Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
புலிகளின் காலத்தில் போராளிகள் குடும்பநலன் காப்பகத்தால் மாவீரர்/போராளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட "உதவி கொடுப்பனவு அட்டை" முன் பக்கம் பின் பக்கம்
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
வான்புலி வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்
இதனுள் தமிழீழத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையான வான்புலிகளின் அலுவல்சாரல்லாத வான்பறப்புகள் பற்றிய தகவல்களைத் திரட்டிப் பதிவிட்டுள்ளேன். இத்திரியினைச் சொடுக்கி அதனை வாசிக்கவும்.
-
படைய அரணங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவினால் சமர்க்களத்திலும் (களமுனை & களநிலை) உள்நாட்டுக்குள்ளும் அமைக்கப்பட்ட படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
-
வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள் | திரட்டு
இம்மறுமொழிப் பெட்டியினுள் மார்ச் 26, 2007ற்குப் பின்னர் தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" வானில் பறந்த போது மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவல் உள்ளன. காலக்கோடு: சனவரி 20, 2009: முல்லைத்தீவின் சாளைப் பரப்பை நோக்கி ஒரு மரும வானூர்தி மாலை 8:25 மணியளவில் சென்று கொண்டிருப்பது முல்லைக் கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்காக் கடற்படையால் காணப்பட்டது. ஆனால் அது உடனே மறைந்துவிட்டது. பின்னர் சாளையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது மீண்டும் சிங்களக் கடற்படையினரால் காணப்பட்டு டோறாவிலிருந்து நீண்டதூர சுடுகலன்களால் சுடப்பட்டது என்றும் ஆனால் அது தப்பி மறைந்துவிட்டது என்றும் சிறிலங்காப் படைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக உதயன் செய்தி வெளியிட்டிருந்தது. | ஆதாரம்: உதயன் 22/01/2009 நான் சின்ன வயதில் வட தமிழீழத்தில் வசிக்கும் போது செவிமடுத்த விசயமொன்றினை இங்கே பதிவிட விரும்புகிறேன். இது 2007/2008 இல் நடந்ததென்று நினைக்கிறேன். ஒரு நண்பகல் வேளையில் கொழும்பு வான்பரப்பில் மரும வானூர்தி ஒன்று கதுவீயில் சில நிமிடங்களுக்கு தென்பட்டதாகவும் உடனே நகர் முழுவதும் விழிப்படையப்பட்டு சிங்கள வான் வலுவெதிர்ப்பு முறைமைகளும் செயலுறுத்தப்பட்டன என்பதுவே அதுவாகும். ஆனால், சில நிமிடங்களிலையே அவ்வானூர்தி கதுவீயின் கண்ணிலிருந்து மறைந்துவிட்டதாம். இச்செய்தி வெளிவந்த திகதி எனக்கு ஞாபகமில்லை. இச்செய்தியை புலிகளின் குரலில் கேட்டனான். (ஏனைய பறப்புகள் தொடர்பில் தகவல் கிடைக்கும் போது சேர்த்துவிடுகிறேன்.) ******
-
வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள் | திரட்டு
இம்மறுமொழிப் பெட்டியினுள் மார்ச் 26, 2007ற்கு முன்னர் தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" வானில் பறந்த போது மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவல் உள்ளன. காலக்கோடு: 1986/1987 - கேணல் சங்கர் அ முகிலன் அவர்கள் தலைமையில் தொண்டைமானாற்றுப் பகுதியில் வைத்து உள்நாட்டில் கிடைக்கத்தக்க மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை வைத்து ஒரு கொச்சு இலகு வானூர்தி ஒன்று தயாரிக்கப்பட்டது. இது தொண்டைமானாறு உப்புவெளியிற்கு அருகிலுள்ள மண்தெருவில் வைத்து ஓட்டி எழுப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அப்போது இது ஒரு தென்னைமர உயரத்திற்கு எழும்பி பறந்துவிட்டு பத்திரமாக தரையிறங்கியது. இதுவே வரலாற்றில் முதல் தடவையாக புலிகளால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வானில் பறந்த முதல் வான்கலம் ஆகும். எனினும் இக்காலத்தில் வான்புலிகள் என்ற கிளை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. | ஆதாரம்: புலிகளின் இரண்டாவது உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | வானில் பறந்த முதல் வான்கலம் ஓகஸ்ட் 2, 1991 - இத் திகதிக்கு முன்னரான நாளொன்றில் வட தமிழீழ வான்பரப்பில் பறந்த இனந்தெரியாத வானூர்தியானது புலிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாமென்று சிறிலங்கா படையப் புலனாய்வுப்பிரிவினர் சிங்கள வான்படையினருக்கு தெரிவித்ததாக ஈழநாடு இத்திகதியில் செய்தி வெளியிட்டுள்ளது. | ஆதாரம் ஈழநாடு 2/8/1991 ஜூன் 4-10, 1995 - முல்லைத்தீவு மணலாற்றுக் காட்டுப் பரப்பில் பறந்த வானூர்தி ஒன்று தரைப்படையினரால் காணப்பட்டது. இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்படாது அலுவல்சாரல்லாமல் சிங்களத்தால் அறிக்கையிடப்பட்ட புலிகளின் முதலாவது பறப்பாகும். கிடைத்த படிமங்கள் மற்றும் நிகழ்படம் மூலம் அற்றை நாளில் ஆக குறைந்தது இரு பறப்புகளாவது மேற்கொள்ளப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொச்சு இலகு கீழிதை ஒன்று பறப்பில் ஈடுபட்டிருந்தது. | ஆதாரம்: உதயன் 14/06/1995 கொச்சு இலகு கீழிதை (Microlight Glider) முதலாவது பறப்பின் போது கொச்சு இலகு கீழிதை (Microlight Glider) இரண்டாவது பறப்பின் போது, ஓகஸ்ட் 17, 1995 - இரணைமடுவில் உள்ள 1 கிமீ நீளமான புலிகளின் ஓடுபாதை என்று சந்தேகிக்கப்படும் பரப்பு மீது சிங்கள வான்படையினர் வான்குண்டு வீச்சு நடத்தினராம் | ஆதாரம்: உதயன்: 18/08/1995 1998 - வட்டுவாகல் கோவிலில் நடந்த விழாவின் போது தற்சுழல் பறனை (Gyro Copter) ஒன்று பூத்தூவிச் சென்றது. இதுவே முதல் முறையாக மக்கள் நடுவணில் தமிழீழ வான்படையின் வானூர்தி ஒன்று பறந்த நிகழ்வாகும். செப்டெம்பர் 18, 1998 - முதலாவது பறப்பிற்குப் பின்னர் வேறு பறப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இருந்தாலும், அப்படி நிகழ்ந்து தென்பட்டதற்கான அறிக்கைகள் ஏதும் கிடைக்கபெறாததால், இதுவே இரண்டாவது பறப்பாக என்னால் கொள்ளப்படுகிறது. இதில் பக்கவாட்டு இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனை ஒன்று பறப்பில் ஈடுபட்டிருந்தது. | ஆதாரம்: ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை (Gyroplane) பறப்பின் போது அச்சுதன் மற்றும் குசந்தன் - ன் படிமங்கள் செப்டெம்பர் 19, 1998 - தவிபு-வினர் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறிய வகை வானூர்தி மூலம் பரக்குடையிலிருந்து குதித்துப் பயிற்சிகளில் ஈடுபடுவதாக தமிழ்க் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாக 1/12/1998 அன்று உதயன் செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக பல நாட்களுக்கு முன்னர் நான் தேடிய போது வான்புலிகளின் வானோடியும் முதலாவது வான்கரும்புலியுமான ''நீலப்புலி" கேணல் ரூபன் பரக்குடையில் குதித்து எழும்பும் சிங்களப் படைத்துறையால் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட படிமம் ஒன்று எனக்குக் கிடைத்துள்ளது. அந்தப் படிமத்தில் 19/09/1998 என்று வலது மூலையில் திகதி அச்சிடப்பட்டுள்ளது. அதாவது தற்சுழல்பறனை பறந்த 18/09/1998 இற்கு அடுத்த நாள் இது நடந்திருப்பதால் அதே வானூர்தியிலேயே வான்புலிகள் பறந்து பரக்குடையில் குதித்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன். மேலும் செப்டெம்பர் 19, 1998 அன்று வன்னியில் தற்சுழல்பறனையின் நடமாட்டத்தை படையினர் கண்டிருந்தனர் என்று "திவயின" என்ற சிங்கள இனவாத நாளேடு செய்தி வெளியிட்டிருப்பதாக உதயன் நாளேடு ஒக்டோபர் 2, 1998 அன்று செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. | ஆதாரம்: உதயன் 1/12/1998 உதயன் 2/10/1998 வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன் பரக்குடையில்(parachute) குதித்து எழுந்த போது. | படிமப்புரவு: புலிகளிடமிருந்து சிங்களவரால் (Rajarata, Flickr) கைப்பற்றப்பட்டு வெளியிடப்பட்டது செப்டெம்பர் 26, 1998 - முல்லைத்தீவிற்கு மேலே ஏதோ ஒன்று பறப்பதை அம்மாவட்டக் கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களக் கடற்படை பதிவுசெய்து அத்தகவலை வெளியிட்டிருந்தது. இதுவே வான்புலிகளின் பறப்புத் தொடர்பாக முதன்முறையாக முற்றாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையிடப்பட்டு சிங்களத்தால் அலுவல்சாராக வெளியிடப்பட்ட தகவல் ஆகும். | ஆதாரம்: உதயன் 14/10/1998 ஒக்டோபர் 11, 1998 - கிளிநொச்சிப் பரப்பில் இனந்தெரியாத உலங்குவானூர்தி ஒன்று பறப்பதாக சிங்களக் காவல்துறையினருக்குக் கிடைத்த கமுக்கத் தகவலை அடுத்து தரைப்படையினரையும் வான்படையினரையும் காவல்துறையினர் விழிப்படையச் செய்ததாக சிங்களப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன் தெரிவித்தார். எழுதருகையாக (warning) சிங்கள வான்படையின் உலங்குவானூர்திகள் எல்லாம் பறப்பெதிலும் ஈடுபடாமல் தரையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். | ஆதாரம்: உதயன் 14/10/1998 ஒக்டோபர் 1998 - சிறிலங்காவின் முன்னணி வலுவெதிர்ப்பு பகுப்பாய்வாளரான இக்பால் அத்தாஸ் அவர்கள், ஒக்டோபர் 4, 1998 அன்று வெளியான சன்டே ரைம்ஸின் பாதுகாப்புப் பத்தியில், ஆளில்லா வேவு வானூர்தி மூலம் எடுக்கப்பட்ட வேவுப் படிமங்கள் மூலம் விடுதலைப்புலிகளிடம் உலங்குவானூர்தி அ உலங்குவானூர்திகள் இருப்பதை சிறிலங்காப் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். | ஆதாரம்: சன்டே ரைம்ஸ் ஒக்டோபர் 4, 1998 உதயன் 03/11/1998 நவம்பர் 3, 1998 - மட்டக்களப்பில் இருந்து 20 கிலோமீற்றர் தென்மேற்கே உள்ள உட்சிற்றூரான தாந்தாமலையில் விடுதலைப் புலிகள் பறப்பித்த உலங்குவானூர்தி தரையிறங்குவது தொடர்பில் மட்டக்களப்புக்கு தெற்கே அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்களுக்கு இன்று பிற்பகல் எழுதருகை விடுக்கப்பட்டுள்ளதாக டெலோவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதே வேளை கஞ்சிக்குடிச்சாறு பரப்பில் கால்நடை மேய்ப்பவர்களிடம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட குறுக்கு உசாவலில் அவர்கள் உட்பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று தரையிறங்கும் ஓசையைக் கேட்டதாகவும் ஆனால் அது சிங்களப் படையினருடையதாக இருக்கலாம் என்று எண்ணியதால் தாம் அதில் அக்கறைகாட்டவில்லை என்றும் தெரிவித்தனர். | ஆதாரம்: தமிழ்நெற் நவம்பர் 3, 1998 (Tiger helicopter flying in the East?) நவம்பர் 11 & 12, 1998 - குறித்த திகதிகளில் சிவப்பு நிற விளக்கை விட்டுவிட்டு ஒளிர்ப்பித்தபடி வான்புலிகளின் வானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டதைக் காணமுடிந்ததாக சிறிலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் தென்னக்கோன் தெரிவித்தார். | ஆதாரம்: தமிழ்நெற் நவம்பர் 19, 1998 (Tiger aircraft sighted again?) உதயன் 23/11/1998 நவம்பர் 17, 1998 - யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிப் பரப்பில் சிவப்பு நிற விளக்கை விட்டுவிட்டு ஒளிர்ப்பித்தபடி வான்புலிகளின் இனந்தெரியா வானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டதாகவும் அதன் மீது பருத்தித்துறைக் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிங்களக் கடற்படையினர் சுட்டதாகவும் கடற்படை வட்டாரங்கள் தமிழ்நெற்றிடம் தெரிவித்தன. | ஆதாரம்: தமிழ்நெற் நவம்பர் 19, 1998 (Tiger aircraft sighted again?) உதயன் 19/11/1998 உதயன் 23/11/1998 நவம்பர் 27, 1998 - முள்ளியவளை துயிலுமில்லத்தின் மீது வான்புலிகளின் "வானூர்திகள்'' பறப்பில் ஈடுபட்டு மலர்தூவியதாக புலிகளின் குரல் வானொலி செய்தி வெளியிட்டது. இதுவே புலிகள் தமது வானூர்தி ஒன்று வானில் பறந்ததை முதன் முதலில் வெளியுலகிற்கு அறிவித்த செய்தியாகும். | ஆதாரம்: தமிழ்நெற் நவம்பர் 28, 1998 (Tiger Air Wing participates in celebrations - VoT) 1998 - அறியில்லா திகதியில் வான்புலிகளின் முன்-பின் இருக்கைகள் கொண்ட ஒரு தற்சுழல்பறனை ஒன்று பறப்பில் ஈடுபட்டது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் ஏதேனும் ஒன்றில் தான் இது பறந்ததா அல்லது அவற்றில் இருந்து வேறுபட்ட திகதிகள் எதிலாவது பறந்ததா என்பது பற்றி நானறியேன். | ஆதாரம்: குறித்த ஆண்டில் படம்பிடிக்கப்பட்ட படிமங்கள். . தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) தற்சுழல்பறனையோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர். தமிழீழ வானோடி ஒருவர் தற்சுழல்பறனைக்கு முன்னால் நின்றபடி நிழற்படத்திற்கு பொதிக்கின்றார் (pose) 2000 - இரண்டாயிரமாம் ஆண்டு "வான்புலிகள் ஆண்டு" ஆக விடுதலைப்புலிகளின் தலைவரால் அலுவல்சாராக சாற்றாணைப்படுத்தப்பட்டது. நவம்பர் 27, 2004 - விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தின் மீது தற்சுழல் பறனை ஒன்று பூதூவிச் சென்றது. ஏப்பிரல் 03, 2005: வன்னியில் அறியில்லா இடமொன்றில் அமைந்திருந்த புலிகளின் வான்பொல்லம் (airstrip) ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் பல முக்கிய கட்டளையாளர்கள் முன்னிலையில் குண்டுதாரியாக மாற்றப்படாத புலிகளின் இலகு வானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டது. இந்தத் திகதியை மூலப் படிமத்தில் இருந்த திகதி மூலம் அறிந்துகொண்டதோடு இத் திகதியை தமிழ்நெட்டில் வெளிவந்த செய்திகளில் உள்ள திகதிகள் மற்றும் அச்செய்திகள் மூலம் தோராயமாகவும் உறுதிப்படுத்தியுள்ளேன். கிடைத்த படிமங்கள் மற்றும் நிகழ்படம் மூலம் அற்றை நாளில் இரு வானூர்திகள் பறந்திருந்தன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிலின் சி-143 வகையைச் சேர்ந்த இலகு வானூர்திகள் இரண்டு பறப்பில் ஈடுபட்டன. | ஆதாரம்: சிலின் 143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது தமிழ்நெற் மே 10, 2005 (LTTE ‘no threat to India’ - Thamilchelvan) தமிழ்நெற் மே 27, 2005 (Sri Lanka can arm but LTTE cannot – SLMM chief) ஒக்டோபர் 19, 2005: வவுனியா ஜோசப் கூட்டுப்படைத்தளத்தில் இருந்து வேவு நடவடிக்கைக்காக ஏவப்பட்ட சேர்ச்சர் விதம் 2 (Searcher Mark-II) வகை வண்டு (ஆளில்லா வான்கலம்) ஒன்று வவுனியா விஞ்ஞானகுளத்தில் 9ம் கட்டைக்கும் கரப்புக்குத்திக்கும் இடைப்பட்ட இடத்தில் விழுந்தது. இதனை வான்புலிகள் வான்வழித் தாக்குதல் மூலம் விழுத்தினர் என்று ஒரு சாராரும் கதுவீ ஆற்றுப்படுத்தும் சுடுகலன் மூலம் விழுத்தினர் என்று இன்னொரு சாராரும் ஊகம் தெரிவித்தனர். ஆனால் சிறிலங்கா வான்படை அலுவலகர்களோ, "பொறி செயலிழப்பு, மின்பிறப்பாக்கி செயலிழப்பு மற்றும் தகவல் தொடர்பு செயலிழப்பு எச்சரிக்கை செய்திகள் தரைக் கட்டுப்பாட்டில் ஒரே நேரத்தில் தோன்றியது பகைவரின் நடவடிக்கையால் வண்டு திடீரென அழிக்கப்படுவதைக் குறிக்கிறது." என்றனர். இவ்வாறு வண்டு ஒன்று போர்நிறுத்தக் காலத்தில் பிற கன்னையின் கட்டுப்பாட்டுப் பரப்பு மீது பறப்பது அமைதி உடன்படிக்கையை மீறும் செயலாகும். எனினும் பின்னாளில், வான்புலிகள் தாம் வானேறி இவ்வண்டை சுட்டுவீழ்த்தினர் என்பது தெரியவந்தது. | ஆதாரம்: தமிழ்நெற் ஒக்டோபர் 19, 2005 (Sri Lankan UAV comes down in Vanni) தமிழ்நெற் ஒக்டோபர் 24, 2005 (Media speculation on cause of UAV crash rebuffed) சூலை 23, 2006 மாலை 8:30 மணியளவில் - வவுனியா சிறிலங்காப் படையக் கட்டுப்பாட்டுப் பரப்பின் மீது வான்புலிகளின் சிலின் வகை வானூர்திகள் பறந்தது சிங்கள கதுவீகளில் தெரிந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு செய்தி வெளியிட்டது. அதே நேரம் இனந்தெரியா வானூர்தி ஒன்றினது ஓசையை அப்பகுதி சிங்களக் காவல்துறையினரும் கேட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். | ஆதாரம்: உதயன் 24/07/2006 சூலை ??, 2006 - வான்புலிகள் பரக்குடையிலிருந்து குதித்துப் பயிற்சியில் ஈடுபட்டதாக சிறிலங்காப் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்ததாம். | ஆதாரம்: உதயன் 24/07/2006 ஓகஸ்ட் 11, 2006 மாலை 9:30 மணியளவில் - குறித்த மாதத்தில் (11-19 வரை) யாழ் குடாநாட்டை மீட்பதற்காக புலிகள் நடாத்திய ஒரு வலிதாக்குதல் நடவடிக்கையின் போது பலாலி படைத்தளம் மீது வான்புலிகளின் வானூர்தி ஒன்று உந்துகணைத் தாக்குதல் மேற்கொண்டது தொடர்பாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் மாவீரர் மார்சல் எ இராசையா இளந்திரையன் அவர்கள் தெரிவிக்கையில், "எம் மக்களையும், தாயகத்தையும் பாதுகாக்க, எமது படைவீரர்கள், கடற்கலமர், வான்கலமர் மற்றும் ஈரூடகப்படையினரைப் பயன்படுத்துவோம்." என்று கூறி வான்தாக்குதலை சூசகமாக உறுதிப்படுத்தினார். இந்நடவடிக்கையில் 372 போராளிகள் வீரச்சாவடைந்ததோடு ஏறக்குறைய 500 வரையானோர் காயப்பட்டனர். இவ் வலிதாக்குதலும் தோல்வியில் முடிந்தது. | ஆதாரம்: தமிழ்நெற் ஓகஸ்ட் 11, 2006 (Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna) ஏப்பிரல் 16, 2007 அந்தி - புலிகளின் வானூர்தி என்று ஐயப்படும் வானூர்தி ஒன்று யாழ்ப்பாண நகர மையத்திலும் வடமரமாட்சி வடக்குக் கோட்டம் மற்றும் வலிகாமம் பிரிவிலும் தாழ்வாகப் பறந்து கடந்தது. பொதுமக்களும் சிங்களப் படையினரும் புலிகளின் வானூர்தி என்று கூறி ஐயுற்றனர். எனினும் இது சிங்கள வான்படையின் வானூர்தி இல்லையென்று சிறிலங்கா வான்படை பின்னாளில் அறிவித்தது. | ஆதாரம்: தமிழ்நெற் ஏப்பிரல் 16, 2007 (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=21903) ******
- கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
முடிவுரை இத்தோடு இத்திரட்டு முடிவிற்கு வருகிறது. என்னால் இயலுமானவரை கடற்புலிகளால் சிங்களவரின் கடற்படைக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை நம்பிக்கைக்குரிய செய்தி நிறுவனங்கள், நாளேடுகள் மற்றும் கடற்புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து திரட்டி எடுத்து கோர்வையாக்கி பதிவிட்டுள்ளேன். இத்திரட்டிற்கான தகவல் சேர்ப்பு மற்றும் எழுத்து வேலையை 2023ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் தொடங்கி சூலை மாத இறுதியில் முடித்துள்ளேன். தகவல் சேர்ப்பின் போது ஆயுதப் போர்க்காலத்தில் வெளிவந்த ஒவ்வொரு உதயன் நாளேடாக வாசித்து அதிலிருந்த தகவலை எடுத்து புலிகளின் அந்நிகழ்வு தொடர்பான தகவலோடு ஒப்பிட்டு இரண்டையும் ஒன்றாக்கி இங்கே வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு குறிப்பிட்ட சமர்கள் தொடர்பான புலிகளின் தகவலை வீரச்சாவடைந்த போராளிகளின் வாழ்க்கை வரலாறுகள், உயிராயுதம் தொடர் மற்றும் அவர்களின் ஊடக வெளியீடுகளிலிருந்தே எடுத்துள்ளேன். எமது பண்டைய வரலாற்றில், எமது முன்னோர்கள், கடலில் நடைபெற்ற கடற்சமர்கள் தொடர்பாக எதனையும் ஆவணப்படுத்தவில்லை. ஆதலால் இம்முறையும் அவ்வாறு நடைபெற்றுவிடக் கூடாது என்பதால் நான் இதனை செய்யத் துணிந்தேன். மேலும் எமது கடந்த கால தலைமுறையின் கடற்சமர் ஆற்றலையும் எமது தேசத்தின் ஒரே கடற்படையான விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் கடல்சார் போர்முறை வரலாற்றையும் இனிவரும் எமதினத் தலைமுறைகளுக்கு எடுத்தியம்பும் வகையாகவும் இவ் ஆவணம் திகழும் என்று முழுமையாக நம்புகிறேன். என் பின் இதனை ஆவணப்படுத்த விரும்புவோர் உங்களால் ஏலுமான வரை இதனை இற்றைப்படுத்துங்கள், வரலாற்றைப் பாதுகாக்குங்கள். நானும் என்னால் இயன்றவரை தகவல் கிடைக்கும் போதெல்லாம் இதனை இற்றைப்படுத்த முற்சிக்கிறேன். நன்றி! முற்றும் மொத்த ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 2009 இறுதிப்போரின் தகவல்கள் அவ்வளவாகக் கிடைக்கப்பெறவில்லை. இவை தவிர்த்து வேறு எதையும் வாசகர்கள் அறிந்திருந்தால் ஆவணப்படுத்தத் தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். திகதி: சனவரி 19, 2009 அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியிலிருந்து தொடங்கியது டோறா மீது இடியன் மோதிய நேரம்: சரியாகச் சாமம் 11:28 மணி நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுண்டிக்குளம் கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில், கடற்படையின் இரண்டாம் கட்ட தடுப்பு வலயத்துக்கு வெளியே, சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிங்களக் கடற்படையின் டோறா மீது கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சில நிமிடங்களிலையே டோறா மூழ்கியது. கரும்புலித் தாக்குதலின் பின்னர் கடற்புலிகள் சிங்களக் கடற்படையோடு பொருதினர். அப்போது கடற்படைக்கோ கடற்புலிகளுக்கோ ஏற்பட்ட மெய்யான சேத விரிப்பு வெளிவரவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) தொடரெண்: பி- 434 சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 19 பேர் காயப்பட்டோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: நிலவரம் 17/02/2009 | உதயன்: 21/01/2009 | மாவீரர் பட்டியல் திகதி: சனவரி 30, 2009 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10 மணியளவிலிருந்து தொடங்கியது நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த நாளில் வைகறை 3 மணியளவில் சுண்டிக்குளம் கடற்பரப்பில் இலக்கைத் தேடிச் சென்றுகொண்டிருந்த கடற்கரும்புலிப் படகொன்று கடற்படையினரால் காணப்பட்டு தாக்கியழிக்கப்பட்டது. இதில் சென்ற இரு கடற்கரும்புலிகளும் வீரச்சாவடைந்தனர். பின்னர் அதேநாள் நண்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவுக் கடலில் சுற்றுக்காவல் சென்றுகொண்டிருந்த டோறாக்கள் மற்றும் கடற்படையின் சிறப்பு படகுச் சதளத்தின் (SBS) 'செட்ரிக்’ (பழைய வகுப்புப் பெயர்: அரோ) வகுப்புப் படகுகளை உள்ளடக்கிய 15 வரையான படகுகளைக் கொண்டதொரு கலத்தொகுதியை கடற்புலிகள் வழிமடக்கித் தாக்கினர். இதில் இரண்டு ‘செட்ரிக்’ வகுப்புப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகள் அறிவித்தனர். கடற்புலிகள் தரப்பில் எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் சிறிலங்காக் கடற்படை அற்றை நாளில் நடந்த இரண்டாவது கடற்சமர் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: செட்ரிக் கல வகை: விரைவுத் தாக்குதல் வேகப்படகு சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: அறியில்லை கடற்கரும்புலி வகை: அறியில்லை சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: தாழ் தோற்றுருவக் கடற்கலம் ஆதாரம்: உதயன்: 31/1/2009 | நிலவரம் 17/02/2009 திகதி: பெப்ரவரி 8, 2009 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:30 மணியிலிருந்து 6:00 மணிவரை நிகழ்வு இடம்: முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் நிகழ்வு விரிப்பு: குறித்த நாளில் குறித்த நேரத்தில் கடற்புலிகளால் கடற்படையினர் மேல் மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதலால் கடற்சமரொன்று மூண்டது. நடந்த கடற்சமரில் கடற்புலிகளின் இரு தாழ் தோற்றுருவ (Low profile) வகை இடியன்கள் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. அவற்றில் முதலாவது இலக்கை நோக்கிச் சென்ற போது கடற்படையின் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியதாகவும் மற்றொன்று சுப்பர் டோறாவோடு மோதி அதை நாசப்படுத்தி மூழ்கடித்ததாகவும் புலிகள் அறிவித்தனர். மேற்கொண்டு தொடர்ந்த கடற்சமரில் கடற்புலிகளால் மற்றொரு சுப்பர் டோறா தாக்கிச் சேதமாக்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல, புலிகளின் இத்தகவலை சோடிக்கப்பட்ட ஒன்றென மறுத்த சிங்களக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க, கடற்புலிகளின் இரு கரும்புலிப்படகுகளையும் தாம் மூழ்கடித்து விட்டதாகத் தெரிவித்ததோடு ஒரு நிகழ்படக் காட்சியையும் வெளியிட்டனர். ஆனால் அதில் ஒரே ஒரு குண்டுப்படகு மட்டுமே வெடித்துச் சிதறும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது குண்டுப்படகு மூழ்கடிக்கப்படுவதற்கான காட்சியை வெளியிடவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை) சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 15 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 6 பேர் கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் வான்மீகி எ கனி, மேஜர் இசையரசன், மேஜர் உலகச்சேந்தன், மேஜர் கருணைநாதன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: அறியில்லை சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: தாழ் தோற்றுருவக் கடற்கலம் ஆதாரம்: உதயன்: 09/02/2009 | நிலவரம் 17/02/2009 திகதி: பெப்ரவரி 20, 2009 அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியளவில் நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களக் கடற்கலத் தொடரணியை கடற்புலிகளின் கலத்தொகுதி ஒன்று மறித்துத் தாக்குதல் நடத்தியது. கடற்புலிகள் பொருதிய போது கடும் சமர் வெடித்தது. அப்போது சிங்களக் கடற்கலத் தொடரணி மீது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கடற்கரும்புலித் தாக்குதலில் சுப்பர் டோறா ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. இக்கடற்சமரின் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட ஆளணி இழப்புகள் பற்றி அறியில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: ஆகக்குறைந்தது 1 ஆள் கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் மதியழகன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: அறியில்லை சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: அறியில்லை ஆதாரம்: தமிழ்நெற் 19/02/2009 (Sea Tigers sink SLN Super Dvora attack craft in Mullaiththeevu seas) திகதி: ஏப்ரல் 30, 2009 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 2:45 மணியிலிருந்து தொடங்கியது நிகழ்வு இடம்: முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் நிகழ்வு விரிப்பு: 29ம் திகதி எற்பாடு 4 மணியிலிருந்து கடலிலிருந்து கரையோரப் பரப்புகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி பொது மக்களைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியபடியும் இருந்தனர். இதனைக் கவனித்து வந்த கடற்புலிகள் 30ம் திகதி எற்பாடு 2:45 மணியளவில் சிறிலங்காக் கடற்படையினர் மீது ஒரு வலிதாக்குதலை கடலில் மேற்கொண்டனர். அப்போது மூண்ட கடற்சமரில் சிறிலங்காக் கடற்படையின் வோட்டர் ஜெட் ஒன்றும் டோறா ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகளால் அறிவிக்கப்பட்டது. இத்தாக்குதலில் கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை ஆதாரம்: தமிழ்நெற்: 30/04/2009 (SLN, SLA step up confrontations, Tigers sink two SLN vessels) ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 2008 திகதி: பெப்ரவரி 4, 2008 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியளவில் நிகழ்வு இடம்: மன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த பரப்பில் 450 மேற்பட்ட இந்திய இழுவலை படகுகள் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. எனவே அவற்றை விரட்டுவதற்காக சிங்களக் கடற்படையின் இரண்டு டோறாக்கள் பாய்ந்து சென்றன. அநேரத்தில் அனைத்து இந்திய இழுவலை படகுகளும் அகலவே இரண்டு மட்டும் நின்றுகொண்டிருந்தன. அவை பழுதடைந்து நிற்கின்றன எனக் கருதிய சிங்களக் கடற்படையினர் அவற்றிற்கு அருகே செல்ல முற்பட்ட போது அவற்றிலிருந்து உந்துகணை பிலுறுந்திய கைக்குண்டால் (ஆர்.பி.ஜி.) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இதையடுத்து அந்த டோறாவும் அதிலிருந்த 7 கடற்படையினரும் காணாமல் போனதாக படைத்துறை வட்டாரங்கள் கூறியதென்று தமிழ்நெற் செய்தியினை வெளியிட்டது. இது நிகழ்விற்கு அடுத்த நாள் (07/02) வெளியான தகவல் ஆகும். அடுத்த நாள் (07/02) இந்திய ஊடகம் ஒன்றிற்கு செவ்வியளித்த சிங்களக் கடற்படையின் பேச்சாளர் கொமொடோர் டி.ஜெ.பி. தஸநாயக்க தமது படகு ஒன்று மட்டும் சேதமடைந்திருப்பதாக மட்டும் கூறினார். ஆனால் இந்தக் காணாமல் போனது குறித்து அவர் கருத்து எதையும் கூறவில்லை. இந்நிகழ்வு குறித்து விடுதலைப்புலிகளும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. காணாமல்போன அ சேதமடைந்த கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 06/02/2008 | தமிழ்நெற்: 5/02/2008 (SLN Dvora missing in the seas off Mannaar) திகதி: பெப்ரவரி 7, 2008 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: தனங்களப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த பரப்பிலுள்ள கடற்கரையில் மாலை 6:45 மணியளைவில் தாக்குதலிற்கு ஆயத்தமாக நின்றதாகக் கூறப்படும் கடற்புலிகளின் படகொன்றின் மீது தாம் சேணேவி எறிகணை வீச்சு மேற்கொண்டதாகவும் அதில் அப்படகிலிருந்த நான்கு புலிவீரர்களும் அப்படகும் மூழ்கடிக்கப்பட்டதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டது. அதே நேரம் விடுதலைப்புலிகளோ தனக்களப்புப் பரப்பில் சிங்களக் கடற்படையுடன் மோதல் ஒன்று ஏற்பட்டது என்றும் அதில் கடற்படையின் இரு கரையோர காவலரண்கள் அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்ததோடு 40 குதிரைவலுவில் இயங்கவல்ல ஒரு படகும் (கட்டைப்படகு) கைப்பற்றப்பட்டது என்றும் அறிவித்தனர். கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) கலவகை: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 09/02/2008 திகதி: மார்ச் 22, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 2 மணியிலிருந்து 2:45 மணி வரை டோறா மீது இடியன் மோதிய நேரம்: வைகறை 2:10 மணியளவில் நிகழ்வு இடம்: நாயாற்றுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையின் பி 438 என்ற தொடரெண் கொண்ட டோறா கலத்தோடு கடற்புலிகள் குறித்த காலத்தில் பொருதிய போது வைகறை 2:10 மணியளவில் நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரி கொண்டு தாக்கி அழித்து மூழ்கடித்தனர். ஆனால் சிங்களப் படையினரோ கடற்புலிகள் தம்மோடு பொருதவில்லையென்றும் கடற்கரும்புலித் தாக்குதலே மேற்கொள்ளப்பட்டதென்றும் அறிவித்தனர். கடற்புலிகளின் படையேற்பாட்டுக் கப்பல்கள் 2007ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டதிற்கு பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவதுவது தாக்குதலாகையால் ‘பழிவாங்கல்-1’ என இத்தாக்குதலிற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிகத் தகவல்: இத்தாக்குதலின் பின்னர் அக்கடற்பரப்பில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கடற்படையினர் கீழ்வரும் ஒரு நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரியைக் (Diver aimed floating torpedo) கண்டுபிடித்தனர். இதற்குப் புலிகள் சூட்டியிருந்த வகை/வகுப்புப் பெயர் எனக்குத் தெரியவில்லை. இம் மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியுடன் ஒரு சிங்கள நீர்முழுகி மிதக்கும் காட்சி | படிமப்புரவு: Sri Lankan Navy படிமப்புரவு: Shutterstock மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 14 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிறஞ்சினி, மேஜர் கனினிலா கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரி ஆதாரம்: உதயன்: 23/03/2008 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 21/03/2008 (Black Sea Tigers sink SLN Dvora, 14 SLN killed - LTTE) திகதி: மே 10, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 2:23 மணி நிகழ்வு இடம்: திருகோணமலை சீனக்குடாவிலுள்ள அஷ்ரப் இறங்குதுறை நிகழ்வு விரிப்பு: திருகோணமலை சீனக்குடாவிலுள்ள அஷ்ரப் இறங்குதுறையில் காங்கேசன்துறைமுகத்திற்குக் கொண்டுசெல்வதற்காக படைக்கலன்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் நின்றிருந்த ஏ 520 என்ற தொடரிலக்கம் கொண்ட இன்விசிபிள் என்ற கப்பல் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவுக் கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இத்தக்குதலில் விடுதலைப்புலிகளால் நீரடிக் கடற்கலங்கள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டனவா என்பது தெரியவில்லை. வெடியதிர்வில் நகரமே அதிர்ந்ததாம். தாக்குதல் நடந்து 13 நிமிடங்களில் கப்பல் முழுமையாக தாண்டுவிட்டது. இக்கப்பாலனது 2007ம் ஆண்டு கடற்புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான 3 படையேற்பாட்டுக் (mili. logistics) கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிக்க உதவியதாகும். அதற்குப் பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலாகையால் ‘பழிவாங்கல்-2’ என இத்தாக்குதலிற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: இன்விசிபிள் (Invisible) கல வகை: கொள்கலன் காவி படிமம்: திருமலை துறைமுகத்தினுள் நுழையும் இன்விசிபிள் கப்பல் | படிமப்புரவு: Eaglespeak.com சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் அற்புதன், லெப்.கேணல் செம்பியவளவன் கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: அறியில்லை கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 11/05/2008, 18/05/2008 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour) திகதி: செப்டெம்பர் 18, 2008 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10:30 மணியளவிலிருந்து எற்பாடு 3:30 மணிவரை நிகழ்வு இடம்: இரணைதீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரணைதீவு நோக்கி மன்னாரிலிருந்து சிறிலங்காக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளம் மற்றும் விரைவுச் செயல் படகுச் சதளம் ஆகியன முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டன. இதில் 10 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மற்றும் 20 கூகர் வகுப்புப் படகுகள் என்பன களமிறக்கப்பட்டிருந்தன என்று புலிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர் நடவடிக்கையாக தாம் தமது சிறிய வகைப் படகுகளையே களமிறக்கியதாக புலிகள் தெரிவித்திருந்தனர். நண்பகல் 10:30 மணியளவிற்குத் தொடங்கிய கடும் கடற்சமர் எற்பாடு 3:30 மணி வரை நீடித்தது. முடிவில் சிங்களக் கடற்படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர் என்று கடற்புலிகள் தெரிவித்தனர். வழக்கம் போல் தம்தரப்பு இழப்புகளைப் புலிகள் வெளியிடவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 20/09/2008 திகதி: ஒக்டோபர் 22, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:10 மணியளவில் நிகழ்வு இடம்: காங்கேசன் துறைமுகத்தினுள் நிகழ்வு விரிப்பு: துறைமுகத்தினுள் மூன்று நீரடி நீச்சல் கடற்கரும்புலிகளில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் மக்களுக்கு உணவுகள் எடுத்து வருகிறோம் என்ற போர்வையில் படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிவந்த நிமலவ மூழ்கடிக்கப்பட்டதோடு றுகுணு சேதப்படுத்தப்பட்டது. மூன்றாவது கடற்கரும்புலியால் ஓட்டிவரப்பட்ட மிதக்கும் ஏவரி கவிழ்ந்தபடியே சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் சிங்களமோ வழக்கம் போல எந்தவொரு கப்பலும் மூழ்கடிக்கப்படவில்லை என்றும் நிமலவவிற்கு மட்டும் சேதமென்று தவறுத்தகவலைப் பரப்பியது. சிங்கள அரசின் ஒட்டுக்குழுவும் தமிழ்தேசிய எதிர்ப்புக் கட்சியுமான ஈபிடிபியும் இத்தாக்குதலைக் கண்டித்து கடையடைப்பிற்கு யாழில் அழைப்பு விடுத்திருந்தது. இந்நடவடிக்கைக்கு பெயர் ஏதேனும் சூட்டப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இக்கப்பலின் அடித்தளத்தில் சிறிலங்காப் படைத்துறைக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எம்வி நிமலவ (MV Nimalawa) கல வகை: வழங்கல் கப்பல் படிமம்: படிமப்புரவு: அறியில்லை படிமப்புரவு: shipspotting.com சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எம்வி மெர்க்ஸ் றுகுணு (MV MERCS Ruhunu) கல வகை: வழங்கல் கப்பல் படிமம்: படிமப்புரவு: MarineTraffic.com சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'கடற்புலிகளின் மகளீர் பிரிவு துணைக் கட்டளையாளர்' லெப். கேணல் தாட்சாயினி எ இலக்கியா (இந்நடவடிக்கையின் கட்டளையாளர்), லெப். கேணல் குபேரன் கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 3 (இரண்டு மோதியிடித்து வெடித்தன. மற்றொன்று கடலினுள் கவிழ்ந்தபடியே சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. எப்படி கவிழந்தது என்பது அறியில்லை) கல வகை: தாழ் தோற்றுருவத் தட்டை முச்சோங்கு (Low Profile Phontoon-Trimaran/Tritoon) கைப்பற்றப்பட்ட படிமம்: இதற்குப் புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் அ வகைப் பெயர் தெரியவில்லை. 'கடல் நீரில் கவிழ்ந்த நிலையில்' 'கடற்கரைக்கு கட்டியிழுத்து வந்த பின்னர்' 'கடையார்' ஆதாரம்: உதயன்: 23/10/2008 | தமிழ்நெற்: 22/10/2008 (Explosions target Sri Lankan ships in the seas off Vadamaraadchi), (Sea Tigers sink Sri Lankan supply ship) | றெக் சைற்: https://www.wrecksite.eu/wreck.aspx?286246 திகதி: நவம்பர் 1, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 4:00 மணியளவில் இருந்து காலை 7:00 மணி வரை நிகழ்வு இடம்: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பு & நாகர்கோவில் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தவிபு அறிக்கையின் படி, வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் குறித்த நாள் வைகறை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலமணியை சிறிலங்கா கடற்படையின் சுலவுக்கலம், வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மற்றும் பிற படகுகள் வழிமறித்துத் தாக்குதலை நடத்தின. அப்போது வெடித்த கடும் மோதல் 15 நிமிடம் நீடித்தது. கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர். இதன் பின்னர், அதே நாள் வைகறை 5:15 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறாக் கலங்கள், வோட்டர் ஜெட் படகுகள், சுலவுக்கலம் (Hovercraft) உள்ளிட்ட 20 கலங்களுடன் கடற்புலிகளினதும் கடற்கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்துக் காத்திருந்தனராம். இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனராம். இதில் டோறாக் கலம் ஒன்றும் சுலவுக்கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டனவாம். அத்துடன் வோட்டர் ஜெட் ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டதாம். அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் உந்துகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினராம். கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினராம். இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதாகவும் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர். ஆனால் இத்தாக்குதல் முடிந்தவுடன் சிறிலங்காக் கடற்படையினர் தமது சுலவுக்கலம் கொழும்பில் தரித்து நிற்பதாகவும் தாம் ஒரு கடற்தாக்குதலுக்கு ஏன் சுலவுக்கலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வினா எழுப்பியிருந்தனர். அத்துடன் இத்தாக்குதலில் தாம் எந்தவொரு கடற்கலத்தையும் இழக்கவில்லை என்றும் புலிகளின் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் இக்கடற்சமரின் போது தமது படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக அறிக்கையிட்டனர், சிங்களக் கடற்படையினர். முதலில் ஒன்றும் இழக்கவில்லை என்று கூறிவிட்டு பின்னர் ஒரு கடற்கலத்தை இழந்ததாக சிங்களம் கூறியிருப்பதால் சிங்களக் கடற்படையின் கல இழப்புத் தொடர்பான தகவலையும் நம்ப ஏலாமல் உள்ளது. சிறிலங்காக் கடற்படையின் சுலவுக்கலம் 2012ம் ஆண்டுதான் கடற்படையிலிருந்து ஆணையிழக்கப்பட்டது என்று சிங்களக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இத்தாக்குதல் தொடர்பில் புலிகள் வெளியிட்ட முதல் ஊடக வெளியீட்டில் உள்ள தகவல் தவறானது என்று புலப்படுகிறது. ஆதலால் இம்மொத்தத் தாக்குதல் தொடர்பான புலிகளின் & சிங்களக் கடற்படையின் தகவலை ஐயத்துடனே பார்க்கவேண்டியுள்ளது. புலிகள் இவ்வாறு செய்தது தரையில் ஏற்பட்ட தொடர் பின்னடைவுகளால் சோர்ந்து போயிருந்த மக்களை உற்சாகப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்ட பரப்புரைத் தகவலோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இல்லை, சிலவேளை விடுதலைப்புலிகள் "கூகர்" என்பதைத் தான் "கூவர்" என்று பிழையாகக் கூறினர் என்று எண்ணத் தோன்றினாலும் அவர்களின் கடந்தகால அறிக்கைகளின் உண்மைத்தன்மை இவ்வெணக்கருவிற்கு இடமளிக்க மறுக்கின்றன. எவ்வாறெயினும் போரின் போது ஓய்வு கிடைத்திருந்தால் புலிகள் தமது 'உயிராயுதம்' தொடர் மூலம் உண்மை நிலவரத்தை வெளியிட்டிருக்கக் கூடும்! மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: அறியில்லை புலிகள்: டோறா & சுலவுக்கலம் சிங்களக் கடற்படை: முதலில் ஒன்றுமில்லை என்று மறுப்புத் தெரிவித்திருந்தாலும், பின்னாளில் (2010) ஒரு கடற்கலம் என அறிக்கையிட்டுள்ளது சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: அறியில்லை புலிகள்: வோட்டர் ஜெட் இத்தாக்குதல் தொடர்பாக சிங்களவர் வெளியிட்ட காட்சிப்பதிவுகள்: சமர் முடிந்த பின்னர் அதே நாளில் செம்பியன்பற்றுக் கடற்பரப்பில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்று தாக்கப்படும் காட்சிப்பதிவினை இங்கு பதிவிட்டுள்ளேன். சிங்கள வான்படையின் வேவு வேனூர்திகள் மூலம் எடுக்கப்பட்ட நிகழ்பட காட்சிப்பதிவின் மூலம் ஆகக்குறைந்தது கடற்புலிகளின் ஒரு வேவ் ரைடர் சண்டைப்படகாவது சிங்கள வான்படையால் செம்பியன்பற்றுக் கடற்பரப்பில் காலை 8:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் தாக்கப்பட்டுள்ளது (மூழ்கடிக்கப்பட்டதா சேதமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை) தெளிவாகத் தெரிகிறது (இவ் வான் தாக்குதலில் கடற்புலிகளின் இரு சண்டைப்படகுகள் அழிக்கப்பட்டதாக சிங்கள வான்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). கடற்சண்டையின் அகச்சிவப்புக் காட்சிப்பதிவு: சிங்களக் கடற்படையால் வெளியிடப்பட்ட இவ் அகச்சிவப்பு நிகழ்படக் காட்சிப்பதிவில் கடற்புலிகளின் நான்கு இடியன்கள் வெடிப்பது தெரிகிறது. முதலாவது பேரொளிகள்: இரு இடியன்கள் வேறு இரு கடற்கலங்களை அண்மையாக நெருங்கிய பின்னர் ஏற்படுகிறது. இதனால் இரு தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளன. பின்னர் அங்கு இரு கடற்கலங்கள் தொடர்ந்து சுடர்விட்டு எரிகின்றன. கரும்புலிப்படகுகள் எரிந்தாலும் இப்படித்தான் தெரியும் என்பதை உயிராயுதம் தொடர் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இரண்டாவது பேரொளி: எப்படி ஏற்படது என்று தெரியவில்லை. ஆனால் இது கண்டிப்பாக ஏதேனும் ஒரு கடற்கலத்துடன் மொதியதால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில் மோதியிடிப்பதன் மூலம் ஏற்படும் கரும்புகை எழுந்து மேற்பரப்பில் பரவுவது தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் கடற்கலங்கள் எதுவும் தொடர்ந்து சுடர்விட்டு எரியவில்லை. மூன்றாவது பேரொளி: தீப்பிழம்பு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் கடற்கலமொன்று தொடர்ந்து சுடர்விட்டு எரிகிறது. சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை புலிகள்: 20 பேர் சிங்களக் கடற்படை: 5 பேர் வீரச்சாவடைந்த மொத்தப் போராளிகள்: அறியில்லை கடற்கரும்புலிகள்: 7 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் பதுமன் (பதுமன் மாஸ்டர்), லெப். கேணல் புலிக்குட்டி, லெப். கேணல் கண்ணன், மேஜர் கலைமதி, மேஜர் செந்தூரன், கப்டன் அகச்சேரன், கப்டன் கொள்கைக்கோன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: அறியில்லை தரநிலையுடனான பெயர்கள்: சிறிலங்காக் கடற்படையின் தகவலின் படி, தாம் ஒட்டுக்கேட்டதாகவும், அதன் மூலம் 7 கடற்கரும்புலிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 16 பேர் காயப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதை உறுதிப்படுத்த முடியவில்லை. அத்துடன் கடற்சமரின் பின்னர் தாம் நடாத்திய தேடுதல் வேட்டையின் போது கடற்புலிகளின் 4 சிதைந்த சடலங்களையும் சில படைக்கலன்களையும் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர். மேலும், 4ம் திகதி தவிபு ஓ 2922 என்ற தகட்டெண் உடைய ஆண் போராளியின் வித்துடல் பருத்தித்துறைக் கடற்கரையிலுள்ள சிங்களக் காவலரண் ஒன்றிற்கருகில் கரையொதுங்கியது. இது இக்கடற்சமரின் போது கொல்லப்பட்ட போராளியினுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 4 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 2/11/2000 | தமிழ்நெற்: 1/11/2008 (SLN Dvora, hovercraft sunk in major naval clash - Sea Tigers), 4/11/2000 (Male corpse washed ashore on Point Pedro coast) திகதி: நவம்பர் 18, 2008 அடிபாட்டுக் காலம்: காலை 6:15 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்கள் நிகழ்வு இடம்: முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவு நாயாற்றில் உள்ள கறுப்புமுனைக் நோக்கி சிறிலங்காக் கடற்படையின் சிறப்பு கடல் அதிரடிப்படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிக்கு எதிரான கடற்புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் இதுவாகும். குறித்த பரப்பு நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்காக் கடற்படையின் இரண்டு வோட்டர் ஜெட் படகுகள் மற்றும் 12 அரோப் படகுகளைக் கொண்ட சிறப்பு அதிரடிப்படை அணியை வழிமறித்து 6:15 மணியளவில் கடற்புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். சிங்களக் கடற்படையின் இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்காத் தரைப்படையினர் செறிவான எறிகணை வீச்சை மேற்கொள்ள வான்படையினர் மிக்- 27 தாரை வானூர்திகள் மற்றும் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவனூர்திகள் கொண்டு வான் சூட்டாதரவில் மிண்டினர். இருந்தபோதிலும் கடற்புலிகள் மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வலிதாக்குதலை முறியடித்தனர். கடற்புலிகள் தம் தரப்பில் எதுவித இழப்பும் ஏற்படவில்லையென்று தெரிவித்தனர். சேதமடைந்த கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: "சிறப்புப் படகுகள்" (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை. ஆனால் சிறப்புப் படகுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவை அரோ ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 19/11/2008 ******
- 27 replies
-
-
- 1
-
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
Muthur Tamil refugees in Trincomalee school.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Muthur Tamil refugees in Trincomalee Tamil school.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- TRO Trincomalee district deputy head Mr.C.Kumaragurubaran hands over relief materials to displaced Muthur Muslim refugee woman sheltered in Trincomalee Zahira College..jpg
-
07_08_06_tro_01 TRO assists IDPs in Muttur east, Eachchilampathu division, Trincomalee.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
LTTE controlled areas in Trinco.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
ஜெயசிக்குறு எதிச்சமரொன்றின் போது பரம்பப்பட்ட (overrun) சிங்களத்தின் சிறிய முகாமொன்றினுள் மட்டு-அம்பாறை படையணியினர் இப்படிமங்களின் பெரிய அளவிலான படிமங்கள் உங்கள் ஆரிடமேனும் இருந்தால் கொடுத்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சிங்களப் படையினரின் சடலங்கள் சிதறிக் கிடப்பதைக் காண்க
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (8).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (9).jpg
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (5).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (6).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (7).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (4).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
ஜெயசிக்குறு எதிர்ச்சமர் காலத்திய படிமங்கள் இப்படிமங்களின் பெரிய அளவிலான படிமங்கள் உங்கள் ஆரிடமேனும் இருந்தால் கொடுத்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces