Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அர்த்தமில்லாத அரசியலமைப்பு திருத்த வரைவு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை முழுமையாக ஒழிக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு சட்டவாதி ஜனாதிபதியின் மட்டுமீறிய அதிகாரங்களைக் குறைப்பதற்கான அரசியலமைப்பு திருத்த வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்கு அனுமதிக்கப்படுவாரேயானால், அவரின் வரைவு எத்தகையதாக இருக்கும் என்பதற்கு நீதி, அரசியலமைப்பு சீர்திருத்த மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தவரைவு பிரகாசமான உதாரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்தஏப்ரிலில் சமர்ப்பித்த திருத்தவரைவு 21ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் என்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தி…

  2. நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிர…

  3. வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தி தேவையை எதிர்வுகூறக்கூட இயலாத, கையாலாகாத அரசாங்கத்தின் கேடுகெட்ட நடத்தையால், இலங்கையர் அனைவரதும் வாழ்க்கை சீரழிகிறது. அனைத்துத் தவறுகளையும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறை என்ற ஒற்றைக் காரணியின் தலையில் கட்டிவிட்டு, அப்பால் நகர்ந்துவிட அனைவரும் முயல்கிறார்கள். இது அனைவருக்கும் வசதியானது. ஆட்சியாளர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு; கொள்கை வகுப்பாளர்களுக்கு தமது தொடர்ச்சியான தவறுகளை மறைக்கும் நல்லதோர்…

  4. இலங்கை கச்சத்தீவும் ஸ்டாலின் கருத்தும்: "தவித்த முயலை அடிப்பது போல ஆதாயம் தேடுகிறதா இந்தியா?" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER 'இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக எழும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? 'தவித்த முயலை அடிப்பது போல' இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக பலரும் இங்கே குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, …

  5. முடிவுக்கு வருகிறதா ரணில் அரசு? சத்ரியன் கோட்டா – ரணில் அரசாங்கத்தின் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகருகிறதா என்ற சந்தேகம் இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், நாட்டின் நிலைமை தற்போது மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. கோட்டா- மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் இருந்த நிலையை விட, மிக மோசமான கட்டத்துக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர், மக்களின் எதிர்ப்பலையை சமாளிக்க கோட்டா -மஹிந்த அரசின் அமைச்சர்கள் முதலில் பதவி விலகினார்கள். அலரி மாளிகையில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, மஹிந்தவும் விலகிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகவே, ஒற்றை…

    • 4 replies
    • 534 views
  6. ஆசியாவின் கேவலம் ? நிலாந்தன். July 3, 2022 கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு ஏறக்குறைய சமூக முடக்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.தெருக்களில் தனியார் வாகனங்களை பெருமளவுக்கு காணமுடியவில்லை.பொதுப்போக்குவரத்து வாகனங்கள்தான் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஓடுகின்றன.பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பிதுங்கி வழிகின்றன.சனங்கள் வாகனங்களில் எங்கெல்லாம் தொங்கலாமோ அங்கெல்லாம் தொங்கிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.ஆபத்தான பயணங்கள். யாழ்ப்பாணத்தின் தெருக்களில் சைக்கிள்கள் மறுபடியும் அதிக…

  7. தீவிரமடையும் நெருக்கடி? – நிலாந்தன். ஜூலை மாதத்தின் பின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.அவர் கூறியது இப்பொழுது நடக்கின்றது. இதன் பொருள் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதல்ல. அல்லது ஐலண்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது போல மெய்யாகவே அவர் ஞானக்காவின் மச்சான் என்பதுமல்ல.மாறாக அரசியல் பொருளாதாரத்தை ஓர் அறிவியல் ஒழுக்கமாக அணுகும் எவருக்கும் அது மிகத் தெளிவாகவே தெரியும்.எப்பொழுது நெருக்கடி வரும்? எப்படிப்பட்ட நெருக்கடி வரும்? என்பது.அதைத்தான் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் அவ்வாறு சாத்திரம் கூறுவது மட்டும் அவருடைய வேலை அல்ல. அதற்கும் அப்பால் மக்…

  8. மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள் ஜூலை 1, 2022 மோடி அரசாங்கத்தின் எட்டாண்டுகள் நிறைவடைவதையொட்டி, பா.ஜ.க பதினைந்து நாட்களுக்குப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது அது பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, உணவு தான்ய உற்பத்தி, சமூக நலத் திட்டங்கள் மற்றும் அயல்துறைக் கொள்கை சம்பந்தமாக அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளை உயர்த்திப்பிடித்திட வலியுறுத்தியிருக்கிறது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு ஒழிச்சலின்றி மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவே என்றும் பிரச்சாரத்தின்போது அது தம்பட்டம் அடிக்க முடிவு செய்திருக்கிறது. …

  9. தேசத்தின் வீழ்ச்சி – கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு மாற்றிடு எங்கே உள்ளது? ரங்க ஜெயசூரிய ——————————— தேசமொன்றின் பாரியதொரு அழிவில் ஒப்பந்தம் ஒன்று உள்ளதென்று ஆடம் ஸ்மித் ஒருமுறை கூறியிருந்தார் – அதாவது நவீன அரசுகள் வெளிப்புற மற்றும் உள்மட்ட அழுத்தத்தைத் சிறப்பாக கையாளும் அளவுக்கு உள்ளார்ந்த வலிமையானவை. ஒரு தேசத்தை சிதறடிக்க கொள்கை வகுப்பாளர்களால் தீவிரமானதும் தொடர்ச்சியானதுமான குழப்பங்கள் தேவை. கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாட்டை எப்படி வேகமாக அழிக்க முடியும் என்பதை காட்டியுள்ளார். இந்த எண்களைக் கவனியுங்கள். 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3600 அமெரிக்க டொ…

    • 1 reply
    • 407 views
  10. படுகுழியிலிருந்து வெளியேற என்ன வழி ? ‘முறைமையில் ஊழல் பரவலாக உள்ளது என்பது இரகசியமல்ல. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று அரசியல்வாதிகள் குறிப்பிடப்படுகிறார்கள். தற்போதைய நெருக்கடிஉட்பட அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் தரகு பெறுவது நன்கு அறியப்பட்டதாகும்.’ ”அவு ஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் வருகை தந்த அணிக்கு எவ்வாறு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள் மற்றும் , அவு ஸ்திரேலிய வீரர்கள்எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதை அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்” 00000000000000000000000 கொட்வின் கொன்ஸ்ரன்ரைன் …

    • 0 replies
    • 195 views
  11. இன்றைய நெருக்கடியில் இருந்து கற்க வேண்டிய பாடம் புருஜோத்தமன் தங்கமயில் நாடு அறிவிக்கப்படாத முழு முடக்கத்துக்குள் வந்துவிட்டது. பசி பட்டினிக்கான முன் அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளாந்தம் வெளியிட்டு வருகின்றார். போர் நீடித்த காலத்தில், நாட்டு மக்கள் கொண்டிருந்த பதற்றத்தைக் காட்டிலும், தற்போது மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், மிகப்பெரியதாக மாறியிருக்கின்றது. வாழ்வதற்கு தகுதியில்லாத நாடாக இலங்கை இன்று நோக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையை ஏற்படுத்திவிட்ட அரசாங்கம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு நாடுகள் என்று பல நாடுகளுக்கு, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி, கடன்களை கோரி வருகின்றது. இன்னொரு பக்கம், ரணிலுக்கு பிரதமர் பதவியை வழ…

  12. ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர்; சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க கேட்கும் எதிரணி Veeragathy Thanabalasingham on June 30, 2022 Photo, Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர் எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார். பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சி கண்டுவிட்டது. அதை மீட்டெடுப்பது, அதுவும் வெளிநாட்டுச் செலாவணி ஆபத்தான அளவுக்கு கீழ்மட்டத்தில் இருக்கும் நிலையில் சுலபமான காரியம் அல்ல. …

  13. தழிழர்களுக்கான நீதி! நீதிமன்றம் அதிரடி.. அடுத்து என்ன?

    • 1 reply
    • 600 views
  14. 21’ எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்; துரோகங்கள்! நஜீப் பின் கபூர் “இங்கு அரசியல் மற்றும் கட்சி யாப்புக்கள்; தலைவர்கள் தன்னலத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன” பொதுவாக நாடுகளின் அரசியல் யாப்பு என்பது அந்த நாட்டு மக்களினதும் தேச நலனையும் மையமாக வைத்து வடிவமைக்கப்படுகின்ற வழிகாட்டலாகத்தான் இருக்க வேண்டும். இதற்குச் சமாந்திரமான இன்னும் பல விளக்கங்கள் சொல்லப்படலாம். அவை என்ன வார்த்தைகளில் உச்சரிக்கப்பட்டாலும் பொதுவான கருத்து இப்படியாகத்தான் அமைய முடியும். அரசர்கள் நம்…

    • 1 reply
    • 549 views
  15. தெற்காசியாவின் லெபனானாக இலங்கை மாறுவதை மேற்குலகம் தடுக்க வேண்டும் மட் கொட்வின், இலங்கைக்கு தேவைப்படுவது பொறுப்புமிக்க அரசாங்கமும் நிலையான சர்வதேச முதலீடுமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு பங்காளியாக இருந்த பிரிட்டன் , அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய “குவாட் நாடுகளுடன்” இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும், சீனாவின் மீதான முதலீட்டு சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர இடையீட்டு நிதியை வழங்க வேண்டும். 00000000000000 இலங்கையில் உணவு, எரிபொருள் விலைகள் வானுயர அதிகரித்துச் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலி…

    • 0 replies
    • 229 views
  16. நெருக்கடியின் சுமையைத் தணித்தல் விக்டர் ஐவன் *********** புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடைய பல அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை அவர்களின் ஆதரவுடன் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இது நாட்டிற்கு அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக மாறும். அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களிடம் இருந்து பாதுகாப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே, அந்தப் பிரதேசங்களில் சிறப்பான அபிவிருத்தி ஏற்படுமாயின் அது வடக்கு, கிழக்கில் வாழும் மக்க…

    • 0 replies
    • 220 views
  17. இலங்கையின் மின்சக்தியை கபளீகரம் செய்யும் இந்தியா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஓர் அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சு மன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு நாட்டில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத் தான்! நெருக்கடிகள், மக்களுக்கு வாய்ப்பை மட்டும் வழங்குவதில்லை; ரணிலுக்கு பிரதமராகும் வாய்ப்பைக் கொடுத்தது; இன்ன பிறருக்கு, அடுத்த ஜனாதிபதி கனவைக் கொடுத்துள்ளது. அயல்நாடுகள், அவர்தம் நலன்களை வெற்றிகரமாக வென்றெடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் நெருக்கடிகள் வாய்ப்பாகிறது. ஜூன் 10ஆம் திகதி, ‘பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு’ (கோப…

    • 1 reply
    • 414 views
  18. Courtesy: தி.திபாகரன் இன்று இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கின்ற பாரதூரமான பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் பட்டினிசாவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய பெரும் நெருக்கடிக்கு மத்தியிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகளை கட்டுவதிலும், தமிழர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறது. இவ்வாறு இனவழிப்பு செய்வதில் தொடர்ந்தும் ஈடுபட்டு தன் பொருளாதாரத்தை செலவழித்து வருகிறது. இதிலிருந்து இலங்கை சிங்கள பேரினவாத அரசியலில் எத்தகைய அரசியல் தலைவர்கள் வந்தாலும் அவர்கள் தேரவாத பௌத்தத்தின் 'நம்ம தீப' கொள்கையை கைவிட மாட்டார்கள் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. வட-கிழக்கு தமிழர்களின் பலம் என்ப…

  19. தமிழ் அரசியல் கைதிகளின் மரணங்கள்?? அவர்களின் வழக்குகள் தண்டனைகள் எத்தகையன?

    • 2 replies
    • 431 views
  20. அபாயகரமான கட்டத்தை நோக்கிச் செல்கிறது இலங்கையின் பொருளாதாரம் புதிய மேலாளர்கள் போதுமான மனிதாபிமான உதவிகளை உருவாக்குவதற்கும் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால் , நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும். மக்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவில் எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் தமிழ்க் கூட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெற்கில் பொலிஸார் பொறுப்பேற்கும் போது வடக்கில் இராணுவம் ஏன்? ஏன் இந்தப் பாகுபாடு? நெருக்கடியை தவறாக சித்திரித்து அதை ஓர் இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு திரைக்குப் பின்னால் ஏதாவது தீய மற்றும் கொடூரமான ச…

    • 1 reply
    • 414 views
  21. 21’ எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்; துரோகங்கள்! நஜீப் பின் கபூர் “இங்கு அரசியல் மற்றும் கட்சி யாப்புக்கள்; தலைவர்கள் தன்னலத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன” பொதுவாக நாடுகளின் அரசியல் யாப்பு என்பது அந்த நாட்டு மக்களினதும் தேச நலனையும் மையமாக வைத்து வடிவமைக்கப்படுகின்ற வழிகாட்டலாகத்தான் இருக்க வேண்டும். இதற்குச் சமாந்திரமான இன்னும் பல விளக்கங்கள் சொல்லப்படலாம். அவை என்ன வார்த்தைகளில் உச்சரிக்கப்பட்டாலும் பொதுவான கருத்து இப்படியாகத்தான் அமைய முடியும். அரசர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் அவர்களின் விருப்பு-வெறுப்புக்கு ஏற்றவாறு சட்டங்கள் நாட்டில் அமுலில்…

    • 0 replies
    • 281 views
  22. இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ? - யதீந்திரா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பத்மநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன். இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்க…

  23. ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்? - யதீந்திரா ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன…

  24. பொய் பொய் பொய் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர. ஆனால் இத்தகைய பொய்களைச் சொன்ன முதல் அமைச்சரும், அரசியல்வாதியும் காஞ்சன அல்ல. அரசியல்வாதி என்றாலே பொய்தான் சொல்லுவான் என்று மக்கள் உறுதியாக நம்பும் அளவுக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்வது ஏன்? அப்படி பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் தொடர்ந்தும் நம்புவத…

  25. இந்தியா - இலங்கை இடையே புதியதோர் ஒப்பந்தமா? லோகன் பரமசாமி தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ள இலங்கை அரசு பொருளாதார வலிமையை முற்றாக இழக்கும் நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையானது, இலங்கை, இந்திய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியலில் தாக்கத்தை விளைவிககுமா? இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதியதொரு மாற்றத்தை உருவாகுமா? என்ற ஆழமான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தமானது இலங்கைத் தீவில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. அத்துடன், இந்தியாவின் தெற்காசிய பிராந்தியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இருந்தது. அத்தோடு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.