Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் திடீர் யோசனை சாத்தியமற்றது-தயா மாஸ்ரர்

Featured Replies

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை ஒரே முறையில் முகமாலை ஊடாக ஏ-9 பாதையில் கொண்டு செல்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து:

ஏ-9 பாதை நிரந்தரமாக மீளத் திறக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு ஒரே முறையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்றார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு:

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஏ-9 பாதையூடாக ஒரே முறையில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். இந்தப் பணியைச் செய்வதற்கு பல நூற்றுக்கணக்கான பாரஊர்திகள் தேவைப்படும் என்பதால் அவற்றைத் தந்து உதவ வேண்டுகிறோம்.

ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச் சாவடிகள் ஊடாக வாகன அணிகளைக் கொண்டு செல்வதற்கு சுயாதீன அமைப்புக்களின் உதவியை சிறிலங்காஅரசாங்கம் நாடும். யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் "சீல்' செய்யப்படும். வாகன அணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததும் பொதுமக்கள், மதப் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் "சீல்' திறக்கப்படும்.

மனிதாபிமான நோக்குடன் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அனைத்துத் தரப்புக்களிடமும் கேட்டுக்கொள்ளப்படும். குடாநாட்டுக்கு எடுத்துச்செல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கண்காணிப்புடனேயே விநியோகிக்கப்படும்.

அவசர தேவைக்கு விநியோகிப்பதற்கென ஒதுக்கிச் சேமித்து வைக்கப்படும் மேலதிக பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படும். ஒரே முறையில் பொருட்களை எடுத்து வரும் வாகன அணிக்கு பாரஊர்திகளைக் கொடுத்து உதவ விரும்பும் பாரஊர்தி உரிமையாளர்கள் அத்தியாவசிய சேவைகள் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

சர்வதேச அமைப்புக்களின் உதவியும் கோரப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் சகல பொருட்களையும் மனிதாபிமான ரீதியில் அனுப்பி தேவையான மேலதிக கையிருப்பை வைத்திருப்பதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் உதவியையும் அரசு கேட்டுக்கொள்கிறது. இந்த ஏற்பாடு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதோடு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும் பெரிதும் உதவும்.

பாதகமான காலநிலை, வர்த்தக நிலையங்களை மூடுமாறு வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மனிதாபிமானப் பொருட்களையும் மக்களையும் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் மத்தியிலும் அரசாங்கம் குடாநாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களைத் தளர்வின்றி எடுத்துச் சென்றதாக மகிந்தவின் செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இராணுவத்தில் சிறார் சேர்ப்பு, பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் என சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்ரரின் பதில் நான் நினைத்தது போல் உள்ளது. புலிகள் ஒரு தாக்குதலுக்குத் தயாராகிவிட்டார்கள் என்று தெரிகிறது.

மாவிலாறு பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியபோது அவர்கள் சொன்னது மனிதாபிமான ரீதியிலான தாக்குதல் என்று. சம்பூருக்கும் அது மாதிரியான ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.

இப்போது புலிகளின் முறை. ஏ9 பாதை மனிதாபிமான ரீதியில் திறப்பதற்கான ஒரு தாக்குதல் என்று சொல்லிக்கொண்டு முன்னேற முயல்வார்கள். அதனால்தான் இந்த "ஒரு

முறை உணவு அனுப்புதலில்" அவர்களுக்கு உடன்பாடு இல்லை. கூடிய விரைவில் யாழுக்கான போர் தொடங்கும் போல் தெரிகிறது.

Colombo ignoring humanitarian catastrophe - Thamilchelvan

TamilNet, Monday, 20 November 2006, 15:49 GMT]

Colombo was engaged in "last minute tactics to placate the international community," prior to a scheduled meeting of Co-Chairs in Washington, by dispatching a single lorry into Vaharai where 38,000 civilians were starving for the past fortnight. Likewise, Colombo was showcasing to the media that it would dispatch a single convoy of supplies through A9 into Jaffna where 600,000 Tamils are under military siege in an "open prison," charged S. P. Thamilchelvan, political head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Monday .

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20343

  • தொடங்கியவர்

தொடங்கினால் நல்லதுதானே

தமிழர்களின் மனித அவலங்களை புறக்கணித்து செயற்படுகிறது சிறிலங்கா அரசாங்கம்: சு.ப.தமிழ்ச்செல்வன்

[tamil10061121.jpgதமிழர்களின் மனித அவலங்களை புறக்கணித்து சிறிலங்கா அரசாங்கம்: செயற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

அமெரிக்க தலைநகர் வோசிங்ரனில் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெறும் நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியாகத்தான் ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறப்பதாகக் கூறியுள்ளது.

ஏ-9 பாதையை மீளத் திறப்பது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ அல்லது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமோ எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை.

ஏ-9 பாதையை திறப்பதில் உண்மையான அக்கறை இருக்குமேயானால் அவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக எதுவித தகவலையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. ஊடகங்களின் ஊடாகவே நாம் தெரிந்து கொண்டோம் என்றார் தமிழ்ச்செல்வன்

http://www.eelampage.com/?cn=29844

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.