Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப். கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலை அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான். இவரின் திறமையான செயற்பாடு காரணமாக இவர் அணிகள் பிரிக்கப்படும் போது கடற்புலிகளின் கடற்தாக்குதலணியான சாள்ஸ் படையணிக்குள் உள்வாங்கப்பட்டு அங்கே நடந்த பெரும்பாலான கடற்சமர்களில் அதாவது விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் வலிந்த தாக்குதலாகிலும் சரி பங்குபற்றினார் விடுதலை. 1996ம் ஆண்டு தந்திரோபாயப் பின்வாங்கல் மூலம் வன்னிக்கு வந்து மரபுவழிச் சமருக்கான புதிது புதிதாக அணிகளை உருவாக்கினார் தலைவர் அவர்கள். அந்தவகையில் 1998 ஆம் ஆண்டு முற்பகுதியில் புதிதாக கொள்வனவு செய்ப்பட்ட ஆயுதங்களில் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்ட கனரக ஆயுதத்திற்க்கான பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டு அதன் சிறந்த சூட்டாளனாக வெளியே வருகிறான். இம்முறை அக்கனரக ஆயுதத்தின் மூலம் கடற் சண்டைகளில் பெரும் பங்காற்றியவன். தனது அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பால் படகின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அங்கும் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்கிறான் .அவ் வேளையில்தான் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது கனரக ஆயுதம் தரைத்தாக்குதலுக்கு தேவையான போது சிறப்புத் தளபதியால் விடுதலையின் தலைமையில் அணிகள் அங்கே அனுப்பப்ட்டது. அங்கு சிலமாதங்களாக தரைத்தாக்குதலில் தனது அநுபவங்களைப் பெற்று தனது அணிகளை செவ்வனவே வழிநடாத்தினான். மீண்டும் தரைத் தாக்குதலில் ஈடுபட்ட கடற்புலிகளின் அணிகளை கடலில் ஒரு வலிந்த தாக்குதலுக்காக எடுக்கப்பட்ட போது விடுதலையும் தனது அணிகளுடன் வந்து 16.09.2001 அன்று நடைபெற்ற இலங்கைக் கடற்படையினரின் மீதான வலிந்த தாக்குதலிலும் பங்குபற்றினான். 23.09.2001ல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கைக்கு எதிரான கடற்சமரில் பாரிய விழுப்புண்ணடைகிறான். இச் சமரில் இவனது நெருங்கிய நண்பணான மேஜர் திருமலை வீரச்சாவடைகிறான். விழுப்புண்மாறி முகாம் திரும்பிய விடுதலை அக்காலப்பகுதியில் சமாதானம் நிலவியதால். முகாமில் நின்றார். அவ்வேளையில் ஆழ் கடல் விநியோகம் தென் தமிழீழத்திலும் தொடருமாறு தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு பணிக்கப்படுகிறது. அதற்கமைவாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களால் அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு அணிக்கு பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்படுகிறார். அங்கு சென்ற அணிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ் விநியோகமுறை முற்றிலும் மாறுபட்டிருந்து .சாலையிலிருந்து வேகமான படகுகளிலில் கப்பலுக்குச் சென்று பொருட்களை இரவிற்க்குள் கொண்டு வந்தவர்களுக்கு ரோலரில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பயணித்து கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்து வருவதுமாக இருந்தது.விநியோக நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டபோது ஒரு பகுதிக்கான பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்பட்டு அதனை செவ்வனவே வழிநடாத்தினான். அவ் வேளையில் தான் ஒரு துரோக நடவடிக்கை உருவானபோது அணிகளையும் பொருட்களையும் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தான். அத்துரோக நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடல் நடவடிக்கையை கடலில் நின்ற அணிகளுக்கு பொறுப்பாக கடலில் நின்றே வழிநடாத்தி வெற்றிக்கு வித்திட்டான்.அதனை தொடர்ந்து தென்பகுதிக்குச் சென்று ரோலர் கொள்வனவு செய்து அவ் ரோலரில் கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை மன்னாருக்கு கொண்டுவந்த விநியோக நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்த்தான். இது ஒரு இலகுவான காரியமல்ல வன்னியிலிருந்தால் ஏதாவது ஆலோசனை தேவையென்றால் உடனடியாக சிறப்புத்தளபதியுடன் கதைத்து ஆலோசனை பெறலாம் அல்லது சிறப்புத்தளபதி பொறு அண்ணையிட்டை கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி அதற்கேற்ப உடனடியாக முடிவுகளைச் சொல்வார். இது அப்படியல்ல என்னவாகிலும் விடுதலையே முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படியாக இக்கட்டான இடங்களிலிருந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலிருந்து பணியாற்றிய விடுதலை . தென்தமிழீழத்தில் நடைபெற்ற பல்வேறு தரை கடற்சமர்களிலும் பங்குபற்றினான். தென் பகுதி துறைமுகம் மீதான தாக்குதலுக்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்த விடுதலை அத்தோடு நின்று விடாமல் அணிகளை கூட்டிச் சென்று துறைமுகத்துக்கு அருகில் சென்று வழியனுப்பிவிட்டும் வந்தான். இப்படியாக இருந்தவேளையில் தென் தமிழீழத்தில் இருந்த போராளிகளை வன்னிக்கு அழைத்தபோது இறுதியாக வந்த போராளிகளுடன் தனக்கு இட்ட பணிகளை செவ்வனவே செய்த திருப்தியுடன் வந்து சேர்ந்தான். வன்னிக்கு வந்து லெப் கேணல் எழிற்கண்ணன் படையனிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு அப்படையணியுடன் மன்னார் சென்றான். கப்பலிலிருந்து ரோலர் மூலம் மன்னாருக்கு லெப். கேணல் டேவிற் படையணி மூலம் கொண்டு வந்த பொருட்களை மன்னாரிலிருந்து கடல்வழியாக லெப் கேணல் எழிற்கண்ணன் படையணி சுட்டபிட்டிக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள் இந் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து விடுதலை செயற்பட்டான். இவ்வேளையில் கடற்புலிகளின் தரைத்தாக்குதலுக்கு அணி ஒன்றை உருவாக்கி அவ் அணியை மன்னார் களமுனைக்கு அனுப்புமாறு தலைவர் அவர்களால் பணிக்கப்பட்டது.அதற்கமைவாக அணி ஒன்று உருவாக்கப்பட்டு விடுதலையிடம் சூசை அவர்களால் கொடுக்கப்பட்டு மன்னார் களமுனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது .அங்கு முன்னேறிவரும் படையினருக்கு எதிரான மறிப்புத் தாக்குதலிலும் முறியடிப்புத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு இரு தடவைகள் விழுப்புண்ணடைந்தும் விழுப்புண்மாறமுன்னரே களமுனைக்குச் சென்றவன் விடுதலை. மன்னார் களமுனையைப் பொறுத்தளவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாட்களுமே சண்டையாகயிருந்தது.அதன் பின்னர் மணலாற்றின் கடற்கரையோர முன்னரங்கப் பகுதி கடற்புலிகளிடம் வழங்கப்பட அதன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட விடுதலை அங்கு முன்னேறிய படையினருக்கு எதிரான சமரை திறம்பட நடாத்தினான். அதில் உடுப்புக்குளப்பகுதியில் பகுதியில் காலையில் முன்னேறியபடையினர் மீது ஒரு முறியடிப்புத் தாக்குதல் நடாத்தி பெருமளவில் படையினரைக் கொன்று பெருமளவிலான ஆயுதங்களும் படைச் சடலங்களும் கைப்பற்றப்பட்ட இவ் வெற்றிகர சமரை விடுதலையே வழிநடாத்தினான். இதற்க்கு பழிதீர்க்குமுகமாக குறிப்பிட்ட மணித்தியாலயத்திற்குள் ஆறு தடவைகள் விமானத்தாக்குதல் நடாத்தினான். இதிலிருந்தே தெரிய வேண்டும் இத்தாக்குதலின் இழப்பை. அதன் பின்னர் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடல் தரை என இருபகுதியில் நடைபெற்ற சமர்களை அணிகளுடன் நின்றே வழிநடாத்தினான். பல்வேறு களங்களில் பல்வேறு பணிகளை இக்கட்டான சூழ்நிலையில் மாவீரர்களையும் தலைவரையும் மனதில் சுமந்து தன்னால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்க்கு திறம்பட செயற்பட்ட விடுதலை .இறுதிவரை முள்ளிவாய்க்காலில் களமாடி வீரச்சாவடைகிறான். இவர் வீரச்சாவடைந்த திகதியோ தெரியாத நிலையில் உள்ளனர். இது மாதிரியான எத்தனையோ மாவீரர்கள் இம் மண்ணின் விடுதலைக்காக போராடி வெளித்தெரியாத் தடங்களாக இருக்கிறார்கள். “கடலிலே காவியம் படைப்போம்” என்றும் அலையரசி. http://eelamalar.com/கடற்புலிகளின்-துணைத்-தள/
  2. தேவைப்பட்டால் இதற்குள் உள்ள படிமங்களைப் பயன்படுத்துங்கள். இதற்குள் உள்ள படிமங்கள்தான் புலிகளால் தகர்க்கப்பட்ட வானிழுனையின் (airline) படிமங்கள்.
  3. ஐயனே, இதில் இருப்பது அவ்ரோ அல்ல... அந்தக் காலத்திய அவ்ரோவின் இரு இறக்கைகளிலும் ஒரு இயந்திரம் தான் இருக்கும் (மொத்தம் இரண்டு.) ஆனால் இதில் நான்கு உள்ளது... இது புலிகளால் தகர்க்கப்பட்டது இல்லை. வேறு ஏதோ ஒரு வானூர்தி.
  4. தரமான கவிதை... வேறுபாடன கோணத்தில் பழையவற்றை எழுதியுள்ளீர்கள்.
  5. நீங்கள் வேலைக்குத் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்....
  6. நல்ல ஆக்கம்... "அங்கொடையில இருக்கிறவங்க அங்கானையில இருக்காங்க!......" என்ற மீன்பாடும் தேன்நாட்டிலிருந்து உருவான பாடல் வரியின் பொருள் இன்டைக்குத்தான் எனக்கு விளங்கினது!😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.