நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
2019 தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, பி.ப. 09:33 ஐந்து மாநில தேர்தல்கள், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஐந்திலும் ஆட்சி அமைக்க முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், பா.ஜ.க தவித்தாலும், “வட இந்தியாவின் இதயம்” என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனமை மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிவுகள், சற்று பா.ஜ.கவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அருகில்…
-
- 0 replies
- 359 views
-
-
'எனது காதலி உங்களது மனைவியாகலாம். உங்களது மனைவி எனக்கு ஒருபோதும் காதலியாக முடியாது' 1980களின் முற்பகுதியில் கே. பாக்கியராஜ் திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, நடித்த அந்த ஏழுநாட்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் தீர்க்கமாகச் சொல்லி விட்டு வெளியேறும் வார்த்தைகள்தான் இவை. 'இன்னும் ஏழு நாட்களுக்குள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து, அந்தக் காலஅவகாசம் முடிவடையும் தறுவாயில், பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு பற்றிய செய்தி கிடைத்தவுடன், ஏனோ பாக்கியராஜின் கிளைமேக்ஸ் வசனங்கள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன. அவ்வசனங்களை இலங்கை அ…
-
- 0 replies
- 484 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. …
-
- 2 replies
- 572 views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் உரை குறித்து ( வீ. தனபாலசிங்கம் ) பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தனது கொழும்பு வாசஸ்தலத்தில் இருந்து நிகழ்த்திய உரையில் கடந்த ஒன்றரை மாதங்களாக நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியை தேர்தல்களை விரும்புகின்ற அரசியல் சக்திகளுக்கும் விரும்பாத சக்திகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையின் விளைவான ஒன்று என்று மக்களுக்கு காட்டுவதற்கு தன்னால் முடிந்த அளவுக்கு பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தார். . அரசியலமைப்புக்கு விரோதமாக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கருதியதாக உரையில் எந்த தடயமும் இல்லை. அக்டோபர் 26 தாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு பாராளுமன்றத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் …
-
- 0 replies
- 322 views
-
-
முல்லைத்தீவை ஆக்கிரமிக்கும், தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும்? December 15, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தினர் செய்த ஆக்கிரமிப்பு வேலைகளை, இன்றைக்கு இலங்கை தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் செய்கின்றதா என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பரவான கேள்வியாகும். முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இவ் இரு திணைக்களங்களும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ஆள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றன. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கானது, கல்வி, அபிவிருத்த…
-
- 0 replies
- 355 views
-
-
இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக வவுணதீவு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத்தை உரமேற்றும் செயற்பாடுகளானது இதற்காகவே அச்சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐய்யப்பாட்டினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் தின நினைவேந்தல் மூலம் தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றுள்ள பின்னணியில் எதேச்சதிகார அடக்குமுறைகள் கால் தூசாக பறக்க விடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 353 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அக்டோபர் பிற்பகுதியில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அலரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்ததை அடுத்து மூண்ட அரசியல் நெருக்கடியில் இலங்கை பல திருப்பங்களையும் நெளிவு சுழிவுகளையும் கண்டுவிட்டது. விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ஆனால், பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லாதபோதிலும் கூட ராஜபக்ச பதவியை இறுகப்பற்றிப் பிடித்ததுக்கொண்டேயிருக்கிறார். சபைக்குள் பெரும்பான்மைப் பலம் இல்லாத ராஜபக்சவும் அவரது நேசக் கட்சிகளும் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித…
-
- 0 replies
- 519 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. …
-
- 0 replies
- 633 views
-
-
சிறிசேன என்ற நோய்க்குறி ; நாட்டையே பணயக்கைதியாக வைத்துள்ளார் - அமீர் அலி அக்டோபர் 26 க்கு பிறகு இலங்கையில் நடந்துகொண்டிருப்பவை நாட்டின் ஜனநாயகத்தில் முன்னொருபோதுமே நாம் காணாதவை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாமல் இலங்கையர்கள் முன்னர் ஒருபோதும் இருநந்ததில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தற்போதுள்ளவரைப் போன்று தனது முரண் இயல்புகளையே நிலைபேறானவையாகக்கொண்ட ஒரு ஜனாதிபதியும் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகளும் ஜே.வி.பி.போன்ற சிறிய கட்சியும் எதிர்காலச் சந்ததிகளின் நலனுக்காக ஜனநாய…
-
- 2 replies
- 1.1k views
-
-
‘கண்பொத்தியார்’ விளையாட்டு முகம்மது தம்பி மரைக்கார் / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:10Comments - 0 நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது. தத்தமது விருப்பு - வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின் அபிலாஷைகளுக்கேற்ப அது, செயற்பாடுவதில்லை. எனவே, தீர்ப்பு எப்படியும் அமையலாம். அரசியலரங்கில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பானது, மேலே கூறப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புடன், முடி…
-
- 0 replies
- 329 views
-
-
காகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018 ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. எல்லா மனிதர்களும் சுதந்திர…
-
- 0 replies
- 168 views
-
-
யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன் December 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 மில்லியன் ரூபார் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, யாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 07.12.2018 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டினை எதிர் தரப்பு எதிர்…
-
- 2 replies
- 509 views
-
-
யாரையும் பகைக்க விரும்பவில்லை ; இரா.சம்பந்தன் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அரசியல் தீர்வொன்றை அடைவதற்கான நம்பிக்கை எமக்குள்ளதோடு அதுகுறித்து சிந்திப்பவர்களுடன் தொடர்புகளை பேணிவருகின்றோம். இலக்குகளை அடைவதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து பயணக்க விரும்புகின்றோம். நாங்கள் யாரையும் பகைக்க விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டார். அவர் வழங்கிய அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- அரசியல் நெருக்கடிகளின் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தீர்மானிக்கும் சக்தியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கட்சிகளுடனான அனுகுமுறைகள் கடுமையான விமர்சனத்…
-
- 2 replies
- 291 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.) 'காலம் தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது' என்று ரஷ்ய எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கி, ஒரு கட்டுரையில் எழுதியதுதான் நினைவுக்கு வருகின்றது. 1982ம் ஆண்டு தீவிர அரசியலுக்கு வந்த ஜெயலலிதா ஒன்பதே ஆண்டுகளில், அதாவது ஜூன் 1991 ல் முதலமைச்சரானார். …
-
- 0 replies
- 414 views
-
-
‘தவளை’களில் எவ்வளவு தவறு? Gopikrishna Kanagalingam / 2018 டிசெம்பர் 06 வியாழக்கிழமை, மு.ப. 02:32Comments - 0 இலங்கையில் அண்மைய வாரங்களில் நிலவிய, நிலவிவரும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, அரசியல் பற்றிய விழிப்புணர்வு, மக்களிடத்தில் அதிகரித்திருந்தது. இந்த அரசியல் நெருக்கடியின் ஏனைய பாதிப்புகளெல்லாம் வேறு விதத்தில் இருந்தாலும், அரசியல் விழிப்புள்ள சமூகமொன்றை அடையாளங்காட்டியதில், இந்தப் பிரச்சினைகளில் காரண கர்த்தாக்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி செலுத்த வேண்டியிருக்கிறது. இப்படியான காலகட்டத்தில், பணத்துக்காகவோ அல்லது வேறு சலுகைகளுக்காகவோ, ஒரு பகுதியிலிருந்து மற்றைய பகுதிக்கு மாறியோரைப் பற்றிய விமர்…
-
- 0 replies
- 620 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பிடமே தீர்வின் சாவி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 05 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0 அண்மையில், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஞாயிற்றுக் கிழமை, நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில், எவ்வித புதிய விடயமும் உள்ளடங்கி இருக்கவில்லை. “பொதுத் தேர்தலை நடத்தி, புதிதாக நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதே, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உள்ள ஒரே தீர்வு” என, அவர் கூறினார். இது, அவரோ அவரது அணியினரோ, முதல் முறையாகக் கூறும் விடயம் அல்ல. அவரது அணியினர், பல்வேறு குழுக்களின் பெயர்களில் நடத்தி வரும், ஆர்ப்பாட்டங்களின் பிரதான சுலோகமாக இருப்பதும், பொதுத் தேர்தல் ஒன்று வேண்டும் என்பதேயா…
-
- 0 replies
- 467 views
-
-
குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை Science Photo Library டெல்லியில் ஒரு உணவு விடுதியின்…
-
- 0 replies
- 832 views
-
-
‘இறகு’ பிடுங்கும் காலம் முகம்மது தம்பி மரைக்கார் / 2018 டிசெம்பர் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:10Comments - 0 இரண்டு பட்டுக் கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின் இலட்சணம், என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. முடிவுகளைக் கையில் வைத்துக் கொண்டுதான், அனைத்துத் தரப்புகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. “ரணிலைப் பிரதமரா…
-
- 0 replies
- 510 views
-
-
நீதிமன்ற தீர்ப்பையடுத்து தீவிரமடைந்துள்ள இலங்கையின் அரசியல் நெருக்கடி - வீ.பிரியதர்சன் இலங்கையில் இன்று எற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து நாட்டு மக்களினதும் குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியிலும் இலங்கையில் ஜனநாயக முறைமை பின்பற்றப்படுகின்றதா என்ற கேள்விகள் மறைமுகமாக எழும்பத்தான் செய்கின்றன. இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் குறிப்பாக வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம், இன அழிப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் அடக்குமுறைகள். அதைவிட இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் எல்லாம் இலங்கையின் ஜனநாயகத்திற்கு ப…
-
- 0 replies
- 712 views
-
-
வவுணதீவில் கொல்லபட்ட பொலிசாருக்கு அஞ்சலி. TRIBUTE TO THE POLICE OFFICERS KILLED AT VAVUNATHIVU BATTICALOA Two Sri Lankan police constables Dinesh Algarathnam, a 28-year-old resident of the Kalmunai area and Niroshan Indika a 35-year-old resident of Udugama Galle officers were found shot dead at Vavunathivu in Batticaloa at a road checkpoint on 30th November. I am vehemently condemn this acct of his is an act of terrorism. . வவுணதீவில் கடமையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தினேஸ் அழகத்தினம் மற்றும் நிரோசன் இந்திக்கா இருவருக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறேன்.. வவுணதீவு பொலிசார் மாட்டுக் களவுக்கு எதிராக போராடி வந்தார்கள் என்பதையும் நினைவு கூருகி…
-
- 0 replies
- 601 views
-
-
சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை படத்தின் காப்புரிமை TN PANDIT Image caption 1991இல் பண்டிட் மேற்கொண்ட பயணத்தின்போது தேங்காய் ஒன்றை ஒரு சென்டினல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருக்கு பரிசாகக் கொடுக்கிறார். சென்டினல் தீவிலுள்ள பழங்க…
-
- 21 replies
- 1.8k views
-
-
முன்னாள் போராளிகள் மீது திசை திருப்பப்பட்டுள்ள அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நான்கு பேரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று முன்னாள் போராளிகளும், கிளிநொச்சியில் ஒருவருமாக நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுணதீவு படுகொலை சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தியுள்ள வடக்கு கிழக்கில் வாழும் பல முன்னாள் போராளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக…
-
- 0 replies
- 274 views
-
-
முக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு Editorial / 2018 நவம்பர் 30 வெள்ளிக்கிழமை, பி.ப. 12:42 Comments - 0 நிர்மலா கன்னங்கர அரச கட்டமைப்பின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் கிடைக்கப்பெற்றுவரும் முரண்பாடான தகவல்களுக்கு மத்தியில், குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (சி.ஐ.டி) பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வாவை விலக்குவதற்கும், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் அவரை இடமாற்றம் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. “அவசியமான சேவைத் தேவைப்பாடுகள்” என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடமிருந்து, நவம்பர் 18, 2018இ…
-
- 0 replies
- 394 views
-
-
டாபி லக்குஸ்ட் பிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …
-
- 1 reply
- 603 views
-
-
ஐ.தே.கவுக்கும் பொதுத் தேர்தலே சாதகமானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, மு.ப. 01:40 Comments - 0 நீண்ட கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த, 1989ஆம் ஆண்டு முதல், 1999ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஏழு அரசாங்கங்கள் பதவிக்கு வந்தன. ஆனால், அந்த ஏழு பதவி மாற்றங்களில் ஒன்றின் போதேனும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற குழப்ப நிலை ஏற்படவில்லை; அரசமைப்பு நெருக்கடி ஏற்படவுமில்லை. இந்திய காங்கிரஸ் கட்சி, 1989ஆம் ஆண்டு லோக் சபா (மக்களவை) தேர்தலின் போது, அறுதிப் பெரும்பான்மைப் பலம் பெறவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, ஜனதா தள் கட்சியின் தலைவர் வி.பி.சிங், பாரத…
-
- 0 replies
- 310 views
-