Jump to content

நாமும் தமிழர்களா . . . ?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(1)

 

மனிதா . . .  மனிதா  ......!”

                                                                   நாமும் தமிழர்களா . . . ?       

 

                       இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்  - அன்னை தெரேசா)

 

புலம்பெயர் தமிழர்களே !!!!!   நீங்களும் கடவுள் ஆகுங்கள்

 “நியூ  யவ்னா”  இணைய தளத்தில்  சில சமயங்களில்  காணப்படும் தலையங்கம் இது .

அந்த தலையங்கத்தை முதல் முதல் பார்த்தபோது  “ கடவுள்  ஏன்  கல்லானார்  . . . கல்லாய் போன மனிதர்களாலே…” கவிஞர்  கண்ணதாசனின்  பாடல் ஒன்றில் வரும் தொடக்க வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.  கடவுள்தான் ஏற்கனவே கல்லாகிவிட்டாரே  இந்த கேடு  மனிதர்களாலே.

 

 மேலும் படித்து பாருங்கள்  கீழே  உள்ள ஒரு  கவிதையின் தொடக்க  வரிகளை

 

 “  மனிதனை  மனிதன்  வதைத்து  மரணித்ததைக் கண்டோம்

    மரணிக்கும்  தறுவாயில் அவனை  வதைத்து மகிழ்ந்ததையும்  கண்டோம்

    மரணிப்பவன்  வேண்டும்  தண்ணீரை  மறுத்ததையும்  கண்டோம்

    மனித  மாண்பு  மொத்தத்தில் மரணித்தையும்  கண்டோம்.    . . . .                ( தொடர்ந்து  படிக்க :  ayinkaran.blogspot.com  28 January 2011 | பல்சுவைப்பதிவுகள். “ மனித நேயம்” )

 “ நீங்களும்  கடவுள் ஆகுங்கள்என்ற  தலையங்கத்தின்  கீழ் வரும் சம்பவங்களை  வாசிக்கும் போதும் , கேட்கும் போதும்  மனித நேயம் மிக்க எவருக்குமே   உள்ளம்  வெதும்பி  உதவுவார்கள்.  

அதுமட்டுமா  “ போரின் பிள்ளைகள் !"  - பார்த்தீபன் என்பவர்  எழுதியுள்ள கட்டுரையில்  புள்ளி விபரங்களுடன் நமது தாயக சிறுவர்களின் நிலையை  தெளிவாக விளங்கபடுத்தி உள்ளார். (தொடர்ந்து  படிக்க http://globaltamilnews.net)  

வலிகாமம் மக்களின் இருபது வருட  அவலத்திற்கு  எப்பொழுது  முடிவுகண்ணீர் விட்டழும்  மக்கள். ( தொடர்ந்து  படிக்க http://www.enkalthesam.com )

ஊடக வியலாளர்களின்  இரத்தத்தை வரவழைத்த விபச்சரார விடுதி

 

தற்கொலைகள், சிசுக்கொலைகள், கவனிப்பாரற்ற முதியவர்கள் . . . 

 

"தமது வாழ்வை ஒழுங்கு படுத்தப் போராடும் துணை இழந்த பெண்கள்".  (தொடர்ந்து  படிக்க www.yarl.com)

இப்படி பலசெய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

புலம் பெயர்ந்து  வசதிகளுடன்  வாழும் தமிழர்களுக்கு அவர்களுக்கு  உதவுவது  நிபந்தனைகள்  அற்ற சுயநலம்  எதிபாராத கட்டாய கடமையாக உள்ளதுஏனெனில் நாம்  கடன் பட்டுள்ளோம்.

 

நிர்கதியாய்  நிற்கும் நம்  இன உறவுகளை  பாருங்கள்

ஆயிரக்கணக்கில்  நம்  அப்பாவி மக்கள்   கொன்று குவிக்கபட்ட மண்ணில் இருந்து

உடல்கள், உறுப்புகள் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டு  நம்மவர்கள் சிதறிக்கிடந்த  மண்ணில் இருந்து

மண்டை  ஓடுகளும் எலும்பு  துண்டுகளுமாய்  நம்மவர்கள்  சிதறிக்கிடந்த மண்ணில் இருந்து

இரத்த ஆறு  நம்மவர்களின் உடல்களில் இருந்து  ஓடிய  மண்ணில் இருந்து ...

அரை குறையாக தப்பி பிழைத்  நம்மவரின்  வேண்டுகோள்களை கேளுங்கள்

 

அங்கவீனர்களாக ஆக்கபட்டவர்களை  பாருங்கள்

ஆண்டுகள்  பல கடந்தும் சொந்த மண்ணில்  அகதிகளாக வாழ்பவர்களை பாருங்கள்

குடும்ப தலைவனை அல்லது தலைவியை இழந்த குடும்பங்களை பாருங்கள்

அவர்களை சார்ந்த எத்தனை  எத்தனை உறவுகள் பாதிக்கப்படுகிறது என்று பாருங்கள்

பெற்றோரை  இழந்த பிள்ளைகளை பாருங்கள்

நிர்கதியாய் நிற்கிறார்கள்

நாளாந்த வாழ்கையே  கடும் போராட்டம்

எதிர்காலத்தை இட்ட ஏக்கம்

வாழவேண்டும் என்ற வைராக்கியம்

உடலில்  உயிர்  இருக்கிறதே  ,  அது ஒருநாள் பிரியும் வரை  வாழ வேண்டிய  தேவை இருக்கிறதே

பாரிய கடமைகள் அவர்கள் முன் நிறைந்திருக்கிறதே

தங்களுக்காக … ?

இல்லை, எஞ்சியுள்ள தங்கள் உறவுகளுக்காக

அவர்களின் இழப்புகள் ஈடு செய்யமுடியாத இழப்புகள்

அவர்கள் செய்த பாவங்கள் தான் என்ன …?

தமிழர்களாக  பிறந்ததா …?

அதிலும்  அதிஸ்டம் கெட்ட  தமிழர்களாக  பிறந்ததா …?

சினிமாவிலோ ,  சின்ன  திரைகளிலோ  அல்லது  குறும் திரைகளிலோ வரும் கதா பாத்திரங்கள் அல்ல அவர்கள்...

அவர்கள் பட்ட,  படுகிற , படப்போகிற துன்பங்களை நினைத்துபாருங்கள்

இலைமறை காயாக இப்படிப்பட்ட  நம்மவர் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்

 

அவர்களின் வாழ்கையின் மதிப்பு, உயிர்களின் மதிப்பு இவளவும் தானா  . . . ?

அவர்கள் ஒவ்வொருவர்களுக்குள்ளும்  ஒவ்வொரு ஆன்மா சோகங்களால் நிரப்பபட்டு ஏக்கங்களுடன்  துடித்து கொண்டிருக்கிறதே

தயவு செய்து ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள்

 

 

 

புலம் பெயர்ந்த தமிழர்களே  நாங்கள் யார் ?

 

நாங்கள் இலங்கையில் வாழ்ந்த காலத்தில்  கனவில் கூடி கற்பனை பண்ணியிருக்காத  பல  சௌகரியங்களுடன், சலுகைகளுடன் , உரிமைககளுடன் , பாதுகாப்புகளுடன்  வெள்ளைக்காரர்களின் நாடுகளில்  புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நாங்கள் அதிஸ்டம் பெற்ற  தமிழர்களாக வாழ யார்தான் காரணம் ?

இவர்களை போன்ற அதிஸ்டம் கெட்ட  தமிழர்களே காரணம் .

மறந்து போன  உண்மையைகளை  நாங்கள்  நினைத்து  பார்ப்போமா ?

இலங்கையில்   ஒரு சில  தமிழர்கள்  சிறைகளில் அடைக்கபட்டிருந்தால்

ஒரு சில  தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தால்  …

ஒரு சில  தமிழர்கள் கொல்லபட்டிருந்தால்

அதற்காக வெள்ளையர்கள் நமக்கு அகதி அந்தஸ்த்து  கொடுத்திருக்க மாட்டார்கள்

தமிழர்களுக்கு  இலங்கையில் இனப்பிரச்சனைகள்  உண்டு .

ஒரு மனிதனுக்குரிய, ஒரு இனத்திற்குரிய  நியாயமான  உரிமைகளை தமிழ் மக்கள்  அனுபவிக்க முடியாத சம்பவங்களை  வெள்ளையர்கள்   கண்டார்கள்.

கடந்த முப்பது  ஆண்டுகளுக்கு மேலாக   நடந்த,  நடக்கிற கொடூரமான  நிகழ்வுகளை பாருங்கள்

அநியாயமாக  உயிரை  பறிகொடுத்த  அப்பாவி மக்கள்  ஆயிரம் ஆயிரம்

குழந்தைகள், பிள்ளைகள், இளைஞர்கள்,  பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள்…  என்ற பாகுபாடின்றி  உயிரை பறிகொடுத்தார்கள் .

அங்கவீனர்கள்  ஆகியோர் பலர்

வழமையான வாழ்கைக்கான   ஆதாரங்களை இழந்தவர் பலர்

வாழ்கையை  தொலைத்தவர்கள்  பலர்

வாழ்கையை  பறிக்கபட்டவர்  பலர்

இடம் பெயர்ந்தவர்கள் பலர்

சிறைகளிலும், முகாம்களிலும் அடைக்கப்படவர்கள் பலர்

காணாமல் போனவர்கள் பலர்

குடும்ப அங்கத்தவர்களை, உறவினர்களை, நண்பர்களை …  என்று  இழந்தவர்கள் பலர்.

எங்களைப்பற்றி  ஜோசித்து பாருங்கள்.

எங்களின்  குடும்ப உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், பழகியவர்கள், தெரிந்தவர்கள், . . .  என்று பலர் நம் தாயகத்தில்  இந்த நிலைகளுக்கு ஆளாகியதை மறக்க முடியுமா ?

இவர்களின் மேல் தான்  புலம் பெயந்த தமிழர்கள் பலரின் வாழ்கையின் அத்திவாரம்  அமைக்கப்பட்டது என்பதை மறுக்க முடியுமா ?

எப்படி என்று கேள்விகளை எழுப்புங்கள்  ?

 

விடைகள்  ஏற்கனவே  ஏற்கனவே  எங்களுக்கு தெரிந்தவை .

 

நாங்கள் எஜென்சிகளுக்கு  காசு கட்டி வெள்ளையர்களின் நாடுகளில் தஞ்சம் புகுந்தோம்.

சிலர் பலர் உறவினர்களால் கொண்டு வரப்பட்டார்கள்.

 

ஆகாய விமானங்கள், கப்பல்கள், புகையிரத வண்டிகளில் , லொறிகள்கார்களில், அதுமட்டுமா  கார்களில் பொதிகள் (CAR BOOTS)  வைக்கும்  இடங்கள், ... இப்படி பல மார்கங்களில் வழியாக வந்து தஞ்சம் கோரினோம்.   

 

வெள்ளையர்களால்  திருப்பி  அனுப்ப முடியாமல் இருக்க பலர் கடவுச்  சீட்டுகளை கிழித்தெறிந்தார்கள்

 

ஏஜென்காரர்களால்  நம்மவர்கள்  ஏமாற்றபட்ட   கதைகளும் உண்டு

வரும் வழிகளில்  மாண்டுபோனவர்கள் கதைகளும் உண்டு

வெள்ளையர்களின்  நாடுகளுக்குள்  புகுந்த பின்  அகதி அந்தஸ்து மறுக்கபட்டு  திருப்பி அனுப்பப்பட்ட கதைகளும் உண்டு

ஆனால்  நாங்கள் அதிஸ்டசாலிகள் அல்லவா !

இங்கு வந்து பார்த்தால்  நாங்கள் தமிழ் இனத்தை  சார்ந்தவர்கள் என்பதால்  அகதி அந்தஸ்து கிடைக்கும்  நிலை இருக்க வில்லை.

அரசியல் தஞ்சம், அகதி அந்தஸ்து  தொடர்பான 1951 ஆம் ஆண்டு,  1967 ஆம் ஆண்டு  ஜெனீவா அகதிகள் பிரகடனம் / சாசனங்கள்.”   படிதான் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றார்கள்.

நமது  தாயக மண்ணிலிருந்து  புறப்படுமுன்  இவைகளை நாம்  கேள்விப்பட்டிருப்போமா?  

சரி.  அரசியல் அடக்கலாம் கோரும்போது  அதற்கான காரணங்கள், கதைகள் எல்லாம்  ஜெனீவா அகதிகள் சாசனங்களுக்கு  அமைய அமைத்து அகதி அந்தஸ்த்து  கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்தோம்.

எமது கதைகளில் உயிரை  இழந்தவர்களின் கதையும் உண்டு

சுடப்பட்டவர்களின்  கதைகளும்  உண்டு

சித்திரவதைகளுக்கு ஆளானவர்களின்  கதைகளும்  உண்டு

சிறைகளிலும், முகாங்களிலும்  அடைக்கப்பட்டவர்களின் கதைகளும் உண்டு

ஊனமானவர்களின் கதைகளும் உண்டு

இடம் பெயந்தவர்களின்  கதைகளும் உண்டு

காணாமல் போனவர்களின்  கதைகளும் உண்டு

சேதமாக்கப்பட்ட, குண்டு வைத்து தகர்க்கபட்ட,   அல்லது எரிக்க பட்ட வீடுகள், உடமைகளை பற்றிய கதைகளும் உண்டு

பாலியல் வல்லுறவு கதைகளும் உண்டு

எங்கள்  நண்பர்களின்  கதையும் உண்டு

சகோதர, சகோதரிகளின்  கதைகளும் உண்டும்

இப்படி பட்ட பல கதைகளுக்கு இடையில் எங்களின்  கதையும் உண்டு...

அதற்கான சில பல  ஆதாரங்களையும் இலங்கையிலிருந்தே  எடுத்து வழங்கினோம்.

அதுமட்டுமா  நமது தாயகத்தில்  நாம் அறிந்த  அல்லது அறிந்திராத நம் தமிழ்  சகோதர சகோதரிகள்   சுட்டு கொல்லப்பட்ட , வெட்டப்பட்ட,  முகாம்களுக்கு பிடித்து செல்லப்பட்ட , சாகடிக்கபட்ட , காணாமல் போன , அல்லது  வீடுகள், உடைமைகள் , தகர்க்கபட்ட ,  எரிக்கபட்ட   சம்பவங்கள்   பத்திரிகைகளில்  வரும் போதெல்லாம்  அப்பகுதிகளை   துண்டாக்கி  எடுத்து , நாங்கள் நம்ம நாட்டுக்கு திருப்பி போக முடியாது, போனால் உயிருக்கு ஆபத்து என்று அகதி அந்தஸ்த்து கோரிய விண்ணப்பங்களுக்கு  ஆதரவாக கொடுத்தவர்கள்  எம்மில் பலர்.

அந்த பத்திரிகைகளில்  சொல்ல பட்ட சம்பவங்களில்  பாதிக்கபட்டவர்கள் எல்லோரையும் எங்களுக்கு தெரியுமா?

அவர்களுக்கு நடந்த பிரச்சனைகளை, சம்பவங்களை   எங்களில் பலர் ஆதயமாக்கி கொள்ளவில்லையா ?

எமது மக்கள் அங்கு இறக்க  இறக்க அது அகதி அந்தஸ்து  கேட்ட     எங்களுக்கு  அவை  எல்லாம்  சாதகமாக அமைய வில்லையா ?

நாங்கள்  கொடுத்த கதைகளை ஆதாரப்படுத்த  நமக்கெல்லாம் அங்கிருந்து ஆதாரங்களை எடுத்து அனுப்பிய உறவினர்கள், நண்பர்கள் , தெரிந்தவர்கள் எல்லோரும்   இன்றும்  நலமாக  இருக்கிறார்களா ?

இலங்கையில் உனக்கு என்ன பிரச்சனை ?

ஏன்  இங்கு வந்தாய்?  

எப்படி வந்தாய் ?  

ஏன்  உன் நாட்டுக்கு  திரும்பி  போக முடியாது ?  

என்ற கேள்விகளுக்கு  பொருத்தமாக  நம் கதைகள் , பதில்கள், கொடுக்கும் ஆதாரங்கள்   அமைந்தால்  அதே நேரம்  நம் நாட்டில் சமாதான சூழ் நிலை இல்லை என்றால்   அகதி அந்தஸ்து பெறுவதில்  சிரமங்கள் இருக்கவில்லை.

வெள்ளைக்காரர்கள்  எமக்குள்ள தனிப்பட்ட  பிரச்சனகளை  நம்பினார்கள்.

அகதி அந்தஸ்துகளை வழங்கினார்கள்.

தாங்கள்   தஞ்சம்  அடைந்த  நாட்டில் அகதி அந்தஸ்து கிடைக்காமல் போனதால், மற்ற வெள்ளைக்காரர்களின் நாடுகளுக்குப் போய்  தஞ்சம்  அடைந்து   அகதி அந்தஸ்துகளை  பெற்றவர்கள் எவளவோ  பேர்.

அகதி  அந்தஸ்துகள் கிடைத்ததும் ஏதோ  ஆராட்சி  கட்டுரைகள்  சமர்ப்பித்து  பி.எச்.டி  பட்டம் பெற்ற மாதிரி   தன்னிலை  மறந்தோம்

நாங்கள் கொடுத்த கதைகளை மறந்தோம். . .

அதில்  நாம் குறிப்பிட்ட  நமது குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள், அயலவர்கள், …  எல்லோரையும் மறந்தோம்.

மனட் சாட்சி  தட்டி  நன்றி  என்று மனதுக்குள்  தன்னும்  கூறுவதானால் யார் யாருக்கு  கூறலாம்?  நன்றி கடன் செலுத்தலாம் ?

 

புலம் பெயர்ந்த  நாங்கள்   புலம் பெயர்ந்த நாடுகளில் கோயிலுகளை கட்டி, வருடா வருடம்  பல்லாயிரக்கணக்கில்  செலவழித்து  வணங்கும்  கடவள்(கள்)ளுக்கு  அல்ல.  மாண்டு போன ஆயிரக்கணக்கான தியாகிகள், அப்பாவி மக்களுக்கே.

 

எம்மவர்கள் சிந்திய இரத்தமும், மண்ணோடு  மண்ணாக  உக்கிப்போன உடல்களும், சிறை   வாசங்களும், சித்திர வதைகளும், அங்கவீனங்களும், தியாகங்களும்  புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பறந்து  நாங்கள் பாதுகாப்பாக வாழ உரமாய் அமைந்தன.

தூரதிஸ்ட சாலிகளான   அவர்களுக்கு  நன்றி கூறுவோம் .

 

 

( தொடரும்  .....)

-      ஒரு  மனிதன்

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி  2

 

 

நாங்கள் யார் ?   வெள்ளையடிக்கபட்ட  கல்லறைகள்.  உள்ளே …….?

பொதுவாக  நாங்கள்  கொண்டாட்டங்களில் , கோவில்களில் , சாதாரண நிகழ்ச்சிகளில் , அல்லது  நாளாந்தம் நம்மவர்களை சந்திக்கும்போது அவதானித்து பாருங்கள்.

நமது  நாட்டு பிரச்சனைகளால் பாதிப்புக்கு உள்ளாகி,   உடல் ஊனமாகி , மன நிலை பாதிக்க பட்டவர்களாகவா    நம்மில் பலர் இருக்கிறார்கள் ?

 

வெள்ளைக்காரர்களின் நாட்டில் அகதி அந்தஸ்த்து  கிடைப்பது சொர்க்கலோகத்தில் தங்க கிடைத்த  அனுமதி சீட்டு அல்லவா அது.

தங்களுடைய நாடுகளில் வாழும் தங்களின்  சாதாரண மக்களுக்கு வழங்கும் வசதிகள், சலுகைகளுக்கு மேலாக அவர்கள் தாங்கள் அகதி அந்தஸ்து வழங்கிய   வேற்று  நாட்டவர்களுக்கு வழங்குகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

வெள்ளைக்காரர்களின்  நாடுகளுக்குள்   நுழையும்போது   மூட்டை மூட்டையாக பணத்துடன் நுழைந்தோமா

உடுத்த உடையுடன், கடவுச் சீட்டும் இல்லாமல் நுழைந்தவர்கள் அநேகர்.

நாங்கள் எல்லோரும்  புத்தி ஜீவிகளாக, தொழில் நுட்ப  வல்லுனர்களாக, அல்லது  தஞ்சம் அடைந்த நாடுகளின் பாசைகளை  கற்றுக்கொண்டா   வந்தோம்?

இல்லையே!
 

நெற்களஞ்சியங்களில்  சுதந்திரமாக விடப்பட்ட  சுண்டெலிகள்

ஆனால்  திருப்தியடையாத  சுண்டெலிகள் நாங்கள்

இலங்கை  ஒரு  ஏழைநாடு.  ஒரு ஏழை நாட்டிலிருந்து வந்தவர்கள்  நாங்கள் .

வறுமையின் வலியை உணர்ந்தவர்கள்

 

பசியின் வலியை  உணர்ந்தவர்கள் .. .

அங்கு  காணாதவற்றை  இங்கு  கண்டோம்.

அங்கு வாழ்க்கையில் அனுபவிக்காதவற்றை  இங்கு  கண்டோம்.

சொத்து  சுகங்களை எந்த வழியிலாவது , எப்படியாவது  சேர்க்க வேண்டும் என்று கவனத்தை செலுத்தினோம்.

வாய்ப்புகள்  இருந்ததால்  ஆசை ... அதிக ஆசையாகி  ... பேராசையாகி  ... வெறித்தனமா ஆசை ... என்று கூடிக்கொண்டே போனது .

எலிகளாகி,  பெருஞ்சாளியாகி,  ஏன் பன்றி அளவுக்கு வளரவேண்டும்   என்று வெறித்தனமாக ஆசை .

ஆசை இல்லாத மனிதர்களே இல்லை.

ஆசைகள் நியாயமாக இருக்க வேண்டும் .

அவற்றை அடையும் வழிகளும் நேர்மையாக இருக்கவேண்டும் .

அடுத்த நேர சாப்பாடுக்கு வழி  இல்லை

இருப்பதற்கு இடம் இல்லை

உடுப்பதற்கு உடை இல்லை

மருத்துவ  வசதிகள் இல்லை

உயிருக்கு ஆபத்து  …

முன்னேற வழியில்லை

கல்வி  கற்க வழியில்லை

இரண்டாம் தர பிரஜைகளாக  நடத்தபடுகிறோம்

என்று  என்றெல்லாம் கவலைப்பட வேண்டிய தேவைகள் எங்களுக்கு இல்லை.

இந்த நாடுகளில் உள்ள நாய்களையும்,  பூனைகளையும் பாருங்கள் !

நம்ம  தாய் நாட்டில் மனிதர்களுக்கு கிடைக்காத வசதிகளுடன்,  சட்ட பாதுகாப்புடன்  வாழுகின்றன.

சரித்திரத்தை  வாசித்து பார்த்தால்  ஒரு காலத்தில்  வெள்ளையர்கள் உலகின் பல நாடுகளை தங்கள் காலனித்துவ நாடுகளாக பிடித்து வைத்து ஆண்டனர்.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டகாலத்தில்    “ நாய்களும்  இந்தியர்களும் அனுமதிக்க படமாட்டார்கள்  “  என்று பலகைகளில் எழுதி  தாங்கள்  பயணம் செய்த புகையிரத பெட்டிகளிலும், கிளப்புகளிலும்   தொங்க விட்டவர்கள் வெள்ளைக்காரர்கள் .

வெள்ளைக்காரர்களின்  நாடுகளில்  வாழும் நாங்கள் இன்று அப்படியா நடத்தபடுகிறோம் ?

சகல உரிமைகளையும்  அனுபவிக்கிறோம்.   சமமாக  அனுபவிக்கிறோம்.

கால மாற்றங்கள்  மேலும் அவர்களை மனித நேயம் மிக்கவர்களாக மாற்றியது.

வெள்ளையர்களின் பாராளுமன்றங்களில்நகர சபைகளில்  கூடி நம்மவர்கள் இருக்கிறார்களே.

இவையெல்லாம் அனுபவத்தில்  நாங்கள் காணும்  உண்மையல்லவா?.

(
ஆனால்   தாயகத்தில் உள்ள  சில பெளத்த  சிங்கள பேரினவாத  அரசியல் வாதிகள் போகிற  போக்கை பார்த்தால்  " பௌத்த சிங்களவர் மட்டும் உள்ளே நுழையலாம் " என்று பலகைகளில் எழுதி  நாட்டின்   எல்லா இடங்களிலும் தொங்க விடுவார்கள் என்ற பயத்தை  ஊட்டுகிறது . )

கலை கலாச்சாரத்தால், நிறத்தால், மொழியால், தோற்றத்தால், பழக்க வழக்கத்தால், சீதோசன  நிலைகளால், . . . வெள்ளைக்காரர்களுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள்   நாங்கள்.

நம்ம தாய்  நாட்டுக்கே  உரித்தானவர்கள்  நாங்கள்.  

வெள்ளைக்காரர்கள்  எம்மை தங்கள் நாடுகளில் நுழையாமல் தடுத்திருக்கலாம் அல்லவா ?

என்ன உயர்ந்த மனித நேயம் அவர்களுடையது.

மக்களுக்காக மக்கள் ஆளும்  ஆட்சி முறை கொண்ட கிறிஸ்தவ மண்டல  நாடுகள் என்று கருதப்படுவை இவை.

சில நிமிடங்கள்  சிந்தித்துப்பாருங்கள்.

ஈராக்கை அமெரிக்கா  தாக்கியபோது  நாம் வாழும் வெள்ளையர் நாடுகள் சில அமெரிக்காவுக்கு  தோள்  கொடுத்து தாக்கின.

அதே கதைதான்  ஆப்கானிஸ்தானிலும்  இன்றும்  அங்கு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி  என்னவென்றால்  நடந்த,  நடக்கிற  யுத்தங்களால்  நாம் வாழும் வெள்ளையர் நாடுகள் நேரடியாக பாதிக்கபட்டனவா?  

இல்லையே!

எங்களுடைய நாளாந்த  வழமையான வாழ்க்கை பாதிக்கபட்டனவா ?

இல்லையே!

யுத்தங்களை  காரணம் காட்டி,  இலவசமாக தரும்  -  பிள்ளைகளுகான  பணம், வீட்டு வாடைக்கு உதவும் பணம் , குடும்பம்  உழைக்கும்  வருமானம்  வாழக்  காணாது  என்று  குடும்பத்திற்கு  தரும் பணத்தை, வயோதிபர்களுக்கான பணத்தை,  இயலாத வயோதிபர்களை  நீங்கள்  பிள்ளைகளாக இருந்தும் பராமரிப்பவர்களுக்கான  பணத்தை,   அவர்கள் இறந்து போனால்  இறந்து போனவர்களின்  பிணத்தை அடக்கம் பண்ண  தரும்  பணத்தை  குறைத்தார்களா?

இல்லையே?

ஆனால் அதிகம் பாதிக்கபட்டவர்கள்  சாதாரண ஈராக்கிய மக்கள், ஆப்கானிஸ்தான் மக்கள்.

ஏன் ?

யுத்தங்கள்  நடந்தது  நேரடியாக  அவர்கள் மண்ணில்.

ஆனால் அந்த யுத்தங்கள்  நாம் வாழும் வெள்ளையர்களின்  நாடுகளுக்கும்  பரவி இருந்தால் நடந்திருந்தால்  பல தாக்கங்களை வெள்ளையர்களுடன்  நாமும் அனுபவித்திருப்போம்.

முதலாவது உலக யுத்தம், இரண்டாவது உலக யுத்தம் ஆகியவற்றின் விளைவுகள் என்ன தெரியுமா?

யுத்தத்தில்  ஈடுபட்ட  நாடுகளும்  தாக்குதலுக்கு உண்டாகின .

இலட்சக்கணக்கில்  போர்வீரர்களும் , மக்களும்  கொல்லபட்டார்கள், ஊனமாக்கபட்டார்கள்.

கட்டங்கள்  நிர்மூலாமாக்க பட்டன.

இறந்தவர்கள் மண்ணோடு  மண்ணாக போக,  தப்பி பிழைத்து வாழ்பவர்களின் நிலைமைகள்  மிக மிக கொடுமையானது.  

ஆண்கள்  இறந்ததாலும் , பலர் அங்கவீனர் ஆனதாலும் ,  வழமையான வாழ்க்கை நொறுங்கிவிட்டதாலும்  பெண்கள் பலர்  தங்களை மட்டுமல்ல,  தங்கள் குடும்பத்தையும் பராமரிக்க விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

 

அதுமட்டுமா   பசி பட்டினி, நோய்களால் குழந்தைகள் முதல் முதியவர் வரை கடுமையாக பதிக்கபட்டார்கள்.

னாதைகள் ஆனோர் பல்லாயிரம்.

இறப்புகள்  தொடர்ந்தன .

ஆனால் அந்தந்த  நாடுகளின்  தப்பி பிழைத்த   மக்கள்  தங்கள்  நாடுகளை  தாங்களே  ஆளும் சுதந்திரம்   இருந்தததால்  தங்கள் நாடுகளை  மேன்மையான நிலைமைக்கு கட்டி எழுப்பினார்கள், தங்கள் மக்களின் வாழ்க்கை  தரங்களை உயர்த்தினார்கள்.

இலங்கையில்  நடந்த  யுத்தமோ  மாறுபட்டது.

தமிழர்  வாழும் மண்ணில் நடந்தது.

அதனால்  பாதிப்புகள்  தமிழர்களுக்குதான்.

யுத்தம் முடிவடைந்து  நான்கு ஆண் டுகள் ஆகின்றன.

பாதிக்கப்பட்ட  மக்கள் தங்கள் வாழ்கை தரங்களை  உயர்த்த முடியாத நிலை.

காரணம் ?

 

அதற்கான  சுதந்திரம் , வசதிகள், உதவிகள், வழிகள்  அவர்களுக்கு கிடைக்கவில்லையே ?

நாதியற்றவர்களாக  இருக்கிறார்கள்.

2004  
மார்கழியில் ஏற்பட்ட  சுனாமியால்  இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நாடுகளிலும் இருந்து உதவிகள் குவிந்தன.

மனித  உதவிகள் ..., பொருள் உதவிகள் ... , மருத்துவ  உதவிகள், பண உதவிகள்....  என்றெல்லாம்  வந்து குவிந்தன.

எதிர்பாராமல் பாராமல்  சுனாமி வந்தது.  அதனால் மரணங்களும் எதிர் பாராமல் நடந்தன.

ஆனால்  முப்பது வருட கால ஆயுதப் போரா ட்டத்தின்  இறுதி யுத்தம் பாரிய இழப்புகளுடன்   தமிழர்கள்  வாழும் மண்ணில் நடந்ததுஉயிர்களை தினம் தினம் பல நாட்களாக பறித்துகொண்டிருந்தன .  

கால நேரம் பாராமல் , யார் யார் என்று தெரியாமல் மரணம் அவர்களை  விழுங்கி  கொண்டிருந்தது .    பாரிய உளவியல் சித்திரவதையும் கூட .

நாம் பாதிக்க பட்ட  மக்கள் மேல்  அதிக அக்கறை எடுக்காவிட்டால், வறுமையின்  கொடூரத்தால்   விபச்சாரம் . . ., தற்கொலைகள் . . ., கருக்கலைப்புகள் . . ., சிசுக் கொலைகள் . . . , மன நோய்கள் . . . , களவுகள் . . ., கொள்ளைகள் . . ., கொலைகள் . . ., பிச்சை எடுக்கும்  நிலைமைகள்கல்வி அறிவற்ற தன்மை...   அதிகரித்துக் கொண்டு போகும் .

அதுமட்டுமா ?

முன்பெல்லாம்  வசதி படைத்த  நகர் வாழ்  தமிழர்கள் ,   சிங்களவர் பலர்  தங்கள் வீட்டு வேலைகளுக்கு சிறுவனோ, சிறுமியோ தேவை என்றால்  மலைநாடுகளில் தோட்டப்பகுதிகளில்  வாழும் நம் சகோதர தமிழர்களின்  பிள்ளைகளை  கூட்டிச்   செல்வார்கள் .

பத்து , பன்னிரண்டு  வயது பிள்ளைகளை கூடி அவர்களின்  உறவுகளிடம் இருந்து  பிரித்து கொண்டு வருவார்கள்.

வறுமையின்  காரணமாக அற்ப  காசுக்காக  அவர்களின் பெற்றோர்களும்   பிள்ளைகளை வேலைக்கு விட்டுவிடுவார்கள்.

அந்த பிள்ளைகள் எப்படி யெல்லாம் மிகக்  கொடூரமாக  நடத்தப்பட்டார்கள் என்பது நாம் அறியாதவையா?

அவர்கள்  விடியற் காலைகளில்  எழுந்து வேலை  செய்ய  தொடக்கி விடுவார்கள், எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின்  வீட்டில்  மிஞ்சுகிற வற்றைத்தான் சாப்பிடுவார்கள்,  எஜமானின் பிள்ளைகள் போட்டு கழித்த உடைகளை அளவுகள் சரியாக இல்லாவிட்டாலும்  கூட  அணிந்திருப்பார்கள்,  சமையல் அறைக்கு கிட்டவாக  நிலத்தில் படுப்பார்கள், அடி உதையும் வாங்குவார்கள், காயங்களும் ஏற்படும்.

வேலைக்கு வைத்திருந்த  பெண் பிள்ளைகளை  சில வீட்டு எஜமான்களோ , அல்லது  அவர்களின் ஆண் பிள்ளைகளோ  கெடுத்த சம்பவங்களும் உண்டு. கருவை  கரைப்பித்தவர்களும்  உண்டு . தங்கள்  குடும்ப கெளரவத்தை  காப்பாற்ற  கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் பத்திரிகைகளில்  வெளிவந்தனவே . அதுமட்டுமா  அற்ப  சம்பளத்தை கூடி ஒழுங்காக கொடுக்காதவர்களும் உண்டு.  அந்த  பிள்ளைகள்  தங்கள் பெற்றோரை, சகோதரங்களை, உறவினர்களை பிரிந்த ஏக்கங்கள் ஒரு பக்கம்.

படித்தவர்கள், வசதி படைத்தவர்கள், குடும்பகாரர்கள், பணக்காரர்கள், என்றெல்லாம் நம்பி அந்த ஏழை பெற்றோர்கள்  தங்கள்  பிள்ளைகளை வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்கு  நம்பி அனுப்பி  வைத்தார்கள்.

மனிதாபிமானத்துடன் தம் வீட்டு வேலைக்காரர்களை நன்றாக வைத்திருந்தவர்கள் குறைவு.

யுத்தத்தால் பாதிக்க பட்டுள்ள  நாதியற்ற  நம் சிறுவர்களை  வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டு வேலைக்காரர்களாக  கொண்டுபோய் பல விதத்திலும் சுரண்டல்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளதல்லவா?

கொடிது கொடிது ,வறுமை கொடிது ,அதனினும் கொடிது, இளமையில் வறுமை,  . . .” -  ஔவையார்

பாதிக்க பட்ட மக்களுக்கு சீரான, திட்டமிடப்பட்ட மறுவாழ்கைக்கான  பாதைகள் தேவையல்லவா?

இலங்கையில் நாங்கள் அனுபவித்திராத சகல விதமான செளகரியங்களையும் தேடிக் கொண்டோம்.

அதானால்  சிலருக்கு  “ ..... ராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எனக்கு ஒரு கவலை இல்லை ....”என்ற மனப்பான்மைஏனெனில் புலம் பெயர்ந்த நாடுகளில் செளகரிகமான வாழ்கை கிடைத்திருக்கிறதே

 நாமோஅல்லது பிள்ளைகளோ அங்கு போய்  வாழவா போகிறார்கள்இலையே!

அந்த சுயநலப்  புத்தி மாறவேண்டும்.

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி டை   பார்க்க. )

-      ஒரு  மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி   3

 

 

 

என்ன நடக்கிறது  ? ஒன்றுமே புரியல்ல !

 

எம்மில் சிலர் அடிக்கடி மனம் நொந்துபோகும்  விசயங்கள் என்னவென்றால்:

தொப்புள்  கொடி  உறவுகள் . . .  தொப்புள்  கொடி  உறவுகள் . . .  தொப்புள்  கொடி உறவுகள் . . .”  என்று தமிழ் நாட்டில் உள்ள சில  தமிழர்கள் வாய் கிழிய  இலங்கை தமிழர்களை   பற்றி   அடிக்கடி மேடைகளிலும், டிவிகளிலும் முழக்கமிடுகிறார்கள்.

உணர்ச்சிகளை கொட்டுகிறார்கள் . . .

பேட்டிகள்  கொடுக்கிறார்கள் . . .

அரசியல்  தீர்கதரிசனங்களும் கூறுகிறார்கள் . . .

காதுகளுக்கு   கேட்ட எங்களுக்கு  இனிமையாக இருக்கிறது .

வரலாறுகளை பார்த்தால் என்றும் உண்மைதான்.

நாடுகள் வேறானாலும்  ஒரே இனம்.

முப்பது  கிலோ மீற்றர்கள் தூரம் கொண்ட கடல்தான் தமிழ் நாட்டு தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் பிரிக்கிறது.

பேசும் மொழி ஒன்று . . .

கலை கலாச்சாரம் ஒன்று . . .

மிகப்  பெரும்பான்மையினரின் மதமும் ஒன்று . . .

இனத்தை, மொழியால், கலை கலாச்சாரத்தால்,  மதத்தால் ,  ஒன்றான தமிழர்கள் நாங்கள்.  

ஆனால்  அவர்களை நம்பி   அங்கு அகதிகளாக கடல் கடந்து  சென்ற   நம்மவர்களின்  நிலைமைகளை  பாருங்கள் . . .

பரிதாபத்திற்குரியது .

தமிழ் நாட்டை அடைவதற்காக கடலில் பயணம் செய்யும் போது   கொல்லப்பட்டவர்கள் பலர். . .

படகு விபத்தால் இறந்தவர் பலர். . .  

ஆனால்  நிர்கதியற்ற  நம்மவர்கள்  வேண்டத் தகாத மனிதர்களாக அங்கு நடத்தபடுகிறார்கள் .

மாறி மாறி  வரும் தமிழ் நாட்டு அரசாங்கங்கள் அகதிகளாக வந்த   இலங்கை தமிழருக்கு செய்தவற்றையும்   வெள்ளைக்காரர்கள் நமக்கு  செய்தவற்றையும்   ஒப்பிட்டு பாருங்கள்.

இந்தியாவில், தமிழ்நாட்டில்  நியாயமான அடிப்படை வசதிகள் ,  மனித உரிமைகள், பாதுகாப்பு , ....  என்பன கொச்சமாவது  இலங்கை  தமிழ் அகதிகளுக்கு  கொடுக்கிறார்களா?

 

 

இல்லையே?  

 

 

அவர்களால் கொடுக்க முடியாது  என்று இல்லை, அக்கறையும் இல்லை, விருப்பமும் இல்லை.

 

" தமிழக  ரௌடிகளின் அராஜகமும், அரசு ஆதரவும்...   தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கும்  ஈழத் தமிழர்களின் நிலை தொடர்ந்து ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  .....  (http://tamizachi.com) என்ற இணைய தளத்தில் எழுத பட்ட கட்டுரையை உதாரணத்திற்கு வாசித்து பாருங்கள்.

 

தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் "வினவு"  என்ற இணையதளத்தில், கட்டுரைகள் பகுதியில்  ( April 18, 2013  http://www.vinavu.com)  " ஈழ தமிழ் அகதிகளை ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா! " என்ற தலைப்பில் பிரசுரிக்கபட்ட கட்டுரை கட்டாயம் வாசித்து பாருங்கள், நண்பர்களே.

 

உதாரணத்திற்கு  அதிலிருந்தது  சில பகுதிகளை கீழே குறிப்பிடுகிறேன்.

 

"................. எந்த விதக் குற்றமும் இழைக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து ஈழத்தமிழர்க்கு விடுதலை வாங்கித் தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடுஞ் சிறைகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் இந்த சித்திரவதைக் கூடங்களை ஈழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா? இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான்.  . . ….தாய்த் தமிழகம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த் தமிழகமாக   இருந்து வருகிறது..”

தொப்புள் கொடி உறவு என்று வசனம்  பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்தான் ஈழ அகதிகளை கவுரவமாக நடத்துகின்றன.   ..... ".

 

 

 

 "தினமணி" பத்திரிகையில் செய்தியிலிருந்து .( 31 March 2013 http://dinamani.com/latest _news/article 1524402.ece)   வந்த செய்தியில் சில வரிகளை  கீழே  தருகிறேன்.

 

விஜயகாந்த் தமிழகத்தின்  முதல்  அமைச்சராவது உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

. . ....  இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்தவர் விஜயகாந்த் தான். இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ள அவர்  தமிழகதில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து உள்ளார்.  .....

 

ஏதாவது  புரிகிறதா  நண்பர்களேதமிழ் நாட்டு அரசியல் இது. என்ன கண்றாவியப்பா இது ....!!!!!

 

அடுத்தது  கத்தோலிக்க  சமயக்குரு  அருட்தந்தை  ஜெகத்  கஸ்பர்அவர் ஈழத் தமிழர்களுக்காக பாடு படுகிறவர் என்று பெயரெடுத்தவர் அல்லவா? அவர் ஒரு தமிழ்  நாட்டுக்காரர், நம் சகோதர அகதிகள் இருப்பது அவரின் நாட்டில். அவர்  பணம், அரசியல் செல்வாக்கு எல்லாம் பெற்றவராயிற்ரே, அதுமட்டுமா ஜேசுவின் போதனைகளை  போதிப்பவர், புனித பிரான்சிஸ் அசிசி, புனித.வின்சன் டி போல், மதர் தெரேசா ஆகியோரைப் பற்றி யாருக்காவது போதித்திருப்பாரே, அவராது தமிழகத்தில் உள்ள  நம் சகோதர அகதிகளுக்கு ஏதாவது செய்கிறாரா என்று பார்க்க இணையதளங்களில் அவர் பெயரை தட்டி பார்த்தேன். அவரைப்பற்றிய ஏராளமான  செய்திகள், விமர்சனங்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றன. அவற்றில் உதாரணத்திற்கு சிலவற்றை  கீழே  குறிப்பிடுகிறேன்.

 

 

ஈழம் - செத்தபிறகும் ரத்தம் கறக்கிறார்  ஜெகத் கஸ்பார் …” www.vinavu.com

 

அம்பலமாகும் ஜெகத் கஸ்பர்- ஒரு வேடதாரியை  அம்பலப்படுத்த உதவிய குமுதம் இணயதளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!” ...thamila.blogspot.com

 

கஸ்பாரைப் பொறுத்தவரை ஈழம் என்பது அவருக்குகாலம் உருவாக்கித் தந்த கறவை மாடு.” http://devapriyaji.wordpress.com

 

ஈழம்  - கூத்தாடிகள், கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி ! யார் இந்த ஜெகத் கஸ்பார் ?” www.vrinternationalists.wordpress.com

 

ஜெகத் கஸ்பார் நல்லவரா கெட்டவரா ?” www.envazhi.com

 

தமிழர்களின் முதல் எதிரிகளும்  துரோகிகளும்  சுயநலமிக்க சக தமிழர்களே. தமிழர்களை தமிழர்களே ஏமாற்றி  வாழ்கிறார்கள்.  

 

ஆயிரம் ஆயிரம் தன்னலமற்ற  இளைஞர்கள், ஆப்பாவித்   தமிழர்களின் உயிர் தியாகங்கள் தான்  வெள்ளையர்களின் நாடுகளில் சொகுசான வாழ்கையை எங்கள்  கிடைக்க வழி செய்தது. புலம் பெயர்ந்த நாடுகளில்  தமிழர்கள் அமைத்துள்ள கோவிலில்களில்  வைத்து  பல்லாயிரக்கணக்கில் இலங்கை நாணயத்தை விட  பல மடங்குகள்  பெறுமதி வாய்ந்த  பணத்தை  செலவழித்து  தமிழர்கள் வணங்கும்  கடவுள்(கள்)   அல்ல. மீண்டும் மீண்டும் சித்தித்து பாருங்கள். உண்மையல்லவா?  

 

சரி இவைகள் ஒரு புறம் இருக்க ,

 

தமிழ் நாட்டிலிருந்து  நாம் வாழும் வெள்ளைகாரர்களின்  நாடுகளுக்கு ஆகாய விமானங்களில்   எங்களிடம் பறந்து  வரும் ஆட்களை பாருங்கள்.

அரசியல் வாதிகள் வருகிறார்கள்

நடிகர்கள் வருகிறார்கள்

நடிகைகள் வருகிறார்கள்

பாடகர்கள் வருகிறார்கள்

கவிஞர்கள் வருகிறார்கள்

கலை குழுவினர்கள்  என்று பலர்  சேர்ந்தது   கூட்டம்  கூட்டமாக  வருகிறார்கள் ...

சோதிடர்கள் வருகிறார்கள்

மந்திர வாதிகள்  வருகிறார்கள்

பட்டிமன்றம் நடத்துபவர்கள் வருகிறார்கள்

சாமிமார் கூடி  வருகிறார்கள்...   

அதுமட்டுமா  பரத நாடிய  அரங்கேற்றத்துக்கு  தலைமை  தாங்க கூடி  வந்து போகிறார்கள்  சிலர்

தமிழ்  உறவுகளை தேடி  தேடி பாசத்தில்லா, மனித நேயம் கொண்டா  எல்லோரும் வருகிறார்கள் ?

இவர்கள் என்ன மகாத்மாக்களா ?

திரும்பி போகும்போது  வெறும்  கையுடனா  போகிறார்கள் ?

எல்லாமே  பணத்திற்காக .  பணம் சேர்க்க வருகிறார்கள் .

இவர்களை யார் அழைப்பது ?  

புலம் பெயர்ந்த  நம் தமிழர்களில் சிலர் .  

தமிழ் நாட்டில் இருந்து வரும் இவர்களை  போற்றி வாழவைக்கும் எம்மவர் பலர்  இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் அகதிகளாக முகாங்களில் உள்ள  நம் சகோதரர்களை தேடி  இவர்கள் போகிறார்களா?

அல்லது வெள்ளைக்காரர்  நாடுகளில் உள்ள  நாமெல்லாம்   வைப்பார் தீவுஅந்தமான் நிகோபார் தீவுகளில்  போய் அகதிகளாக இருந்திருந்தால்  ஆகாய விமானங்களில்  அல்லது கப்பல்களிலாவது   எங்களை தேடி வருவார்களா?

எங்கள் அதிஸ்டம்  தமிழ் நாட்டுக்கு அகதிகளாக போகாமல் வெள்ளையர்கள் நாடுகளுக்கு அகதிகளாக வந்தது.

ரோம் நகரம் பற்றி எரியும் போது  பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்  நிரோ மன்னன் .  அவனுக்கு  "பிடில்" வாசிக்க தெரிந்திருக்காவிட்டால்    "பிடில்" வாசிக்க  தெரிந்தவர்களை  கூப்பிட்டு வாசிக்க விட்டிருப்பான். அவன் மன்னன்.  அதிகார பலம், பணப்பலம் கொண்டவன்.  அவன் என்ன நெற்றி வியர்வை  சித்தி உழைத்த  பணமா

புலம்  பெயந்த பலரிடம்  பணப் பலம் இருக்கிறது,  ஆனால்  “பிடில்வாசிக்க தெரியாது.  அதனால்   “நீரோ மன்னனின் வாரிசுகள்”  சிலர், அதாவது  புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர்   தங்கள் தங்களுக்கு  விருப்பமான  "பிடில்"  வாசிப்பை  கேட்டு மகிழ  இந்தியாவிலிருந்து  அவ்வவ் போது கூப்பிடுகிறார்கள்.   பாதிக்கபட்ட  நம்மவர் அங்கு  தினமும்  இரவு பகலாக  முகாரி ராகம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் இருக்கிறது பொழுது போக்கும் தேவையல்லவா? விதம் விதமாக "பிடில்கள் " வாசிப்பவர்கள்  நம் தாயகத்தில்  பாதிக்க பட்ட மக்களுக்கு போய் தாங்களாக தங்கள் செலவுகளில்வ்வித  இலாபமும்  கருதாமல் "பிடில்கள் " வாசிப்பார்களா ?  அங்கு இருப்பவர்களும்  " தொப்புள்  கொடி "  உறவுகள் தானே? ஆனால் அந்த  " தொப்புள்  கொடி "  உறவுகளிடம் பணம்  இல்லையே .

சக்கரை  எங்கிருக்கிறதோ  அங்கு எறும்புகள்  தேடிப்போவது இயற்கைதானே.

இந்தியாவிலிருந்து  வந்து புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களிடம் பணம் சம்பாதித்துக் கொண்டு போகிறவர்களில்  சிலர்  தங்கள் நாட்டில் ஏழைகளுக்காக மருத்துவ மனைகள் நடத்துகிறார்கள் ….

கல்விக்கூடங்களையும்  நடத்துகிறார்கள் ….

அநாதை மடங்களையும் நடத்துகிறார்கள் ...

அன்னதானங்களையும்  நடத்துகிறார்கள் ….

வீடுகள் கட்டி கொடுக்கிறார்கள்

இப்படி பல செய்கிறார்கள்.

இவர்களில் யாராவது  ஒருவர் முன்வந்து  இலங்கையிலும் யுத்தத்தால் பாதிக்கபட்ட பகுதிகளில் வாழும் எம் மக்களுக்கு  உதவ  நினைக்கிறார்களா ?

அல்லது இந்தியாவில்  தஞ்சம் அடைந்ததொப்புள்  கொடி  உறவுகள்ளுக்கு செய்தார்களா ? செய்கிறார்களா ?

தமிழ் நாட்டில் பிரபலமான சாப்பாடு கடைகளின் பெயரில்  "பிரான்சைஸ்"( FRANCHISE) சாப்பாட்டு கடைகள் கூடி இங்கு  நம்மவர்கள் நடத்துகிறார்கள்.

கேள்விப்பட்ட  நியாயம் தேடமுடியாத, வேதனையான  கதைகள் என்னவென்றால்  தமிழ் நாட்டை  தாயகமாக கொண்ட சிலர்  இலங்கை  தமிழ் அகதிகளாக  நடித்து  அகதி அந்தஸ்து பெற்று வெள்ளையர்களின்  நாடுகளில் வாழுகிறார்கள் என்பது.

இது வதந்தி,   அப்பட்டமான பொய்  என்று யாராவது  நிரூபிப்பார்களா ?

இந்த  தில்லு  முல்லுக்கு நம்மவர்கள் ஒத்துழைப்பு  வழங்கினார்களோ என்னவோ ??

தமிழ் நாட்டு  புகழ் பெற்ற  நடிகர் அல்லது நடிககைகளை   புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் யாராவது திருமணம் செய்தால் அதை பெரிதாக நினைக்கும்  சிலர் நம்வர்களில்  இருக்கிறார்கள்.

இதில்  பெருமைபட  என்ன இருக்கு ?

வெள்ளையர்களையும்,  வேறு நாட்டவர்களையும்  திருமணம் செய்தவர்கள் பலர் எம்மிடையே  இருக்கிறார்கள்.

அவர்களின்  தனிபட்ட விஷயம் அது .

ஆனால் நம் தாய் நாட்டுக்கு போய்  விதவைகளை  திருமணம் முடித்து  வாழ்வு கொடுத்த  நம் புலம் பெயர்ந்த இளைஞர்கள்  ஒரு சிலரை  நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்த இளஞர்கள்  அல்லவா  மகாத்மாக்கள்.

அந்த மகாத்மாக்கள் எம் தமிழர்களிடையே புகழ் பெறாத இலை மறை காயாக  இருக்கிறார்கள்.    

அவர்களை போற்றுங்கள்.

இந்தியாவின் வருமானத்திற்கு  நாங்கள் அளிக்கும் பங்களிப்பு செய்கிறோம்  என்பதை  நாங்கள் சிந்திக்கிறோமா ?

தமிழ் நாட்டு  சினிமாவின்  வருமான வளர்ச்சியில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்  நிறைய பங்களிப்பு  செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டு  நடிகர்,  நடிகைகளின்  கோடிக்கணக்கான   சம்பள உயர்வுக்கு மட்டுமல்ல  டைரட்டர்கள், மியூசிக் டைரட்டர்கள், கவிஞர்கள், பாடகர்கள், ... என்று  அவர்களின் சம்பள உயர்வுக்கு எம்மவர்கள்  நிறைய பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமா தமிழ் நாட்டு  தமிழ்  டிவி சனலுகலின்  வருமான வளர்ச்சிக்கு  நிறைய எம்மவர்கள்  பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே  குறிப்பிட்ட  சாஸ்திரிமார், மந்திர வாதிகள் ,  பட்டிமன்றம் நடத்துபவர்கள், சாமிமார்,  ….. பணம் திரட்ட  வருகிறார்கள்.

சுருக்கமாக  சொன்னால் இந்தியாவின் வருமானத்திற்கு  குறிப்பாக  தமிழ்நாட்டு வருமானத்திற்கு புலம்பெயர்ந்த ஈழத்  தமிழர்களின் பங்களிப்பு இல்லை  என்று  யாரும் கூறமுடியாது.

தமிழக சினிமா நடிக, நடிகைகளை  வைத்து புலம் பெயர்ந்த நம்  தமிழர்களில் ஒரு சிலர்  சினிமா படங்கள் எடுத்திருக்கிறார்கள் .

காரணம் பணம்  பலரிடம் கொட்டோ  கொடென்று  கொட்டுகிறது.

 

ஆனால்  நம் தாயகத்தில்   வாழ வழி  தெரியாமல்  தவிக்கும்  திக்கற்ற  நம் மக்களுக்கு தான் உதவி செய்ய அக்கறைப்படாத  பலர்  எம்மிடையே இருக்கிறார்கள்.

இளைப்பாறிய  ஒரு வயதான  இன்ஜினியர் ஒரு தடவை  எனக்கு கூறினார் தான் நாற்பத்து வருடங்களுக்கு முன்பே  இலங்கையிலிருந்து  வந்ததாகவும், அக்காலங்களில்  வெள்ளையர்களின்   நாடுகளுக்கு  உயர் கல்விக்காக வந்து மருத்துவர்கள், பொறியியலாளர்களாக  வாழ்க்கை  மிகவும் கஷ்டமாக இருந்திருக்கிறது. கஷ்டப்பட்டு உழைத்தார்கள். அவர்கள் பெற்ற சம்பளத்திற்கு ஏற்ப வருமான வரி கட்டினார்கள்.   ஆனால்  நம் நாட்டு இனப் பிரச்சனைகளால் அகதிகளாக வந்தவர்களில்,   ஏன் பாஷை , படிப்பு   அறிவு இல்லாவிட்டாலும் கூட அவர்களில் பலரிடம்  நிறைய  பணம், வீடுகள், கடைகள் இருக்கு என்றார்

 

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி  4  லை   பார்க்க. )

-      ஒரு  மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 4

 

 

 

 “ பன்றிகளும்  மாடுகளும்    ?"

 

 ‘ மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு  என்ன என்று  கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானி சாக்ரட்டிசிடம்  கேட்டதற்கு அவர்  ‘ ஒரு மாடு மற்றொரு மாட்டைப் பற்றி அக்கறை கொள்ளாது,  மாறாக ஒரு மனிதன் மற்ற மனிதனைப் பற்றி அக்கறை கொள்வான். அடுத்தவனை பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி ’  என்றார்.   (நன்றி , அம்புறோஸ் பீற்றர்,  கிறிஸ்தவ மஞ்சரி,    THURSSDAY ,MAY, 03, 2012)

 

பாரதியாரின் கவிதை ஒன்றை கீழே வாசியுங்கள்.

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!  - மகாகவி சுப்பிரமணிய பாரதி


நாங்கள் வாழும் முறைகளை  சிந்தித்துபாருங்கள்  ...

நாங்கள் எங்களை  பற்றியே  அளவு கடந்து  நேசிக்கிறோம் .  

காணாததை  எல்லாம் கண்டு விட்டோம் அல்லவா ?

காசு பணம், சொத்து சுகங்கள்  சேர்ப்பதில்  வெறியாக, குறியாக  உள்ளோம்.

அவற்றை எப்படி அடைந்தால் என்ன

எங்களில் சிலர் வெள்ளைக்காரர்களின்  நாடுகளில்  பெற்ற வருமானத்தில்  தமிழ் நாட்டிலும், இலங்கையிலும்    காணிகள் ,  வீடுகள், கடைகள் விலைக்கு வாங்கி விட்டார்கள்.

பிள்ளைகளை அங்கு படிக்கவைக்க தமிழ் நாட்டுக்கு போய் வாழ்கிறார்கள்.

நகைகள் வாங்க சிங்கப்பூர் , துபாய்  என்று  சிலர் பறந்து  போகிறார்கள் .

சாறி  வாங்க  இந்தியா, சிங்கப்பூர் சிலர் போகிறார்கள்.

தங்களின் பிள்ளைகளின் பாரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு இந்தியா போய் உடைகள், ஆபரணங்கள் , இதர பொருட்கள்  வாங்க சிலர் போகிறார்கள்.

 

கோடைகால விடுமுறைகளுக்கு  நாடு விட்டு  நாடுகளுக்கு சிலர்  பறக்கிறார்கள்.

உறவினர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமா, சாமத்திய வீடா,  கலியானங்களா  நாடு விட்டு நாடு பலர் பறக்கிறார்கள்.

 

வீட்டுக்கு இரண்டு மூன்று கார்கள் சிலருக்கு  வைத்திருப்பார்கள் ... அதுவும் விலைகூடிய கார்களாக இருக்கும் ...

அதுமட்டுமா  பணத்தை செலவழித்து  தங்கள் பெயரை  குறிப்பிடும் தனிப்பட்ட  கார் இலக்க  தகடுகள்  (PRIVATE NUMBER PLATE) பொருத்துவார்கள் ,   …… இப்படி ஆசைகள்  பல ...  பல ...  .  “சந்தானம் மெத்தினால்  ……”  இதுதான் சிலர் பலரின் நிலைமை. எவளவுதான் செல்வம் இருந்தாலும்  சராசரி  வெள்ளையர்கள்   இப்படி நடப்பதில்லை.

 

இப்படி புலம் பெயர்ந்தவர்கள் பலர் "பிசி"(busy) இருக்கிறார்கள்

 

இலங்கையின் நீளம் 435 கிமீ, அகலம் 225 கிமீ, சுற்றளவு  1,340 கிமீ, பெரும்பான்மையான உறவினர்கள், நண்பர்கள் சராசரியாக முற்பது, நாற்பது கிலோ மீட்டர்  தூரங்களில் வாழ்ந்தார்கள்.  குட்டித்தீவுக்குள் அதுவும் குறுகிய நிலப்பரப்புக்குள்  வாழ்ந்தவர்கள் நாங்கள்.

 

இன்று  எங்கள்  நிலைமையை  சிந்தித்து  பாருங்கள்.  பல நாடுகளில்  சிதறி வாழ்கிறார்கள். எங்களின்  அடுத்த சந்ததியினர்  புலம் பெயர்ந்த நாடுகளில்  நாங்கள் வாழும் எங்கள்  வாழ்க்கை முறைகளை எங்களின்  அடுத்த சந்ததியினர்   பின்பற்றவா  போகிறார்கள்?????

பொதுவாக  வெள்ளையர்களின் நாடுகளில் வாழும்  புலம் பெயர்ந்த நம்மவர்களில் பலர்  நம்மவர்களை சந்தித்தால்  உரையாடினால் அல்லது டெலிபோனில்  கதைகள் பேச்சுகள்  என்னவாக இருக்கும் தெரியுமா ?

பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் ?   எங்கே படிக்கிறார்கள் ?

சோதனை எடுத்தார்களா  ?  என்ன ரிசல்ட். ?

 
டியுசனுக்கு விடுகிறீர்களா ?  எங்கே போகிறார்கள் ?

(
ஒரு பாடத்திற்கு இரண்டு  ரியுசன்  ஆசிரியர்களிடம்  பிள்ளைகளை விடும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். ரியுசன்கள்  பலவிதம். பிள்ளைகள் விரும்பாமலே  பல ரியுசன்களுக்கு  விடும் பெற்றோர்கள், கடைசியில்  சில பிள்ளைகள் தாக்கு பிடிக்கமுடியாமல் மூளை மந்த மான சம்பவங்களும் உண்டு. )

குடியிருக்கும்  வீடு சொந்த வீடா ?  வாடை வீடா ?  

வாடை  வீடு  என்று கூறினால்  சிலர் கொஞ்சம் தரக்குறைவாக பார்ப்பார்கள்.  

சிலர் வீடு  வாங்க  ஆலோசனைகள் கூறுவார்கள் .

அவர்களுக்கு அது  வருமானம் .

வாங்கி தர நம்மவர்கள் இருக்கிறார்கள் .

கட்டுப்பணம் கட்டமுடியாவிடில் வீடு பறிபோவது  வாங்கியவர் பிரச்சனை .

அதைவிட  சீட்டு கதைகள் , நகை கதைகள், வட்டி கதைகள் , உடுப்புகளை பற்றிய கதைகள் .

மற்றவர்களை பற்றிய  கேவலமான கதைகள்,  இப்படி  பல கதைகள் கதைப்பார்கள்.

தாலிக்கொடிகளை பெரிதாக்குவது ,  தங்க நாணயங்கள் வாங்கி சேமிப்பது.

நம்பி  நடக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை  புலம் பெயர்ந்த தமிழர்களே ஏமாற்றும் சம்பவங்கள்

பழிவாங்கும் பல  சம்பவங்கள்   ...

இவைகள் ஒரு புறம் நடக்க ,

தமிழ் நாட்டு டிவி களில்  வரும் சின்னத்திரை  டிராமாக்களை பற்றிய கதைகள், கதா பாத்திரங்களை பற்றிய விமர்சனக்கள்

அடுத்த தொடர்ச்சியில்  என்ன நடக்கபோகிறது என்ற ஆதங்கம் ...

அவற்றில் வரும் கதா பாத்திரங்களுக்காக பலர் இரங்குகிறார்கள் பவர்கள், கோபப்படுகிறார்கள் …
அதுமட்டுமா  டெலிபோன்  செய்து அவற்றை பற்றி  கதைப்பவர்கள் பலர்

அதுமட்டுமா  பிறந்தநாள் , சாமத்தியவீட்டு, காலியான கொண்டாட்டங்களில்  மது அருந்திவிட்டால் போதை ஏற ஏற  சிலர் அப்போதுதான் இலங்கை அரசியலை  விமரிசிப்பார்கள்.  சிலசமயம்  கருத்து முரண்பாடுகளும் எழும்.

ஜாதிகளை விமரிசிப்பார்கள்

சில பெற்றோர்  தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்பார்கள்அதில் ஒரு பெருமை அவர்களுக்கு ….  வேடிக்கை என்னவென்றால் அவர்களுக்கே  தாங்கள்  வாழும் நாட்டின் மொழி  ஒழுங்காக தெரியாது வெள்ளைக்கார நாட்டு  பிரஜா  உரிமை பெற்றிருந்தாலும்  பலருக்கு சமாளிக்க  கூடிய அளவுக்கு அற்ப மொழி அறிவு கூட இல்லை.

 

நம் மக்கள் நம் தாயகத்தில்   படும்  கஷ்டங்கள், நல்லது  கெட்டது எல்லாம் ஒரு சிலர்  விமரிசிப்பார்கள்.

இலங்கையின்  இனப்பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு  இது தான் என்று பட்டிமன்றம் மாதிரி நடக்கும் .
 

காலம் சென்ற  நடிகர்  ‘என்னத்தகண்ணையா 'வரூம்... ஆனா வரா...து!'  ஒரு படத்தில் வடிவேலுக்கு கூறிய மாதிரி  அரசியலை பற்றி உரையாடல்களும் நடக்கும்.

உலக  அரசியல்களையும்  விமரிசிப்பார்கள் .  

இலங்கையின் இனப்பிரச்சனைகளின்  கற்பனையான தீர்வுகளையும் கண்டுவிடுவார்கள் .  

போதாக்குறைக்கு  தங்களுக்கு தெரிந்த விருப்பமில்லாத,  விருப்பமான தனிப்பட்ட  நபர், நபர்களை பற்றி குறைகள்,  நிறைகளை  பற்றிய பற்றி தீவிரமாக கருத்து கூறுவார்கள்.

போதை அதிகம்  ஏறிவிட்டால் சிலருக்கு தகாத வார்த்தைகளும்  வாயில் இருந்து வரும்.  

சிலருக்கு  தேவைக்கு  மேலே பொருள் பண்டங்கள் சேர்ப்பதில் வெறி.  அதுவும் சாத்தியமாகிறது  அவர்களுக்கு.

ஒரு வீடு,  இரண்டாவது வீடு,  மூன்றாவது வீடு .... என்று வீடுகள்  வாங்கி குவிப்பதை பற்றி கதைப்பவர்கள் சிலர்.

ஒரு கடை,  இரண்டாவது கடை ,  மூன்றாவது  கடை  .... என்று கடைகள்   வாங்கி குவிப்பதை பற்றி கதைப்பவர்கள் சிலர்.

எல்லாம் இழந்து கெட்டு  நொந்து போனவர்கள் தங்கள்  இழப்புகளையும், வேதனைகளையும் கதைப்பவர்கள் சிலர்.

நம்பிய  தமிழர்கள்   செய்த  நம்பிக்கை துரோகத்தைப் பற்றி  கதைப்பவர்களை சிலர்.

கடவுள்களைப்  பற்றி , கோவில்களை பற்றி,  நடக்க இருக்கும் திருவிழாக்களை பற்றி,  …..  கதைப்பவர்கள் சிலர்.
 

கடவுள் இல்லை என்று  கருத்து கூறுபவர்கள்  சிலர்.

 

"நற்செய்தி கூறுகிறோம்" என்று  ஒன்றுக்கு ஒன்று வேறுபாடுள்ள கிறிஸ்தவ பிரிவுகள் தமிழர்களிடையே  புதிது புதிதாக தோன்றுகின்றன. அதற்கு  நிறையை போதகர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

 

 

மக்கள்  நரகத்திற்கு போகாமல் மோட்ச இராச்சியத்திற்கு வழி காட்டிகொண்டிருக்கிறார்கள். போதாததிற்கு  போதகர்களும் இந்தியாவில் இருந்தும் வந்து போதிக்கிறார்கள்.

 

எங்களுடைய  வாழ்க்கை  முறைகள், சிந்தனைகளுக்கும்   வெள்ளைக்காரர்களின் வாழ்க்கை முறைகள், சிந்தனைகளுக்கும்  பாரிய  இடைவெளிகள் உள்ளன. வெள்ளைக்காரர்கள் நாட்டில் இருந்தாலும்  சுதந்திர தமிழர்கள் நாங்கள் அல்லவா . ஆகவே அவைகளைப்  பற்றியும் விமர்சனங்கள் நடக்கும் .

நாங்கள்  யார் என்றும், நாங்கள்  கடந்து வந்த பாதைகளையும்  மறந்தவர்கள்  இருக்கிறார்கள்.

நம் தாயகத்தில் பாதிக்கபட்டு கிடக்கும் நம் மக்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய நன்றி கடன்கள் என்ன, என்ன செய்யவேண்டும் , எப்படி செய்யலாம், என்றெல்லாம்  ஒரு வினாடி கூடி  நினைத்து பார்க்காத , சக்கிரட்டிஸ் வர்ணித்த  மனித நேயம் அற்ற  "பன்றிகள் , மாடுகள் " அதிகம்  எங்கள் இனத்திலும் இருக்கிறார்கள்.
 

 
 

வளர்ச்சியா ?  வீக்கமா ?

 

வீக்கத்தை  வளர்ச்சி என்று கூற முடியாது.

புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர் குறுகிய காலத்தில் செல்வந்தவர்களாக ஆனவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அடைந்த  நிலைகள்  வளர்ச்சியா அல்லது வீக்கமா என்பது கேள்விக்குரியது .

தாங்கள் வாழும் நாட்டையும்   ஏமாற்றாமல்,  அந்நாட்டு  மக்களை ஏமாற்றாமல் , சக தமிழர்களை, உறவினர்களை,  நண்பர்களை ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் நேர்மையான வழியில் முன்னேறுவது  "வளர்ச்சி" .

வளர்ச்சிக்கு எதிர்மாறானது " வீக்கம் " .

எப்படியாவது எந்த வழியிலாவது காசு பணம், சொத்து சுகங்கள் சேர்த்து விரைவில் செல்வந்தர்கள் ஆகவேண்டும்  வேண்டும் என்ற வெறி  பரவி பெருகிக்கொண்டு போகிறது .

அதனால்  “ வீக்கங்கள் ”  அடைந்த  நிறையப் பேர்  இருக்கிறார்கள் .

தாங்களும்வளர்ச்சிஅடைந்தவர்கள் என்று முகமூடிகளை போட்டுக்கொண்டு இந்த  “ செல்வந்தர்கள்வாழ்கிறார்கள்.

" உன்னையே நீ அறிவாய் " சாக்ரட்டீஸ்.  ஆகவே இந்த செல்வந்தர்களுக்கும் , அத்துடன் அவர்களுடன் பழகியவர்களுக்கும் "வளர்ச்சி"யா, "வீக்கம் " மா  என்பது தெரியும்

சில நேரங்களில்  சில தமிழ்  இணையதளங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலர்   தங்களின் செல்வ செழிப்பையும், ஆடம்பர வாழ்க்கையையும் மற்ற தமிழர்கள்  பார்க்க வேண்டும் என்பதற்காக பெருமையுடன்  தங்கள் வீட்டு கொண்டாட்டங்களை, தனிப்பட்ட நிகழ்ச்சிகளின்   போட்டாக்களை , வீடியோ காட்சிகளை  பதிவு செய்கிறார்கள்.

இது வீக்கத்தின் விளைவுகளின் ஒன்றா என்று  அவற்றை பார்க்கும் போது தோன்றுகிறது .

பார்பவர்கள் விமர்சனங்கள் கூறத்தான்  செய்வார்கள்.  அதை   தவிக்க முடியாது . இதெல்லாம் தேவைதானா ?

இதை விட  அந்நாட்டின் வருமான வரி  அதிகாரிகள் அல்லது  சலுகை பணம் வழங்கும்  அதிகாரிகளின்   கவனத்திற்கு   தற்செயலாக யாரும்  கொண்டு வந்தால் அந்த அதிகாரிகள் அது வீக்கத்தால்  வந்த விளைவுகளில் ஒன்றா அல்லது   வளர்ச்சியின் விளைவுகளில் ஒன்றா என்று  ஆராயலாம் .

வீக்கத்தின் விளைவு என்று  கண்டால் அதற்கு   "வைத்தியம்"  பார்த்து விடுவார்கள் .

(
http://puthu.thinnai.com/?p=9141 என்ற இணைய தளத்தில்  பழமொழிகளில்பணமும் மனித மனமும்முனைவர் சி.சேதுராமன்  அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை வாசித்துபாருங்கள்.

இப்படியும் ஒரு ஜனாதிபதியா  என்று உலகமே ஆச்சரியப்படும்  லத்தீன் அமெரிக் நாடான உருகுவே நாட்டின் ஜனாதிபதி ஜோஸ்முஜிகா. ‘‘என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு என்னால் வாழ முடிகிறது’’ என்று சாதாரணமாகச் சொல்லும் இவர், பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு ஜோஸ் முஜிகா அளித்த பேட்டியில்,  “ என்னை மிகவும் ஏழையான ஜனாதிபதி என ஊடகங்கள் தான் கூறுகின்றன. கடினமாக உழைத்து முன்னேறதுடிப்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகத்தான், அதற்காக மேலும் மேலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என பாடுபடுகிறார்களே அவர்கள்தான் ஏழைகள்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் இந்த அதிபர்.           ( நன்றி : https://sites.google.com/site/kattumavaditimes/home )

“'
போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து”  என்றதின்  அர்த்தத்தை சரியாக புரிது கொண்டவர்  இவர் தானோ.  இவரின் இப்படியான வாழக்கையை இட்டு  பல நாட்டு அதிபர்கள், ஏன் சில மதத்தலைவர்களும், மத போதர்களும்   நினைக்கலாம் இவரை ஒரு பையித்தியக்காரன் என்றுநீங்கள் என்ன நினைக்கிறீர்களா ?
 

 

மனித வாழ்கையின் அர்த்தங்களை தேடி ......

 
 “
ஆராயிந்து பார்க்காத வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமே இல்லை.”  என்கிறார் சகிரட்டிஸ். அதே  சகிரட்டிஸ் சொல்லுகிறார்:  “ உபயோகமற்ற  மனிதர்கள் வாழ்வது குடிப்பதற்கும், சாபிடுவதற்கு மட்டும், உபயோகம் உள்ள மக்கள் குடிப்பததும், சாப்பிடுவத்தும்  வாழ்வதற்காக.”

 

( பாரதியாரின்   "தேடிச் சோறு நிதம் தின்று ......."  என்ற  கவிதையை மீண்டும் படித்து பாருங்கள். )

உடலும் ஆன்மாவும்  - சேர்ந்தது தான்  மனிதன்.  இந்த உடலைத்தான் பாருங்கள். உயிர் போய்  விட்டால் அதன் பெறுமதி என்ன தெரியுமா?  

மதுரை முத்துவின் நகைசுவை நிகழ்ச்சி ஒன்றை கணனியில் பார்த்து கொண்டிருந்தேன்.  ஒரு இடத்தில் அவர் கூறிய உவமானம்  நெஞ்சை  தொட்டதுஒருவர்  தன்  அலுவலகத்திற்கு போய் கொண்டிருக்கும்போது அவருடைய செருப்பு அறுந்து போய்விட்டது. அருகில் அவரின்  நண்பர் வீடு  இருந்ததால் நண்பர்  வீடுக்கு போய்   தன்னுடைய அறுந்துபோன செருப்பு  இங்கு இருக்கட்டும் , நாளைக்கு வந்து எடுத்து கொள்கிறேன்  என்றார்.  நண்பரும்  உள்ளே போட சந்தோஷமாக  இடம் கொடுத்தார்.  ஒரு வாரம் கழித்து அவரின் தகப்பனார் இறந்துபோய் அந்தப் பக்கம் சுடுகாட்டுக்கு தூக்கிக்கொண்டு போனார்கள்.  நல்ல மழை . ஒன்றுமே செய்யமுடியவில்லை. அவர்  அதே  நண்பர் வீட்டுக்கு போய் பிணத்தை இங்கு வைத்து விட்டு போகிறேன், நாளைக்கு வந்து எடுத்துபோய்  அடக்கம்  பண்ணிவிடுகிறேன் என்றார். நண்பனோ அருவருத்தான், சம்மதிக்கவில்லை. அதாவது ஒரு  அறுந்துபோன செருப்புக்கு கிடைத்த மரியாதை  ஒரு  இறந்து  போன  மனிதனுக்கு கிடையாது  என்பதை  மதுரை முத்து  சுட்டி க்காட்டுகிறார்.

நன்றாக சிந்தனை செய்யுது பாருங்கள்.   அறுந்துபோன செருப்புக்கு கிடைக்கும் மரியாதையை கூடி கிடைக்காத பிணத்தை  ஒன்றில் எரிப்பார்கள், புதைப்பார்கள்நாங்கள் மட்டும் விதி விலக்கா?

 

( தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி  5 தை  பார்க்க. )

-      ஒரு  மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 5

 

 

 

நிலையற்றது  மனித  வாழ்க்கை.

 
முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல்'  என்றார்  பட்டினத்தார்.

ஒரு சினிமா பாடல் மூலம்  கவியரசு  கண்ணதாசன் மனிதனின் வாழ்கையின் நிலை  கூறியுள்ளார்.  

ஆடிய ஆட்டம் என்ன  பேசிய வார்த்தை என்ன?
 
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
 
கூடு விட்டு ஆவி போனால் கூடவே  வருவதென்ன?

 
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
 காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?   ……”


காலஞ்சென்ற  உவமைக்கவிஞர் சுப்புரத்தினம் (சுரதா) என்ற பாடல் ஆசிரியர் எழுதிய ஒரு சினிமா பாடல் :

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா!  …

அண்மைக்காலத்தின் வந்த ஒரு தமிழ் படத்தின் பாடல் வரிகள் .

ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவன் எல்லாம் மண்ணுக்குள்ளே. போன கதை உனக்கு தெரியுமா? நீ கொண்டு  வந்ததென்ன ?  கொண்டு போவதென்ன? உண்மை என்ன , உனக்கு புரியுமா? ……”

மேலே குறிப்பிட்ட பாடல்கள் முழுவதும்  விரும்பினால் கேட்டு பாருங்கள். அப்பாடல்களில் சொல்ல பட்ட விஷயங்கள்  எங்களுக்கு  தெரிந்தவையே  ஆயினும் கருத்துக்களை   சிந்திக்க சிந்திக்க அது  மனிதர்களை  மனித நேயமுள்ளவர்களாக  கொஞ்சமாவது  மனங்களை  மாற்றலாம் .
 
இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது ”  என்று பேராசைக்கார சக்கரவர்த்தி  மாவீரன்  மகா அலெக்ஸாண்டரின் இறுதி நிலையை கவிஞர்  வைரமுத்து குறிப்பிடுகிறார்  

யார் இந்த  அலெக்ஸாண்டர் ?

நான் இந்த உலகத்திற்கு வெறும் கையுடன் வந்தேன்; வெறும் கையுடன்  இவ்வுலகை விட்டுப் போகிறேன்”.  என்றவன் .

கி.மு: 356-323 வாழ்ந்த கிரேக்க வீரன்  மகா அலெக்ஸாண்டர். தன்  இளம் வயதிலேயே  தன் போர்த்  திறமையால் வட ஆபிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன்.

நீங்களும்  வாசிக்க நான் வாசித்த ஒன்றை அப்படியே கீழே தருகிறேன்.

மகா அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த  நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய  சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
...

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை  எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப்  புதைக்கும்  இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1.
என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால்  நிறுத்த முடியாது.

2.
வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.
உலகையே வென்றவன்  சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.... “  (நன்றி  http://www.amarkkalam.net/t5621-topic)

 
அந்தோ பரிதாபம் .  முப்பத்தி மூன்றாவது வயதில்  மரணம் அந்த மாவீரனை அனைத்துக் கொண்டது . தப்ப முடியவில்லை. 2350 ஆண்டுகள்  கழிந்தும் உலக சரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .  வாழ்ந்து கொண்டே இருப்பான். அவன் கூறிச்சென்ற வார்த்தைகளும் மறையாது .

ஜேர்மனிய சர்வதிகாரி அடால்ப் ஹிட்லர்  (1889 – 1945) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவனுடைய கடைசி வார்த்தைகள்,  கடைசி நிலை  என்ன தெரியுமா ?

“ . . . . . .  
ஹிட்லரின் முகம் இருண்டது .மவுனமாக எழுந்து ,தன் தோழர்களுடன் கை குலுக்கினார் .பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து ," நானும் ஈவாவும் ஒன்றாக இறந்து விடப்போகிறோம் .நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்" என்று கூறிவிட்டு தன் மனைவியையும் அழைத்து கொண்டு  தன் அறைக்கு சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது .வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.ஹிட்லரும் ,ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும் ,தளபதிகளும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் .

அங்கே அவர்கள் கண்ட காட்சி. ஒரு சோபாவில் உட்காந்திருந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல் . அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அவர் சற்று நேரத்துக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதால் துப்பாக்கி  நுனியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.அவரின் வலது காதுக்கு கீழிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது.ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அது ஹிட்லரின் தாயாரின் புகைப்படம் .

அவருடைய மனைவி ஈவா வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல மாக்சி உடை அணிந்து இருந்தால்.அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது.எனவே அவள் சைனட் விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது. இருவரது உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள்.பின்னர் அந்த உடல்களை தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிகொண்டு போய் எரித்தார்கள்.  . . . . . . ( நன்றி  http://sriramachandranl.blogspot.co.uk/2012/09/1889-1945.html )

இப்படி ஒரு நிலைமை தனக்கும் தான் நேசித்த பெண்ணுக்கும் வருமென்று அவனோ , அந்த பெண்ணோ கனவிலும் நினைத்திருப்பார்களா?  

 

நாடுகளை பிடித்தான். அறுபது இலட்சம் யூதர்களை  கொன்றான். இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும் அதன் மூலம் 20 கோடி பேருக்கு மேல் மரணமடைவதற்கும் காரணமாக இருந்ததான் .

சதாம் குசேன், கேணல்  கடாபி , போன்றோருக்கு நடந்த நிலைமைகளை நாங்கள் பார்த்தோம். அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை பாருங்கள். அவர்களை அழிக்க நடந்த போரில் அப்பாவி  மக்களுமல்லவா கொல்லப்பட்டார்கள் . நீங்கள்  நம்நாட்டில்  பார்த்திருப்பீர்கள், சுவரில்  இருக்கும்  பூச்சியை பல்லி பிடித்து விழுங்கிவிடும்.. பல்லியைப்  பூனை பிடித்து   விழுங்கிவிடும்.

"
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.."  கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல் ஒன்றில் தொடக்க வரிகள் இவை -  “ ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை,  நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை …”

இவர்களுக்கு எதிர்மாறாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைகளை பாருங்கள்.

பாருங்கள் உதாரணமாக  மகாத்மா காந்தி, அன்னை திரேசா  ஆகியோரின் வாழ்க்கைகளை  .

பிறர்  நலன்களே  தன்  நலன்களாக வாழ்ந்து சேவைகளை செய்து  மடிந்தவர்கள்.

யார்  இந்த மகாத்மா காந்தி என்று கேட்டால் அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் என்று சுருக்கமாக ஒரு பதிலை கூறலாம்.

அதற்கு மேலாக அவரின் வாழ்கையை, அவர் கூறிச் சென்றவற்றை பாருங்கள்.

அவர் எந்த நாட்டுக்கும் அரசனாகவோ, அதிபதியாகவோ இருந்தவருமல்ல.

பாரிஸ்டர் (Barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்று படித்து பட்டம் பெற்றார் என்றால்  அது அவரின் அந்நேர பொருளாராத வசதியை காட்டுகிறது .

அவர் வழக்கறிஞராக  தொழில் பார்த்து  நன்றாக உழைத்து சொத்து சுகங்கள் சேர்த்து  மனைவி, மக்களுடன்  பணக்காரனாக  வாழ்ந்திருக்கலாம்.

ஆனால்  சக்கிரட்டிஸ் வர்ணித்த  மனித நேயம் அற்ற  "பன்றிகள் , மாடுகள் " இனத்தை சாராதவர் அவர் .

வெள்ளையர் ஆட்சியிலே அவர் அனுபவித்தவையும், கண்டவையும் அவர் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

மனித நேயம் மிக்க ஒரு மாமனிதனாக மாறினார் .

மக்களுக்கு என்ன வேண்டும்  என்ற தேவைகளை   என்று கண்டார் .

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்தார் .

மக்களோடு மக்களாக வாழ்ந்தார் .

சத்தியவானாக  வாழ்ந்தார் .

தகவல் தொடர்பு வசதிகள் இன்றுள்ளது போல் அவர் வாழ்ந்த  காலத்தில் இருக்கவில்லை.

நாற்பது கோடி  இந்தியர்களின் சுதந்திரத்திற்காக  தன் வாழ்க்கையை அர்பணித்து வெற்றி கண்டார்.

அவரின் எளிமையான உடை, அவரின் எளிமையான வாழ்க்கையை , அவரின் எளிமையான தோற்றம்,   அவரின் எளிமையான பழக்க வழக்கங்களை  பாருங்கள் .

கோட்டு  சூட்டுகளை துறந்தார் .

சாதாரண ஏழை விவசாயின் உடைகளை அணிந்தார்.

கதர் உடுத்தார்.

இங்கிலாந்தில்  பாரிஸ்டர் பட்டம் பெற்றவரான காந்தியை, “ அரை நிர்வாண பக்கிரிஎன்று வர்ணித்தார் அபோதிருந்த    இங்கிலாந்தின்   பிரதம மந்திரி, வின்சண்ட்   சர்ச்சில்.

(
வங்காளத்தில் 1943ல் ஏற்பட்ட பெரும் பட்டினிச் சாவுகளில் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் சாவதற்குக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்தான் என்று இந்திய விஞ்ஞானியும் எழுத்தாளருமான மதுஸ்ரீ முகர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார். …     “பஞ்சத்தால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எப்படி காந்தி மட்டும் இன்னமும்  சாகாமல் இருக்கிறார் ?” என்று சர்ச்சில் பதில் தந்தி அனுப்பினார். காந்தி, பாவம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடங்கியது முதல் 1944 வரை சிறையில் இருந்தார். …   http://www.gnani.net )

தன் மனைவியும் மற்றவர்கள் போலவே  கழிப்பறையை சுத்தம் செய்யவேண்டும் என்றார்.

அவருக்கு ஆதரவுகள் மட்டுமல்ல எதிர்ப்புகளும் இருந்தது .

மனிதனுக்குரிய பலவீனங்களில்  சில அவரிடமும் இருந்தது .

தான் விட்ட  தவறுகளுக்காக மனிப்பும் கேட்டுள்ளார் .

வாழ்கையில்  சில விஷயங்களை மாத்தமா காந்தி மற்றவர்களுக்கு  செய்யுங்கள் என்று  அறிவுரை கூறு முன் அதை தான் பல தடவைகள் செய்தது பார்த்து, தன்னால்  அதை செய்ய  முடிகிறது   என்று கண்டபின் தானாம் மற்றவர்களையும்  செய்யுங்கள் என்று  அறிவுரை கூறுவாராம்.

இறை நம்பிக்கை கொண்டவர் மகாத்மா காந்தி. ஆனால் அவர் மத போதகரோ, சாமியாரோ அல்ல.

பல மத போதகர்களை, சாமிமார்களை  அவதானித்து பாருங்கள்....

மகாத்மா காந்திவாழ்ந்த எளிமையான  வாழ்கையின் கால் பங்கு தன்னும் அவர்கள் வாழ்கிறார்களா ?

அவர்கள் போதிக்கிறபடி  அவர்கள் நடக்கிறார்களா ?

இப்படிப்பட்ட   மத போதகர்களை, சாமிமார்களை  நம்பி இவர்களை வாழ வைக்கும் கூட்டத்தாரை  என்ன செய்வது?    

படித்தவர் பாமரர் எல்லாம் இப்படிப்பட்ட  கூட்டங்களில் இருக்கிறார்கள்.

முட்டாள் தனத்திற்கு மருந்து கிடையாது .

இதில் ஒரு சிலருக்கு  வியாபார நோக்கங்களும் உண்டோ என்று சந்தேகங்கள் எழ வைக்கிறது .            

 

 

தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி   6 றை பார்க்க. )

 

-      ஒரு  மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 6

 

 

 

 “ திண்ணை “ (  http://puthu.thinnai.com ) என்ற இணையதளத்தில் நான் வாசித்த சில பகுதிகளை  கிழே அப்படியே நீங்களும் வாசிக்க தருகிறேன்.

அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறதுஎன்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட்நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்திஎன்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்என்று ஷா கூறினார்.  http://puthu.thinnai.com/?p=18201

காந்தி கூறியுள்ளதை பாருங்கள்:  “ பிராத்தனையில்   ஆயிரக்கணக்கான தலைகள் குனிவதை விட , கருணையுடன் ஒருவனுக்கு செய்யும் ஒரு  காரியம் மேலானது “.  

அன்னை தெரேசாவை  பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தாய் நாடு வேறு, மொழி வேறு, கலை கலாச்சாரம் வேறு .

இந்தியா என்றாலே இந்து சமயம் என்று கருதப்படும் நாடு அது .

மிக மிகப்  பெரும்பான்மையினரின்  மதம் அது ஆனதால் .

அவரின் மதமோ கிறிஸ்தவ மதம்.

தேசமோ  அந்நிய தேசம்.

அதுவும் அவர் ஒரு பெண் ….  பெண் துறவி.

காசு பணங்கள், சொத்து சுகங்களுடன்  இந்தியாவுக்கு வந்தவர் அல்ல.

கைவிடப்பட்ட ஏழைகள், நோயாளிகள், குழந்தைகளுக்கு இன, மத, மொழி பாராமல் சேவை  செய்ய வேண்டிய கட்டாய தேவை அன்னை திரேசவுக்கு  இருந்ததா ?

நான் வாசித்தவற்றில் சிறு குறிப்புகளை கீழே  தருகிறேன்.

“ . . .  1942-43-
ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பஞ்சம் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கையில் வேலையின்றி, பணமின்றி  மக்கள் திண்டாடினார்கள். பசிக்கொடுமை தாங்காமல் பல முதியவர்கள் மயக்கத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒரு புறம் போர், இன்னொரு புறம் பஞ்சம், இன்னொரு புறம் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. இந்த சமயத்தில் முஸ்லிம் லீக் என்கிற கட்சி இயக்கம் உருவானது. இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோஷம் வலுத்தது. பஞ்சத்தின் பிடியில் இருந்த அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுடைய சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். சிந்திக்க ஆரம்பித்தார்!!! ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அந்த சிக்கலான விதிமுறைகள் தெரசாவின் சேவையை முழு நேரமாகவோ அல்லது அதிக நேரம் செலவழிக்கவோ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக லொரேட்டாவில் இருந்த விலகுவதாக முடிவு செய்த தெரசா தனது ராஜினாமா கடிதத்தை பேராயர் மூலமாக ரோமுக்கு அனுப்பினார். நாள்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. இறுதியாக ஏப்ரல் 12, 1948 அன்று உத்தரவாதக் கடிதம் வந்துவிட்டது. “இனிமேல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் எந்தத் தடையும் இல்லை” – உற்சாகம் பொங்க கூறிக்கொண்டார் தெரசா.

ஐந்து ரூபாய் பணம். நீல நிறத்தில் மூன்று சேலைகள்’. இதுவே தெரசாவின் சொத்து லொரேட்டாவில் இருந்து வெளியேறிய போது. வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய  நல்வாழ்வுக்காகத்  தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார்.. . . . .    ( நன்றி  http://ponraj.wordpress.com/2009/04/06)

“. . . .
அன்னை தெரேசா தனது சேவையில் பல அவமானங்கள சந்தித்து இருக்கிறார். இவற்றையெல்லாம் கடந்தே  இவர் பல சேவைகளை செய்துள்ளார் , இவரது வாழ்க்கையில இடம்பெற்ற நிகழ்வுகளில் சில.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு  நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர்  வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம்  இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர்  தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல்மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்அந்தக் கடைக்காரர்இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப் பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

ஒரு முறை போப்பாண்டவர்  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்.

தனது முழு நேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவைகுடிசை சகோதரிஎன்று அழைக்க ஆரம்பித்தனர்.

தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது . “

"
வணங்கும் உதடுகளை விட உதவும் கரங்களே சிறந்தவை"  -

(நன்றி:  http://thangabaluslife.blogspot.co.uk/2012/01/blog-post_8324.html )

எல்லா உயிரினங்களைபோல்  மகா அலெக்ஸ்சாண்டரும் , அடால்ப் ஹிட்லரும் ,  மகாத்மா காந்தியும் , அன்னை தெரேசாவும்   அழிந்து போகும் உடல்தான் கொண்டிருந்தார்கள் .

ஆனால்  அவர்களுக்குள் வேறுபட்டது அவர்கள் கொண்டிருந்த ஆன்மா .

எல்லோருமே  பேராசைக்காரர்கள் .

பேராசைகள் வேறுபட்டதாக இருந்தது .

நாட்டை  ஆண்டார்கள் முன்னவர் இருவரும்  .

வெறி பிடித்தவர்களாக  போதாது போதாது என்று நாடுகளை பிடித்தார்கள்.

அநியாயமாக  எத்தனையோ பேரின் மரணங்களுக்கு காரணமாக இருந்தார்கள்.  

எந்த நாட்டையும் ஆண்டவர்கள்  அல்ல பின்னவர் இருவரும்.

பணக்காரர்களுமல்ல. காசு பணம் சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டவர்களுமல்ல.

எளிமையான உடைகள். எளிமையான தோற்றங்கள்.

மக்களுக்கு  சேவை  செய்வதையே  பேராசையாக கொண்டவர்கள் .

அவற்றை சாதித்தார்கள் .

என்ன உயர்ந்த மனித நேயம் .

கீதையிலிருந்து  சில  வரிகள்,  …  படித்துப் பாருங்கள்.

மற்றவர்களுடைய  சந்தோஷங்களையும்,  துக்கங்களையும்  தன்னுடையதாகவே பாவித்து அதற்காக  செயல்படுகிறானோ, அவனே முற்றறிவு  நிரம்பிய ஞானி ஆகிறான்  (When a person responds to the joys and sorrows of others as if they were his own, he has attained the highest state of spiritual union.)  “

 

அவற்றுக்கு உதாரண புருஷர்களாக ,  

உலக  சரித்திரத்தில் மட்டுமல்ல ...

நாடுகள் கடந்து  ...

மொழிகள் கடந்து ...

காலங்கள் கடந்தும் ...

எல்லோர் மனதுகளிலும்  மகாத்மா காந்தியும் , அன்னை திரேசாவும் இன்றும் வாழ்கிறார்கள்

பலருக்கு  வழிகாட்டிகளாக  இறந்தும்  வாழ்கிறார்கள்

ஆனால் உலக சரித்திரத்தில் அதிகம் இடங்களை  பிடித்துள்ளவர்கள் யார் என்றால் மனித நேயம் அற்ற வர்கள், அநியாயங்கள் செய்யும் மனிதர்கள், கொடுங்கோல் மன்னர்கள், சர்வாதிகாரிகள் , . . . போன்றோர்  தான் . அது மிக மிக தூரதிஸ்டமானது.

சரித்திரத்தில்  இடம்பெறாத  மனித நேயம் படைத்த நல்லவர்கள் எந்தனையோ இருக்கிறார்கள்.  

நாளாந்த வாழ்கையில் கேள்விப்பட்டிருப்போம். பிறருக்கு மனித நேயத்துடன்  தன்  நலம் கருதாது  உதவிகள் செய்பவர்கள்  நிறைய பேர்  இருக்கிறார்கள். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் அது  வளர்வதற்கு பதிலாக  வீழ்ச்சி அடைந்து போகிறது.

எல்லோரும் மகாத்தமா  காந்தியாக, அன்னை  திரெசாவாக  எம்மை மாற்றி கொள்வது சாதாரணமாக  முடியாத விஷயம் .
அன்றண்டாடுள்ள  பல்வேறு பிரச்சனைகளுக்குள் வாழ்கையை ஓட்டும் சாதாரண மனிதர்கள் நாங்கள் .

சில பல பிரச்சனைகளை தெரிந்தோ  தெரியாமலோ  பிரச்சனைகளை நாங்களே எங்களுக்கு உருவாக்குகிறோம்.

சிலர் ... பலர்  எங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்

சில நேரங்களில்  திடீரென்று  வரும்  பிரச்சனைகள் ஒரு பக்கம்.

சில சமயம் சில பல பிரச்சனைகள் தீர்க்கமுடியாமல் மரணம் வரை தொடர்கிறது .

 

எங்கேயோ எபோதோ வாசித்த சில வரிகளை  நீங்களும் வாசித்து  பாருங்கள் .

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா. … “  

அதற்காக மனிதய நேயத்தை நாம் துறந்து விடலாமா?

மனித வர்கத்தின் ஜீவநாடிகளில் ஒன்று மனித நேயம் .  

நம்முடைய  பிள்ளைகளுக்கு  என்னென்ன செய்யவேண்டும் என்று நமக்கு தெரிகிறது .

சில பல தடவைகள் நமது  பொருளாதார வசதிகளை  மீறி பிள்ளைகள் எதிர்பார்க்காமலே நாங்கள் செய்கிறோம்.

பெற்றோருக்கு செய்கிறோம் . . .
 

உறவினர்களுக்கு செய்கிறோம் . . .

நண்பர்களுக்கு செய்கிறோம் . . .

கடவுளுக்கு கூடி  செலவுகள் செய்கிறோம் . . .

இதை விட புகழுக்காக கேட்காமலே  செய்கிறோம். கூட்டாக சேர்ந்தது செய்கிறோம்.

அதுமட்டுமா எத்தனையோ அனாவசிய செலவுகளை செய்கிறோம்.

பாதிக்கபட்டு நிர்கதியாக எம்மை நோக்கும் நம் இன மக்களுக்கு மட்டும் செய்வதில் என்ன தயக்கம் ?

மனிதனுக்குரிய சராசரி மனித நேயத்தை எங்கள் உள்ளங்களில் வளர்த்து ...

நல்ல சராசரி மனிதர்களாக  மாறி  . . .

நல்ல தமிழர்களாக மாறி ....

நிர்கதியாய்  நிற்கும்  நம் இன உறவுகளுக்கு நம் கடமைகளை  முன் வந்து செய்ய வாரீர் .

 

தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி   7 ழை  பார்க்க. )

-      ஒரு  மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 7

 

 

 

 

அழிந்து கொண்டிருக்கும்  மனித நேயம்  !

 

இன்டஸ்டிரியலைஸ்ட்நாடுகளால் வாயு  மண்டலங்கள் பாதிக்கபட்டுகின்றன...

பனி மலைகள் வட , தென் துருவங்களில் வேகமாக  கரைகின்றன . . .

பூமியின் வெப்ப நிலை கூடுகின்றன  . . .

கால நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன . . .

குடி நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றன . . .

மரங்கள், காடுகள் அழிக்கபடுகின்றன . . .

வறட்சிகள் அதிகரிக்கின்றன  . . .

உணவு பற்றாக்குறை அதிகரிக்கின்றன . . .

பஞ்சமும்  பட்டினியும்,  பட்டினிச்சாவும்,  நோய் நொடிகளும் கூடுகின்ற . . .

அடுத்து  அடுத்து வரும்  தலைமுறையினருக்கு  நாம் விட்டு செல்லும்  " பிரச்சனைகள் " இவைகள்.

இவற்றை எல்லாம் கவலைப்படும் அரச தலைவர்கள், விஞ்ஞானிகள்   மாநாடுகள் கூடி பேசுகிறார்கள்.

இதுல வேற, இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு மத வாதிகளோ கதைகளையும், கடவுள்  யார், கடவுளை நேசிப்பது எப்படி, . . . மரணத்திற்கு பின்னால்  என்ன , … கடவுளை  அடைவது எப்படி ,  …  என்றெல்லாம்  வழிகள் கூறிக்கொண்டு தம் காலத்தை ஓட்டுகிறார்கள்.

 “ . . .
கண்ணால் நீங்கள் காணுகிற , தொடுகிற  ,  சேர்ந்து  வாழ்கிற உங்கள் அயலவரை நேசிக்காமல்,  கண்ணால் நீங்கள் காணாத கடவுளை நீங்கள் நேசிப்பதாக எப்படி கூற முடியும் ?” - அன்னை திரேசா

மனித நேயம் மனிதர்களுக்குள்  வறண்டு  கொண்டு போவதே  பல்வேறு பிரச்சனைகளுக்கு எல்லாம்  அடிப்படை காரணம்   …

அதை வளர்க்க அரசியல் தலைவர்கள் ,  சமய பெரியோர்கள் அக்கறை எடுப்பதாயில்லை.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ( immunity ) இருபத்து நான்கு மணி  நேரமும் செயல்படுகிறது .    அது பலவீனமாக இருந்தால்   பலவிதமான நோய் நொடிகள் பிடித்து விடுகின்றன .    

நமது நோய் எதிர்ப்பு சக்தியை  பலமானதாக மாற்றினால் போதும்அது எப்படிப்பட்ட வைரசையும், புற்று நோயையும் அடியோடு விரட்டி விடும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பிரபல நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் டாக்டர் சார்லஸ். அவர் மேலும் கூறியதாவது: . . .     (நன்றி : http://cinema.maalaimalar.com/2012/08/28103550/Diabetes-and-cancer-Disease-re.html)

மனித நேயமும்   “ நோய் எதிர்ப்பு சக்தி “  போலதான் .  அது வரட்சி அடையும்போது  " நான் " என்ற  புற்று நோய் நமக்குள் வளருகிறது. நம்முடைய   ஆசைகள் அதிக ஆசைகளாகி , பேராசைகளாகி வளருகின்றன . ஆசைகளுடன்  பின்னிப் பிணைந்தது  நம் சுயநலங்கள். .  

மண் ஆசை,  பொன்  ஆசை, பெண் ஆசை என்ற மூன்று ஆசைகளை பற்றி அறிந்திருப்பீர்கள் .  

இந்த ஆசைகளில் ஒரு ஆசை கூடி  பேராசையாக , வெறி பிடித்த ஆசையாக மாறும் போது   மனித நேயம் அழிந்து போகிறது .

அது மட்டுமா இன வெறி, மத வெறி, நிற வெறி , மொழி வெறி ,  ...  

தனி மனிதனுக்கு வெறி பிடித்ததாலே அழிவை செய்கிறான்.

வெறி பிடித்த மனிதர்கள்  கூட்டு சேரும்போது   அவர்கள் செய்யும் அழிவுகள் பேரழிவாக இருக்கிறது .

தனி மரம் தோப்பாகாது.  ஆனால்  தோப்பாவதற்கு  ஒவ்வொரு தனிமரமும் தேவை .

வளமாக்க   காப்பாற்ற  வாருங்கள்  வறண்டு போன மனித நேயத்தை.

நெஞ்சில் ஈரம்  வேண்டும்  மண்ணுக்கும்  ஈரம் வேண்டும் .

 

எத்தனையோ பழைய மனித  நாகரீகங்கள், பட்டணங்கள் அப்படியே  மண்ணோடு மண்ணாக அழிந்து போன வரலாறுகள் உலக சரித்திரத்தில் இருக்கின்றன.  மழை  பலவருடங்களாக இல்லாததால் ஏற்பட்ட வரட்சி மனிதர்களையும் , விலங்குகளையும்  , செடி கொடி பயிர்களையும்  சாகடித்தது.   உயிர் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட மனிதர்கள்  இறந்து போன சக  மனிதர்களை  … பிள்ளைகளை சாப்பிட்டு இருக்கிறார்கள்... அதுமட்டுமா இறந்து போன நாய்களை சாப்பிட்டிருக்கிறார்கள் ..., மிருகத்தின் மலத்தைக் கூடி சாப் பிட்டிருக்கிறார்கள் ... .  இறுதியாக அவர்களும் இறந்து மண்ணோடு  மண்ணாக போனார்கள். (http://www.heretical.com/cannibal/egypt.html,)

மனித நேயம் என்றால் என்ன என்று யாருமே  கேள்வி கேட்டால் அவன் மனிதனேயில்லை.

சரி அறியாமையால் கேட்டால் அதற்கு சுருக்கமான பதில்

" உன்னைப்போல் உன் பிறத்தியானையும்  நேசிப்பாயாக"   என்ற ஜேசு கிறிதுநாதர் கூறியதில்  எல்லாமே விடை உள்ளது.  

பல வழிகளில் எல்லா  சமயங்களும்  இதையே  கூறுகிறார்கள்.

பாருங்கள்  சீனா ஒரு  பணக்கார  நாடு  ஆனால்  சீனர்கள் தான்  ஏழைகள்.

 

இந்தியா  ஒரு  பணக்கார  நாடு  ஆனால்  இந்தியர்கள் தான்  ஏழைகள்.

 

"It's a Girl! Documentary Film"  என்ற  விளக்கத் திரைப்படத்தை கணனியில் பாருங்கள்அதில் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு தமிழ் பெண் தனது எட்டு பெண் குழந்தைகளை கொலை செய்த கதையை கூறுகிறாள் .  

 

தமிழ் நாட்டில் சில பகுதிகளில் வயதான தாய்  தந்தையரை கொள்ளும் சடங்குக்கு   பெயர்  “தலைக்கு ஊத்தல்”.  இணைய தளங்களில்  "தலைக்கு ஊத்துதல்"  என்ற சடங்கைப் பற்றி படித்துபாருங்கள் என்ன கொடூரம் அது.

 

"தனிமனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் ....." என்று பாரதி  சொன்னார்.   அவரே பசியின் வலியை வாழ்கையில் அனுபவித்தவர். அவர் கூறிய அர்த்தம் வேறு   ஆனால்  வறுமையின் கொடுமையை காரணம் காட்டி  பெண் குழந்தைகளையும் , முதியவரையும்  கொல்லுகிறார்களே தமிழ் நாட்டில்.  கொல்லப்படுகிற அந்த குழந்தைகளுக்குள், முதியவர்களுக்குள்  ஆன்மாக்கள் இருப்பதை யாருமே அக்கறைப்படுவதாயில்லை.

 

கோடிக்கணக்கில் காசு பணம் சொத்து  சுகம்  சேர்க்கும் அரசியல் வாதிகள் , கோடிக்கணக்கில் உழைக்கும் சினிமாக்காரர்கள் , கோடிக்கணக்கில் சேர்க்கும் சாமிமார், கோடிக்கணக்கில் சேர்க்கும் தொழில் அதிபர்கள், முதலாளிமார்,  ...., கோடிக்கணக்கில் வருமானம் வரும்  கடவுள்களின்  கோவில்கள், ...  உள்ள நாட்டில் மனிதர்களின் நிலைமைகளை பார்த்தீர்களா

ஒரு சான் வயிறு  உணவு கொடுத்து வாழவைக்க  அவர்களிடம்  மனமில்லை.

 

அதேசமயம்  காகத்திற்கு உணவிடுங்கள் என்கிறார்கள் .    காகம் நம் மூதாதையராம்.  

 

கொல்லப்படுகிறவர்கள் காகங்களாக மறு பிறப்பு எடுத்து வந்தால்  அதிஸ்டம் தான். கொல்லமாட்டார்கள் , இலவச சாப்பாடும்  கிடைக்குமல்லவா?

 

ஆனால்  காகத்தின் குணத்தை பாருங்கள்.

“ … உணவினை உடனே உண்ணாமல் தன்  கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், உணவு  உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்,  …. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று  கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது....”     ( மேலும் வாசிக்க  http://www.livingextra.com/2011/06/blog-post_13.html#ixzz2RwlREa5R)

 

காகங்களுக்கு வந்த வாழ்கையை பாருங்கள்.  அதே சமயம் மனிதர்களின் நிலைமைகளையும் பாருங்கள்.

 

ஏன்

 

 

அடிப்படையில் மனித நேயம்  மனிதர்களின் மனங்களில் இருந்து  வற்றி போவதே   காரணம் குறிப்பாக அரசியல் வாதிகளின் உள்ளங்களில் அது ???????

 

ஆட்சிப் பீடத்தில் மாறி மாறி வரும் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அங்கு மனிதநேயம் மிக்க  நேர்மையான தமிழ் உணர்வாளர்கள் ஆட்சிப்பீடங்களுக்கு வர வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

 

அவர்களா  இலங்கை தமிழரின் விடிவு  வழி  செய்வார்கள்?

 

 

அரசியல் மோசமானதல்ல,  நாட்டை நல்லவர்கள்  ஆளும்வரை.

 

உதாரணத்திற்கு  எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் போன தென்னக  காந்தி  காலம் சென்ற  கர்மவீரர் காமராஜர்  என்ற தமிழரை பற்றிய சில துணுக்குகளை கீழே தருகிறேன். வாசித்து பாருங்கள்.

 

 

·         ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

·         இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'KING MAKER' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

·         உதவியாளர்:  2 இலட்சம் ரூபாய் இருந்தால்  நீங்கள் செய்த சாதனைகளை  படமாக்கி வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் .
காமராஜர்:  அடேங்கப்பா அதுல நான் நாலு பள்ளிகூடம் கட்டிருவேனே !

 

(மிகுதியை  தொடர்ந்து அவரைப்பற்றி படிக்க:   கர்மவீரர் காமராஜ்http://iamhoneydrop.blogspot.co.uk/2012/07/blog-post_15.html).

 

தமிழ் நாட்டின்  காலம் சென்ற முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கக்கன் னை பற்றி படித்து பாருங்கள்.    எளிமைக்கும்  நேர்மைக்கும்  பெயர் போன அடுத்த மாமனிதர்.   அவர்.  எம்.பி. , அமைச்சர், எதிர்கட்சித்  தலைவர், எம்.ல் . என்று பல பதவிகளை வகித்தவர். அவர் இறக்கும்போது வசதிக்  குறைவால் அரச மருத்துவ மனையில்  சேர்க்கபட்டிருந்தார்.

ஒரு அன்பர் அனுப்பியது – பகிர்வு உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு  கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.  ……….  (தொடர்ந்து படிக்க  https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/ok9X4j5OKD)

 

ஒரு கத்தி ஒரு குடும்பப்  பெண்ணின் கைகளில் கிடைத்தால் அதைப் பாவித்து தன்  கணவன், பிள்ளைகளுக்கு சுவையான காய்கறிகள் சமைத்து போடுகிறாள்.  அதே கத்தி கெட்டவன் கையில் கிடைத்தால் அவன் என்ன செய்வான்அதே மாதிரித்தான் அரசியலும், நல்லவர்கள் ஆண்டால் பல நூறு நன்மைகள் மக்களுக்கு.   

கெட்டவர்கள்  ஆண்டால்  எப்படி இருக்கும் என்பதை அனுபவரீதியாக பார்கிறோமே!

 

நண்பர்களே!  அடிக்கடி நாம்  வாழ்ந்த மண்ணையும், இனத்தையும், நிலையற்ற வாழ்க்கையையும்  சிந்திக்கும்போது  மனித நேயம் வளரும்.  அது  சாதாரண எளிமையான வாழ்கை வாழ நம்மை தூண்டும்.

 

 

 

எங்கே நிற்கிறது மனித நேயம் ?

 

மனித நேயத்தையும் மிருக நேயத்தையும்  ஒப்பிட்டு பாருங்கள் : " யு ரியுப் " பில்  இரண்டு வயதான சீனப் பெண் குழந்தையை இரண்டு வாகனங்கள் அடித்து விட்டு செல்லுகின்றன .  பதினெட்டு பேர்  அதை அக்கறை படுத்தாமல் போகிறார்கள்.   பிள்ளை  இறந்துவிட்டது. ஆனால் பெரும் சாலை  ஒன்றில்  வாகனம் ஒன்றால் அடிக்கபட்ட  நாயை   பாதுகாப்பு கருதி  இன்னொரு நாய்  தன்  உயிர்  ஆபத்தை  கணக்கெடுக்காமல்  இழுத்து செல்வதை பார்த்தேன் .  இன்னொரு காட்சியில் பெரும் சாலை ஒன்றில்  இறந்துபோன  நாய்க்காக  அந்தற்கு  விசுவாசமான நாய்   ஒன்று  தன்  ஆபத்தை  கணக்கெடுக்காமல், செய்வது அறியாமல்  அதன்  அருகில் குந்திக்கொண்டிருப்பதை பார்த்தேன்.

ஐந்தறிவு உள்ள அந்த மிருகங்கள்   ஆறறிவு கொண்ட  மனிதனை விட மேலானதல்லவா  நேயத்தில் !

". . .
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது" என்று பெரியோர்கள்  சொன்னதாகச் சொல்லுவார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாததற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். "கொடுமை மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை" என்பது என தாழ்மையான அபிப்பிராயம். உலகில் உள்ள ஜீவகோடிகளில்  எல்லாவற்றிலும் மனிதப் பிறப்பே  மிகத் தாழ்ந்த பிறப்பு என்பதும், மனிதனைப் போல் அடிமை உலகில் வேறு ஜீவன்கள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம்.  …   -பெரியார் .வெ.ரா.   ('குடிஅரசு', 09.01.1927)

 

 

தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி   8 டை பார்க்க. )

-      ஒரு  மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி 8

 

 

 

 

மதங்களும்  நாங்களும்...

 

 

தமிழர்கள் என்றாலே  பொதுவாக கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கைகள் கொண்டவர்கள்.

ஆகவே  நிலையற்ற வாழ்கையை உணருங்கள் முதலில்.

மன மாற்றங்கள் உங்கள் மனதில் அவை ஏற்படுத்தும்.

கீழே தரப்பட்ட சில பகுதிகளை வாசித்து பாருங்கள் :

 

உண்மையை உணர்க !! - யுகபுருஷன் இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---

 

சேர்த்து வைத்த  செல்வம் யாவும் ஒரு நாள் ஒன்றுமில்லாமல் அழியக்கூடியவை . உயர்ந்து  நின்றவை  ஒரு காலத்தில்  சரிந்து தரை மட்டமாகின்றன . எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி பழகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு  பிரிவு நிச்சயம் .

 

சேர்ந்திருந்தவை  ஒரு நாள் பிரிந்து விடுகிறது . எத்தகைய வாழ்க்கையும் மரணத்தை முடிவாக கொண்டது .

 

பழுத்து கனிந்த பழம் தரையில் வீழ்ந்து தான் ஆக வேண்டும் . அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆகவேண்டும் . இறப்பது நிச்சயம் ; இருப்பது நிச்சயமில்லை !

 

எவ்வளவு உருதியாக வீட்டைக்கட்டினாலும் காலப்போக்கில் வீடு இடிந்து  அழிவதுபோல  நாளடைவில் மூப்புக்கும் மரணத்துக்கும் வசமாகி முடிவெய்துகிறான் !

 

கோடைக்காலத்தில் சூரியனின் செங்கிரணங்கள் தண்ணீரை வற்ற செய்வதுபோல  இரவும் பகலும் மாறிமாறி வந்து உலகிலுள்ள உயிரிணங்களின் ஆயுளை அபகரித்து செல்லுகின்றன .!

 

 

சூரியன் உதிக்கும் போது , ``பொழுது விடிந்துவிட்டது ; வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் `` என்று மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் . சூரியன் மறையும் போதும் , `` சம்பாதித்ததை கொண்டு சுகமாயிருக்கலாம் `` என்று மகிழ்கிறார்கள் . ஆனால் சூரிய  உதயம் மற்றும் மறைவின் போது தன் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்பதை உணர்வதில்லை !

 

ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் புதிய புதிய பருவ காலத்தின் ஆரம்பத்தை கண்டு மனிதன் மகிழ்கிறான் . ஆனால் தன் ஆயுட்காலமும் கழிவதை  அவன்  உணர்வதில்லை !

 

கடலில் வெவ்வேறான  இடங்களில் மிதந்த  இரண்டு கட்டைகள் எப்போதோ ஒன்று கூடுகின்றன . சிறிது நேரம் சேர்ந்தவாறே மிதந்தும் செல்லுகின்றன . பிறகு பிரிந்தும் சென்றுவிடுகின்றன . அதுபோலத்தான் மனைவி , மக்கள் , சுற்றத்தார் , செல்வம் யாவும் ஒன்று சேர வேண்டிய காலத்தில் ஒன்று சேருகின்றனர் ; பிரிய வேண்டிய காலத்தில் பிரிந்தும் விடுகின்றனர் !

 

சேர்க்கை  எவ்வாறு நிகழ்கிறதோ அதுபோல  பிரிவும் நிகழ்கிறது !

 

இயற்கையை மீறுவது என்பது யாராலும் முடியாது ! உயிரிணங்கள் தோன்றியபடியே இருப்பதில்லை ; முதுமையடைந்து இறந்துவிடும் !

 

இறந்ததை எண்ணி வருந்தலாமே தவிர திரும்ப கொண்டு வர மனிதரால் இயலாது . தன்னுடைய முறை வரும்போது மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியாது !

 

ஒரு யாத்திரை கூட்டத்தை பார்த்த வழிப்போக்கன் , `` நானும் உங்களுடன் வருகிறேன் `` என்று சொல்லி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறான் . அதிலிருந்து சிலர் பிரிந்தும் விடுகிறனர் . ஒரு நாள் அவனும் பிரிந்து விடுகிறான் . பின்னர் வேறொரு கூட்டத்திலும் சேர்ந்து கொள்ளுகிறான் !

 

அதுபோல நம்முடைய பெற்றோரும் பாட்டன்மார்களும் ஏற்கனவே  இந்த கூட்டத்தில் சேர்ந்து பிரிதும் விட்டனர்நாமும் ஒரு நாள் பிரியத்தான் வேண்டும் . பின்பு வேறோர் பிறவியில் வேறொரு கூட்டத்தில் இருப்போம் . ஆகையால் பிரிவால் வருந்துவதால் என்ன பயன் ? இதில் புலம்புவதற்கு என்ன இருக்கிறது ?

 

ஆற்று  வெள்ளத்தைப்  போலவே ஆயுள் எப்போதும் ஒரு திசையில் போய்க்கொண்டுள்ளது . அது திசை மாறி வந்த வழியில் பாய்வது ஒருபோதும் நடவாது . மனிதனின் ஆயுட்காலமும் இடைவிடாமல் சுருங்கிக்கொண்டே இருக்கிறது . மரணத்தை தடுக்கவே முடியாது . இடையில் மனிதர்கள் அற்ப சந்தோசத்தை நாடி ஓடுகிறார்கள் . சந்தோசம் வேண்டும் ; அதை தர்ம வழியில் மட்டுமே பெற முயலவேண்டும் ! அதர்ம வழியில் பெற்ற சந்தோசம் ஒரு நாள் - ஒரு பிறவியில் துனபத்தை கொண்டுவந்தே தீரும் !

 

கிடைத்ததைக் கொண்டு மகிழ்பவர்களே  நீடிய சுகத்தை அடைந்தவராவார் ! இருப்பதில் திருப்தியுற்றிரு ! இல்லாததில் நோகாதிரு ! கடவுளிடம்  கேள் ! கிடைத்ததில் மகிழ்வுற்றிரு !! நன்றி செலுத்த கற்றுக்கொள் !!

( நன்றி :  ஏக இறை தேடல் இணையம் http://www.godsprophetcenter.com/rich_text_86.html )


கீதாசாரம் :

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.  


 “ வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.பிறக்கும் போது யாரும் எதையும்  கொண்டு  வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம். ----இராம கிருஷ்ண பரமஹம்சர்

 

மரணத்தின் போது  நமது உடைமைகள் என்று கருதிக் கொண்டிருக்கும் எதையுமே நம்முடன்  எடுத்துச் செல்ல முடியாது. இதை நன்றாக அறிந்தும்கூட வாழும் சொற்ப காலத்தில் 'இது எனது, இது எனது" என்று சொல்லி சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்!” – புத்தர்

 

"வயலுக்கு கேடு களைகள், மனித
வாழ்வுக்கு கேடு அவனது  ஆசைகள்".....- புத்தர்

 

" வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?  ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்என்ற மனம் சாகும்வரை வருவதில்லைஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது. . . . .  " (நன்றி  கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்ஆசை  http://vivekanandadasan.wordpress.com/category/ )

கடவுளுக்கு  உருவம் இல்லை என்கிறார்கள்.

கடவுளுக்கு  நாம் கொடுத்துள்ள உருவங்களோ பல. மதங்கள் பல.

இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறார்கள்.

 

(அப்படியானால் பாதிக்கப்பட்ட  நம் தாயக மக்களிலும்  இருக்க மாட்டாரா என்ன !)

 

ஆனால் ஆலயங்களை  அமைத்து  நாங்கள்  இறைவன் அங்கு குடியிருக்கிறார் என்கிறோம்.

பணத்திற்காக ஆலயங்களை  உண்டாக்குபவர்களும்  இருக்கிறார்கள்.

நிர்வாகப்  பதவிகளுக்காக சண்டை  சச்சரவுகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள்.

சில ஆலயங்களில் தான் புதுமைகள் நடக்கிறது  என்கிறார்கள். அதற்கு கதைகள் கூறுகிறார்கள்.

"
புதுமைகள் நடக்கிறது " என்று விளம்பரப்படுத்த பட்ட ஆலயங்களுக்கு வருமானமும் கூடுகிறது.

கோவில்களில்  பொதுவாக என்ன செய்கிறோம்?

கடவுளை  புகழ்ந்து பிராத்தனைகள் செய்கிறோம்.

எமக்கு தேவையான  உலக விஷயங்களை  இட்டு " மனுக்கள் " கொடுக்கிறோம் .

கேட்டுள்ள  விஷயங்கள் நிறைவேறினால்  கடவுளுக்கு   இலஞ்சமும் கொடுக்கிறோம்.

அன்பளிப்புகளும்  செய்கிறோம்.

அவற்றை  நேர்த்தி கடன் என்கிறோம்.

சிலைகளை  செய்து  பல்லக்குகளில் காவுகிறோம்  . . . தெருத்தெருவாக  தேரில் வைத்து இழுக்கிறோம் .

தேங்காய்கள் ஆயிரக்கணக்கில்  கடவுளுக்கு உடைக்கிறோம்.  

அதற்கு  பெரும்  தத்துவம் இருக்கிறது   என்கிறோம்.

வீதிகளை துப்பரவு செய்ய முனிசிப்பல்  கவுன்சிலுக்கு விசேட கட்டணங்கள் செய்கிறோம்.

 
கோவில் திருவிழாக்களை  கொன்றாடும் போது  அந்த தினத்தில் மட்டும்  பிரமாண்டமான அளவில்  அன்னதானங்கள் செய்கிறோம் .

 (
ஆனால்  நாங்கள் வாழும் நாடுகளோ சாப்பாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டிய  நாடுகள் அல்ல.)

ஆயிரக்கணக்கில் பணங்களை கொட்டி கொண்டாட்டங்களையும், சடங்குகளையும் கடவுளுக்கு  செய்கிறோம் .

சிந்தித்து பார்த்தல்  இவை எல்லாம்  தனக்கு செய்யும்படி எந்த கடவுள் கேட்டார்

இவைகளையா  கடவுள் மனிதர்களிடமிருந்து எதிர்பார்கிறார் ?

கேட்காதவற்றை  எல்லாம் கடவுளுக்கு செய்கிறோம்.  கடவுளும் வாய் திறந்ததில்லை.

வாய் திறந்து கேட்டு நிற்கிற நம் தாயக மக்களுக்கு  செய்வதை பற்றி சிந்தனைக்கு தன்னும் எடுப்பவர் யார்?

கோவிலுக்கு வெளியே வந்துவிடால் பலர்  செய்கிற தெல்லாம் அநியாங்களும், அட்டூழியங்களும், மோசடிகளுமே.

ஒரு மேலதிகாரி உங்கள் அருகில்  நிற்கும் போது, உங்களை பார்த்துக் கொண்டிருக்கும்  போது   எவ்விதமாக உங்கள் கடமைகளை செய்வீர்களோ, நீங்கள்  எவ்விதமாக  அந்த இடத்தில் நடப்பீர்களோ அதே மாதிரி கடவுள் நம்பிக்கை உங்களுக்கு முழுமையாக இருந்தால்  நீங்களும் அந்த உணர்வுடன் எப்போதுமே நடந்துகொள்ளுங்கள்.  இதை சுகி சிவம் அவர்கள் ஒரு உரையில் தன்  பாணியில் தெளிவாக, சுருக்கமாக  தெரிவுத்துள்ளார்.

சுகி சிவம் என்பவரின்  பேச்சுக்களை  "  யூரிப் " பில் நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக பலர் கேட்டிருப்பார்கள். அவரின் எளிமையான பேச்சுக்கள்  நம் ஏற்கனவே கொண்டுள்ள  நம்பிக்கைகளை, எண்ணங்களை சிந்திக்க தவறியவற்றை  நாமே  சிந்தித்து  சீர்திருத்த உதவுகிறது .

உதாரணத்திற்கு கீழே  குறிப்பிட்டவற்றை  கேட்டுப்  பாருங்கள்.  Intha Naal Iniya Naal  ( இந்த நாள் இனிய நாள் )  09 12 2012  .  Intha Naal Iniya Naal ( இந்த நாள் இனிய நாள் ) 24.11.12 .   OSAI NN SUGISIVAM.wmv .  

உலகில்  உள்ள அணைத்து  மதங்களும் கருத்து  வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையாக கூறும் கருத்துகள்  இரண்டு:

ஒன்று " கடவுள் வேண்டுவது  நல்ல உள்ளங்களை ".  

இரண்டாவது " பிறருக்கு  உதவி செய் ".

நல்ல உள்ளமும் ,  பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஒருவனிடம்  இருந்தால் கட்டாயம்  மனித நேயம்  அவனிடத்தில்  இருக்கும் .

"
வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த  மாமலரோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளை நிறப் புவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.  . . . . .  "(-  சுவாமி விபுலானந்த அடிகள் )

அதாவது  உங்கள் அன்பான  நல்ல  இதயத்தை மட்டும்தான் இறைவன் வேண்டுகின்றார்.

இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் , சாதாரண மனிதர்களுக்கு  இயேசு கூறிய எளிதும் ஆனால் அதிக ஆழமுமான வாக்கியங்களை  பாருங்கள்.

"
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு சமமாகிற  இரண்டாம் கற்பனை  “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாகஎன்பதே.

ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்  போல  இயேசு கூறிய இரண்டு வாக்கியங்களும் .

 “
மக்கள் சேவை  மகேசன் சேவைஎன்பதை  இயேசு விரிவாக  கூறியதை  கீழே  படியுங்கள்.

 ….  "
என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார். அதற்கு அவர்கள், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், 'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு  நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். “

 
அதே  இயேசு கூறுகிறார்:

. . . ”
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி  நீங்கள் செய்யாமற் போகிறதென்ன? “.

நிர்கதியாக நம் தாய் நாட்டில் இருக்கும், கஷ்டப்படும்  நம் இன மக்களுக்கு செய்யும் உதவிகள்  எல்லாம்   இறைவனுக்கே செய்யும் தொண்டாக  நினையுங்கள்.

இயேசு  இன்னுமொரு இடத்தில் கூறுகிறார்: "மண்ணுலகில் உங்களுக்காக செல்வத்தை சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அழித்து விடும். திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அழிப்பதில்லை. திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.''

சொத்து பத்துகள் , காசு பணம் குவித்து  வைத்திருந்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன  புலம் பெயர்ந்த நம்மவர்களில் அதிகமானோருக்கு,  தங்களின் பிள்ளைகளின் எதிர்காலங்களை இட்டு கவலை.  ஒரு நண்பர் எனக்கு கூறினார் , :   நம்ம  நாட்டில்  “வைற் லேகோன்” ( white leghorn chickens ) கோழிக் குஞ்சுகளை கூடுகளில் வைத்து  வளர்த்த மாதிரி   வெள்ளைக்காரர்களின் நாடுகளில் பிள்ளைகளை வளர்கிறோம் .     நாங்கள்  நம்ம நாட்டில்  வளர்க்கபட்ட முறைகளுக்கும் , வாழ்ந்த முறைகளுக்கும் , செயல்களுக்கும் , சிந்தனைகளுக்கும்இங்குள்ள பிள்ளைகள்  வளர்க்கபடுகிற   முறைகளுக்கும், வாழுகிற முறைகளுக்கும் , சிந்தனைகளுக்கும்  பாரிய இடைவெளிகள் உள்ளன. அதுமட்டுமா  பெற்றோர்  மேல் உள்ள பற்று , பாசத்தில் நெருக்கமும்  குறைவு. சகோதர பாசம்  குறைவு.  உறவினர்களுடன் பழகுவது அரிது. இவர்களுக்கு எங்கள்  தாய் நாட்டின் மேல் உள்ள பற்றுகளும் குறைவு. அங்கு பிறந்து வாழ்ந்து பெற்ற அனுபவமும் இல்லாதவர்கள். இவைகள் எல்லாம் பிள்ளைகளின் தவறுமல்ல, பெற்றோரின் தவறுமல்ல.

இலங்கையில், இந்தியாவில்  உள்ள தங்களின் சொத்துகள் உட்பட தாங்கள்  புலம் பெயர்ந்த நாடுகளில்  குவித்து  வைத்துள்ள  பணம், சொத்துகளை  இட்டு  தங்கள் பிள்ளைகள் ஆசையோ அக்கறையோ படுவதில்லை என்றும், அவற்றை இந்த பிள்ளைகள் தங்களின் காலங்களின் பின் கவனிக்காமல் விட்டு விடுவார்கள், சீரழித்து விடுவார்கள் என்ற பயம்  பல பெற்றோருக்கு  உள்ளது .  அநியாயமாக சேர்த்த சொத்துக்களை  சுட்டி காட்டி தங்களுக்கு சொத்துகள் வேண்டாம் என்ற பிள்ளைகளும்  உண்டு.  சொத்துகள் பிள்ளைகளுக்காக குவித்து வைத்திருந்தும்  பிள்ளைகளுக்கு கலியாணம் நடக்க வில்லையே . . . என்ற கவலைகள் பல பெற்றோரும் உண்டு.

அதுமட்டுமில்ல இங்குள்ள பிள்ளைகளிடம்  நேர்மையான குணங்கள், நேராக எதையும் அணுகும் முறைகள் அவர்களிடம் நிறைய உள்ளது. கபடத்தனங்கள்  மிகக்குறைவு. அதனால் நம்மவர்கள் காசு பணக்களை, சொத்து சுகங்களை எப்படியாவது தேடி குவித்த  மாதிரி, குவிக்கும் திறமைகள் பிள்ளைகளுக்கு குறைவு

 

தொடர்ச்சியாக வாசிக்க  தொடர்ச்சி   8 டை பார்க்க. )

-      ஒரு  மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் தமிழர்களா . . . ?

தொடர்ச்சி  9

 

 

 

 

இறுதியாக . . .

 

 நம் தயாகத்தில் பாதிக்கபட்டு நிர்கதியாக நிற்கும் நம்மவர்களுக்கு என்னனென்ன வழிகளில்  நம் கடமைகளை செய்யலாம் என்று  அரசியல், புகழ், மத நோக்கமற்ற வழிகளை  தேடி முன்வையுங்கள்.

அந்த வழிகளை ஒன்றிணைத்து ஒரு வழியாக்குங்கள். நேரில் போய் பார்த்தவர்கள்   பலர் இருக்கிறார்கள்.

எப்படியெல்லாம்  நம்மவர்கள் பாதிக்கப்பட்டுளார்கள், அவர்களின் நிலைமைகள், தேவைகள் என்ன என்பதை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தெரிய வையுங்கள்.

நாங்களே எங்கள்   வீட்டிலும் ஒவ்வொரு உண்டியலை வாங்கி வைப்போம்.

எங்கள்  பிள்ளைகளுக்கும் பாதிக்க பட்டுள்ள நம்மவர்களின் நிலைமைகளை  தெளிவுபடுத்தி அவர்களையும் அந்த உண்டியலில் வசதி கிடைக்கும் போதெல்லாம் காசு போட உற்சாகப்படுத்துவோம்.  

ஆடம்பரச் செலவுகள்  எது , அத்தியாவசியமான செலவுகள் எது , வீணான செலவுகள் எது என்று புரிந்து கொள்ளமுயாத  அளவுக்கு  நம் தாய்  நாட்டில்  சொகுசாக செல்வ செழிப்பான வாழ்க்கை  வாழ்ந்துவிட்டு அகதிகளாக வெளியேறி வெள்ளைக்காரர்கள்  நாட்டில் தஞ்சம்  புகுந்தவர்கள் அல்ல நாங்கள்.

எங்களுடைய  ஆடம்பர  செலவுகள்  செய்யும்போது, கொண்டாட்டங்களுக்கு செலவுகள் செய்யும் போது, உல்லாசப் பயணங்கள் செய்ய செலவுகள் செய்யும்போது,  யாத்திரைகள் செய்யும்  போது ,  ......   ஏற்படுகிற செலவுகளின்  தொகையில் ஆகக் குறைந்தது   நூற்றுக்கு  ஒரு வீதம் தன்னும்  அந்த உண்டியலில்  நாங்கள் போட்டு சேமித்து , வங்கிகளில்  பாதிக்கப்பட்ட  நம் தாயக மக்களுக்காக கணக்கு ஒவ்வொரு நாட்டிலும் திறக்கப்படுமானால்  அதில் நேரடியாகவே  வைப்பிடுவோம்.

மனித நேயத்தை நாம் நோக்கமாக வைத்து செயல்பட முன் வந்தாலும் அந்தந்த  நாடுகளின்  சட்டதிட்டங்களின் படி  இதெல்லாம் சாத்தியமா , சாத்தியம் இல்லையா , இல்லாவிட்டால் வேறு வழிகளை  என்ன என்பதை நம்மவர்களில் இதுசம்பந்தமான அறிவைப்  பெற்றோர் தான் வழிகள் கூறவேண்டும். அதுமட்டுமல்ல  இலங்கையின்  இன்றைய அரசியல்  சூழ் நிலையில், பாதிக்க பட்ட  நம்மவர்களுக்கு  பணம் போகும் போது , மீண்டும் " தமிழ்  பயங்கரவாதம் " உருவாகிறது என்று  பழிகள்  போட்டு விடுவார்கள்.

தனிப்பட்ட  ரீதியாக  இயங்குவதை விட ,  ஒரு   ஸ்தாபன ரீதியாக இயங்குவது  நல்லதல்லவா?  சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களின் ஒத்துழைப்புகளை  நாம் முயன்றால் பெறமுடியாதா ?  நம் தாயகத்தில் பாதிக்கப் பட்ட  மக்களுக்காக ஏற்கனவே இயங்கும்  உள்ளூர் தொண்டர்  ஸ்தாபனங்களின் ஆதரவுகளை பெறமுடியாதா ?

இலங்கையில்  “ சர்வோதயம்என்ற  இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ‘சர்வோதயம்என்னும் சொல்எல்லாருடைய நலம்என்று நேரடிப் பொருள் தரும். சர்வோதயம் என்பது மகாத்மா காந்தியின் சமுதாயக் கொள்கைகளின் வடிவத்துக்குப் பெயர்.     . ரி . ஆரியரத்னா அவர்கள் நாற்பத்தேலு ஆண்டுகளுக்கு முன்  ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் ஆரம்பித்தார்.  அதன் வளர்ச்சி  பிரமாதமானது.  அவர்  ஒரு சிங்கள பௌத்தர்  ஆதலால் அவருக்கு   அந்த இயக்கத்தை ஆரம்பித்து வளர்ப்பதில் தடைகள் இருந்திருக்காது .  

அரசியல் தன்  பாதைகளில் இயங்கட்டும்.  அரசியலின்  வாடையே  இல்லாமல் மனித நேயத்தின் அடிப்படையில், நன்றி கடன்களின் அடிப்படையில் நம் தாயகத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஒன்றினைத்து  அதைப்போன்ற  ஒரு அமைப்பு உருவாக்கி   உதவ முடியாதா ?

புலம் பெயர்ந்த நாடுகளில்  கடமையாற்றி  இளைப்பாறிய புத்தி ஜீவிகள் பலர் இருக்கிறார்கள்.

அவர்களில்  இயலக்கூடியவர்கள்  நம்ம நாட்டுக்குபோய்  தங்களின்   துறை சார்ந்த  நிபுனத்துவ  உதவிகளை பாதிக்கப்  பட்ட  மக்களின்  மேம்பாட்டுக்காக செய்ய வழிகள் அமைக்கலாம் அல்லவா ?

அதற்கு மனித நேயம் மிக்க அறிவாளிகள்,  அனுபவசாலிகள் வழிகாட்டுவார்களா ? திட்டங்களை முன் வைப்பார்களா ?

வசதிமிக்க  புலம் பெயர்ந்த  தமிழர்கள் சரியான சிந்தனையுடன் செயல்பட்டால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்கையில் பாரிய முன்னேற்றம்  ஏற்படும்.

செல்வந்த நாடுகளில்    “ உணவு வங்கி “ (  “ Foodbank “,  “ Banque-Alimentaire “, …) உள்ளது. வறுமையால் சாப்பிட வழியற்றவர்களுக்கு  உதவும் தொண்டர் ஸ்தாபனங்கள். இணைய தளங்களில் எப்படி இவர்கள் இயங்குகிறார்கள் என்பதை படிக்கலாம்.

நானே கண்டிருக்கிறேன்,  சில கிறிஸ்தவ  தேவாலயங்களில்  ஞாயிற்று கிழமைகளில் ,  பெருநாள்  நாட்களில்  கூடைகள்   வைக்கபட்டிருக்கும்.  பூசைக்கு வருகிறவர்கள்  பலர் அக்கூடைகளில்  பக்கற்றுகள், ரின்களில் அடைக்கபட்ட உணவு பொருட்களை தானமாக போடுவார்கள்.  அவைகள் தேவாலயங்களில் சேகரித்து வைக்கப்பட்டும் .  மாதம் இருமுறை  அல்லது ஒரு முறை  உணவு பொருட்களை அந்த தொண்டர்  ஸ்தாபனங்கள்  அந்த தேவாலயங்களுக்கு  சென்று  அந்த உணவு பொருட்களை  வான்களில்  தங்கள் களஞ்சியப் பகுதிகளுக்கு  எடுத்து செல்வார்கள்.  அது மட்டுமல்ல  சிலசமயங்களில்   " சூப்பர் மாக்கட் "  டுகளின்  வாசல்களின் வெளியே  சில தொண்டர்கள்  கூடைகளுடன் நிற்பார்கள். " " சூப்பர் மாக்கட் "  டுகளில் சாமான்கள் வாங்கும்  ஆட்களில் சிலர் மேலதிகமாக ஒரு சில சாமான்களை வாங்கி வந்து  இவர்களில் கூடைகளில் போடுவார்கள்.   இப்படியான " உணவு வங்கி " நாம் தாயகத்தில்  உள்ள  நகரப்பகுதிகளில்  செயல் பட முயன்று பார்கலாம்.  அங்குள்ள வசதி படைத்த மக்கள்கள்  மனித நேயத்தின் அடிப்படையில் பங்களிப்பு செய்ய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

புலம் பெயர்ந்த வர்களில் சிலர் நம்  தாயகத்தில்  உள்ள காணி பூமிகளை பற்றி பெரிதாக  அக்கறைப்படுவதில்லை வர்களும் முதுமை அடைந்து விட்டார்கள். அவர்களுடைய  பிள்ளைகளும் அவற்றை இட்டு அக்கறைப்படுவதில்லை. அந்த பிள்ளைகளும் எதிர்காலத்தில்  இலங்கை போய் வாழப் போகிறவர்களுமல்ல .   அக் காணி பூமிகளை, வீடு வாசல்களை பாதிக்கப்  பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்க அவர்கள்  முன் வரலாம் .   முயன்றால் அப்படிப் பட்டவர்களை  அடையாளம் காணலாம்அதற்கான விளம்பரங்களை பிரசுகித்தால் என்ன?

பணத்தை வைத்துக்கொண்டு  எங்கே, யாருக்கு, என்னத்திற்கு கொடுப்பது என்று தெளிவில்லாமல்  இருக்கும் நம்மவர்களும் உண்டு. அவர்களுக்கு வழிகாட்டி, வழியை திறந்து விடுங்கள்.  

ஒரு சமயம் ஒரு  இணையத்தளம்  ஒன்றில் ( asrilanka.com/2012/11/13/10916 )  “ தாய் ஊரில்  கிண்ணிப் பிச்சை எடுக்க மகன் செல்வச்சந்நிதியில்  அன்னதானம் செய்தானாம் ! “  (Canada) -  என்ற தலையங்கத்தின் கீழ்  செய்தி ஒன்று படித்தேன். அந்த தலையங்கம்    நம்மவர்கள் செய்யும் முக்கியமற்ற  பல  செயல்களுக்கு மிக மிக   பொருத்தமான தலையங்கம் .  

இந்தியாவின் / தமிழ் நாட்டின்  வருமானத்திற்கு  புலம் பெயர்ந்த தமிழர்கள் நாங்கள் செய்யும் பங்களிப்புக்கு முக்கியத்துவம்  கொடுத்துக்  கொண்டிருப்பதை கைவிட்டு, நம் நாட் டிலிருந்து எம் முகங்களை  நோக்கி ஏக்கத்துடன்  இருக்கும் நாதியற்ற பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுவதை எங்கள்  கடமையாக நினைத்து முக்கியத்துவம் கொடுத்தால் நல்லதல்லவா?

அனாவசியமற்ற  ஆடம்பரச் செலவுகளை நம் மக்களுக்கு உதவும்  நோக்கில் குறைத்து கொண்டால் நல்லதல்லவா?

நம்மவர்களிடம் பணம்  பிடுங்க தமிழ் நாட்டில் இருந்து  வருபவர்களின் விளம்பரங்களை  தொலைகாட்சிகளில் , பத்திரிகைளில்,   இணையதளங்களில்  போடாமல்  விடமுடியாதா?

எங்கெல்லாம், எப்படியெல்லாம் ,  என்னென்ன  தேவைகளுடன்  நம் மக்கள் தாயகத்தில்   இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு  விளம்பரப்படுத்த முடியாதா?

 

இந்த உலகத்திலே நாலு  வகையான மக்களை காணலாம் என்று புத்தர் கூறுகிறார்.. அந்த நாலுவகை  எது ?

1.  
இருட்டிலில்  இருப்பவன் இருட்டை நோக்கியே போகிறான் .

2.  
இருட்டிலில்  இருப்பவன் வெளிச்சத்தை நோக்கியே  போகிறான்

3.   வெளிச்சத்திலில்  இருப்பவன்  இருட்டை நோக்கியே போகிறான் .

4.  
வெளிச்சத்திலில்  இருப்பவன்  வெளிச்சத்தை நோக்கியே  போகிறான்.

நாம்  என்னவாக இருக்க விரும்புகிறோம் ?  

வெளிச்சத்தை   நோக்கி  இருட்டில் இருந்து  வருவோமாக !

இருட்டை  நோக்கி வெளிச்சத்தில் உள்ளவர்களே போகாதிருங்கள் !

இராமகிருஷ்ண பரஹம்சர்  படித்த படிப்பு வேறு, படிப்புடன் கூடிய மெய் உணர்வு வேறு  என்றுஅரசனும்  வேதப்பண்டிதரும்என்ற கதையில் தெளிவு படுத்தியுள்ளார்.

நாங்கள் ஆயிரம் தான் வாசிக்கலாம், படிக்கலாம்  பெற்ற அறிவுக்கு ஏற்ப மெய்யுணர்வும் இருந்தால்  தான் எல்லோருக்கும் பயன்.  

அவரே இன்னொரு  இடத்தில் கூறியுள்ளார் பருந்து  எவளவுதான் உயர பறந்தாலும் குப்பை மேட்டில்  செத்த எலியைத்தான் தேடும்  என்றுபணம், பதவி, ஆஸ்திகள் கூடிக்கொண்டிருந்தாலும் பருந்தைப் போல் கீழ்தரமான குணங்கள் உள்ளவர்களை பற்றி குறிப்பிடுகிறார்.

இக் கட்டுரையை வாசிக்கும் போது  பல பேருக்கு அசெளகரியங்களையும் , வெறுப்புக்களையும் கசப்புகளையும் கொடுக்கலாம்.   நகைப்புக்கு  இடமாக இருக்கலாம்.  அது அவர் அவர்  சுதந்திரம் . ஆழமாக  பல தடவைகள் சிந்தித்து பார்த்தால்  உண்மை புரியும். மனதில் ஒரு தேடுதல் வேட்கை உண்டாகும். மனதில் மாற்றங்கள் ஏற்பட்டால் மனம்  உண்மையை தேடும் .  மனித நேயமும் வளரும்.

 

மனிதநேயம் ஒன்றுதான் பாதிக்கப்பட்ட மக்கள்  நாளாந்த வாழ்கையில் அனுபவித்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை  தீர்க்கும் வழியே ஒழிய, அரசியல் விவாதங்களோ, மத போதனைகளோ   உடனடியாக அவர்களுக்கு  பலனை தருவதாயில்லை.

 

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்  என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்  ,து அந்த பத்து யாதெனில் மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், பதவி, இளகிய மனம், காமுறுதல்

 

அவர்களை சுய மரியாதை,   தன் நம்பிக்கை  மிக்க மனிதர்களாக மாற  கை கொடுத்து உதவவேண்டும்.

இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை உணவு உடை, இல்லம், கல்வி, வேலைவாய்ப்பு, மருந்துவ வசதிகள் ... என்பன   நாளாந்த வாழ்வுடன் ஒட்டிய தேவைகள்.   பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், நிலைமைகள், இடங்களைப் பற்றிய விபரங்களை  "விளக்கத் திரைப் படம்)Documentary Film)  அடிக்கடி எடுத்து வெளி உலகத்திற்கு தெரியபடுத்தலாம் அல்லவா?   புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில்  அநேகருக்கு  தாயகத்தில் பாதிக்க பட்ட மக்களின்  நிலைமைகள், இடங்கள், தேவைகள் எல்லாம்  தெரியும் என்றில்லை.

இக்கட்டுரையை  எழுத்திய  நான் ஒரு  ஞானியோ, சாமியோ, எழுத்தாளனோ, கல்விமானோ, அரசியல் வாதியோ, செல்வந்தனோ  அல்லஒரு சாதாரன சராசரி  மனிதன். இனத்தால்  ஒரு  தமிழன். புலம் பெயர்ந்து வாழும்  ஒரு  தமிழன்.

எனக்குள்ள  அனுபவத்தையும், அறிவையும் கொண்டு மனித நேயத்தின் அடிப்படையில்   நம் தாயகத்தில் பாதிக்க பட்டுள்ள மக்களின் அவலங்களையும்,   புலம்  பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும்  அவதானித்தே  நல்ல நோக்கத்துடன் எழுதியுள்ளேன்.

ஏனெனில்  கெடுப்பிடித்த  பேராசைகாரர்களும், சுய நலவாதிகளும் ,  மனித நேயம் அற்ற  "பன்றிகள் , மாடுகள் " பலர்  எங்கள்  மத்தியில் இருக்கிறார்கள்.

 

 " விதி விலக்கெல்லாம்  பொது விதி அல்ல " என்ற தத்துவத்திற்கு  ஏற்ப  நம் தாயகத்தில்  மக்களுக்கு  பாதிக்கபட்டுள்ள  உதவும்  நல்ல உள்ளம் கொண்ட  நம் புலம் பெயர்ந்த  தமிழ் சகோதரர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.

 “இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம், …

 

அனைத்து செயல்களையும்  நாளை, நாளை  என்று நாட்களை கடத்தாமல், இன்றே செய்தால் அது நன்றே முடியும்.”  -  பாரதியார்

                                                                  

                                                                                                                                                                 -      ஒரு  மனிதன்

( பின் குறிப்பு:      நான் எழுதியுள்ள இக்கட்டுரை அர்த்தமுள்ளதாகவும், உண்மையுள்ளதாகவும்  இருப்பதாக உணரும் நண்பர்கள் ஏனைய தமிழ் இணைய தளங்களில் அப்படியே  மாற்றமில்லாமல் வெளிவர  வழி செய்யுங்கள்.    அதற்கு  என் அனுமதி தேவையில்லைநன்றி. )

Link to comment
Share on other sites

நான் பல வருடங்களாக சொல்ல , எழுதத் துடித்ததை நீங்கள் தெளிவாக வெளிப்படுத் தியிருகின் றீர்கள் .

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அன்புள்ள சிவாஸ்பாலன்,

 

உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் என் கட்டுரையை புரிந்து கொள்ள காரணம்  உங்களின் மனதில் உள்ள மனித நேயம் , பெறும்  அனுபவங்கள், காலத்தோடு ஒட்டிய இன்றைய தேவைகளை உணரும்  சிந்தனை திறன் இருப்பதால் தான்  என்று உணருகிறேன். நம் தாயகத்தில் பாதிக்கபட்டு இருக்கும்  பல்லாயிரக்கண  நம் உறவுகளின் பிரச்சனைகளை  அறவே சிந்திக்காத பல  புலம் பெயர்ந்த தமிழர்களை  நோக்கி எழுதுனேன்.

 

வேதனை என்னவென்றால்,  நான் பன்னிரண்டு தமிழ் இணையதளங்களுக்கு  என் கட்டுரையை அனுப்பினேன். ஆனால்  அதில் www .yarl com  இணையதள ஆசிரியர்கள் என் கட்டுரையை வெளியிட வழி செய்து தந்தார்கள். அதற்க்கு அவர்களுக்கு நன்றி. ஆனால்  என் கட்டுரை ஒரு சில நாட்களில் புதிய பதிவுகள் வரும்போது முன் பக்கத்தில் உள்ள  என் கட்டுரையின் தலைப்பே  பின் தள்ளப்பட்டு, தள்ளப்பட்டு   மறைந்து விடும். அதுதான் கவலை.   

 

அதுமட்டுமல்ல  பல நூறு தமிழ் இணையதளங்கள் தோன்றி இருக்கின்றன,  கின்னர்ஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிற அளவுக்கு  இன்னும் தோன்றும்.  இப்படியான வளர்ச்சி தேவையா சினிமா நடிகர் நடிகைகள் என்ன செய்கிறார்கள், யார் யாரை கற்பழித்தார்கள், யார் யாரை கொலை செய்தார்கள் என்றெல்லாம் செய்திகளை  மாறி மாறி பிரதி பண்ணி பல நூறு தமிழ் இணையதளங்கள் செய்திகளை  போடுகிறார்கள்.  சில இணையதளங்களை  பார்த்தால் பாலியல் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை அதிகம் வெளியிட்டுகின்றன.  வீட்டுக்கு ஒரு கக்கூஸ்சை  கட்டுவார்கள்,  இது வீட்டில் நிறைய  கக்கூஸ்சுகளை கட்டி விட்டதுபோல்  இருக்கிறது. 

 

பொதுவாக புலம் பெயந்த தமிழர்களில்  பலரின்  பொழுதுபோக்கு  தமிழ் நாட்டில் இருந்து  வரும் தமிழ் டிவி நிகழ்ச்சிகள், டிவி சீரியல் நாடகங்கள், சினிமாக்கள்.  இவற்றில் அநேகமானவை  மக்கள் சிந்தனைகளை வளர்க்காமல், மழுங்கடித்து,  திசை திருப்பி நாளாந்த வாழ்க்கையையும் , நேரத்தையும் வீணடிக்கின்றன.  இதற்குள் தமிழ்  இணையதளங்களை தேடி வாசிப்பவர்கள் குறைவு.  அப்படி நிலைமை இருக்க  வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள்  வாசிக்க பல நூறு தமிழ் இணையதளங்கள் கூடிப்போய் விட்டது.  

 

அந்த நாட்களில் வீரகேசரி, மித்திரன், தினகரன் , தினபதி, ஈழநாடு   என்று ஐந்து பத்திரிகைகளும் இலங்கை வானொலி நிலையம் வர்த்தக ஒலிபரப்பு என்று நம் மக்களுக்கு செய்திகளை ,  பொழுது போக்கை, ஆக்க கட்டுரைகள், கவிதைகளை கொடுத்தன, எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் வளர்த்தன.  அவைகள் தாரளமாக போதுமானவையாக இருந்தன.  நம் தமிழரின்  பொறுத்தவரை  ஒரு சில ஊடகங்கள் ( mass media ) காணும், அவற்றின் மூலம்  நம் மக்களை தொடர்பு படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

 

 

நன்றியுடன்,  "ஒரு மனிதன்" (இரத்தினம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.