அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன். மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையின் முதல் வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதை போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கம் அந்த அறிக்கையில் உண்டு. மூன்று இனங்களுடையதும் ஆணையைப் பெற்று வந்திருக்கும் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் “இறந்த காலத்தில் இருந்து உடைத்துக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பதாகத் தெரிகிறது. அது ஐநாவின் எதிர்பார்ப்புத்தான். நிச்சயமாக யதார்த்தமல்ல. இது ஏறக்குறைய 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் வந்த நிலைமையை நினைவுபடுத்துவது.2015 ஆட்சி மாற்றத்தின் போதும் மூவி…
-
- 0 replies
- 135 views
-
-
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்குக் கொடுக்கும் குடைச்சல்கள் மட்டும் காரணமின்றி, ராஜபக்ஷக்களின் ‘மொட்டு’க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவ…
-
- 1 reply
- 202 views
-
-
15 AUG, 2025 | 03:40 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சூதறியாத அவரின் அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்து விடுதலை புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் 2005 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொல்லப்பட்டார். தனது வீட்டில் உள்ள நீச்சல் தட்கத்தில் வழமையான 1000 மீட்டர்கள் நீச்சலை அவர் முடித்துக்கொண்டு வெளியேறியபோது கொலைஞர் தாக்குதலை நடத்தினார். விதிவசமான அந்த தினத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால், அவர் பற்றிய நினைவுகள் இன்னமும் நீடிக்கின்றன. இலங்கையின் தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் என்று பலராலும் கருதப்பட்ட அந்த மனிதரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது. அவரது ஒரேயொரு மகள் அஜிதா தனது தந்த…
-
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு உண்மையை சொல்ல வெளிவருகின்றன - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா Published By: RAJEEBAN 15 AUG, 2025 | 04:17 PM நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். தரிந்து ஜெயவர்த்தன, தரிந்து உடுவரகெதர, எம்எப்எம் பசீர் ஆகியோர் இணைந்து எழுதிய செம்மணி எனும் நூலின் வெளியீடு வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றவேளை அந…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
13 AUG, 2025 | 06:21 PM முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார். இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர். எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் ADIC நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக…
-
- 2 replies
- 161 views
- 1 follower
-
-
கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர். Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 01:55 PM Kamanthi Wickramasinghe தமிழில் - ரஜீவன் மன்னாரில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமாகி தொடரும் போராட்டத்திற்கான பெயர் கருநிலம். சட்டவிரோத கனியவள - இல்மனைட் அகழ்வு - காற்றாலை மின் திட்டம் - இறால் பண்ணைகள் போன்ற மன்னார் தீவின் இயற்கை சமநிலையை அழித்துக்கொண்டிருக்கின்ற விடயங்களிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. மன்னார் இலங்கையில் அதிகளவு மணல் பரப்பை கொண்ட தீவாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு அருகில் உள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாக மன்னார் மக்கள் நிலம், நீரை பெறுவதற்கான வழிமுறைகள் உட்பட ஏனைய அடிப்ப…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது. இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத்…
-
- 0 replies
- 157 views
-
-
-
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 03:40 PM https://www.dw.com Jeevan Ravindran இலங்கையில் மனித புதைகுழியொன்று தோண்டப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்பிராசா செல்வராணி உறக்கமிழந்தவராக காணப்படுகின்றார். "எங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது அவர்கள் தோண்ட ஆரம்பிக்கும்போது நாங்கள் பதற்றமடைகின்றோம்" என அவர் டிடயில்யூவிற்கு(dw) தெரிவித்தார். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் இலங்கைஇராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போன தனது கணவர் முத்துலிங்கம் ஞானசெல்வத்தை 54வயது செல்வராணி தேடிவருகின்றார். 3 தசாப்தகால மோதலின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
கற்பனையில் தமிழ்ச்சமூகம்! August 11, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. (இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 1. “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது. 2. “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலை…
-
- 0 replies
- 174 views
-
-
ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை லக்ஸ்மன் ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?” என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளிவருகிறது. தமிழர்களுக்கு நீதி வேண்டி, அனைத்துலகை விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தமிழர் தரப்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தி…
-
- 0 replies
- 114 views
-
-
Published By: DIGITAL DESK 2 10 AUG, 2025 | 04:56 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் கடந்த மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா புதிய அரசியமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுக்கின்ற, முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கேள்விகளை தொடுத்திருந்தார். அந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது ஆட்சி ந…
-
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன் எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனித…
-
- 2 replies
- 321 views
-
-
மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்? - நிலாந்தன் வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11–20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும், 20–50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகளும் இருப்பதாகவும் 50–100 பிள்ளைகள் கற்கும் 174பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலைகள் ஏன் மூடப்படுகின்றன? எப்படிப்பட்ட பாடசாலைகள் மூடப்படுகின்றன? பெரும்பாலும் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள்தான் அதிகமாக மூடப்படுகின்றன. அவை மூடப்படுவதற்கு பல காரணங…
-
- 0 replies
- 124 views
-
-
பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை முருகானந்தன் தவம் இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண…
-
- 8 replies
- 529 views
-
-
இனப்படு*கொ*லை | முன்னணியின் மூடிமறைப்பு அரசியல் .
-
-
- 3 replies
- 318 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 12:38 PM மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன் நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி. இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழ…
-
-
- 1 reply
- 272 views
-
-
ஒரு எச்சரிக்கை! August 6, 2025 — கருணாகரன் — ஈழத் தமிழர்களுடைய அரசியல், முன்னெப்போதையும் விட இப்பொழுது பல முனைப்பட்டுள்ளது. பல முனைப்பட்டுள்ளது என்றால், அது ஏதோ முன்னேற்றமான – நல்விளைவுகளை உருவாக்கக் கூடிய மாற்றம் என்று அவசரப்பட்டுக் கருதிவிட வேண்டாம். இது சிதைவை நோக்கிய – எதிர்மறை அம்சங்களை உருவாக்கக் கூடிய பல – முனைகளாகும். உண்மையில் பல கோணங்களில், பல முனைகளில் இயங்குவது என்பது ஜனநாயக அடிப்படையில், பல சிந்தனைகளைக் கொண்டதாக இருப்பதாகும். அப்படி இருக்குமானால், அதனால் நன்மைகள் விளையும். முன்னேற்றம் ஏற்படும். அத்தகைய பன்முனைகள், பன்மைத் தன்மையை உள்ளீடாகக் கொண்டவை. அவை அழகுடையவை. அது ஆரோக்கியமான ஒன்றாகும். இது அப்படியானதல்ல. இந்தப் பன்முனைகள் என்பது, பல துண்டுகளாக, அணிகளாகச…
-
-
- 1 reply
- 199 views
-
-
தமிழ்நெற் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கோபிநாத் ஜெயச்சந்திரனுடனான செவ்வி.
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரியாக 35 வருடங்களாகின்றன. அன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக காத்தான்குடியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்குமிடையிலான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளின் உச்சபட்சமே இந்த பள்ளிவாசல் படுகொலையாகும். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அன்று புலிகளின் எதிர்ப…
-
-
- 15 replies
- 800 views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பின் நோக்கம்? August 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் செய்வதே வழமை. சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும் அரசாங்கங்களின் பதவிக்காலங்களின் முற்பகுதியிலேயே…
-
- 0 replies
- 146 views
-
-
சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடமே பேட்டி
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
05 AUG, 2025 | 10:09 AM ஆர்.ராம் 2022இல் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக தானே அறிவித்ததன் பின்னரான சூழலில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் கூட்டத்தினர் ஏதோவொரு வகையில் நெருக்கடிக்குள் வாழுகின்ற நிலைமைகள் தோற்றம் பெற்றிருந்தன. குறித்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளாகின்றபோதும் சாதாரண மக்கள் மத்தியில் மீளெழுச்சி அடைந்த நிலைமைகள் இன்னமும் தோற்றம் பெற்றிருக்கவில்லை என்பதே கள யதார்த்தமாக உள்ளது. கள ஆய்வுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்கள் ஏதோவொரு வகையில் தமது செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலைமைகள் தொடர்கின்றன. குறிப்பாக, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் நீண்டதாக இருப்பது முக்கியமான விடயமாகின்றது. நாட்டின் தற்போதைய பொர…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் ; மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர் ; வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார் Published By: Rajeeban 04 Aug, 2025 | 03:40 PM ஏசிஎவ் அமைப்பின் அறிக்கையிலிருந்து -- ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூர் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் திட்டங்களை முன்னெடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர். பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் மூதூரில் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தது. ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் கடல்வழியாக மீ…
-
- 3 replies
- 414 views
- 1 follower
-