர்தலை தனிமைப்படுத்தல் சட்டங்களை முன்வைத்து அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த ஆண்டும் அவ்வாறான நிலைமைகள் உண்டு என்பதை ஊகிப்பதற்கு அதிகம் அரசியல் அறிவு தேவையில்லை. அரசாங்கம் ஒன்றில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தினூடாக நிலைமைகளைக் கையாளும் என்பது கடந்த ஆண்டே தெளிவாகத் தெரிந்தது. எனவே நினைவு கூர்தலை அனுஷ்டிக்க இரண்டு வழிகள்தான்இருந்தன. ஒன்று அதை மக்கள் மயப்படுத்துவது. இரண்டு மெய்நிகர் வெளியில் செய்வது. இதை குறித்தும் கடந்த ஆண்டிலும் நான் எழுதினேன் இந்த ஆண்டும் எழுதினேன். இது தொடர்பில் சம்பந்தப்பட…
-
- 0 replies
- 457 views
-