கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் அவர்கள் பற்றி நினைவில் நிலைத்தவை...
பலதடவை படகு கட்டுமானத்தில் கரும்புலிப்படகு ( இடியன் ) வடிவமைக்கும் போது அதில் இயந்திரம் இருப்பு இணைக்கும் வேளையில் பல சில தாக்குதல் வழிமுறைகள் அனுபவங்கள் பற்றி பொறுப்பாளர் மற்றும் அந்த தாக்குதலில் பங்கு பற்றிய சக போராளி ( அக்காமார்கள் , அண்ணாமார்கள் ) கூறுகையில் பல கடல் கருவேங்கை காவியம் மனதில் பதிந்து நிற்கின்றன...
இம்மாவீரன் அதிக பேச்சாற்றல் , தோழர்கள் இழப்பை தாங்கத ஓர் நட்பின் இமையம் , தாய்மண்ணின் மடியில் சிங்களத்தில் இனவழிப்பின் அரங்கேற்றமும் , இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வதைத்த போது நாளும் வனத்தில் தனிமையில் இவனின் மனம் உருகி விழிநீர் கசிந்ததை அந்த மரத்தடி வேர்களும் , துயிலும் நீளும் இரவுகளும் கூறும் இருள் என்றும் கருப்பானதால் இந்த கருவேங்கை காவியம் கருப்பாகி வெளியில் தெரியாமலே இன்றும்...
" ரணவிரு " எனும் பகைவனின் கலத்தை அழிக்கும் நோக்குடன் கரும்புலி படகை செலுத்தி சராசரி படகின் வேகம் 32 கடல்மைல் வேகத்தில் இடியன் சென்று மோதுகிறது ஆயினும் வெடிக்கவில்லை பின் சாதுரியமாக பின்னுக்கு இடியனை எடுத்து திரும்ப வேகத்தை அதிகரித்து மோதுகிறார் வெடிக்கவில்லை மூன்றாம் தரமும் இடிக்க வெடிக்கவில்லை ( வெடிமருந்தில் தொழில் நுட்பக் கோளாறும் மற்றும் வெடிமருந்தில் தண்ணீர் கசிவு கலந்தது விட்டமையாலும் ) இடியன் படகும் அணியம் பிரிந்து கடல்நீர் உட்புக பின் கூட சென்ற கடற்கரும்புலி கப்டன் இன்னிசை காயப்படுகிறார்.
திருப்பி கரைநோக்கி அழைக்கப்பட ... நீர் உட்புகுந்த வண்ணமிருந்த படகை சாதுரியமாக செலுத்தி கரைவந்து சேர்ந்தார்.
அந்த இலக்கு ஐந்து கடற்கரும்புலிகளால் தகர்க்கப்பட்டு வெற்றிக்கு உரமாகி கடலிலே காவியமாகினர்
ஆயினும் இரு நாள் கழித்து கடற்கரும்புலி கப்டன் சயந்தனுடன் இணைந்து " தரையிறங்கு கலம் " இலக்காக தேர்வுசெய்து இடியன் நீர் கிழித்து விரையும் வேளை இலக்கை அண்மிக்கும் அருகில் நெருங்க உயிர்பயத்தில் இருந்த பகைவனின் சூடு தராமாரியாக பொழிய வெடிமருந்து படகில் சூடு பட்டு இலக்கை நெருங்குமுன் வெடிக்கிறது. முல்லைக்கடல் அன்னை அணைத்துக்கொண்டாள் தன் மடியில் கரியபுதல்வர்களை.
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை , கடற்கரும்புலி மேஜர் பாரதியுடன் இணைந்து அதே வருடம் 11 மாதம் 11ம் திகதி நீண்ட தொலைதூர கடல் பயணம் சென்று காரைநகர் கடற்பரப்பில் சிங்களத்தில் கடற்படையின் அதிவேக டோறாப்படகை சேதமாக்கி தமிழீழ க்கடற்பரப்பில் பெண்களின் வீரியம் சொல்லி கரைந்தனர்.
கூவும் குயிலென குரல் ஒலிக்கும்
ஈழக்கடலினில் உங்களின் முகம் சிரிக்கும்
மோதும் அலைகளும் பெயர் உரைக்கும்
எங்கள் மூச்சினில் வீரர் உம் நினைவிருக்கும்
|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
- இசைவழுதி ( தமிழீழப்பறவை கனடாவில் )