Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும் புருஜோத்தமன் தங்கமயில் வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகங்களின் குரல்களை அடக்குவதற்காக, ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் போராட்டங்களுக்குள் பொறுக்கிகள், ரவுடிகள், குழப்பவாதிகளை இறக்கிவிடுவது வழக்கம். அதுவும், போராடும் தரப்புக்குள் இருந்தே புல்லுருவிகளை இனங்கண்டு, கூலிப்படையாக ஆட்சியாளர்கள் மாற்றுவார்கள். அது, போராட்டங்களை இலகுவாக தோற்கடிப்பதற்கான உத்திகள். விடுதலைப் புலி…

  2. அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 11:20 AM கலாநிதி ஜெகான் பெரேரா உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது.நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை.ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது.சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது.இந்த அத்தியாவசிய பொருட்…

    • 0 replies
    • 240 views
  3. பொருளாதார குற்றங்களும் ஜெனீவா செல்கின்றன எம்.எஸ்.எம் ஐயூப் இலங்கை மக்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது, இந்நாட்டு பொருளாதாரத்தை கையாண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இழைத்த பொருளாதாரக் குற்றங்களின் விளைவாகும் என்றே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கருதுகிறார். மனித உரிமைகளுக்கான ஐ.நா பதில் உயர்ஸ்தானிகர் நதா அல் நஷீப், செப்டெம்பர் 13ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த இலங்கை தொடர்பான அறிக்கை மூலம் இது தெரியவந்தது. இலங்கை அரசாங்கம், ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற அந்தச் சொற்பிரயோகத்தை ஏற்க மறுத்துள்ளது. தற்போது, சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்…

  4. திலீபன்: நேற்று இன்று நாளை! Kuna Kaviyalahan

  5. மார்கோஸ்களும் ராஜபக்‌ஷர்களும் Veeragathy Thanabalasingham on September 27, 2022 Photo, HINDISIP மேலும் பல அமைச்சர்களை நியமிக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 20 அமைச்சரவை உறுப்பினர்களுடன் இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட 38 இராஜாங்க அமைச்சர்களையும் சேர்த்தால் தற்போது பதவியில் இருக்கும் அமைச்சர்களின் தொகை 58 ஆகும். அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு மேலும் 10 பேரையும் இராஜாங்க அமைச்சர்களாக இருவரையும் ஜனாதிபதியால் நியமிக்கமுடியும். அதற்காக அமைச்சரவையில் நிச்சயம் நிரப்பப்படவேண்டிய வெற்றிடங்கள் இருப்பதாக அர்த்தப்படுத்தமுடி…

  6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு ஐநாவில் ஒரு குரல் | லீலாதேவி ஆனந்த நடராஜா! "இந்த அரசாங்கங்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பி சர்வதேசம் மீண்டும் மீண்டும் காலத்தை கொடுத்துகொண்டும் உள்ளக விசாரணைக்கு வலுச் சேர்த்துக்கொண்டும் இருக்கிறது." - CMR வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் லீலாதேவி ஆனந்த நடராஜா Sept 12 ஆரம்பமாகி October 7வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்றிருக்கும் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் திருமதி.லீலாதேவி ஆனந்த நடராஜா அவர்களுடனான நேர்காணல்.

  7. ராஜபக்‌ஷர்களின் ஆதரவுத்தளமும் அரசியல் எதிர்காலமும் என். கே அஷோக்பரன் twitter: @nkashokbharan கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகலோடு, ராஜபக்‌ஷர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று எவரேனும் எண்ணினால், அது தவறு. ராஜபக்‌ஷர்கள் என்போர், அடுத்த ‘பண்டாரநாயக்காக்கள்’. அவர்களை, குடும்ப அரசியல் என்ற அடையாளத்துக்குள் சுருங்கிப்பார்ப்பது தவறாகும். ராஜபக்‌ஷர்கள் முன்னிறுத்தும் அரசியலுக்கான ஆதரவுதான், ராஜபக்‌ஷர்களுக்கான ஆதரவு என்பதைப் புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியம். இலங்கை அரசியல் இன்றும் இனத்தேசிய அடிப்படைகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெருந்தேசியவாதத்தின் சமகால முகம் ராஜபக்‌ஷர்களே! அந்த …

  8. இலங்கை ஒற்றையாட்சி அரசிற்கு ஏற்ற முறையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்பதற்கான பரிந்துரைகள் காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்…

  9. திலீபனைத் தத்தெடுப்பது? – நிலாந்தன். கடந்த 13 ஆண்டுகளாக நினைவுகூர்தல் பரப்பில் ஏற்படும் எல்லா சர்ச்சைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை தான்.இதில் மே 18ம்கூட அவ்வாறு கருதப்படுவதனால்தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.மே 18ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் உயிர் துறந்த நாள் என்ற அடிப்படையில் அந்த நாளும் புலிகள் இயக்கத்துக்கு உரிய ஒரு நினைவு நாளாக கருதும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுதான் மே 18இற்கான பொதுக்கட்டமைப்பு குறித்த முரண்பாடுகளும் ஆகும். இவ்வாறான கடந்த 13 ஆண்டு கால முரண்பாடுகளின் பின்னணியில்தான் இம்முறை திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு இட…

  10. நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ? நிலாந்தன் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை? ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் து…

  11. ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 09:23 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது. உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது. உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி. …

  12. இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று எமது தேசிய இனப்பிரச்சினை, அனைத்துத் தரப்புகளாலும் அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சிங்கள மேலாதிக்கத்தாலும் அதன் ஒடுக்குமுறை அணுகுமுறைகளாலும் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய தேசிய இனங்கள் மீதும் பறங்கியர், வேடர்கள் ஆகிய சிறிய சமூகங்கள் மீதும் சொல்லொணா துயரங்களும் கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயத்துறையில் நவதாராளவாத பொருளாதாரத்…

  13. சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி. வி. கே சிவஞானம், எம். ஏ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அந்தக் குழு, எதிர்வரும் நாள்களில் சம்பந்தனை நேரில் சந்தித்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு ‘பக்குவமாக’க் கோரும். வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. …

  14. இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு பிரிட்டிஸ் எம்பிக்கள் கடிதம் By RAJEEBAN 23 SEP, 2022 | 01:08 PM இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன என்பது தெளிவாகியுள்ள விடயம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டன் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ் அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என வேண்ட…

  15. புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா? ரணில் ஜனாதிபதியான பின்னர் ஏற்படும் மாற்றங்கள் — ஈழத்தமிழர்கள் என்று நேரடியாகவே விழித்துத் தமிழில் கூறி வரும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எவரும் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது Eelam Tamils என்று சொல்வதில்லை– -அ.நிக்ஸன்- புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமை…

  16. மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!! 22 SEP, 2022 | 02:44 PM இலங்கையைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய பிரச்சினைகள் தலைதூக்குவது சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. அதுவும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரச்சினைகள் எவ்வாறு எழுந்தன என்பதும் நாம் கடந்த காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறியமுடியும். அந்தவகையில் தற்போது புதியதொரு பிரச்சினையொன்றை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சின் எனும் அமிலம் கலந்த திரிபோஷா, சமபோஷ, யஹபோஷ, லக்போஷ உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இலங்கையில் கடந்த …

  17. மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? எம். எஸ். எம் ஐயூப் நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, …

  18. ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் Photo, Swissinfo ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9ஆவது தீர்மானம் இதுவாகும். இலங்கையின் சர்வதேச மதிப்புக்குப் பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படாதிருப்பதை உறுதிசெய்ய அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள்…

  19. பிரிட்டிஷ் முடியாட்சியின் எதிர்காலம் Veeragathy Thanabalasingham on September 20, 2022 Photo, Evening Standard இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு லட்சக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் நேற்று இடம்பெற்றது. லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த நான்கு நாட்களாக மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் ஆராதனைக்குப் பிறகு வின்ஸ்டர் மாளிகை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இது 6 தசாப்தங்களுக்கு பிறகு பிரிட்டன் காணும் அரசமரியாதையுடனான முதலாவது இறுதிச்சடங்காகும். அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் அங்கு முடியாட்ச…

  20. இலங்கைத்தீவு விவகாரம்- இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கையாளும் அணுகுமுறையோடுதான் அமெரிக்கா ஒத்துச் செல்கிறது. ஜப்பானும் அதற்கு விதிவிலக்கல்ல. 2002 சமாதானப் பேச்சு காலத்திலும் இந்த ஒழுங்குதான் இருந்தது. 13 ஐ இந்தியா சம்பிரதாயபூர்வமாகவே கோருகின்றது என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்ல. -அ.நிக்ஸன்- சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்று…

  21. ‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு, ஆரம்பத்தில் இலங்கை எங்கும் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே ஆரம்பப்புள்ளி. இவை கட்சி சார்ந்த அல்லது இடதுசாரி அமைப்புகள் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல! பொதுமக்கள், தாமாக வீதிக்கு இறங்கி, அமைதி வழியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள். இப்படி, பொதுமக்கள் கொழும்பில் ஒன்று திரண்ட இடங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு எ…

  22. ராஜபக்ஷக்களின் ஐந்து கவசங்கள் 17 Sep, 2022 | 12:33 PM சி.அ.யோதிலிங்கம் ஜெனிவா திருவிழா உச்சக் கட்டத்தைஅடையத்தொடங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா தலைமையில் 6 நாடுகள் இணைந்துகொண்டு வரவுள்ள புதிய பிரேரணையின் வரைபு கடந்த 13ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த மாதம் 27ஆம் திகதி இப்பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கின்றது. எப்போதும் கடைசி நேரத்தில் இந்தியா திருத்தங்களை செய்ய முன்வருவதால் இந்திய திருத்தங்களுடன் தான் புதிய பிரேரணை வெளிவருவதற்கு வாய்புகள் இருக்கின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.