Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஆனரேனும் தெளிவாக்குங்கோ... இந்த மாதிரி இன்னொரு நாட்டோடை பெயரிலை வேறொரு நாட்டிலை பல்கலைக்கழகம் அமைத்தால், இது அந்த Host நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் இல்லையோ? (மெய்யாவே தெரியாமல் தான் கேட்கிறேன்)
  2. தல, நீங்க ஜட்டியோட பொம்பிளைகள் கூட நின்ட காலத்தை மறந்திட்டீங்களோ? நீங்கள் வெறியில அதை மறந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இன்னும் இல்லை...😉
  3. இக்கடற்சமரின் போது சேதமடைந்த லெப். கேணல் ஆண்டானின் படகில் அவர் உட்பட சில போராளிகள் வீரச்சாவடைந்தும் சில போராளிகள் காயமுமடைந்திருந்தனர். அந்நேரத்தில் இரு பெண் போராளிகள் மட்டும் நல்லநிலையில் இருந்ததால் படகை பகைவரிடம் சிக்க விடாமல் இருக்க தம்மால் ஆன அத்தனையையும் முயற்சித்தனர். ஒரு பெண்போராளியின் தீரத்தால் படகு நிலையெடுத்து அசையத்தொடங்கியது. அவர் ஆழ்கடல் அலைகளுக்குள்ளால் படகை செலுத்தினார். அந்நேரத்தில் மற்றைய பெண் போராளி தம் படகை நெருங்கும் பகைக் கலத்திற்கு வலுவெதிர்ப்புச் சூடுகளை வழங்கினார். அதே நேரம் இவர் சண்டைவண்டியை சீர்படுத்துவது, படகின் நிலைமையை கவனிப்பது, விழுப்புண்ணடைந்தவர்களுக்கு துணிகட்டுவது என பல பணிகளை தனி ஒருத்தியாக செய்தார். அன்றை இவர்களின் தீரத்தால் தான் அச்சண்டைவண்டி சேதமடைந்திருந்த போதிலும் கரையேறியிருந்தது. -------> சுதந்திரப் பறவைகள் ஆவணி, 2000 பக்கம் 9
  4. பரதன் இராஜநாயகம் மறைந்தார்… — கருணாகரன் — ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிப் போராளியான பரதன் இராஜநாயகன் (60) லண்டனில் காலமாகியுள்ளார். 1980 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருக்கும்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த பரதன், அந்த இயக்கத்திற்கான ஆவணமாக்கல், ஒளிப்படம் (Photography), மற்றும் தொலைக்காட்சி, வானொலி, ஒலிப்பதிவுக்கூடம், இசைப்பாடல்கள் வெளியீடு, திரைப்படத் தயாரிப்பு எனப் பலவற்றை உருவாக்குவதில் முதல் நிலைப்பங்களிப்பை வழங்கினார். முக்கியமாக 1986 இல் புலிகள் ஒரு பரீட்சார்த்த தொலைக்காட்சி ஒளி பரப்பு ஒன்றை “தரிசனம்“ என யாழ்ப்பாணத்தில் நடத்திப் பார்த்தனர். அதைச் செயற்படுத்தியவர் பரதனே. அதற்கு முன்பு நண்பர்களுடன் இணைந்து குறும்படமொன்றை இயக்கினார். நல்லதொரு ஒளிப்பதிவாளரான பரதனுக்கு அந்தத் துறையில் ஈடுபாடுள்ளோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இதனால் புலிகளின் சுற்றுக்கு வெளிப்பரப்பிலும் ஏராளமானோர் பரதனின் நண்பர்களாக இருந்தனர். இதைத்தவிர, மக்களின் வாழ்க்கை, இராணுவ ஒடுக்குமுறை போன்றவற்றை அந்த நாட்களில் வீடியோ ஒளிப்பதிவு மூலம் பதிவு செய்வதிலும் தமிழகத்திற்கு அவற்றை அனுப்புவதிலும் பரதனுடைய பணிகள் அதிகமாக இருந்தன. தரிசனம் இந்திய அமைதிப்படையின் வருகையோடு இடை நின்று விட்டது. இந்திய அமைதிப்படை வெளியேறிய பின் 1990 இல் மறுபடியும் புலிகள் ஒலி, ஒளிபரப்புச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் கொண்டிருந்தனர். அவற்றைச் செயற்படுத்தியவர் பரதேனே. ஏற்கனவே இடை நின்ற தரிசனம் என்ற ஒளிபரப்புச் சேவையை நவீன வசதிகளோடு நிதர்சனம் என்ற பேரில் ஆரம்பித்தார் பரதன். அதனோடு இணைந்ததாக புலிகளின் குரல் என்ற வானொலிச் சேவையையும் ஆரம்பித்து இரண்டுக்குமான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். அத்துடன் புகைப்படப் பிரிவும் பரதனின் கீழேயே இயங்கியது. ஏற்கனவே அவர் ஒரு சிறந்த ஒளிப்படப் பிடிப்பாளர், அந்தத் துறையில் அறிவும் ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர் என்பதால் பல போராளிகளை அந்தத் துறையில் உருவாக்கினார். சமநேரத்தில் குறும்பட உருவாக்கத்திலும் ஈடுபட்டார் பரதன். 1991 இல் அவர் உருவாக்கிய இன்னொரு படம் “இனி”. 19 நிமிடம் இந்தப்படம். தொடர்ந்து ஞானரதன் மூலமாக முழு நீளப்படங்களை உருவாக்கினார். புலிகளின் இசைப்பாடல்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவை. இப்போதும் அவற்றின் ஈர்ப்புக் குறையவில்லை. இந்த இசைப்பாடல்களை உருவாக்குவதிலும் பரதனோ முன்னோடி. கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருடைய பாடல்களை தென்னிந்தியப் பிரபல பாடகர்களைக் கொண்டு பாடுவித்து களத்தில் கேட்கும் கானங்கள் என்ற இசைப்பாடல் ஒலிப்பேழையை வெளியிட்டவர். பின்பு தாயகத்தில் இசைப்பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தர்மேந்திரா கலையகம் என ஒலிப்பதிவுக் கூடத்தினை உருவாக்கி, அதிலிருந்து பல விதமான இசைப் பதிவுகளை மேற்கொண்டவர். பாடல்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர் பரதன். இப்படிப் பன்முக ஆளுமை கொண்ட பரதனுக்கு இயக்க வேறுபாடின்றி எல்லாத்தரப்பிலும் நண்பர்களும் தோழர்களும் இருந்தனர். 2000 ஆண்டு புலிகளை விட்டு நீங்கிய பரதன் லண்டனில் குடியேறினார். அங்கே “மூன்றாவது கண்” என்றொரு ஒளிக்கலையாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இப்பொழுது அவருக்கு 60ஆவது வயது நடந்து கொண்டிருக்கிறது. இன்று அவர் தன்னுடைய துணைவியுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து, உயிர் நீத்துள்ளார். பரதனுடைய தந்தையார் சு.இராஜநாயகம் ஈழத்தின் மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர். தினக்குரல் பத்திரிகையின் வாரப்பதிப்பு முன்னாள் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் சகோதரர். போராட்டத்தில் ஈடுபட்டதால் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்த குடும்பங்களில் இராஜநாயகத்தின் குடும்பமும் ஒன்று.
  5. நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே, தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே ! நிதர்சனம், புலிகளின்குரல் வானொலி உருவாக்கத்தின் காரணகர்த்தாவும், அவற்றின் முதன்மைப் பொறுப்பாளருமாகிய பரதன் அண்ணாவைப் பற்றி அவருடன் நீண்ட காலமாய் பழகியவனும், ஒன்றாக செயற்பட்டவன் என்ற காரணத்தினாலும் அவர் பற்றிய முக்கியமான கருத்துப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். பரதன் அண்ணா 83ஆம் ஆண்டு தன்னை முழுநேர உறுப்பினராக புலிகளுடன் இணைத்துக் கொண்டார். 1987இல் தான் எனக்கு அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் திலீபன் அண்ணாவுடன் நிதர்சனம் முகாமிற்கு செல்வேன். அப்போது பரதன் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் செல்வதோ நடுச்சாமம். அப்போது அவர் அடுத்த நாள் ஒலிபரப்பிற்கான வேலைகளை செய்து கொண்டிருப்பார். பரதன் அண்ணாவின் முகாமிற்கு செல்வதென்றால் எமக்கு பெரும் ஆசை. காரணம் அந்த சாமத்திலும் சுடச்சுடப் பாணும் ஜாம் அல்லது பட்டரும் இருக்கும். ஆனால் அவருக்கு வெறும் தேநீர் மாத்திரம் போதும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எமது போராளிகள் இராப் பகலாக கண் விழித்து தங்கள் வேலைகளை திறம்பட செய்தவர்கள். பரதன் அண்ணாவைப் பொறுத்தவரை வளமில்லாத காலத்திலும் வளமான படைப்புக்களை தான் ஒலி, ஒளிபரப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஒவ்வொரு பதிவுகளும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமான பிடிவாதத்தில் இருந்தார். தன்னை விளம்பரப்படுத்தாத ஒரு மனிதர். தலைவரின் கனவை கிட்டண்ணாவுடன் சேர்ந்து நனவாக்கியவர். நேர்த்தியென்ற பேச்சு வருகின்ற போது கிட்டண்ணாவையே உதாரணமாகக் காட்டுவார் பரதன் அண்ணா. காரணம் ஒருமுறை அவர்களது முகாமிற்கு காலையிலேயே கிட்டண்ணா போயிருக்கின்றார். முகாம் துப்புரவாக இல்லை. ஒருவர் மட்டுமே வேலை செய்துகொண்டிருந்தார். மற்றவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவரே முகாமை சுத்தம் செய்யத் தொடங்கி விட்டார். அயர்ந்த தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பவுமில்லை. இரவிரவாக வேலை செய்து களைத்துத் தூங்குகின்றனர் என்று அவருக்குத் தெரியும். ஆயினும் சத்தம்கேட்டு விழித்துக் கொண்டவர்கள் அசடுவழிய நின்றனர். இந்தச் சம்பவத்தை மறக்க முடியாது என்று பரதன் அண்ணா அடிக்கடி கூறுவார். இந்திய இராணுவத்துடனான போரின் போது ஒலி, ஒளி நாடாக்களை பத்திரப்படுத்துவது மிகவும் சவாலான விடயம். ஈரத்தன்மை புகாதவாறு புதைக்க வேண்டும். அதனை திறம்படச் செய்து முடித்தார் பரதன் அண்ணா. இந்திய இராணுவத்தின் முதற்குறியே நிதர்சனமாக இருந்தது. காரணம் நிதர்சனத்தின் செய்திகள் ஒளிப்படங்கள் எல்லாம் இந்திய வல்லரசிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மூலமாக இருந்தவர் பரதன் அண்ணா. 88 காலப்பகுதியில் கொழும்பில் மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவருக்கும் வெவ்வேறு வேலைகள். அவர் அப்பொழுது முதலாவது ஒலிநாடா உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அது ‘புயல்கால ராகங்கள்’ என்ற பெயரில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பால் தரமான ஒலிநாடாவாக வெளியிடப்பட்டது. அதில் பாடிய மனோ, வாணி ஜெயராம் ஆகியோர் பாடி முடித்த பின்னர் அழுதுவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவ்வளவு சிறப்பாக அமைந்தது அவரது ஆரம்ப முயற்சி. இதற்கான பாடல் வரிகளை காசியண்ணா, புதுவையண்ணா, இன்குலாப் ஆகியோர் எழுதியிருந்தனர். அக்காலகட்டத்தில் இலங்கையின் அதிபராக இருந்த பிரேமதாசா அவர்களுடனான பேச்சுவார்த்தைக் காலம். ஒலி – ஒளிபரப்பு சாதனங்களை எல்லாம் வாங்குவதற்கு ஏற்ற காலமாகவும் திட்டமிடப்பட்ட நேரமாகவும் காணப்பட்டது. அதற்கு முன் தலைவரை சந்திக்க வேண்டும். வன்னிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. பரதன் அண்ணாவிற்கு அதுவொரு புது அனுபவம். நானே அடிக்கடி சென்று வருவேன். சில நேரங்களில் தலைவரை சந்திக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருக்கும் காலத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. நாங்கள் வவுனியாவில் கிடாய்ச்சூரி என்னுமிடத்தில் ஒரு ஆதரவாளர் வீட்டில் நின்றிருந்தோம். ஆதரவாளரின் மகன் வந்து உங்களுக்கு பால் பிளேன் ரீயோ, சும்மா பிளேன் ரீயோ வேணும்? என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டு சும்மா பிளேன் ரீ என்று சொல்லி விட்டு அவர் பிளேன் ரீ கொண்டு வந்த பின் அவரை இருத்தி சரியாக சொல்வது எப்படியென பரதன் அண்ணா சொல்லிக் காட்டினார். பின்பு அவர் புத்தகத்துடன் வந்து பரதன் அண்ணாவிடம் பாடம் கற்றது வேறு விடயம். இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு விடயத்தை பகிடியாக சிரித்து விட்டு கடந்து செல்பவரல்ல அவர். சரியானதை சொல்லிக் கொடுத்து நேர்ப்படுத்தும் சீரிய பண்பு கொண்டவர் தான் பரதன் அண்ணா. தலைவரை சந்திக்க வந்த பின்பு இலத்திரனியல் கொள்வனவிற்காக நித்தியண்ணாவுடன் சிங்கப்பூர் சென்று அங்கு தான் பெரிய கொள்வனவை முடித்து வந்தார். லொறி நிறைய இலத்திரனியல் சாதனங்கள். அந்த நேரமே கோடிக்கணக்கான பெறுமதி கொண்டவை. கட்டுநாயக்காவிலிருந்து மணலாறு செல்லும் வரை STF இன் பாதுகாப்பிலேயே கொண்டு போய் சேர்க்கப்பட்டது. பின்னாளில் இதை வைத்து தான் தர்மேந்திரா கலைக்கூடம் உருவானது. 1990இல் இந்திய இராணுவம் வெளியேறி எமது கட்டுப்பாட்டில் எமது பிரதேசம் வந்த பின், இருவரும் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். ஆரம்பமே பெரும் சவாலாகத்தானிருந்தது. புதிதாக எல்லாவற்றையும் நிறுவ வேண்டும். ஒரு ஒழுங்கான வடிவமைப்பின் கீழ் நேர்த்தியாக செய்து முடித்ததில் அவரின் சகலதுறை ஆளுமையும் புலப்பட்டது. நிதர்சனம், புலிகளின்குரல் வானொலிச் சேவைகள் 90இல் மிகுந்த தரத்துடன் தொடங்கப்பட்டது. சொற்ப ஆட்களுடன் ஆரம்பித்த இச் சேவை மிகப்பெரும் விருட்சமாக பரிணமித்தது. பரதன் அண்ணாவின் நிர்வாகத் திறமையால் பலாலி வீதியில் பெரிய அலுவலகம் உருவாக்கப்பட்டு அங்கு அமலன் அரங்கம் அமைக்கப்பட்டு அங்கேயே ஒலி – ஒளிப் பதிவுகள் செய்யப்பட்டன. ஒலி – ஒளிபரப்பின் தரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் பரதன் அண்ணா. எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்காது. நிலக்கீழ் ஒலி – ஒளிப்பதிவுக்கூடம் அமைக்கத் தீர்மானித்து, அதற்கான வரைபடம் பரதன் அண்ணாவால் வரையப்பட்டு, அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலிருந்த மரங்கள் வெட்டப்படாமல் அதனைச் சுற்றியே நிலம் அகழப்பட்டு, நிலக்கீழ் அறை உருவனது. பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன் பலமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் பாதுகாப்பனதாகவும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும். படப்பிடிப்பு போராளி தர்மேந்திரா நினைவாக தர்மேந்திரா கலையகம் உருவானது. குறைந்த செலவில் தரமானதாக உருவானதில் தலைவராலும் பாராட்டப்பட்டோம். பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல் என்று பனடோலைப் போட்டுவிட்டு எனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். நாளாக நாளாக குறையவில்லை. என்னைப் பார்த்த பரதன் அண்ணா என்ன நவீனத்தார் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு சரியில்லையோ என்று கேட்டார். காய்ச்சல் போலிருக்கிறது என்றேன். வா ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்றார். இல்லை பனடோல் போட்டனான். ஆக ஏலாது விட்டால் போவோம் என்று சொன்னேன். நீ போய் படப்பு என்று சொன்னார். எனக்கு கொஞ்ச வேலை இருக்கிறது. முடித்துவிட்டு படுக்கிறேன் என்று சொன்னேன். அதைப் பிறகு செய்யலாம். படுத்து எழும்பினால் சுகமாயிருக்கும். போய் படு என்று சொல்ல, நானும் அறைக்குள் சென்று படுத்துவிட்டேன். சிறிது நேரம் செல்ல நடுங்கத் தொடங்கி விட்டது. சத்தம் கேட்டு வந்து பார்த்தவர் நல்லா கூடிற்றுது போல என்று சொல்லி, வாகனம் தர்மேந்திராவில் நிற்கிறது. எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி போர்வையால் போர்த்ததும், பயங்கரமாக குலப்பன் அடிக்கத் தொடங்கி விட்டது. அடுத்த கணமே என்னைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த திருநெல்வேலி நேர்ஸிங் ஹோமிற்கு போனார். எனக்கோ கதைக்க முடியாத நடுக்கம். என்னைப் பரிசோதித்த மருத்துவர் சிவபாதசுந்தரம், இது சாதாரண காய்ச்சல் இல்லை. இரத்தப் பரிசோதனையின் மூலம் தான் கண்டுபிடிக்கலாம் என்றும், உடனடியாக இரத்தப் பரிசோதனையை போய் செய்யும்படியும் கூறினார். அதற்குள் மணியண்ணாவும் வாகனத்தைக் கொண்டுவந்து விட்டார். இரத்தப் பரிசோதனையில் கடுமையான நெருப்புக் காய்ச்சல் என்றும் உடனடியாக அதற்கான மருந்து ஏத்த வேண்டும் எனவும், ஆனால் மருந்துக்குத் தட்டுப்பாடு. எங்கிருந்தாவது கொண்டு வந்தால் தான் காப்பாற்ற முடியும் என்றும் சொன்னார். பரதன் அண்ணாவின் முகம் மாறிவிட்டது. அதை வெளிக்காட்டாமல் எனது தலையைத் தடவி நீ ஒன்றுக்கும் யோசிக்காதை நான் மருந்தோடுதான் வருவேன் என்று கூறி, திலகனை என்னோடு நிற்கும்படியும் சொல்லி விட்டு சென்றார். சிலமணித்தியாலங்கள் கழித்து மருந்தோடுதான் வந்தார். உடனடியாக மருந்து ஏற்றத் தொடங்கி விட்டார்கள். வேலைப் பழுவிலும் அடிக்கடி வந்து பார்த்து மருத்துவரிடமும் கதைத்துவிட்டு தான் போவார். ஒரு வாரத்தின் பின் காய்ச்சல் குறைந்து விட்டது. அந்த சமயத்தில் என்னைப் போல் பெண் பிள்ளை ஒருவருக்கும் காய்ச்சல். மருந்து ஏற்ற வேண்டும். மருத்துவர் பரதன் அண்ணாவிடம் நிலைமையைக் கூறி மருந்தை அந்தப் பிள்ளைக்கும் கொடுங்கள். பொது மக்களோ, போராளியோ உயிர்தான் அவர்களுக்காகத் தானே நாம் போராடுகின்றோம் என்று கூறி அந்தப் பிள்ளையையும் பார்த்து ஆறுதல் கூறினார். அந்தப் பிள்ளை சுகமாகி தாயாருடன் எமது முகாமிற்கு வந்திருந்தார். தாயார் பரதன் அண்ணாவின் கையைப் பிடித்து அழுத அந்த நெகிழ்வான தருணம் இன்னும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அவரின் நிர்வாகத் திறமை பார்ப்போரை வியக்க வைக்கும். அவரது ஆளுமையின் கீழ் நிதர்சனம், புலிகளின்குரல், தமிழீழ வானொலி, புகைப்படம், ஒலி, ஒளி நாடா வெளியீடுகள், பயிற்சி வகுப்புகள் என அவரின் ஆளுமை வியாபித்திருந்தது. பொறுப்பாளன் என்றால் பொறுப்பேற்கும் பக்குவமும் வேண்டும். இதற்கு ஒரு சம்பவம் தலைவரின் மாவீரர் நாள் பேச்சு ஒலிபரப்பில் நடந்தது. அப்போது புலிகளின்குரல் ஒலிபரப்பிற்கு சிவா அண்ணா பொறுப்பாகவிருந்தார். தலைவரின் மாவீரர் நாள் உரையின்போது தடங்கல் ஏற்பட்டது. ஒழுங்காக தயாரிக்கப்பட்ட உரையின் ஒலி நாடாவிற்குப் பதிலாக வேறு போடப்பட்டு விட்டது. பின் இடைநிறுத்தி மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. தலைவரின் உரையில் எப்படி இது நடக்கச் சாத்தியம் என்று இன்றுவரை புரியவில்லை. எல்லாம் சரிபார்க்கப்பட்டுத் தான் இறுதியாக ஒலிபரப்புக்குக் கொடுக்கப்படும். உடனடியாக தலைவரிடம் சென்று தவறுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். தவறிழைத்தது அவரல்ல. ஆனாலும் தான் முழுவதற்கும் பொறுப்பு என்பதால், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைவரும் பரவாயில்லை. பரதன் அடுத்தமுறை இப்படி நடக்காமல் நீங்களே நேரடியாக நின்று கவனியுங்கள் என்று சொல்லியனுப்பானார். இந்த நிகழ்வு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதற்குப் பின் தனி ஒலிநாடாவில் பதியப்பட்டு அவரே நேரடியாகச் சென்று கொடுத்து கவனித்துக் கொள்வார். அவரது ஒலிபரப்பில் உருவான முதலாவது குறும்படம் ‘இனியொரு விதி’ தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தயாரிப்பு வேலைகள். ஞானரதனின் எழுத்துருவாக்கம். நாவண்ணன் அவர்களின் மகள், ஸ்ரீராம் (படப்பிடிப்பு போராளி, பின்நாளில் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதி) நடித்திருந்தனர். பரதன் அண்ணாவிற்கு உதவியாளராக நான் இருந்தேன். நாவற்குழிக்கும், கைதடிக்கும் இடைப்பட்ட குளத்துடன் சேர்ந்த வயல் வெளியில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒலி ஒளிக் கோவைகளின் பின்னர் 30 நிமிட குறும்படம் தயாரானது. தயாரானவுடன் தலைவர் எமது முகாமிற்கு வந்து படத்தைப் பார்வையிட்ட பின்னர் அவருடைய முகத்தில் ஒரு பெருமிதம். நல்லாச் செய்திருக்கிறியள். முப்பது நிமிடம் என்றீர்கள் கெதியாய் முடிந்து விட்டது என்றார். இந்த வார்த்தைக்காகத்தான் பரதன் அண்ணாவும், நாமும் காத்திருந்தோம். விரைவாக முடிந்து விட்டது என்றால் பெரிய வெற்றி தானே. பின்னர் வெளியீட்டு விழா ஸ்ரீதர் திரையரங்கில் நடைபெற்றது. அங்கு தான் முதல் ஒளிபரப்பு வெளியானது. பல நாட்கள் நிறைந்த மக்களுடன் இனியொரு விதி ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து உதயம் ஒலிநாடா உருவானது. இதற்கான ஒலிப்பதிவுகள் யாழ். ரமணன் குழுவினரின் இசையமைப்பில் தர்மேந்திரா கலையகத்தில் நடைபெற்றன. சில பாடல்களுக்கு தவில், நாதஸ்வர இசை சேர்க்கப்பட்டது. இதன் போது ஒரு துயர் நிகழ்வும் ஏற்பட்டது. அருகில் இருந்த வீட்டுக்காரர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அதற்காக அடுத்த நாள் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு இறுதிக் கிரியைகளின் பின்பு தான் மீண்டும் ஒலிபரப்பு நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவில் வீரமணி ஐயரின் பங்கும் மிகவும் முக்கியமானது. முழுக்க முழுக்க தமிழீழக் கலைஞர்களைக் கொண்டு தர்மேந்திரா கலையகத்தில் உருவான முதலாவது ஒலிநாடா இதுவாகும். இதன் வெளியீடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சண்டைகள் உக்கிரமடைந்திருந்த நேரம், அப்பொழுது கிட்டண்ணா லண்டனில் இயங்கிக் கொண்டிருந்தார். அவர் பரதன் அண்ணாவிடம் அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் ஆவண ஒளிவீச்சாக செய்து அனுப்பும்படி கூறியிருந்தார். அதற்கான வேலைகள் தொடங்கிய நிலையில் பரதன் அண்ணா ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார். தரமானதும், அதேநேரம் மேலைத்தேய ஊடகங்களுக்கு இணையாகவும் இருத்தல் வேண்டும் என்பது தான் அது. அந்த நேரம் தான் மாங்குளம் முகாம் மீதான தாக்குதல் முடிவிற்கு வந்த நேரம். வேறு இடங்களில் சண்டை மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எமது படப்பிடிப்பு போராளிகள் பெரும் குண்டு மழையிலும் தம்மால் எடுக்கக்கூடிய காட்சிகளையெல்லாம் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போராளிகளின் வீரம், மக்களின் அவலங்கள் அவர்களின் காட்சிகளில் சாட்சியங்களாக அமைந்தன. அவற்றில் இருந்து ஒரு தரம் வாய்ந்த ஒரு ஒளிவீச்சு ஆவணம் உருவானது. இதில் பல பிரதிகள் எடுக்கப்பட்டு கிட்டண்ணாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நித்திரையற்றதன் விளைவாக உடல் அசதி காட்டத் தொடங்கியது. அடுத்த நாள் தலைவரின் மாவீரர் நாள் உரைக்கான ஒலி, ஒளிப்பதிவுகள் நடைபெறவிருந்தது. அதற்கான ஆயத்தங்களையும் செய்ய வேண்டும். மறுநாள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டோம். வருபவர்களுக்கான உணவுகளும் தயாராகி விட்டது. பரதன் அண்ணாவும், கிருபாவும் பங்கருக்கு சென்று விட்டனர். மீண்டும் ஒலிப்பதிவுக் கருவிகளைப் பரிசோதிப்பதற்கு ஆயத்தமானேன். நான் முன்வாசலில் உள்ள கதிரையில் இருந்து கொண்டு காவலில் நின்ற ரஞ்சனிடம் வாகனம் வாகனம் வந்தால் சொல்லு என்று சொல்லிவிட்டு அசந்து தூங்கி விட்டேன். ஜெயம் அண்ணா வந்து எழுப்பும் மட்டும் வாகனம் வந்து நின்றது தெரியாது. திடுக்கிட்டு முழித்து பின்பக்கம் செல்ல முயன்ற போது, அண்ணை அருகில் வந்து விட்டார். நவீனன் என்று கூப்பிட்டு கேட்ட முதல் கேள்வியே எத்தனை நாள் நித்திரை கொள்ளவில்லை என்பது தான். அதற்குள் பரதன் அண்ணாவும் வந்துவிட்டார். கிட்டண்ணாவிற்கு அவசரமாக ஒளிநாடா அனுப்ப வேண்டியிருந்ததால், இரண்டு நாளாக நித்திரையில்லை என்று சொல்ல, அதற்கு தலைவர் இரவு நித்திரை முழித்து வேலை செய்தால் கட்டாயம் பகலில் குறைந்தது மூன்று மணிநேரமாவது நித்திரை கொள்ளுங்கள் என்றார். நீங்களும் தான் என்று பரதன் அண்ணாவைப் பார்த்துச் சொன்னார். நான் இதைக் குறிப்பிட்டதன் நோக்கம் தலைவர் போராளிகளிடத்தில் எவ்வளவு அக்கறையும், கரிசனையும் கொண்டவர் என்பதற்கான சிறு உதாரணமே. அண்ணை ஒலிப்பதிவு முடித்துப் போகவே நடுச்சாமம் ஆகி விட்டது. அடுத்த நாள் அடுத்த ஓட்டத்திற்குத் தயாராகி விடுவோம். இரண்டு நாட்களில் அடுத்த ஒரு பெரிய நிகழ்வுக்கான தயார்ப்படுத்தல். அது புலிகளின் குரல் வானொலியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா. யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழாவும் தொடங்கி விட்டது. அதில் நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசை் குழுவினரின் வில்லுப்பாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தடை பற்றி பேசியவர் சவர்க்காரத்தை தடை செய்து விட்டு என்று கூறி… அப்போதைய ஜனாதிபதியின் சாதி பற்றி மறைமுகமாக மேடையில் பேசியதை அவதானித்த பரதன் அண்ணா, உடனடியாக அவர்களது நிகழ்ச்சியை நிறுத்தி திரை போடச் சொன்னார். அவர்களை மண்டபத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டு விழாவிற்கு வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி எங்களுடைய நிகழ்வில் நடந்த இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதில் இரண்டு விடயங்கள் புலனாகியது. ஒன்று கொள்கைப் பற்று, மற்றையது முடிவெடுக்கும் திறன். அந்த நிகழ்வு எல்லோராலும் பாராட்டப்பட்டு புலிகளின் நிலையை வலியுறுத்திய பேசுபொருளாகவும் அமைந்தது. அதேநேரம் எதிரியைக்கூட மதிக்கும் மாண்பாயும் அமைந்தது. இதை தலைவர் அறிந்தவுடன், பரதன் செய்தது தான் சரி. இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றார். நான் இவற்றையெல்லாம் எழுதுவதன் காரணம் தேசத்தின் மீதும், தேசியத் தலைவர் மீதும் எவ்வளவு பற்றுறுதியோடிருந்தார் என்றும், அவரின் ஆற்றலும் அர்ப்பணிப்புகளும் சாதாரணமல்ல; ஊடகத்துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கங்களை தெரியப்படுத்தவுமே. சில வருடங்களின் பின் நான் வேறு வேலைக்கு சென்று விட்டேன். அவரும் வேறு திசை. நாட்டில் அவரைக் கடைசியாகக் கண்டது 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குடிசையில். அவர், வினோ அக்கா, இரு பிள்ளைகள். இவர்களுடன் பரதன் அண்ணாவின் அப்பா, அம்மாவும். அந்த நேரம் மிகவும் கஷ்டம். மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நேரம். இடப்பெயர்வின் வலி அது. பின் அங்கிருந்து ஒருவாறாக இலண்டனுக்கு குடும்பத்துடன் வந்து விட்டார். நான் மீண்டும் பரதன் அண்ணாவைச் சந்தித்தது 1999ஆம் ஆண்டு. நான் இலண்டன் வந்தவுடன் முதலில் வந்து பார்த்தது பரதன் அண்ணா தான். அப்பொழுது அவர் இலண்டனில் ஒளிப்படம் எடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அவருடன் பல நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தச் சமயத்தில் தான் மூன்றாவது கண்(THIRD EYE) என்னும் ஒளிப்பட நிறுவனத்தை தொடக்கி நடத்தினார். அவரால் இரண்டு ஒளி நாடாக்களும் (UN TOLD STORY / MY NEIROUR IN SRI LANKAN TAMIL) தயாரித்து வெளியிடப்பட்டது. அவர் தொடாத துறைகளே இல்லை. அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது. அவருடைய கனவே எமது போராட்டத்தின் முழுமையும் ஆவணப்படுத்தி அதை அடுத்த சந்ததியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பது தான். அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் தேசத்தின் மீதும், தேச மக்களின் மீதும் தேசியத் தலைவர் மேலும் கொண்டிருந்த கொள்கைப் பற்றும், அவர்கள் மீதான பற்றுறுதியிலும் விலகவேயில்லை. அவரின் கனவை நனவாக்க முன்னோக்கிச் செல்வோம் உங்கள் நினைவுகளுடன் நவீனன்.
  6. நிர்வாகத்தினர், இந்தத் திரியில் முன்வைக்கப்பட்ட கடைந்தெடுத்த இழிந்த மதவாதக் கருத்துக்களை நீக்கிமாறு கோரிக்கை வைக்கிறேன்.
  7. These were proposed during Tigers' time. Taken from the TEEDOR website for archive purposes. ------------------------------------------------------- The following projects are proposed to fulfil urgent requirements of development in the Vanni Area. Detailed proposals with a breakdown of costs are available for NGOs, Development Agencies, Private Enterprises or individuals who may wish to support these projects financially or by providing equipment or skilled resources. No Project Title Location Total in Sri Lankan Rupees[in Millions] Total in US Dollars [Approx.] Agriculture 01 Renovation of Agrarian kendra complex including fertilizer stores, agrochemical stores, circuit room. Kilinochchi. 4.4508 44,508 02 Rehabilitation and Reconstruction of Muthuiyankaddu Tank Mullaitivu district 167 1, 670, 000 03 Rehabilitation and Reconstruction of Kalmadu Tank Kilinochchi District 94 940, 000 04 Rehabilitation and Reconstruction of Akkarayan Tank 69 690, 000 05 Rehabilitation and Reconstruction of Iranaimadu Tank 445 4, 450, 000 06 Rehabilitation and Reconstruction of Puthumurippu Tank 20 200, 000 07 Rehabilitation and Reconstruction of Kariyalai Nagapaduvan 30 300, 000 08 Rehabilitation and Reconstruction of Piramanthanaru Tank 12 120, 000 09 Rehabilitation and Reconstruction of Kanagambikaikulam Tank. 52 520, 000 10 Rehabilitation and Reconstruction of Thannimurippu Tank 66 660, 000 11 Rehabilitation and Reconstruction of Kanukeny Tank. 28 280, 000 12 Rehabilitation and Reconstruction of Visvamadu Tank 41.5 415, 000 13 Rehabilitation and Reconstruction of Udaiyarkaddu Tank 69.5 695, 000 14 Rehabilitation and Reconstruction of Madavalasingam Kulam 25 250, 000 15 Rehabilitation and Reconstruction of Iyankan kulam 18 180, 000 16 Construction of District Agriculture Office Complex. Selvapuram, Mullaitivu 37.68 376, 800 17 Construction of District Agriculture Training Centre Complex Oddusuddan 32.96 329, 600 18 Production of mobility facilities to Agricultural Extension Staff of the Dept. of Agriculture Mullaitivu >District. Mullaitivu district 2.46 24, 600 19 Home stead Development Programme. D.S divisions of the Mullaitivu District. 9.492 94, 920 20 Supply of Agricultural Equipment to affected families. Mullaitivu District 7.275 72, 750 21 Rehabilitation Of A.D.A’s Office and Strengthening of Extension service of the Dept. Of Agriculture. Providing necessary infrastructure and other facilities to the Dept. Of Agriculture (Extension). Kilinochchi 18.1 181, 000 22 Rehabilitation of District Agriculture Training Centre and Strengthening of Training facilities Kilinochchi 23.8 238, 000 Fisheries/span> 01 Strengthening of Aquaculture (Prawn Culture) Maritimepattu A.G.A’ S Division 12.1 121, 000 02 Construction of Ice Plant Maritimepattu A.G.A’ S Division 10 100, 000 03 Protection against Sea Erosion (Planting of casuarinas) The Coastal area of Maritimepattu AG.A Division 2.0 20, 000 04 Removal of Kavatees (Coral Reef) Chemmalai Mullaitivu. 0.7 7, 000 05 Fishing Culture. Oddusuddan and Thunukkai 0.558 5, 580 06 Strengthening of Inland Fishing. Mullaitivu District. 3.4 34, 000 07 Issue of Fishing Craft & Equipment (Marine) Mullaitivu District. 28.5 285, 000 08 Construction of houses for resettling fishermen in Mullaitivu Mullaitivu. 450 4, 500, 000 09 Strengthening of Aquaculture (Prawn Culture) Kilinochchi District 12.1 121, 000 10 Construction of houses for resettling fishermen in Kilinochchi. Kilinochchi District 445.5 4, 455, 000 Livestock 01 Strengthening of livestock breeders Co-op Society Kilinochchi. 2.16 21, 600 02 Reconstruction of Govt. Veterinary Office and Officers Quarters. Kaneshapuram Kilinochchi. 0.93 9, 300 03 To promote milk production, the Establishment of Milk Collecting Centres, and a milk Processing Unit at Vanni.. Kilinochchi 12 120, 000 04 Rehabilitation of Animal breeding station. Kilinochchi. 1.182 11, 820 05 Strengthening of livestock breeders Co-op. Society Thunukkai Mullaitivu District 2.16 21, 600 06 Development of Feed lot of 450 acres. Kumulamunai. Mullaitivu. 0.5 5, 000 07 Upgrading of Indigenous goat breeding at selected villages. , Vallipunam and Pokkanai . 1.506 15, 060 08 Establishment of Poultry Mash Production Center Mullaitivu. Mullaitivu District. 1.2 12, 000 Alternative Energy 01. Setting up of Windmill for irrigation in Vanni District. Vanni is a land of Agriculture. Apart from the cultivation of paddy and pulses with water from tanks, equal amount of cultivation is done by lift irrigation where pumps have been used to lift water from deep wells. Erection of Windmills can be the next alternative to reduce the cost of production of vegetables caused by the escalated price of kerosene and engine oil. Puthukkudiyiruppu Mullaitivu. 0.3 3, 000 02 Setting up of solar cells on the roof of computer room with facilities for battery bank to provide uninterrupted, continuous supply to computers. Vaddakkachchi Kilinochchi 1.0 10, 000 03 Setting up of windmill for Generation of Electricity and charging of batteries (Type 2). Percapita consumption of electricity is the measuring index too standard of living of a country. Cost of production of electricity rising at an exorbitant rate has reluctantly compelled the consumers of electricity to find alternative ways and means to generate electricity. One such way is to install Windmills. Vaddakkachchi Farm, Kilinochchi. 0.4 4, 000 Small Industries 01 Strengthening of District Palmyrah Handicraft Training Center The existing facilities of DPTC are inadequate to provide the training of women and the staff of Palmyrah Development Board. The project facilities to provide the required facilities to the DPTC in order to accommodate Officers for training also which is not available at Palmyrah Development Board. Mullaitivu Town. 14.65 146, 500
  8. ஆள் தான் மாறியுள்ளதே ஒழிய அங்கை எந்தக் கொப்பையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. அதே பழைய பல்லவி தான் இவரும் பாடப் போறார்.
  9. வன்னிப் பெருநிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ காவல் பணிமனைகளின் இருப்பிடத்தைக் காட்டும் நிலவரை(map)
  10. இதுதான் என்று எண்ணுகிறேன்: https://eelam.tv/watch/ய-ய-க-அவர-கள-ன-ப-ங-க-தம-ழ-உர-y-yogi-039-s-speech-for-pongku-tamil_SLhrsbpK37HnCWC.html
  11. இது தொடர்பான ஒரு தகவல்: புலிகள் தம்மை பகுதி பகுதியாக துண்டாடி அழிப்பதற்கான அனைத்துலகின் திட்டத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர். 2005 ம் ஆண்டே சமராய்வு மையத்தின் பொறுப்பாளர் யோ.யோகி அவர்கள் இது தொடர்பில் புலம்பெயர் சமூகத்திற்கு அறிவித்திருந்தார்; Project Beacon அந்தக் காணொளி கூட இருக்கிறது என்னிடம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.