அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
இலங்கையில் கொரோனா குறித்த உண்மை மறைக்கப்படுகிறதா ? -என்.கண்ணன் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் கவனம் முழுமையாக ஒன்று குவிக்கப்பட்டிருந்த சூழலில், கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் தனது கைவரிசையைக் காண்பித்து விட்டது. ஒன்றுக்கு இரண்டு மிகப்பெரிய கொத்தணிகள்- அதுவும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலேயே உருவாகியிருந்த போதும், அது விஸ்வரூபம் எடுக்கும் வரையில், யாருக்கும் தெரியாமலேயே இருந்து விட்டது. எழுமாற்றான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், சந்தேகத்துக்குரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், இரண்டு கொத்தணிகளுமே- கையை மீறிச் செல்லும் நிலை ஏற்பட்ட பின்னர் தான் கண்டுபிடிக்கப…
-
- 0 replies
- 441 views
-
-
குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம் -எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது. இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தின…
-
- 0 replies
- 891 views
-
-
ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம் - கே.சஞ்சயன் இந்தியாவில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள ஒரு வெற்றிடத்தைப் போலவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது. இந்தளவுக்கும், ஜெயலலிதா ஒன்றும் தீவிரத் தமிழ்த் தேசியப் பற்றாளரோ, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு தீவிரமான ஆதரவை அளித்து வந்தவரோ இல்லை. 1980 களின் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்ற போது, தமிழ்நாடு தான், அதன் பின்தளமாக விளங்கியது. போராட்டத்துக்கான வளங்களும் அங்கிருந்தே கிடைத்தன. பயிற்சிகளும் அங்கேயே அளிக்கப்பட்டன. அகதிகளாக இடம்பெயர்ந்த ம…
-
- 0 replies
- 466 views
-
-
மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி. ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமது பூர்வீக இடமான ஹம்பாந்தோட்டையைப் பொருளாதார, அரசியல் கேந்திரம்மிக்க இடமாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். ஏற்கெனவே, ஜனாதிப…
-
- 0 replies
- 246 views
-
-
அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர். ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை. உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும். அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார். உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். ***** எமது இனமானது கல்வியினால் முன்னேறிய இனம். வட அமெரிகாவில், அமெரிக்க சுதந்திர பிரகடனத்துடன், முதலாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ, இரண்டாவது பிரிட்டிஷ் சா…
-
- 25 replies
- 2.2k views
-
-
நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்… May 22, 2021 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைரஸ் தொற்று இருந்தது. கடந்த ஆண்டு நினைவு கூர்தலை தனிமைப்படுத்தல் சட்டங்களை முன்வைத்து அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த ஆண்டும் அவ்வாறான நிலைமைகள் உண்டு என்பதை ஊகிப்பதற்கு அதிகம் அரசியல் அறிவு தேவையில்லை. அரசாங்கம் ஒன்றில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தினூடாக நிலைமைகளைக் கையாளும் என்பது கடந்த ஆண்டே தெளிவாகத் தெரிந்தது. எனவே நினைவு கூர்தலை அனுஷ்டிக்க இரண்டு வழிகள்தான்இருந்தன. ஒன்று அதை மக்கள் மயப்படுத்துவது. இரண்டு மெய்நிகர் வெளியில் செய்வது. இதை குறித்தும் கடந்த ஆண்டிலும் நான் எழுதினேன் இந்த ஆண்டும் எழுதினேன். இது தொடர்பில் சம்பந்தப்பட…
-
- 0 replies
- 465 views
-
-
உருமாற்றம்! இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள மேற்படி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பலர் தமது அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்திருப்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் சர்வதேச அமைப்புகள் பல தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்துக்கு மாற்றீடாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் வரவிருக்கும் புதிய சட்டமானது சாதாரண மனிதனொருவனின் அடிப்படைச் சுதந்திரத்தைக் கூட பறித்தெடுத்துவிடக் கூடிய மிக மோச…
-
- 0 replies
- 661 views
-
-
ஆபத்தான கேள்விகள் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை இராணுவத்தினர் உயிரைப் பயணம் வைத்துக் காப்பாற்றினார்கள். அதுபோலவே, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரை புலிகள் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். ஆனால், இந்த நல்லுறவு மூன்று வருடங்கள் கூட நின்று நிலைக்கவில்லை; அனைத்தும் மறந்து போனது. 2004 இல் காப…
-
- 0 replies
- 855 views
-
-
இலங்கை அரசின் இனப்படுகொலை மறுப்பு (வாதத்தி)ன் அரசியல் Photo: Dinuka Liyanawatta Photo, The New York Times இனப்படுகொலை புலமைத்தளத்தில் இனப்படுகொலையின் இறுதிகட்டமாக ‘இனப்படுகொலை மறுப்பு’ அமைகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது (Genocide denial is the final stage of genocide). ஸ்ரான்லி கோஹைன் தன்னுடைய நூலில், ‘அரசுகளுடைய மறுப்பு : அட்டூழியங்களையும், துன்பப்படுத்தல்களையும் தெரிந்து கொள்ளல் – States of Denial: Knowing about atrocities and suffering (2001), மறுப்பு என்றால் என்னவென்பதை, ‘மறுப்பு என்பது இலகுவில் நழுவித் தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு சொற்பதம், அது பலவற்றைக் குறித்து நிற்கும் மறுப்புக்குரிய முறையான பாவனை அல்லது நடைமுறை என்பது, எப்போது நபர்கள் பார்வையாளர்…
-
- 0 replies
- 329 views
-
-
மகிந்தவின் பொறிக்குள் தமிழ் தலைவர்களும் விக்னேஸ்வரனும் சிக்குவார்களா? 10 அக்டோபர் 2013 ராஜதந்திரத்தில் வெல்வார்களா? பாவம் மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸவரி இலட்சக்கணக்கான தமிழ் மக்களினதும், ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களினும் ஒன்றுமே இல்லாத மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றி என்பது தமிழரசுக் கட்சியின் தனித்த வெற்றியோ, இரா சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியோ, சீ.வீ விக்னேஸ்வரன் என்ற முன்னாள் நீதியரசரின் நீதிக்கு 132000 விருப்பு வாக்குகளுடன் கிடைத்த வெற்றியோ அல்லது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தனிப்பட்ட கட்சிகளின் அவர்களின் தலைவர்களின் செல்வாக்கிற்கோ கிடைத…
-
- 0 replies
- 743 views
-
-
பூட்டான்: வளர்ச்சியா, மகிழ்ச்சியா? மகிழ்ச்சியின் அளவுகோல் எது என்ற கேள்விக்கான விடை மிகவும் சிக்கலானது. மகிழ்ச்சி என்பது பண்பறி ரீதியானது. அதை அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடவியலாது. பண்பறி ரீதியானவை அகவயமானவை. அவை ஆளாளுக்கு வேறுபடுபவை. இவ்வளவு சிக்கல்களைக் கொண்டுள்ளமையால், மகிழ்ச்சியை அளவிடவியலாது. வளர்ச்சியை அளவிடலாமா என்ற கேள்விக்கு பொருளியல் நிபுணர்கள் “ஆம்” என்று பதிலளிக்கின்ற போது, எது வளர்ச்சி என்பதற்குப் பொதுவான, ஒருமித்த வரைவிலக்கணம் இன்னமும் இல்லை. பொதுவில், பொருளாதார வளர்ச்சியே வளர்ச்சி என அறியப்படுகிறது. அவ்வகையில் வளர்ச்சி, மகிழ்ச்சியைத் தருமா என்பது இவ்…
-
- 0 replies
- 626 views
-
-
இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா? பிரேசில் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் ஜகத் ஜயசூரிய தமக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்குக் கூடத் தெரியாமல் திடுதிப்பென்று இலங்கைக்குத் திரும்பியி ருந்தார். அவரது அந்தத் தகவலைக் கேட்டு நாடே குழப்ப முற்றது. இன்றைய கூட்டு அரசைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்கும் அளவுக்கு குறிப்பிட்ட அந்தச் செய்தி பாரதூரமான ஒன்றாக அமைந்தது. ‘‘உலகையே வென்று விட்டதாகக் கூறப்பட்டது. பன்னாட்டுச் சமூகம் தற்போது இலங்கையை நேசிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் போர் வீரர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்…
-
- 0 replies
- 482 views
-
-
தடுமாறும் அரசாங்கத்துக்குச் சட்டங்கள் காவல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியை, ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்துக்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால், செல்வந்தர்கள், உயரடுக்கினர் தவிர்த்து, முழு இலங்கையர்களும் பொருளாதார நெருக்கடியை அன்றாடம் எதிர்நோக்கி இருக்கையில், இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. தமது வாழ்வாதாரத்துக்காகப் போராடிய மக்களை, அதே வாழ்வாதாரத்துக்காகத் தொழில்புரியும் பொலிஸ்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். போராடுகின்ற மக்கள், இதே பொலிஸ்துறையினருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இந்த நெருக்கடி யாரையும் விட்டுவைக்கவில்லை. வரிசைகளில் அனைவரு…
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கைத் தமிழர்களும் தேசிய நல்லிணக்கத்தின் கட்டாயத்தேவையும் மூன்று வருடங்களுக்கு முன்னர் 2015இல் ஜனநாயக விழுமியங்களையும் நிறுவனங்களையும் மீளமைத்து வலுவூட்டுவதற்காகவும் சட்ட ஆட்சியை ஸ்தாபிப்பதற்காகவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்குமான மக்கள் ஆணையைப் பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். குடிமக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களினாலும் மற்றும் பல அரசியல் கட்சிகளினாலும் அடையாளம் காணப்பட்ட குறிக்கோள்களை அடையும…
-
- 0 replies
- 498 views
-
-
நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-01 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல் மலையகப் பகுதிகளில் இரண்டு நூற்றாண்டு கடந்தும் “லயன்” அறைகளில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்காலம் தொடர்பாக தற்போதும் ஆணித்தனமான அழுத்தங்கள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அவர்களின் அடிமை வாழ்க்கைக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இயற்கை அனர்த்தங்களையும் தாண்டி இலக்குகளை அடைவதற்கான அதிவிரைவு பயணத்தின் அவசியம் குறித்தும் ஆழமாக வலியுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. நாளைய பொழுது நல்லபொழுதாக விடிந்துவிடும். சுதந்திர சமுகமாக சஞ்சாரிக்க முடியும் என்ற பேரவா? அந்த மக்கள் மனதில் வேரூன்றியிருக்கின்றத…
-
- 3 replies
- 565 views
-
-
கண்டி கலவரம் - அதிரன் கண்டியே பற்றியெரிந்தபோது, அதைக் கணக்கிலெடுப்பதற்கு யாரும் தயாராய் இருக்கவில்லை, அதற்காகச் சமூக ஊடகங்களை தடை செய்துதான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அப்படியானால், சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்ற கவலையொன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது. இலங்கையின் சரித்திரத்தில் இடம்பிடித்த முதலாவது இனக்கலவரம், 1915 ஆம் ஆண்டின் கண்டிக் கலவரம் தான். ஆனால், இப்போது 2018 மார்ச்சில் ஏற்பட்ட கலவரத்தோடு இரண்டாகிக் ‘கண்டிக் கலவரங்கள்’ என்று வரலாறு பதிவு செய்கிறது. இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்திலேயே தேசியம் சார் நல…
-
- 0 replies
- 847 views
-
-
தோல்வி பயத்தில் ஓடி ஒளியும் ரணில் - ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது. தற்போது ஆட்சியிலுள்ள ரணில் -ராஜபக்ஷ அரசாங்கம், எந்தவொரு தேர்தலையும் உடனடியாகச் சந்திப்பதற்கு தயாராக இல்லை. அதனால், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பது அல்லது ஒத்திப்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்வது என்ற எண்ணத்தோடு இயங்கி வருகின்றது. அதன் ஒரு கட்டம்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை, திறைசேரி விடுவிக்காமல் அலைக்கழிப்பதனூடு நிகழ்ந்திருக்கின்றது. நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும், தேர்தல்கள் மூலமா…
-
- 1 reply
- 913 views
-
-
பதவி நீடிப்பும் பின்னணியும் -சுபத்ரா இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகளை ஒருவாறு ஒதுக்கித் தள்ளி வந்துள்ள அரசாங்கம், அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான், மீண்டும், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளது. நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு எதிராகப் பேசுவோர், செயற்படுவோரை இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற கடுமையானதொரு உத்தரவை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அனைத்து பற்றாலியன் கட்டளை அதிகாரிகளுக்கும் பிறப்பித்து, ஒரு வார காலத்துக்குள் அவருக்கு சேவை நீடிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் யாழ்ப்பா…
-
- 0 replies
- 546 views
-
-
சம்பந்தனின் ராஜதந்திரம் !? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் வியஜ் கோகலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இதன் போது வழமைபோல் கூட்டமைப்பையும் சந்தித்து பேசியிருந்தார். பொதுவாக இந்தியாவின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பது வழக்கம். எனவே இதற்கு அதிக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூற முடியாது. ஆனால் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இவ்வாறான சந்திப்புக்களை கூட்டமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் பொதுவாக இந்திய தரப்பினரிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு என்று அறிந்திருக்கிற…
-
- 0 replies
- 424 views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரசாரங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கலோடு பெரும் ஆரவாரத்துடனும் அக்கறையுடனும் ஆரம்பிக்கப்படவிருந்தன. போட்டி மிக நெருக்கமானதும் கடுமையானதுமாகவும் இருக்கப்போவதால் சிறுபான்மையினத்தவரது வாக்குகள் தேர்தல் முடிவுகளை தீர்மானம் செய்வதில் ஆற்றல் உள்ளதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இருந்த போதிலும் பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தாம் எந்த வேட்பாளரை ஆதரிக்கப் போகின்றோம் என்னும் தீர்மானத்தை இன்னும் எட்டாதிருக்கின்றன. அவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் எவ்வாறு தமது அரசியல் விஞ்ஞாபனத்தை அமைக்க உள்ளனர் என்பதனைப் பொறுத்தே தாம் ஒரு தீர்மானத்தை செய்யலாம் என்று காலம் தாழ்த்தி வருவதாகத் …
-
- 0 replies
- 393 views
-
-
துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், உலக நிலைவரங்கள், பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையை, தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன. அதேவேளை, இந்நெருக்கடி, தனியே ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக, பல நாடுகளைப் பாதிக்கிறது என்பதும் தெளிவாகியுள்ளது. …
-
- 0 replies
- 745 views
-
-
அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? - நிலாந்தன்! adminJuly 30, 2023 ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும், காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன. இந்தக் கடல் வழிப்பிணைப்பு, வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு, தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இவைதவிர ரணிலின் விஜயத்தின் பின்னணியில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த கருத்துக்களின்படி கடல் வழி, வான்வழி, தரைவழிப் பிணைப்புகளோடு வர்த்தகப் பிணைப்பு, எரிசக்த…
-
- 0 replies
- 473 views
-
-
ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை இந்த விடயத்தில் கடைப்பிடிக்கவும் தவறுவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக எழுத…
-
- 9 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவு: ஒரு தேசமாக எம்மை வலுப்படுத்துவதற்கு என்ன செய்துள்ளோம்? முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிப் போயின. தமிழீழ நடைமுறை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள், ஆயிரக்கணக்கான போராளிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள், தமிழர்களின் நிறுவனங்கள் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நாம் இழந்தவை சொல்லில் வடிக்க முடியாத பெருந்துயர் தருபவை. ஆறு ஆண்டுகளின் முன்னர் நிகழ்ந்தவைகளை இப்போது நினைத்துப் பார்த்தாலே இதயம் வெடித்து விடுவது போன்ற பெரும் வலி எம்முள் ஏற்படும். தலைவர் பிரபாகரன் உட்பட தமது இன்னுயிரை ஈகம் செய்த தளபதிகள், போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்குதமிழ் இத்தருணத்…
-
- 0 replies
- 309 views
-
-
ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’ Editorial / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:13 Comments - 0 -க. அகரன் ‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய காலத்தில் வழங்கப்படும் பட்சத்திலேயே, அதற்கான பெறுமதியும் தீர்வும் தர்மத்துக்கும், நியாயத்துக்கும் அதற்கும் மேலாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கும் ஏற்புடையதாக இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளக விசாரணைகளின் ஊடான சாதாரண வழக்குகளும் சரி, பாரிய வழக்குகளுக்கும் சரி, கால நீடிப்பின் பின்னரே, தீர்ப்புக் கிடைக்கின்ற நிலை காணப்படுகின்றது. அது, இலங்கை நீதிச்சேவையின் பலவீனமான, இறுக்கமற்ற தன்மையில்…
-
- 0 replies
- 953 views
-