அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
‘தமிழரசுக்கட்சி மட்டுமா தவறிழைத்தது?’ October 28, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது?எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து இன்று வரை அது சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல. இருந்தாலும் அதைத்தானே தமிழ் மக்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்! இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? தமிழரசுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டதால்தான் தமிழ்க்காங்கிரஸ் பிழைத்தது. இதை மிகப் பெரிய கெட்டிக்காரரான ஜீ.ஜீ. பொன்னம்பலமே புரிந்து கொண்டு செயற்பட்டார். இதன் விளைவாக உருவானதே தமிழர் விடுதலைக் கூட்டணி. ஜீ.ஜீ. பொன்னலம்பலத்துக்கு விளங்கியது குமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வ…
-
- 0 replies
- 291 views
-
-
புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகள், முழுமையாக இந்த வெளிநாட்டு உதவியால் பயன் அடைந்தன என்று சொல்லவியலாது. ஆனால், வடக்கு - கிழக்கின் பொருளாதார இயங்கியலில், நாட்டுக்குள் வருகின்ற பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெளிநாட்டுப் பணம், குறிப்பாக வடக்கில் பல்வேறுபட்ட தாக்கங்களை கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றுவரை விரிவாக ஆய்வுக்குட்படாத ஒன்றாகவே இது இருக்கிறது. …
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர் ஆகியிருக்கிறார். கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அதுவும் அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகி, பெரிய நெருக்கடிகள் இன்றி ஆட்சி செலுத்தினார். ஆனால், ஒபாமா போன்று ரிஷி சுனக்கால், நெருக்கடிகள் அற்ற ஆட்சியை கொண்டு செலுத்திவிட முடியாது. பிரித்தானியாவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், அவர் பிரதமர் பதவிக்கு வ…
-
- 0 replies
- 286 views
-
-
13ஆவது திருத்தத்தின் கடந்த காலமும் எதிர்காலமும் Veeragathy Thanabalasingham on October 25, 2022 Photo, AP Photo, Eranga Jayawardena திருத்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி புதிய உடன்படிக்கையொன்றை செய்யவேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்தவாரம் தெரிவித்த கருத்து குறித்து ஒரு பார்வை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட புதுடில்லியில் பதவியேற்பதற்கு கடந்த வருட பிற்பகுதியில் செல்வதற்கு சில மாதங்கள் முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு ‘செயற்திட்ட நகர்வு வரைவு’ ஒன்றை அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளித்தார். இரு தரப்பு உறவுகளை ‘பர…
-
- 0 replies
- 332 views
-
-
ராஜபக்ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது. கோட்டாவுக்கு முதலே மஹிந்த, பசில், சமல், நாமல், சசீந்திர என மற்றைய ராஜபக்ஷர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். கோட்டா நாட்டை விட்டு ஓடியதிலிருந்தே, பொதுவௌியில் பெருமளவுக்கு அமைதிகாத்த ராஜபக்ஷர்கள் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கூட்டங்களை நடத்தி, தமது இருப்பைத் தக்க வைப்பதற்கான அடுத்தகட்ட காய்நகர்த்தலுக்காக களநிலைவரத்தை பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பெயர் …
-
- 0 replies
- 715 views
-
-
இந்திய உயர்ஸ்தானிகரின் வட, கிழக்கு விஜயம் சொல்லும் தெளிவான செய்தி! இந்தியா ஓர் இரட்டை சகோதரராக, குறிப்பாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்கள் உட்பட எப்பொழுதும், இலங்கைக்கு துணை நிற்குமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இம்மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், திருகோணமலையில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தி நம்பிக்கையை மீண்டும் அளித்ததோடு, தெளிவான செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய சந்திப்புக்களும், கரிசைனகளும் இந்தியா, தமிழ் பேசும் சமூகங்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கையின் மீதும் எவ்வளவு தூரம் ஆழமான கரிசைனையைக் கொண்டிருக்கின்றது என்பதை அப்பட்மாக வெளிப்படுத…
-
- 0 replies
- 331 views
-
-
காணாமல்போன பிள்ளைகளுக்கு தீர்வுகிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் By VISHNU 24 OCT, 2022 | 04:20 PM K.B.சதீஸ் காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீபாவளி திருநாளான இன்று தமது பிள்ளைகளும், உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையில், நமது சைவ மதத்தில், இது கிருஷ்ணர…
-
- 1 reply
- 344 views
- 1 follower
-
-
இதற்கு மேலுமா நம்புவது ? By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 12:20 PM சத்ரியன் அரசதரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், எம்.எம்.சுஹைர் அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த விருந்தினர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், ஆங்கில ஊடகங்களில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்தது. அவரது அந்த பத்தியில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதை மையப்படுத்தி, பல கேள்விகளை எழுப்பிய…
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் - திட்டப்பணிப்பாளர் புதிய எச்சரிக்கை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NATIONAL STD-AIDS CONTROL PROGRAMME TEAM இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி, பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தற்போது சிகிச்சைகளுக்காக வருகைத் தருவதாகவும் அவர் கூற…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
ஐ.நா தீர்மானத்துக்கு பின்னரான தமிழர்களின் செயற்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும்? வி. உருத்திரகுமாரன்
-
- 0 replies
- 273 views
-
-
வடக்கை இரையாக்கும் 'போதைப்பொருள்' : 23 வயது இளைஞனின் சாட்சியம் - நேரடி ரிப்போர்ட் By NANTHINI 19 OCT, 2022 | 09:27 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வடக்கு மாகாணம் உள்நாட்டு போரின்போது இழந்தவை ஏராளம். ஆனால், அதனை விட பன்மடங்கு இழப்புகளை போரற்ற இன்றைய சூழலில் வட மாகாணம் இழந்து வருகிறது. சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு இவை மறைந்து கிடக்கின்றமை கவலையளிக்கின்றது. 'போதைப்பொருள்' முழு வடக்கையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அடுத்த சந்ததியினரை இழக்கும் நிலையில் இந்த மாகாணம் உள்ளது. பிள்ளைகளை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்க முடியாமல், எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விடுகின்றனர். மறுபுறம் போதைக்கு அடிமையான தன…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
புனர்வாழ்வுப் பணியகச் சட்டமூலமும் 22ஆவது திருத்தமும்! நிலாந்தன். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முதல் நாள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஒன்றை வெளியிட்டார்.அது கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்டமூல வரைபு தொடர்பானது. அச்சட்ட மூல வரைபு புனர்வாழ்வு பணியகத்துக்கானது.அதை சவால்களுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையே சபாநாயகர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். புனர்வாழ்வு பணியகச் சட்டமூல வரைபில் சில பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று உச்ச நீதி…
-
- 0 replies
- 321 views
-
-
வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில் Nillanthan கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக தொகை பணத்தை அவர்கள் கேட்டதாகவும் அவர் முறையிட்டார்.ஆனால் கொழும்பில் குறுந்தூரங்களுக்கு ஆகக் குறைந்தது 120 ரூபாய்களும்,அதற்கு மேற்பட்ட தூரங்களுக்கு மீற்றர் கணக்கின்படி காசு அளவிடப்படுவதாகவும் அவர் சொன்னார்.”யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளில் ஏன் மீற்றரைப் பொருத்தக் கூடாது?” என்றும் கேட்டார்.அதுமட்டுமல்ல “பிக்மி” போன்ற நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதும் அதனை முச்சக்கர வண்டி ஓ…
-
- 0 replies
- 301 views
-
-
மாறி வரும் உல அரசியல் ஒழுங்கில் சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா- சுயமரியாதையையும் இழந்தது மேற்கின் அணுகுமுறையில் பகைமை நாடுகளான இந்தியா -பாக்கிஸ்தான், ஈரான் - சவுதியை இணைக்கும் சீன உத்தி புதுப்பிப்பு: ஒக். 22 22:24 உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய் நகர்த்தல்களைத் தற்போது சீனா தனதாக்கி வருகின்றது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் சமர்கண்ட் நகரில் செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்ட…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் செல்வாக்குப் பெறுகிறதா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக, சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆட்சியாளர்கள் என எண்ணிய ராஜபக்ஷ குடும்பத்தை, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக அதிகாரத்தில் இருந்து அகற்றினர். ஆனால் தற்போது கட்சிப் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக அவர்கள் மக்களைச் சந்தித்து வருகின்றனர். இது ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிகுறியா? இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ராஜபக்ஷ க…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்? October 21, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?” -இந்தக் கேள்வி இப்பொழுது பலமாக எழுந்துள்ளது. இதற்குச் சில காரணங்களுண்டு. அதனால் தமிழ் மக்களுக்கான நிகழ்கால– எதிர்கால அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய கொள்கையும் திறனும் அர்ப்பணிப்பும் உண்டா? என்ற சந்தேகம் எழுந்துள்ளமையாகும். முன்பும் சரி, இப்பொழுதும் சரி தமிழரசுக் கட்சியினால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எதற்கும் தீர்வைக் காண முடிந்ததில்லை. (அப்படி ஏதாவது ஒரு விடயத்தில் அது தீர்வைக் கண்டிருந்தால் அதை யாரும் குறிப்பிடலாம்). ஒரு நீண்டகால அரசியற் கட்சி என்ற வகையிலும் அதிகமான காலம் தமிழ் மக்களுடைய ஆதரவைப…
-
- 0 replies
- 376 views
-
-
ராஜபக்ஷர்களின் மீள்வருகைக்கான கட்டியம் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்களை நாட்டின் காவலர்களாக முன்னிறுத்தும் பேரணிகளை, பொதுஜன பெரமுன மீண்டும் நடத்தத் தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தத் தேர்தலோடு ஆரம்பிக்கும் தேர்தல் திருவிழா, மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு களைகட்டப் போகின்றது. அதைக் கருத்தில் கொண்டு ராஜபக்ஷர்கள், தங்களை மீண்டும் நிலைநிறுத்தும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். ராஜபக்ஷர்களை வீட்டுக்குச் செல்லுமாறு முழு நாடும் கொந்தளித்து அடங்கி, சில மாதங்களே ஆகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி, ஜ…
-
- 0 replies
- 297 views
-
-
உக்ரெய்ன் – ரசிய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம்- இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா –சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சிறிய நாடான இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இரட்டைத் தன்மை என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்– -அ.நிக்ஸன்- ரசிய – உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட…
-
- 0 replies
- 303 views
-
-
இந்தியாவை நோக்கிச் செல்லுதல் ? - யதீந்திரா இந்தியா ஒரு பிராந்திய சக்தி. ஈழத் தமிழர்களுக்கான உடனடி அயல்நாடு. இது ஒரு மாறாத, ஒரு போதும் மாற்றவே முடியாத பிராந்திய யதார்த்தமாகும். இந்தியா தொடர்பில் இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றார். ஆனாலும் இந்தியாவை புரிந்து கொள்வதில் எப்போதுமே ஒரு குழப்ப நிலை இருக்கவே செய்கின்றது. இதற்கு என்ன காரணம்? பொதுவாகவே அரசியல் விவகாரங்களை எங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்கக் கூடாது. மாறாக, யதார்தத்திலிருந்து நோக்க வேண்டும். குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர், அப்துல்லா ஒச்சலான் கூறுவது போன்று, ‘நேற்றையவற்றுடன் இன்றையவற்றை ஒப்பிடுவதை விட, அது இன்றெப்படி ஒரு யத…
-
- 0 replies
- 468 views
-
-
கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது : ஜனாதிபதி தெரிவிப்பு By PRIYATHARSHAN 19 OCT, 2022 | 07:13 PM கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. நேரடிவரி வருமானம் 20% விட அதிகமாக இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதால் புதிய வரிகொள்கை அமுல்படுத்தப்பட்டது. வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் இலக்கை அடைய முடியாதென்பதோடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளையும் இழக்க நேரிடும். வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
‘கடலட்டை’ போர்வையில் வடக்கில் நுழைந்த சீனா இலங்கையின் வடக்கில், கடலட்டை பண்ணை நிறுவ எடுக்கப்பட்ட தீர்மானத்தை தமிழ்க்கட்சிகளின் பிரநிதிகள் பலரும் கடுமையாக எதிர்த்தனர். இதனூடாக சீனாவின் ஆதிக்கம் வடக்கில் நிலைக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகுமென எச்சரித்தனர். எனினும், கடலட்டை பண்ணைக்கு பணியாளர்களை கொண்டுவருவது போல, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் பணியாளர்கள் போல களமிறக்கப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வடக்கில் தங்களின் கால்கள் இறுக்கமாக ஊன்றப்பட்டுவிட்டால், இந்தியாவை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கலாம். கடுமையான கண்காணிப்பு வ…
-
- 2 replies
- 629 views
-
-
உண்மை கண்டறியும் ஆணைக்குழு ; தென்னாபிரிக்க அனுபவம் 18 OCT, 2022 | 01:21 PM ஆணைக்குழு என்றதும் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பீற்றர் கெனமன் சுவாரஸ்யமாக கூறிய ஒரு கருத்து எமக்கு நினைவுக்கு வரும்." ஆணைக்குழு நியமனம் என்பது மலசல கூடத்துக்கு போவதை ஒத்ததாக இருக்கும்.அமர்வுகள் இடம்பெறும்.அத்துடன் காரியம் முடிந்துவிடும்." ஆணைக்குழுக்கள் நியமனங்களைப் பொறுத்தவரை, இலங்கையில் பிரத்தியேகமான ஒரு வரலாறே இருக்கிறது.குறிப்பாக, இனநெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விசாரணை செய்வதற்கு இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் பயனுறுதியுடைய விளைபயன்களை தரவில்லை.உண்மைகள் …
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
தார்மீக நியாயப்பாட்டை மீண்டும் பெறுதல் இன்றியமையாதது 18 OCT, 2022 | 06:13 AM கலாநிதி ஜெகான் பெரேரா உலகின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியை, பிரதமரை, அமைச்சரவையை பதவி விலகவும் வைத்த நான்கு மாத கால மக்கள் கிளர்ச்சியை கண்ட நாடு இலங்கை. இப்போது வெறுமனே ஒரு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்றத்துக்கேனும் அமைதியானதாகவும் உறுதிப்பாடு கொண்டதாகவும் இருக்கிறது. அந்த மாற்றத்துக்கான பெருமை (அந்த சொல் பொருத்தமானதாக இருந்தால்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உரியதாகும். அறகலய போராட்ட இயக்கத்தின் எழுச்சியின்போது அரசாங்கத்தில் உயர்மட்டங்களில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டியதற்கு…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
ரஷ்யா - யுக்ரேன் போர்: விளாடிமிர் புதினின் சிந்தனையும் திட்டமும் என்ன? ஸ்டீவ் ரோசன்பெர்க் ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோ 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இந்த போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பே பல மாதங்களாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி இது. விளாடிமிர் புதின் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? என்ன திட்டம் வைத்திருக்கிறார்? எனக்கு ரஷ்யாவின் எதிர்காலம் பற்றியோ, அல்லது எனக்கு புதினுடன் நேரடி தொடர்போ இல்லை என்பதை முன்க…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் வரிகள் - நியாயமா, கொள்ளையா? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் என்ற வள்ளுவனின் கருத்து, 1776இல் அடம் ஸ்மித் குறிப்பிட்ட நவீன வரியின் கோட்பாடுகளான நியாயத்தன்மை, நிச்சயத்தன்மை, வசதி, செயற்றிறன் என்பதோடு ஒத்தியைகிறது. வரி என்பது ஒரு அரசிற்கு இன்றியமையாததொன்று. ஆனால் அந்த வரியானது மக்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பது வரியின் அடிப்படை இயல்பாக அமையவேண்டும். இல்லையென்றால் வழிப்பறிக்கொள்ளைக்காரனுக்கும்,…
-
- 1 reply
- 513 views
-