அப்படி எல்லாம் சொல்ல முடியாது Sir. அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படத்தில் பாரதியை, ஶ்ரீதர் அந்தப் பாடு படுத்தியிருப்பாரே.
ஆனந்தஜோதி திரைப்படத்துக்கு கண்ணதாசன் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்றொரு பாடலை எழுதியிருந்தார். கண்ணதாசனை காணும் போதோ பேனில் பேசும் போதோ இந்தப் பாடலை பிரமிளா (தேவிகா) பாடத் தொடங்கிவிடுவார் என கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.
தேவிகாவை கடற்கரையில் நடக்க விட்டு சிவாஜி பின்னால், “நடையா இது நடையா..” என்று பாடிக் கொண்டு வருவார். பாடலில், “இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது” என்றொரு வரி இருக்கிறது. தேவிகாவின் இடையைப் பார்தத பின்னும் கண்ணதாசன் இப்படி ஒரு வரியை ஏன் சேர்த்தார் என்பது தெரியவில்லை.
“எம்ஜிஆர் படங்களில் நடிப்பதற்கு பல அழைப்புகள் வந்தன. சிலர் என்னை விடவில்லை” என்று ஒரு பேட்டியில் தேவிகா சொல்லியிருக்கிறார்.
பத்மினி,சாவித்திரி,சரோஜாதேவி,தேவிகா,விஜயகுமாரி என்று ஒரு சில நடிகைகளே அப்போது முன்ணணியில் இருந்தார்கள். இதில் சாவித்திரி கொஞ்சம் உடம்பு போட்டுவிட்டார்.பத்மினி திருமணம் முடிந்து அமெரிக்கா போய்விட்டார். எஸ்எஸ்ஆரின் மனைவியான விஜயகுமாரியோடுஜோடி சேர்ந்து நடிக்க எம்ஜிஆர், சிவாஜி இருவரும் விரும்பவில்லை. சரோஜாதேவி எம்ஜிஆர் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜி, தேவிகாவை தன் பக்கம் இணைத்துக் கொண்டார்.
கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி திரைப்படத்தில் தேவிகாவுடன் கமலஹாசனும் நடித்திருப்பார்.
தேவிகா நடித்த படங்களில் எனக்குப் பிடித்த இன்னுமொரு படம், வாழ்க்கைப் படகு.