அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம், நாட்டின் அனைத்து சமூகங்களையும் பாதித்தது. இந்த யுத்தத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் சந்தித்த இழப்புக்களும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பெரும்பாலும் போதியளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்பது கவலை தரும் உண்மையாகும். உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள், பள்ளிவாசல் படுகொலைகள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், குருக்கள்மடம் படுகொலை என பல சம்பவங்கள் முஸ்லிம்களின் வரலாற்றில் ஆழமான தழும்புகளை ஏற்படுத்தியுள்ளன. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும், இந்த இழப்புக்கள் பற்றிய முழுமையான பதிவுகள், ஆவணங்கள் எல்லோரும் அணுகக் கூடிய வகையில் இல்லை என…
-
- 0 replies
- 157 views
-
-
சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் July 12, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியலில் தலைமைப் பொறுப்பிலிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் தமிழ்த்தேசியவாத அரசியலிலும் சரி, தமிழ்மக்களுடைய அரசியலிலும் சரி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரியாக வரையறுத்துச் சொன்னால், சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த்தலைமை என்று அடையாளம் காணக்கூடிய எவரையுமே காணவில்லை. மட்டுமல்ல, அடுத்து வரப்போகின்ற பத்துப்பதினைந்து ஆண்டுகளில் கூட தமிழ்த்தேசியவாத அரசியலில் மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னெடுப்புகளோ, புத்தாக்க முயற்சிகளோ, கருத்தியல் மற்றும் செயற்…
-
- 0 replies
- 257 views
-
-
செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு லக்ஸ்மன் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வருட அமர்வானது இலங்கையில் இடதுசாரி சித்தாந்தத்தின் கீழ் ஆட்சிக்கு வந்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது எதிர்கொள்ளல். அந்தவகையில்தான் இந்த அமர்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அத்துடன், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது விஜயம். சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களிலும் தங்களது முயற்சிகளை 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்ட உரிமைகளை அடைவ…
-
- 0 replies
- 135 views
-
-
14 JUL, 2025 | 03:59 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெர…
-
-
- 2 replies
- 429 views
- 1 follower
-
-
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன். அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜயலத் மற்றும் சுனிலா அபய சேகர போன்றவர்களின் வார்த்தைகளில் சொன்னால் அழகிய இலங்கைத் தீவு காணாமல் போனவர்களை மறக்க முற்படும் ஒரு தீவுந்தான். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொடங்கி கடந்த 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட ஒரு தீவு.யாருக்குமே சரி…
-
- 1 reply
- 206 views
-
-
Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:23 AM Sakuna M. Gamage daily mirror கனேரு மரத்தின் கீழ் நீ கீழே விழுந்துகிடந்தாய் உன் மார்பிலிருந்து குருதி வழிந்தோடியது நான் உன்னை இழந்தேன் இந்த தேசத்திற்கு அது இழப்பில்லை ஆனால் பூமிக்கு... ' உன்னால் எழுந்திருக்க முடிந்தாலும் எழுந்திருக்காதே" நீதியே புதைக்கப்பட்டிருக்கும் போது மக்கள் உண்மையில் எங்கு செல்ல முடியும்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? சொல்ல முடியாத போர்க் காலத்தில் ரத்ன ஸ்ரீ விஜேசிங்கே எழுதிய ஒரு சிங்களக் கவிதையில் எழுதிய இந்த வரிகள் இன்று இன்னும் அதிகளவில் மனதை வேதனைக்குட்படுத்தும் அதிர்வுடன் திரும்பி வருகின்றன. ஜூலை 2025 இல் செம்மணியில் இரண்டாம் கட்ட மறு அகழ்வாராய்ச்சியின் ஏழாவது நாளில், ஒரு குழந்தையின் எலும்புக…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
காஸாவின் குழந்தைகள் sudumanal Thanks: Aljazeera கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வ…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் July 9, 2025 — டி.பி.எஸ். ஜெயராஜ் — ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர அண்மையில் நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன. ” சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும்” என்று மாண்புமிக்க நீதி…
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் Photo, WORLD VISION இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்பு…
-
-
- 4 replies
- 392 views
-
-
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற ப…
-
- 0 replies
- 158 views
-
-
புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன் இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம். புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை இது. மல்லாவிச் சந்தையில் கனெக்ஸ் என்று அழைக்கப்படும் கனகரட்ணம் மீன் வாங்க வந்திருந்தார். அவர் அப்பொழுது வெற்றிலை சப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாய்க்குள் இருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே நிலத்தில் துப்பினார். அதை அங்கே இருந்த அன்பு மாஸ்டர் கண்டுவிட்டார். அவர் கனெக்ஸை நோக்கிப் பாய்ந்தார். “ஒரு பொது இடத்தில் அதுவும் சாப்பாட்டுப் பொருட்கள் விற்குமிடத்தில் எப்படி சுகாதாரக் கேடான விதத்தில் வெற்றிலையைத் துப்புவாய்” என்று அவர் …
-
- 1 reply
- 220 views
-
-
காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்! அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார். முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதா…
-
- 0 replies
- 136 views
-
-
Published By: RAJEEBAN 03 JUL, 2025 | 04:48 PM Kamanthi Wickramasinghe Daily mirror செம்மணிப் புதைகுழியில் நடைபெற்று வரும் உடல்களை தோண்டும் நடவடிக்கைகள் போரின் போது நடந்த கொடூரமான அட்டூழியங்களை வெளிப்படுத்துகின்றன. ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் அறிக்கை மட்டும் இல்லாவிட்டால் இந்தப் புதைகுழி இலங்கை மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு ரகசியமாக இருந்திருக்கும். கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் முக்கிய குற்றவாளி 1998 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது செம்மணிப் புதைகுழியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இந்த குற்றவாளி மற்றும் பலர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால் அல்…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை; செவிமடுக்கவும் செயற்படவும் துணிச்சல் உள்ள ஒருவருக்காக நிலத்திற்கடியில் குரல்கள் காத்திருக்கின்றன Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 03:09 PM யாழ்ப்பாணம் செம்மணியில் பள்ளிக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர் சிறுமிகள் கொலைசெய்து புதைக்கப்பட்ட மனித புதைகுழி(அதிக அளவில் புதைக்கப்பட்ட சடலங்கள்) சம்பவம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு கெஸ்பேவவில் உள்ள அவரது வீட்டில் காமினி லொக்குகே இயற்கை மரணமடைந்தார். குற்றவாளிகளை தண்டிக்கும் சட்ட அமைப்பை அமல்படுத்த முடியாமல் போன நாம் வாழும் இந்த சிங்கள பௌத்த சமூகம் காமினி லொக்குகே தலைமையிலான செம்மணி மனிதபுதைகுழிக்கு முன்பும் பிறகும் வடக்கிலும் தெற்கிலும் காணப்படும் மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்க…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற …
-
-
- 4 replies
- 405 views
- 1 follower
-
-
செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன் 2015க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சம்பந்தர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தார். அங்கு அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நிலைமை கொந்தளிப்பாக மாறியது. அப்பொழுது ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டவராக சம்பந்தரை நோக்கி உரத்த குரலில் ஆவேசமாகக் கேள்விகளைக் கேட்டார். அவர் அப்பொழுது கறுப்பும் சிவப்புமான நிறச் சீலையை உடுத்திருந்தார். இது நடந்து சில ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் முத்தவெளியில் வான் படை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. இதில் வான்படை உலங்கு வானூர்திகளில் மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே சம்பந்தரை கேள்வி கேட்ட அதே பெண் தனது வளர்ந்த மகனோடு அந்த உலங்கு வானூர்தியில் அமர்ந்திருந்து, படமெடுத்து அதை முக…
-
- 6 replies
- 625 views
-
-
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! June 29, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அரசியல் ரீத…
-
- 0 replies
- 178 views
-
-
25 JUN, 2025 | 09:14 AM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அண்மைய ஒரு தீர்ப்பில் சுயாதீனமான அரச நிறுவனங்கள் வகிக்க வேண்டிய பாத்திரத்தை எடுத்துக் கூறியிருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய தனது கருத்துக்களை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட முஹம்மட் லியாவுதீன் முஹம்மட் ருஸ்டியின் வழக்கில் கோட்பாட்டு அடிப்படையிலான தலையீட்டைச் செய்தமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை தேசிய சமாதான பேரவை வெகுவாக மெச்சுகிறது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதனாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனாலும் தோன்றுகின்ற ஆபத்துக்களை இந்த வழக்கு தெளிவாக வெளிக்காட்டுகிறது. ருஸ்டியின் கைது இன, மத அடிப்படையிலேயே இடம்பெற்றிருக்கிறத…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ முருகானந்தன் தவம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ‘நாடு அனுரவோடு ஊர் எங்களோடு’ என்றார் தமிழரசின் தலைவர் ஒருவர். ஆனால், இன்று ‘நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ என்றவாறாக வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல உள்ளூராட்சி ச…
-
-
- 2 replies
- 286 views
-
-
எதைச் சொல்ல? sudumanal இஸ்ரேல்- ஈரான் கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்ட…
-
-
- 1 reply
- 284 views
-
-
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு June 24, 2025 — கருணாகரன் — “ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். “நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன். “என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜன…
-
- 0 replies
- 94 views
-
-
யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம் ‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப் போவதுமில்லை. அவ்வாறிருக்கையில் விகாரை அமைக்கப்பட்டிருக்கும் காணியை விடுவிக்கும்படி போராட்டம் நடத்துவதே தேவையற்ற விடயமாகும் என்பதே யதார்த்தமானது. கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள. தமிழ் மக்களின் காணிகளில் இருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒ…
-
- 0 replies
- 121 views
-
-
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் June 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்புகளுக்கும் பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால் ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை. தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது…
-
- 0 replies
- 186 views
-
-
Published By: PRIYATHARSHAN 19 JUN, 2025 | 04:06 PM வீ. பிரியதர்சன் உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் …
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன. அதனால் விலையை ஏற்றி விட்டார்கள்” என்று வியாபாரி சொன்னார். “மேற்காசியாவில் இருந்தா எங்களுக்கு இஞ்சி வருகிறது?” என்று கேட்டேன். ”எங்கிருந்து வருகிறதோ தெரியாது. ஆனால் சண்டை தொடங்கியதால் விலை கூடிவிட்டது என்று மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்” என்று அவர் சொன்னார். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நின்றார்கள். மேற்காசியாவில் போர் தொடங்கியதால் எரிபொருள் தட்டுப்பாடு வரலாம் என்ற ஊகம்;பயம்…
-
- 0 replies
- 157 views
-