Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினரின் அமுக்கவெடிகளைப் பாய்ந்து கடந்து, சண்டை வந்தால் சண்டை பிடித்து, விழுப்புண்ணடைந்தோரைச் சுமந்து, வித்துடலாக வீழ்ந்தோரைச் சுமந்து, பெருந்தொலைவுவரை நடந்துதான் போர்க்களத்தைவிட்டு வெளியேறமுடியும். அப்போது முழங்காவிலில் இருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் மக்கள் தொடர்பகத்துக்கு வரப்போகும் பெற்றோரைக் காண வர ஒருநாள், சந்திக்க ஒரு நாள், மறுபடியும் போய்ச்சேர ஒரு நாள் என மூன்று முழு நாட்கள் பிடிக்கும். மூன்று நாட்களும் இரு போராளிகளின் பணியை முடியரசி வெற்றிடமாக விடமுடியாது. எனவே மாற்றிவிட ஆட்கள் வந்தனர். முறியடிப்பு அணியிலிருந்து வினோதா, திசையருவி, அகிலானி மூவரும் வந்தனர். இவர்கள் வந்தபின் அவர்கள் போயினர். பெற்றோரைக் கண்டனர். இதோ இன்று அவர்கள் திரும்பி வருகின்றனர். முடியரசி யின் அணியிலிருந்தும் வேறு அணிகளி லிருந்தும் பெற்றோரைக் காணச் சென்ற வர்கள் ஒரு அணியாக, தேடுதல் செய்தபடி கொம்பனிப் பொறுப்பாளர் புகழரசியின் கட்டளை மையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் பகுதிக் கட்டளை அதிகாரி செங்கோல் அவர்களால் புகழரசிக்குச் சொல்லப்பட்டது. அந்த அணியின் கண்ணெட்டும் தொலைவில் புகழரசியின் கட்டளை மையம் தெரிந்த வேளை சிங்களப் படையினரின் தாக்குதலை அந்த அணி சந்தித்தது. போர் முன்னரங்கின் பின்புறம், கட்டளை மையத்தின் பின்புறம் சண்டை தொடங்கியது. முன்னணி அவதானிப்பு நிலையின் முன்புறம் ஒரு குவியலாகச் சிங்களப் படையினர் வருவதை அதில் நின்றவர்கள் கண்டனர். சண்டையைத் தொடங்கினர். வினோதாவுக்கு இதுவே முதற்சண்டை.(இச் சண்டையின் முழுமையான விரிப்பு 2008.07.25 அன்றைய ‘உள்ளிருந்து ஒரு குரல்’ இல் உள்ளது.)பின்புறமும் முன்புறமும் சுற்றிவளைத்து சிங்களப் படையினர் செய்த முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் புகழரசியின் வழிநடத்தலில் அணியின் முன்னணியில் திசைகாட்டி யுடன் நகர்ந்த முடியரசியும் கூடச் சென்ற ஆண் போராளி பாசறையும் சிங்களப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைய, இப்போது அணியின் முன்னணியில் திசைகாட்டியோடு வினோதா. தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை ஒருபோதும் நேரடியாகக் கண்டிராத வினோதாவை, அவரைப் பற்றிய பாடல் ஒன்று வழிநடத்தியது. “அண்ணன் சொன்ன வேதம் என்ன சொல்லு சொல்லு சொல்லு சொல்லு முயன்றிடு பாதைகள் எப்போதும் திறக்கும் இல்லையேல் அவைகள் மூடியே கிடக்கும் என்றார் இன்னும் அதிகமுண்டு. தூரமென்று ஏதுமில்லை பாரம் என்ற சொல்லே இல்லை ஏலாதென்றால் சேரும் தொல்லை போராடென்றான் போராடென்றான்” (நன்றி – பாடல் தமிழவள்) வினோதாவை வழிநடத்திய பாடல் எல்லோரையும் வழிநடத்தட்டும். கோயில் மோட்டையில் போர் முன்னரங்கை இளங்கிளையின் கொம்பனி அமைத்து நின்ற காலம் இது. செவிப் புலனுக்கும் எட்டாத இடைவெளிகளோடு, இயற்கை மறைப்புகளைப் பயன்படுத்தி, குளிப்பு, முழுக்கை அறவே மறந்து, உடன் சமைத்த உணவு பற்றிய சிந்தனை இன்றி இளங்கிளையின் கொம்பனி காவல் நின்றது. முன்னே பெயர் சூட்டப்பட்ட சிங்களப் படைப்பிரிவுகள், பின்னே பெயர் சூடாத அமுக்கவெடி தாங்கிய சிங்களப் படையினர் என்று எந்நேரமும் தீ மூளக்கூடிய சமர்க்களம் அது. சிறிலங்காவின் வரை படத்தில் கோயில்மோட்டை என்று குறிப்பிடப்படும் அவ்வூருக்குத் தமிழீழப் போர் வீரர்கள் சூட்டிய செல்லப் பெயர் கிளைமோர் மோட்டை. அந்தக் கோயில்மோட்டையில் முறியடிப்பு அணியாகக் கீதவாணியோடு வினோதா, செவ்விழி முதலானோர் நின்றனர். அன்று சுடரிசையின் பிளாட்டூனிலிருந்து இருவர் தமது பெற்றோரைக் காண்பதற்காக முழங்காவிலை நோக்கிய இடர் மிகு பயணத்தைத் தொடங்க இருந்தனர். போக வேண்டிய இருவரும் பிளாட்டூன் முதல்விக்கான காப்பரணில் நிற்பவர்கள். இவர்களை மாற்றிவிட வினோதாவும் செவ்விழியும் வந்தனர். வந்திறங்கியவர்களிடம் போகவேண்டியவர்கள் ஒரு தகவலைச் சொன்னார்கள். அன்று காலை அவர்களின் காப்பரணின் முன்புறம் அமுக்க வெடி ஒன்று கைப்பற்றப்பட்டதால், விழிப்போடு இருக்கும்படி எச்சரித்தனர். வந்தவுடனேயே வினோதா காவற்கடமையைப் பொறுப்பேற்றார். செவ்விழி வேறு சிலருடன் தண்ணீர் அள்ளிவரப் போய்விட்டார். வலம், இடம் உள்ள காப்பரண்களைப் பார்வையிடவோ, காப்பரண் முதல்விகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவோ நேரமிருக்கவில்லை. நின்று அவதானிக்கமுடியாத அடர்காடு அது நிலத்தில் இருந்தால் அடி மரங்களிடையே ஓரளவு கவனிக்கலாம். திறந்த அகழியைக் கொண்ட காவலரணின் முன்புறமாக சில மீற்றர்கள் முன்னே மரமறைவில் அமர்ந்து காவல் செய்த வினோதாவை சில சத்தங்கள் ஈர்த்தன. யார் யாரோ நடக்கும் ஓசை, சருகுகள் மிதிபடும் ஒலி, மொழி பிரித்தறிய முடியா ஆண் குரல்கள் எல்லாவற்றையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.தண்ணீர் அள்ளப் போனபோதும், திரும்பி வரும்போதும் தன்னோடு வந்த மூவரையும் மிக நீண்ட இடைவெளி விட்டே செவ்விழி கூட்டி வந்தார். முறியடிப்புப் பயிற்சி பெற்றவரல்லவா முன்னெச் சரிக்கையோடு செயற்பட்டார். திரும்பி வந்து சேர்ந்துவிட்டார். செவ்விழி வந்தவுடன் வினோதா புறப்பட வேண்டியிருந்தது. கண்ணிகளை விதைத்துவிட்டு நின்ற லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் நால்வரையும் பின்னரங்குக்குக் கூட்டிப் போய் விட வேண்டும். அந்த நால்வர், வினோதா, அணிமுதல்வி ஒருவர், போராளி ஒருவர் என ஏழு பேரும் செவ்விழி போய்வந்த பாதை வழியே புறப்பட்டனர். தலைக்கு மேலே சிங்களப் படையினர் ஏவிய எறிகணைகள் கூவியபடி கடந்தன. குறிப்பிட்டளவு இடைவெளி விட்டு நகர்ந்த அணியின் நான்காவதாக வினோதா, பின்னால் அணிமுதல்வி, பின்னால் ஏனையோர் போய்க்கொண்டிருக்க திடீரென ஏறத்தாழ ஐம்பது (50) மீற்றர்கள் முன்னால் ஒரு வெடிப்பொலி எழ, தொடர்ந்து புழுதி, கிளைகள், இலைகள் எல்லாம் சேர்ந்து எழுந்தன. ஒரு எறிகணை விழுந்து வெடிப்பதாக உணர்ந்து கொண்ட வினோதா மரமொன்றோடு காப்பெடுத்தார். கண நேர இடைவெளியில் ஏறத்தாழ இருபத்தைந்து (25) மீற்றர்கள் முன்னால் மீண்டும் வெடிப்பொலி, புழுதி, கிளைகள், இலைகள் எழ, பரணி வித்துடலாக வீழ்வது தெரிந்தது. புழுதி சற்று அடங்கியபோது முன்னாலும் எவரையும் காணோம். பின்னாலும் காணோம். வினோதா தனித்து நின்றார். வெடிப்பொலி எழுந்த திசையில் ஆண்கள் சிலரின் நடமாட்டத்தைக் கண்டார். நம்மவர்கள் என்ற நினைவில் சில அடிகள் முன்னே வைக்கவும் இவரை நோக்கிப் பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனால் அவர்கள் சுடத் தொடங்கினர்.வெடிப்பொலிகளுக்கான மூலம் அமுக்க வெடிகள் என்பதும், முன்னே நிற்பது யார் என்பதும் இப்போது வினோதாவுக்கு விளங்கியது. ஏனையவர் களுக்கு இவ்விடயம் நேர காலத்துக்கே விளங்கியதால், அவர்கள் பறந்துவிட்டனர் என்பதும் விளங்கியது. நான்காம் இலக்கப் பாதணியை அணிகின்ற, நான்கரை அடிகள் உயரம் கொண்ட வினோதாவின் ஒல்லியான உருவைக் கண்ட சிங்களப் படையினர் அவரைக் கடுகென எண்ணி, வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்குத் தன் காரத்தைக் காட்டிய வினோதா, படையினரைச் சுட்டபடியே தான் நின்ற காப்பரணுக்கு வந்து சேர்ந்தார். வினோதாவின் வரவுக்காகக் காத்திருந்த சுடரிசை அமுக்கவெடித் தாக்குதல் நடந்த இடத்தைத் தேடுதல் செய்ய இவரோடு மருதஎழிலையும் ஒரு ஆண் போராளியையும் அனுப்பினார். தேடுதலின் போதான நேரடி மோதலில் மருதஎழில் விழுப்புண்ணேற்றார். அவரின் சுடுகலனை ஆண் போராளி எடுத்துக்கொள்ள, மருதஎழிலைக் காவும் பணி வினோதாவுக்கே. குருவி தலையில் பனங்காய்.உருவில் தன்னில் பெரியவரான மருதஎழிலைக் காவுவதும், சிங்களப் படையினரைச் சுடுவதும், காவுவதும் சுடுவதுமாக அவரைக் காப்பரணுக்குக் கொண்டு சேர்த்தார் வினோதா. இப்போது மாலையாகிவிட்டது. நாடு இருளமுன்னரே இருண்டுவிடுகின்ற காட்டினுள்ளே தொடங்கியது வினோதாவின் அடுத்த பணி. உடனடியாகத் தயார்ப்படுத்தப்பட்ட காவுபடுக்கையில் மருதஎழிலை ஏற்றி மூன்று ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமாகச் சுமந்து பின்னே வர, கப்டன் அறிவுமலர் வானொலிக் கருவியூடாக போய்ச் சேரவேண்டிய இடத்தில் உள்ளோருடனும் வழியனுப்பிய இடத்தில் உள்ளோருடனும் தொடர்பைப் பேணியபடி வர, ஒரு திசைகாட்டியின் உதவியுடன் அணியை வழி நடத்தியபடி முன்னே போய்க்கொண்டிருந்தார் வினோதா. மாலை 5.30 மணியளவில் தொடங்கிய அவர்களின் நீண்ட பயணம், தொலைதூர இலக்கை அடைந்தபோது விடிகாலை 3.30 மணியாகிவிட்டிருந்தது. பெற்றோரைக் காணச் சென்ற இருவரும் தம் காப்பரணுக்குத் திரும்பியதும், செவ்விழியும் வினோதாவும் மீளவும் தமதணிக்குச் சென்றனர். அவர்களுக்காக அங்கே பல பணிகள் காத்திருக்கின்றன. நினைவுகளுடன்:- போராளி மலைமகள். ஈழநாதம் (27 மார்கழி 2008) இதழிலிருந்து….. https://pulikalinkuralradio.com/archives/10462
  2. மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள். விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது. காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும். வலப்புறம் வீதியை விட்டு, வீதியின் இடதுபுறம் ஒரு காப்பரண், அதற்கு இடப்புறமாக இன்னொரு காப்பரண் – இந்தக் காப்பரண் அமைவிடத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தவாறு ஒரு சிறு அணை வடிவிலான உயரமான நிலப்பரப்பு இருந்தது-, அதற்கு இடப்புறம் ஒரு காப்பரண் – இதில் கொம்பனியின் மேலாளர் தமிழ்தென்றல் வானலைக் கருவித் தொகுதியோடும் ஒரு பீ.கே. எல்.எம்.ஜி அணியோடும் போர் முன்னரங்கிலேயே நின்றார்-, இதற்கு சற்று இடப்புறத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தபடி ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அணை வடிவிலான நிலப்பரப்பானது முன்னரங்கின் சற்றுப் பின்புறமாக இடது புறமாகத் திரும்பி அருவியைக் குறுக்கறுத்துப்போனது. ஆற்றுக்கு இடப்புறம் இரு காப்பரண்கள், தொங்கலில் செங்கயலும் முடியரசியும் நின்றனர். மேலே உயர்ந்த சோலைக்காடு. நிலமட்டத்தோடு நெருக்கமான பற்றைக்காடு. எழும்பி நின்றாலும் எதிரியைக் கண்காணிக்க முடியாது. நிலமட்டத்தோடு பார்த்தாலும் ஒன்றும் தெரியாது. குனிய ஐந்து நிமிடங்கள், குனிந்தவர்கள் நிமிர பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். கொழுக்கி வடிவில் அமைந்த முட்கள் ஆட்களை அசையவிடாமல் பிடித்து வைத்திருக்கும். தட்டிவிட முடியாது. ஒவ்வொரு முட்களாகக் கழற்றித்தான் நிமிரலாம். சண்டை பிடிப்பது ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. இந்த முட்களுடனான பிணக்கும் விலக்கும்தான் பெரிய வேலை அவர்களுக்கு. நாளாந்தம் சோறு, கறி வராது. ஐந்தாறு நாட்களுக்கொரு தடவை தரப்படுகின்ற உலர் உணவுகளைச் சுமந்தபடி காலை, மதியம், இரவு என்று தேடுதல் செய்தபடி அந்த அணி நின்றது. அன்று அவர்களுக்கான உணவுகளை எடுக்கப்போக வேண்டிய நாள் மூவர் தேடுதல் செய்தனர். இடையிலே அந்நியமான தடயங்களைக் கண்டுவிட்டு, அதைப் பின் தொடர்ந்தனர். ஆனால் இடையிலே அவற்றைக் காணவில்லை. இருண்டுவிட்டது. எனவே சாப்பாடு எடுக்கப்போகவில்லை. அன்று எவரும் சாப்பிடவில்லை. ஒருவரிடமும் சாப்பிட ஒன்றுமில்லை. மறுநாள் நால்வர் தேடுதல் செய்தபடி எடுத்துவரப் போயினர். மெல்ல மெல்ல நகர்ந்த அணி அந்த உயரமான நிலப்பகுதியருகே இருந்த வெளியில் இறங்க, அந்த உயரமான நிலப்பகுதித்தொடரின் மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் இவர்களைத் தாக்கத் தொடங்கினர். நேற்றைய தடயங்களுக்குரிய சிங்களப் படையினர் எங்காவது மறைத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அவர்கள் அந்த அணைத் தொடரை நெருங்கவே நீண்ட நேரமாகிவிட்டது. முதலாவதாகப் போன தமிழிசை அணையில் ஏற முற்பட, அதன் மறுபுறமாக மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் சுட, எதிர்பார்ப்புடனே போனதால் இவர்களும் சுட, சண்டை தொடங்கிவிட்டது. முன்னர் ஒரு சமரில் காலில் காயப்பட்டிருந்த தமிழிசை ஏறிய நிலையில் நின்று நிமிர்ந்து மேலே சுட, காயமடைந்த கால் சறுகி கீழே விழுந்துவிட்டார். விழுந்தகணமே எழும்பித் திரும்பவும் எதிரியின் ரவை தமிழிசையின் முதுகை உரசி, வானலைக் கருவியின் தொங்குபட்டியை அறுத்து, ரவைக்கூட்டுத் தூளியைக் கிழித்துச் சென்றது. அவர் குனிந்து வானலைக் கருவியை எடுப்பதற்குள் சிங்களப் படையினர் அவரை நெருங்க முயன்றனர். தோளில் காயம்பட்ட தமிழிசை நிமிர்ந்த வேகத்திலேயே சிங்களப் படையினரைச் சுட்டார். சிலர் காயமடைந்து விழ, தமிழிசை போர் முன்னரங்குக்கு, தனது காப்பரணுக்கு வந்துவிட்டார். சண்டை தொடங்கிய சத்தம் கேட்டவுடனேயே தமிழ்தென்றல் தன்னோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியை அந்த அணை வடிவிலான நிலத்தொடரை நோக்கி நகர்த்தினார். ஆனால் சுட முடியவில்லை. அதற்கு அப்புறம் இருப்பவர்களை இப்புறம் கீழே நின்று சுட்டால் குருவிக்குத்தான் படும். ஒரு எதிரிக்கும் படாது. எனவே அணைத்தொடரைக் கண்காணித்தபடி அவ்வணி மறைவாக நிலைகொண்டது. வீதியருகிலிருந்த காப்பரணில் நின்ற புலியரசி தனது காப்பரணின் பின்புறமாக அணைபோன்ற நிலத்தொடரை நோக்கித் தேடுதல் செய்தபடி ஒரு அணியோடு நகர்ந்தார். அவர்களை வானலையில் வழிநடத்தினார் தமிழ்தென்றல். அவர்களின் பின்புறமாக ஒரு கிளை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க முற்பட, ஆற்றின் மறுகரையில் சிங்களப் படையினர் நிற்பதைக்கண்டு அங்கு சண்டையைத் தொடக்கியது அவ்வணி. ஆற்றுக்கு அப்புறம் நின்ற சிங்களப் படையை பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் அடையாளங்கண்டு அவர்களும் சண்டையைத் தொடங்கினர். தம்மை நோக்கி இருபுறமும் தாக்குதல் வந்ததால் அவ்விடத்தில் மேலும் நிற்க முடியாத நிலை தோன்ற, சிங்களப் படையினர் தமது பகுதியை நோக்கி நகர முயன்றனர். பின்வாங்கும் முயற்சியில் அவர்கள் நகர்ந்த பாதைக்கு குறுக்கே இருந்தது தமிழ்தென்றலின் கட்டளை மையமான காப்பரண் – காயப்பட்ட சிங்களப் படையினர் கத்திக்கொண்டிருக்க அவர்களைச் சுமந்தபடி வந்த ஏனைய படையினரை நோக்கி தமிழ்தென்றலோடு நின்றவர்கள் தாக்கினர். எல்லாப்புறமும் அடிவிழ, வீதிப்புறமாக நகர்ந்து எமது முன்னரங்கைக் கடக்க அவர்கள் முயன்றனர். வீதியோரக் காப்பரணில் நின்ற புலியரசியின் அணி சண்டைக்கென அணை போன்ற உயரமான நிலத்தொடரை நோக்கிப் போனபோது, அக்காப்பரணில் சேரமலரின் அணியைத் தமிழ்தென்றல் விட்டிருந்தார். தம்மைக் கடக்க முயன்ற சிங்களப் படையினரைச் சேரமலரின் அணி போட்டுத் தள்ளியது. சிங்களப் படையினரில் சிலர் தமது பகுதியை நோக்கி ஓட, சிலர் மீளவும் எமது போர் முன்னரங்கின் பின்புறமாக ஓடினர். முற்றுகையிட வந்தவர்கள் இப்போது தப்பிப்போக வழியற்று, முற்றுகைக்குள் அகப்பட்டனர். புலியரசியோடு சண்டைக்குப் போனவர்களில் இசை என்ற ஆண் போராளி விழுப்புண்ணடைந்து காலில் முறிவு ஏற்பட்டதால், புலியரசியோடு தொடர்ந்து முன்னேறாமல், மேட்டு நிலத்தொடருக்கு அருகாக போர் முன்னரங்கின் பின்புறம் காட்டினுள் மறைந்து நின்றார். மேட்டு நிலத்தொடருக்கு மறுபுறம் நிற்கும் சிங்களப் படையினரின் குரல்கள் அவருக்குக் கேட்டுக் கொண்டிருந்தன. அவரின் தகவலுக்கமைய வழுத்திருத்தங்களுடன் எறிகணைகள் வீசப்பட்டன. தமிழ்தென்றலின் அணிக்கு உதவியாக லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினர் தமது 50 கலிபருடன் ஓடோடி வந்து, அணை போன்ற உயரமான பகுதியின் அடிவாரப் படையினரைத் தாக்கினர். மீண்டும் நிலைகுலைந்த சிங்களப் படையினர் சிதறிக் கலைந்தனர். இப்போது பி.ப.3.00 மணியாகிக் கொண்டிருந்தது. நேற்று முழுதும் சாப்பாடு, தண்ணீரில்லை. இன்றும் அதே நிலைமை. எல்லோர் நாக்குகளும் உலர்ந்துபோயின. ஆற்றுக்கு அப்பால் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணிப் போராளி யாழவனும் 2 ஆம் லெப். மாலதி படையணிப் போராளிகள் முடியரசியும் மதியழகியும் தேடுதல் செய்தபடி தண்ணீர் அள்ளுவதற்காக ஆற்றை நோக்கி நகர்ந்தனர். சண்டைக்குள் நிற்பவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டுமே. ஆற்றுக்குப் போவதற்கிடையில் சிங்களப் படையினரைக் கண்டு, எல்.எம்.ஜி.யால் வெளுத்து வாங்கினார்கள். ஐயாமாருக்கு அப்புறமும் அடி, இப்புறமும் அடி, உட்புறமும் அடி. திருப்பித் தாக்காமலேயே ஐயாமார் நடையைக் கட்டினர். காயப்பட்டவர்களைக் காவிக்கொண்டோ, கைவிட்டோ போய்ச் சேர்ந்தால் போதும் சாமி. யுத்தம் சரணம் கச்சாமி. இம்முறை சிங்களப் படையினர் தமது பகுதி நோக்கிப்போக முயற்சித்த பாதைக்குக் குறுக்கே இருந்தது செங்கயலின் காப்பரண். செங்கயலின் பக்கம் படையினர் போவதாக தமிழ்தென்றலுக்கு யாழவன் சொல்லிக் கொண்டிருந்தபோது சண்டைச்சத்தம் கேட்டது. ‘ஆள் என்ரை பக்கம்தான் வந்தவர். நல்லாக் குடுத்திருக்கிறன். திரும்பி ஓடுறார்” என்று செங்கயல் அறிவித்தார். செங்கயலுக்குச் சற்றுப் பின்னே 2 ஆம் லெப். மாலதி படையணியில் செந்துளசியுடனும், லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் சுடருடனும் ஒருவர் இருவராக மரங்களோடு நிலைகொண்டிருந்தனர். செங்கயலின் அணியிடம் அடிவாங்கிப் பின்னே வந்த சிங்களப் படையினரை இவர்கள் தாக்கினர். கத்திக்குளறிக்கொண்டு விலகி மறுபடி ஆற்றை நோக்கி நகர முற்பட்டவர்களை யாழவன், முடியரசி, மதியழகி உள்ளடங்கலான மூவர் அணி சுட்டுத் தள்ளியது. அதற்கிடையில் சிங்களப் படையினர் வந்த திசை நோக்கி தமிழ்தென்றலோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் தாக்கிக் கொண்டிருந்தனர். எல்.எம்.ஜி.யின் அடி கேட்டதும் பீ.கே.எல்.எம்.ஜி அடியை நிறுத்தினார்கள். மறுபடியும் தப்பியோடும் முயற்சியில் சிங்களப் படையினர் இறங்கினர். போராடும் அகவை கொண்ட அனைவருக்கும், வணக்கம். ஐந்து மாதங்களின் முன், முள்ளிக்குளத்தில் எம்மை முற்றுகையிட வந்த சிங்களப் படையினர் தமது முதுகெலும்பு முறிந்து திரும்பிப்போன கதை இது. எங்களின் பலம் இன்னும் சற்று அதிகமாக அன்று இருந்திருந்தால், அவர்களின் ஈமங்களைச் சுமந்த நூறு பொதிகள் சிங்கள நாட்டுக்குப் போயிருக்கும். எங்கள் பின்னே எழுந்து வாருங்கள் என்று அன்றும் நாம் உரத்த குரலில் கூப்பிட்டோம். இன்று முழங்காவிலில் நின்றும் கூப்பிடுகின்றோம். வீட்டுக்கு ஒருவர் போதும் என்று யார் முடிவெடுத்தது? கப்டன் வாசு (1987), கப்டன் சுந்தரி (1990), மேஜர் ஜேம்ஸ் (1991) என ஒரு வீட்டிலிருந்து மூவர் போராட வந்த பாரம்பரியம் அல்லவா எம்முடையது. எழுந்து வாருங்கள். எத்தனைபேர் வந்தோம் என்பதை விடுதலையின் பின்னர் கணக்குப் பார்ப்போம். இப்போது எம் கைகோர்க்க வாருங்கள். நன்றி அன்புடன் தமிழ்தென்றல். நினைவுகளுடன்:- போராளி மலைமகள். வெள்ளிநாதம் (05 புரட்டாதி 2008) இதழிலிருந்து….. https://pulikalinkuralradio.com/archives/34769
  3. Alfred Duraiappah’s son proud of Sri Lanka’s development Chief of Police of the Peel Regional Police in Canada, Nishan Duraiappah said that he is extremely happy as a person of Sri Lankan origin to witness the development of Sri Lanka. He said this while participating in a press conference held yesterday (29) after meeting Acting Inspector General of Police Deshbandu Tennakoon. Nishan Duraiappah is a grandson of Alfred Duraiappah who was killed when he was Mayor of Jaffna. He has come to Sri Lanka for a visit and met the Acting Inspector General of Police yesterday (29). He was brought to the Police Headquarters in a horse-drawn procession amid police salutes. A reception was also held for him at the Police Headquarters. Duraiappah said that he left the country with his parents in 1974 when he was a nine-month-old child and returned in 2003 and it is a matter of happiness that Sri Lanka has achieved great development in the past 20 years. “I was born in Colombo, Sri Lanka. I am very happy to be a Sri Lankan. I was nine months old when my parents and I moved to Canada. There were about 70 families there. Today, a large number of Sri Lankan families are residing there. A large number of people have obtained citizenship. Professionals from various fields of education are working in big positions there,” he said. “Sri Lanka has achieved a lot of development compared to that time. Roads are developed. Like the tourism industry, other industries have developed. I saw a large group of tourists coming to this country,” he said. https://www.dailynews.lk/2023/12/30/local/320993/alfred-duraiappahs-son-proud-of-sri-lankas-development/
  4. 1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் சாவொறுப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் மேயரான அல்பிரட் துரையப்பாவின் மருமகனான கொழும்பில் பிறந்த நிஷான் துரையப்பா, தற்போது கனடாவின் பீல் கோட்டத்தின் காவல்துறையின் தலைமையராக இருந்து இலங்கைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் இங்கு காவல்துறை தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் உண்ணோட்டமிட்டார். பின்னர் அவர் துணை காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். திரு நிசான் துரையப்பா தான் பிறந்த வீட்டிற்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். https://www.sundaytimes.lk/231231/news/duraiappahs-nephew-glad-to-be-back-home-543904.html
  5. இம்ரான் பாண்டியன் படையணியின் புலிமகனொருவன் சடாய்மா (Ghillie) உடையணிந்து கோல்ற் எம்16ஏ2 துமுக்கியுடன் (Rifle) பாய்கிறார்
  6. கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் 1994 (படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.) "உரிமை காக்க உயிர்கொடுத்த எங்கள் வீரரே - உங்கள் புகழுடலைப் புதைக்கவில்லை விதைத்தோம் நாங்களே!"
  7. தாண்டியடி (புதுமண்டபத்தடி) மாவீரர் துயிலுமில்லம் 1996 'துயிலுமில்லத்திற்கு அருகில் இருந்த சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்'
  8. மட்டக்களப்பு 1996 இவர் படையணிச் சீருடை அணிந்துள்ளார்:
  9. மட்டக்களப்பு 1996 கரிகாலனும் அவரது மெய்க்காவலரும்
  10. களப்படப்பிடிப்பாளர் நதி 2002
  11. நிதர்சனம் படக் கலவையகம் 2002

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.