Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. The Kerala story, படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் படத்துக்கு வந்த கண்டனங்கள் அதிகமாக இருந்ததால், அப்பொழுதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். இந்திப் படமான The Kerala Story ஐ இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது. படத்தில் நாயகர்களே இல்லை. நாயகிகள்தான் படம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். முஸ்லீம்களை இவ்வளவு தீவிரமாக வேறு எந்தப் படத்திலும் சித்தரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு நல்ல முஸ்லீமையும் படத்தில் காட்டுவதில்லை என்றே கதாசிரியர் தீர்மானித்து விட்டார் போலும். மதம் மாற்றும் பகுதிகளை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் செய்பவருக்கு, போதை மாத்திரை தருவது தொட்டு அவர்களை எப்படி சிறீலங்கா ஊடாக சிரியாவுக்கு கடத்துகிறார்கள் என்பதையும் விளக்கி இருக்கிறார்கள். ஒரு உண்மையான கதையை வைத்து படத்தை, எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் உள்ள சம்பவங்களில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ரமணி vs ரமணி புகழ் தேவதர்சினி இந்தப் படத்தில் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார். நகைச்சுவை நடிப்பில் மட்டுமே அவரைப் பார்த்துப் பழகிய கண்கள், இந்தப் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து ஆச்சரியத்தில் விரிகின்றன. வன்முறைகள் அதிகம். ஆனாலும் இறுதிவரை பார்க்க வைக்கிறது.
  2. நானும் படித்திருந்தேன். இவர் மட்டுமல்ல நேருவும் பயங்கரக் கில்லாடி
  3. காந்தி யப்பானுக்கு போயிருந்த போது எடுத்த படம். எதற்கு குளப்பம்? புதிதாக ஒன்றை இணைத்து விடுகிறேன்
  4. புங்கையூரான், புத்தர் கடவுள் இல்லை. ஒரு தத்துவவாதி. அவர் ஒரு இந்துவாக இருந்தும், “கடவுள் இல்லை. ஆன்மா இல்லை. மறு பிறப்பு இல்லை” என்று போதித்த ஒரு தத்துவவாதி. பின்னாளில் அவரையே கடவுள் ஆக்கி வழிபடத் தொடங்கி விட்டார்கள். சிறிலங்காவை சிங்கள பெளத்தர்களுக்கே, புத்தர் எழுதித்தந்து விட்டார் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்
  5. பத்திரிகைகளில் மட்டும் நல்ல நல்ல தலைப்பிடுகிறார்கள் என்ற நினைப்பு
  6. ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.
  7. முற்றவெளிக்கு வந்தாயிற்று. ஆகவே கொஞ்சம் இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம். ஒரு நிகழ்ச்சி, மண்டபத்துக்குள் நடைபெறுமாயின், அந்த மண்டபம் பாதுகாப்பானதா? ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், மக்கள் உடனடியாக வெளியேற வழிகள் இருக்கின்றனவா? போன்ற பல விடயங்கள் பற்றிய அவதானங்கள் மண்டப உரிமையாளரிடமே இருக்கின்றன. நிகழ்ச்சி ஒரு பொது வெளியில் நடைபெறுவதாயிருந்தால் அதற்கு யார் பொறுப்பாக இருக்க வேண்டும்? நான் இருக்கும் நாட்டில் இப்படியான நிகழ்ச்சிகள், பொது வெளியில் நடைபெறுவதாயின், அதற்கான பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டதன் பின்னாலேயே நிகழ்ச்சி நடத்துவதற்கு நகரசபை அனுமதி வழங்கும். தாயகத்தில் நகரசபைகள் இந்த விடயத்தில் நகராத சபைகள். ஒரு நடிகை வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு படத்தில் ஆடிய நடனம் பலரால் விரும்பிப் பார்க்கப் பட்டது. அவர் அந்த நடனத்தை வைத்தே பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார். அந்த நடனத்தைத்தான் முற்றவெளியில் ஆடப் போகிறார். நடனத்தைப் பார்க்க இளைஞர்கள் வரப் போகிறார்கள். அதில் சிலர் கூத்தடிக்கப் போகிறார்கள். இவற்றை எல்லாம் நகரசபையோ அல்லது மாநகரசபையோ கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாதா? அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்திருக்கக் கூடாதா? நாற்காலிக்கு நாண்டு கொண்டிருக்கும் அரசியல் தலைகள் ஆலோசனை தரக் கூடாதா? நிகழ்ச்சியில் குழப்பம் வந்தபின் எல்லோரும் உடனடியாக கைகளை நீட்டியது நிகழ்ச்சி நடத்தியவரை நோக்கித்தான். இளைஞர்கள் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற பாணியில்தான் செய்திகள் வெளியிடப்பட்டன. இதற்கிடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அந்தக் கேவலத்தைச் செய்தவர்களைக் கண்டு பிடித்து சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கத் தெரியாவர்கள், குற்றத்தை இலகுவாக மற்றவர் மேலே போட்டுவிட்டு பேசாமல் இருந்து விட்டார்கள். மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நின்று புலம்புவது புலம் பெயர்ந்தவர். வெள்ளை, பட்டு வேட்டிகள் அழுக்குப் படாமல் தங்கள் பாட்டில் அரசியல் பேசப் போய்விட்டார்கள். இத்தனைக்கும் நிகழ்ச்சி இடையில் தடைப் பட்டாலும் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அந்தத் தகவலை தென்னிந்திய ஊடகங்களில் இருந்துதான் என்னால் அறிய முடிந்தது. இதை எழுதுகின்ற போது இந்த ஒரு செய்தியையும் பதிந்து விடுகிறேன். யேர்மனியில் நான் வாழும் நகரம் ஸ்வேபிஸ் ஹால் என்று ஏற்கனவே அறியத் தந்திருக்கிறேன். இந்த நகரத்தில் இப்பொழுது தமிழர்களுக்கு நிகழ்ச்சிகள் (கல்யாணம், பிறந்தநாள்,..) நடத்துவதற்கு யாருமே மண்டபம் தருவதில்லை. காரணம் நாங்கள் அப்படி.
  8. படத்துக்கு நல்ல விமர்சனங்கள்தான் கிடைத்திருக்கிறது. பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்.
  9. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அதுபோல்தான்.
  10. நான் அப்படி நினைக்கவில்லை ஈழப்பிரியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.