-
Posts
2405 -
Joined
-
Last visited
-
Days Won
49
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kavi arunasalam
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
சுமேரியர், வேதநாயகம் தபேந்திரன் புலத்தில் உள்ளவர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறார் கவனித்தீர்களா? குறிப்பாக 09,10,11 என்று இலக்கங்களில் உள்ள வரிகள் -
அன்று நண்பர்கள் வட்டத்தில் ஒருத்தனை நன்றாக ஏற்றிப் பேசி ஏதாவது செய்யச் சொன்னால் அவனிடம் இருந்து வரும் பதில், ‘பப்பா மரத்திலை ஏத்தாமல் சும்மா இருடா” என்றிருக்கும்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
-
நல்லவேளை உங்கள் ஆடைக்குள் மசுக்குட்டி இல்லை. உங்கள் அனுபவம் இனிதானது. அதைச் சொன்ன விதம் அழகு. கண்ணதாசன் கவிதையில் இருந்து, “காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே….”
-
உண்மைதான் Justin. அதனால்தான் என்னவோ எங்கள் வீட்டில் கறி முருங்கை வளர்க்கவில்லை. ஆனாலும் எப்படியோ எங்கள் வீட்டு முள் முருங்கையில் மயிரக்கொட்டிகள் குடியேறிவிட்டன. கறி முருங்கையில் அதிகளவு மயிர்கொட்டிகள் இருந்தன என்பதால், முருங்கை இலை சுண்டலை நான் நீண்ட காலங்கள் தவிர்ததிருந்தேன் nochchi, காகங்கள் வந்திருக்கின்றன
-
ரெக்கை கட்டிப் பறக்குதடீ...: T. கோபிசங்கர்
Kavi arunasalam replied to நிழலி's topic in சமூகவலை உலகம்
அதேபோல் பரு.மருதடியில் ஒரு சைக்கிள் திருத்தும் கடை இருந்தது. அந்தக் கடைக்குப் பெயர் NNGO சைக்கிள் திருத்தும் கடை. அதன் உரிமையாளர் மற்றவர்களோடு உரையாடும் போது “என்னங்கோ சொன்னனீங்கள்?” என்று கேட்பார். அவர் அடிக்கடி ‘என்னங்கோ’ என்ற வார்த்தையை உச்சரிப்பதால் அவரை அவரது நண்பர்கள் ‘என்னங்கோ’ என்று அழைக்க அவரும் தன் கடைக்கு ‘என்னங்கோ’ என்று பெயரை வைத்து விட்டார். சைக்கிளை வைத்து மிகவும் சுவையாக எழுதிய Dr.T.கோபிசங்கர் எனக்கு பலவற்றை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது உள்ள Dr.T.கோபிசங்கரின் மனநிலையில் முதலாளி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலில் உள்ள சில வரிகளைத் தந்து வைக்கிறேன் பெண்-சைக்கிள் ஓட்டும் ஆசை மச்சான் சாலை நமது இல்லை மச்சான் சரியா போங்க இல்லையின்னா முதுகு வீங்கி போகும் ஆண்- புளி மூட்டை போல நீயும் பின்னாலே ஏறி வந்தா எளிதாக சைக்கிள் ஓட்ட முடியுமா? -
முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும். அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள். அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது ‘பிறன்மனை நோக்காதே’ என்று மணமகனுக்கு எச்சரித்தது. இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் “உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும்” என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்து விட்டிருக்கிறார்கள். இதை உணர்த்துவதற்காகத்தான் முள் முருங்கையை அன்று மணப் பந்தலில் மணப்பெண்ணின் தந்தைமார்கள் நட்டு வைத்தார்கள். முள்முருங்கை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என்னவோ மயிர்கொட்டி (மசுக்குட்டி)தான். இளவேனிற் காலத்தில் முள்முருங்கையை மயிர்கொட்டிகள் கூட்டம் கூட்டமாக பெரிதாக ஆக்கிரமித்திருக்கும். வெயில் ஏற ஏற மரத்தின்நிழற்பகுதிகளைத்தேடி அவை ஊர்வலமாக போக ஆரம்பிக்கும். எந்த எந்தக் கிளைகளில் அவை கூடி நிற்கின்றனவோ அவற்றிற்கு கீழேநிலத்தில் காவோலைகளைப் போட்டுக் கொளுத்தி விடுவார்கள். வெப்பம் தாளாமல் மரத்தின் மேலே இருந்து ஒவ்வொன்றாகநெருப்பிலே விழுந்து பொசுங்கி சுருண்டு போய் செத்துப் போயிருக்கும். அந்த நிலையில் அவற்றைப் பார்க்கும் போது சின்னஇறால்களை எண்ணெய்யில் பொரித்த காட்சி எனக்குள் வந்து நிற்கும். இன்றைய காலநிலை மாற்றத்தால் யேர்மனியிலும் இந்த மயிர் கொட்டிகள் மரங்களில் ஊர்வலம் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த மயிர்கொட்டிகள் அவர்களுக்குப் புதிது. 2019 அளவில் மயிர்க் கொட்டிகள் பற்றிய முதல் எச்சரிக்கையை யேர்மனிய சுகாதாரத்துறையும்வனத்துறையும் கூட்டாக விடுத்திருந்தன. பின்னாளில் வந்த கொரோனா அலையில் மயிர்க் கொட்டிகளைப் பற்றி அதிகமாகப்பேசப்படவில்லை. இப்பொழுது கொரோனாக் கெடுபிடிகள் முற்றாகத் தளர்ந்த நிலை. இளவேனிற் காலம் ஆரம்பித்த நேரம். மீண்டும்மயிர்கொட்டிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். “ஒரு மயிர்க் கொட்டியில் ஏறக்குறைய 600,000 எரிச்சலூட்டுகிற ஒருவகை நச்சுத் தன்மை கொண்ட மயிர்கள் இருக்கின்றன. சிறிதாக வீசும் காற்றே மயிர்க் கொட்டிகளின் மெல்லிய மயிர்களை நூறு மீட்டர் வரை கொண்டு செல்லக் கூடியது. மயிர் கொட்டிகளின் மயிர்கள் முகம், கைகள் மற்றும் கால்கள் போன்ற ஆடைகளால் மறைக்கப்படாத உடல் பகுதிகளையே அதிகம்பாதிக்கிறது, நச்சு முடிகள் உள்ளிழுக்கப்பட்டால், அவை தொண்டை மற்றும் காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மயிர்க் கொட்டிகளின் பழைய கூடுகளால் வளர்ப்பு நாய்கள் உட்பட காட்டுப்பன்றி, மான், நரி உள்ளிட்ட வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன” என்று அறிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய யேர்மனியச் செய்திகளைக் கேட்கையில், அன்று இளவேனிற் காலைகளில் பாடசாலைக்கு சைக்கிளில் ஒழுங்கையூடாகப்பயணிக்கும் போது இலைகளில் இருந்து நூல் விட்டு தொங்கிக் கொண்டிருந்த மயிர் க் கொட்டிகள் ஊடாக வளைந்து வளைந்துசைக்கிள் ஓட்டிய சாமர்த்தியங்கள் நினைவில் வந்து மனது இனிக்கிறது.
-
அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்கிப் பயணிக்கும் போது சாரதி லோகேஸ் ஒரு கோயிலுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினார். “சீதை அம்மன் கோயிலை இந்திய அரசின் உதவியுடன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் புதுசாக்கி இருக்கினம். கும்பிட்டு விட்டு வாறன்” என்று சொன்னவர் கோயிலுக்குள் சென்று விட்டார். என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் கோயிலுக்குள் சென்றேன். இராமாயணத்தை சுருக்கமாக சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். குரங்குகள் ஆங்காங்கே காணக் கிடைத்தன. பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் அவைகளுக்கு உணவாக இருந்தன. கோவிலுக்கு வெளியே நதி ஓடிக் கொண்டிருந்து. நதிக்குப் பக்கத்தில் இருந்த கற்களில் ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தன. அதில் ஒன்றை தங்க நிறத்தில் வட்டமாக ஏறக்குறைய ஒரு பாதம் போல் உரு மாற்றி இருந்தார்கள். மரம் ஒன்றில் பக்தர்களின் வேண்டுதல்கள் முடிச்சுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. “இந்த மரத்தின் கீழ்தான் சீதை(அம்மன்) தங்கினவ. வேண்டுதல்களை எழுதி இந்த சீதை அம்மன் மரத்தில் கட்டினால் அது பலிக்கும்” என்னருகே வந்த லோகேஸ் பக்தியோடு சொன்னார். “நீங்கள் கட்டவில்லையா? “ என்றேன். “பொதுவா பிள்ளை வரம் வேண்டித்தான் முடிச்சுகளைக் கட்டுறவையள். எனக்கு இன்னும் கல்யாணமே நடக்க இல்லையே” லோகேஸ் சொன்னபோது, பிள்ளை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.’ “அந்த நதியிலேதான் சீதை குளித்தவ. அந்தப் பள்ளங்களைப் பாத்தீங்களே? அது அனுமாரின் காலடிகள்” “அனுமார் காலடி ஒன்றுதானே இருக்கு” “அனுமார் பறந்து வந்து அந்த இடத்தில் குதிச்சதாலை தான் அங்கே பள்ளம் வந்திட்டுது” நான் மேற்கொண்டு லோகேஸிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் கண்டி நோக்கிப் பயணம். “இந்தச் சீதை அம்மன் கோவிலை முத்திரையா சிறீலங்கா வெளியிட்டிருக்கு. இங்கை இருந்து கல் எடுத்து இராமர் கோயிலில் பதிக்க அயோத்திக்கு அனுப்பி இருக்கினம்…..” வழி நெடுக லோகேஸ் சீதை அம்மன் கோயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான். ‘சலசல என அமைதியாக நீர் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழகான இடத்தை அசோக வனமாக்கி அதை பின்னர் கோயிலாக மாற்றி பலருக்கு மூளைச் சலவை செய்து பணம் பார்க்கிறார்கள்’ இப்படி ஒரு நினைப்பு எனக்குள் வந்தது. - கவி அருணாசலம்
-
யாழ் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இந்திரவிழா
Kavi arunasalam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஆத்தியடி, தம்பசெட்டி இரண்டுமே அப்போதில் இருந்தே புலோலி மேற்குதானே. அதுபோல் தும்பளை புலோலி கிழக்குப் பகுதியில் வருகிறது. இதில் ஆத்தியடியாரும் தம்பசெட்டியாரும் தங்கள் முகவரிகளைக் குறிப்பிடும் போது ஏனோ புலோலி என்று குறிப்பிடுவதில்லை. புலோலி என்பது ஒரு பரந்த பரப்பளவைக் கொண்டது. அதற்கு வடக்கு கடல் பகுதியாக இருக்கிறது. கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் ‘புல்எலிய’ என்ற என்ற சிங்களப் பெயர்தான் புலோலி எனபது மருவியதாக சொல்லப்படுகிறது. இத்தோடு விட்டு விடுவோம். சண்டைக்கு வந்து நிற்பார்கள். -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
-
மாப்பிள்ளைக்கு குடுத்தது ஒரு அறைதானே. ஆகவே சின்ன அறை வேண்டுமானால் கிடைக்கலாம். அது மாப்பிள்ளையின் சாமர்த்தியம். Dr.T.கோபிசங்கர் அனுபவித்து நன்றாக எழுதியிருக்கிறார். ஆக மொத்தத்தில் வீடுவரை உறவு.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அப்பிடி எண்டால் கிருபன் நல்ல ஆள் இல்லை எண்டு சொல்லுறீங்களோ? -
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
கட்டாயம் இல்லை. ஆனால் டிப்ஸ் தரும் போது இரு பக்கமும் ஒரு மன நிறைவு வருகிறது. யேர்மனியில் உணவகத்தில் பரிமாறுபவருக்கு பில்லில் ஒரு வீதம் டிப்ஸாகத் தருவது வழமை. அதாவது 100 யூரோவுக்கு சாப்பிட்டால் 10 யோரோ டிப்ஸ். உணவகங்கள்,சிகையலங்காரங்கள், துப்பரவுத் தறைகளில் பணியாற்றுபவர்கள் குறைந்த சம்பளத்தில் (மணித்தியாலத்துக்கு 12 யூரோக்கள்) பணிசெய்கிறார்கள். -
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
- 378 replies
-
- 10
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Kavi arunasalam replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
இது சரியான கேள்வி? -
யேர்மனி ஸ்ருட்கார்ட் நகரத்தில் 8.10.2022முதல் 7.5.2023வரை ‘அகம் புறம்’ எனும் தலைப்பில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு ஆவல் இருந்தும் கொரோனா கெடுபிடிகளால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் கண்காட்சி முடிந்து விடும் என்பதால் இப்போது போயிருந்தேன். உலகளாவிய ரீதியில் தமிழர்கள் வாழும் நாடுகள், தமிழ் மொழியைப் பற்றிய ஒரு சில ஆவணங்கள் மட்டுமே அங்கே இருந்தன. மற்றும்படி தமிழக சினிமா, தமிழகக் கடைகளின் பெயர்ப் பலகைகள், தமிழக திமு, திமுக தலைவர்கள், தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய சிறு குறிப்பு என தமிழ்நாடு பற்றிய தகவல்களைத் தவிர வேறெதுவும் பெரிதாக உலகத் தமிழர்களைப் பற்றி அங்கே எனக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக, ஈழத் தமிழர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் அங்கே காட்டப் படவில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று ஷோபா சக்தியின் இரு நூல்களை வைத்து அவரின் இடம் பெயர்வைப் பற்றிய ஒரு ஆவணப் படத்தையும், ஸ்ருட்கார்ட் நகரில் வாழும் ஒரு பெண் சொல்லும் அவரது இடம் பெயர்வைப் பற்றிய தகவல்களையும் ஒரு மூலையில் வைத்திருந்தார்கள். அந்த மூலையின் தரையில் “காதலிக்க நேரமில்லை” என்ற வாசகம் இருந்தது. அது தமிழ் எழுத்துக்களால் ஆன கோலம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் அதை புலம் பெயர்ந்த இருவரின் கதைகளுக்கு நடுவே ஏன் வைத்தார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. கண்காட்சியை சுற்றி வந்து வெளியேறும் வாசலில் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களும் விபரங்களும் புகைப்படங்களுடன் இருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த திவ்யா கார்த்திக், தமிழ் நாட்டில் உள்ள சில விடயங்களை புகைப்படங்களாகவும், பொருட்களாகவும், சிலைகளாகவும் காட்ட முயற்சித்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த யோகா புத்ரா, இவர் விடுதலைப் புலிகளின் பெரும் எதிர்ப்பாளர் மற்றும் யேர்மன்-தமிழ் மொழிபெயர்ப்பாளர் என அறியப் பட்டவர். இலங்கைத் தமிழர்கள் பற்றிச் சொல்வதற்கும் காண்பிப்பதற்கும் பல விடயங்கள் இருந்தும் தனது புலி எதிர்ப்பு கொள்கையை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் இருட்டடிப்புச் செய்திருக்கிறார். ‘அகம் புறம்’ என்று கண்காட்சிக்கு தலைப்பிட்டிருந்தார்கள். என்னால் அந்த இரண்டையும் அங்கே காணமுடியவில்லை. கடாரம் வென்ற, கங்கை கொண்டவர்களை மறந்தாலும் எங்கள் கண்முன்னே களம் ஆடிய ஈழத் தமிழர்களைப் பற்றி ஏதாவது காண்பித்திருக்கலாமே! சரி யோகா புத்ராவை விடுங்கள். தமிழ்க் கல்விக் கழகங்கள் வைத்து நடாத்துபவர்கள், தமிழீழ அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்களுக்கே ஆண்டு விழாக்களை நடாத்தி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் வெளியே வந்து வெளிநாட்டவர்களுக்கு பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே!