நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும்’ 32 Views உலகை உள்ளங்கையில் கொண்டு வந்தாலும், உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும். பட்டி பெருக வேணும் தம்பிரானே! பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே ! மேழி பெருக வேணும் தம்பிரானே ! மாரி மழை பெய்ய வேணும் தம்பிரானே ! என மழை சிறப்பாக பெய்ய வேண்டும் என வருண பகவானை வணங்கி, மேற்கொள்ளும் விவசாயத்தை, உயிராய் கருதிய எமது மூதாதையர் விட்டுச்சென்ற பாதையில் வளர்ந்து வருகின்ற சிறு மொட்டுக்களாகிய எமக்கு முன்னோர்கள் தடம் பதித்த விவசாயம் பற்றி தெரியவில்லை எனில், எமது பிற்கால சந்ததியினருக்கு விவசாயம் என்பது இரண்டாம் மொழி போன்றே தென்படும். …
-
- 0 replies
- 539 views
-
-
பெரியார் விவாதம்: சில குறிப்புகள் பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாள்" எனக் கொண்டாட தமிழக அரசு வெளியிட்டஅறிக்கையைத் தொடர்ந்து ஒரு விவாதத்தில் பி.ஏ.கே-வும் ஆழி செந்தில்நாதனும்மற்றவர்களும் பங்கேற்றனர். அவ்விவாதம் பற்றிய என்னுடைய சில எண்ணங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை அண்ணாதுரை போகிற போக்கில் சொன்னது அதுதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்கிறார் செந்தில்நாதன். இது உண்மையல்ல. சமீபத்திய தேர்தலின் போது திமுக இந்து விரோத கட்சியென்ற பரப்புரைக்கெதிராக (அவதூறு என்றேசொல்லலாம் ஏனென்றால் தற்போதய திமுக முன்னெப்போதையும் விட மிக ஆன்மீகமான கட்சி என்பதுவெளிப்படை) திமுக அமைச்சர் கே.என்.நேரு …
-
- 0 replies
- 527 views
-
-
கப்பலேறுவோர் கதைகள்… ஜெரா படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும் முன், ஒரு முடக்குத் தண்ணீர் குடிக்குமளவிலான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த நினைவு அவரை அசையாதிருக்கச் செய்திருக்க வேண்டும். அவர் சுரேன் கார்த்திகேசு. இறுதிப் போர் முடியும் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து ஊடகப் பணியாற்றிய பத்திரிகையாளர். “முள்ளிவாய்க்காலில இருந்த ஹொஸ்பிடலுக்குத் தரையாலயும், கடலாலயும் வந்து ஆமிக்காரர் அடிக்கேக்க நானும் அங்க காயப்பட்டு படு…
-
- 0 replies
- 451 views
-
-
இந்தியா: ஒதுங்குகிறதா - பதுங்குகிறதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடெல்லிக்கான பயணம் எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வி பல வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாகவே முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக, வடக்கு மாகாணசபை நிறுவப்பட்ட பின்னர், ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், நிலையான அரசியல் தீர்வு காண்பது குறித்தும், வடக்கிலுள்ள நிலைமைகள் குறித்தும் இந்தியாவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் கொண்டிருக்கிறது. என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள். …
-
- 0 replies
- 507 views
-
-
இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன் April 28, 2024 மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. போா் ஒன்றில் யாராலும் வெல்லமுடியாத நாடு எனக் கருதப்படும் இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியதன் மூலம், சா்வதேசத்தின் கவனம் இப்ராஹிம் ரைசி மீது திரும்பியிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் முதலாவது எதிரியாக அவா் மாறியிருந்தாா். இதனால், அவரது ஒவ்வொரு நகா்வும் அவதானிக்கப்படுகிறது. போா் பதற்ற நிலை தீவிரமடைந்திருந்த நிலையில்தான் அவா் இலங்கை வருவார…
-
- 0 replies
- 434 views
-
-
சாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்.. June 2, 2019 வரணி ஆலயம்- சமூக விடுதலையை அடையாது, இன விடுலையை அடைவது கடினம்… கடந்த வருடம் வைகாசி மாதம் ஒரு அதிகாலை பொழுது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. புதிதாக செய்யப்பட்ட சித்திரைத் தேர் வெள்ளோட்டத்தில் வெற்றிகரமாக ஆலயத்தை சுற்றி வந்தது. எனவே கன்னித் தேர்த் திருவிழாவில் இளைஞர்கள் வேட்டியும் வேட்டிக்கு மேல் மஞ்சல்,சிவப்பு துண்டுககளை அணிந்தவாறும் பெண்கள் சாறி சல்வார், என மகிழ்வோடு வடம் பிடிக்க காத்திருந்தனர். கண்ணகியும் வெளியே வந்தால் தேர் எறினாள் வடம் பிடிக்கத் தயாரான போது வந்து நின்றது ஜேசிபி இயந்த…
-
- 0 replies
- 918 views
-
-
பிரபலங்களுக்கு மட்டுந்தான் சமூகப் பொறுப்பா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சமூகங்களில் பிரபலங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன என்பது தொடர்பான விவாதங்கள், எப்போதுமே உருவாகி வந்திருக்கின்றன. ஆனால், பேரழிவுகள் அல்லது அதைப் போன்ற சம்பவங்களின்போது, இது தொடர்பான விவாதங்கள் அதிகம் எழுவதுண்டு. அதேபோலவே, சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், அதைத் தொடர்ந்தான குழப்ப, பதற்ற, அழிவு நிலைமைகளின்போது, இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புத் தொடர்பாக அதிகம் கவனஞ்செலுத்தப்பட்டது. அதைப் போன்றே, அண்மையில் கசிந்த அனிருத் - சிம்பு கூட்டணியின் பாடலின் போதும், இதே கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையிலேயே…
-
- 0 replies
- 214 views
-
-
மண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா? மயூரப்பிரியன்.. December 22, 2019 மண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா?, சூழற் படுகொலை இனப் படுகொலையின் இன்னொரு வடிவம், மணல் மாஃபியாக்களைக் கைது செய், அரசியல்வாதிகளுக்கு மணல் உரிமம் வழங்காதே, அரசே உன் பின்னணியில் மணல் மாஃபியாக்களா?, சட்டவிரோத மணல் அகழ்வைத் தடைசெய், மணல் வளத்தைச் சூறையாடாதே என சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு விண்ணை பிளக்கும் கோஷங்களுடன் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கடந்த புதன்கிழமை (18ஆம் திகதி) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆம். புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்சே தெரிவான பின்னர் வடக்கு கிழக்கில் ஆங்காங்கே ம…
-
- 0 replies
- 278 views
-
-
ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்? ஆர். அபிலாஷ் நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லிசேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சிஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யாமற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால்ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பதுபயன் தரும். 1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரேஅல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள…
-
- 0 replies
- 836 views
-
-
‘சிறீலங்கா அரசு பன்னாட்டு சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து மறைந்து போகாது தடுப்பது எப்படி?’ – யஸ்மின் சூக்காவுடன் ஒரு நேர்காணல் October 24, 2020 தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா (Yasmin Sooka), கடந்த பல ஆண்டுகளாக சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உரத்துக்குரல் கொடுத்து வரும் ஓர் மனித உரிமை ஆர்வலர் ஆவார். அவரது தலைமையில் இயங்குகின்ற உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Project for Truth and Justic – ITJP) என்ற அமைப்பு, சிறீலங்காவின் இறுதிப்போரின் போதும், அதன் பின்னரும் அங்கே மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி பன்னாட்டுச் சமூகத்தில், தமிழ் மக்கள் சார்பாகக் குரலெழுப…
-
- 0 replies
- 353 views
-
-
தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: அகில இந்திய அண்ணா தி.மு.க-வின் எதிர்காலம் மின்னம்பலம் ராஜன் குறை தமிழில் ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘அ’ என்ற எழுத்து சேர்க்கப்படும்போது அது அந்தச் சொல்லுக்கு எதிர்மறையான பொருளைத் தருவது வழக்கம். ‘நீதி’ என்ற சொல்லுக்கு முன் ‘அ’ சேர்த்தால் ‘அநீதி’ என்ற சொல்லாக மாறும். அதுபோல பேரறிஞர் அண்ணாவின் பெயரின் முதல் எழுத்தாக ‘அ’ இருந்தாலும் அதிமுக என்பது தி.மு.க-வின் எதிர்ச்சொல்லாகவே மாறியது. அதற்கேற்றாற்போல அது திராவிடத்துடன் ‘அகில இந்திய’ என்பதையும் சேர்த்து அதன் எதிர்த்தன்மையை அதிகரித்துக்கொண்டது. ஆனாலும் அது தி.மு.க-வின் கொள்கைகளிலிருந்து முற்றாக மாறுபட்டால் மக்கள் ஆதரவை இழந்துவிடலாம் என்ற பிரச்சினையும் இருந்தது. அதனால் தி.மு.க-வ…
-
- 0 replies
- 296 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரமங்கை” செங்கொடியின் 2ம் ஆண்டு வீரவணக்கம் நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ec0KdusUkuA http://www.youtube.com/watch?fea…
-
- 0 replies
- 399 views
-
-
நான்கு தசாப்தங்களின் பின்னர் அமுலாகுமா மரணதண்டனை ? ஜனாதிபதி திகதியை தீர்மானித்து விட்ட நிலையில் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த தர்க்கங்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் ஒரு சந்திப்பு. வரலாற்றுத் தர்க்கம் ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக இருக்கிறான். பாவத்தை செய்கின்றான் என்றால் சமூகத்தின் நலன்கருதி அவனைக் கொன்றுவிட வேண்டுமென மதகுருவும் தத்துவஞானியுமான தோமஸ் அக்கியுனஸின் கருத்தை பிரதிபலிப்பவர்கள் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருமாறு வற்புறுத்துகின்றனர். அது குற்றங்களைத் தடுக்கும் என்பதே அத்தகையவர்களின் பிரதான வாதமாகவுள்ளது. மரண தண்டனை விதித்தல் குற்றங்களை குறைக்கும் அல்லது குற்றம் புரியாதவாறு குற்றவாளிகளைத் தடுக்கும் என்று …
-
- 0 replies
- 587 views
-
-
அறுவடைக் காலம் மப்றூக் 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து …
-
- 0 replies
- 345 views
-
-
`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன? கொரோனாவை முற்றிலும் ஒழிக்க 2022 வரை சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,98,535- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,612 - ஆகவும் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவின் சில பகுதிகள…
-
- 0 replies
- 288 views
-
-
தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் நமது மக்களின் தேசியப் பங்களிப்பும் திகதி: 01.03.2009 // தமிழீழம் // [] உலகெங்கும் பரந்து வாழும் நம் தமிழ் பேசும் மக்கள் முன் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எழுந்துள்ள பல கேள்விகளுள் முதன்மையானது, நம் தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பங்களிப்பு பற்றியதுமாகும் என்பதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எமது சுதந்திரப் போராட்டம் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் முளைவிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகி முப்படைகளுடன் வெற்றிநடையிட்டும் வருகையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் சிங்கள சிறிலங்கா அரசு இறுதியாகச் செய்த "யுத்த நி…
-
- 0 replies
- 541 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5lobphqaWzY
-
- 0 replies
- 424 views
-
-
உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும், பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையையும், வான்பிரிவு ஒன்றையும், பீரங்கிப் படைப்பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கொண்ட, நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்த, ஒரு வலிமையான இராணுவ அமைப்பு என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. அதுபோலவே, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை இராணுவத்தின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. போர் வெற்றி கொள்ளப்பட்ட வழிமுறைகளில் தவறுகள், விமர்சனங்கள் இருக்கலாம்…
-
- 0 replies
- 397 views
-
-
சுதந்திர இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு - நா.யோகேந்திரநாதன் இலங்கை சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளே ஆகி விட்டநிலையிலும் இந்த நாடு மூன்று அரசியலமைப்புக்களைச் சந்தித்து விட்டது. சோல்பேரி அரசியலமைப்பின் அடிப்படையில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு 24 ஆண்டுகளின் பின்பு இரண்டாவது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து 6 வருடங்களின் பின்பு அடுத்த அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது. ஒவ்வொரு புதிய அரசியலமைப்புகளும் அமுலுக்கு வரும் போது நாட்டின் பொதுவான அரசியல் திசை மார்க்கத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை மறுக்கமுடியாது. நாட்டின் தேசிய அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகள், சர்வதேச உறவுகள் போன்ற முக்கிய விடயங்களில் ஏற்கனவே கையாண்ட கொள்கைகளிலிருந்து வெளியேறி புதிய…
-
- 0 replies
- 380 views
-
-
செப்டம்பர் 11 என்றாலே ஊடகங்கள் நம் மீது திணித்து வைத்திருப்பது அமெரிக்க வர்த்தக கட்டட இடிப்பு நிகழ்ச்சிதான் அது குறித்தான ஒப்பாரி இன்னும் ஓயவில்லை ! அமெரிக்கா வணிக நோக்கிற்காக அது உலகெங்கும் நடத்தியிருக்கிற வன்முறை சிந்திய குருதி கொலைகள் ஆகியன அந்த செவிட்டு ஊடகங்களின் காதுகளை திறந்ததாக தெரியவில்லை. அதே செப்டம்பர் 11 1973 ல் சிலி நாட்டில் அமெரிக்கா 3000 பேரை கொன்று குவித்து அந்நாட்டின் அதிபரையும் கொன்று தன் ஆட்சியை அங்கு நிறுவ முயன்றது. ///////// சல்வதோர் அலாண்டே 1908 ஆம் ஆண்டு ஜூன் 26 ல் பிறந்தார். வசதியான குடும்பம் மருத்துவப்படிப்பு முடித்திருந்தார்.. சோசலிசக் கட்சியை ஆதரித்தார். சின்னசின்ன பதவிகளில் இருந்தார். நலத்துறை அமைச்சராக இருந்தார் மூன்று ம…
-
- 0 replies
- 420 views
-
-
https://www.youtube.com/watch?v=SM-DbV2Sil0
-
- 0 replies
- 610 views
-
-
அணுகுண்டால் வல்லரசு அந்தஸ்த்தை காட்ட முடியாத புதிய உலகம் வருகிறது.. அணு வல்லரசுகள் தமது வல்லரசுத் தன்மையை இழக்க ஆரம்பிக்கின்றன.. ஈரானிய அமைச்சர் அப்துல் ஸாலியின் கருத்து இதை மேலும் வலியுறுத்துகிறது… தற்போது வடக்கு ஆபிரிக்கா – மத்திய கிழக்கு வட்டகையில் பரவியுள்ள மக்கள் புரட்சியானது அணு குண்டை வைத்திருந்தால் ஆட்சியை பாதுகாக்கலாம் என்ற பழையகால எண்ணத்திற்கு பலத்த அடி போட்டு வருகிறது. மேலை நாடுகளின் சூழ்ச்சியால் தமது நாடு சீரழிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அணு குண்டை வெடித்துக் கொள்வதே ஒரே வழி என்று கருதிய உலகம் மெல்ல மெல்ல அந்தக் கொள்கை தவறானது என்பதைப் புரிந்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக நேற்று ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அக்பர் ஸாலி ஜெனீவாவில் வ…
-
- 0 replies
- 925 views
-
-
கவலை தரும் கண்துடைப்பு ஐக்கியம்; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? December 15, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — ‘வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழு’ (Northern and Eastern Provinces civil Society Group) வின் ஏற்பாட்டில் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திய கூட்டமொன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் 18.11.2023 அன்று பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் ஆய்வாளர்களாகக் கருதப்படும் யதீந்திரா-நிலாந்தன்-தனபாலசிங்கம் (தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்) ஆகியோர் உரையாற்றியிருக்கின்றனர். முதலி…
-
- 0 replies
- 168 views
-
-
புறக்கணிக்க வேண்டாம் ஒரு சமூகத்தை அநீதிக்குட்படுத்தும் வகையில் செயற்பட்டதன் காரணமாக கடந்த முப்பது வருடகாலமாக எமது நாடு மிகப்பெரிய யுத்தத்தை எதிர்கொண்டதுடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்தியது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக நாம் எதிர்கொண்ட பின்னடைவு எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்களை சுமந்து வந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் வடுக்களுடன் வாழ்கின்றார்கள். இவ்வாறான சூழலில் மீண்டும் ஒரு யுத்தத்தையோ அல்லது அதுபோன்றதொரு நிலைமையையோ எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இந்த நாடு இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்…
-
- 0 replies
- 278 views
-
-
ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் - அத்துரலியே ரத்ன தேரர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். அத்துடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் அரச அதிகாரங்களிலிருந்து நீக்கப்படவேண்டும். அவர்களை பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை தேட முடியாதெனவும் அத்துரலிய ரத்ன தேரர் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்விய…
-
- 0 replies
- 595 views
-