நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
மரண தண்டனையை நேர்மையாக எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 03 புதன்கிழமை, பி.ப. 12:31 Comments - 0 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம், குண்டைக் கட்டிக் கொண்டு தாக்குதலுக்குத் தான் போகாமல், மற்றவர்களை ஏவி, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்தான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், அவன் கைது செய்யப்பட்டான் என்றும் வைத்துக் கொள்வோம். இந்தப் படுபாதகச் செயலுக்காக, சஹ்ரானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா? 2015ஆம் ஆண்டு, புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவியைக் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கி, கொலை செய்தவர்கள் விடயத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா? அதே ஆண…
-
- 0 replies
- 255 views
-
-
போரின் முடிவுக்குப் பிறகு ஒரு தசாப்தம் கடந்தும் கூட நிலையான வாழ்விடம் இல்லை தி.ராமகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை 65 இலங்கை அகதிகளை இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில் பிறப்பித்த உத்தரவு நீண்டகாலப் பிரச்சினை ஒன்றுக்கு இரு நாடுகளும் தீர்வுகாணவேண்டிய தேவை மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது. இலங்கையில் இருந்து 1983 -- 2012 காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தப்பியோடிவந்த சுமார் 95 ஆயிரம் அகதிகள் சம்பந்தப்பட்டதே இந்த பிரச்சினையாகும். அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் மத்திய அரசாங்கத்தின் கணிசமான நிதியுதவியுடன் மாநில அரசாங்கத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற 107 முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்று மதிப்பீடு ஒன்று …
-
- 0 replies
- 192 views
-
-
சோபாவும் சுயாதிபத்தியமும் : அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகள் குறித்த விசனங்கள் ஏன்? (பி.கே.பாலசந்திரன்) அமெரிக்காவுடன் படைகளின் அந்தஸ்த்து உடன்படிக்கை (Status of Forces Agreement – SOFA) கைச்சாத்திடும் தறுவாயில் இலங்கை இருக்கிறது.மிகவும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படுகின்ற இந்த உடன்படிக்கை கொள்கையளவில் இலங்கையை இலட்சக்கணக்கான அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளினதும், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொந்தராத்துக்காரர்களின் மகிழ்ச்சியானதொரு வேட்டைக்களமாக மாறிவிடக்கூடும் என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். தயாராகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு சர்ச்சைக்குரிய உடன்படிக்கை மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்து (…
-
- 0 replies
- 288 views
-
-
‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ காரை துர்க்கா / 2019 ஜூலை 02 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:43 Comments - 0 “நான் பிறந்தது யாழ் நகரப் பகுதியிலுள்ள ஒரு பிரதேசம்; கல்வி கற்றது, யாழ். நகரில் உள்ள கல்லூரி; உயர்கல்வி கற்றது, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம்; பணியாற்றியது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் அதனை அண்மித்த வைத்தியசாலைகளிலும் தான்” என வைத்தியர் ஒருவர் கூறினார். யாழ்ப்பாண இடம்பெயர்வு (30.10.1995) இடம்பெற்றிருக்காது விட்டால், நாவற்குழிக்கு அப்பால், என்ன நிறமென்றே பலருக்குத் தெரிந்திருக்காது என்று, நம்மவர்கள் நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. இவ்வாக்கியம், இவ்வைத்தியர் விடயத்தில் அப்படியே, அச்சொட்டாகப் பொருந்துகிறது அல்லவா? ஆயுதப் போரும் அதனால் ஏற்பட்ட வல…
-
- 1 reply
- 764 views
-
-
சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள போதிலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண் டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் தளர்ச்சியைக் காண முடியவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கில் இட்டு தண்டிக்கின்ற நடைமுறை நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மரண தண்டனைக்குப் பதிலாக அந்தக் கைதிகள் ஆயுட்கால சிறைத் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார்கள். ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத் தீர்மானம் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்துள்ளது. எதிர்ப்புகள் இருந்த போதிலும், மரண தண்டனைக் கை…
-
- 0 replies
- 325 views
-
-
ரத்தன தேரரின் ‘முயல்’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூலை 02 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:09Comments - 0 முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இனவாதிகளும், அவர்களுக்குத் துணைபோகும் ஊடகங்களும் நீண்ட காலமாகவே, எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதிகளுடன் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்புகள் இர…
-
- 0 replies
- 684 views
-
-
கல்முனை உண்ணாவிரதம் தீர்வுக்கு வழிகோலுமா ?: அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை மாறுமா..? கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கடந்த வாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த சிவக்குருக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழகக்கோன் விஜ…
-
- 0 replies
- 211 views
-
-
முஸ்லிம்களை அரவணைப்பது போன்ற பாசாங்கு எதற்கு..?: இனவாத சிந்தனைகளின் உச்சகட்டம்! முஸ்லிம்கள் குறித்து பௌத்த கடும்போக்குவாதிகள் சிங்கள மக்களிடையே பல்வேறு பீதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மக்களிடையே இனவாதத்தைத் தூண்டி அதனூடாக ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதே இவர்களின் நோக்கமாகும். யுத்த காலத்தில் தமிழர்களின் தாயகக் கோட்பாடு, ஆயுதப் போராட்டம் போன்றவற்றை தமது இனவாத பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் போது முஸ்லிம்களை பகைத்துக் கொள்ளக் கூடாதென்பதற்காக முஸ்லிம்களை அரவணைத்துக் கொள்வது போன்று பாசாங்கு காட்டிக் கொண்டார்கள். முஸ்லிம்களும் பௌத்த இனவாதத்தின் கோர முகத்தை புரிந…
-
- 0 replies
- 571 views
-
-
விசாரணைகளால் வெளிவரும் நிதர்சனங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:12 Comments - 0 முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கடும்போக்குச் சக்திகளும் அதிகாரத்துக்காக ஏங்கும் சில பெருந்தேசிய அரசியல்வாதிகளும் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையும் நிதர்சனங்களும் தற்போது மெல்லமெல்ல வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. இல்லாததைச் சோடித்து, ஒன்றை ஒன்பதாக்கி, சிறிய விவகாரத்தைப் மிகப்பெரிய பரிமாணங்களாக உருப்பெருப்பித்துக் காட்டியவர்களின் முகத்திரைகள், தற்போது கிழிய ஆரம்பித்திருக்கின்றன. ‘மனிதன் தவறுக்கு மத்தியில் பிறந்தவன்’ என்ற அடிப்படையில் பார்க்கும்போது, முஸ்லிம் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களின் தரப்பில், பிழைகளே நடக்கவ…
-
- 0 replies
- 304 views
-
-
2001 ஆம் செப்டம்பர் 11 ஆம் திகதி உலக வரலாற்றில் நீங்கா கறையை ஏற்படுத்திய உலக வர்த்தக மைய கோபுரங்கள் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த நாளாகும். 3000 உயிர்களைக் காவுகொண்ட இச்சம்பவம் நடைப்பெற்று 20 வருடத்தை அண்மித்துள்ள நிலையில் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் ஒரு தொழிலாளியினால் மிக நுணுக்கமாக தமது கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இவரினால் சுமார் 2400 புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட இருவெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்பட்ட புகைப்படங்களை விடவும் மிகத் தெளிவாக உலக வர்த்தக மைய கோபுரங்களின் தாக்குதலைக் காட்டுகின்றன எனத் தெரி…
-
- 8 replies
- 1.6k views
-
-
நாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் !!!! கல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட தேரர் தலைமையிலான குழுவினரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடை வேளையுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளும் பொலிஸார் மற்றும் தேரர்களின் அமுத வாக்குறுதிகளை நம்பி நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சாப்பாடு கொடுப்பது, விழா எடுப்பது என எந்த முக்கிய நிகழ்வுகளாக இருந்தாலும் ஐக்கிய சதுக்கம் தயாராக இருக்கிறது. அந்த சதுக்கத்தில் முஸ்லிம் தரப்பு சத்தியாகிரகம் எனு…
-
- 0 replies
- 337 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதியும் 2014ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாகத் தமது பரம எதிரியாகவும் இருந்தவருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் கூட்டுச் சேர முயற்சிக்கிறார். மறுநாள், அந்த முயற்சிகள் அவ்வாறே இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரத் தயார் எனக் கூறினார். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டி…
-
- 0 replies
- 248 views
-
-
19 ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடு: சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எண்ணம் என்கிறார் ஜனாதிபதி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட் டம் நாட்டுக்குச் சாபக்கேடாகும். அதனை ரத்து செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள் அதனை ரத்து செய்வதே நாட்டுக்கு நன்மை பயக்கும். நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமைக்கு 19ஆவது திருத்தச் சட்டமே காரணமாகும். அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காகவே சுமந்திரன், ஜயம்பதி விக்கிரமரட்ன ஆகியோரால் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள…
-
- 0 replies
- 239 views
-
-
ஓநாய் அழுத கதை முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:19Comments - 0 ‘சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன. ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே நிலத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், கடந்த காலம் ஏற்படுத்திய கசப்புகள், இவ்வாறான மனப்பதிவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்…
-
- 2 replies
- 424 views
- 1 follower
-
-
மாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடையை வெளிப்படுத்தினார் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய தமிழர் அரசியல்களம் தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு சாதாகமானதாக உள்ளதா? பதில்:-ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது நிர்வாக வசதி கருதி இந்நா…
-
- 0 replies
- 958 views
-
-
அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள் -பி.கே.பாலச்சந்திரன் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடங்கி பிறகு பதவிக்கு வந்த ஒவ்வொரு இலங்கை ஜனாதிபதியுமே மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதித் பதவியை இல்லாதொழித்து, பிரிட்டிஷ் வெஸ்மினிஸ்டர் பாணியிலான – பாராளுமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்ற ஆட்சிமுறையொன்றை மீண்டும் ஏற்படுத்துவதாக உறுதியளித்துக்கொண்டே ஆட்சியதிகாரத்திற்கு வந்தனர். ஆனால் அதே ஜனாதிபதிகள் (திருமதி குமாரதுங்க உட்பட) அதிகாரத்தைக் கைவிடத் தவறியது மாத்திரமல்ல, ஏற்கனவே காணப்படுவதை விட மேலதிகமான அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெறுவதிலும் நாட்டம்காட்டி வந்திருக்கி…
-
- 0 replies
- 724 views
-
-
தமிழர்கட்கு ஒன்றல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் எதிர்க்கப் போவதில்லை - மனோ உட்பட பலரும் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் கருத்து - வை.எல்.எஸ். ஹமீட் தமிழர்கட்கு ஒரு பிரதேச செயலகமல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் முஸ்லிம்கள் எதிர்க்கப் போவதில்லை ஆனால் கல்முனையை அவ்வாறு வழங்குவதில் நியாயமில்லை என சட்ட முதுமானி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஒரு தரப்பினரும் அதனை அவ்வாறு மேற்கொள்வதில் நியாயமில்லை என மற்றொரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில், வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 753 views
-
-
முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடு…
-
- 0 replies
- 375 views
-
-
ரவி பிரகாஷ் ராஞ்சியிலிருந்து பிபிசிக்காக படத்தின் காப்புரிமை SARTAJ ALAM Image caption தப்ரேஜ் "அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்க…
-
- 0 replies
- 352 views
-
-
சிங்களத்தில்: சிசிர குமார பண்டார, தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார் ஆதிகாலத்திலிருந்தே இலங்கை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தோரும் இங்கு குடியேறி, இந்நாட்டின் பிரஜைகளானார்கள். அவ்வாறு வந்து குடியேறிய ஒரு இனக்குழுமமாகவே இந்நாட்டு முஸ்லிம்களும் திகழுகிறார்கள். ஆனாலும் இதர இனங்களை விடவும் முஸ்லிம்களிடம் விசேட தன்மையொன்று காணப்படுகிறது. அதாவது அவர்களுள் ஒரு சிலரது பரம்பரைப் பெயர்கள் சிங்களப் பரம்பரைப் பெயர்களோடு இணைந்ததாகவுள்ளமையே இவ்வாறு சிறப்பிடம் பெறுகிறது. அக்குறண முஹம்திரம்லாகே கெதர அபூபக்கர், உடரட்ட ராஜகீ…
-
- 0 replies
- 882 views
-
-
கூட்டைத் தடுக்கும் ‘புறச்சக்தி’ * விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே கொண்டு வருவதில், அவரை மாற்று அரசியல் தலைமையாக வெளிப்படுத்துவதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணிசமான பங்கு உள்ளது. *ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்கிருந்தும் காய்வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்…
-
- 0 replies
- 330 views
-
-
‘அடையாளங்களை’ இழக்கும் முஸ்லிம் சமூகம்: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை முஸ்லிம்கள் எதிர்காலம்..! பாரம்பரியத்தினூடு இன்றைய தலைமுறையினருக்கு கடத்தப்பட்ட இன, மத, கலாசார அடையாளங்களை இழப்பதானது நமது வரலாற்றின் பக்கங்களை நாமே கிழித்தெறிவதைப் போன்றதாகும். இலங்கை முஸ்லிம்கள் நிகழ்காலத்தில் அவ்வாறான ஒரு நெருக்கடி நிலையையே எதிர்கொண்டிருக்கின்றனர். தனித்துவ அடையாளங்களைக் கொண்ட இஸ்லாமியனாகவோ அல்லது முஸ்லிமாகவோ அன்றி, ‘இரண்டும்கெட்டான’ நிலைக்குள்ளான ஒரு ‘கலப்பு சமூக விலங்காக’ வாழ்வதற்கான நிர்ப்பந்தங்கள், தெட்டத் தெளிவாக முஸ்லிம்கள் மீது தவணை அடிப்படையில் பிரயோகிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவ…
-
- 0 replies
- 293 views
-
-
அரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள்!! -சிறிமதன் June 21, 2019 என்றோ ஒருநாள் விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் அடைபட்டு கிடக்கும் இவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் கம்பிகளுக்கு பின்னால் இன்றும் தங்கள் விடுதலையை எதிர்பார்த்து தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பவர்களே நாம் வழமை போன்று அரசியல் கைதிகள் என்று ஒற்றை வார்த்தையில் கூறுபவர்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர அரசாங்கத்தை எச்சரித்திரு…
-
- 0 replies
- 236 views
-
-
கோத்தாவுடன் எனக்கு எந்த தொடர்புமில்லை : இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் (ஆர்.யசி ) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இருந்ததில்லை. அவர்கள் எனக்கு சம்பளம் கொடுக்கவும் இல்லை. என்னைக் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைக்க வேண்டும் என்ற தேவை சிலருக்கு உள்ளது என இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவிக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்காக அழைக்…
-
- 0 replies
- 254 views
-
-
அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019 அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல்,…
-
- 0 replies
- 393 views
-