உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள …
-
-
- 1.5k replies
- 158.1k views
- 2 followers
-
-
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் க…
-
- 0 replies
- 88 views
-
-
ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:15 AM உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம்…
-
-
- 566 replies
- 54.3k views
- 2 followers
-
-
நெதர்லாந்தில் பொது மக்கள் மீது மோதியது கார்; 9 பேர் காயம் Published By: Digital Desk 3 23 Dec, 2025 | 09:17 AM நெதர்லாந்தில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள வீதியில் திங்கட்கிழமை இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது. இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, வீதியில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதேவேளை, காரை ஓட்டிய நன்ஸ்பெட் பகுதியை சேர்ந்த 56 வயது மூதாட்ட…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான் Published By: Digital Desk 3 22 Dec, 2025 | 12:02 PM உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் இயங்க ஜப்பானின் நீகாட்டா மாநிலம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணு மின் நிலையங்களில் டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணு மின் நிலையமும் ஒன்றாகும். தற்போது செயல்படக்கூடிய 33 அணு மின் நிலையங்களில் 14 மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. புகுஷிமா மின் நிலையத்தை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) மீண்டும் காஷிவசாகி–கரிவா அணு மின் நிலையத்தை…
-
- 1 reply
- 115 views
- 1 follower
-
-
பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள். https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/
-
-
- 8 replies
- 571 views
- 1 follower
-
-
உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி 22 Dec, 2025 | 11:39 AM கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 1300 ட்ரோன் தாக்குதல்கள், 1200 வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், 9 ஏவுகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் உக்ரைனின் ஒடேசா பகுதியும் நாட்டின் தெற்குப் பிராந்தியங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு துறைகளில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை பல்வேறு மட்…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 10:31 AM உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 2021 இல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 இலட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்ட தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு எனக் கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்…
-
- 0 replies
- 159 views
-
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி 15 Dec, 2025 | 05:34 PM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முய…
-
-
- 69 replies
- 3.3k views
- 2 followers
-
-
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 34 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு கொன்கிறீட் தடுப்பு சுவருடன் மோதி, பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் புடியோனோ கூறியுள்ளார். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியின் வளைந்த வெளியேறும் பாதையில் நுழையும் போது கவிழ்ந்து …
-
- 0 replies
- 72 views
-
-
22 Nov, 2025 | 10:56 AM நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர் 215 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை நடைபெற்றது. மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துக்குப் பின், நைஜீரிய பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுதியுள்ளனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடத்தப்பட்டவர்களைத் தேடி வனப்பகுதிகளில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டவர்களில் 7 முதல் 10 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தையடுத்து, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தக் கடத்தல் சம்…
-
-
- 5 replies
- 237 views
- 1 follower
-
-
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி Published By: Digital Desk 2 21 Dec, 2025 | 05:03 PM தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். பெக்கர்ஸ்டாலில் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 12 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்,வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 63பேர் கொல்ல…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா! வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கப் படைகள் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய்க் கப்பலை சனிக்கிழமை (20) தடுத்து நிறுத்தின. தென் அமெரிக்க நாட்டிற்குள் வந்து வெளியேறும் அனைத்து தடைசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்களையும் முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி வெனிசுலாவின் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்தன. இந்த நிலையில் இரண்டாவது எண்ணெய்க் கப்பல் சனிக்கிழமை அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெனிசுலாவில் இறுத…
-
- 0 replies
- 206 views
-
-
கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல் 21 December 2025 2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக, கனடாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் எனக் கருதப்படுகிறது. 2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும், கனடா நாடுகடத்தியுள்ளது. கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஒக்டோபர் 1ஆம் திகதி நில…
-
- 0 replies
- 111 views
-
-
அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான் Published By: Digital Desk 2 21 Dec, 2025 | 11:46 AM தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான். 1949இல் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து தாய்வான் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனாலும் சீனா தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாகவே பார்த்து வருகிறது. ஆனாலும் தனி நாடாக த…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை! தொழில்துறை புரட்சியின் போது காணப்பட்டதைப் போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது தொழிலாளர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார். பொருளாதாரம் முழுவதும் செய்கை நுண்ணறிவு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களை அதிகளவில் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்த உதவுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யவது அவசியம் என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கூறினார். அந்த அடித்தளங்கள் இல்லாமல் போனால் தொழிலாளர் சந்தை மேலும் துண்டு துண்டாக …
-
- 0 replies
- 117 views
-
-
பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி உக்ரைனுக்கு உதவுவதற்காக மாஸ்கோவின் முடக்கப்பட்ட நிதிகள் மீதான சோதனையை பிரதமர் பார்ட் டி வெவர் தடுக்கிறார். யாராவது தனது எண்ணத்தை மாற்ற முடியுமா? TIM ROSS, GREGORIO SORGI, HANS VON DER BURCHARD மற்றும் NICOLAS VINOCUR பிரஸ்ஸல்ஸில் நடாலியா டெல்கடோ / பொலிட்டிகோவின் விளக்கம் இணைப்பை நகலெடு டிசம்பர் 4, 2025 காலை 4:00 மணி CET மதிய உணவிற்கு லாங்குஸ்டைன்கள் பரிமாறப்படும் நேரத்தில் ஏதோ தவறு நடந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அக்டோபர் 23 அன்று மழையில் நனைந்த பிரஸ்ஸல்ஸில் ஒரு உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்க வந்தனர், அவருக்கு மிகவும் தேவையான ஒரு பரிசை …
-
- 2 replies
- 186 views
-
-
சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்! 20 Dec, 2025 | 10:16 AM அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய சிரியாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு குழுக்களை குறிவைத்து போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி பால்மைரா நகரில் நடந்த ஐஎஸ் ஐஎஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவிலியன் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர். இதைத்…
-
- 0 replies
- 111 views
-
-
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது. இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அன…
-
- 1 reply
- 210 views
-
-
வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது. வங்கதேசத்தில் தேர்தல் வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆட்சி கவிழ்ந்ததில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தலைமையில், ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலே இருந்து வருகிறார். வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்…
-
- 0 replies
- 402 views
-
-
சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேயே தொலைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அணுசக்தி கருவி 1965 ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா அணுகுண்டு சோதனை ஒன்றை முன்னெடுத்தது. இதனையடுத்து சீனாவின் ஏவுகணை சோதனையைக் கண்காணிக்கும் பொருட்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்தது. அமெரிக்க மற்றும் இந்திய மலையேறுபவர்கள் தங்கள் சரக்குகளை தயார் செய்தனர். ஒரு ஆண்டெனா, கேபிள்கள் மற்றும் SNAP-19C எனப்படும் 13 கிலோ ஜெனரேட்டர். அதன் உள்ளே புளூட்டோனியம் இருந்தது. மலையேறுபவர்கள் தங்கள் இலக்கை நெருங்கவிருந்த நேரம், திடீரென்று ஒரு பனிப்பு…
-
- 0 replies
- 207 views
-
-
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0 - 22 வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Tamilmirror Online || 56…
-
-
- 2 replies
- 211 views
-
-
அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 19 Dec, 2025 | 05:38 PM அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டின்போது போர்த்துக்கீசரான நெவ்ஸ் வாலண்டே என்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அந்த நபர் 2017ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை லொட்டரி விசா திட்டத்தின் (DV1) மூலம் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு க்ரீன் கார்ட் பெற்றுக்கொண்ட ஒருவரென தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டே ட்ரம்ப், இவ்விசா லொட்டரி திட்டத்தை நிறுத்த நடவடிக்கை …
-
- 1 reply
- 190 views
- 1 follower
-
-
பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி 17 Dec, 2025 | 01:48 PM பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (16) இந்தத் தாக்குதலை நடத்தியது. இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
-
- 1 reply
- 152 views
- 1 follower
-