நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள் Editorial / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 12:31 Comments - 0 போர் முடிவடைந்து, பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், எம்மை நாமே கேட்ட வேண்டிய கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளை, மனச்சுத்தியுடன் கேட்க வேண்டும். அதற்கான பதில்களையும் தேட வேண்டும். இதைச் செய்வதாயின் எம்மை நாமே சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். சுயவிமர்சனத்துக்குத் தயாரில்லாத மனிதர்களிடமோ, சமூகத்திடமோ எதிர்பார்க்க அதிகம் இல்லை. இன்று விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ தயாரில்லாத சமூகமாக இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகமும் அதனிலும் மேலாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் உள்ளது. முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டமும், அதற்கு முந்தைய தமிழ்த்தேசி…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஊடகப் பொறுக்கித்தனமும் தண்டனைகளும் Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 12:20 தென்னிலங்கையிலிருந்து செயற்படும் இலத்திரனியல் ஊடகமொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தான், அண்மைய சில நாள்களாக அதிக கவனத்தை ஈர்த்திருந்தன. அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள், இலங்கை முழுதும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், சுமந்திரன் தெரிவித்த கருத்துகளும், அவை தொடர்பான அறிக்கையிடல்களும் முக்கியமானவை. தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரைக் கோபப்படுத்தும் வகையில் தான், சுமந்திரனின் அவ்வுரை அமைந்திருந்தது என்பது வெளிப்படை. ஒருமித்த நாடு என்பதற்குள் தீர்வொன்றைப் பெற வேண்டிய அவசிய…
-
- 0 replies
- 314 views
-
-
எதற்காக அஞ்சுகின்றார்கள்; எதற்காகக் கெஞ்சுகின்றார்கள்? காரை துர்க்கா / 2019 ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:53 Comments - 0 தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பெருவிழாக்களில், தைப்பொங்கல் தனியிடத்தை வகிக்கின்றது. தங்களது வேளாண்மைச் செய்கைகளுக்கு உதவிய, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய நன்னாளே உழவர் திருநாளான, பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் விழாவையொட்டி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துச் செய்திகள் வெளியிடுவது வழமை. இம்முறை பொங்கலுக்கும் இவர்களது வாழ்த்துகள் செய்தித்தாள்களின் முதற் பக்கத்தை அலங்கரித்திருந்தன. ‘கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு தைப்பொங்கல் சிறப்பு’ என ஜனாதிபதியும் ‘சகவாழ்வை அ…
-
- 0 replies
- 798 views
-
-
இரணைமடுவின் வெள்ள அரசியல் – ந.கார்த்திகேசு January 21, 2019 வெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது அவர்களுக்குச் சேவை வழங்கும் துறைகளுக்கோ புதியனவல்ல. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படும் வருணபகவானின் திருவிளையாடல்களும் அதனை எதிர்கொண்டு நிமிரும் சனங்களும் வன்னிக்கு வழக்கமான ஒன்று. காலம் காலமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் கிளிநொச்சி மண்ணில் இவ்வருடம் ஏற்பட்ட வெள்ளமும் அதனைத் தொடர்ந்து நடந்துவரும் சம்பவங்களும் வன்னியில் வசிக்கும் அல்லது வன்னியைத் தெரிந்த அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளன. மீள்குடியேற்றங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் எங்கும் எதிலும் கலந்த அரசியல் வன்னியின் வெள்ளத்தையும் …
-
- 0 replies
- 718 views
-
-
அரசியல் சூது விளையாட்டே புதிய அரசியலமைப்பை - விஜித்த ஹேரத் புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தினை வைத்து தற்போது ஓர்அரசியல் சூது விளையாட்டே நடைபெறுகின்றது. கூட்டமைப்பினர் தமிழ் மக்களையும், ராஜபக் ஷ, மைத்திரி தரப்பினர் சிங்கள மக்களையும், ஐ.தே.க.வினர் மேற்குலகத்தினையும் ஏமாற்றுகின்றார்கள் என்பதே யதார்த்தம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத், வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டில் ஜே.வி.பி தற்போதும் இருக…
-
- 0 replies
- 758 views
-
-
ஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல் மழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.. இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்தே பெருந்தொகையான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இவர்களில் எத்தனைப்பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் செவிமடுத்திருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. சபரிமலைக்கு 10 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை என்ற தடையானது இந்திய அரசியல் யா…
-
- 0 replies
- 710 views
-
-
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு! வவுனியாவில் தம் தலைவனின் படத்தை முதல்நாள், முதல் காட்சி பார்க்க நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்று இரு தமிழ்ப் படத் தீவிரவாத குழுக்களிற்குள்ளே நடந்த உரிமைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப்படத் தீவிரவாதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறாராம். இந்தப் போராட்டத்தினால் வவுனியா - கண்டி வீதி போக்குவரத்தும் தடைப்பட்டதாம். தீவிரவாதிகளின் சண்டித்தனத்தினால் படம் பார்க்காமல் திரும்பிய அகிம்சை வழி ரசிகர்கள் தம் வாழ்வின் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்து விட்டோம் என்று கதறி அழுத கண்ணீரினால் வவுனியாவின் குளங்கள் எல்லாம் நிறைந்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தக் கொடுமை நமது மண்ணில் தான் நடந்திரு…
-
- 1 reply
- 1k views
-
-
புதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 18 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:57 இலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது பற்றி மீண்டும் கருத்துப் பரிமாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை, இனிமேலும் திருத்திக் கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, 2015இல் பதவிக்கு வந்த அரசாங்கம் மேற்கொண்டது. இதன்படி, உத்தேச அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை, கடந்த 2016ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள் ஆராயப்பட்ட நிலையில், பின்வந்த அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால், புதிய அரசமைப்பை வரையும் பணிகள் தாமதமடைந்திருந்தன. …
-
- 0 replies
- 391 views
-
-
காலம் கடந்த ஞானம் அவசியமில்லை Editorial / 2019 ஜனவரி 17 வியாழக்கிழமை, மு.ப. 01:21 Comments - 0 -க. அகரன் கருத்துகளைத் தௌிவாக வெளிப்படுத்துவதில் ஏற்பட்டு வரும் முரண்பாடான நிலைமைகளுக்குத் தொடர்பாடல் சீரின்மையே (communication error) காரணமாக அமைகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்பட்டு தீர்வுகள் காண்பது தொடர்பான தெளிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வழங்கப்படுவது வழக்கம். எனினும், இளைஞர், யுவதிகளுக்கும் அரச திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும் இத்தகைய தௌிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் அரசியல் தளத்தில் இருப்போருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புக…
-
- 0 replies
- 405 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின உறுப்பு நாடாக பிரிட்டன் தொடர வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார், இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகளையும், நிபந்தனைகளையும் உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு வாக்களித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிராக 432 வாக்குகளையும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர். …
-
- 0 replies
- 372 views
-
-
வெட்கக்கேடான இனவாத அரசியல் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 04:25 ‘‘சிங்களத் தலைவர்கள், சிறுபான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி வாழ்கிறார்கள்; அவர்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள்; அவர்களது எதிர் காலத்தைப் பாழாக்கச் சதித் திட்டங்களை வகுத்துச் செயற்படுகிறார்கள்” எனக் கூறியே, ஒரு சாரார் கடந்த பல தசாப்தங்களாக அரசியல் நடத்தி வருகிறார்கள். அதேவேளை மற்றொரு சாரார், “தமிழர்கள் நாட்டைப் பிரித்தெடுக்கச் சதி செய்கிறார்கள்; அதற்குச் சிங்களவர்களில் ஒரு சாரார் துணைபோகிறார்கள்; தமிழர்களுடன், இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது மஹிந்த அணியினரும், அவ்வாறு தான் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். …
-
- 1 reply
- 980 views
-
-
FINAL STAGE OF THE TAMIL MUSLIM DISCOURSE. இறுதிக் கட்ட தமிழர் முஸ்லிம்கள் பெரும் கருத்தாடல். . நன்பன் சித்திக் அவர்களுக்கு. . M YM Siddeek மச்சான் நான் என்ன நினைக்கிறேன் நீ என்ன நினைக்கிறாய் என்பது கருத்துகள்தான். அவற்றுக்கு சம்பந்த பட்ட மக்கள் ஆதரவு தராவிட்டால் அவை செயல்படுவதில்லை. வடகிழக்கு விவகாரத்தில் தமிழர் முஸ்லிம்கள் என மொழியால் ஒன்றுபட்ட இனத்தால் வேறுபட்ட இரு இனங்கள் செயல் படுகின்றன. அவை வெவ்வேறு அரசியல் தலைமைகளை கட்டி எழுப்பியுள்ளன. அவற்றின் தேசிய சர்வதேசிய நடவடிக்கைகளின் வரலாறும் வெற்று பட்டவை. இதைவிட சிங்கள பிரதேசங்களும் உள்ளன. இந்த நிலையில்தான் 1987ல் தமிழ்ப் போராளிகளது மிக குறைந்த பட்ச்சக் கோரிக்கையாக இந்திய அழுத்தத்தால் மாகாண சபைகளும் வடகிழக்கு இண…
-
- 0 replies
- 354 views
-
-
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, அவர்களது உழைப்பை கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசாங்கமும், அந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிமார் சம்மேளனமும் சொகுசாகவே இருக்கின்றன. ஆனால் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தம்மையே உருக்கி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியானது. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஒப்பந்தகாலம் நிறைவடைவதற்…
-
- 0 replies
- 493 views
-
-
மஹிந்த சு.க.வில் உள்ளாரென கூறுவதற்கு நான் முட்டாள் அல்ல ;மனம் திறந்தார் துமிந்த மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாக்கும் முகமாகவே எழுத்துமூலமான அறிவிப்பு வழங்கப்பட்டது. தவிரவும் எழுத்துமூல அறிவிப்பு நேர்மையாக மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றல்ல. தனிப்பட்ட ரீதியில் சு.கவில் மஹிந்த அணியினர் தற்போதும் உள்ளனர் என வலியுறுத்திக் குறிப்பிட்டு தான் முட்டாளாக முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வ…
-
- 0 replies
- 321 views
-
-
தமிழ் மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் ஒற்றுமையின்மையே - வடக்கு ஆளுநர் தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மையே என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் இராகவன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்தார். கேள்வி:- பல்வேறு தரப்பினரிடத்திலிருந்தும் வடமாகாண ஆளுநர் பதவிக்கான பரிந்துரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் தாங்கள் அப்பதவிக்கு எவ்வாறு நியமிக்கப்பட்டீர்கள்? பதில்:- நான் இலங்கை தமிழன் என்பதால் அகதிவாழ்க்கை எனக்கு புதிதல்ல. நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நான் உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் பட்டப்படிப்புக்களையும் உள்நாட்டிலும் வெள…
-
- 0 replies
- 1k views
-
-
WELL DONE SUMANTHIRAN பாராட்டுகள் சுமந்திரன். - வ.ஐ.ச.ஜெயபாலன்.குற்றம் செய்த தரப்பு விசாரிக்கமுடியாது சர்வதேச விசாரணை அவசியமென சுமந்திரன் 10.1.2019 அன்று நாடாளுமன்ற உரையை ராஜதந்திர அவசியங்களை உணந்து வரவேற்கிறேன். . இன்று இலங்கை அரசின்மீது அழுத்தங்களை உருவாக்கி தாயக தமிழ்பேசும் மக்களைக் பாதுகாக்க மேற்குலகையும் இந்தியாவையும் அனுசரித்து கருமமாற்றுவதைத்தவிர வேறு மார்கங்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்தவகையில் சுமந்திரனின் 10.1.2019 நாடாளுமன்றப் பேச்சு விமர்சனங்களுடன் இராஜதந்திர அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டியதாகும். . இலங்கையில் நிகழ்ந்த மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணையும், போர்குற்றங்கள் தொடர்பான விசாரணையும் செர்பிய போர்குற்ற விசாரணை மற்று…
-
- 0 replies
- 509 views
-
-
உலக தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 45ஆம் ஆண்டு நினைவு தினம் – சுரேஸ் – அனந்தி – தவராசா… January 10, 2019 தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் – சுரேஸ் தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அ…
-
- 0 replies
- 260 views
-
-
-எம்.ரீ. ஹைதர் அலி- வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். என்ற உண்மை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும். வட மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட தமிழ் மக்களை கௌரவிக்கும் முகமாக தமிழர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட முஸ்லிம் மக்களை கௌரவிக்கும் முகமாக முஸ்லிம் ஒருவரும் ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிலையில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர். மதத்தினால் இருவரும் வேறுபட்டாலும், மொழியினால் இவர்கள் இருவரும் தமிழ் மொழி பேசும் சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த ஆளுநர்கள் என்ற வரலாற்றினை அரியாத சிலர் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
போருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி Editorial / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, பி.ப. 05:03 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா (படப்பிடிப்பு: யோஷிதா பெரேரா) முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் வடக்கின் ஏனைய சில பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், அப்பகுதிகள் மீதான தேசிய ரீதியிலான கவனத்தை அதிகரித்திருக்கின்றன என்று சொன்னால், மிகையாகாது. வெள்ளத்தின் நேரடிப் பாதிப்புகள் இப்போது குறைவடைந்து, அனர்த்தத்துக்குப் பின்னரான பாதிப்புகள் பற்றிக் கவனஞ்செலுத்த வேண்டிய நிலையில், அவ்வாறு கவனஞ்செலுத்த வேண்டிய முக்கிய விடயப்பரப்பாக, வைத்தியத்துறை காணப்படுகிறது. விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தமிழ் மிரர், டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள், ஸ்ரீ …
-
- 0 replies
- 465 views
-
-
வெள்ளத்தனையது மலர் நீட்டம் பட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க வேண்டிய மக்களைப் பார்க்க வைத்திருக்கிறது. அண்மையில் வந்த வெள்ளத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட ஒன்று, குச்சொழுங்கைக்குள்ளும், மதவடிகளிலும், பெரிய மரங்கள் நிற்கும் சனசமூக நிலையங்களுக்குப் பக்கத்திலும் நின்று தமது அன்றாடங்களைக் கழித்துக் கொண்டிருந்த பெருந்தொகுதி இளம் தலைமுறையினரை வெள்ளம் மக்களை நோக்கித் திருப்பியிருக்கிறது. சமூக வலை…
-
- 0 replies
- 778 views
-
-
லசந்த: உறங்காத விழிகள் Maatram Translation on January 8, 2019 பட மூலம், Selvaraja Rajasegar 2019 ஜனவரி 08ஆம் திகதி மறக்க முடியாததொரு வியாழக்கிழமை. “சண்டே லீடர்” பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டது அன்று காலை வேளையில். பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இருந்த நேரத்தில்தான் விடயம் எம் காதுகளுக்கு எட்டியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புக்காக நாம் தயாராக இருந்தோம். அவ்வேளையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அநுர யாப்பா திணைக்களத்தின் கீழ் தளத்தில் பணிப்பாளர் நாயகத்துடன்…
-
- 0 replies
- 367 views
-
-
ஜனாதிபதி சிறிசேனவின் திரிசங்குநிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கின்றபோதிலும், அவை தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாதவராக இருக்கிறார் என்று புதிய ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டிருக்கிறது. சபைக்குள் அவரது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைச்சரும் இல்லாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை முதலில் ஊடகங்கள் வாயிலாகக் கிளப்பியவர் முன்னாள் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச. அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் ஜனாதிபதியுடனும் அவரது தற்போதைய நேச சக்திகளான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முகாமுடனும் நெருக்கத்தைப் பேணுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜனா…
-
- 0 replies
- 925 views
-
-
எதிர்பார்ப்புகளுடன் 2019!! பதிவேற்றிய காலம்: Jan 6, 2019 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்பாக முன்வைக்்கப்படவுள்ளதாகக் கூறப்படும் அரசமைப்பு வரைவு பற்றிய பரப்புரை கூட மக்களை ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றும் நட வடிக்கையாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின ரும், பொதுசன மக்கள் முன்னணியும் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்கள் விடுதலைக் கட்சியினர் ஆகிய தரப்பினர் எடுத்த எதிர்நடவடிக்கைகள், அவற்றின் காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள், மோதல்கள் என அனைத்தும்…
-
- 0 replies
- 726 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கலாம் : மீண்டும் கூட்டரசு மஹிந்த - மைத்திரி இணைந்தால்.. : - பாலிதவின் அதிரடி கருத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். 2015 இல் மக்கள் கூட்டு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை உயிர்ப்புடன் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கப்படும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வீரகேசரிக்கு…
-
- 0 replies
- 332 views
-
-
ஆட்டுவித்தல் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 04 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:32 இனங்கள், சாதிகள், மதங்களுக்கு இடையிலான நல்லுறவைக் குலைத்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நூற்றாண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இந்தப் பொது ஒழுங்குக்குள் உள்வந்து, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. கடந்த நூறு வருடங்களாக, இலங்கையில் இனவாதம் ஏதோவோர் அடிப்படையில் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்டதாயும் ஆசீர்வதிக்கப்பட்டதாயும் இனவாத சக்திகள் இருந்திருக்கின்றன. அதற்குப் பிறகு, அந்தச் சக்திகள் தாமாகவே, நிழல் அதிகாரங்களைப் பெற்றுவிட்டதாகவே சொல்ல முடியும். அதாவது, இன்றைய காலப் பகுதியில், க…
-
- 0 replies
- 1k views
-