Jump to content

poet

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2107
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by poet

 1. பொங்கல் வாத்துக்கள். HAPPY PONGAL - ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பொங்கல் வாழ்த்துப் பாட:ல் :சில ஆண்டுகளுக்கு முன்னம் எழுதி 2008ல் சென்னையில் ஒலிப்பதிவானது. சென்னை பல்கலைக்கழக இலக்கிய துறையின் ஏற்ப்பாட்டில் 2008 ஆகஸ்ட் 4ம் திகதி நண்பன் கலைஞன் அமரர் பாலு மகேந்திராவால் வெளியிடப்பட்டது. * .எனது கவிதைகளின் முதல் இரசிகன் நண்பர் கலைஞன் அமரர் பாலுமகேந்திரா எடுத்த படம். எடுத்த வருடம் 2007 ஆக இருக்கக்கூடும்.
 2. நன்றி கிருபன். நம்மவர்கள் இன்னமும் கண்டுகொள்ளத் தயங்கும் மலையக தமிழர் பற்றிய செய்திக்கு நன்றி. தொடர்ந்து மலையகத் தமிழர்கள். கிழக்கு மாகாண தமிழர்கள் தமிழ்பேசும் முஸ்லிம்கள் பற்றிய சேதிகளை ஆய்வுரைகளை தேடி வெளியிடுங்கள்.
 3. முள்ளிவாய்காலில் சர்வதேச பிரிவினர் ஆவணங்களை புதைத்ததாக கேழ்விப்பட்டேன். கப்பல் வரவில்லை. ஆனால் கஸ்றோவைவிட முக்கியமான பொறுப்பில் இருந்த பொட்டம்மான் இறுதித் தருணத்தில் ஆவணங்கள் தொடர்பாக இராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாராம். அவர், போரில் தப்பிய போராளிகளின் ஆதரவாளர்களின் எதிர்காலம் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வுடன் தனது கட்டுப்பாடில் இருந்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும் கேழ்விப்பட்டேன். போர் முடிந்ததுமே சில தொகுதி ஆவண புதையல்களை இராணுவம் கைபற்றியது. எஞ்சியவற்றுள் சில இப்ப கைபற்றபட்டிருக்கலாம். 2014ல் நான் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாதத் தடைப்பிர் கையில் புதைத்த தரப்பினர் என்னை எதிரியாக சித்தரித்த பதிவுகள் வெளிநாட்டில் இருந்துவந்த அத்தகைய சிடிக்கள் என்பவையே கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கைப்பற்றப்பட்ட புதிய ஆவணங்களில் ஆசியா மற்றும் மேற்க்குநாட்டு கிளைகளின் வர்த்தகர்கள் பிரமுகர்களுடனான கொடுக்கல் வாங்கல் கணக்கு வளக்குகள் செயற்பாடுகள் பற்றிய சில ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு.
 4. மகிழ்ச்சி தோழரே. ஏழை என்னிடம் இருப்பது நினைவுகள் மட்டும்தான்.
 5. வாழ ஆசை LUST FOR LIFE * பதின்ம வயசில் சாதி ஒருக்குதலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் சின்ன வயசிலேயே ஆயுத தாக்குதல் அபாயமும் உயிர்காக்கும் அதிஸ்ட்டமும் என்னை தொடர ஆரம்பித்துவிட்டது. உயர் சாதிக் கொடுமை எதிர்ப்பினால் வீட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டேன். அதனால் அப்பா நெடும்பயணம் செல்லும் சமயங்களில்தான் எங்கள் வடகாட்டு பண்ணைவீட்டில் தங்குவேன். 1971 சிங்கள இளைஞர்களின் கிளற்ச்சியின் ஓராண்டு நிறைவு நாளில் பொலிசாருக்கு விசேட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி 1972 ஏப்பிரல் 4 நள்ளிரவு என்னை சுட பொலிசார் என் வீட்டுக்குள் பாய்ந்தனர். அதிஸ்ட்டவசமாக அந்த இரவில் விவசாய கிழற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் அமரிக்க பத்திரிகையாளர் ஒருவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அதனால் எனக்கு வாய்திறக்க சந்தர்ப்பம் கிடைத்தது. “இங்ஸ்ஸ்பெக்டர் நான் இலகையன் தமிழன். எங்களை நீ நாய்போல சுடலாம். இவர் அமரிக்க பத்திரிகையாளர். அவருக்கு mechine gun நீட்டுகிறாய்,. நீ அவரை சுடமுடியாது” என கர்ச்சித்தேன். யந்திர துப்பாக்கியை நீட்டிய இங்ஸ்பெக்டரின் கை நடுங்கியது. . இப்படி வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத அதிஸ்ட்டம் என்னை காப்பாற்றியபடி தொடருகிறது. 2014ல் அம்மாவின் சமாதியை தரிசிக்க இலங்கை சென்றேன். தமிழ் சிங்கள் பத்திரிகைச் சந்திப்புகளில் அரசை காரசாரமாக விமர்சித்தேன். கோத்தபாய அவர்கள் என்னை இரகசியமாக கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மாவின் சமாதிக்கு நான் சென்ற வழியில் இருந்த காட்டுக்குள் மறைந்திருந்தார்கள். கார் காட்டுக்குள் நுழைந்த போது காரைத் திருப்பு என சொன்னேன். நேரமாகிவிட்டது என மறுத்த சாரதியிடம் “அம்மாவிம் வாழ்நாள் வேண்டுகோளான வன்னிவிழாங்குழம் அம்மன் கோவிலுக்கு விளக்கு வைக்க வேண்டும் திருப்பு” என கத்தினேன். அதனால் என்னை இரகசியமாக கைது செய்யும் வாய்ப்பை இராணுவம் இழந்தது. துரத்தி வந்த இராணுவம் எங்களை கோவிலுக்குமுன் மடக்கியது. மக்கள் கூடட்டும் என்பதால் இராணுவத்துடன் கர்ச்சித்து வாய்ச் சண்டை போட்டேன். எதிர்பார்த்தபடியே வீட்டு வேலிகளுள் மக்கள் கூடிவிட்டார்கள். வன்னிவிளான்குழத்திலிருந்து நோர்வே சுந்தரலிங்கம் லண்டன் பத்திரிகையாளர் குருபரன் போன்றோருக்கு கைபேசி சேதிகள் போனது. (வாற்ஸப் செயலிக்கு நன்றி.) இராணுவ தலைமையகத்தில் இருந்து என்ன நடக்குதுCNN, BBC டிவி யெல்லாம் வரிச்சேதி ஓடுது என பதட்டத்துடன் வாக்கி ரோக்கியில் கத்தினார்கள். இப்படித்தான் இப்படித்தான் லட்சக் கணக்கான உறவுகள் கொல்லபட்ட மண்ணில் நான் உயிர் தப்பி வாழ்கிறேன். இயக்கத் தலைவர் ஒருவர் “ஜெயபாலனை சுடுவதானால் வாய்திறக்குமுன் சுட்டால்தான் உண்டு” என கிண்டலாக சொல்வாராம். உண்மையாக இருக்கலாம். வாழுமாசையால் கவிதை என் வாழ்வின் கவிதையாகும். * வாழும் ஆசையால் - வ.ஐ.ச.ஜெயபாலன். ---- ஒளியும் இருளும் உருள உருள காலத்தேரின் கூரைப் பல்லியாய் தசாப்தம் எழு தாண்டிவிட்டேன். விடிந்தால் தாமரை பொழுதுபட்டால் முல்லையென வழியெங்கும் தேன்சிந்துமே வாழ்வு. இதுதான் என் ஞானம் தோழதோழியரே. இது முது கடலின் இளமைமறாத அலை. வாழும் ஆசையால் கல் வெடிப்பிலும் வேரோடி மலர்கிறதே சிறு புல். * 1965ல் ஒருநாள். யாழ்ப்பாணத்து ராசவீதிகள் அதிர ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என கர்சனையோடு செங்கொடிகள் உயர்ந்தது. அதுவரை கண்டது கல்யாண ஊர்வலம் மட்டுமே. வியர்வையும் மண்ணும் கந்தலுமாக ”நீயும் வாழ் எம்மையும் வாழவிடு” என மண் தோய்ந்த மேனியராய் மானுடம் எழுந்ததை அன்றுதான் கண்டேன். சூரியனும் நிலவும் மறுக்கப்பட்ட இருவேறு உலகமா? பதின்மவயசில் என் ஆன்மா அதிர்ந்தது. * அந்த அறியப்படாத யாழ்ப்பாணத்தில் மாணவப் பருவத்தை பறிகொடுத்து உயிர்த்த செம்மண் சேற்றுச் சிலைகளாய் கழை பறிக்கும் சிறார்களைக் கண்டு நானும் கொதித்தேன். சாதிவெறி பிடித்த தமிழருக்கெதிராய் மீசை முளைக்கயில் ஆயுதம் தாங்கினேன். * பின்னர் ஓர் இரவில் எம் விடுதலைக் கனவின் கருவறையான யாழ் நூலகத்தை சிங்கள பெளத்த வெறிக்கூச்சலுடன் படைகள் எரித்தன. கவிஞன் ஒருவன் “புத்தகத்தோடு புத்தகமாக புத்தனை எரித்தனர்” என்று வெகுண்டான். * கோடைக் காற்று கோடான கோடி கனலும் புத்தக கங்குகளோடு ”விரித்த கருங்குழலும் கையில் சிலம்பும் கண்ணீருமாய்” மதுரையை உலுப்பிய கண்ணகியாக யாழ்பாணத்து தெருக்களில் அலைந்தது. உளதோ உளதோ ”அல்லற்பட்டு ஆற்றாது அழுத” மக்களின் ஓர்மத்தை விடவுமோர் வலிய ஆயுதம் * கொடுங்கோல் வீழ்திய உலகப் புரட்சிகள் நூலகங்களிலிருந்தே ஆரம்பமானது. நாமோ நூலகச் சாம்பர் மேட்டில் இருந்து விடுதலைக்காக ஆயுதம் தாங்கினோம். * மீண்டும் மீண்டும் சர்வதேச மாநுட அரங்கில் சரிநிகராக வாழும் ஆசையால்தானே ஆயுதம் தாங்கினோம். ஆலயம் மசூதி மட்டுமன்றி தேயிலை மலைகளில் எல்லைப் புறத்து விகாரையில்கூட எல்லோரும் இன்புற்றிருக்கவே எழுந்தோம். * இபடித்தான் தோழ தோழியரே கல்லில் வளர்ந்த புல் பூத்ததுபோல என் காதலும் வீரமும் கவிதையானது. 2021.
 6. வீரப்பனின் காடுபற்றிய அறிவுவு நாட்டுக்குத் தேவை என்கிற குரல் வீரப்பனுக்கு நேரெதிரான கர்நாடக சூழலியலாளர்களிடமிருந்தும் வன படப்பிடிபாளர்களிடமிருந்தும் பலமாக எழுந்தது. என் நினைவுக்கு எட்டியவரை வீரப்பனும் புலிகளும் தொலைத்தொடர்பு வைத்திருந்ததாக இந்திய உளவுத் துறை ஒருபோதும் அறிவிக்கவில்லை. வீரப்பனுக்கு பொறிவைக்க தமிழக கர்நாடக உளவுத்துறைகள் கட்டுக் கதைகளை உருவாக்கினார்கள். வன்னித் தலமை வீரப்பனை வரவேற்பதான சேதிகளை போலியாக இட்டுக்கட்டி பயன்படுத்தினாகள். சீனா பேச்சுக்கு அழைத்தபோதே மறுத்த புலிகள் இந்தியாவுக்கு பின்வரும் சேதியை அனுப்பினார்கள். “இந்தியா எங்கள் கப்பல்களை தாக்க இலங்கைக்கு உதவுகிறது. இந்தியா இலங்கைக்கு எங்களை தக்கி அழிக்க தகவலும் தாய்க் கப்பலும் வளங்குகிறது. அதற்க்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது. இருந்தும் நாம் இந்திய நட்ப்பை வேண்டி சீனாவின் சிங்கபூர் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்தோம்” எனஇந்தியாவுக்கு புலிகள் இரகசியமாக அறிவித்தார்கள். சீன உறவையே நிராகரித்த பின்னணியில் வீரப்பன் விடயத்தில் இந்தியாவுடன் பகைவளர்க்க ஒருபோதும் முற்பட்டிருக்க மாட்டார்கள். 1995 - 2006 காலக்கட்டத்தில் புலிகளுடனான உரையாடல்களில் இந்திய தரப்பு ஒருபோதும் வீரப்பன் தொடர்பாக குறிபிடவோ குற்றம் சாட்டவோ இல்லை. வன்னிக்கு ரூர் போய்வந்த புலம்பெயர்ந்த தமிழர்களுள் ஒரு சிலர் தமிழக பிரபலங்களோடு தாம் புலிகளுக்கு நெருக்கமென அறிமுகம் செய்து மிகையாக உரையாடி இருக்கிறார்கள். அதுதான் புதிது புதிதாக கிழம்பும் கதைகளின் பின்னணி என நினைக்கிறேன் .
 7. காட்டை குறை சொல்லாதீர்கள். நான் காட்டை நம்பினேன். காடு கைவிடவில்லை. காட்டைவிட்டு நம்மை வெளியே வரச்செய்ய சிலநாடுகள் (கெரிலா யுத்தபயிற்ச்சிகளுக்குப்பதிலாக ) நேரடி யுத்தப் பயிற்ச்சி தந்தார்கள். பாரிய ஆயுதங்கள் கிடைக்கச் செய்தார்கள். காட்டைவிட்டு வெளியே வந்தோம். காட்டுக்குள் எதிரி வந்தான். முழுமையாக காட்டை விட்டால் முழுமையாக வெளிநாடுகளுக்கு பின்னே நிற்க்கவேணும் இல்லையென்றால் காட்டையும் (கெரிலா மூல உபாயம் Strategy ) வெளிநாட்டை சார்தலையும் (நேரடி இராணுவ தந்திரோபாயம் Tactics) உகந்த வீதத்தில் கலக்கவேண்டும். (என என்னால் உயிரை பணயம் வைக்கவும் கத்தவும் மட்டுமே முடியும்). 1987 - 1990 காலக்கட்டத்தில் (காடு+ கொழும்பு) இந்த கலவைதான் காப்பாற்றியது. 2006-2009 காலக்கட்டத்தில் நாம் கெரிலா வல்லமையை துறந்து முழுமையாக நேரடி இராணுவத்தை தெரிவுசெய்யும்வரை ஆயுதக் கப்பல்களை அனுமதித்தார்கள். கெரிலா போரை நாம் முற்றாக கைவிட்டதும் எஞ்சிய நேரடி இராணுவ வல்லமையை வெட்ட ஆயுத கப்பல்களை அழித்தார்கள், பணியாத வீரம் சுத்த தங்கம் மாதிரி. காடும் வெளிநாட்டு உறவும் கலக்காமல் சுத்த தங்கத்தில் எது செய்தாலும் நிலைக்காது. என் பிள்ளைகளுக்கு நான் விட்டுச் செல்லும் வார்த்தைகள் இவைதான். .
 8. காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன். என்றாலும் எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரிதனைப் பாடுகிறான் வன்னிச் சிறான் ஒருவன். . 1968 (வன்னி.இலங்கை)
 9. தனித்து மட்டகளப்பு மாவட்டத்தையோ அம்பாறை மாவட்டத்தையோ அல்லது திருகோண மலை மாவட்டத்தையோ எடுத்து தமிழ் முஸ்லிம் இனங்களின் காணிப் பகிர்வு பிரச்சினையை ஆராய்வது குருடர்கள் யானை பார்த்த கதையாகவே முடியும். மட்டக்களப்பில் முஸ்லிம்களும் அம்பாறையில் தமிழர்களும் எதிரும் புதிருமாக ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள். திருமலையில் இரண்டு தரப்புக்கும் பரஸ்பரம் அச்சமும் கோரிக்கைகளும் உள்ளது. அதனால் கிழக்கின் மூன்று மாவட்ட பிரச்சினைகளையும் ஒன்றாக அமர்ந்து பேசினால் மட்டும்தான் தெளிவும் நீதியும்கிட்டும். அல்லது வீண ஒரு இனமுறுகலை தூண்டிவிடுகிற முயற்ச்சியாகவே முடியும். இந்தியாவ்வும் அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் சீனாவின் வடகிழக்கு நகர்வு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசுக்கு தீர்வு தொடர்பான அழுத்தம் மீண்டும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதனைக் குழப்ப அரசு தரப்பு எடுக்கும் முயற்ச்சிகளுக்கு பலியாகிவிடக்கூடாது. குறிப்பாக தமிழர் தரப்பு மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் நடக்க வேண்டிய தருணமிது. தமிழ் முஸ்லிம் ஐக்கியம் ஏற்படாவிட்டால் இணைப்பை கைவிடுதல் அல்லது கிழக்கின் நிலத்தொடர்பற்ற தமிழ் அலகுகள் வடக்குடன் இணைதல் என்கிற நடைமுறைச் சிக்கலான சூழலே உருவாகும். எனவே எதிர்காலத்தில் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் மட்டுமோ தமிழரும் முஸ்லிம்களும் கலந்துகொள்ள வேண்டும்.
 10. 1970 ம்ஆண்டு வசந்த காலத்தில் எழுதிய கவிதை. அது புரட்ச்சி வரபோகிறது என்கிற நம்பிக்கையுடன் இலங்கையின் இராணுவப் புவியியலைப் படிக்க நான் காடு காடாக அலைந்த காலம். 1970 பதுகளில் வடகிழக்கு மாகாணத்தில் புரட்ச்சியின் மையம் வன்னி என உணர்ந்தேன். அதனை பிரகடனப் படுத்தும் வகையில் ”பாலி ஆறு நகர்கிறது” ”நம்பிக்கை” என்ன சில கவிதைகள் எழுதினேன். இது வன்னிக் காட்டுப்புற விவசாயிகளின் வாழ்வியல் பற்றிய கவிதை. எழுதிய கவிதைகளில் ஒன்று. இக் கவிதையில் வரும் ”காலச்சுவடு” என்கிற படிமம் அப்பவே பிரபலமானது. சுரா தான் வாசித்தவற்றுள் நீங்க உருவாக்கிய காலசுவடு சிறப்பான படிமம் என்று பாராட்டினார். லவினர்கள் சொற்களை செல்வம் செல்வாக்குள்ளவர்கள் பதிவுசெய்து தனி உடமையாக்க உருவாக்குவதில்லை. தமிழுக்காகவே உருவாக்குகிறோம். அதுதான் காலத் துயர். * இளவேனிலும்உழவனும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . காட்டைவகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது. இதயத்தைக்கொள்ளையிட வண்ணத்துப்பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையேதூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும்எருதுகளோ, தரிக்கா. . ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம் 1970
 11. சரி நான் புரிந்ததை பதிவு செய்கிறேன் நண்பா. கொசோவா தீர்வு பாதையில் சென்று பேரழிவைத் தடுத்து வெற்றிபெறும் சாத்தியகூறுகளை பாலா அண்ணன் உருவாக்குவதாகத் தோற்றம் இருந்த சூழலில்தான் நான் அண்ணாவுடன் பேசினேன். கொசோவோ மொடல் சாத்தியக்கூறுகள் பற்றியும் நான் ஆதங்கப்பட்டேன். அண்ணா இவை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. என் புரிதலின் படி மிக சுருக்கமாக அவர் பேசிவற்றின் சாராம்சம். “இந்தியா உட்பட எல்லா நாடுகளோடும் பாலங்களை உடையவிட்டாச்சு. எஞ்சிருப்பது மேற்க்குத்தான். நான் சாகமுன்னம் அந்த பாலத்தையாவது காப்பாற்றி தீர்வை கொண்டுவந்தாதான் மா----னை காப்பாற்றலாம். இஞ்ச சிலர் விடுகிறாங்களில்லை. நான் செத்தா எல்லோரும் சேர்ந்து மா-------னையும் இயக்கத்தையும் எல்லோரையும் அழிச்சிடுவாங்க.” இந்த கருத்தைத்தான் சொன்னார். அவர் விடுகிறாங்களில்லை என்று குறிப்பிட்டதுயார் என்பதை சொல்லவில்லை. என் அனுமானப்படி அவர் கஸ்றோவையும் தனக்கு முட்டுக்கட்டைபோடும் புலம்பெயர்ந்த அமைப்பின் தலைமகள் சிலவற்றையும்தான் குறிப்பிட்டார் என்றுதான் நான் புரிந்துகொண்டேன்.
 12. புதிய தலைமுறை டிவி தளத்தில் எழுதிய பதிலின் பிரதி ----------------------------------------------------------------- மேலோட்டமான விடயங்களையே பலரும் பேசினார்கள். உண்மையில் சினாவின் தற்போதய பதட்டத்துக்கு முக்கிய காரணம் அமரிக்காவுக்கும் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமமிடையில் உருவாகிவரும் அரசியல் உறவுகள்தான் எனத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுகளாகவே அண்மைக்கால சீன நகர்வுகளை நான் பார்க்கிறேன். அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் மட்டுமே 2000 -2006 பேச்சுவார்த்தை காலக்கட்டத்தில் இருந்து இலங்கைத் தமிழரை ஒரு தரப்பாக அங்கீகரித்திருக்கிறது. அமரிக்கா மேற்க்கு நாடுகள் ஐநா போன்ற சர்வதேச அரங்குகளில் போர்குற்றம் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்குப்பின்னே நிற்காமல் தமிழர் மீதும் கரிசனை காட்டுகின்றன. இந்தியா 1987 ஒப்பந்ததின்போதுகூட இலங்கை தமிழரை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவில்லை. இதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா மீதுள்ள வருத்தம். இலங்கை தமிழர் இந்தியாவிடமிருந்து பொருளாதார உதவிகளைவிட அரசியல் உதவிகளையே முதன்மையாக எதிர்பார்க்கிறார்கள். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இலங்கை தமிழருக்கான பொருளாதார உதவிகள் இந்தியா அமரிக்கா மேற்குநாடுகள் மட்டுமல்ல இலங்கை அரசும்கூடச் செய்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களும் செய்கிறார்கள். இப்போ சீனாவும் செய்கிறது. இந்தியாவில் சிலர் அரசியல் ரீதியாக இலங்கையோடு மட்டும் நின்றுகொண்டு வடகிழக்கில் சில கட்டிடங்களை வீதிகளை அமைப்பதன்மூலம் இலங்கை தமிழர்களை வெண்றுவிடலாமென கருதுகிறார்களா? என்கிற கேழ்வி தமிழ் இளைஞர் மத்தியில் உள்ளது. வடகிழக்கு தமிழர் மத்தியில் இந்தியா காலூன்றும் விடயத்தில் இந்தியாவின் வடகிழக்கு கொள்கை தோற்றுப்போய்விட்டது. அமரிக்காவும் சீனாவும் அதனை உணர்ந்துவருகிறது. அண்மையில் அமரிக்கா மற்றும் மேற்க்கு நாடுகளுக்கும் இலங்கை தமிழர் தரப்புக்குமிடையே நெருக்கம் அதிகரித்து வருவது அண்மை நிகழ்வுகள் மூலம் புலப்படுகிறது. அதற்க்கு அமரிக்கா மேற்க்குநாடுகளின் பொருளாதார உதவிகளல முக்கிய காரணம். அதற்க்கு மேற்குநாடுகள் இலங்கையை கண்டிப்பது போர்குற்றம் செய்த இராணுவ தலைவர்களை எதிர்ப்பது என அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொள்ளுவதே முக்கிய காரணம். இனியாவது இந்தியா இதனை புரிந்து கொள்ளவேணும். சீனா பதட்டபடுவது இந்தியாவின் நகர்வுகள் தொடர்பாக என நான் நினைக்கவில்லை. சீனா பதட்டப்படுவது அமரிக்காவுக்கும் இலங்கை தமிழர் மற்றும் புலம் பெயர்ந்த தமிழருக்குமிடையிலான நெருக்கம் தொடர்பானது எனவே நான் கருதுகிறேன். வடகிழக்கில் இந்தியாவை சீண்டுவதன்மூலம் 1. தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெறுகிற போட்டியில் இந்தியா அமரிக்காவுடன் தானும் களமிறயும்ங்குவது 2 களத்தில் அமரிக்காவுடன் தான் மட்டும் மோதாமல் , இந்தியாவை களத்தில் இறக்கிவிடுவது என்கிற இரண்டுமுனை இராசதந்திரத்தை சீனா கையாள்வதாகவே தோன்றுகிறது. . - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
 13. நன்றி. கவிஞர்கள் வல்வை சகாறாவுக்கும் நிழலிக்கும் என் நன்றிகள்.
 14. எனது சுயசரிதையில் விரிவாக எழுதுவேன். யாழ் குழுமம் அங்கீகரித்தால் கேட்டால் பாலசிங்கம் அண்ணன் சொன்னதை சுருக்கமாக வெளியிடமுடியும்.
 15. அண்ணா, உங்கள் நினைவை போற்றுகிறேன். 2002 ஒஸ்லோ மாநாட்டின்போது நீங்கள் என்னிடம் சொன்ன சேதிகள் இப்ப தீர்க்க தரிசனமாகிவிட்டது. 2006ல் பேச்சுவார்தைகளில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதில் மேற்குலகம் கோபமாக இருந்தது. உங்கள் உடல்நிலை பற்றி சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. ”பாலசிங்கத்தைத் தவிர தவிர பிறருடன் பேச ஒன்றுமில்லை. இது முடிவின் ஆரம்பம்” என மேற்குலக இராசதந்தரிகள் எச்சரித்ததை நான் தலைமைக்கு உடனேயே அறிவித்தேன். உங்கள் மரணச் சேதியை கேட்டபோது "This is the beginning of the end" என்ற மேற்குலக இராஜதந்திரிகளின் குரல் என் காதுகளில் மீண்டும் ஒலித்தது. அண்ணா உங்கள் கடைசிகால நிலைபாடுகளில் இருந்து கற்றுக்கொள்வதால் மட்டுமே நம் இனம் வெற்றியடையமுடியும்.
 16. இன்றைய மது - ஜெயபாலன் * உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரை பொங்குவது புதிய மது. . அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. . எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின்கதவுகளைத்திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. . கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள் தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையும் பாம்பையும். இதைத் தின்னாதே என்னவும் இதைத் தின் என்னவும் இவர்கள் யார். காதலே எமது அறமாகவும் பசிகளே எமது வரங்களாகவும் குதூகலித்தோம். . எப்பவுமே வரப்பிரசாதங்கள் வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும் உறவுகள் போலவும் நிகழ் தருணங்களின் சத்தியம். . நிலம் காய்ந்த பின் விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ பட்டமரம் துளிர்க்கிறமண்ணில்கூட அவனது வியர்வை முளைப்பதில்லை. போன மழையை அவன் எங்கே பிடிப்பான். அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம். நனைந்த நிலத்தில் உழுகிறவனின்கவிதையை எழுதுகிறது ஏர்முனை. . காலியான விதைப் பெட்டியில் காட்டுமலர்களோடுநிறைகிறது கனவுகள் -2004 photo - My Bro Vanithasan Rasamma Shanmugampillai
 17. நன்றி ்நண்பா, சொல்தான் என் ஆன்மா. சொல்தான் என்னிடமுள்ள ராஜசதந்திரம். சொல்தான் என்னிடமுள்ள விதைகள். ஆனபடியால் நான் சொல்ல வேண்டியதை அஞ்சாமல் சொல்லவேண்டும். இன்று இல்லாவிட்டாலும் எங்கள் பிள்ளைகள் நாம் விதைப்பதை அறுவடை செய்வார்கள். ”ம்”
 18. இலங்கை தமிழரை புரிந்துகொள்ளுதல். மேயர் மதன்மோகனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் * மேஜர் மதன்மோகன் அவர்களுக்கு வணக்கம். 1.) 2000 ஆண்ண்டின் முன்னும் பின்னும் . விடுதலைப்புலிகளை சீனா சிங்கபூரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். விடுதலைப் புலிகள் என்னை அழைத்து ”இந்தியாவுடனான உடைந்த உறவை மீழ ஒட்டும் விருப்பத்தோடு சீனாவின் அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை” என்பதை இந்தியாவுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர், நான் இந்திய தூதுவர் நண்பர் நிருபம் சென் ஊடாக அதனை இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். அதுபோல இந்திய தூதரகமும் தகவல் பரிமாற என்னை அழைத்துள்ளது. உயிரை பணயம் வைத்து பணியாற்றியுள்ளேன். 2.) உங்களுக்கு ஒன்று தெரிய வேணும். இலங்கை தமிழர்கள்தான் இதுவரை சீனா வடகிழக்கு பகுதியில் நுழையாமல் இருந்தமைக்கு முதல் காரணம். அவர்கள் இன்றும் இந்தியாவையும் மேற்க்கு நாடுகளையும் மட்டும்தான் முழுமனத்துடன் வரவேற்கிறார்கள். 3.) போருக்கு பிந்திய சூழலில் நாம் சகல தரப்போடும் மோதல் இல்லாமல் காரியம் ஆற்றவேண்டியுள்ளது. அதன் அர்த்தம் சீனாவுக்கு குறிப்பிடத் தக்க அளவுக்கு செல்வக்கு வளரக்கூடும் என்பதல்ல. இலங்கை தமிழருக்கு நெடுங்காலமாக -குறிப்பாக இந்திரா காந்தி அம்மையாரின் காலத்தில்.- இந்தியாவே முதல் தெரிவ்வாக இருந்து வந்தது. . ஆனால் நோர்வே சமாதான பேச்சுகளில் அனரிக்காவும் மேற்க்கு நாடுகளும் தமிழரையும் ஒரு தரப்பாக ஏற்றுகொண்டமையாலும் புலம்பெர்ந்த தமிழரின் செல்வாக்காலும் அமரிக்கா மேற்க்கு நாடுகள் மீதான நம்பிக்கை தொடர்புகள் என்பவையும் அதிகரித்து வருகிறது. 4,) இந்தியா சிங்கள அரசை ஒருதரப்பாக ஏற்றுகொண்டது. ஆனால் இந்தியா இதுவரை இலங்கை தமிழரை எந்த பேச்சுவார்த்தையிலும் ஒரு தரப்பாக அங்கீகரிக்கவில்லை . இதுமட்டுமே அரசியல் ரீதியாக ஈழத் தமிழர் இந்திய உறவை பாதிக்கும் ஆதங்கமாகும். நீங்கள் தவறாக குறிப்பிடுவதுபோல 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இலங்கை தமிழரை ஒரு தரப்பாக பொருட்படுத்தி இந்தியா முன்னிலைப் படுத்தவில்லை. . இப்பவும் நிலமை அதுதான். இந்த நிலமை மாறவேண்டும். 5.) இலங்கை தமிழர்கள் பலரும் இன்று அமரிக்காவ் கனடா ஐரோப்பிய நாடுகளில் அரசியலில் தலைவர்களாக செல்வாக்கு செலுத்தும் நிலைக்கு வளர்ந்துள்ளனர். உங்களைப்போலவே நாங்களும் அறிவுள்ளவர்களாக வளர்ந்துள்ளோம். இலங்கைத் தமிழர்கள் சீனாவுக்கு பின்னே போகிற அளவுக்கு முட்டாள்களில்லை. ஆனால் நாம் ஒரு இனமாக சீனவை எதிர்கொண்டு அரசியல் செய்யவேண்டிய சூழல் இலங்கையில் உருவாகி வருகிறது. 6,) ,இன்று முதலில் இந்தியா அடுத்து அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் என்கிற இலங்கைத் தமிழர் நிலைபாடு மக்கள் மத்தியில் கேழ்விக்குரியதாக மாறி வருகிறது என்பது உண்மைதான். 7,) இந்தியாவும் மேற்க்கு நாடுகளைப்போல இலங்கை தமிழரையும் எங்கள் பங்காளிகளான வட கிழக்கு முஸ்லிம்களையும் ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற நீண்டகால இந்திய நண்பர்களது கோரிக்கையை . இந்தியா எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞன் நடிகன்.
 19. நம் உடலையும் மனசையும் சூழ்ந்துவருகிற விதிகளிடமும் சதிகளிடமும் இறுதிவரை சராணாகதியாகாமல் விரும்பியதை விரும்பியடி அவுபவிக்க உழைப்பதுதானே வாழ்க்கை. நெடுங்காலத்தின்முன்னே படித்த எனக்குப்பிடித்தெ நெடாவின் கவிதையை மீண்டும் படிக்க வாய்ப்பு தந்த நிழலிக்கு நன்றிகள்.
 20. (யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?- சங்கப் பாடல்) * கானல் வரி. - ஜெயபாலன் . கருகும் முது மாலை. பூம்புகாரின் தொல்கரைகள் சிவக்க நுரைக்கும் திராட்சை மதுவாய் நெழிகிறது எழுவான் கடல். இது படுவான் கரையென்றால் மாலை செம்பொன்னாய்ச் சொரியுமே. எனினும் காதலில் சிறகுகள் உரச கூடு ஏகும் பறவைகளின் பாட்டில் கானல் வரி தொனிக்கிறது. . இந்த மதுவார்க்கும் மாலையில் தனித்த முது கவிஞன். நினைவு இடறி நான்கு தசாப்தங்கள் காலச்சரிவில் உருள்கின்றேன். எங்கோ ஒரு யப்பானியப் பாடல் தாபம் வளர்கிறது. . அது ஈழத்தின்கொடும் பகையை எதிர்த்து ஒவ்வொருவராய் நாங்கள் போருக்கு எழுந்த காலம். ”எத்திசை செலினும் அத்திசை சோறே” அத்திசை தமிழே என தோழர்கள் புலம் பெயர்ந்தார்.. . இது ஆண் கடல். காவிரிக் கரையில் இந்தக் கொடுங் கடலை நம்பியொரு தொல்நகரம் இருந்ததுபோல் என்னருகே மெல்ல யப்பானியப் பாடல்களை இசைத்தபடி ஆரி மக்சிமோட்டோ இருந்தாள். . வாடிய தென்னந்தோப்பாய் அசையும் நரைத்த தாடியின்கீழ் கீழடியாய் மறைந்திருக்குமே காதல் தொன்மங்கள். 2021
 21. நல்ல தன்னுணர்வு. lyrical narrative கவிதை. வாழ்த்துக்கள்
 22. அம்மா- ஜெயபாலன் போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையவாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா? தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? * அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள் வானில் ஒலித்த போதெலாம் உயிர் நடுங்கினையாம். நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம். * இருளர் சிறுமிகள் மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில் கன்னிமாங்கனி வாடையில் வந்த கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே எங்கள் ஆற்றை எங்கள் காட்டை உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா. என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை உன்னை வந்து பார்க்கலையாமே. போகட்டும் விடம்மா. அவனும் அவனது பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல உன்னைக் காக்க யானையின் மதநீர் உண்டு செளித்த நம் காடும் உளதே ------ *கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்த்தை சேர்ந்தது. *இக்கவிதை விடுதலை புலிகளின் உட்சுற்று இதழான வெளிச்சத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.
 23. வாழ்வின் கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் - LIFE'S POEM - BY JAYAPALAN - Translated by Chelva Kanaganayakam . (Wilting Laughter) . நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள். புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை. துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை. பசுமை இனிக்க மான் கிழை வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி. அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது இக்கணம். என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும் வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு. . The snake eyes in the river bank the frog entranced by the flying insect; a sniffing mongoose, scurrying; on the deer's green path a human trap spread out; that which is fearless lives; the PALI river moves on . டைட்டானிக் கனவு மனிதா உன் விஞ்ஞான வரைபடத்தில் ஏது மிதக்கும் பனிப்பாறை. எனினும் உன்னால் இயலுமே முழ்கையிலும் வயலின் மீட்டி சாவையும் வாழ்தல். ஞான் அறியும் நஞ்சு பருக விதித்த பின்னும் வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் காதை. . nourishing some trees, uprooting others. Man of Titanic dreams where in your schemes lies a floating iceberg? Yet even in drowning, you play the violin, living in death; condemned to die a wise Greek man choosing to live. . இலக்கமில்லா வாகனம் ஊரும் எதிரிகளின் துப்பாக்கி சுட்டும் போதும் நண்பரது கொலைக்கரத்தால் விலங்கு பூண்டு நாள் நேரம் காத்திருந்த வேளையிலும் வாழும் ஆசை புதுவெள்ளமாய் பெருக ஜீவநதியாய் இருந்தேன் என்பதன்றி பெருங்கவிதை என் வாழ்வில் வேறு ஏது. . Unmarked vehicles roam, enemy guns open fire, shackled by murderous friends waiting endlessly, the desire to live flooding over me, I remain a river of life; no other poetry in me but this. . கையில் கறையாக பெண்கள் சிலரது கண்ணீர் மட்டுமே மனிதம் இழிந்து ஆண்மையாவதில் பெருமைப்பட்ட என் கவிதை சாயம்போன அந்த நாட்களை வெறுக்கிறேன். ஆணை/பெண்ணை தாண்டி மனிதம் அடைதலே விடுதலை. கைகொடுக்கிற தோழி/தோழரால் மீட்கப்படுகிறதே பாக்கியம். . My hands stained only by the tears of some women; I hate my bleached poetry disdaining the human praising the man; transcending gender to reach the human, that is freedom; to be rescued by generous men and women, that is glorious. . மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன் ஆனால் எப்போதும் வாழ்ந்தேன் நல்ல கவிதையாய். போர்க்களம் என்மீது இறங்கியபோதும் சிங்களத்து தோழரை தோழியரை முஸ்லிம் சகோதரரை சகோதரியைக் கேளுங்கள். எப்பொழுதும் மனிதனாகவே முயன்றேன் அதுவே நான் எழுதிய நல்ல கவிதை. தலை பணியாது வாழும் ஆசையை இறுகப் பற்றுதலே எனது கவிதை. . Terrible poetry I have written at times; but always I have lived, a good poem; ask my Sinhalese friends, my Muslim brothers and sisters, when war descended on me, I tried to be human; that, then, is my best poem. To stand straight; embrace the love of life, that is my poetry.
 24. மீண்டும் சந்திப்பதில் என் பழைய தோழ தோழியர்கள் Justin, நிழலி, suvy, புரட்சிகர தமிழ்தேசியன், uthayakumar, goshan_che, shanthyபோன்றவர்களின் மகிழ்ச்சி மனசை நெகிழச் செய்கிறது. நேரம் வாய்க்கும்போதெல்லாம் யாழ்கழம் வந்து நண்பர்களை சந்திப்பது கொண்டாட்டம்தானே. மீண்டும் நன்றி தோழ தோழர்களே
 25. வாழிய சென்னை - ஜெயபாலன் . மீண்டும் ஊரடங்கு. கொலம்பசுகள் கிராமங்களைத் தேடி கப்பற் பாய்களை விரித்தனர். ஏனையோர் கான்கிரீட் பொந்துகளுள். கொரோனாவையும் காவலரையும் தவிர வீதிகளில் யாருமில்லை என்கிறார்கள். மாலைக் கருக்கலில் நிழற்சாலைகளூடு பெசன்ற்நகரை சுற்றுகிற நான்கூட மொட்டைமாடியில் எட்டுப் போட்டபடி. ஜப்பான் குண்டுவீச்சுப் பீதியில் கூட சென்னை இப்படி முடங்கியதில்லையே. . கீழே தெருவில் வெண் பூஞ்சிரிப்பை இழக்கிற வேம்பு பிஞ்சுகளால் நிறைகிற அழகை பறவைகள் பார்த்துச் செல்கின்றன. சாலை ஓர மரங்களின்மீது குச்சியோடு காகங்கள் பறக்க கிளர்ச்சியடைகிற ஆண் குயில் ”கூடு கட்டி முடியப்போகுது வாடி”யென கூவி கூவி தன் துணையை அழைக்குது. ”நீ வாயால கூடுகட்டுவாய்?” என சிடு சிடுத்த பெட்டைக் குயிலை யாசிக்கும் ஆண் குயிலின் பாடல் மொட்டை மாடியில் நிற்கிற என் நெஞ்சையே தைக்குதே. . வாழ்வு கடல் போன்ற ஓயாத புத்துயிர்ப்பு. இது ஆறு குளங்களை தின்கிற கோடைதான் எனினும் கடல் ஒருபோதும் அஞ்சுவதில்லை. ஆயிரம் காட்டுத் தீகளும் அணைய சாம்பலில் பூத்துக் குலுங்கும் புல்வெளிபோன்ற இந்த மாநகரமும் வலியது. அது ஒருபோதும் புலம்புவதில்லை. . ”என் காற்றும் மண்ணும் தூய்மையாகிவிட்டது சிட்டுக் குருவிகளே மீண்டும் வாருங்கள்” என அந்த மாநகரம் பாடுகிறது.. -2021
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.