Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2,080
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by poet

 1. 2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி. 2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே.
 2. ஆமாம். ”அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி உலகை வேட்டையாடுதே கொரோனா .” என்று எழுதினேன் ஐயா. இன்னும் எழுதியும் இருக்கலாம்தான். உங்களைப்போல வாசிப்பவர்கள் யோசிக்கிறபோது உயிர்த்த கவிதை துளிர்த்துத் தழைக்குமே. அதுவும் போதுமன்றோ ஐயா? . தவறெனில் மன்னிக்கவும்.. அன்புக்கு நன்றி
 3. BEYOND THE CORONA VIRUS கொரோனாவை தாண்டி. - வ.ஐ.ச.ஜெயபாலன் * மலர்கிறது முல்லை கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே என் மாடித்தோட்டம். கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின் மரண அமைதி அதிர கருவண்டுகள் இசைக்கிறது ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல். * அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி உலகை வேட்டையாடுதே கொரோனா . அடாது கொட்டும் வெண்பனியையும் வீழாவாய் கொண்டாடும் ஒஸ்லோ நகரும் முடங்கியதே. கூதிரில் தனித்த என் மனைவிக்கு பூக்களும் இல்லை. எனினும் எனினும் இடுக்கண் வருங்கால் நகைக்கும் புதல்வர்களை விட்டு வந்தேனே.. .* வெற்றியெனக் கோரோனோ கிருமிகள் துள்ளும் பெசன்ற்நகர் கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல் நண்டுகள் தொற்றும் இரவில். குடிசைகளுள் படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில் வலிய விரல்கள் ஊர்கின்றன. * சாத்தானே அப்பாலே போ. மனிதர்கள் கைவிடப்படுவதில்லை. ஒருபோதும் வெல்லப் படுவதுமில்லை. . கூதிர் - WINTER
 4. ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்?? - nunavilan ------------------------------------------------------------------------ 30 வருட ஆயுதப்போராட்டம் இனக்கொலையில் முடிந்த சூழலில் இனவாத அடக்குமுறை ஆட்ச்சி தொடர்ந்ததல்லா? நொந்து நூலாகிப்போயிருந்த ஈழத் தமிழர்களை ஒருங்கிணத்தது யார்? தமிழர் தேசிய கட்சிகளின் பின்னே சென்று சர்வதேச நாடுகளின் முன் தேசிய இன அடையாளத்தை இழந்து சிறுபாண்மையினராக குறுகாமல் வெறுங்கையுடன் தமிழரை இனமாக ஒன்றுபடுத்தியது யார்? களநிலமை புரியாமல் கொடி தூக்கி தீவிரவாதம் பேசிய புலம்பெயர்ந்த தமிழருக்கு தங்கள் அழுத்தங்களின் ஆதாயம் போவதை அனுமதியோம் என சர்வதேச சமூகம் ஒதுங்கியபோது அவர்களை ஓரளவாவது அழுத்தம் கொடுக்க வைத்து ஓரளவாவது நிலம் மீட்ப்பு, அமைதி போன்ற அடிப்படை பிரச்சினைகளை அணுகிய சூழல் எப்படி உருவானது? அரசை நோக்கி இழுக்கும் கொழும்புத்தமிழ தலைவர்கள் ஒருபுறமும் களநிலமை தெரியாமலும் ஒருங்கிணையாமலும் தீவிரம் பேசும் புலம்பெயர்ந்த தமிழர் மறுபுறமுமாக நசித்த சூழலில் இனத்துவத்தைக் காப்பாற்றி சர்வதேச ஆதரவௌ தக்க வைத்திருக்கும் சம்பந்தர்மீது விமர்சனமில்லை என சொல்லவில்லை, ஆனாலு விமர்சனங்களோடு நீங்கள் ஆதரித்திருந்தால் நிலமை இன்னும் மேம்பட்டிருக்கும்.
 5. திருகோணமை வன்னி மாவட்ட தேர்தல்கள் - நாம் இனமா சிறுபாண்மையா ? - வ.ஐ.ச.ஜெயபாலன் சென்ற தேர்தலில் போரின் தொடற்ச்சியாக வடகிழக்கு தமிழர்கள் இனத்துவத்தை அழித்து சர்வதேசத்தின் கண்களில் ஈழத் தமிழரை சிறுபாண்மையினராக சிதைக்கும் முயற்ச்சியில் மகிந்த அரசு ஈடுபட்டது. எல்லா விமர்சனங்களோடும் சம்பந்தரே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற தமிழ் தலைவராக இருந்தார். இதனால் மகிந்த அரசு திருகோணமலையில் சம்பந்தரை தோற்கடிப்பது என்கிற முதன்மை நோக்கத்துடன் திருகோணமலையில் தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் தேர்தல் சதுரங்கத்தை முன்னெடுத்தது. தேர்தலில் சம்பந்தர் மயிரிளையில் தப்பினார். ஆனாலும் திருகோணமலையில் இரண்டில் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு. இம்முறை வன்னியிலும் திருமலையிலும் ரணிலின் யு.என்.பி கட்ச்சியின் மறைமுக ஆதரவும் மகிந்தவுக்கு கிடைக்கும் என்பது பீதியைக் கிழப்புகிறது. வடகிழக்கில் குறிப்பாக வன்னியிலும் திருகோணமலையிலும் முதன்மையான தமிழ் பிரதி நிதித்துவம் இருக்குமட்டும்தான் ஈழத் தமிழர் ஒரு தேசிய இன அடையாளத்தை தக்க வைக்க முடியும். அது வரைக்கும்தான் சர்வதேச ரீதியில் ஈழத் தமிழருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கும் குரல் இருக்கும். திருமலையில் ஈழத் தமிழர் வாக்குகளைப் பிழவு படுத்தி பிரதி நிதித்துவத்தை தோற்கடிக்கும் கொந்தராத்து சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு கிடைத்தது. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி சர்வதேச அரங்கில் தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும். தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள் வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும் சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும். திருகோண மலையிலும் வன்னியிலும் நாம் செய்ய வேண்டியது என்ன? முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வெற்றிவாய்ப்புள்ள வேட்ப்பாளர்களை ஆதரித்து வடகிழக்கில் தமிழர் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது. 2 வடகிழக்குத் தேர்தலில் சர்வதேசம் அங்கீகரிக்கிறவர்கள் வெற்றி பெறுவதில்தான் ஒரு இனமாக எங்கள் எதிர்காலம் தங்கியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழருக்கும் அப்போதுதான் குரல் இருக்கும். நீங்கள் சம்பந்தரை சொல்கிறீங்க. மிக முக்கிய மேற்க்கு இராஜதந்திரிகள் வெற்றிகளின் லாபம் பாலசிங்கம் அண்ணர் விலக்காக ஏனைய புலம்பெயர்ந்த தீவிர செயல்பாட்டாளருக்கு போகும் சூழலை ஒருபோதும் அனுதைக்கமாட்டோம் என செயற்பட மாட்டோம் என 2006ல் இருந்தே சொல்லிவருகின்றனர். இதனை நானும் வன்னிக்குத் தெரிவித்திருக்கிறேன். 2009ன்பின்னர் கொடி பிடித்த போது இன்னும் திட்ட வட்டமாக அதனையே சொன்னார்கள். ஆயுதங்கள் மவுனித்தபின்னர் சர்வதேச சமூகத்தை வெறெடுக்கக்கூடிய விடுதலையில் புலம்பெயர்ந்த தமிழரின் ஆதரவு மிக மிக முக்கியமானதாகியுள்ளது. மேற்படி தளம் தொடற்ச்சியாக அடுத்த தலைமுறை புலம்பெயர்த தமிழரை நோக்கி பெயற்ச்சி அடைவதும் மிக முக்கியம். அதைவிட முக்கியம் கழத்தில் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கக்கூடியவர்களின் பிரதி நிதித்துவம். தயவு செய்து இதனை கருத்தில் எடுத்து விவாதியுங்க. .
 6. போரின் தொடற்ச்சியாக சர்வதெசத்தின் ஈடுபாட்டை திசைதிருப்ப திருகோணமலையில் தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் சதுரங்கம் மகிந்த குழுவினரால் முன்னெடுக்கபட்டது. சம்பந்தர் மயிரிளையில் தப்பியதும் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு. பணி சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும். தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள் வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும் சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும். திருகோண மலையிலோ வன்னியிலோ முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வடகிழக்கில் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது .
 7. யாழ் இணைய நிர்வாகத்துக்கு அன்பான வேண்டுகோள். மேற்படி உரையில் சிறு எடிற்றிங் செய்ய வேண்டியுள்ளதால் தயவுசெய்து எடிற்றிங் தெரிவை திறக்கும்படி விண்ணப்பிக்கின்றேன். - வ.ஐ.ச.ஜெயபாலன்
 8. மரணத்தை வெல்லுதல் பற்றிய உரையாடல். CONQUERING DEATH - A CONVERSATION * * Ranjakumar Somapala S* * மச்சான் உனக்கும் எனக்கும் என்ன பயம். பதினாறு தானே இப்ப. அப்ப. எப்பவும். ** ஜெயபாலன். Jaya Palan * Jaya Palan Ranjakumar Somapala S மச்சான், உனக்கு என்னை தெரியும்தானே. சாவுக்கு அஞ்சினவங்களா நாங்க? என்ன ஒரு மக்கள் பிரச்சினையில போராடி சாகிற விருப்பம் நிறைவேற இன்னும் வாய்ப்பில்லாம போச்சு. மரணத்தை வெல்லுதல் என்பது அஞ்சாமல் மரணத்தோடு விளையாடுவதுதான். * கொழும்பில் இராணுவத்தோடும் தலைவர்களோடும் சரி, வன்னியில் போராளிகளோடுசரி சுட்டா சுடுங்க என்றுதான் நியாயம் பேசினேன். நான் மக்கள்சார்பாக பிழைகளை சுட்டிக்காடி சண்டைபோடாத இயக்கங்களே இல்லை. இராணுவ அதிகாரிகளோடு தமிழனாகவும் பல்வேறு அமைப்புகளோடு மனிதனாகவும் நிமிர்ந்து நின்று விவாதித்திருக்கிறேன். அவற்றுள் முஸ்லிம்களதும் எல்லைக்கிராம சிங்களவரதும் பிரச்சினைகளும் அடங்கும். ஆனா கடைசிவரைக்கும் என்னை ஒருத்தரும் சுடவில்லை. என் பல்கலைக்ழக காலத்திலும் அப்படித்தான் இருந்தேன் என்பது நித்திக்கும் நிர்மலாவுக்கும் சிவலிங்கராசாவுக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும். * ஒடுக்குமுறைக்கு எதிரான என் பணியாமையை வாழ்பவர்களுள் பசீர் சேகுதாவுத், கிங்ஸ்லி பெரரா தயா மாஸ்ட்டர். ராதேயன் கவிஞர் கருணாகரன். வாசுகி ஜெயபாலன் போன்ற பலருக்குர் தெரியும். நினைச்சுப்பார்த்தா 25க்கும் அதிகமான கொலை முயற்ச்சிகளில் தப்பித்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன். * 1984ல் அதி உயர் போராளி தலைவர் ஒருவரை உமாமகேஸ்வரனின் புலநாய்வுத்துறை தமிழ்நாடு பட்டுக்கொட்டையில் வைத்து பிடித்து இரவு சுட்டுகொல்ல வைத்திருந்தார்கள். அது உட்கொலைகள் தொடர்பாக நான் உமாமகேஸ்வரனை விமர்சித்து பகமைபட்டிருந்த நாட்கள். அதனால் உமாமகேஸ்வரனின் புலநாய்வுப் பிரிவு தலைவர் டம்பிங் கந்தசாமி என்னை கொல்ல சந்தர்ப்பம் பார்த்துகொண்டிருந்தார். அகபட்டவர் டம்பிங் கந்தசாமியின் முதல் எதிரி. தகவல் கிடைத்ததும் டம்பிங் கந்தசாமியின் எதிர்ப்பையும் தாண்டி உமாமகேஸ்வரனின் மெய்காப்பாளர்களை தள்ளிக்கொண்டு உமாமகேஸ்வன் இருந்த பொருளாலர் மாதவன் (தற்போது பிரான்ஸ்) வீட்டு வரவேற்பறையுள் நுளைந்தேன். உமாமகேஸ்வரனோடு சண்டைபிடித்து அந்த தலைவரை உடனே விடுதலை செய்ய வழிவகுத்தேன். இதனால் 1984 மே மாதத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் இயக்க மோதல்களும். பலநூறு ஈழத் தமிழ் இளைஞர்கள் கொலையுண்ணும் சூழலும் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் 1984 மே மாதம் நடந்தது என்பதை சம்பவத்தை நேரில் பார்த்த தோழர் சிவா சின்னபொடியிடம் (Siva Sinnapodi) விசாரித்து ஞாபகப்படுத்திக் கொண்டேன். குறிப்பிட்ட தலைவர் மேற்படி சம்பவத்தை ஒருபோதும் மறந்துவிடவில்லை. பதிலுக்கு எனக்கு தெரியாமல் அவரும் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். , ரஞ்சகுமார், நான் ஒன்றும் கொரோனா வைரசுக்கு அஞ்சவில்லை. ஆனால் ஒன்று கொரோனா வைரசோடு உயிரைப் பணயம்வைத்து போராடவோ, சதுரங்கம் விளையாடவோ முடியாது. அதுதான் சோகம். ஒரு வீரமோ விழையாட்டோ இல்லாமல் சாக விருப்பம் இல்லையடா. * .. 2013ல் மரணத்தோடு சதுரங்கம் விளையாடும் கடைசி சம்பவம் நிகழ்ந்தது. திரு கோத்தபாயாவின் ஆணையில் பயங்கரவாத தடைப் பிரிவு (ரி.ஐ.டி) அதிகாரிகள் காட்டுக்குள் வைத்து இரகசியமாக என்னை கைதுசெய்ய வடகாட்டில் காத்திருந்தனர். நான் அம்மாவின் சமாதியில் அஞ்சலிசெய்ய காரில் வடகாட்டுக்குள் நுழைந்தேன். அந்த தருணத்தில் அரை நூற்றாண்டாக அம்மா தன்னைப் பார்க்க வரும்போது வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் விளக்கு வைத்துவிட்டு வரும்படி சொல்லுவதும் நான் கிண்டல் செய்வதும் ஞாபகம் வந்தது. காரை வன்னிவிளாங்குளம் திருப்பும்படி சொன்னப்போது இருளப்போகிறது என சாரதி மறுத்தாபோதும் நான் நிர்பந்தித்து காரை திருப்பச் செய்தேன். திட்டமிட்டு வடகாடு காட்டுக்குள் காத்திருந்த பயங்கரவாத தடைப் பிரிவு அதிற்ச்சி அடைந்தது.. வன்னிவிளான்குளம் கோவிலில் வைத்து கோத்தபாயாவின் ஆணையில் பயங்கரவாத தடைப் பிரிவு என்னை சுற்றி வழைத்தபோது நான் தெருக் கோவிலுக்கு கற்பூரம் கொழுத்தினேன். பின்னர் தடையை மீறி சற்று தூரத்தில் இருந்த பெருங்கோவிலுக்கு சென்றேன். அன்று அஞ்சி தடையை மீறி மக்கள்கூடும்வரை காலம் கடத்துவதற்க்காக காய்நகர்த்தாமல் இருந்திருந்தால் நான் இரகசியமாக கைதுசெய்யப்பட்டிருப்பேன் கொல்லபட்டுமிருக்கலாம். நானோ அஞ்சாமல் வளமைபோல சுட்டால் சுடட்டுக்குமென்றுதான் கத்தி சண்டைபோட்டேன். என் சத்தத்தில் சனங்கள் நோர்வேயில் இருக்கும் வன்னியை சேர்ந்த என் மைத்துணி சோதியின் கணவன் சுந்தரலிங்கத்துக்கு “ஜெயபாலனை ஆமி பிடிச்சு வைச்சிருக்கு. ஜெயபாலன் ஆமி கொமாண்டர் மாதிரிக் கத்திறான். ஆமி தமிழர் மாதிரி பேசாம நிக்கிறாங்க என சொல்லியிருக்கிறார்கள். சுந்தரி குளோபல் தம்ழ் ரேடியோ குருவுக்கும் வேறு பத்திரிகையாளர்களுக்கும் தகவல் தந்திருக்கிறான். அடுத்த சில நிமிடங்களில் எங்கள் இழுபறி ஓயமுன்னமே பி.பி.சி, சி.என்.என் போன்ற சர்வதேச ஊடகங்களில் சேதி ழுத்தில் ஓடியிருக்கு. கொழும்பு பயங்கரவாத தடை பிரிவில் இருந்து திகைப்புடன் “என்ன நடக்குது” என பதற்றத்துடன் கேட்டபிந்தான் நான் உயிரை பணயம் வைத்து ஆடிய சூதாட்டத்தில் எப்போதும்போல அப்போதும் வென்றதை உணர்ந்தேன்.... * ..சாவுக்கு அஞ்சியிருந்தா சின்ன வயசில் சாதி எதிர் வன்முறைகளின்போதே வெள்ளாள சண்டியர்களால் கொல்லப்பட்டிருப்பேனடா. இயமனோடு சூதாடுவது எப்பவும் பிடிக்கும். மச்சான், தாய்மண்ணில் சுடப்பட்டு இறப்பதுதான் எப்பவும் என் விருப்பத் தெரிவு. மச்சான் எனக்கு கொரோனா வந்தாலும் தலைபணியாமல் புன்முறுவலோடுதான் கண்மூடுவேனடா.
 9. கொரோனோவை அந்தந்த மாகாணங்களுள் கட்டுப்படுத்துக. CONTROL CORONA WITHIN PROVINCES. STOP COMMUNALLY SETTING MAIN CORONA DETENTION CAMS IN TAMIL SPEAKING AREA SUCH AS BATTICALOA AND VAVUNIYA. WHY SINHALESE BROTHERS AND SISTERS KEEP SILENT? WHY DIASPORA TAMILS SILENT? WHY INTENTIONAL COMMUNITY SILENT? இனவாத அடிப்படையில் முழு இலங்கைக்குமான கொரோனோ தடுப்பு நிலையங்களை தமிழ்பேசும் வடகிழக்கு மாகாணங்களில் அமைப்பதை நிறுத்து. சிங்கள சகோதர சகோதரிகளே ஏனிந்த மவுனம்? புலம்பெயர்ந்த தமிழர்களா ஏனிந்த மவுனம்? சர்வதேச சமூகமே ஏன் இந்த மவுனம்?
 10. காலம் காலமாக கொழும்புத் தமிழர்கள் கட்ச்சிக்குள் சுறுசுறுப்பாய் இயங்கி கட்சியை சிங்கள கட்ச்சிகள்சார்பாக கைபற்ற முனைந்தது இது முதல் முறையல்ல. குறிப்பால 1960 பதுகளின் பிற்பகுதிகளில் மு.திருச்செல்வம், பின்னர் 1970 பதுகளின் பிற்பகுதி களில் நீலன் திருச்செல்வம் சவாரி செய்ய முயன்றபோது விழுதிய குதிரை என்பதை சுமந்திரன் மறந்துவிட்டார். இந்த மூவரையும்விட நீலன் திறமையானவர். தமிழரின் விடுதலை அரசியலை சர்வதேச மட்டத்தில் செய்யும் வல்லமையை வெளிப்படுத்தியவர். கட்ச்சிக்கட்டுப்பாட்டுடன் செயல்படவில்லை என்பது குறை. அமரிக்க ஜனாதிபதியின் அழைப்பையேற்று பணிக்க இருந்த சமயத்தில் அவர் கொல்லப்பட்டது போராட்டத்துக்கு மேற்குலகில் பின்னடைஐ ஏற்படுத்திய முதல் நிகழ்வு என ஞாபகம். நீலனின் கொலையை நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறேன். அதே சமயம் நீலன் கட்சிக்கு கட்டுப்படாமல் செயல்பட்டமை தவறானது.
 11. கொரொனா வைரஸ் இனவாதத்தை நிறுத்து. STOP CORONO VIRUS COMMUNALISM. WHY YOU ARE BUILDING THE MAIN CRONO VIRUS DETENTION CAMPS IN TAMIL SPEAKING ARES? STOP COMMUNAL HANDLING OF CORONO VIRUS. .WHY LIEUTENANT GENARAL SHARVENDRA SILVA? IS HE A MEDICAL DOCTOR? OR THIS IS THE NEW CHAPTER IN THE GENOCIDE? WHY SINHALESE BROTHERS AND SISTERS KEEP SILENT? WHY INTERNATIONAL COMMUNITY SILENT? ஏன் முக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு முகாங்களை தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளின் நிறுவுகிறீர்கள்? கொரோனா வைரஸ் சிகிச்சையில் இனவாதத்தை நிறுத்து. எதற்காக இராணுவத் தளபதி சர்வேந்திரசில்வா? அவர் வைத்திய நிபுணரா? அல்லது இது இனக்கொலையில் புதிய அத்தியாயமா? ஏன் சிங்கள சகோதர சகோதரிகள் மவுனம்? ஏன் சர்வெதேச சமூகம் மவுனம்?
 12. பன்மொழி கலைஞர் செல்வி அனு சிவலிங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * பன்மொழி கலைஞர் தோழியர் அனு சிவலிங்கம் வன்னியை சேர்ந்தவர். போர் சூழல்லால் சின்னவயசில் அவரது குடும்பம் கொழும்புக்கு புலம்பெயர்ந்தது. அங்குதான் தமிழ் சிங்களம் ஆங்கிலமென மும்மொழி புலமையும் பெற்றார், ஜனநாயக ஆர்வலரான பன்மொழிக் கவிஞர் அனு சிவலிங்கத்தின் தமிழ் சிங்கள புலமையும் சமூக அக்கறையும் மலையக மக்கள்மீதன கரிசனையும் எனக்கு அனுமீதான பெருமதிப்புக்குக் காரணமானது. வன்னி மண் வன்னி மற்றும் மன்னார் மக்களதும் வன்னி முஸ்லிம்களதும் குடியேறிய (1950பதுகளின்பின்) யாழ்ப்பாணதமிழரது வம்சாவழியினரதும் குடியேறிய மலையகத் தமிழரதும் பூமியாகும். எங்கள் குட்டித் தோழி அனு வன்னியை சேர்ந்தவர். எவ்வித சமரசங்களுமற்ற ஜனநாயக வாதியான எங்கள் குட்டித் தோழி அனு சிங்கள மக்கள் மத்தியில் தமிழரின் மனசாட்சியும் குரலுமாக வாழ்கிறவர். நல்வாழ்த்துக்கள் அனு. உங்கள் வெற்றிகள் எங்களது வெற்றிகளாகும். என் கவிதைகள் சிலவற்றையும் தோழி அனு சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி அனு. இலங்கை தமிழ் சினிமா பற்றிய சிங்கள புத்தகத்துக்காக அரசின் பரிசு பெற்ற பன்மொழிக் கலைஞர் நிச்சயம் சர்வதேச பரிசுகளை பெறுவார். இது பன்மொழிக் கவிஞர் அனுவின் வளற்சியின் ஆரம்ப படிகட்டுகள்தான் இப்பரிசுகள். அவரது ஆற்றலுக்கு புகழின் வானமும் வசப்படும்., சிங்கள மொழியில் ஜனநாயகத்துக்கும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி ஒலிக்கும் உங்களுக்கு எப்பவும் எங்கள் அன்பும் ஆதரவும் உள்ளது. நீதியும் சமத்துவமும் ஜனநாயகமும் உள்ள சமாதானத்துக்காக பன்மொழிகளில் உரத்து ஒலிக்கும் தம்ழிச்சியான எங்கள் குட்டித் தோழி அனுவை வாழ்த்துவோம் வாருங்கள்.- வ.ஐ.ச.ஜெயபாலன்
 13. நன்றி, பண்டைய தமிழ் இன கருத்தாக்கம் யதார்த்தமாக மூவேந்தர் ஐக்கியத்தையும் போரையும் வலியுறுத்தியதன் பதிவுகள்தான் பேய் இலக்கியங்கள் என தோன்றுகிறது. மிக முக்கியமான கட்டுரை.
 14. பெருமாள் நவீன சாதி வெறியர்கள் பலர் இப்படித்தான் பேசிறாங்க. போராளிகளின் குடும்பம் பெண்தலைமைக் குடும்பங்கள் ஏழைப்பிள்ளைகளின் படிப்பு என உதவிக்கரம் நீட்டும் புலம் பெயர்ந்த உறவுகளை கைகூப்பி வணங்குகிறேன். அதேசமயம் இப்ப சாதி இல்லையென்று சொல்லிக்கொண்டு ஊர்மக்கள் மத்தியில் தம் தம் பெற்றோரின் சாதி வெறியை பெருமிதத்தை நிலை நிறுத்த கோவிலுக்கும் குழத்துக்கும் சுடலைக்கும் காசு அனுப்பும் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். ஊர்க்கோயில்களை மீழக்கட்டி சாதி சண்டைபிடிக்க, ஊர்ச் சுடலைக்கு மதில் எழுப்பி பிணங்களில்கூட சாதிபார்க்க எல்லாம் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பணம் குவிகிறது. மதச் சண்டைகளூட அடிப்படையில் சாதிச்சண்டைதான். பெருமாள் எந்த உலகத்தில் இருக்கிறீங்க? இவ்வளவு நடக்குது கண்டுகொள்ளாமல் யாழ்ப்பாணத்தில் இப்ப சாதி இல்ல என்கிறதே சாதிவாதம்தான். தயவு செய்து ஆணவக்கொலை நடக்கிற தமிழ் நாட்டிலும் சுடலைக்கு வெளியே தாழ்த்தப்பட்டவர்களின் பிணங்கள் நாறடிக்கபடுகிற யாழ்பாணத்திலும் சாதி இல்லை என்று புண்ணுக்கு புனுகு பூசாதீங்க. வாதிடாதீங்க. அசிங்கமாக இருக்கு.
 15. இருளில் சாதி இல்லை. . அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது. . . அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள். . தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த ஒரு நிலக்கிழான் ஒருவன் “எங்களுக்குப் பிறந்ததுகள் எங்களை எதிர்த்து கோவிலுக்குள்ள நுளைய வருகுதுகள்” என்று கத்தியிருக்கிறான். சற்றும் தாமதிக்காமல் ஆலயபிரவேசத்துக்கு அணிவகுத்து வந்துகொண்டிருந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூக கிழவர் ஒருவர் பதிலுக்கு ”எங்களுக்குப் பிறந்ததுகள் வாசலை தடுக்குதுகள்” என கத்தியிருக்கிறார். . நான் என் கவிதை ஒன்றில் ”இருளில் ஆணும் பெண்ணும் மட்டும்தான். சாதி இல்லை” என எழுதினேன். தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்திகளை வாசிக்கும்போது இந்த கதையாடல்தான் எனக்கு நினைவுக்கு வரும்.
 16. இருளில் சாதி இல்லை. . அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது. . . அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள். . தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த ஒரு நிலக்கிழான் ஒருவன் “எங்களுக்குப் பிறந்ததுகள் எங்களை எதிர்த்து கோவிலுக்குள்ள நுளைய வருகுதுகள்” என்று கத்தியிருக்கிறான். சற்றும் தாமதிக்காமல் ஆலயபிரவேசத்துக்கு அணிவகுத்து வந்துகொண்டிருந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூக கிழவர் ஒருவர் பதிலுக்கு ”எங்களுக்குப் பிறந்ததுகள் வாசலை தடுக்குதுகள்” என கத்தியிருக்கிறார். . நான் என் கவிதை ஒன்றில் ”இருளில் ஆணும் பெண்ணும் மட்டும்தான். சாதி இல்லை” என எழுதினேன். தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்திகளை வாசிக்கும்போது இந்த கதையாடல்தான் எனக்கு நினைவுக்கு வரும்.
 17. ”என்ன கிருஷ்ணன் இவை?”.....இல்ல இல்ல ”என்ன கிருபன் இவை?” ஓ.....நீங்க புடவைக் கடை ஆரம்பிக்கப் போகிறீங்களா?. அதற்கு இத்தனை பொம்மைகள் வேண்டும்தானே. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
 18. நல் வாழ்த்துக்கள் சுஜாத்தா’ . . மட்டக்களப்பு புதிய கல்வி பணிப்பாளராக திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் நியமிக்கப் பட்டது பற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகங்களில் இடம்பெறுகிற புகழுரைகள் அவர்மீதான மதிப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள் சுஜாதா. தமிழரும் முஸ்லிம்களும் உங்கள்மீது வைத்திருக்கிற மதிப்பு மகிமைப்படும் வகையில் வெற்றிகரமாகப் பணியாற்றுக என வாழ்த்துகிறேன்.
 19. ரணில் சஜித் சதுரங்கம். செய்தியும் எனது கருத்தும். . செய்தி. . <சற்றுமுன் செய்தி; News Just Now> . மங்கள, மலிக் ஆகியோர் சற்று முன் ரணிலை சந்தித்து "ஒன்றாய் முன்னோக்கி போவோம். பிளவு வேண்டாம். அது அரசுக்கு வாய்ப்பாக போய் விடும்" என்று கோரினர். அதற்கு ரணில், "அப்படியானால், கூட்டணியை கடாசிவிட்டு வாருங்கள். (பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்து...) ஐ.தே.கட்சியாக யானையில் போட்டியிடுவோம்" என்று கூறியுள்ளார். . எனது கருத்து. . தோழன் மனோ கணேசன் போன்ற யு.என்.பி நட்ப்புக் கட்சித் தலைவர்கள் சஜித்தைவிட தீவிரமான தீவிர சஜித் நிலைபாடு எடுத்திருக்கக்கூடாது. பிரச்சினையில் சமரசம் பேசும்போது கட்சிப் பிரமுகர் சஜித்துக்கும் கட்ச்சித் தலைமையான ரணிலுக்கும் இடையில் நடுநிலை வகுத்திருக்கவேணும். இன்று அவர்களுக்கு சமரசம் பேசும் கருத்து சொல்லும் தர்மம் உரிமையும் இருந்திருக்கும். எல்லோரும் ராஜதந்திர ரீதியான தவறிளைக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து வந்திருக்கிறேன். இப்பவும் தோழன் மனோ சமரசம் அல்லது ரணில் ஆதரவு என்கிற நிலைபாடு எடுத்தால்மட்டுமே அவருக்குத் தேர்தல் இலகுவாக இருக்கும். கூட்டமைப்புக்கு சிரமம் கொடுக்காத சூழல் அமையவும் கொழும்பு தமிழர் வாக்குகள் பிழவுபடாது காப்பாற்றவும் தோழன் மனோவுக்கு அதிகம் வழிகள் இல்லை
 20. விபச்சாரம் என்கிற சொல் இருபாலாரின் நிலையான பால் உறவுகளை குறிபதில்லை. திருமணமற்ற நிலைத்த பால் உறவு ’கூடி வாழ்தல்’ என்றோ ’வைத்திருத்தல்’ என்றோ தானே குறிப்பிடப்படுகிறது. எனவே பொருத்தபாடற்றது.
 21. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் சுமந்திரன் போன்ற கொழும்புத் தமிழர்களுக்கிடையில் ஆயிரம் உட்பிரச்சினைகள் இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் நாமேன் மூக்கை நுழைப்பான்?
 22. தவறுநிகழ்ந்துவிட்டது. திருத்தி வாசிக்கவும். . திருச்செல்வங்கள் விட்ட தவறுகளை தொடரமால் சுமந்திரன் வடகிழக்கின் தலமைப் பாத்திரத்தை வகிப்பவர்கள் கருத்தை விவாதித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த விடயமாயினும் கட்சியின் முடிவுகளை ஏற்று கட்ச்சிக்குக் கட்டுபட்டு கழப் பணியாற்றவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.
 23. இந்த விஞ்ஞான யுகத்தில் சமூக விடுதலைக்கு விஞ்ஞானம் என நாம் செயல்பட வேண்டாமா? ஊருக்குள் உள்ள எரியூட்டும் பழைய தொழில்நுட்ப மயானங்களை மூடிவிட்டு / புங்காக்களாக மாற்றிவிட்டு ஒதுக்கு புறமான இடங்களில் உள்ள மயானங்களை மின்மயானங்களாக மாற்றும் பிரேரனையை முன்வைத்து ஏகமனதாக ஆதரிக்குமாறு யாழ் அங்கத்தவர்களைக் கோருகிறேன். யாழ் குடும்பம் ஆதரிக்கும் பட்சத்தில் யாழ் இணைய தொடர்பாடல் வலையை முழுமையாக பயன்படுத்தி இத்திட்டத்தை முதலில் பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் பின்னர் முழு வடகிழக்கு மக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் எடுத்து செல்லலாம்.
 24. நாம் பிணங்களை எரிக்கிறோம். குடிமனைகளுக்குள் வைத்து எரிப்பது தடைசெய்யபடுதல் அவசியமல்லவா? சாதியில்லாத பொது மின் மயானங்கள் தமிழக நகரங்களில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த அனுபவம் முக்கியமல்லா?
 25. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாவை சேனாதிராசா சுமந்திரன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” நிகழ்வில் கலாநிதி கணேசலிங்கம் முன்வைத்த ஆய்வுக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” என்பது வடகிழக்கு தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே என்பதை கொழும்பு தலைவர்கள் உணரவேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் விமர்சன நீதியாக வடகிழக்கு மக்கள் தெரிவுசெய்யும் தலைமையுடன் [ஏசி அனுசரணையாக செயல்படவேண்டும். . தமிழரசுக் கட்ச்சியும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்ச்சி வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது. கடந்த காலத்தில் தமிழர் தலைமை யாழ்பாணம் வன்னி, மற்றும் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் கொழும்பிலும் இருந்து தெரிவானவர்களின் சமத்துவத்தையும் ஜனநாயக ரீதியான தீர்மானங்களையும் அடியொற்றி செயல்படவில்லை. தமிழரசுக் கட்ச்சியின் வரலாறு நமக்கு நிறைய கற்பிக்கிறது. நாம்தான் கற்றுக்கொள்வதில்லை. கொழும்பு தமிழர்கள் கட்சி அரசியல் பணிக்கு மிக மிக அவசியமானவர்கள் ஆனால் கட்சி வடகிழக்கு மாகாண மக்கள் தலைமையின்கீழ் மட்டுமே இயங்க வேண்டும். இதுதான் சத்தியாகைரகத்தின் தோல்வியின் பின்னான வரலாறும் அரை நூற்றாண்டின்பின்னர் ஆயுதப் போராட்டத்தின் பின்னைய வரலாறும் உரத்துச் சொல்கிறது. 1949 டிசம்பரில் ஆரம்பிக்கபட தமிழரசுக்கட்ச்சி 1961 வரைக்கும் ஜனநாயக ரீதியில் ஐக்கிய வடமாகாண கிழக்கு மாகாண மக்களின் சமத்துவமான தலைமையின்கீழ் இயங்கியது. திருச்செல்வம் போன்ற கொழும்பு தலைவர்கள் கட்ச்சிக்கு கட்டுப்பட்டு தொழிற்சங்கம் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாகவே செயல்பட்டனர். சத்தியாக் கிரகத்தின் தோல்விக்குப் பிறகு திருச்செல்வம் செல்வநாயகம் ஐயாவை முடக்கி வைத்துக்கொண்டு கட்சி தலமையை இயக்கினார். தமிழரின் படு தோல்விகளுக்கு ஒருகாலத்தில் கட்ச்சிக்கு கட்டுப்பட்டு சிறப்பாக பணியாற்றிய திருச்செல்வத்தின் தலைமை ஆசையே காலானது. அதேபோல வடகிழக்கு மாகாணத் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறந்த கட்ச்சியணியாளராக செயல்பட்டிருக்கக்கூடிய கொழும்பு தமிழர் நீலன் திருச்செல்வமும் வடகிழக்கு மாகாணத் தலைமையின் உறுதியின்மையால் தலமைக்கு ஆசைபட்டு யு.என்.பியின் நோக்கங்களுக்கு இசைந்து தோல்விகளுக்கு வழிவகுத்தார். போருக்குப்பின்னான விரக்தியும் குறிப்பாக சம்பந்தர் ஐயா போன்ற வடகிழக்கு தலைவர்களின் முதுமை விரக்தி என்பவை மீண்டும் வடகிழக்கு தலைமையை பலகீனப்படுத்தியுள்ளது. இது 1960பதுகளில் சத்தியாக் கிரக தோல்வியின்பின்னர் வடகிழக்குத் தலைமை செயலிழந்த சூழலை ஒத்த நிலமையாகும். இதுதான் ஒழுங்காக கட்ச்சிப் பணி ஆற்றிய திருச்செல்வம் போன்ற கொழும்புத்தமிழர்கள் கட்ச்சியைக் கைப்பற்றிய காலக்கட்டம். கொழும்பு தமிழ் தலைமை தமிழர் வல்லமைகளை ஐக்கியதேசிய கட்ச்சிக்கு அடைவு வைத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் அமைச்சு அதிகாரங்களை அனுபவித்த காலம். 1960களில் ஏற்பட்ட சத்தியாக்கிரக தோல்வி போலவே சரியாக அரைநூற்றாண்டின் பின்னர் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பெரும் தோல்வியும் வடகிழக்கு ஈழ தமிழர்களின் போராட்டத் தலைமையை விரக்தியும் துரோகங்களும் நிறைந்த ஒரு காலகட்டத்தினுக்குள் தள்ளிவிட்டது. திருச்செல்வம் நீலந்திருச்செல்வம்போலவே கட்சியின் பணிகளுக்கும் வடகிழக்கு தலைமைக்கு கட்டுப்பட்டு பொறுப்புகளை நிர்வகிப்பதற்க்கும் கொழும்புத் தமிழரான சுமந்திரன் மிகவும் வல்லமையுள்ளவர். திருச்செல்வங்கள் விட்ட தவறுகளை தொடரமால் சுமந்திரன் வடகிழக்கின் தலமைப் பாத்திரத்தை வகிப்பவர்கள் கருத்தை விவாதித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த விடயமாயினும் கட்சியின் முடிவுகளை ஏற்று கட்ச்சிக்குக் கட்டுபட்டு கழப் பணியாற்றவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.