Everything posted by Kavi arunasalam
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
- கருத்துப்படம் 13.03.2026
From the album: கிறுக்கல்கள்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
- வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
- கருத்துப்படம் 12.03.2026
From the album: கிறுக்கல்கள்
- வீதியோரம்.
அண்ணைதான் வீட்டிலே சமையலோ?😉 தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்- யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!
- கருத்துப்படம் 11.03.2026
From the album: கிறுக்கல்கள்
- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?” தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன். “பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை எனக்குத் தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் போவினம். பவுண் தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.” நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான். இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப் பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த தாலிக்கொடியைக் காட்டினார். “இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான். “சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார். அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. “மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம். சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய. அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன். அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன். யேர்மனிக்குத் திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது. மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம். “நல்ல வடிவான மோதிரம்,” என்றாள். கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா? அந்தச் சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன். “கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள். அடுத்த நாள் முடிவு தெரிந்தது. மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே. வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் வந்தபின்னே அது தாழைமரம் அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது. அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது. என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா? “விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும் முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.” அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.” மோதிரம் வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில், “Goods once sold can be exchanged only” என்று இருந்தது. ஆனால் நான் விடவில்லை. அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத் திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.” காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள். “நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.” எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன். மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்” “நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police. மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ” விஷயத்தைச் சொன்னேன். அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.- Havelock city
- Shoppes
- பொங்கல் 2026
- வசந்தம் வருகிறது
பரிந்துரைக்கு நன்றி Dr.Justin. நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் Fexofenadine யேர்மனியில் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் €32.90. நான் பாவிப்பது Cetirizine ADGC 10mg, விலை அதிகமில்லை €8.00. நீங்கள் குறிப்பிட்ட Centrizine உம் நான் பாவிக்கும் Cetirizineஉம் ஒன்றா எனத்தெரியவில்லை. மேலும் நாளுக்கு ஒரு தடவை MomeAllerg Nasal Spray பாவிக்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்கள்தான் சமாளித்துவிடுவேன். மீண்டும் உங்கள் தகவல்களுக்கு நன்றி!🙏- கறையான் புற்று
சந்தேகம் சின்னதாக இருந்தாலும் தொகை பெரிது. 35,000 யூரோ- கறையான் புற்று
நன்னிச்சோழன், இது யாழ் 28 அகவைக்காக எழுதியது. “வெண்புறா’ திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பயண அனுபவங்களை 2015இல் பொங்கு தமிழில் எழுதியிருந்தேன். இப்பொழுது அந்தத் தளம் இல்லை. கிருபன் அவற்றை யாழ் இணையத்தில் பதிந்து வைத்திருக்கின்றார். அதற்கான லிங்கை கீழை இணைத்திருக்கின்கேன்- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தமிழ்நாட்டில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விஷயம் ஒரு குடும்பப் பிரச்சினை. இதைப் பற்றி கருத்து சொல்லும்போது சில சமநிலைப் பார்வைகள் இருக்க வேண்டும். நேரடியாக சட்டம் அல்லது வன்முறை போன்ற பெரிய பிரச்சினையாக இல்லையெனில், ஒரு கணவன்,மனைவி இடையேயான பிரச்சினை பொதுவாக தனிப்பட்ட விஷயம். பொதுமக்கள் முன்னால் அதை வெளிப்படுத்துவது அழகல்ல.. அதனால் பலர்,குடும்ப விஷயம் தனிப்பட்டதாக இருக்க வேண்டும், என்று நினைப்பது இயல்பானது. விஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கலாம். விஜய் தற்போது அரசியலில் இருக்கிறார். அதனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை கூட அரசியல் விவாதமாக மாறுகிறது அல்லது அவரது எதிரிகளால் மாற்றப்படுகிறது. பொதுவாக மக்கள், தலைவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விஷயம் இல்லை. பல தலைவர்களுக்கும் இது நடந்திருக்கிறது. உண்மையில் சங்கீதாவுக்குப் பிரச்சினை இருந்தால் அதை வெளிப்படுத்த அவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தேர்தல் நேரம் போன்ற அரசியல் சூழலில் பொது வெளியில் இதை கொண்டுவருவது அரசியல் தாக்கமா? அல்லது ஒரு பழிவாங்கலா? இன்றைய காலத்தில், சமூக வலைத்தளங்கள் ஒரு விஷயத்தை விரைவாக பெரிதாக்கிவிடும். உண்மை, வதந்தி, ஊகம் எல்லாம் இரண்டரக் கலந்து போய்விடும்.அதனால் வெளியில் வரும் தகவல்களை முழுமையாக உண்மை என்று உடனே நம்பாமல் பார்த்துக் கொள்வது நல்லது.குடும்பப் பிரச்சினைகள் பொதுவாக தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படுவதுதான் சிறந்தது. ஆனால், ஒருவர் பெரிய பொது நபராக இருந்தால் அது பொதுவாக பேசப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இப்படி இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் ஒருவரை மட்டும் குற்றம் சொல்லாமல் இரு தரப்பையும் புரிந்து கொள்ள முயற்சிப்பது தான் சரியான அணுகுமுறை. விஜய் சினிமாவில் இருந்தபோது அவர் ஒரு நட்சத்திரம் மட்டுமே. ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. கமலஹாசனைப் பார்த்தால், அவரது குடும்பப் பிரச்சினை எப்படி என்பது பலருக்குத் தெரியும். அரசியலில் அவர் ஈடுபட்ட போது அவை பேசப்பட்டன. ஆனால் இன்று அது பேசு பொருளாக இல்லை. அவரது அரசியல் ஒரு மையத்துக்குள்ளே அடங்கி விட்டதும் ஒரு காரணம். மற்றது அவர் திமுகவின் கைப்பிள்ளை. விஜய் இன்று அரசியலில் பலமான ஒரு இடத்திலேயே இருக்கிறார். அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இது புதிய விஷயம் இல்லை. பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பேசப்பட்டது. எம்ஜிஆர் பிரபலமான சினிமா நட்சத்திரம். பின்னர் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர். அவரது திருமணம், குடும்ப வாழ்க்கை, மலயாளி போன்றவை பல காலங்களில் அரசியல் விவாதமாக பேசப்பட்டன. அவர் முதலமைச்சர் ஆன பிறகு எல்லாமே காணாமல் போய்விட்டது. இதுவேதான் ஜெயலலிதாவுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, சோபன்பாபுவுடனான உறவு எல்லாம் பேசினார்கள். அவர் ஆட்சிக்கு வந்தபின் அவரை ‘இரும்பு மனுசி’ என்றார்கள். ‘அம்மா’ என்று காலிலும் விழுந்தார்கள். பெண்களுக்கான உரிமை இருக்கிறது. அவர்கள் No என்று சொன்னால் அது Noதான் என்ற நிலை இன்றிருக்கிறது. தனது உரிமைக்காகப் போராடுவது சங்கீதாவின் உரிமை. அவர், தனது மன உளைச்சலுக்கோ, விவாகரத்துக்கோ எப்போதே நீதி மன்றம் போயிருக்கலாம். ஆனால் காத்திருந்து, விஜயை வீழ்த்துவதற்கு எதிரிகளிடம் தேர்தல் நேரத்தில் ஒரு ஆயுதத்தை தூக்கிக் கொடுத்திருக்கின்றார். நிழலி குறிப்பிட்டது போல் 8% வாக்குகள்தான் விஜய்க்கு கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு அதைவிட மேலதிகமாகக் கிடைக்கும் என்பது எனது கணிப்பு.- அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
இது சங்கிகளுக்கு மட்டும்- கருத்துப்படம் 07.03.2026
From the album: கிறுக்கல்கள்
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
குமாரசாமி, கோசான் சொன்னது சரிதான். சம்பிராதய முறைப்படியான திருமணம் சிறீலங்காவில் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு, எனது தந்தை இறந்தது 1962இல். அப்பொழுது பென்ஷனுக்கு விண்ணப்பித்த பொழுது, திருமணம் சம்பிராதய முறைப்படி நடந்தது என்றே குறிப்பிட்டார்கள். ஐயரின் ஒப்புதலும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. அப்பொழுது (50-60 ஆண்டுகளுக்கு முன்னார்) பிறப்புப் பதிவில் பெற்றோர்கள் திருமணமானவர்களா? பதிவுத் திருமணமா? சம்பிராதயத் திருமணமா? என்ற கேள்வி இருந்தது. இப்பொழுதும் விண்ணப்பப்படிவத்தில் அப்படியான கேள்வி இருக்கிறதா தெரியவில்லை. சம்பிராதயத் திருமணமானாலும் பதிவுத் திருமணத்தில் எப்பொழுதும் சிக்கலில்லை.- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
அறுபதை அறுபது வெல்லுமா முடிவிலே?😊- வசந்தம் வருகிறது
suvy , ஊசி போட்டுக் கொள்வது பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரிதான். எனது குடும்ப வைத்தியரிடம் இதைப்பற்றி கதைத்திருக்கின்றேன். எனக்குள்ளது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் ஒவ்வாமை. ஒன்றில் இருந்து இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். ஊசி போட்டுக் கொள்வதால் ( மிகச் சிறிய அளவில் அந்த மகரந்தப் புரதம் (allergen) உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துதல்) உடல் மெதுவாக அதற்கு பழகி விடும். காலப்போக்கில் ஒவ்வாமைத் தாக்கம் குறையும். ஆனால் ஒரு தடவை ஊசி போடுவது போதும் என்றில்லை, 3-5 ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் போட வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆரம்பத்தில் போட்டுக் கொண்டேன். வேலை நிமித்தம் தொடர்ந்து ஊசி வைத்தியத்தை செய்யவில்லை. தற்காலிக நிவாரணமாக குளிசை போட்டுக் கொண்டேன். மூக்கடைப்பு ஏற்படும் போது Nasal Steroid Spray யும் பாவித்துக் கொள்வேன். அதுவும் பழகிவிட்டது. வீட்டில் ஒருதடவை தும்மினால், “ மனுசனுக்கு ஒவ்வாமை வந்து விட்டது. குளிசையைப் போட்டுட்டு படுக்கப் போய்விடுவான்” என்று எண்ணம் வர வீட்டு வேலைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. 😉- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
2009இல் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்களே- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
உண்மை, பொய் எல்லாம் எனக்கு சத்தியமாகத் தெரியாது யாயினி. வேறொன்றுமில்லை. பாடசாலைக்கால நினைவுகள் வந்தன. பாடசாலை செல்லும் போது ஒரு முதியவரை வீதியில் காண்பேன். மனநிலை சரியில்லாதவர். அவருக்கு அருகில் போய் அவரது பட்டப்பெயரைச் சொன்னால் போதும், அவர் கோபமாகிக் கத்தத் தொடங்கிவிடுவார். சில வேளைகளில் கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்து எறியத் தொடங்கிவிடுவார். அவரது கோபம் அடங்க கனநேரமாகும். பாடசாலை முடிந்து வரும் போது அவதானத்துடன்தான் அவரைக் கடந்து செல்வோம். தற்செயலாக அந்த மனிதர் எங்களை கண்டால் போதும், கெட்ட வார்த்தைகளுடன் எங்களைத் துரத்தத் தொடங்கிவிடுவார். காதில் விழும் அந்த வார்த்தைகளை கேட்டு ரசிப்போம். எங்களுக்கு அப்போது அது பகிடியாக இருக்கும். ஆனாலும் அவரை ஏதோ வகையில் துன்புறுத்தியிருக்கிறேன். அது ஒரு காலம். அரசியலிலும் அது வேலை செய்கிறது என்பது இப்போது தெரிகிறது. ரசிக்கிறேன்.- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
- கருத்துப்படம் 03.03.2026
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 13.03.2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.