Everything posted by நன்னிச் சோழன்
- He was a former Sea Tigers commander and later became a Sea Black Tiger - Sea Black Tiger Lt. Col. Valluvan Master.jpg
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மார்ச் மாதம் முதலாம் திகதிக்கும் 12ம் திகதிக்குமிடையில் வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் தரநிலையுடனான பெயர் விரிப்பு: கடற்புலி லெப். கேணல் சலீம் லெப். கேணல் மாறன் லெப். கேணல் அன்பழகன் லெப். கேணல் எழில்செல்வன் (ராதா வான்காப்புப் படையணி) மேஜர் தமிழ்மாறன் மேஜர் மலர்செம்மல் கப்டன் இளவேலன் கப்டன் கலைக்கதிரவன் கப்டன் கதிர்நிலவன் கப்டன் கலையினியன் மார்ச் 30: சாலைக் கடற்பரப்பில் நடந்த சமரில் கடற்புலி லெப். கேணல் மாறன் மற்றும் சில போராளிகள்
-
1986 credits to james nachutwey.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte kfir class craft of sea tigers.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kokulan 2-93 ltte sea tigers' semi-submarine... 4.3 m long, 1.2 m wide. 1.15m height.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்
-
ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4 September 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும் தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் கொழும்பில் ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டனர். மூன்று மாதங்களின் பின்னர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சுதந்திரன் பத்திரிகைக்கான தடை நீங்க மேலும் பல மாதங்கள் சென்றன. தடை நீங்கிய பின் செயற்குழுக் கூட்டம் 02.11.1958 இல் நடைபெற்றது. இதில், தொடர்ச்சியாக சாத்வீக வழியில் போராடுதல் என முடிவெடுக்கப்பட்டதுடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் யாழ் நகரத்திலுள்ள தேனீர்க் கடைகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதை ஒழிக்கும் பொருட்டு யாழ் நகரத் தேநீர்ச் சாலை உரிமையாளர்களின் மாநாடொன்றை நடாத்துவதென்றும், 24.11.58 தொடக்கம் ஒரு வாரம் தீண்டாமை ஒழிப்பு வாரமாக அனுஷ்டிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், சு. நடராசா என்போர் இவ்வேலைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். வன்னியசிங்கத்தின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட தேநீர்ச்சாலை உரிமையாளர்களின் மாநாட்டில் யாழ் நகர உணவு விடுதிகளில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை என ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரசாரம், சமபந்திப் போசனம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டது. மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி உயர்கல்விக்கு வசதியற்ற மலைநாட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் 25 பேருக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். விடுதி வசதி, இலவசப் புத்தகங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளில் கட்சியின் சார்பில் கு. வன்னியசிங்கம் ஈடுபட்டார். 1959 செப்டெம்பர் 17 இல் கு. வன்னியசிங்கம் மரணமடைந்தார். இதே மாதம் பண்டாரநாயக்காவும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்ப நிலையால் பொதுத் தேர்தல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது. 1960 மார்ச் தேர்தலும் சிம்மாசனப் பிரசங்கத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்படலும் 1959 புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் கீழ் 1960 மார்ச் இல் தேர்தல் நடைபெற்றது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 176, 492 வாக்குகளைப் பெற்று 15 தொகுதிகளில் வெற்றியீட்டியது. இதைவிட கட்சியின் ஆதரவினைப் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஐக்கிய தேசிய கட்சியும் 50 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 46 இடங்களையும் கைப்பற்றியது. டட்லி ஆட்சியை அமைத்ததும் பாராளுமன்றத்தில் ஆதரவை நாடினார். தமிழரசுக்கட்சி இரு பெரும் கட்சிகளிடமும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவையாவன: பண்டா – செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் பிரதேச சபைகள் நிறுவப்படல் வேண்டும். அதற்கிடையில் தமிழ்ப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் யாவும் தமிழ்மொழிக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம் ‘நாடற்ற தமிழர்’ என்ற நிலை நாளடைவில் மாற வேண்டும். குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 06 நியமனப் பிரதிநிதிகளில் 04 பேர் மலைநாட்டுத் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் நியமிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதையொட்டிய விபரங்கள் ஆளும் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படல் வேண்டும். அத்துடன் ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இக்கோரிக்கைகளை எழுத்தில் பெற்ற டட்லி அதனை நிராகரித்தார். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட சீ.பி.டி. சில்வா, ஏ.பி. ஜெயசூரிய, மைத்திரிபால சேனநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்போர், கோரிக்கைகள் பண்டாரநாயக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதால் அதனைத் தாம் ஏற்பதாகக் கூறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடனான உடன்பாட்டின்படி 1960 ஏப்ரல் 22 ஆம் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தமையினால் அரசாங்கம் பதவி விலகியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முற்பட்ட போது தமிழரசுக்கட்சியும் அதற்கு ஆதரவை வழங்கியது. இது தொடர்பான கடிதம் செல்வநாயகம், என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, சி.பி.டி. சில்வா என்போர் சார்பில் கையொப்பமிட்டு மகாதேசாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மகாதேசாதிபதி இதனைக் கருத்திற் கொள்ளாமல் மரபை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார். 1960 யூலை தேர்தலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்குறுதிகளை மீறுதலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையினை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஏற்றார். இருப்பினும் 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்கள் தம்மைத் தோற்கடித்தார்கள் என இனவாதப் பிரசாரத்தினை மேற்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்ரீலங்கா சமஷ்டிக் கட்சி எனக் கேலி செய்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 75 ஆசனங்களைப் பெற்று தனியாக ஆட்சி பெறக்கூடிய நிலையை எய்தியது. தமிழரசுக் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 218, 753 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடனான உடன்பாட்டை நிறைவேற்றப்போவதாகக் காட்டிக்கொண்டது. 1957 ஆம் ஆண்டு தனிச் சிங்களத்தில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக்கட்சி இத்தடவை தமிழ் மொழிபெயர்ப்பும் உடன் வாசிக்கப்பட்டதால் பிரசங்கத்தில் கலந்துகொண்டது. எனினும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தது. தொண்டமான் நியமனப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். உடன்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது பற்றி பிரதமர் தலைமையில் அமைச்சர் குழுவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களத்தை நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை நீதியமைச்சர் சாம்.பி.சி. பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனால் அரசிற்கும் தமிழரசுக் கட்சியிற்கும் இடையிலான உறவு சிதைவடைந்தது. சட்டமூலத்திற்கு தமிழரசுக்கட்சி பலமான எதிர்ப்பைத் தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே சமயம் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின் கீழ் மிகக்குறைந்த உரிமைகள் வழங்கும் சட்டத்தையும் நீதிமந்திரி சமர்ப்பித்தார். இருப்பினும் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. இரண்டாவது தடவையும் சிங்களத் தலைமைகள் வாக்குறுதிகளை கைவிட்டமையால் தமிழரசுக்கட்சி போராட்டத்திற்குத் தயாராகியது. 1961 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச் சிங்களச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் சிங்கள உத்தியோகத்தர்களும் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தமிழரசுக்கட்சி நடாத்த இருந்த போராட்டத்தின் முதற்படியாக செல்வநாயகம் தலைமையில் மக்கள் ஊர்வலமாக யாழ் கச்சேரிக்குச் சென்று தமிழில் நிர்வாகம் நடாத்தப்படல் வேண்டும் என்று மனுச் சமர்ப்பித்தனர். தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநில மாநாடு (1961 ஜனவரி, யாழ்ப்பாணம்) 1961 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வன்னியசிங்கம் அரங்கில் மாநாடு நடைபெற்றது. பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த சி.மு. இராசமாணிக்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது என்றும், பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பிப்பது என்றும், தொடர்ந்து மற்றைய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) சத்தியாக்கிரகத்தை ஒரு நாளைக்கு ஒரு தொகுதியின் மக்களினால் அத்தொகுதி உறுப்பினர் தலைமையில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது (பொலிசார் கைது செய்யலாம் எனக் கருதியே இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டது). 1961 பெப்ரவரி 20 ஆம் திகதி செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதி மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றினர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் வெளியில் உதவிக்கு நின்றனர். முதலாம் நாள் திட்டமிட்டபடி யாழ் அரசாங்கச் செயலக வாசலில் எவரும் உள்ளே செல்லவிடாது தடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் பிரதான வாயில் ஊடாக அலுவலர்கள் உள்ளே செல்வதற்கு பாதை அமைக்க முற்பட்ட போது எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் அவ்விடத்துக்குச் சென்று பாதைக்குக் குறுக்கே படுத்துக்கொண்டனர். பொலிஸார் பலாத்காரமாக சத்தியாக்கிரகிகளை தூக்கி அப்புறப்படுத்த முற்பட்டு மிருகத்தனமாகத் தூக்கி வீசினர். இதனைப் பார்த்துக்கொண்டு வெளியில் நின்ற மக்களும் நூற்றுக்கணக்கில் சத்தியாக்கிரகிகளோடு சேர்ந்தமையினால் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அன்று பகல் 11 மணிக்கு மேல் நீதிமன்றத் திறப்புவிழா இடம்பெற்றது. அதற்குரிய ஆணையை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க அதிபர் நீதியரசரிடம் கொடுப்பதற்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமைந்திருந்த பழைய பூங்கா வாயிலிலும் சத்தியாக்கிரகவாசிகளினால் மறியல் போராட்டம் செய்யப்பட்டது. குண்டாந்தடிகளினால் சத்தியாக்கிரகிகளைத் தாக்கி அவர்களுக்கு ஊடாக அரசாங்க அதிபரின் வண்டியைக் கொண்டு செல்ல பொலிஸார் முற்பட்டனர். ஈ.எம்.வி. நாகநாதன் உட்பட பல சத்தியாக்கிரகிகள் காயங்களுக்கு உட்பட்டனர். 2 ஆம் நாள் சத்தியாக்கிரகம் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்களால் அ. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. முதலாம் நாள் பொலிஸாரின் அட்டூழியத்திற்குப் பலத்த கண்டனம் ஏற்பட்டதால் அவர்களின் அட்டூழியம் சற்றுக் குறைவடைந்தது. எனினும் அரச ஊழியர்களை சத்தியாக்கிரகிகளுக்கூடாக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு அரச ஊழியர்களும் மறுப்புத் தெரிவித்தனர். 3 ஆம் நாள் வி.ஏ. கந்தையா தலைமையில் ஊர்காவற்துறை மக்களும், 4 ஆவது நாள் என். நவரத்தினம் தலைமையில் சாவகச்சேரி மக்களும் கலந்துகொண்டனர். இவ்வாறு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றமையினால் யாழ் மாவட்ட அரச நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்படல் 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டமெங்கும் யாழ்ப்பாணத் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஹர்த்தால் நடைபெற்றது. 1961 பெப்ரவரி 28 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கச் செயலகத்தின் முன்னாலும் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 மார்ச் 4 ஆம் திகதி திருகோணமலையில் அரசாங்கச் செயலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததுடன் மூதூரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மார்ச் 22 ஆம் திகதி படுகாயமுற்ற ஏகாம்பரம் மரணமடைந்தார். தொடர்ந்து மன்னார், வவுனியா அரசாங்கச் செயலகங்களுக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்பட்டது. “இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கமே இல்லை” என பிரதமர் செனற் சபையில் கூறினார். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராகியது. அரசின் சார்பில் நீதி அமைச்சர் பி.எல். பெர்ணான்டோ பங்குபற்றினார். மு. திருச்செல்வத்தின் கொழும்பு இல்லத்தில் 1961 ஏப்ரல் 05 ஆம் திகதி இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொழியுரிமை தொடர்பாக மிகக்குறைந்த கோரிக்கைகளில் கூட உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தைத் தொடருவது எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் அரசு தபால் சேவை போராட்டத்தின் தீவிரத்தினால் அரசாங்கம் பங்கீட்டு உணவு வழங்காது மக்களைப் பணியவைக்க முற்பட்டது. இதனால் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும் நோக்கத்துடன், அரச தபால் சேவை சட்டத்தை மீறி, தமிழரசு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 14 ஆம் திகதி பகல் 12 மணிக்கு செல்வநாயகம் இதனை ஆரம்பித்து வைத்தார். 10,000 பேர் வரிசையில் நின்று தமிழரசு தபால் தலைகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழரசு தபால் சேவையின் தபால் மா அதிபராக செனட்டர் நடராசா நியமிக்கப்பட்டார். தமிழரசு தபால் பெட்டிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டது. அவசரகால, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலும், இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்ளுதலும் 1961 ஏப்ரல் 17 ஆம் திகதி 12 மணிக்கு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட அதேவேளை 48 மணிநேர ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. கச்சேரியின் முன் அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் தாக்கப்பட்டனர். பழனியப்பன் என்ற இளைஞரினது தொடை துளைக்கப்பட, அவர் மயக்க நிலையை எய்தினார். பெண் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு பல மைல்களுக்கு அப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் – இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வடக்கு – கிழக்கு இராணுவ ஆட்சியின் கீழ் விடப்பட்டது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் உட்பட தலைவர்களும் பிரதான தொண்டர்களுமாக 74 பேர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி, சுதந்திரன் பத்திரிகை என்பன தடை செய்யப்பட்டதோடு சுதந்திரன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு வந்தது. இரகசிய ஏடுகள் பிரசுரமாதல் ‘சத்தியாக்கிரக’ என்ற ஆங்கில ஏடு மாதம் இருமுறை தட்டச்சில் வெளியாகியது. ‘தமிழன் கண்ணீர்’ என்ற தமிழ் ஏடும் வெளியாகியது. கோவில் பிரார்த்தனைகளை கட்சி ஒழுங்கு செய்தலும், எஞ்சியிருந்த தலைவர்கள் அதில் பேசுதலும் (கூட்டம் நடாத்துவது தடை செய்யப்பட்டிருந்தமையால்) இடம்பெற்றது. சத்தியாக்கிரகிகள் தாக்குதல் தொடர்பில் மலையகத்தில் எழுச்சி சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது தொண்டமான் நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தினார். வவுனியா, மன்னார் பகுதிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேரடியாகவே பங்குபற்றினர். வவுனியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி நடேசபிள்ளையும் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். சத்தியாக்கிரகம் நசுக்கப்பட்டதற்கு முதல் நாள், 1961 ஏப்ரல் 24 ஆம் திகதி தோட்டத்தொழிலை அத்தியாவசிய சேவையாக்கும் சட்டவிதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. எனினும் 1961 ஏப்ரல் 25 ஆம் திகதி 5 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியின் நான்கு அம்சக் கோரிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்தது. இதேவேளை தோட்டப்பகுதிக்கும் இராணுவம் அனுப்பப்பட்டது. 1961 ஐப்பசியில் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கட்சியின் தடை நீங்க மேலும் சில மாதங்கள் சென்றன. மீண்டும் சிங்கள ‘ஸ்ரீ’ பஸ்வண்டி 1958 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடவிடப்படவில்லை. ஆனாலும் 1961 ஐப்பசியில் சிங்கள ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. பஸ்வண்டி வந்து சேர்ந்த மறுநாளே இளைஞர்கள் சிலர் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலாளிகளையும் சுட்டுக்காயப்படுத்தி பஸ் வண்டியையும் தீக்கிரையாக்கினர். அடுத்த நாள் எஞ்சிய ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் மீளப் பெறப்பட்டன. தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடு – மன்னார் (1961 ஓகஸ்ட் 31, செப்டெம்பர் 1, 2) தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடானது மன்னாரில் 1961 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டெம்பர் மாதம் 1, 2 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. சி.மு. இராசமாணிக்கம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 1963 ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பிந்தாமல் போராட்டத்தை ஆரம்பித்தனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு என கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் அமைப்பு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன்படி ‘இலங்கைத் தொழிலாளர் கழகம்’ ஹட்டனில் 22.12.1962 (சனி) அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக அ. தங்கதுரை தெரிவு செய்யப்பட்டார். இந்தியாவின் மீதான சீனாவின் படையெடுப்பில் இந்தியாவுக்கு ஆதரவு 1961 இறுதியில் சீனா இந்தியாவின் மீது படையெடுத்தது. இவ்விடயத்தில் சீனாவைக் கண்டித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு 18.11.1961 இல் தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தின் விபரம்: சர்வதேசக் கண்ணியத்தையும் கௌரவமான நடத்தையை மீறியும் உலகத்திற்குத் தானும் பிரகடனப்படுத்திய பஞ்சசீலக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டும் கம்யூனிஸ்ட் சீனா, இந்தியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆசியாக்கண்டத்தில் ஜனநாயகம் நிலைபெறவும், தனது நாட்டையும் தேசிய கௌரவத்தையும் காப்பாற்றவும் நடாத்தப்படும் இப்போரில், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் தனது ஆதரவை அளிப்பதுடன் இந்திய மக்களுடன் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கிருக்கும் ஐக்கியத்தையும் காட்ட, கட்சி விரும்புகின்றது. ஏகாதிபத்தியச் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தனது சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு நல்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை இக்கட்சி கேட்டுக்கொள்கிறது. தனது பாதுகாப்பிற்குப் போதிய ஆட்பலம் இந்தியாவிடம் இருப்பினும், மாண்புமிக்க கொள்கைகளுக்காகவே இந்தியா போரிடுவதால், மனித சுதந்திரத்திற்காக நடத்தப்படும் இப் புனிதப்போரில் ஒரு சிறிதளவேனும் பங்கெடுக்க விரும்புவதனால், இப்போரில் பங்கெடுப்பதற்காக இலங்கைவாழ் தமிழ்பேசும் இளைஞர்களைத் தொண்டர்களாகச் சேரும்படி இக்கட்சி அழைக்கின்றது. மந்திரிமார் வருகைக்கு மீண்டும் எதிர்ப்பு தமிழரசுக்கட்சியை மீண்டும் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தும் வகையில், 24.02.1963 இல் கட்சிச் செயற்குழு மந்திரிகள், அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கிற்கு வரும்போது, வருகையை எதிர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் வடக்கு – கிழக்கிற்கு கோலாகல விஜயங்கள் செய்யின் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் அமைச்சர் ரி.பி. இலங்கரத்தின வருகைதந்த போது கறுப்புக்கொடி காட்டினர். நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பருத்தித்துறை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திறப்புவிழாவிலும் அணிவகுத்து நின்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர். இவ்வார்ப்பாட்டத்தின் போது ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.ஏ. கந்தையா உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். தாக்குதலினால் பாதிக்கப்பட்ட வி.ஏ. கந்தையா 4.06.1963 இல் மரணமடைந்தார். தொடர்ந்து வ. நவரத்தினம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ‘எல்லாம் தமிழ் இயக்கம்’ உருவாதல் சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங்களைத் தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமாக எல்லாம் தமிழ் இயக்கத்தை 1963 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதியில் உருவாக்கினர். இதன்படி தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள், வேறு அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றின் முன் போராட்டக்காரர்கள் விண்ணப்பங்கள், தந்திகள், முகவரிகள் என்பவற்றை தமிழில் எழுதுமாறு தூண்டினர். தேவையானவர்களுக்கு தாமே எழுதிக்கொடுத்தனர். அரசாங்கம் 1964 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சத்தியாக்கிரகத்தால் கைவிடப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை வடக்கு – கிழக்கில் அமுல்படுத்தப்போவதாக அறிவித்தது. தமிழரசுக் கட்சி முழுச் சக்தியையும் திரட்டி இதனை எதிர்ப்பது என 30.6.1963 இல் கொழும்பில் தீர்மானித்தது. அரசாங்கம் தீர்மானித்தபடியே சிங்கள அரசாங்க ஊழியர்களை வடக்குக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. அதேவேளை தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தைத் திணிக்கும் நோக்கில் 2000 சிங்கள ஆசிரியர்களையும் வடக்கு – கிழக்கிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி இதனைப் பகிஷ்கரிப்பது என்றும் இப்போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்களை இணைப்பது என்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கட்சியின் போராட்ட அச்சத்தினால் சிங்கள ஊழியர்கள், ஆசிரியர்கள் வடக்கு – கிழக்குக்குச் செல்ல மறுத்தனர். இதனையொட்டி, அரசு 01.01.1964 அன்று அறிவித்தமைக்கு எதிரான மாபெரும் கண்டன ஊர்வலங்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா என்பவற்றில் நடாத்தியது. அவ்வவ் மாவட்டக் கச்சேரிகளுக்கு முன்னால் தனிச்சிங்களச் சட்டப்பிரதிகளையும் எரித்தது. பாதயாத்திரை சாதி பேதத்தை ஒழிக்கவும் கட்சியின் இலட்சியங்களை மக்கள் முன் பிரசாரம் செய்யவும் என பாதயாத்திரை நடாத்தப்பட்டது. செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமானது. பலவாரங்களாக நடைபெற்ற பாதயாத்திரையின் போது தங்கிநிற்கின்ற இடங்களில் தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும் கருத்தரங்குகளை நடாத்தினர். அரசு மீண்டும் சமரசப்பேச்சுக்கு வருதல் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைமையில் தொழிற்சங்கங்கள் 21 கோரிக்கைகளை சமர்ப்பித்து பெரிய போராட்டத்துக்கு ஆயத்தங்களைச் செய்தன. இந்நேரம் தமிழரசுக்கட்சியின் ஆதரவை அரசாங்கம் வேண்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் பிரதான அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியை தன்னுடன் இணைப்பதில் வெற்றி கண்டது. இதன்பின்னர் தொழிற்சங்கப் போராட்டமும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு 1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் திருகோணமலை இடம்பெற்றது. இம்மாநாட்டில் செல்வநாயகம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இதன்போது தொடர் போராட்டம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இந்தியாவின் சார்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் லாவ்பகதூர் சாஸ்திரியும் கையொப்பமிட்டனர். இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் 975,000 பேரில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதென்றும் 300,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதென்றும் முடிவிற்கு வந்தனர். மீதி 15,000 பேர் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் உடன்பாட்டிற்கு வந்தனர். 1967 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தின் மூலம் இது நடைமுறைக்கு வந்தது. திருப்பி அனுப்பப்படும் செயன்முறை 15 வருட காலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனத் தீமானிக்கப்பட்டது. மலையக மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் எந்தவிதக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் தலைவர் தொண்டமான் நியமன உறுப்பினராக இருந்தபோதும் அவருடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது விட்டனர். தமிழரசுக் கட்சி இதனைக் காரசாரமாக எதிர்த்தது. இந்தியா தன்னுடைய நலன்களுக்காக மலையக மக்களை விலையாகக் கொடுத்த நிகழ்வாக இது இருந்தது. மலையக மக்களின் அரசியல் பலம் பலவீனமடைந்தது. இது பற்றி மனோகணேசன் கூறும் போது “இந்தியா முழு மலையக மக்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழுப்பேரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். அரசாங்கம் கவிழ்தல் அரசாங்கம் ஏரிக்கரை பத்திரிகையை தேசியமயமாக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது. அரசாங்கக் கட்சியின் சபை முதல்வர் சி.பி.டி. சில்வா தலைமையில் பல உறுப்பினர்கள் இதனை எதிர்த்து எதிர்க்கட்சிக்கு மாறினர். இந்நிலையில் அமைச்சர்கள் பலர் தமிழரசுக்கட்சியின் உதவியை நாடினர். ஆனால் முன்னைய அனுபவத்தினால் அதனை கட்சி நிராகரித்தது. மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தது. இதனால் அரசாங்கம் கவிழ்ந்தது. 1965 மார்ச் பொதுத்தேர்தல் இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 217,986 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றினர். ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி 41 இடங்களையும் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழரசுக்கட்சியின் ஆதரவை நாடினர். இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி அரசில் சேர்ந்தது. டட்லி – செல்வா ஒப்பந்தம் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழியில் நிர்வாகம் நடத்துவதற்கும், தமிழிலேயே பதிவதற்கும், தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதிலும் அரச கருமங்கள் விடயத்தில் தமிழில் தொடர்பு கொள்வதற்கும், வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்ற அலுவல்களைத் தமிழில் நடாத்தவும் ஏற்றவகையில் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில் மாவட்ட சபைகளை உருவாக்குதல், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படும் போது; முதலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கு வழங்குதல், இரண்டாவதாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குதல், மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கு முதலிடம் கொடுத்த பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குதல் என்பன ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தன. இவ் ஒப்பந்தத்தின் பின்னர் தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் சேந்தது. இதில் திரு.மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழரசுக்கட்சியின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. அதன் வரலாற்றுப் பாத்திரமும் முடிவு பெற்றது. தமிழரசுக்கட்சி அரசில் சேர்ந்ததினால் அரச ஊழியர்களில் பழையவர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி, சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டன. புதிய ஊழியரின் சிங்களத் தேர்ச்சி 8 ஆம் தரமாக்கப்பட்டது. ஆனால் திறைசேரி அதிகாரிகள் 9 ஆம் தரச் சோதனையை 8 ஆம் தரம் என நடத்திச் சலுகையை முறியடித்தனர். நிதியமைச்சர் வன்னி நாயக்கா, பிரதமரோடு தமிழரசுக் கட்சி நடாத்திய மாநாட்டில் இதனை ஒத்துக்கொண்டார். தமிழ்மொழி உபயோகச் சட்டவிதிகள் மசோதா – 1966 ஜனவரி 08 1958 இல் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட தமிழ்மொழி உபயோகச்சட்டத்தின் கீழ் அதன் இயங்கு விதிகள் தொடர்பான சட்ட மூலம் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தத்தின் கீழ் 1966 ஜனவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகவும், நாடு முழுவதிலும் தமிழ்பேசும் மக்கள் தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இதனை சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட சிங்கள எதிர்க்கட்சிகள் யாவும் காரசாரமாக எதிர்த்தன. இச்சட்டவிதிகள் மூலச்சட்டத்தின் எல்லையை மீறியுள்ளன எனக் கூறப்பட்டது. அரச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு எதிர்க்கட்சிகள், கொழும்பு விகாரமாதேவி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியது. ஊர்வலம் கட்டுக்கடங்காமல் சென்றதால் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரத்தினசாரதேரோ என்ற பௌத்தபிக்கு சூடுபட்டு மரணமடைந்தார். எனினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் பெரிதாகச் செயற்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இதன்மூலம் தமது இனவாதப் போக்கினை வெளிக்காட்டின. மாவட்ட சபை தொடர்பான வெள்ளை அறிக்கை தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓரளவு அதிகாரம் பகிரக்கூடிய சட்டமூலத்திற்காக வெள்ளை அறிக்கை மு. திருச்செல்வத்தினால் தயாரிக்கப்பட்டது. பல மாதங்கள் பிரதமரினாலும் அமைச்சர்களினாலும் கட்சித் தலைவர்களினாலும் ஆராயப்பட்ட வெள்ளை அறிக்கை பராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புக்கு அஞ்சிய பிரதமர் டட்லி சேனநாயக்க “மாவட்ட சபை மசோதவை தாம் பராளுமன்றத்தில் நிறைவேற்ற மாட்டோம்” எனக் கூறினார். தமிழரசுக்கட்சியின் பத்தாவது மாநில மாநாடு (1966 யூன் 23, 24, 25 – கல்முனை) தமிழரசுக் கட்சியின் 10 ஆவது மாநில மாநாடானது 1966 ஆம் ஆண்டு யூன் மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் தலைவராக ஈ.எம்.வி. நாகநாதன் தெரிவு செய்யப்பட்டார். முதன்முறையாக பிரதமர் டட்லி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இலகுவில் வாக்குக்கொடுக்க மாட்டேன், கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்” என டட்லி மாநாட்டில் உறுதிமொழி அளித்தார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற முற்பட்ட போது தமிழரசுக் கட்சியினதும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினதும் முயற்சியினால் ஆட்சேபத்திற்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டது. விருப்பத்திற்கு மாறாக யாரையும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா திரும்பியோரின் வீதத்திற்கே இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்யும் திட்டம், இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்தோரை தனிவாக்காளர் இடாப்பில் அடக்கும் அம்சம் என்பனவே நீக்கப்பட்டன. ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான சட்டமும் மாற்றப்பட்டது. பிரஜை, நாடற்றவர் என்ற பேதமின்றி இந்நாட்டில் சட்டபூர்வமாக வாழும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எல்லோரையும் பதிந்து அடையாள அட்டை வழங்குவதற்கு சட்டமியற்றப்பட்டது. இச்சட்டங்களை தமிழரசுக்கட்சியின் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர்கள் வ. நவரத்தினம் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்த்து வாக்களித்தார். இதனால் 24.04.1968 இல் கூடிய கட்சியின் பொதுச்சபை வ. நவரத்தினம் அவர்களைக் கட்சியிலிருந்து ஏகமனதாக வெளியேற்றியது. இதன்பின்னர் வ. நவரத்தினம் ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியைத் துறத்தல் திருகோணமலை கோணேசர் கோவிலைச் சார்ந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக்க மு. திருச்செல்வம் முயற்சித்தார். இதற்காக தமிழர், சிங்களவர், பறங்கியர் என மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சேருவல பௌத்த ஆலயத் தலைமைப் பிக்கு இதை எதிர்த்தார். பிரதமர் டட்லி சேனநாயக்க மு. திருச்செல்வத்துடன் கலந்தாலோசிக்கமாலே குழுவை நிறுத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1968 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார். இதன் பின்னரும் தமிழரசுக் கட்சி சில மாதங்கள் அரசாங்கத்தில் நீடித்தது. 1968 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியது. https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-4/
-
ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 3 August 5, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா சிங்கள மொழியின் தோற்றம் – 1956 தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதில் இரண்டாவது திட்டமாக மொழி விவகாரம் இலக்காக்கப்பட்டது. ஐ.நா அறிக்கை ஓர் இனத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்தக் கூடியவகையில் நிலத்தைப்பறித்தல், மொழியைப் புறக்கணித்தல், பொருளாதாரத்தைச் சிதைத்தல், கலாசாரத்தை அழித்தல் இன அழிப்பாகக் கொள்ளப்படும் என்று கூறுகின்றது. இலங்கையில் 1956 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் அரசகரும மொழிச்சட்டம் ஒரே நேரத்தில் இன அழிப்பாகவும், அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்கள மயமாக்குவதாகவும் இருந்தது. இதனை தந்தை செல்வா 1949 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தின் போதே எதிர்வு கூறினார். “இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு நடப்பது நாளை மொழிப்பிரச்சினை வரும்போது ஈழத்தமிழர்களுக்கும் நடக்கும்” எனக் கூறினார். இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே மொழிப்பிரச்சினை கிளப்பப்பட்டது. டொனமூர் யாப்பு நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்திற்கு சுதேச மொழிகள் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை மேலெழுந்தது. 1944 ஆம் ஆண்டு அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா சிங்கள மொழி அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வந்தார். மட்டக்களப்புத் தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக இருந்த நல்லையா ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் பிரேரணைக்கு ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். அத்திருத்தம் அரசாங்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் டொனமூர் காலம் முழுவதும் ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்ற தீர்மானம் நடைமுறைக்கு வரவில்லை. 1951 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அதன்போது கட்சியின் கொள்கைத்திட்டத்தில் ‘சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கவேண்டும்’ என்றே கூறப்பட்டது. 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தமிழ்மொழிக்கு அரசகரும மொழி அந்தஸ்துக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்தது. 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்கா பதவிவிலக, சேர்.ஜோன். கொத்தலாவல பிரதமராகப் பதவியேற்றார். 1954 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது வரவேற்பு நிகழ்வில் நிதி அமைச்சரும் சபை முதல்வருமான ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசினார். அப்பேச்சில் தமிழ் மொழிபெயர்ப்புக்கூட இடம்பெறவில்லை. இதனை எதிர்க்கும் முகமாக பிரதமர் கொத்தலாவலை யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்ட போது தமிழரசுக்கட்சி கறுப்புக்கொடிப் போராட்டத்தை நடாத்தியது. யாழ் நகர மண்டப மேடையில் பிரதமர் ஏறியதும் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியைச் சேர்ந்தவர்கள் மேடைக்கு அருகே சென்று கறுப்புக்கொடியைக் காட்டி “பிரதமரே திரும்பிப் போ” எனக்கோசம் எழுப்பினர். பொலிசார் குண்டாந்தடி நடாத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தனர். பிரதமர் கொத்தலாவலை கொக்குவிலில் நடந்த வரவேற்பு நிகழ்வில் கொக்குவில் இந்துக்கல்லூரியின் அதிபர் ஹண்டி பேரின்பநாயகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிங்களம், தமிழ் இரண்டையும் அரசகரும மொழிகளாக்கும் வகையில் அரசியல் யாப்பு மாற்றப்படும் எனக் குறிப்பிட்டார். பிரதமரின் இந்தக்கருத்துக்குத் தீவிர சிங்கள இனவாத அமைப்புகளான ‘திரி சிங்கள பெரமுனை’, தகநாயக்காவின் ‘பாஸா பெரமுனை’ என்பன கடும் எதிர்பைத் தெரிவித்தன. இதனால் பிரதமர் கொழும்பு திரும்பியதும் அடுத்த நாளே தான் தெரிவித்த கருத்தை மறுத்து மறுப்பறிக்கை வெளியிட்டார். 1954 ஆம் ஆண்டிலிருந்து ‘சிங்களம் மட்டும் அரச கரும மொழி’ என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. லங்கா சமசமாஜக்கட்சி ஆரம்பகாலம் தொடக்கமே ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்பதில் உறுதியாக நின்றது. 1954 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் கொழும்பு நகர மண்டபத்தில் ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு கூட்டத்தை நடாத்தியது. இக்கட்சியிலிருந்து விலகி புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை உருவாக்கிய பிலிப் குணவர்த்தனா தலைமையிலான குழுவினர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர். 1955 ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர்.என்.எம். பெரேரா பாராளுமன்றத்தின் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தாார். பண்டாரநாயக்கா அதனை எதிர்த்து “சிங்களமும் மட்டும் அரசகரும மொழியாக இருக்க வேண்டும்” என வாதிட்டார். இரண்டையும் அரசகரும மொழியாக்கினால் தவிர்க்க முடியாத வகையில் சிங்கள மொழி அருகிச் சுருங்கிவிடும் என்ற பயம் சிங்கள மக்கள் மத்தியில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கும் வகையில் சிங்கள மொழி ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை டி.எஸ். சேனநாயக்கா காலத்திலேயே முன்வைத்தது. டி.எஸ். சேனநாயக்கா அதனை ஏற்கவில்லை. இதனால் உத்தியோகப் பற்றற்ற ஆணைக்குழுவை அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 1954 இல் உருவாக்கியது. இவ் ஆணைக்குழு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று மக்கள் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்தது. முடிவில் 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி, இலங்கையின் 8 ஆவது சுதந்திர தினத்தின்போது தனது 124 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டது. அறிக்கையின் தலைப்பு ‘பௌத்தத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்பதே. கிறிஸ்தவர்களின் மதமாற்றம், சிங்கள மொழிக்குரிய இடம் அளிக்கப்படாமை, தமிழர்களின் செல்வாக்குப் போன்றவற்றை அறிக்கை குறிப்பிட்டது. ஆணைக்குழுவின் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பிரதமர் நீதியரசர் ‘ஆதர் விஜயவர்த்தனா’, அறிக்கையின் இறுதியில் ‘சிங்களம் மட்டும்’ அரசகரும மொழியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 1955 ஆம் ஆண்டு டிசம்பரில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு இடம்பெற்றது. அதில் ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “நான் பதவிக்கு வந்ததும் சிங்களம் மட்டும் அரசகரும மொழி சட்டத்தை நிறைவேற்றுவேன்” என பண்டாரநாயக்கா அறிவித்தார். இம்மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி நிறைவேற்றிய மொழிக்கொள்கை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக இருக்கும்; தமிழ்மொழிக்கு நியாயமான அளவு உபயோக அந்தஸ்து வழங்கப்படும் என்பதே அவை இரண்டுமாகும். தமிழ்மொழியின் உபயோகம் தொடர்பாக பண்டாரநாயக்கா பின்வருமாறு விளக்கம் கொடுத்தார். “பாராளுமன்றத்தில் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைக் கொண்டவையாக இருக்கும். விவாதம், சட்டம் இயற்றுதல் என்பன இரு மொழிகளிலும் இடம்பெறும். ஆனால் அரச நிர்வாகம் சிங்கள மொழியில் மட்டுமே இடம்பெறும். நீதிமன்றங்கள் சிங்களத்திலும், தமிழ்மொழியிலும் கடமையாற்றலாம். கல்வி மொழியாக சிங்களவர்களுக்குச் சிங்கள மொழியும், தமிழர்களுக்குத் தமிழ்மொழியும் இருக்கும்.” இத்தீர்மானத்தை எதிர்த்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து தமிழர்கள் வெளியேறினார். 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியைப் போன்று ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகித்த தமிழர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்து வெளியேறினர். அவர்களில் ஒருவர்தான் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இராஜமாணிக்கம். இவர் தற்போது மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியனின் தாத்தா ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தீர்மானத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தமிழ்ப்பிரதேசம் எங்கும் ஹர்த்தால் போராட்டம் தமிழரசுக்கட்சி தலைமையில் நடாத்தப்பட்டது. தமிழ்ப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது ஹர்த்தால் போராட்டம் இதுதான். போராட்டம் பெரு வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாட்டுத் தீர்மானத்தைத் தொடர்ந்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான பண்டாரநாயக்கா தான் ஆட்சிக்கு வந்ததால் 24 மணித்தியாலத்திற்குள் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருவேன் என அறைகூவல் விடுத்தார். பிக்கு எக்ஸத் பெரமுனை உட்பட பல பௌத்த நிறுவனங்கள் பண்டாரநாயக்காவிற்கு ஆதரவளிக்க முற்பட்டன. 1956 ஆம் ஆண்டு தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, பிலிப் குணவர்த்தனா தலைமையிலான புரட்சிவாத சமசமாஜக்கட்சி, டபிள்யூ. தகநாயக்கா தலைமையிலான பாஸா பெரமுனை, சி.பி.டி. சில்வா தலைமையிலான குழு என்பன பண்டாரநாயக்கா தலைமையில் ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போட்டியிட்டன. பண்டாரநாயக்கா ‘பஞ்ச பல வேகய’ என அழைக்கப்படுகின்ற ஐம்பெரும் சக்திகளை அணிதிரட்டினார். சிங்கள ஆசிரியர்கள், சிங்களத் தொழிலாளர்கள், சிங்கள விவசாயிகள், சிங்கள ஆயுர்வேத வைத்தியர்கள், பௌத்த மதகுருமார்கள் என்போரே அவ் ஐம்பெரும் சக்திகளாவார். இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி பெரு வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. எதிர்க்கட்சிப் பதவிகூட அதற்கு கிடைக்கவில்லை. சமசமாஜக் கட்சியின் தலைவரான என்.எம். பெரேரா எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். மக்கள் ஐக்கிய முன்னணி 60 இடங்களில் போட்டியிட்டு, 51 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. பண்டாரநாயக்கா பிரதமராகப் பதவியேற்றார். தமிழரசுக் கட்சிக்கு முதன்முதலாக 10 ஆசனங்கள் கிடைத்தது. சிங்களப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்குச் சிதைந்ததைப்போல தமிழ்ப்பிரதேசத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குச் சிதைந்தது. இதன்பின்னர் தமிழ் காங்கிரஸ் கட்சியினால் மேலெழவே முடியவில்லை. பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற சிம்மாசனப் பிரசங்கத்தில், மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக, புதிய அரசாங்கம் சிங்களம் மட்டும் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கும் எனக் குறிப்பிட்டார். இதற்கேற்ப பிரதமர் பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாதத்தில் சட்ட வரைஞரை அழைத்து சிங்களம் மட்டும் அரசகரும மொழிச்சட்டத்தை தயாரிக்குமாறு கட்டளையிட்டார். அச்சட்டத்தில் தமிழ்மொழி உபயோகம் பற்றிய ஏற்பாடுகளையும் சேர்க்குமாறு குறிப்பிட்டார். தமிழ்மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்குவதை மக்கள் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த பாஸா பெரமுனை கட்சியினர் விரும்பவில்லை. இக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் எவ்.ஆர். ஜெயசூரியா தமிழ்மொழியின் உபயோக அந்தஸ்தை எதிர்த்துப் பாராளுமன்றப் படிகளில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தார். இறுதியில் தமிழ்மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்கும் யோசனை கைவிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி சிங்களம் மட்டும் மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1956 ஆனி 5 – தனிச்சிங்களச் சட்டமும் சத்தியாக்கிரகப் போராட்டமும் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பண்டாரநாயக்கா அரசாங்கம் சிங்கள மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, தனிச்சிங்களச் சட்டத்தை 1956 ஆனி 5 இல் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது. இதன்போது தமிழரசுக் கட்சி தமிழ்பேசும் மக்களின் எதிர்ப்பைக்காட்ட பாராளுமன்ற வாசலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இரவோடு இரவாக பாராளுமன்றத்தைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டன. ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் சுற்றி நிறுத்தப்பட்டனர். பண்டாரநாயக்காவினால், சிங்கள இனவாதிகள் ‘எல்லாள – துட்டகைமுனு யுத்தம்’ என்ற கோசத்தோடு காலி முகத்திடலுக்குக் கொண்டுவரப்பட்டனர். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகத்தின் நோக்கத்தை விளக்கி, சிங்களத்தில் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. அப்பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற தொண்டர்கள் காடையர்களால் தாக்கப்பட்டனர். தாக்குதலையும் பொருட்படுத்தாது தமிழரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் காலி முகத்திடலின் தென்பகுதியிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி நடந்தனர். சிறிது தூரம் செல்வதற்கிடையில் சிங்கக்கொடி தாங்கிய காடையர் கூட்டம் அவர்கள் மீது பாய்ந்து தடிகளாலும், கைகளாலும், கால்களாலும் தாக்குதலை நடாத்தினர். கு. வன்னியசிங்கத்தின் சட்டை கிழிக்கப்பட்டுத் தாக்கப்பட, அவர் மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது. ஈ.எம்.வி. நாகநாதனும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். தாக்கிய தடி முறிவடைந்ததனால் இரும்பு மனிதன் எனப் பெயர்பெற்றார். செல்வநாயகத்துக்கு முன்னால் அவரது இரு மகன்களும் தாக்கப்பட்டனர். தொண்டர் நா. செல்லையாவின் காது கடித்துக் கிழிக்கப்பட்டது. திடீரென்று பெருமழை பெய்ய காடையர் கூட்டம் கலைந்து ஓடியது. இக்கட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பிலிருந்து வந்த தொண்டர்களும் கலந்துகொண்டனர். சத்தியாக்கிரகிகள் தொடர்ந்து அவர்களையும் அழைத்துக்கொண்டு செல்லும்போது ஒரு கட்டத்தில் பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த, சத்தியாக்கிரகிகள் அனைவரும் புற்தரையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் காடையர் கூட்டம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து சத்தியாக்கிரகிகளைச் சுற்றி வளைத்து, பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கக் கூடியதாகவே அவர்களை நோக்கி கற்களை வீசியது. இக்கல்வீச்சினால் வி.என். நவரத்தினம் காயமுற்று ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அமிர்தலிங்கமும் கல்வீச்சுக்கு உள்ளாகினார். அவரின் நெற்றி பிளக்கப்பட்டது. இதன்போது தலைவர்களைவிட சத்தியாக்கிரகிகளும் பலர் காயமுற்றனர். பகல் 1 மணிக்கு தலைவர்கள் ஆலோசனை செய்து சத்தியாக்கிரகத்தை நிறுத்தி சத்தியாக்கிரகிகளை திருப்பி அனுப்பினார்கள். இத்தினத்தில் காலி முகத்திடலில் மாத்திரமல்ல, கொழும்பில் பல இடங்களிலும்கூட தமிழ் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். அம்பாறைக் கலவரம் காலி முகத்திடல் சத்தியாக்கிரகத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கொழும்புக்கு வெளியிலும் பரவியது. அம்பாறை சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் தமிழர்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டனர். கல்லோயா அபிவிருத்திச் சபையின் கீழ் பணியாற்றிய தமிழ் ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் மோசமாகத் தாக்கப்பட்டனர். இதனால் கோபமுற்ற தழிழ் மக்கள் துறைநீலாவணையில், படையினரின் ஜீப் வண்டியைத் தாக்கி எரியூட்டினர். இவ்வனர்த்தங்கள் நடைபெற்றதன் பின்னரே அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து, ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன்வந்தது. திருகோணமலை யாத்திரை 1956 யூன் 15 இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி இதனை எதிர்த்துத் திருகோணமலை யாத்திரையை ஒழுங்கு செய்தது. ஊர்காவற்துறை, பருத்தித்துறை, மன்னார், திருக்கோவில் என்பவற்றிலிருந்து தலைவர்களும் தொண்டர்களும் கால்நடையாகத் திருகோணமலையை நோக்கிப் பயணம் செய்தனர். பண்டாரநாயக்கா அரசாங்கம் முதலில் இதனைத் தடைசெய்யப் போவதாக அறிவித்தாலும் பின்னர் பணிந்து பாதுகாப்புக் கொடுத்தது. “திருமலைக்குச் செல்லுவோம், சிறுமை அடிமை வெல்லுவோம்” என்ற பண்டிதர் இளமுருகனாரின் பாடலை இசைத்தபடி யாத்திரை சென்றனர். பத்து நாட்கள் நடந்து ஆவணி 16 ஆம் திகதி திருகோணமலையை அடைந்தனர். தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாடு 1956 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16, 17, 18 ஆம் திகதிகளில் திருகோணமலை மாநாட்டில் வன்னியசிங்கமே மீண்டும் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது நான்கு அம்சக் கோரிக்கையைத் தீர்மானமாக எடுத்தனர். தமிழ்பேசும் மக்கள் வாழும் இடங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதோ மொழிவாரிச் சமஸ்டி அரசுகளை உருவாக்குதல். தமிழ்மொழியையும் ஆட்சி மொழியாக்கி, சிங்களமொழிக்குச் சமமான நிலையில் அதனை வைத்தல். தற்போதைய குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, இலங்கையில் வாழும் அனைவருக்கும் குறுகிய வதிவிடக் காலத்தைத் தகுதியாகக்கொண்டு குடியுரிமை வழங்குதல். பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்துதல். முஸ்லீம் உறுப்பினர்களின் வேண்டுகோளின் பின்னர் ஒரு சுயாட்சித் தமிழரசு என்ற கட்சியின் நோக்கத்தை மாற்றி, சுயாட்சித் தமிழரசும் சுயாட்சி முஸ்லீம் அரசும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசிற்கு 1957 ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரையான கால எல்லை அவகாசமாகக் கொடுக்கப்பட்டது. கோடீஸ்வரன் வழக்கு 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தைச் சேர்ந்த கேகாலை கச்சேரியில் பணிபுரிந்த செ. கோடீஸ்வரன் கேகாலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுத்தது. அக்கட்சியைச் சேர்ந்த மு. திருச்செல்வம் வழக்காளி சார்பில் ஆஜரானார். கேகாலை மாவட்ட நீதிபதி ஒ.எஸ்.டி கிரெஸ்டர், “தனிச்சிங்களச் சட்டம் அரசியல் யாப்பின் 29 ஆவது பிரிவிற்கு முரணாகவுள்ளதால் செல்லாது” எனத் தீர்ப்பளித்தார். சிங்கள மொழித் தேர்ச்சியின்மையைக் காரணம்காட்டி அரச ஊழியரை தண்டிக்க முடியாதென்றும் கூறினார். இத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றம் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமை இல்லை எனக்கூறி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரித்தானியாவின் உயர் நீதிமன்றமான கோமறைக் கழகத்திற்கு மேன்முறையீடு செய்தது. தமிழரசுக் கட்சி இக்காலத்தில் (1965-1970) ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தது. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். “அரசாங்கம் மாவட்ட சபை தரப்போகின்றது. வழக்கை வாபஸ் பெறுங்கள்” எனத் தமிழரசுக் கட்சியும், திருச்செல்வமும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை நிர்ப்பந்தித்தனர். மு. திருச்செல்வம் ஒருபடி மேலே சென்று, வழக்கைத் தொடர்ந்து கொண்டு சென்றால் எமது சட்ட ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என எச்சரித்தார். எனினும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் இவ்வச்சுறுத்தலுக்குப் பணியாது ச. இரங்கநாதன், சேர்டிங்கிள் புட் Q.C இன் தலைமையில் மூத்த சட்டத்தரணிகள் க. சர்வானந்தா, எம்.ஏ.டி. வில்லியம், மாணிக்க வாசகர் அண்டவூட், குரோசட் தம்பையா ஆகியோரின் வழிகாட்டலுடன், லூசியன் சிறில் பெரேரா வழக்கைக் கொண்டு நடாத்தினார். கோமறைக்கழகத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஆங்கிலச் சட்டமேதை சேர்டிங்கிள் புட் Q.C எதுவிதக் கட்டணங்களும் பெறாது தமிழர்களுக்காக வாதாடினார். கோமறைக்கழகம், “அரச ஊழியர் அரசாங்கத்திற்கு எதிராக வழக்காட முடியாது” என்ற இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. தனிச்சிங்களச் சட்டத்தின் செல்லுபடியாகாத தன்மையை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும்படி இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு புதிய யாப்பு வந்ததும் கோமறைக் கழகத்திற்கு அதிகாரம் இல்லாததினால் இவ்வழக்கு கைவிடப்பட்டது. சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் அரசு, மோட்டார் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகளுக்குப் பதிலாக சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்தைப் பிரயோகிக்கும் சட்டத்தை 1957 ஜனவரியில் கொண்டு வந்தது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி இதனை எதிர்த்து சட்ட மறுப்புப் போராட்டத்தை 1957 ஜனவரி 19 இல் ஆரம்பித்தது. யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் என்பவற்றில் போராட்டம் நடைபெற்றது. முதலில் ஒருநாள் சட்டமறுப்பாக தமிழ் எழுத்துகளைப் பொறித்து வாகனங்கள் செல்லவிடப்பட்டன. பின்னர் இரண்டாம் கட்டமாக நிரந்தரமாகவே தமிழ் எழுத்தினைப் பொறித்தனர். 3 ஆவது கட்டமாக எல்லா மோட்டார் வண்டிச் சொந்தக்காரர்களையும் தமிழ் எழுத்தை பொறிக்கும்படி வேண்டிக் கொள்ளப்பட்டது. தமிழ் எழுத்துப் பொறித்த தகடுகளை தொண்டர்கள் தாங்களே மாட்டிக்கொண்டனர். இப்போராட்டத்துக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தியாகி நடராசன் கொலை (1957 பெப்ரவரி 4) சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை துக்கதினமாகக் கொண்டாடும்படியும் கடைகளை அடைத்துக் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடும்படியும் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கை விட்டது. தமிழரசு வாலிப முன்னணி இதில் தீவிரமாகச் செயற்பட்டது. பெண் தொண்டர்கள் திருமதி. கோமதி வன்னியசிங்கம் தலைமையில் திறக்கப்பட்ட கடைகளின் முன்னால் சத்தியாக்கிரகம் செய்தனர். காரைநகரில் திருமதி. நாகம்மா வேலுப்பிள்ளை தலைமையில் பஸ் வண்டிகளின் முன் படுத்து சத்தியாக்கிரகம் செய்தனர். திருகோணமலையில் சிங்களவரின் ஆதிக்கத்திலிருந்த மரக்கறிக் கடைக்கருகில் உள்ள கம்பத்தில் கறுப்புக்கொடி கட்ட நடராசன் என்ற இளைஞன் ஏறியபோது, மறைந்து நின்ற சிங்களவர் ஒருவர் துப்பாக்கியால் சுட இளைஞன் வீழ்ந்து இறந்தார். அமைச்சர்கள் வருகையும், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமும், பகிஸ்கரிப்பும் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அரசாங்க அமைச்சர்கள் வடக்கு – கிழக்கிற்குச் செல்லத் தயாராகினர். உதவி அமைச்சர் எம்.பி.டி. சொய்ஸா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வருடாந்த மாநாட்டுக்கு வர ஆயத்தமானார். தனிச்சிங்களக் கொள்கையை தமிழ் மக்களுக்கு விளக்கப்போவதாகவும் அறிக்கை விட்டார். அவர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய போது அவருடைய மோட்டார் வண்டியை நகரவிடாது தொண்டர்கள் அவரது வண்டியின் முன் படுத்துக்கொண்டனர். பொலிஸார் தொண்டர்களை தாக்கியும் தூக்கியும் அப்புறப்படுத்தினர். மாநாடு நடைபெறவிருந்த நகர மண்டபமானது உதவி அமைச்சரின் வரவை எதிர்க்கும் மக்களால் நிரப்பப்பட்டு காணப்பட்டது. மாநாட்டில் அமைச்சர் பேசமாட்டார் என உறுதியளித்த பின்னரே மக்கள் விலகிக்கொண்டனர். அமைச்சர் நண்பகல் புகை வண்டியிலேயே கொழும்பு திரும்பினார். கிழக்கு மாகாணம் சென்ற கல்வி அமைச்சர் தகநாயக்கவுக்கும் பலத்த எதிர்ப்புக் கிடைத்தது. மருதமுனையில் அவரின் காருக்கு செருப்பு வீசப்பட்டது. மந்திரியின் கார் வந்தபோதும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. நிதி அமைச்சர் ஸ்டான்லி டீ செய்ஸா உட்பட ஆறு அமைச்சர்கள் மன்னாருக்கு சென்றபோது அங்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957 யூலை 26) முன்னர் தீர்மானித்தது போலவே 1957 ஓகஸ்ட் 20 அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி போராட்டத்துக்காக ஆயத்தமாகியது. தமிழ்பேசும் மக்களின் பலத்த எதிர்ப்பைக் கண்ட பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியுடன சமரசத்துக்கு வர முயற்சி செய்தார். பல இரவுகள் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் 1957 யூலை 26 ஆம் திகதி நள்ளிரவு பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 1957 ஓகஸ்ட் 20 ஆம் திகதி சத்தியாக்கிரகத்தைத் தடுக்கும் முகமாகவே ஒப்பந்தம் செய்ய பண்டாரநாயக்கா இணங்கினார். தமிழ்மொழியை இலங்கையின் சிறுபான்மையோரின் மொழியாக அங்கீகரிப்பது என்றும், சிங்களம் அரசகரும மொழி என்பதைப் பாதிக்காத வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழ்மொழி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுமென்றும், பிரதேச சபைகளினை உருவாக்கி அதற்கு அதிகாரம் வழங்கப்படுமென்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக விவசாயம், கூட்டுறவு, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடி சமூகசேவை, மின்சாரம், நெடுஞ்சாலைகள் தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. மேலும் இரண்டு பிரதேச சபைகள் இணைந்து செயற்படுவதற்கும் இடமளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. குடியேற்றங்கள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேச சபையிடம் இருக்கும் எனவும் கூறப்பட்டது. தமிழரசுக் கட்சி சிறப்பு மாநாடு – மட்டக்களப்பு (1957 யூலை 27, 28) திருமலைத் தீர்மானத்தின் போராட்டம் தொடர்பான இறுதிப் பிரகடனத்தை விடுப்பதற்காக மட்டக்களப்பில் 1957 யூலை 27, 28 திகதிகளில் சிறப்பு மாநாடு கூட்டப்பட்டது. மாநாடு ஆரம்பிப்பதற்கு முதல்நாள் இரவு ஒப்பந்தம் கைச்சாத்தானதால் போராட்டப் பிரகடனத்துக்கான மாநாடு, ஒப்பந்தத்தை பரிசீலிக்கும் மாநாடாக மாறியது. ஒப்பந்தம் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றபோதும் ஒப்பந்தத்தை ஏற்பதென ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்வரும் காரணங்களுக்காக ஒப்பந்தத்தை ஏற்பதென முடிவு எடுக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசாங்க உதவியுடன் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் ஒப்பந்தத்தினால் உடனடியாக நிறுத்தப்படும். தேசிய சிறுபான்மையோரின் மொழியாக ‘தமிழ்’ உத்தியோக அங்கீகாரம் பெறும். தமிழே வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாக மொழியாக இருக்கும். நாட்டின் எப்பாகத்திலும் தமிழ் மக்கள் தம் கருமங்களை அரசாங்கத்தோடு தமிழில் ஆற்றவும், தம் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியில் கல்வியூட்டி தமிழ்ப் பண்பாட்டில் வளர்க்கவும் உள்ள உரிமை பாதுகாக்கப்படும். பிரதேச சபைகள் சட்டத்தின் மூலம் பெருமளவு பிரதேச சுயாட்சி மக்களுக்கு வழங்கப்படும். ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும், இணைப்பாட்சிக்கு உட்பட்ட மொழிவாரிச் சுயாட்சித் தமிழ் அரசு அல்லது அரசுகளை நிறுவுவது, நாடு முழுவதிலும் சிங்களம் மற்றும் தமிழுக்கு சமமான அந்தஸ்தை வழங்குவது, அனைவருக்கும் குடியுரிமையை உறுதி செய்வது போன்ற கோரிக்கைகளை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. இது இடைக்கால தீர்வேயொழிய இறுதித் தீர்வு அல்ல எனவும் கூறப்பட்டது. ஐக்கியதேசியக் கட்சி ஒப்பந்தத்தைக் காரசாரமாக எதிர்த்தது. ‘முதல் அடி’ என்ற தலையங்கத்தில் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. அதில் “பண்டாரநாயக்கா வடக்கு – கிழக்கைத் தமிழர்களுக்கு விற்றுவிட்டார்” எனப் பிரசாரம் செய்யப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை செல்லும் போது இம்புல் கொடையில் அரச சக்திகளினால் அவ் யாத்திரை முறியடிக்கப்பட்டது. எஸ்.டி. பண்டாரநாயக்காவே இதில் முன்னணி வகித்தார். ஒப்பந்தத்தை அமுலாக்க அரசு எந்த முயற்சியும் செய்யாமலிருந்தது (எட்டு மாதங்களாக). மறுபக்கத்தில் சிங்கள ஸ்ரீ பதித்த இலக்கத் தகடுகள் உள்ள பஸ்களை அரசாங்கம் வடக்கு – கிழக்குக்கு அனுப்ப முயற்சி செய்த வேளை அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை மீளவும் ஆரம்பித்தது. வடக்கு – கிழக்கில் உள்ள பஸ் வண்டிகளில் உள்ள இலக்கத் தகடுகள் தொண்டர்களால் தமிழ் ‘ஸ்ரீ’யாக மாற்றப்பட்டது. முதல் இலக்கத் தகட்டை மாற்றும் போராட்டத்தை செல்வநாயகம் தானே ஆரம்பித்து வைத்தார். இதனை எதிர்க்கும் வகையில் சிங்களத் தீவிரவாதிகள் தென்னிலங்கையில் தமிழ்ப்பெயர்களை தார்பூசி அழித்தனர். 1958 ஏப்ரல் 8 இல் பிக்கு எக்ஸத் பெரமுனவின் சார்பில், பண்டாரநாயக்காவின் வீட்டுக்கு முன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு பௌத்தப் பிக்குகள் சத்தியாக்கிரகம் இருத்தனர். சுகாதார மந்திரி விமலா விஜயவர்தன இதற்கு நேரடி ஆதரவு வழங்கினார். பண்டாரநாயக்கா அவர்களின் முன்னாலேயே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அன்றைய தினமே பாராளுமன்றத்திலும் அதனை அறிவித்தார். சிங்கள ‘ஸ்ரீ’ பொறித்த பஸ் வண்டிகள் மீண்டும் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடுமென்றும், அவற்றை மாற்ற முற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மலைநாட்டில் சிங்களத் தீவிரவாதிகள் தமிழ் எழுத்துகளைத் தார்பூசி அழித்ததை தமிழ்த் தொழிலாளர்கள் எதிர்த்தனர். இப்போராட்டத்தின் போது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பொகவந்தலாவையைச் சேர்ந்த பிரான்சிஸ், ஐயாவு என்ற இரு தொழிலாளர்கள் மரணமடைந்தனர். கொலையுண்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் 1958 ஏப்ரல் 05 சனிக்கிழமை வடக்கு – கிழக்கு எங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. செனற் சபைக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் ஜி. நல்லையா என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். 1958 ஏப்ரல் 10 இல் சிங்கள ‘ஸ்ரீ’ பொறித்த பஸ் வண்டிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஓடத் தொடங்கும் போது தொண்டர்கள் தமிழ் ‘ஸ்ரீ’யை மாற்றும் முயற்சியைத் தொடர்ந்தனர். பொலிஸாருக்கு அறிவித்தபின் யாழ் பஸ் நிலையத்தில் ஜி. நல்லையா, சிறிதரன், அமிர்தலிங்கம் ஆகியோர் தமிழ் ‘ஸ்ரீ’யை எழுதியபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பண்டாரநாயக்காவின் தேசியமயக் கொள்கை பண்டாரநாயக்கா தனியார் நிறுவனங்கள் பலவற்றைத் தேசிய மயமாக்கினார். பஸ் போக்குவரத்து, காப்புறுதி, பொற்றோலியம் என்பன தேசியமயமாக்கப்பட்ட போது தமிழரசுக்கட்சி அவற்றினை ஆதரித்தது. அதேவேளை நெற்காணிச் சட்டம், பாடசாலைகள் தேசியமயம், அந்நியப் படைத்தளங்கள் தேசியமயம் என்பவற்றை எதிர்த்தது. தேசியமயம் என்ற பெயரில் சிங்களமயமாக்கல் இடம்பெற்றமையே எதிர்ப்பிற்கான காரணமாகும். தமிழரசுக் கட்சியின் 6 ஆவது மாநில மாநாடு 1958 ஆம் ஆண்டு மே மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு தொண்டர்கள் கைது, சிங்களவரின் தமிழ் அழிப்பு இயக்கம் வளர்ச்சியடைதல், பலாத்காரச் சம்பவங்கள் வளர்ச்சி போன்ற கொந்தளிப்பு நிலையிலேயே மாநாடு கூட்டப்பட்டது. இராசவரோதயம் மாநாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவ்வேளையில் மட்டக்களப்பிலிருந்து மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் பொலநறுவையில் தாக்கப்பட்டனர். மட்டக்களப்பில் இருந்து வந்த புகைவண்டியும், சதியினால் தடம்புரளச் செய்யப்பட்டது. இதனால் ஒரு தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தரும் பொது தமிழ் மகன் ஒருவரும் மரணமடைந்தனர். போராட்டத்தை 1958 ஓகஸ்ட் 20 இல் மீண்டும் ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இராசவரோதயம், செல்வநாயகம், வன்னியசிங்கம், செ. இராசதுரை, அமிர்தலிங்கம் என்போர் தலைமையில் போராட்டக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அரசியல் அமைப்புப் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழரசுக் கட்சி பங்குபற்றுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. 1958 இனக்கலவரம் வவுனியா மாநாடு முடிகின்ற தறுவாயில் நாடெங்கிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. வடக்கு – கிழக்குக்கு வெளியே இருந்த தமிழர்கள் பாதுகாப்போடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த சிங்களவர்களும் ஆத்திரமடைந்த மக்களால் தாக்கப்பட்டனர். அரசு காலம் கடந்து அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து இராணுவத்தை சேவைக்கு அழைத்துக் கலவரத்தை நிறுத்தியது. https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-3/
-
ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 2 July 8, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது அல்லைத்திட்டம் இத்திட்டமே திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது திட்டமிட்ட விவசாயக் குடியேற்றமாகும். இது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். மகாவலி ஆற்றை மறித்து வாய்க்கால் மூலம் திருப்பி அல்லைக் குளத்தை நிரப்பி அதனோடு சூழவுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் கூட இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 இல் வாய்க்கால் வெட்டப்பட்டு தாழ்நிலமாக இருந்த பகுதிகள் இணைக்கப்பட்டு அல்லைக்குளம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1910 ஆம் ஆண்டு குளம் பலப்படுத்தப்பட்டதோடு வாய்க்கால்களும் பெரிதாக்கப்பட்டன. 1949 இலேயே இது மிகப்பெரிய விவசாயத் திட்டமாகப் புனரமைக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 17,500 ஏக்கர் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 4 ஏக்கர் வயல் நிலமும், ஒரு ஏக்கர் மேட்டு நிலமும் என பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களில் 75% ஆன நிலங்கள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 25% ஆன நிலங்களே தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணி உரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது, சிங்கள மக்களிடமிருந்து, இலங்கையின் எல்லா மாவட்ட அரசாங்க அதிபர்களின் மூலமாகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை, திருகோணமலை மாவட்டத்தில், அதுவும் மூதூர்ப் பகுதியில் இருப்பவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இப்பாரபட்சங்களை அன்றிருந்த தமிழ் பேசும் அரசியல் சக்திகள் தடுத்திருக்கலாம். அவர்கள் அது தொடர்பான முயற்சிகளில் எதிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலையிலும் மூதூரிலுமாக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1949 இல் திருகோணமலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். சிவபாலனும் மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த A.R.A.M. அபூபக்கரும் விளங்கினர். மக்கள் குடியேறத் தொடங்கிய 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இராசவரோதயமும், மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சையான M.E.H. முகமட் அலியும் விளங்கினர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இதில் அக்கறையற்று இருந்தாலும் தமிழ்த் தேசியத்தையும் அதன் அடிப்படையிலமைந்த சமஷ்டிக் கோரிக்கையையும் முன்னெடுத்த அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி இதில் போதிய அக்கறை காட்டாதது தான் மிகவும் கவலைக்குரியது. இதன் பின்னர் 1959 இல் இருந்து மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு 1977 வரை T. ஏகாம்பரம், அ. தங்கத்துரை போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தபோதும் குடியேற்றங்களைப் பொறுத்தவரை அவர்களின் செயற்பாடு போதியதாக இருக்கவில்லை. 1977 இல் மூதூர்த் தொகுதி மீளவும் ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன் பகுதிகள் சேருவல தேர்தல் தொகுதியுடன் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் மூதூர்ப் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கிருந்த உறுப்புரிமை இல்லாமல் செய்யப்பட்டது. காணி பெறுபவர்களுக்குரிய தகைமைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது விண்ணப்பதாரிகள் விவசாயிகளாகவும் திருமணம் புரிந்தவர்களாவும், விவசாயக் காணிகளைச் சொந்தமாகக் கொண்டிராதவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரை, இத் தகைமைகள் கடைப்பிடிக்கப்பட்டன. சிங்கள மக்களைப் பொறுத்தவரை இவை காற்றில் பறக்கவிடப்பட்டன. விவசாயமே தெரியாதவர்களும் நிலங்களைச் சொந்தமாக வைத்திருந்தவர்களும் தாராளமாகத் தெரிவு செய்யப்பட்டனர். கந்தளாய்த் திட்டம் இத்திட்டம் 1950 ஆம் ஆண்டு கந்தளாய்க் குளத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேறத் தொடங்கினர். இத்திட்டத்தின் கீழ் 24,750 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் 14,360 ஏக்கர் நெற் செய்கைக்காகவும், 10,420 ஏக்கர் கரும்புச் செய்கைக்காகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 80% ஆன காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை 20% ஆன காணிகளே தமிழ், முஸ்லிம் மக்களுக்கெனப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அல்லைத் திட்டத்தினைப் போலவே ஒரு குடும்பத்திற்கு 4 ஏக்கர் நெற்செய்கை நிலமும், 3 ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது. கந்தளாய்ப் பிரதேச சபையும், கந்தளாய்ப் பிரதேச செயலர் பிரிவும் இக்குடியேற்றப் பிரதேசத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. கந்தளாய்ப் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் 22,737 வாக்காளர்களில் மிகப் பெரும்பான்மையோர் சிங்களவர்களாகவே உள்ளனர். இப்பிரதேச சபை 397.30 சதுர மைல் விஸ்தீரணத்தைக் கொண்டது. இன்று திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களுக்குத் தலைமை தாங்கும் பிரதேசமாக கந்தளாய்ப் பிரதேசமே உள்ளது. பதவியாத் திட்டம் திருகோணமலை மாவட்டத்தின் வட பகுதியை சிங்களமயமாக்குவதற்காக இத்திட்டம் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேறத் தொடங்கினர். அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதவியாக் குளத்தினை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. பதவியாக்குளம் அனுராதபுர மாவட்டத்தில் இருந்தபோதும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளுக்கு நீர் பாய்ச்சுவதை நோக்கமாகக் கொண்டு இக்குளம் உருவாக்கப்பட்டது. இக்குடியேற்றத்திற்காக 2400 ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் திட்டக்காணி முழுவதும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1958 கலவரத்தினைத் தொடர்ந்து தென்னமரவாடியை அண்டியுள்ள பகுதிகளில் வசித்திருந்த தமிழர்கள் பலாத்காரமாக அகற்றப்பட்டு அவ்விடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது இப்பகுதி 100% சிங்கள மக்களைக் கொண்ட பகுதியாகவே உள்ளது. இவர்களுக்காக பதவி சிறீபுர என்னும் பெயரில் ஒரு பிரதேச சபையும், சிங்களப் பிரதேச செயலர் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை 7,023 என்ற அளவுக்கு மிகக் குறைவாக இருந்தபோதும், குடியேற்றங்களுக்கு அரசியல் உறுதிப்பாட்டை கொடுக்கவேண்டும் என்பதற்காகப் பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இப்பிரதேச சபை 217.70 சதுர மைல் விஸ்தீரணத்தைக் கொண்டதாகும். பதவிக்குளம் என்ற பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசமே பின்னர் பதவியா என மாற்றப்பட்டது. மொறவெவ திட்டம் முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசமே பின்னர் மொறவெவ என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டது. இத்திட்டம் 1959 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வருடம் தமிழர் % முஸ்லிம்கள் % சிங்களவர் % 1827 15,663 81.8 3,245 16.9 250 1.3 1881 14,394 64.8 5,746 25.9 935 4.2 1891 17,117 66.4 6,426 25.9 1,109 4.3 1901 17,069 60.0 8,258 29.0 1,203 4.2 1911 17,233 57.9 9,714 32.6 1,138 3.8 1921 18,586 54.5 12,846 37.7 1,501 4.4 1946 33,769 44.5 23,219 30.6 11,606 15.3 1953 37,517 44.7 28,616 34.1 15,296 18.2 1963 54,050 39.1 42,560 30.8 40,950 29.6 1971 71,749 38.1 59,924 31.8 54,744 29.1 1981 93,510 36.4 74,403 29.0 86,341 33.6 1962 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். திருகோணமலையிலுள்ள பிரித்தானியக் கடற்படைத்தளத்தில் வேலை செய்தவர்கள், தளம் மூடப்பட்டதால் வேலை இழந்தபோது, அவர்கள் விவசாயம் செய்வதற்கென்றே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4040 ஏக்கர் காணிகள் பங்கிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் காணிகள் பங்கிடுவதற்கான காணிக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழரசுக் கட்சித் தலைவரில் ஒருவரான வன்னியசிங்கம் நேரடியாகவே அதில் பங்கேற்றிருந்தார். காணிகள் பங்கிடப்படும் போது 55% காணிகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், 45% காணிகள் சிங்கள மக்களுக்கும் என ஒதுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சமூகமளித்தும் கூட மூன்று இனங்களுக்கும் சமமாகவோ அல்லது குறைந்தபட்சம் திருகோணமலை மாவட்ட இன விகிதாசாரப்படியோ காணிகள் பங்கிடப்படாதது கவலைக்குரியது. ஆனால் மேட்டு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் பங்கிடப்பட்ட போது 75% வீடுகள் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. 25% வீடுகள் மட்டுமே தமிழ், முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. வீடுகள் கொடுக்கப்படாததால் திருகோணமலையில் இருந்த தமிழ், முஸ்லிம் மக்கள் உடனடியாகக் குடியேறவில்லை. சிங்கள மக்கள் மட்டுமே குடியேறினர். தொடர்ந்து வந்த இனக் கலவரங்களினால் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேறத் தயக்கம் காட்டவே, நாளடைவில் குடியிருக்காத நிலங்கள் இரத்துச் செய்யப்பட்டு அவ் இடங்களிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு விமானப் படையினருக்கான விவசாயப் பண்ணை அங்கு உருவாக்கப்பட்ட போது, அதனைச் சாட்டாக வைத்தும் பல சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். விமானப் படையினரின் பண்ணை சிங்களக் குடியேற்றத்தை மேலும் பலப்படுத்தியதால் எஞ்சியிருந்த ஒரு சில தமிழ்க் குடும்பங்கள் கூட பின்னர் வெளியேறின. இக்குடியேற்றத்தினை மையமாக வைத்தே மொரவேல சிங்களப் பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இது 322 சதுர மைல் விஸ்தீரணத்தை உள்ளடக்கியுள்ளது. தமிழர்கள் எவரும் இப்பிரதேசத்தில் இல்லை. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் 38.08% வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். மொத்தமாக 2,200 வாக்குகளே அளிக்கப்பட்டன. மக்கள் மிகக் குறைவாக இருந்தபோதும், குடியேற்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதேச சபை உருவாக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. பிரதேச சபையில் மொத்தம் 9 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். அவர்கள் அனைவரும் சிங்களவர்களேயாவர். மகாதிவுல்வெவ திட்டம் பெரியவிளான் குளம் என்னும் தமிழ்ப் பிரதேசமே இத்திட்டம் கொண்டுவரப்பட்ட பின் மகாதிவுல்வெவ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1981 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேற்றம் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் 1200 ஏக்கர் காணி பங்கிடப்பட்டது. இதில் 65% சிங்கள மக்களுக்கும் 35% தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் எனப் பங்கிடப்பட்டது. இவ்வாறு பங்கிடப்படும் போது ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் வயல் நிலமும், ½ ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது. இத்திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களை மையமாக வைத்தே 1977 இல் சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தேர்தல் தொகுதி வந்த பின்னரே சிங்களப் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். 1977 இற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதித்துவம் என்பது திருகோணமலை மாவட்டத்திலிருந்து இருக்கவில்லை. தமிழ்ப் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் மட்டும் இருந்தனர். 1960 இற்கு முன்னர் திருகோணமலை, மூதூர் எனும் இரு தொகுதிகள் மட்டுமே இருந்தன. திருகோணமலைத் தொகுதியிலிருந்து ஒரு தமிழரும் மூதூர்த் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்பட்டனர். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டதால் அத்தொகுதியிலிருந்து ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் என இருவர் தெரிவு செய்யப்பட்டனர். இதனால் மொத்தமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழரும் ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்படும் நிலை இருந்தது. 1977 வரை இந்நிலை தொடர்ந்திருந்தது. 1977 இல் சேருவில தொகுதி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு இனத்திலுமிருந்து தலா ஒருவரே தெரிவு செய்யப்பட்டார். 1989 ஆம் ஆண்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாவட்டத்தில் ஏறத்தாழ மூன்று இனங்களும் சமமாக இருப்பதனால், தேர்தல் முறைமையின் பண்புக்கு ஏற்ப, இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை மாற்றமடைந்து வருகின்றது. ‘போனஸ்’ ஆசனம் முதலாவது வரும் கட்சிக்கு வழங்கப்படுவதால் ஓர் இனத்திற்கு இரண்டு ஆசனங்களும் ஏனைய இனங்களுக்கு ஒவ்வோர் ஆசனமும் கிடைக்கின்றன. நீர் நிலங்கள் 96 சதுர மைல்களைப் பிடித்துள்ள திருகோணமலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 2630 சதுர மைல்களாகும். இதில் திருகோணமலைத் தேர்தல் தொகுதி 461.30 சதுர மைல்களையும், மூதூர்த் தேர்தல் தொகுதி 570.70 சதுர மைல்களையும், சேருவில தேர்தல் தொகுதி 1598.80 சதுர மைல்களையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றில் திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் தமிழரும், மூதூர்த் தேர்தல் தொகுதியில் முஸ்லிம்களும், சேருவில தேர்தல் தொகுதியில் சிங்களவரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். காடுகளைப் பொறுத்தவரை கூட திருகோணமலை மாவட்டக் காடுகளின் அடர்த்தியான விஸ்தீரணம் 870 ஹெக்டயர் ஆகும். சாதாரண காடுகள் 16,310 ஹெக்டயரில் அமைந்துள்ளன. சேருவில தேர்தல் தொகுதியில் மட்டும் 9510 ஹெக்டயர் காடுகள் உள்ளன. பெரிய பிரதான குளங்கள் அனைத்தும் சேருவில தேர்தல் தொகுதியிலேயே உள்ளன. சிறிய பிரதான நீர்ப்பாசனக் குளங்களிலும் பெரும்பாலானவை சேருவில தேர்தல் தொகுதியிலேயே உள்ளன. இத்தொகுதி மூதூரின் தென் எல்லையிலிருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு எல்லைவரை பரந்துள்ளது. இச்சேருவில தேர்தல் தொகுதியில் ஐந்து பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோமரங்கடவல, சேருவில, மொறவெவ, பதவி சிறீபுர, கந்தளாய் என்பன அவையாகும். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தின் பெரும் பகுதியைக் கோறையாக்கிக் கைப்பற்றினாலும், திருகோணமலை மாவட்டத்தின் தலைநகர் திருகோணமலையாக இருப்பது பேரினவாதிகளுக்குப் பெரிய சங்கடமாகியுள்ளது. குடியேற்றங்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு மாவட்டத்தின் தலைநகரை தங்களின் கைக்குள் வைத்திருப்பது அவசியம் என உணர்கின்றனர். இதனாலேயே அண்மைக்காலமாக தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள திருகோணமலை நகருக்குள் ஊடுருவிக் குடியேறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நகரை நோக்கிய ஊடுருவல் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம் என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேருவில தேர்தல் தொகுதிப் பிரதேச சபைகள் பிரதேச சபைகள் நிலப்பரப்பு கோமரங்கடவல 285 ச.மைல் சேருவில 279 ச.மைல் ஈச்சிலம் பத்தை 98 ச.மைல் மொறவெவ 322 ச.மைல் பதவி சிறீபுர 217.70 ச.மைல் கந்தளாய் 397.30 ச.மைல் இனம் ஆண்டு தொகை வீதம் தமிழர் 1901 17,069 60.0% 2012 122,080 32.3% முஸ்லிம் 1901 8,258 29.0% 2012 152,845 40.0% சிங்களவர் 1901 1,203 4.2% 2012 101,991 7.0% திருகோணமலையில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு – 1951 ஏப்ரல் 13, 14, 15 தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டின் பிரதான தீர்மானங்கள்: • தமிழ் பேசும் மக்கள் ஒரு தனியான தேசிய இனம். அவர்கள் சிங்களவர்களுடன் சமஷ்டி அமைப்பில் இணைய விரும்புகின்றனர். • சோல்பரி அரசியல் திட்டம் தமிழ் பேசும் மக்களை அடிமையாக்குவதற்கு ஏதுவான திட்டம் என்பதால் மாநாடு அதனைக் கண்டிக்கின்றது. • தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ் தமிழ் பேசும் மக்கள் சந்திக்கும் அவமதிப்பையும் குடியுரிமைச் சட்டங்களின் கீழ் அவர்கள் படும் அவமானங்கள் பற்றியும் குறிப்பெடுத்துக்கொள்கிறது. • தற்போதைய அரசியல் அமைப்பின் கீழும், தற்போதைய அரசாங்கத்தின் கீழும், தமிழ் மொழியும், கலாசாரமும் எதிர்நோக்கியிருக்கும் பேராபத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. மாநாட்டில் தந்தை செல்வா ஒருவரே தலைமைப் பதவியில் தொடர்ந்திருப்பது உகந்ததல்ல எனக்கூறிய போதும் தொடக்க காலம் என்பதால் தலைவராக இருக்கும்படி வற்புறுத்தப்பட்டது. தயக்கத்தின் பின் தந்தை செல்வா ஏற்றுக்கொண்டார். தலைமையுரையில் தந்தை செல்வா, “கிழக்கு மாகாணம் ஆபத்தான நிலைக்குச் செல்கின்றது. இதைத் தடுக்க கிழக்கு மக்கள் எழுச்சியுற வேண்டும். ஏனைய தமிழ் மக்கள், அவர்களுடன் சேர வேண்டும்” எனக் கூறினார். பிரதமர் டி. எஸ். சேனநாயக்கவின் யாழ் வருகையும், பகிஷ்கரிக்கும் பிரச்சாரமும் 1951 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இவர்தான் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் உருவாக்கினார். மலையக மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தார். தேசியக் கொடியில் தமிழ் மக்களினை இலங்கை இறைமைக்கு வெளியே தள்ளினார். இத்தகையவரின் வருகையைப் பகிஷ்கரிக்குமாறு தமிழரசுக் கட்சி பிரச்சாரம் செய்தது. 1952 பொதுத்தேர்தல் இத்தேர்தலில் வடக்கு – கிழக்கில் ஏழு தொகுதிகளில் தமிழரசுக் கட்சி போட்டியிட்டது. திருமலையில் இராசவரோதயமும், கோப்பாயில் வன்னியசிங்கமும் மட்டும் வெற்றி பெற்றனர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கேசன்துறைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நடேசனிடம் தோல்வியடைந்தார். மொத்தம் 45,531 வாக்குகள் கட்சிக்குக் கிடைத்தது. மட்டக்களப்புத் தொகுதியில் கட்சி அனுதாபியான ஆர்.பி. கதிர்காமர் வெற்றி பெற்றாராயினும் அடுத்த நாளே, தந்தி மூலம், ஐக்கிய தேசியக் கட்சியில் சேந்தார். கல்குடாவில் சிவஞானம் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1953, தை மாதம், பொங்கல் தினத்தன்று தமிழரசு வாலிப முன்னணி உருவாக்கப்பட்டு அமிர்தலிங்கம் அதன் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழரசுக் கட்சியின் 2 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தமிழரசு வாலிப முன்னணி ‘சங்கிலி’ நாடகத்தை அங்கு மேடையேற்றியது. 1953, ஆகஸ்ட் 12, ஹர்த்தால் அரிசியின் விலையை அரசாங்கம் 25 சதத்திலிருந்து 75 சதத்திற்கு உயர்த்தியதை எதிர்த்து இடதுசாரிகள் ஹர்த்தாலை ஒழுங்கு செய்தனர். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் வெற்றி பெற தமிழரசுக் கட்சி உதவியது. இதனால் டட்லி சேனநாயக்க பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தமையைத் தொடர்ந்து, சேர்.ஜோன். கொத்தலாவல பிரதமரானார். ஹர்த்தால் போராட்டத்தில் லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழரசுக் கட்சியும் மட்டுமே பங்குபற்றின என சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் லெஸ்லி குணவர்த்தன கூறினார். சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர், தாம் எதிர்ப்பில்லையாயினும், இலங்கை மக்கள் அத்தகைய ஒரு போராட்டத்தை நடாத்துவதற்கு தயாரான கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்று தாம் நம்பவில்லை எனக் கூறினர். கொத்தலாவலக்கு கறுப்புக் கொடி (1954) 1954 நடுப்பகுதியில் எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வருகை தந்தார். இதன்போது இடம்பெற்ற நிதி மந்திரி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நன்றி தெரிவிப்பு உரையானது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நடைபெற்றது. தமிழ் மொழிபெயர்ப்புத் தானும் இருக்கவில்லை. இதன் பின்னர் கொத்தலாவல யாழ் வருகைதந்த போது தமிழரசுக் கட்சி அவர் வருகையைப் பகிஷ்கரித்தது. தமிழைப் புறக்கணித்தமை, இந்திய வம்சாவளியினரை நாடு கடத்தும் ஒப்பந்த முயற்சிகளை மேற்கொண்டமை, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியமை, திரிசிங்கள, ஜாதிக பெரமுனவை ஆதரித்தமை என்பவற்றைக் கண்டித்துப் பகிஷ்கரிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழரசு வாலிப முன்னணி கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றது. யாழ் நகர மண்டபத்தில் வரவேற்புக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த வேளையில் பிரதமர் மேடையில் ஏறியதும் அமிர்தலிங்கம் தலைமையில் 200 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னரே ஏற்பாடு செய்தபடி, சட்டைப் பைகளில் இருந்த கறுப்புக் கொடிகளைக் காட்டி ‘பிரதமரே திரும்பிப் போ!’ எனக் கோசமிட்டனர். பார்வையாளர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். பொலிஸ் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தமையினால் இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டனர். இதுவே இரத்தம் சிந்திய முதல் போராட்டமாகும். முதற் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் இதுவே. சேர்.ஜோன். கொத்தலாவல கொக்குவிலில் நடந்த வரவேற்பில், ஹண்டி பேரின்பநாயகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் சிங்களம், தமிழ் இரண்டையும் அரச கரும மொழியாக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்படும் எனக் குறிப்பிட்டார். ஆனால் கொழும்பு திரும்பியதும் அடுத்த நாளே எதிர்ப்பு ஏற்பட்டதால், அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டார். 1954 இல் கொழும்பு நகர மண்டபத்தில் நடந்த லங்கா சமசமாஜக் கட்சியின் மொழிச் சமத்துவக் கூட்டம் பிலிப் குணவர்த்தன குழுவினரால் குழப்பப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு 1955 ஏப்ரல் 16,17 ஆம் திகதிகளில் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவராக வன்னிய சிங்கமும், செயலாளராக செல்வநாயகமும் தெரிவு செய்யப்பட்டனர். 1955 ஆம் ஆண்டு என்.எம். பெரேரா மொழிச் சமத்துவத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உட்பட பலர் இதனை நிராகரித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாடு 1956 பெப்ரவரி 18 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தனது களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கரும மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள், தமிழ்த் துணை அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர். இத்தீர்மானத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சி தமிழ்ப் பிரதேசமெங்கும் 1956 பெப்ரவரி 20 திகதி ஹர்த்தால் அனுஷ்டித்தது. தமிழ் அமைப்புகளை இணைத்து ஐக்கிய முன்னணி அமைக்க முயற்சி தமிழரசுக் கட்சியின் செயற்குழு, தமிழ் அமைப்புகளை இணைத்து ஐக்கிய முன்னணி அமைக்கும் முடிவை எடுத்தது. ஏனைய குழுக்களுடனும், தனிநபர்களுடனும் பேசுவதற்கு கட்சி சார்பில் கு. வன்னியசிங்கம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், இராசவரோதயம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தமிழாசிரியர் சங்கத்துடன், நீதியரசர் நாகலிங்கம் போன்றோரும் இதற்கான முயற்சியைச் செய்தனர். ஆனால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. 1956 பொதுத் தேர்தல் 1956 ஏப்ரல் 5, 7, 10 ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் இரண்டும் போட்டியிட்டன. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி 10 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. 1952 ஆம் ஆண்டு தேர்தலில், 45,331 வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் 1,42,036 வாக்குகளைப் பெற்றது. வடக்கு – கிழக்கில், தமிழ் – முஸ்லிம் வாக்குகளையும் பெற்றிருந்தது. இதனூடாக வடக்கு – கிழக்கு மக்கள் தமது ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். தேர்தலின் பின்னர் பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி முதன்முதலாக ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சியை அமைத்தது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 8 ஆசனங்களை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சி ஸ்தானத்தையும் இழந்தது. சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா எதிர்க்கட்சித் தலைவரானார். இதற்குத் தமிழரசுக் கட்சியும் ஆதரவளித்தது. https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-2/
-
ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்
1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1 June 6, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா இக்காலகட்டம், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் இயக்கம் தொடங்கியதில் முடிவடைகின்றது. இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் இலங்கை என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இருந்து விலகி வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வலியுறுத்தி அதற்கு அதிகாரத்தைக் கோரும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் மூன்று மாற்றங்கள் இடம் பெற்றன. ஒன்று, ஒற்றை ஆட்சியில் சமவாய்ப்புக் கோரிக்கை என்பது கைவிடப்பட்டு, சமஸ்டிக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது, தாயகம் அடையாளப்படுத்தப்பட்டதும் தமிழீழ அரசியல் தமிழத்தேசிய அரசியலாக மாற்றமடைந்தது. மூன்றாவது, இதுவரை காலமும் சட்டசபைகளில் பேசுதல் அல்லது உரையாற்றுதல், கோரிக்கை மனுக்களை அனுப்புதல் என்கின்ற அணுகுமுறைக்கு மாற்றாக மக்களை இணைத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம், 1957 ஆம் ஆண்டு திருமலை யாத்திரை, 1957 – 58 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டங்கள், 1961 ஆம் ஆண்டு கச்சேரிகளின் முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் என்பன முக்கியமானவையாகும். அகில இலங்கை தமிழரசுக் கட்சி இப்போராட்டங்களை முன்னெடுத்தது. எஸ்.ஜே.வி செல்வநாயகம், ‘தந்தை’ செல்வா என அழைக்கப்பட்டார். அவர் இக்காலகட்டத்தை நகர்த்திய முக்கிய தலைவராகக் காணப்படுகின்றார். • புதிய கட்சி உருவாக்க முயற்சி இடம்பெறல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய செல்வநாயகம் குழுவினர் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்துப் பிரசாரம் செய்தனர். இதற்கான முதல் கூட்டம் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முன்றலில் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன், வன்னியசிங்கம் உட்பட இளைஞர்களின் சார்பில் சட்டமாணவராக இருந்த அமிர்தலிங்கமும் உரையாற்றினார். தொடர்ந்து கொழும்பில் ஒவ்வொரு வியாழன் இரவும் ஒவ்வொரு நண்பர் வீட்டில் சமஸ்டிக் கோரிக்கை தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. டாக்டர் வி.என். பரமநாயகம், எம்.திருவிளங்கம், வி.என். திருநாவுக்கரசு, பி. நல்லசிவம்பிள்ளை, வி.பி.சி. முத்துக்குமாரசுவாமி, எஸ்.பி. வேலாயுதப்பிள்ளை, வி. நவரத்தினம், எஸ்.டி. சிவநாயகம், அருள் தியாகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதற்கப்பால் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் சமஸ்டி பற்றிய கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன. திருகோணமலையில் 1949 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 8 ஆம் திகதி சக்தி நிலைய ஆதரவில் சமஸ்டி பற்றிய கருத்தரங்கு இடம்பெற்றது. இராஜவரோதயம் இராமநாதன், விஜயநாதன் ஆகியோர் இக்கருத்தரங்கினை ஒழுங்கு செய்வதில் முன்னிலை வகித்தனர். மட்டக்களப்பில் ஆர்.ப. கதிர்காமர் தலைமையில் முதலாவது கூட்டம் இடம்பெற்றது. ஈ.ஆர். தம்பிமுத்து, சாகுல்ஹமீது, செ. இராசதுரை, இரா. பத்மநாதன், பாலசுப்பிரமணியம், சித்தாண்டி நாகலிங்கம், சிவஞானம், ஆசிரியர் கனகசபை ஆகியோரும் இதனை ஒழுங்குபடுத்துவதில் முன்னிலையில் நின்றனர். • நந்திக்கொடி ஏற்றல் 1949 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் மூன்றாம் திகதி நல்லூர் சங்கிலித் தோப்பில் 1619 இல் அழிக்கப்பட்ட சங்கிலி மன்னனின் நந்திக்கொடியை புதிய அணியினர் மீளவும் ஏற்றினர். நந்திக்கொடி ஏற்றலின் பின்னர் ஊர்வலமாக நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் வீதிக்குச் சென்றனர். அங்கு ப. முத்துக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்தது. போலீசார் கூட்டத்தினைத் தடை செய்தனர். அடுத்தநாள் நான்காம் திகதி நல்லூர்க் கூட்டம் தடைப்பட்டதைக் கண்டித்து நவாலியில் பண்டிதர் இளமுருகனார் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர். அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் தோற்றம் – 1949 டிசம்பர் 18 அகில இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களும், சமஸ்டிக் கோரிக்கைக் கருத்தினால் கவரப்பட்ட உறுப்பினர்களும் 1949 டிசம்பர் 18 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு மருதானையில் உள்ள அரசாங்க லிகிதர் சேவை கட்டிடத்தில் கூடி அகில இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோர் கூட்ட அழைப்பாளர்களாக பத்திரிகைகள் மூலம் அழைப்பு விட்டிருந்தனர். டாக்டர் எம். திருவிளங்கம் வரவேற்புக்குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். செல்வநாயகம், கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். செல்வநாயகம் அவர்களின் தலைமைப் பேருரையின் சுருக்கம் “யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்குமுன் இங்கு வசித்த மக்கள் பல நூற்றாண்டுகளாகச் சிங்களம்பேசும் இனம், தமிழ்பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். தமிழ்பேசும் மக்களில் அரைப்பங்கினரைப் பிரஜாவுரிமை அற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன் அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் தமிழ்பேசும் மக்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது. சிங்கக்கொடி சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று அது சிங்களவருடைய அதிகாரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக்கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக்கொடி எனக் கொள்ளப்படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் தேசியக்கொடியாக ஓர் இனத்தவரின் கொடியைக்கொண்ட நாடு வேறு எதுவும் உலகில் இல்லை. தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கை தமிழ்பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங்கம் அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்! தமிழ்பேசும் மக்களின் எல்லாப் பிரிவினருக்குள்ளும் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள் இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மட்டுமன்றி, அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக்கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கைவாழ் தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்யும் பொறுப்பு பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது. அரசாங்கத்தின் குடியேற்றக்கொள்கை எல்லாவற்றையும் விடவும் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இக்கொள்கையின் ஆபத்தை கல்லோயாவில் காண்கின்றோம். கல்லோயாத் திட்டத்தின்கீழ் நீர் பாய்ச்சப்படும் பிரதேசம், தமிழ்பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ்பேசும் இப்பிரதேசத்தில் அரசாங்கம் சிங்கள மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இது உண்மையாக இருந்தால் இன்றைய தமிழ்பேசும் பிரதேசத்தை குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றது என்பது தெளிவு. தடுப்பார் இன்றி, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப்பிரதேசமே இல்லாதொழியும். ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும், ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டிற்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஸ்டி அரசு இலங்கையில் ஏற்பட வேண்டும். தமிழ்பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தினால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால் இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாக இருக்கிறது. கிழக்கு மாகாணம் முழுவதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வேண்டுமென்றால் தமிழ்பேசும் தமிழர்களும், முஸ்லீம்களும் ஒன்று சேர வேண்டும். ஆனால் எங்களுடைய இயக்கம் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப்பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? சிங்களம்பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லீம்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. அவர்களுக்கு என்ன வேண்டும்? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமென்றால், நமது சமூகத்தில் இருக்கும் குறைகளைக் களைந்து அதைத் தூய்மைபெறச் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுபவர்ளாகக் கருதுகின்றனர். ‘யாம் ஒருவருக்கு கொடுமை செய்தால் தர்ம நீதியின்படி எமக்கும் பிறர் ஒருவர் அதையே செய்வார்’. தமிழ் மக்கள் அரசியல் சுதந்திரம் பெற வேண்டுமேயானால், தம் சமுதாயத்தில் உரிமையற்றவர்களாய் இருக்கும் மக்களுக்கு அவ் உரிமை வழங்க வேண்டும். மலைநாட்டில் வாழும் தமிழ் தொழிலாளர்களது நிலைமையானது இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டத்தகாதவர்களாகி விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிைமை இல்லாமல் இருப்பது மாத்திரமன்றி தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவும் இருக்கிறார்கள். ஏனைய தமிழ்பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்காக எதிர்பார்ப்பது இந்தியாவை அல்ல. சுதந்திரம் விரும்பும் இலங்கைவாழ் மக்களிடமிருந்தே அவ் உதவி வருதல் வேண்டும்.” கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1. தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவும் வகையில் உழைப்பதற்காக தமிழ்பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குதல். 2. கட்சியின் பொருளாதாரக் கொள்கையாக, சோசலிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளல். இரண்டாவது தீர்மானம் தொடர்பாக காராசாரமான விவாதம் நடைபெற்றது. இதன்போது சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை இளைஞர்கள் வற்புறுத்தினர். ஆனால் பெரியவர்கள் இதனை எதிர்த்தனர். கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இருபக்கத்திற்கும் சமமான வாக்குகள் கிடைத்தன. ஈற்றில் தலைவரான செல்வநாயகம் தனது வாக்கை இளைஞர் பக்கத்திற்கு அளித்து சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை ஒரு வாக்கினால் வெற்றியுறச் செய்தார். சோசலிஸப் பொருளாதாரக் கொள்கை, தீண்டாமையை ஒழித்தல், சமூக உயர்வு – தாழ்வுகளை இல்லாமல் செய்தல் என்பவற்றை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டதை பழமை விரும்பிகள் பலர் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் விலகிக்கொண்டனர். கட்சியை ஆரம்பிப்பதற்காக உழைத்த பலர்கூட விலகிச்சென்றனர். அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சி X தமிழ்க்காங்கிரஸ் என்ற இரு சக்திகள் இயங்க ஆரம்பித்தன. தமிழிலேயே கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தினர் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதான ஆதரவுத்தளமாக மாறினர். சோல்பரியின் யாழ்ப்பாண வருகையும், பகிஸ்கரிப்பும் சோல்பரி அரசியல் திட்டத்தினை உருவாக்கிய சோல்பரிப் பிரபுவே அவ் அரசியல் திட்டத்தின்கீழ் மகாதேசாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1950 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். தமிழரசுக்கட்சி இவரது வருகையை பகிஸ்கரிக்க முடிவு செய்தது. இதுவே தமிழரசுக் கட்சியின் முதற் போராட்டமாகவும் இருந்தது. ‘தமிழினத்தின் வைரியை வரவேற்காதீர்’ என்ற தலைப்பில் தமிழரசுக்கட்சி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு ‘வருகையைப் பகிஸ்கரியுங்கள்’ என மக்களைக் கோரியது. இது தொடர்பாக 22-1-50 இல் யாழ். நகர மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதி நேரத்தில் அரசாங்கத்தினால் கூட்டம் தடை செய்யப்பட்டது. கூட்ட நாளன்று மண்டபத்தைச் சுற்றிப் பொலிஸ் காவலில் நிற்றனர். ஆயிரக்கணக்கில் வந்த மக்கள் அருகில் உள்ள தனியார் ‘கராஜ்’ஜில் கூடினர். அங்கு ஒரு மேசையின்மீது ஏறி நின்று தலைவர்கள் பேசினர். தேசியக்கொடிப் பிரச்சினை 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தேசியக்கொடியை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டது. S.W.R.D. பண்டாரநாயக்கா, கலாநிதி செனரத்பரணவிதான, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, சேர்.ஜோன். கொத்தலாவல, ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.பி. ஜாயா, எஸ். நடேசன் ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர். இதற்கு முன்னரே தேசியக்கொடி சிங்களவர்களின் சிங்கம், தமிழ் மக்களின் நந்தி, முஸ்லீம்களின் பிறை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என ஒரு பிரேரணையை தந்தை செல்வா முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அதனை ஆமோதித்தார். ஆனால் சிங்களத்தரப்பு இதனை நிராகரித்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரம் கிடைத்தபோது எந்தக் கொடியை ஏற்றுவது என்று பிரச்சினை வந்தது. 1835 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவப்பு நிறப் பின்னணியுடன் வாளேந்தியபடி இருக்கின்ற கண்டி அரசனின் சிங்களக் கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டுமென மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் முதலியார் சின்னலெப்பை பாராளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டுவந்தார். ஏ.ஈ. குணசிங்கா அதனை ஆமோதித்தார். பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவும் வரவேற்றார். இதனால் சிங்கக்கொடியே சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது. அனைத்து மதத்தவர்களும் வழிபடும் ‘சிவனொளிபாதமலை’ தேசியக்கொடியாக இருக்க வேண்டும் என ஹண்டி பேரின்பநாயகம் வலியுறுத்தினார். தமிழ், முஸ்லீம்களை குறிப்பதற்கு செம்மஞ்சள், பச்சை நிறக்கோடுகள் வாளேந்திய சிங்கத்திற்கு வெளியே இருக்கும்வகையில் கொடி உருவாக்கப்பட்டது. செனட்டர் நடேசன் இதனைக் கடுமையாக எதிர்த்தார். கொடியில் தமிழர்களும், முஸ்லீம்களும் சிங்கள தேசத்தின் எல்லைகளுக்கு வெளியே இருப்பதாகவும் அந்த இரு இனங்களையும் தடுத்து நிறுத்துவதற்காக சிங்கம் தன் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் கூறி, செனட்டர் நடேசன் எதிர்ப்புத் தெரிவித்துக் குழுவை விட்டு வெளியேறினார். ஜீ.ஜீ.பொன்னம்பலமும் டி.பி. ஜாயாவும் கொடிக்கு இணக்கம் தெரிவித்தனர். 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 14 ஆம் திகதி தேசியக் கொடிக்குழு தேசியக்கொடி பற்றிய பரிந்துரையைச் செய்தது. செனட்டர் நடேசன் இதனை ஏற்கவும் இல்லை, கையெழுத்திடவும் இல்லை. 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 15 ஆம் திகதி செனட்டர் நடேசன் இது பற்றி அறிக்கை வெளியிட்டார்.. அதில் “தேசப்பிரிவினையின் குறியீடாக கொடி இருக்கும்” எனக் கூறினார். 1952 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 02 ஆம் திகதி தேசியக்கொடி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தேசியக்கொடிக்கு ஆதரவாக 51 பேரும் தேசியக் கொடியை எதிர்த்து 21 பேரும் வாக்களித்தனர். வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் தேசியக்கொடியை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இடைத்தேர்தல் இடம்பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபை மேஜர் குரே வவுனியாவில் போட்டியிட்டார். சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார். அகில இலங்கை தமிழரசுக்கட்சியும் தேசியக்கொடியை நிராகரித்தது. “தமிழ்பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட இரண்டாம் தரப்பிரஜைகளாக இந்நாட்டில் வாழ்கின்றனர் என்பதைப் பிரகடனப்படுத்தும் ஒட்டுக்கொடி” எனப் பிரசாரம் செய்தது. சிங்களக் குடியேற்றங்கள் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைந்தது. 1941 இல் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டமும் சுதந்திரத்தின் பின்னரே நடைமுறையில் துரிதநிலைக்கு வந்தது. இக்குடியேற்றத்தின் மூலம் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 38 கிராமங்கள் சிங்களவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 06 கிராமங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. பட்டிப்பளையாறு என்ற தமிழ்ப்பெயர் கல்லோயா என மாற்றப்பட்டது. மாவட்டத்தின் சனவிகிதாசாரத்தை மாற்றுவதன் மூலம் மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதலே நோக்கமாக இருந்தது. இக்குடியேற்றத்தை மையமாக வைத்தே 1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தேர்தல் தொகுதியும், 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைநகராக குடியேற்றப் பிரதேசமான அம்பாறை தெரிவு செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டம் என்ற பெயர் பின்னர் ‘திகாமடுல்ல’ மாவட்டம் என மாற்றப்பட்டது. சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகா ஓயாவும், பதியத்தலாவையும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சிங்களப் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி கல்முனை, சம்மாந்துறை போன்ற இடங்களுக்குச் சென்று குடியேற்றங்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டது. இக்குடியேற்றங்கள், பின்னர் திருகோணமலை மாவட்டத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனிதப் பிரதேசக் குடியேற்றம், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்துவகைக் குடியேற்றங்களும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள்தான் இவற்றில் பெரியவையாக இருந்தன. மாவட்டத்தின் சனத்தொகையை மாற்றியமைப்பதில் பெரும்பங்களிப்பினைச் செய்தனர். அல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், மொறவேவாத் திட்டம், மகாதிவுல்வௌத்திட்டம், பதவியாத்திட்டம் என மிகப்பெரும் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற மாவட்டமாக இருப்பது திருக்கோணமலைதான். தாயக ஒருமைப்பாட்டைச் சிதைத்தலே இக்குடியேற்றங்களின் முக்கிய நோக்கமாக இருத்தது. 1970களில் இக்குடியேற்றங்களை வால்போல இணைத்து ‘சேருவல’ என்கின்ற சிங்களத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. பிரதேசசபைகளும் உருவாக்கப்பட்டன. ‘சேருவல’ தொகுதியின் உருவாக்கத்தால் மூதூர் என்ற இரட்டை அங்கத்தவர் தொகுதி, ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன்மூலம் மூதூர்ப் பிரதேச தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் குறைவடைந்தது. பிற்காலத்தில் இக்குடியேற்றங்கள் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டது. வவுனியா வடக்கில் மகாவலித்திட்டத்தை இதற்காகப் பயன்படுத்தினர். இன்று வவுனியா வடக்குப் பிரதேச சபையில்கூட நான்கு வட்டாரங்கள் சிங்கள வட்டாரங்களாக இருக்கின்றன. முல்லைத்தீவில் ‘வெலிஓயா’ என்ற பெயரில் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி வழங்கப்பட்ட சுதந்திரம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களினை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியது. ஆட்சியாளர்கள் ஒரேநேரத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது, அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவது என்கின்ற இரண்டு செயற்திட்டங்களை முன்னெடுத்தனர். முதலாவது செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு, கலாசார அழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன. தேசியக்கொடி குறியீட்டு வடிவில் அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது. 1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம், ஒரேநேரத்தில் தேசிய இன அழிப்பாகவும், அரசு அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவதாகவும் இருந்தது. கல்லோயாத் திட்டம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தனது நிரந்தர செயலாளர் சேர். கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசனப் பணிப்பாளர் ரி. அழகரத்தினம், நில அளவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ். புறோக்கியர் என்போரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். கிழக்கு மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டிப்பளை ஆற்றினை பாரிய நீர்பாசனத் திட்டமாக்கப் போவதாக அறிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி அழகரத்தினத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டிப்பளை ஆறு பதுளை மாவட்டத்தில் உள்ள மடுல்சீமை மலைத்தொடரில் ஊற்றெடுத்து 56 மைல்கள் பாய்ந்தோடி, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. இதன் தரையில் பிரதான தமிழ்க்கிராமமான பட்டிப்பளை இருந்தது. சிறந்த விவசாய பூமி. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சிறந்த விவசாயப் பிரதேசமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை வளர்க்கும் முகமாக இறக்காமம், கொண்டை வெட்டுவான், அம்பாறைக் குளங்களைப் புனரமைத்துக் கொடுத்தனர். அழகரத்தினம் குழுவினர் சம்மாந்துறை சென்று அங்கிருந்து மாட்டுவண்டி மூலம் பட்டிப்பளை ஆற்றின் மேல் பகுதியில் உள்ள அம்பாறை, இங்கினியாகலை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பட்டிப்பளையாற்றை இங்கினியாகலையில் மறித்து நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கி நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சிபாரிசு செய்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கல்லோயா அபிவிருத்திச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பட்டிப்பளை ஆறு கல்லோயாவாக மாற்றப்பட்டது. தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டும் முயற்சி இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தி வேலைகளை 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இங்கினியாகலையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார். பட்டிப்பளை ஆற்றை இங்கினியாகலையில் மறித்து அணை ஒன்றைக் கட்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. டி.எஸ். சேனநாயக்க அதனை ஆரம்பித்து வைத்ததால் இதற்கு சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. கல்லோயாத் திட்டம் 12,0000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் நிலங்களும் இரண்டு ஏக்கர் மேட்டு நிலங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடியிருக்க வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. 40 குடியேற்றக் கிராமங்களில் 34 கிராமங்கள் சிங்களவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டன. 6 கிராமங்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டன. கல்லோயாத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 20,000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 6 கிராமங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடியேற்றப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கல்லோயாத் திட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர். மீண்டும் குடியேறிய மக்கள் 1958 இல் நடைபெற்ற கலவரத்தில் மீண்டும் விரட்டப்பட்டனர். மீண்டும் திரும்பிய ஒருசிலரும் 1990 இல் விரட்டப்பட்டனர். இறுதியில் கல்லோயாத் திட்டம் தனித்துச் சிங்களவர்களுக்கான திட்டமாகவே மாறியது. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமென ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலங்களிலும் சிங்களவர்களே பயிர்ச்செய்கையை மேற்கொண்டனர். இதைவிட பொத்துவில் லகுகலவில் வாழ்ந்த 343 தமிழ்க் குடும்பங்களும் சிங்களவர்களினால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் காரைதீவு, விநாயகபுரம், ஆலையடி வேம்பு போன்ற இடங்களில் அதிகளவாக வாழ்கின்றனர். 1959 ஆம் ஆண்டு தேர்தல்தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. அதன்போது முதன்முதலாக சிங்கள மக்களுக்கு என அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத் தேர்தல் தொகுதியிலிருந்து முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு சிங்களவர் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டார். 1961க்கு முன்னர் இப்பிரதேசம் மட்டக்களப்புத் தெற்கு என்றே அழைக்கப்பட்டது. 1961 இல் அம்பாறை என்ற தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. குடியேற்றப் பிரதேசமான அம்பாறை இதன் தலைநகராக்கப்பட்டது. 1980களில் இதன்பெயர் திகாமடுல்ல என மாற்றப்பட்டது. இதே காலப்பகுதியில் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மாவட்டத்தில் கூட்டுவதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகாஓயா, பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. திருகோணமலைக் குடியேற்றங்கள் உலகின் எல்லா இடங்களிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதற்கு ஆதிக்கசக்திகள் குடியேற்றங்களையே ஒரு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைகளின் அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கும், போர்க்காலங்களில் போராளிகளை இலகுவாக ஒடுக்குவதற்கும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களிடையே நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ளாமல் கூறுபோடுவதற்கும், தீர்வு என வரும்போது குடியேற்ற மக்களைக்காட்டி தீர்வு முயற்சிகள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குச் சார்பாகச் செல்லவிடாமல் தடுப்பதற்கும், இக்குடியேற்றங்களே அவர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன. பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றம், அயர்லாந்தில் புரட்டஸ்தாந்தியர்களின் குடியேற்றம், கொசேவாவில் சேர்பியர்களின் குடியேற்றம், திபெத்தில் சீனர்களின் குடியேற்றம், கிழக்குத் தீமோரில் இந்தோனேசியர்களின் குடியேற்றம், பிலிப்பைன்ஸ் மிந்தானோவில் கிறிஸ்தவர்களின் குடியேற்றம் என்பன இந்த வகையிலேயே நடைபெற்றன. உலக நாடுகளின் நிர்ப்பந்தங்களினால் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது இக்குடியேற்றங்களே பெரும் தடைகளாக விளங்குகின்றன. கிழக்குத் தீமோர் மக்களின் சுதந்திரத்தினை அங்கு குடியேறியுள்ள இந்தோனேசியர்கள் தடுத்ததையும், பாலஸ்தீன சுயாட்சி ஒழுங்காகச் செயற்படுவதை மேற்குக்கரை, காஸா பகுதிகளில் குடியேறிய யூதக் குடியேற்றவாசிகள் தடுப்பதையும் இந்தவகையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைச் செயலற்றதாக்குவதற்கு ஆட்சியாளர்கள் குடியேற்றங்களையே ஒரு பிரதான கருவியாகப் பயன்படுத்தினர். தமிழர்களின் தனிவழி அரசியல் 1920களிலேயே உணரப்பட்டதால் அக்காலத்தில் இருந்தே சிங்களப் பேரினவாதிகளிடம் இக்குடியேற்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியிருந்தது. 1931 இலிருந்து 1947 வரையான டொனமூர் அரசியல் யாப்புக் காலப்பகுதியில் சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த வகையிலேயே 1941 இல் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுதந்திரத்தினைத் தொடர்ந்து தமிழர் அரசியல், சமத்துவ உரிமை என்பதற்கப்பால் தாயக இறைமை என்பதனை நோக்கி வளரத் தொடங்கியது. தாயகக் குறியீடாக வடக்கு – கிழக்கு நிலப்பரப்பு என்பது எழுச்சியடைந்தது. இத்தாயக இறைமை, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தடுக்கும் வகையில் ஒரு நீண்டகால இலக்கில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அவர்கள் பிரதானமாக தேர்ந்தெடுத்த இடமே திருகோணமலை மாவட்டமாகும். திருகோணமலை மாவட்டத்தினை கடற்கரைப்பக்கமாக வில்போல சுற்றிவளைத்து இவை மேற்கொள்ளப்பட்டன. ஏனைய தமிழ்ப்பிரதேசங்களுடனான தொடர்புகளை துண்டித்தலே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. ஒரு வில்போல நீளமாக வளைந்திருக்கும் குடியேற்றப் பிரதேசமான சேருவல தேர்தல் தொகுதியினைப் பார்க்கும்போது இவ்வுண்மை தெளிவாகப் புலப்படும். இந்நிலையில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் இக்குடியேற்றங்களைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள சதி முயற்சிகளைப் பற்றியும், பேரினவாதிகளின் மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும். இவ்வறிந்து கொள்ளலே இப்புற்றுநோயை இந்த மட்டத்திலாவது இடைநிறுத்தி மேலும் வளராமல் தடுப்பதற்குரிய மார்க்கங்களைப் புலப்படுத்தும். பேரினவாதிகளின் செயற்பாட்டிற்கு மாற்றான ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் திறந்துவைக்கும். மாற்றுமருந்து வகைகளையும் கண்டுபிடிக்கும். சுதந்திரத்திற்கு முன்னர் திருமலை மாவட்டத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த சிங்கள மக்கள் என விரல்விட்டு எண்ணக்கூடியோரே வாழ்ந்திருந்தனர். இதற்குப் புறம்பாக திருமலை நகரத்தில் மட்டும் துறைமுக வேலைகளுக்காகவும், பிரித்தானியக் கடற்படைத்தள வேலைகளுக்காகவும் தற்காலிகக் குடியேறிகள் சிலர் வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட விவசாயக் குடியேற்றத் திட்டங்களைத் தொடர்ந்தே, பெரும் எண்ணிக்கையானவர்கள் குடியேறத் தொடங்கினர். தொடர்ந்து இவற்றைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத விவசாயக் குடியேற்றத் திட்டங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றங்கள், மீனவர் குடியேற்றங்கள், புனிதப் பிரதேசக் குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள் என்பன சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தன. இக்குடியேற்றங்களின் வளர்ச்சியினாலேயே திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3% ஆக இருந்த சிங்களவர் எண்ணிக்கை, 1981 இல் 33.62% ஆக அதிகரித்தது. அதேவேளை 1827 இல் 81.82% ஆகவிருந்த தமிழர்களின் எண்ணிக்கை 36.4% ஆகக் குறைந்தது. இனி திருகோணமலையின் முக்கிய திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களைப் பார்ப்போம். தொடரும். https://www.ezhunaonline.com/1949-1968-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-1/
-
ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்
1921 தொடக்கம் 1949 வரையான காலகட்டம்: ஒற்றையாட்சிக்குள் சமவாய்ப்பு May 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா 1921 ஆம் ஆண்டு ஆரம்பித்த இக்காலகட்டம் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெறும்வரை நடைமுறையில் இருந்தது எனக் கூறலாம். இக்காலகட்டத்துடன் தமிழின அரசியல் என்பது ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் இக்காலகட்டத்து தமிழர் அரசியல் என்பது இலங்கை என்கின்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குள் சமவாய்ப்பைக் கோரும் அரசியலாகவே இருந்தது. இதை ஆரம்பித்து வைத்தவர் சேர். பொன்னம்பலம் அருணாசலமாவார். ஆனாலும் இக்காலகட்ட அரசியலை வளர்த்து எடுத்தவராக ஜீ.ஜீ பொன்னம்பலம் விளங்குகின்றார். தமிழர் மகாசபையின் தோற்றம் இலங்கைத் தேசியக் காங்கிரஸில் இருந்து வெளியேறிய சேர். பொன்னம்பலம் அருணாசலம் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தமிழர் மகாசபை எனும் இனரீதியான அரசியல் இயக்கத்தை யாழ்ப்பாணத்தில் உருவாக்கினார். இதன் உருவாக்கத்தின்போது தமிழ் அகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இலங்கைத் தீவில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களையும் இணைத்த அரசியலாகவே இக்காலகட்ட அரசியல் இருந்தது. 1924 ஆம் ஆண்டு பொன்னம்பலம் அருணாசலம்; மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்றபோது அங்கு மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனால் இக்காலகட்ட அரசியலை இவரால் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. முன்னரே கூறியதுபோல ஜீ. ஜீ பொன்னம்பலம் இதனை வளர்த்து எடுத்தார். அவரது ‘50 : 50’ கோரிக்கை இதன் அடிப்படையிலேயே எழுச்சியடைந்தது. இதன் அர்த்தம் அனைத்து விவகாரங்களிலும் 50 சதவீதம் பெரும்பான்மை இனத்திற்கும் மீதி 50 சதவீதம் ஏனைய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். பெரும்பான்மை இனம் ஏனைய இனங்களுக்கு எதிராகச் செயற்படக்கூடாது என்பதற்காகவே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் – 1924 1924 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் முன்னோடியாக ஹண்டி பேரின்பநாயகம் கருதப்படுகின்றார். இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையை இவ்வமைப்பு முன்வைத்திருந்தது. தமிழின அரசியலில் இவ்வமைப்பு பெரிய அக்கறை காட்டவில்லை. ஆனாலும் தமிழ்ச்சூழலில் சமூக மாற்ற அரசியலை இவர்களே ஆரம்பித்து வைத்தனர். குறிப்பாக, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியத் தேசிய காங்கிரஸின் அரசியலினாலும், போராட்டங்களினாலும் கவரப்பட்டவர்களாக இருந்தனர். இந்தியத் தேசிய காங்கிரஸின் இடதுசாரிப் பிரிவுடன் இவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவர்களை, யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பிரசாரக் கூட்டங்களை நடத்தினர். இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு போன்ற இந்தியத் தேசிய தலைவர்கள், இவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை வந்து யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றினர். மனிங் டிவென்சயர் அரசியல் சீர்திருத்தம் – 1924 இவ் அரசியல் சீர்திருத்தத்தின்படி சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 49 ஆக காணப்பட்டது. இதில் 37 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும், 12 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களில் 23 பேர் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்டனர். சிங்கள மக்களிலிருந்து 16 பேரும், தமிழ் மக்களிலிருந்து 7 பேரும் தெரிவு செய்யப்படக்கூடியதாக இப்பிரதிநிதித்துவம் ஒழுங்கமைக்கப்பட்டது. ஆறு பேர் இனரீதியாகத் தேர்தலின்மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஐரோப்பியர் – 3, பறங்கியர் – 2, மேல் மாகாணத் தமிழர் – 1 என்ற வகையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தவகையில் மேல் மாகாணத் தமிழர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் அருணாசலம் மகாதேவா ஆவார் . கண்டிய தேசிய அவையின் சமஸ்டிக் கோரிக்கை கண்டிய தேசிய அவை 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கரையோரச் சிங்கள மக்களின் ஆதிக்கம் கண்டியப் பிரதேசத்தில் வளரக்கூடாது என்பதற்காகவே இவ்வமைப்புத் தோற்றம் பெற்றது. இது இலங்கையில் முதன்முதலாக சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இவ்வமைப்பின் சமஸ்டிக் கோரிக்கை இலங்கையானது கரையோரப்பகுதி, கண்டியப்பகுதி, வடக்கு – கிழக்குப் பகுதி என மூன்று சமஸ்டிப் பிரதேசங்களை உருவாக்க வேண்டும் என்றும், அம்மூன்றையும் இணைத்து ஒரு மத்திய அரசை உருவாக்க வேண்டும் என்றும் இருந்தது. 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபோது டொனமூர் விசாரணைக்குழு முன்னிலையில் சமஸ்டிக் கோரிக்கையை இவ்வமைப்பு முன்வைத்தது. இக்கோரிக்கையைப் பிரசாரம் செய்வதற்காக யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கூட்டத்தை நடத்தினர். ஆனால் தமிழ்மக்கள் இவர்களது சமஸ்டிக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. இந்தச் சமஸ்டிக் கோரிக்கையின் பிரதான ஆதரவாளராக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விளங்கினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஸ்டிக் கோரிக்கையை ஆதரித்து இவர் உரையாற்றினார். சர்வஜன வாக்குரிமையும் மலையக மக்களும் டொனமூர் யாப்பின்கீழ் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது, மலையக மக்களும் வாக்குரிமை பெற்றுவிடுவார்கள் என்பதற்காக சிங்களத் தலைவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பான விவாதம் சட்டசபையில் இடம்பெற்ற போது டி.எஸ். சேனநாயக்கா “இந்தியர்களுக்கு ஒரு பெரிய நாடு உள்ளது. எங்களுக்கு இச்சிறுதுண்டு நிலமே உள்ளது” எனக் குறிப்பிட்டார். பிரான்சிஸ் மொலமூறே “பழைய காலத்தில் இலங்கையை லிப்டனின் தோட்டம் என்றனர். எதிர்காலத்தில் இலங்கையை இந்திய ஆலமரத் தோட்டம் என குறிப்பிடக்கூடும்” என்றார். சி.டபிள்யூ. கன்னங்கரா “இந்தியரின் வாக்குரிமையை எதிர்க்காதோர் துரோகிகள்” என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். இறுதியில், நாட்டில் நிலையான அக்கறை உடையோருக்கு அல்லது நாட்டில் நிலையாக வசிப்போருக்கே வாக்குரிமை என டொனமூர் குழுவினர் சிபாரிசு செய்தனர். 1931 ஆம் ஆண்டு தேர்தலில் மலையக மக்களிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டனர். ஹட்டன் தேர்தல் தொகுதியில் இருந்து பெரிசுந்தரமும், தலவாக்கலை தேர்தல் தொகுதியில் இருந்து எஸ்.பி. வைத்திலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர். டொனமூர் அரசியல் யாப்பு – 1931 1927 ஆம் ஆண்டு டொனமூர் குழுவினர் ஓர் அரசியல் யாப்பைச் சிபாரிசு செய்ய இலங்கை வந்தனர். அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு டொனமூர் அரசியல் யாப்பு என்ற பெயரில் 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை நடைமுறையில் இருந்தது. டொனமூர் குழுவினரின் மத்தியில், இலங்கையில் செயற்பட்ட அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. சிங்கள மக்களின் பிரதிநிதிகள் பிரித்தானிய மாதிரியிலான அரசாங்கம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். கண்டியப் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் முன்னரே கூறியதுபோல சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கூறினர். ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் செயற்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. டொனமூர் குழுவினர் இலங்கைச் சமூகம் ஐக்கியப்பட்ட சமூகமாக இல்லாததனாலும், இலங்கையர்கள் அரசியல் நிர்வாகத்தில் பயிற்சி குறைவுடையவர்களாக இருந்ததனாலும், அரசியல் கட்சிமுறை வளர்ச்சி அடையாமல் இருந்ததனாலும், அரைப் பொறுப்பாட்சி முறையையும், அனைத்துத் தரப்பும் பங்கேற்கக்கூடிய நிர்வாகக்குழு முறையையும் சிபாரிசு செய்தனர். நியமன உறுப்பினர்களும், தேசாதிபதியின் அதிகாரங்களும், நிர்வாகக்குழு முறையும், பொதுச்சேவை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களும் தமிழர்களின் அதிருப்தியைப் போக்குவதில் பங்காற்றும் எனவும் குறிப்பிட்டனர். சேர். பொன்னம்பலம் இராமநாதன் டொனமூர் அரசியல் யாப்பைக் கடுமையாக எதிர்த்தார். “டொனமூர் என்றால், தமிழர் இல்லை” என்று குறிப்பிட்டார். 1927 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் இதனைக் கடுமையாக எதிர்த்தார். டொனமூர் அரசியல் யாப்பு ஏற்கனவே கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி நிர்வாகக்கட்டமைப்பிடம் பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அடிப்படையில் அதிகாரத்தை ஒப்படைத்தது. முதன்முதலாக குறைந்த மட்டத்திலாவது பெரும்பான்மை இனம் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்நிலை உருவானது. சிங்கள – பௌத்தக் கருத்தியல் வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்ததால், ஏனைய இனங்களை அதிகாரக் கட்டமைப்பில் இருந்து விலக்குவதாகவும், அவர்களை ஒடுக்குவதாகவும் ஆட்சிமுறை வளரத் தொடங்கியது. 1833 ஆம் ஆண்டு கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புவரை, இனப்பிரச்சினைக்கு தீர்வாக இனவாரிப் பிரதிநிதித்துவ முறையையே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முன்வைத்தனர். 1921 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையினால் பிரதிநிதித்துவச் சமநிலை குழம்பியது. 13 சிங்களப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, 3 தமிழ்ப் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட்டனர். எனினும் ஆட்சி அதிகாரம் முழுமையாக ஆங்கிலேயரிடம் இருந்தமையினால் ஆபத்துகளைத் தொட்டுணரக்கூடிய நிலை இருக்கவில்லை. 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் பிரதிநிதித்துவச் சமநிலை குலைவுடன், கூடவே பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் இருந்தமையினால், புறக்கணிப்பைத் தொட்டுணரக்கூடிய நிலை உருவானது. இதன் அடிப்படையில் தமிழர்கள் கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர். நியமன உறுப்பினர்களும், தேசாதிபதியின் அதிகாரங்களும், நிர்வாகக்குழுமுறையும், பொதுச்சேவை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களும், சிறுபான்மையோரின் காப்பீடாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. 1931 இற்குப் பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மேற்கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளே முன்வைக்கப்பட்டன. இராமநாதன், டொனமூர் திட்டத்தை, “தமிழ் மக்களின் தூக்குக் கயிறு” எனக் குறிப்பிட்டார். சட்டசபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஒரு வாக்கினால் இவ் அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. அந்த ஒரு வாக்கினை மட்டக்களப்பைச் சேர்ந்த ஈ.ஆர். தம்பிமுத்து என்பவரே வழங்கியிருந்தார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் தேர்தல் பகிஸ்கரிப்பு டொனமூர் அரசியல் யாப்பின்கீழ் முதலாவது தேர்தல் 1931 ஜூன் மாதம் இடம்பெற்றது. இத்தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பகிஸ்கரித்தது. பகிஸ்கரிப்புக்கான காரணமாக, டொனமூர் அரசியல் யாப்பு இலங்கைக்கு பூரண சுதந்திரத்தை வழங்கவில்லை என்று கூறப்பட்டது. இப்பகிஸ்கரிப்புப் போராட்டத்திற்கு சிங்கள அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்குவதாகக் கூறியபோதும், பின்னர் பின்வாங்கினர். இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. 1927 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் டொனமூர் அரசியல் யாப்பை நிராகரித்த போதும், தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட முடியாமையினால் மன்னார் – முல்லைத்தீவு தொகுதியில் போட்டியிட்டு எஸ்.என். ஆனந்தன் என்பவரிடம் தோல்வியடைந்தார். 1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடைத்தேர்தல் இடம்பெற்றது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். இவ்வெற்றியுடன் தமிழ் அரசியலில் அவரது தலைமைத்துவம் உறுதியாகிவிட்டது. அதேவேளை காங்கேசன்துறை தொகுதியில் இருந்து நடேசன் என்பவரும், யாழ்ப்பாணத் தொகுதியில் அருணாசலம் மகாதேவாவும், ஊர்காவற்துறைத் தொகுதியில் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளையும், மன்னார் – முல்லைத்தீவுத் தொகுதியில் எஸ்.என். ஆனந்தனும், திருகோணமலைத் தொகுதியில் எம்.எம். சுப்பிரமணியமும், மட்டக்களப்புத் தொகுதியில் ஈ.ஆர். தம்பிமுத்துவும் தெரிவு செய்யப்பட்டனர். சிங்கள மகாசபை – 1934 19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து ‘சிங்கள மகாசபை’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மகாகவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம். ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்), பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகாசபையின் ஸ்தாபகர்களாகக் காணப்பட்டனர். சிங்கள மகாசபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல; வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் ‘சுவதேஷிய மகாசபா’ (Swadeshiya Maha Sabha – சுவதேசிய மகாசபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரமுகரான குமாரதுங்க முனிதாச அந்தப் பரிந்துரையைத் தோற்கடித்தார். பிளவுபட்டிருக்கிற சிங்கள இனத்தை ஒன்று சேர்த்து தேசாபிமானத்தைக் கட்டியெழுப்பி தேசத்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே இதனை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. நாட்டுக்கு சிங்கள மகாசபையின் அவசியம் என்ன என்பது குறித்த பண்டாரநாயக்கவின் விளக்கம், 10.05.1934 அன்று, ‘லக்மின’ பத்திரிகையில் வெளியாகியிருந்தது. சிங்கள மகாசபையினர் மலையகத் தோட்டத் தொழிலாளார்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக உள்நாட்டில் அவர்களுக்கு உரிமைகள் வழங்குவதை எதிர்த்ததுடன், அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றம் – 1935 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதலாவது அரசியல் கட்சியாகவும், முதலாவது இடதுசாரிக் கட்சியாகவும் லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது. சூரியமல் இயக்கம், வெள்ளவத்தை நெசவாளர் போராட்டம், மலேரியா நிவாரணச் சேவை என்பன லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெறுவதற்கு காரணமாக விளங்கின. இவ் இடதுசாரி இயக்கம் தமிழ் மக்களின் நலன்கள்மீதும், மலையக மக்களின் நலன்கள்மீதும் அக்கறைகொண்ட அமைப்பாக விளங்கியது. ஆரம்பத்தில் கட்சி மூன்று இலக்குகளைப் பிரதானமாகக் கொண்டிருந்தது. பூரண சுதந்திரத்தை அடைவது, உற்பத்தி விநியோகப் பரிவர்த்தனை சாதனங்களைத் தேசியமாக்குவது, வர்க்க – சாதி – இன – சமய ஏற்றத்தாழ்வுகள் காரணமாகத் தோன்றும் சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளை ஒழித்துக்கட்டுவது என்பவையே அவையாகும். இடதுசாரி இயக்கத்தினர், இந்தியத் தேசிய காங்கிரஸ் இயக்கத்தினரினால் கவரப்பட்டவர்களாக விளங்கியமையினால், இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர்களை இலங்கைக்கு அழைத்து தென்னிலங்கையில் கூட்டங்களை நடத்தினார். மிக நீண்டகாலம் ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றவர்களாகவும் அவற்றிற்குக் குரல் கொடுப்பவர்களாகவும் செயற்பட்டனர். 1936 ஆம் ஆண்டுத் தேர்தலும் தனிச்சிங்கள மந்திரி சபையும் 1936 ஆம் ஆண்டுத் தேர்தலில் பின்னர் மந்திரிசபை அமைக்கப்பட்டபோது அனைவரும் சிங்களவர்களாகவே இருந்தனர். அது தனிச்சிங்கள மந்திரி சபையாகவே இருந்தது. இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஜீ.ஜீ. பொன்னம்பலம் ‘50 : 50’ கோரிக்கையை முன்வைத்தார். இதன் பின்னர் ‘50 : 50’ கோரிக்கை ஓர் அரசியல் இயக்கமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்தேர்தலின் பின்னர் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவினால் சேர். வைத்திலிங்கம் துரைசாமி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின்போது சமநிலை காணப்பட்டது. ஆனால் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான டாக்டர் என்.எம். பெரேராவின் முயற்சியினால் அபயகுணசேகர என்ற உறுப்பினர் சேர். வைத்திலிங்கம் துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்தார். 1942 ஆம் ஆண்டு ரி.டி. ஜெயதிலகவின் உள்நாட்டு மந்திரிப்பதவி வெற்றிடமாக, அவ்விடத்திற்கு அருணாசலம் மகாதேவா அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். அமைச்சர் பதவியைத் தொடர்ந்து அருணாசலம் மகாதேவா சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப்போக முனைந்தார். ஆனால் ஜீ.ஜீ. பொன்னம்பலம் சிங்களத் தலைவர்களிடமிருந்து விலகியே இருந்தார். தமிழ் அரசியலில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் செயற்பாடு மேலும் வளர்ச்சிபெற ஆரம்பித்தது. டொனமூர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த, குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு எதிராகப் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1935 ஆம் ஆண்டின் 19 ஆவது சட்டமாகிய காணி அபிவிருத்திச் சட்டம், 1940 ஆம் ஆண்டின் 24 ஆவது சட்டமாகிய மீன்பிடிச் சட்டம், 1942 ஆம் ஆண்டின் 47 ஆவது சட்டமாகிய பேருந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம் என்பன அதில் முக்கியமானவையாகும். இவற்றில் முதலாவது சட்டம் 1927 ஆம் ஆண்டின் நில ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளுக்குச் சட்ட உருக்கொடுக்கும் முகமாக ஆக்கப்பட்டதொன்றாகும். அதன் பிரதான நோக்கம் நிலமற்ற குடியான்களுக்கும், மத்திய வகுப்பினருக்கும் காணிகளைப் பங்கிட்டுக் கொடுப்பதாகும். இரண்டாவது சட்டமாகிய மீன்பிடிச்சட்டம் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் இலங்கையர் அல்லாதோர் மீன்பிடிக்க விரும்பினால், அதற்குரிய அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென விதித்தது. இதன் இலக்கு இந்திய சமூகத்தவர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதினின்று தடுப்பதாகவே இருந்தது. மறுபுறம் பேருந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம், பேருந்து சேவையை நடத்துவதில் இலங்கையருக்கு முன்னுரிமை வழங்க முன்வந்தது. இந்தச் சட்டங்கள் இந்தியருக்கு எதிரானவை என்பது நேரடியாக எடுத்துக்கூறப்படாத போதும், நடைமுறையில் அவை இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளியினரை நாட்டின் பொருளாதார அலுவல்கள் சிலவற்றிலிருந்து ஒதுக்கி, அந்த வாய்ப்புகளை இலங்கையர்பால் திருப்பிவிட முனைந்தன என்பதில் சந்தேகமில்லை. இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்கள் இத்தொழில்களில் ஈடுபட அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டது. அதேவேளை, இக்காலங்களில் அரச ஊழியர்களாக இந்திய வம்சாவளி மலையக இனத்தவர்கள் பலர் இருந்தனர். 1939 ஆம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர்.ஜோன். கொத்தலாவல, ஒரே நாளில் சுற்று நிரூபணம் ஒன்றைக் கொண்டுவந்து, அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றிய இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் வேலையிலிருந்து நீக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த நகர்ப்புறங்களில் செயற்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் அமைப்புகள், இந்தியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய மகாத்மா காந்தியிடம் இப்பாதிப்புப் பற்றி முறையிட்டனர். காந்தி இவ்விவகாரம் தொடர்பாக இலங்கையின் தலைவர்களோடு பேசித் தீர்த்து வைக்குமாறு ஜவஹர்லால் நேருவை இலங்கைக்கு அனுப்பினார். நேரு இலங்கைத் தலைவர்களுடன் பேசியபோதும், இலங்கைத் தலைவர்கள் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. இதன்பின்னர் நேருவின் ஆலோசனையின் பெயரில் 1939 ஆம் ஆண்டு இலங்கை – இந்தியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதுவே இந்திய வம்சாவளியினர் மத்தியில் உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் இயக்கமாகும். 1940 ஆம் ஆண்டு அப்புத்தளை கதிரேசன் கோயிலில் இலங்கை – இந்தியக் காங்கிரஸ் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. இது, 1950களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1940களின் பிற்பகுதியில் சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை – இந்தியக் காங்கிரஸின் தலைவராகப் பதவியேற்றார். இறக்கும்வரை அவரே அதன் தலைவராக விளங்கினார். கிராம சபைகளும் மலையக மக்களும் டொனமூர் யாப்பு சில கட்டுப்பாடுகளுடன் மலையக மக்களுக்கு வாக்குரிமையை வழங்கியது. தம்மைப் பதிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் வலுவான அக்கறை காட்டினர். இது சிங்கள அரசியல் தலைவர்களிடையே அச்சத்தைக் கொண்டுவந்தது. அவர்கள் உள்ளூராட்சிச் சபைகளில் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முனைந்தனர். 1889 ஆண்டின் கிராமிய சபைச் சட்டத்தின்படி ஐரோப்பியர், பறங்கியர், இந்தியர் என்போருக்கு கிராமசபைகளில் பங்குபற்றும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் கிராமிய வாழ்க்கையுடன் இணைந்த பகுதியினர் அல்லர் என இதற்குக் காரணம் கூறப்பட்டது. 1937 ஆம் ஆண்டு, கிராமப்பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டங்களுக்கு வரி அறவிடுவது என்றும், ஐரோப்பியருக்கும் பறங்கியருக்கும் கிராமசபை உறுப்பினர் உரிமை வழங்குவதென்றும் கிராமசபைச் சட்டம் திருத்தப்பட்டது. இந்திய வம்சாவளியினரான மலையக மக்களுக்கு அவ்வுரிமை வழங்கப்படவில்லை. இச்சட்டத்திற்கு இலங்கையிலிருந்த இந்தியச் சங்கங்கள் பல எதிர்ப்புத் தெரிவித்தன. “இச்சட்டம் இன வேறுபாடு காட்டலின் அடிப்படையில் அமைந்தது” என இந்திய அரசாங்கமும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் காரணமாக பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராமசபை உறுப்பினர் உரிமையை மறுக்கும் இன்னொரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தோட்டங்களில் சிங்களத் தொழிலாளர்கள் மிகக்குறைவாக இருந்ததனால் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரானதாகவே இச்சட்டம் அமைந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி – 1943 லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து எஸ்.ஏ. விக்ரமசிங்க தலைமையில் வெளியேறிய குழுவினர், 1943 ஆம் ஆண்டு ஜூலை 3 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். சோவியத் யூனியனின் தலைவர்களில் ஒருவரான லியோன் ரொஸ்கிக்கும், சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஸ்டாலினிற்கும் இடையே ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகளே கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்குக் காரணங்களாக அமைந்தன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது மாநாட்டில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்டதுடன் அதன் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொண்டது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1944 1944 ஆம் ஆண்டு சோல்பரி குழுவினர் இலங்கைக்கென ஒரு புதிய அரசியல் யாப்பை சிபாரிசு செய்வதற்காக இலங்கை வந்தனர். இச்சோல்பரிக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஜீ.ஜீ. பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டார். சோல்பரிக் குழுவினர் முன்னிலையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்தது. இதன் நோக்கம், பெரும்பான்மைச் சமூகம் ஏனைய சமூக நலன்களுக்கு எதிராகச் செயற்படாதவாறு சமவாய்ப்புகளைக் கோருவதாக இருந்தது. போல்சேவிக் லெனினிசக் கட்சி – 1945 1945 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய கொல்வின் ஆர்.டி. சில்வா, அக்கட்சியில் இருந்து வெளியேறி போல்சேவிக் லெனினிசக் கட்சியை உருவாக்கினர. இக்கட்சி தமிழ்மக்கள் விவகாரங்களில் வலுவான அக்கறையைக் காட்டிய கட்சியாக விளங்கியது. ஐக்கிய தேசியக் கட்சி – 1946 சோல்பரி அரசியல் யாப்பு, பாராளுமன்ற அரசாங்கமுறையைச் சிபாரிசு செய்தது. இவ்வரசாங்கமுறைப்படி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கையின் பிரதான இயக்கமாக விளங்கிய இலங்கைத் தேசிய காங்கிரஸ், எஸ்.டபுள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் உருவாக்கப்பட்ட சிங்கள மகாசபை, முஸ்லிம் மக்கள் நலன்களைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கின. டி.எஸ். சேனநாயக்கா இக்கட்சியின் தலைவராக விளங்கினார். 1947 ஆம் ஆண்டு தேர்தலின்போது இக்கட்சி ஏனைய சிறு கட்சிகளுடனும், சுயேட்சை உறுப்பினர்களுடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. டி.எஸ் சேனாநாயக்கா இலங்கையின் முதலாவது பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் உபதலைவர்களாக எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, சேர். ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ரி.பி. ஜாயா, அருணாசலம் மகாதேவா, எஸ். நடேசன் என்போரும்; செயலாளராக எச்.டபுள்யூ. அமரசூரியவும்; பொருளாளர்களாக ஜே.ஆர். ஜெயவர்த்தன, ராசிக் பரீத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். சோல்பரி அரசியல் யாப்பு – 1947 சோல்பரி அரசியல் யாப்பு 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு அமலுக்கு வரும்வரை நடைமுறையில் இருந்தது. இதில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த இனங்களைப் பாதுகாக்கவென சிறுபான்மையோர் பொதியொன்று உருவாக்கப்பட்டது. இதில் சிறுபான்மையோர் காப்பீடுகளாக, பின்வருவன கொள்ளப்பட்டன. 1. யாப்பின் 29 ஆவது சரத்து 2. செனட் சபை 3. நியமன உறுப்பினர் 4. பல்லங்கத்தவர் தேர்தல் தொகுதி 5. யாப்பை திருத்த 2/3 பெரும்பான்மை பெறப்படல் 6. அரசாங்க சேவை, நிதிச் சேவை ஆணைக்குழுக்கள் 7. கோமறைக்கழகம் ஆயினும், இவை எதுவும் நடைமுறையில் பெரிய பயன்களைத் தரவில்லை. சோல்பரி யாப்பு மீதான தமிழர்களின் எதிர்ப்பு சோல்பரி யாப்பின் தீமைகளை, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்க, ஜீ.ஜீ பொன்னம்பலம் பிரித்தானியா சென்றார். ஆனால் சிங்களத் தலைவரில் ஒருவரான டி.எஸ். சேனநாயக்கா மற்றும் தமிழ்த் தலைவர்களான நடேசன், அருணாசலம் மகாதேவா, தியாகராஜா என்போரின் ஆதரவுடன் சோல்பரி யாப்பு நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமுற்ற ஜீ.ஜீ. பொன்னம்பலம், யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்ப்பிரதிநிதிகளைத் தேர்தலில் தோற்கடிக்கப்போவதாகச் சபதம் செய்தார். 1947 ஆம் ஆண்டு தேர்தல் 1947 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளைவிட அதிக ஆசனங்களைப் பெற்றது. ஆனாலும் அரசாங்கத்தை அமைக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸ் ஏழு இடங்களில் வெற்றி பெற்றது. சோல்பரி அரசியல் யாப்பிற்குச்சார்பாக வாக்களித்த தமிழ்த் தலைவர்களை, குறிப்பாக அருணாசலம் மகாதேவாவை, தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஜீ.ஜீ. பொன்னம்பலம் தனது பிறப்பிடத் தொகுதியான பருத்தித்துறைத் தொகுதியைவிட்டு, யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, அருணாசலம் மகாதேவாவைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். ஏனைய தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காங்கேசன்துறையிலும், ஓடிட்டர் ஜெனரலாக இருந்த திரு கே. கனகரத்தினம் வட்டுக்கோட்டையிலும், திரு சி. வன்னியசிங்கம் கோப்பாயிலும், நீதிபதியாக இருந்த திரு இராமலிங்கம் பருத்தித்துறைத் தொகுதியிலும், திரு வி. குமாரசாமி சாவகச்சேரித் தொகுதியிலும், திரு சிவபாலன் திருகோணமலைத் தொகுதியிலும் வெற்றிபெற்றனர். தேர்தலின் பின்னர் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்பேசும் மக்களின் தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அதன் தலைவர் திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழரின் தலைவராகவும் விளங்கினார். பிரஜாவுரிமைச் சட்டங்களும் தேர்தல் திருத்தச் சட்டமும் 1948 ஆம் ஆண்டு முதலாவது பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒருவர் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற, அவர் இலங்கையில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது அவரது தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இச்செயற்பாடு இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்காமல் செய்தது. தொடர்ந்து இந்தியாவின் அழுத்தம் காரணமாக 1949 ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இலங்கையர் அல்லாத ஒருவர் பிரஜாவுரிமையைப் பெற வேண்டுமாயின், அவர் திருமணம் செய்தவர் எனில், இலங்கையில் ஏழு வருடம் தொடர்ந்து வசித்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். திருமணம் செய்யாதவர் எனில், 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாமையினாலும், பிறப்பைப் பதியும்முறை 1911 இல் அறிமுகமானதாலும், அரசாங்கத்தினால் கேட்கப்பட்ட பல தகவல்களைப் பூர்த்திசெய்ய இவர்களால் முடியவில்லை. இதனால் இவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைக்காமல் போனது. தொடர்ந்து இதே ஆண்டு தேர்தல் திருத்தச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பிரஜாவுரிமை உள்ளோருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால் இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை இல்லாமல் போனது. 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிசார்பாக, ஏழு உறுப்பினர்கள் வெற்றிபெற்றும், 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒரு உறுப்பினரும் வெற்றிபெறவில்லை.
-
ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்
1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும் April 18, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க பல்வேறு வழிகளில் பொருளாதார, சமூக, நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பெற்றனர். அரச ஊழியர்களிடம் கேள்விக்கொத்துகளை வழங்கி தகவல்களைப் பெற்றதுடன், பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்கள், மதகுருமார்களுடன் கலந்துரையாடியும் தகவல்களைப் பெற்றனர். இவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் 1833 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக: சட்டசபை அறிமுகம் செய்யப்பட்டமை. சட்ட நிர்வாக சபை அறிமுகம் செய்யப்பட்டமை. மாகாணங்கள் ஐந்தாகக் குறைக்கப்பட்டமை. ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை. இராஜகாரியமுறை நீக்கப்பட்டமை. கட்டற்ற வர்த்தகம் அறிமுகம் செய்யப்பட்டமை. இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டமை. தேசாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை. அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை. கிராமசபை அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை. என்பவற்றைக் குறிப்பிடலாம். தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்கள் அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள், வரலாறு வழியாக கட்டங்கட்டமாகத் தூக்கிவீசப்பட்ட ஒரு செயற்பாடு நடைமுறையில் நிகழ்ந்திருக்கின்றது. இதற்கு எதிரான போராட்டமே தமிழர்களின் விடுதலைப் போராட்டம். இலங்கையில் பிரித்தானியர்களின் கைகளில் இருந்த ஆட்சி அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் ஊடாகவே இலங்கையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பு அறிமுகத்துடன் முடிவுக்கு வந்தது. இதிலிருந்து, இலங்கையர்களின் அரசியல் யாப்பு வரலாறு என்பது தமிழ் மக்களை ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கிவீசிய வரலாறாக இருக்கின்றது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் அரைப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்புடன் முழுப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புடன் பேரளவு அதிகாரங்களைக்கூட கைவிடுவதாகவும் அமைந்திருந்தது. முதலாவது காலகட்டத்தில் தமிழர்கள் ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பாரதூரமான விளைவுகளைப் புரிந்திருக்கவில்லை. ஆட்சி அதிகாரங்கள் ஆங்கிலேயரின் கைகளில் இருந்தமையினால் ஒடுக்குமுறைகளைத் தொட்டுணரக்கூடிய சூழலும் இருக்கவில்லை. இதனால் முதலாவது காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் என்பது அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையும், பண்பாட்டுத்தளத்தில் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் பேணுவதாக இருந்தது. அன்று தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்களும், தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை, முழு இலங்கைக்கும் தலைவர்களாக இருந்தனர். குறிப்பாக அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முதலாவது நபர் சேர். முத்துக்குமாரசாமி. இவர் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் தாய் மாமன் ஆவர். இவர்தான் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துக் கருத்துகளைக் கூறியவர். இவரிடம் ஆசிய தேசியவாதம் காணப்பட்டது. இவருடைய மகன்தான் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி. அவர் பண்பாட்டுத்தளத்தில் ஆசிய அடையாளத்தை நிலைநிறுத்திய ஒருவராக விளங்கினார். இரண்டாமவர் சேர். பொன்னம்பலம் இராமநாதன். மூன்றாமவர் சேர். பொன் அருணாசலம். இவர் சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரனாவார். கோல்புறூக் சட்டசபை கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்மூலம் இலங்கையில் முதன்முதலாக சட்டசபை உருவாக்கப்பட்டது. இதில் 15 பேர் அங்கம் வகித்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும், 6 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்கள் அந்தந்த உத்தியோகங்களை வகிப்பதன் ஊடாக சட்டசபையில் அங்கம் வகித்தனர். உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக விளங்கினர். ஐரோப்பியர் – 3 சிங்களவர் – 1 தமிழர் – 1 பறங்கியர் – 1 என்றவகையில் இப்பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது. தமிழர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆவார். இவர் சேர். பொன் இராமநாதனின் தாயின் தந்தை ஆவார். தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக இருந்த இவரை இராஜினாமாச் செய்யவைத்த தேசாதிபதி, மக்கள் பிரதிநிதியாக நியமித்தார். உத்தியோகப்பற்ற அங்கத்தவர்கள் அனைவரையும் தேசாதிபதியே நியமித்தார். கோல்புறூக் குழுவினர் இலங்கையின் பன்முகச் சமூகத்தன்மையை அடையாளம் கண்டனர். இதனாலேயே பல இனத்தைச் சேர்ந்தவர்களும் சமமான வகையில் பிரதிநிதித்துவத்தைப் பெறும்வகையில் இனவாரிப் பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இனவாரிப்பிரதிநிதித்துவ முறையை முன்வைத்தனர் எனலாம். உண்மையில் இதனை அடுத்த கட்டத்திற்கு வளர்த்திருக்க வேண்டும். அந்த அடுத்த கட்டம் என்பது மரபுரீதியாக தனித்தன்மைவாய்ந்த இனங்கள் அதிகாரக் கட்டமைப்பில் தங்களது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய வகையில் பங்குபெறுவதாக இருந்திருக்க வேண்டும். 1889 வரை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தமிழ்ப்பிரதிநிதியே பிரதிநிதித்துவப்படுத்தினார். தங்களை தமிழ்ப்பிரதிநிதி பிரதிநிதித்துவப்படுத்துவதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1889 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு என தனியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் ‘காசிம் அப்துல் ரகுமான்’ தேசாதிபதியால் நியமிக்கப்பட்டார். ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆ. குமாரசுவாமி பருத்தித்துறைக்கு அண்மையில் உள்ள கெருடாவில் கிராமத்தில் 1783 ஆம் ஆண்டு பிறந்தார். கொழும்புக்கு அவர் வந்தபோது இவரது பண்புமிக்க நடத்தை, திறமை, வியாபார நுண்ணறிவு என்பனவற்றினால் நகரத்தின் முன்னணித் தமிழர்களின் நன்மதிப்பை விரைவில் சம்பாதித்துக்கொண்டார். 1808 இல், முதலில் இவர் தேசாதிபதி தோமஸ் மெயிட்லண்ட்க்கு மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் 1810 இல் ஒரு தமிழரினால் வகிக்கப்படக்கூடிய அதி உயர்ந்த பதவியாகிய தேசாதிபதியின் ‘பிரதம தமிழ் மொழிபெயர்ப்பாளர்’ பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார். குருமக்கலம் அரசியல் திருத்தம் – 1912 1912 ஆம் ஆண்டு குருமக்கலம் அரசியல் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்கீழ் தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு நான்கு பிரதிநிதிகள் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். ஐரோப்பியர் இரண்டு, பறங்கியர் ஒன்று, படித்த இலங்கையர் ஒன்று எனத் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இத்தேர்தலில் கல்வியறிவு உடையோரும், சொத்துடையோரும் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் இடம்பெற்றபோது முழு இலங்கையிலும் படித்த இலங்கையர் சார்பில் சேர். பொன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். ஓய்விற்காக தமிழ்நாடு, கொடைக்கானல் விடுதியில் தங்கியிருந்த இராமநாதனை வேட்பாளராக நிறுத்த, சிங்கள அரசியல் தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தந்தை ஹெக்டர் ஜெயவர்த்தனா அங்கே சென்று, அவரைச் சம்மதிக்க வைத்து, அங்கேயே வேட்புமனு விண்ணப்பத்தின் மீது கையொப்பமும் வாங்கிவந்தார் எனக் கூறப்படுகின்றது. இத்தேர்தலில் மார்க்கஸ் பெர்னாண்டோ என்கின்ற சிங்கள மருத்துவரோடு போட்டியிட்டு, இராமநாதன் வெற்றிபெற்றார். மார்க்கஸ் பெர்னாண்டோ மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கரவா சாதியினராக இருந்தமையினால், சிங்கள உயர் சாதியினர் இராமநாதனையே ஆதரித்தனர். தொடர்ந்து 1916 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் டி.எஸ். ஜெயவர்த்தனா என்பவரோடு போட்டியிட்டு இராமநாதனே வெற்றிபெற்றார். இக்காலத்தின் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை இராமநாதன் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார் எனக் கூறமுடியாது. அவர் இலங்கை மக்களுக்காக, குறிப்பாகச் சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவராக விளங்கினார். வெசாக்தினத்தை விடுமுறை தினமாக்கியதில் இவரது பங்கு அதிகமாக இருந்தது. சிங்களமொழியைப் போதனா மொழியாக்குவதற்கு இவர் கடுமையாகக் குரல் கொடுத்தார். சிங்கள – முஸ்லிம் கலவரம் (1915) 1915 ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரம் இடம்பெற்றது. கலவரம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறுகிய காலத்திலேயே இலங்கை முழுவதும் பரவியது. இது, முதலாம் உலக மகா யுத்த காலத்தில் இடம்பெற்றமையினால், ஜேர்மனியின் உளவாளிகள் சிங்கள மக்களிடையே இருந்து செயற்படுகின்றார்கள் என ஆங்கிலேயர்கள் கருதினர். ஆகவே இதனை மிகமோசமாக நசுக்கத் தொடங்கினர். குறிப்பாக மது ஒழிப்பு இயக்கத்தில் பங்குபற்றிய பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவும் ஒருவராவார். பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது விடயத்தில் ஆட்சியாளர்களின் மிக மோசமான அடக்குமுறையைக் கண்டித்து சேர். பொன் இராமநாதன் சட்டசபையில் நீண்ட நேரம் உரையாற்றியது மட்டுமல்லாமல், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முதலாம் உலக மகா யுத்த நெருக்கடிக் காலத்தினையும் கவனத்தில் கொள்ளாது, கப்பல்மூலம் லண்டன் சென்று அங்கு பிரதமர், குடியேற்ற நாட்டுச் செயலாளர் என்பவர்களுடன் பேசி, கலவரத்தை உடனே நிறுத்தினார். கைது செய்யப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்களையும் விடுவித்தார். லண்டனிலிருந்து கப்பலில் இராமநாதன் நாடு திரும்பியதும், துறைமுகத்தில் இறங்கி தனது குதிரை வண்டியில் வீடு செல்லத் தயாரானபோது, சிங்கள அரசியல் தலைவர்கள் குதிரையைக் கழற்றி தாங்களே அவரை வீடுவரை இழுத்துச் சென்றனர். சேர். பொன் அருணாசலத்தின் வகிபங்கு 1. சேரிப்புற மக்கள் மத்தியில் பணிபுரிதல் சேர். பொன் அருணாசலம், சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரன் ஆவார். பதிவாளர் நாயகமாக இருந்த இவர், 1913 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்று நேரடியாக அரசியலுக்கு வந்தார். அரசியலில் அவர் முதல் தெரிவுசெய்த மக்கள் கூட்டம், கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் அடிநிலை மக்கள்தான். இம்மக்களின் நலன்களைப் பேண தொழிலாளர் நலன்புரிச் சங்கத்தை உருவாக்கினார். சேரிப்புற மக்களின் நலன்களை விஞ்ஞானபூர்வமாக மேம்படுத்தும் பொருட்டு, லண்டன் சென்ற அவர், லண்டன் மாநகரசபை எவ்வாறு சேரிப்புற மக்களின் நலன்களைப் பேணுகிறது என்பதை ஆராய்ந்தறிந்து, அதனை இங்கு நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். 2. மலையக மக்கள் மீதான அக்கறை சேர். பொன் அருணாசலம் சேரிப்புற மக்களுக்கு அடுத்ததாக, அக்காலத்தில் மிகுந்த ஒடுக்குமுறைக்கு உள்ளான மலையக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டார். மலையக வம்சாவளியினரான பெரிசுந்தரத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர் நலன்புரி அமைப்பை உருவாக்கினார். இவ் அமைப்பின் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரிசுந்தரமும் விளங்கினார்கள். மலையகத்தில் நிலவிய மோசமான ஒடுக்குமுறையான துண்டுமுறையை இல்லாது ஒழிப்பதில் இவரது பங்கு முக்கியமாகக் காணப்பட்டது. துண்டுமுறை என்பது ‘ஒருவர் தோட்டத்திலிருந்து திருமணம் காரணமாகவோ அல்லது வேறு விடயங்களின் காரணமாகவோ இன்னொரு தோட்டத்திற்குச் செல்லவேண்டி ஏற்பட்டால், முன்னர் கடமையாற்றிய தோட்ட நிர்வாகம் குறித்த நபர் நன்னடத்தை உடையவர் என்றும், இவருக்கு கடன் எதுவும் இல்லை என்றும், ஒரு கடிதத்தை எழுத்தில் வழங்க வேண்டும்.’ கடிதம் இருந்தால் மட்டுமே மற்றைய தோட்டம் குறித்த நபரை ஏற்றுக்கொள்ளும். இலங்கையில் வாழும் அடிநிலை மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட காரணத்தினாலேயே இவரை ‘இலங்கையின் சமூக மாற்ற அரசியலின் தந்தை’ என அழைக்கின்றனர். ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிற்சங்க தலைவர்கள் இவரது கருத்தியலினால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தனர். ஏ.ஈ. குணசிங்க தன்னுடைய அரசியல் குரு அருணாசலம்தான் என்பதைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. 3. இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் – (1919 டிசம்பர் 11) சிங்கள – முஸ்லிம் கலவரம் போன்று இன்னொரு கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும், இலங்கை மக்களுக்கு உள்ளூர் நிர்வாக சுயாட்சி அதிகாரத்தைக் கோருவதற்காகவும் 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் சேர். பொன் அருணாசலம் முதன்மையாகச் செயற்பட்டமையினால், இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தின்போது இலங்கையில் உள்ள பல்வேறு இனங்களையும் ஐக்கியபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்களிடையே சேர். பொன் அருணாசலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. சிங்கள மக்கள்சார்பாக இலங்கை தேசிய சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீரிசும், இலங்கை அரசியல் சீர்திருத்தக்கழகத்தைச் சேர்ந்த ஈ.ஜே. சமரவிக்கிரமவும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள்சார்பாக யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்தோர்; அம்பலவாணர் கனகசபை தலைமையில் கலந்துகொண்டனர். 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாணச் சங்கம் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் புதிய அரசியல் சீர்திருத்தத்தின்போது, தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு என ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் இரு கோரிக்கைகளை முன்வைத்தது. இரு கோரிக்கைகளையும் ஏற்று, சிங்களத் தலைவர்கள் உத்தரவாதத்தை வழங்கினர். இதுவே தமிழ்த்தரப்பிற்கு சிங்களத்தரப்பு வழங்கிய முதலாவது எழுத்து மூல உத்தரவாதமாகும். மனிங் அரசியல் சீர்திருத்தம் – 1921 1921 ஆம் ஆண்டு மனிங் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இது முதன்முதலாக இலங்கையில் பிரதேசவாரி பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தது. இதன்படி இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில், மேல் மாகாணம் தவிர, ஏனைய மாகாணங்களுக்கு தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மேல் மாகாணம் சனத்தொகை கூடிய மாகாணமாக இருந்ததால் 3 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்த மூன்று பிரதிநிதித்துவத்தினுள் ஒரு பிரதிநிதித்துவம், முன்னரே உத்தரவாதம் அளிக்கப்பட்டதன்படி தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த்தரப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. இதைச் சிங்களத் தலைவர்கள் நிராகரித்தனர். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு இலங்கை தேசிய காங்கிரஸே பொறுப்பாகாது எனக் கூறப்பட்டது. ஏ.ஈ. குணசிங்க போன்ற சில தலைவர்கள் இதில் சமரசத்தில் ஈடுபட்டு, தமிழ்த்தரப்பிற்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற உடன்பாட்டைக் கொண்டுவந்தனர். இதை நம்பி சேர். பொன்னம்பலம் அருணாசலம் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அரசாங்கச் செயலகத்திற்கு சென்றார். அவர் செல்ல முன்னரே, மூன்று வேட்பு மனுத்தாக்கல்களும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் அருணாசலம் மிகவும் அதிருப்தி அடைந்தார். “பிரமாணம் பிரமாணமாக இருக்க வேண்டும். சிங்களத் தலைவர்கள் அதை மீறிவிட்டனர். எனவே இவர்களுடன் ஒன்றாகப் பயணிக்க முடியாது” எனக்கூறிவிட்டு, இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இந்த வெளியேற்றத்துடன் தமிழரசியல் வரலாற்றின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்துவிட்டது எனலாம். https://www.ezhunaonline.com/the-period-from-1833-to-1921-tamil-leaders-and-the-ceylon-national-congress/
- வணக்கம்
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Boat “Docks” The Sea Tigers of Liberation Tigers did not possess formal harbours to station their naval vessels. Instead, they utilized boat trailers, which functioned as improvised docking systems. These trailers were colloquially referred to as “docks”. Formally, they were called "Padaku Kaavi" (meaning Boat Carrier in Tamil). Image 1.1: Few boat docks Image 1.2: A large boat dock The Sea Tigers maintained a distinct combat and logistics formation formally known as “Padaku Kaavi Ani” (translated from Tamil as Trailer Team). This unit was regarded as the backbone of the Sea Tigers’ naval operations, responsible for the maintenance, transport, and deployment of naval vessels in all naval bases. The trailers came in various sizes, ranging from small units to larger platforms capable of holding Wave Rider–class vessels and even submarines. This method of improvised docking and concealment was employed from the 1990s onwards. The boat trailers needed constant repairs and careful maintenance, making maintenance an extremely difficult undertaking. Although the Sri Lankan government imposed a harsh economic blockade on LTTE-controlled areas of de facto Tamil Eelam, the Padaku Kaavi Ani managed to keep the flotillas operational, demonstrating their technical proficiency, commitment, and resilience. Prior to 1995, the unit was commanded by Major Kaamini (alias Suthakar, alias Jeyaraj), who was killed in action on 7 October 1999 during a naval battle to safeguard procured supplies being transported into the de facto Tamil Eelam via the Mannar Sea from Tamil Nadu. After Major Kaamini was reassigned to serve under the direct command of Brigadier Soosai in 1995, Lt. Col. Annachi, who had previously served under Kaamini, was appointed as the officer in charge of the Padaku Kaavi Ani. At the time of Lt. Col. Annachi’s appointment, the Jaffna Exodus occurred on 30 October 1995, when over half a million Tamil civilians—men, women, and children—fled alongside the Tamil Tigers as the Sri Lankan military launched Operation “Riviresa-1” (Sooriya Kathir in Tamil) to capture the Jaffna Peninsula. During this crisis, Lt. Col. Annachi oversaw efforts to safely relocate the Sea Tiger vessels to the Wanni region, ensuring their preservation and continued operational use. When a naval operation or engagement was imminent, the Sea Tigers followed a coordinated launch procedure. The vessels were initially pulled toward the shoreline using tractors, after which they were launched into the sea using tracked bulldozers. These tracked bulldozers came into use in 1996, when the LTTE captured six units from the Sri Lankan Army following the successful defence against Operation Sath Jaya. The bulldozers were personally assigned to the Sea Tigers by LTTE leader V. Prabhakaran immediately after the battle, enhancing the team's launch efficiency and operational capability. During the early 1990s, before the introduction of such specialized machinery, trailers were moved into the water manually using human force or with the assistance of standard agricultural tractors. This demonstrates the adaptability and resourcefulness of the Padaku Kaavi Ani in maintaining operational readiness despite limited infrastructure and resources. Image 2: In the early 90s, a Kuruvi class boat with the craft name '004 Nalan' is being pulled into Jaffna lagoon using human force. Image 3.1: A tracked bulldozer named Keesari is being used for boat launching. The Sea Tigers had at least 6 of these for launching boats. Image 3.2: Keesari bulldozer shaping the shoreline into a gentle slope for smooth launch. For a smooth launch, the shoreline sand was excavated and shaped into a gentle slope using the bulldozer earlier. This launch zone was referred to as “Oodu Paathai” (meaning runway in Tamil). Image 3.3: A Wave Rider class boat is being launched into the shore. The stern side is the one that first touches the water. While the bulldozer sent in the boats, a rope was attached to the rear of the bulldozer and tied to a tractor to hold the bulldozer steady. Image 3.4: The rope that's attached to the rear of the bulldozer can be clearly seen in this image Once the vessels were launched, the trailers (docks) were relocated to concealed positions. After combat operations, the boats returned to shore and were reloaded onto the trailers for transport back to secure inland locations. However, reloading was often challenging. Due to strong water currents and wave action, aligning the boat precisely with the trailer required multiple attempts. At times, boats had to stand in the sea and wait for favorable tide conditions to successfully dock the vessel. This process could take several hours. During such delays, the vessels were temporarily hidden near the shore behind natural coastal vegetation and land cover (such as mangrove thickets or tree-lined embankments), which provided limited concealment and some protection from waves. However, this posed a significant operational risk as the vessels were vulnerable to detection by UAVs of the Sri Lankan Air Force and potential airstrikes. Several aerial attacks took place during these vulnerable periods, commonly from late 2007. One of the notable incidents involved a Wave Rider–class vessel commanded by Lt. Col. Nilavan (alias Maaran), which was struck near the shore in the Kiranji region following a naval engagement off Neduntheevu, Jaffna, on December 12, 2007. This event is considered the first of its kind, as recorded incidents. During that engagement, the Sea Tigers successfully sank a Dvora-class fast attack craft (hull number P-413) and damaged two more Dvoras, one of which was rendered beyond repair, through a coordinated Sea Black Tigers attack. Four Sea Black Tiger operatives—Lt. Col. Sangkari, Lt. Col. Kalaiyarasi, Major Eezhaveeran, and Major Mathimukilan—were killed in action during this operation. They were the only casualties sustained by the Sea Tigers in that naval engagement. As the Sea Tiger FGBs were returning to shore and preparing to be loaded onto trailers, they came under aerial attack. One Wave Rider–class vessel was struck near the shoreline, resulting in the deaths of 13 Sea Tiger personnel, including Boat Commanding Officer Lt. Col. Nilavan (alias Maaran), Captain Eekaithee, Captain Thapthaki (alias Inthu), Lt. Akappulavan, 2nd Lt. Chanthana Arivan, 2nd Lt. Kothaikotravan, 2nd Lt. Senthamizharasu, 2nd Lt. Akakkathir, and 2nd Lt. Eezhaththinnan. The second incident occurred at Alampil sea, Mullaitivu, when a Sea Tigers' Wave Rider class FGB was targeted and bombed when it was near the shore in 2008. The vessel sustained damage but was later recovered and repaired. Image 4.1: This is the recorded second incident overall, occurring at the Alampil sea. The vessel was not fully damaged, and it can be seen in the right-hand side image. | Image credits: Sri Lankan Air Force The third incident occurred at Chempiyanpatru, Jaffna, when a Wave Rider–class Fast Gun Boat (FGB) of the Sea Tigers was targeted near the shore in 2008. An aerial bomb fell close to the moving vessel, resulting in damage to the FGB. Image 4.2: This is the recorded fourth incident overall, occurring at the Chempianpatru Sea on Nov 1, 2008. | Image credits: Sri Lankan Air Force The fourth incident took place near the Chundikulam estuary. Two Wave Rider–class boats belonging to the Sea Tigers were observed concealed near natural coastal vegetation at the Chundikulam estuary because they couldn't be loaded into trailers immediately after the naval battle. They were detected by a UAV operated by the Sri Lanka Air Force on 8 January 2009 at 07:25 hours and were later aerially bombed and destroyed. Image 4.3: This is the recorded fourth incident overall, occurring at the Chundikulam estuary, Jaffna. | Image credits: Sri Lankan Air Force During these vulnerable periods, the Sea Tigers deployed decoys—such as the one shown in Image 5.1—to divert or attract the attention of UAV operators. These decoys were often targeted and bombed, allowing the actual vessels to remain concealed and avoid direct strikes. They were made up of wood and resembled the Wave Rider class vessels. Image 5.1: A captured decoy of a Wave Rider class boat at Peipparaipitti, Mullaitivu. | Image credits: Sri Lankan Air Force A recorded video example of this occurred during the Sri Lanka Air Force (SLAF) attack on a Sea Tiger decoy deployed at the Alampil shore in the latter months of 2008. The decoy was targeted and destroyed, allowing the Sea Tigers to relocate their operational vessels safely. Image 5.2: These images were generated from the above-mentioned video evidence of SLAF targeting a Sea Tigers' decoy at Alampil shore. | Image credits: Sri Lankan Air Force Additionally, errors during the docking process occasionally resulted in improper alignment, causing the bow hull to strike the trailer structure and sustain damage. After successful loading, the docks, along with the boats, were moved inland and concealed under tree cover near the naval bases to reduce the risk of detection from aerial surveillance. *****
- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name Sub class IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Notes Boats 1 Mirage - OBM (2) (craft name lost in time) 2 - Specially designed, different-shaped Mirage class bomb-laden crafts for offshore attacks. 2 Kfir (Also known as Kipir and Kavir colloquially) Nick Name: Idiyan Stealth 16' OBM (1) View from the front of a Kfir-class boat used in a parade (all the items relating to explosives are removed, including the ramming horn): 'During a Maaveerar Naal parade at Mullaitivu sea' View from the front and rear of the stealth boat during a practice session (absence of artillery shells can be seen) Sea Black Tiger Lt. Col. Anpu is seen situated on the boat Thanikai 10+ - These are stealth crafts used as primary bomb-laden crafts since 1998. - During the Sea Black Tiger attacks, manned by 2 persons. - They are also used for special raid missions (to withdraw landed troops and to conduct commando attacks from sea to ground), wherever required. - The first boat of this class was used at 1.30 am on March 11, 1998, to sink a Sri Lankan Navy Waterjet-class vessel near Sober Island, Trincomalee. The mission was carried out by Sea Black Tigers Captain Kopi (Aarvalan) and Captain Isaiyalan, who were previously naval commandos belonging to the Sea Leopards Team. Stealth 16' OBM (1) Two views of the same vessel: 'Double-strapped clamore mine and a single artillery shell on each side can be seen in this image clearly.' (craft name lost in time) 1+ - These are stealth crafts. - During the Sea Black Tiger attacks, manned by a single person. - Production began in the 4th Eelam War 3 (class name lost in time) - OBM (2) Mathan, Varathan 6+ - Used as bomb-laden crafts from the 2nd Eelam War onwards. - OBM (5) Bow: Stearn: (craft name lost in time/ Unnamed) 1 - Specially designed large bomb-laden craft intended to ram into a ship or structures in the Colombo Port. But it was captured after the attack failed 4 (class name lost in time) - IBM (2) 1) 2) Image dates to 1998 | Screenshot from Tigers' video documentary named "Uyirayutham" Amuthan 2 5 Not named - OBM (2) Without the steerer cabin cover: (craft name lost in time) 1 - A boat with 2 ram points. - 3 men can travel in it. - Sometimes the steerman area is covered with a room-like structure. - Camouflaged with unusual colours (blue, green, yellow, white and red) - Production was stopped for unknown reasons Kfir class boats: This is based on first-hand accounts written by those directly involved in the production of the stealth boats. For further reference: Stealth type boats of the Sea Tigers Analysis of the Stealth technology: The Sea Tigers have said that their design was inspired by an English magazine that featured a stealth aircraft and the building tech in it. They shaped the boat with a pointed bow and a tunnel-hull stern, while the gunwale angles were modelled after the aircraft’s structure. To test how these angles would deflect light, they built a cardboard model and used a torch to simulate radiation before moving on to the actual construction. The above article also states that, Flat facets and carefully chosen angles are important aspects in radar tech. They scatter incoming radar energy away from the transmitter instead of reflecting it back — that does reduce RCS for those aspects. The article’s emphasis on right angles and angled surfaces is directly about this. But the boat's Engines, outboards, propellers, and crews are high-RCS items; even if the hull is faceted, the exposed metal engine and fittings create large radar returns which give out the position of the boat. RCS depends heavily on the aspect (angle between the radar and the target). Faceting can make a craft almost “invisible” from some angles but still bright from others. The ones used for special operations have gun mounts on them. But the RADAR return from it is very low. A straight, thin metallic rail is a minor scatterer, especially if it’s aligned along the vessel’s length (specular reflections go away from most radars). It won’t significantly increase the boat’s RCS. The visual of the gun mount is also minimal. Unless the observer is very close or the sun/light catches it just right, it mostly blends into the deck. As there is no barrel or turret, it means no silhouette changes. These gun mounts are removed if they were assigned for bomb-laden attacks. Its Tri-V hull had a low, wide, wing-like form with an angular ridge and open cockpit, built for stability and speed. The stealth boat’s super-stable hull design enabled it to cruise at 45–50 knots and reach a top speed of 50–55 knots (Acc. to the article). Thus its evident that they used shape (faceting) + low profile + non-metal construction to reduce RCS and visual profile. That combination — rather than some single miracle of radar-absorbent technology — is what likely made them hard to detect in practice. They were low-observability craft, not full modern stealth vessels, acc. modern stealth standards. When mission-ready, stealth boats were loaded with up to 200 kg of explosives and fitted with single or double Claymore mines on each side for greater lethality. A 130 mm artillery shell was also attached to each side of the bow. In addition, a ramming horn was fixed to the bow hull. To the tip of the bow, 5-6 triggering switches were attached using a metal structure, which will trigger the explosives once they ram into the target. These were removed during public parades for civilian safety. In naval/academic language, “stealth” means a craft deliberately designed to reduce its signature (radar, visual, infrared, acoustic). By that definition, the LTTE’s “Kfir-class” do qualify because: Their hull was faceted to scatter radar energy, They used fiberglass/wood (lower radar reflectivity), They had very low freeboard (harder to spot on radar and visually), They blended with sea clutter at speed. In a strict military-technology sense (like US Navy Sea Shadow or Sweden’s Visby-class corvette), these LTTE boats were not full “stealth” platforms: Their engines, metal fittings on the bow, weapons (like the artillery shell), and heat signature were not masked and were visibly seen Some wires that go along the gunwale and the sides of the boat are visible. To RADARs, thin wires are small compared with many radar wavelengths and often scatter only weakly, but at some frequencies and aspect angles they can act like small reflectors or create resonances that raise the vessel’s radar signature. A few strategically placed protrusions can produce bright returns or change the vessel’s shape to radar, especially if the rest of the boat is optimized to be quiet on radar. Their stealth effect was limited to small size, shaping, and materials They would still be detectable by modern naval radars (high tech ones with Western powers), just at shorter ranges. So, Yes — they can be referred to as “stealth vessels,” but only in a relative and not an absolute sense. *****
- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
தமிழீழத்தில் பாவிக்கப்பட்ட கொடிகளும் அவற்றின் வரலாறுகளும் | ஆவணம்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இந்த ஆவணத்தில் எமது தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் பற்றி பட்டியலிட்டு அவைதொடர்பான சில விடையங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இக்கொடிகளில் தேசியக்கொடியும் விடுதலைப்புலிகளின் கொடியும் பயன்பாட்டிற்கு வந்த சரியான ஆண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை எப்போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது என்பது தொடர்பில் சரியான தகவல்கள் என்னிடத்தில் இல்லை. விடுதலைப்புலிகளின் கொடி: தவிபு அமைப்பின் கொடிதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கொடியாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணக்கருவிற்கேற்ப 1977 அம் ஆண்டு வரையப்பட்டது. இது முதன் முதலில் 1978ம் ஆண்டு அவர்களின் கடிதத்தில் பாவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் இவ் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் 'சிறில் மத்தியூவின் அரசபணியில்' என்ற கடித உறைக்குள் வைக்கப்பட்டு இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது (ஆதாரம்: மூத்த உறுப்பினர் தேவர்). விடுதலைப்புலிகளின் முதல் உரிமைகோரல் கடிதம் இக்கொடி உருவான கதை தொடர்பில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் அவர்களால் வரலாறு வெளியிடப்பட்டது. இருந்தபோதிலும் 2015ம் ஆண்டிலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் 'வர்ணகுலத்தான்' அவர்களாலும் எழுத்தாளரும் கேலிச்சித்திர ஓவியருமானன 'மூனா' அவர்களால் 2016ம் ஆண்டிலும் அதனோடு முரணாகும் வகையில் வேறொரு தோற்றக்கதை கூறப்பட்டுள்ளது. எவ்வாறெயினும் கால வரிசையின் படி இரண்டு வகையான தோற்றக்கதைகளும் இங்கு தரப்படுகின்றன. முதலில் புலிகளால் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தோற்றக்கதையினை காண்போம்: இரண்டாவதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளரான 'வர்ணகுலத்தான்' அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள தோற்றக்கதையினை இங்கு காண்போம்: இதில் கூறப்படும் அமரர் மோகன் (ராமதாஸ் மோகனதாஸ்) என்பார் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் ஆவார். முன்னாளில் அவர்களின் ஆதரவாளராக விளங்கியதோடு பின்னர் விடுதலைப்புலிகளின் முதல் கப்பலான 'சோழன்' என்பதின் கலக்குழுவினருள் ஒருவராக பணியாற்றியும் இருந்தார். இவரது இந்த இலச்சினை வடிவமைப்பு தொடர்பில் எழுத்தாளர் மூனா அவர்கள் மோகனின் அமரத்துவத்திற்குப் பின்னர் அவர் பற்றி எழுதிய 'மோகன் ஆர்ட்ஸ்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தார்: அடுத்து இந்தப் பாயும் புலி என்னும் எண்ணக்கரு எவ்வாறு தனக்கு எழுந்தது என்பது குறித்து தேசியத் தலைவர் 'விடுதலைத் தீப்பொறி' என்னும் ஆவணப்படத்தில் விரிவாக கூறியிருந்தார். எனினும் அதில் இதனை யார் வரைந்து தந்தது என்பது குறித்து அவர் கூறவில்லை. அவ் ஆவணப்படத்தில் இனி உருவாகின்ற நாட்டிலும் கடைசியாக இருந்த ஆட்சியின் சின்னமே வரவேண்டும் என்பதே தனது நோக்கமாகயிருந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது மீண்டும் எமது பழைய வரலாறு [அப்படியே] புதுப்பிக்கப்படும் படியாக சின்னம் இருத்தல் வேண்டுமாம்; கடைசியாக இருந்தது புலிச் சின்னமே, ஆகவே அதையே மீளவும் கொண்டு வந்தாராம். அதே நேரம் ஈழத்தின் பண்டாரவன்னியனின் கொடியின் சின்னமாக தமிழர்கள் நாம் வரைவது தறியப்போடப்பட்ட இரு வாள்களும் அதன் பின்புலத்தில் ஒரு வட்டக் கேடயமும் ஆகும். எனவே இதையும் சோழர்களின் புலியையும் அடிப்படை கருத்துருவாகக்கொண்டு தான் எமது கொடியினை தான் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். பண்டாரவன்னியனின் வட்டக் கேடயத்திற்குப் பதிலாக இரு வட்டங்களைப் பாவித்தாராம். அந்த வட்டத்திற்குள் வரும்படியாகவும் அதற்கேற்பவும் சோழர்களின் புலியும் கொணரப்பட்டது. அதற்காக அந்த வட்டத்திற்குள்ளால் நவீன வெடிபொருள் உகத்திற்குள் புலி பாய்வது போன்ற வடிவத்தை தெரிவு செய்தார். பாயும் புலியிற்கு சோழர்களின் புலி பாவிக்கப்பட்டது. பழைய சோழர்களின் புலியென்பது முழு உடலுடன் பாய்வது போல வருவதாகும். எனவே அந்தப் பழைய புலியின் பாயும் வடிவினையும் மாற்றினார்; அதாவது அழிந்துபோன எமது சின்னம் (புலி) திரும்பவும் ஒரு புத்துயிர் பெற்று எழுச்சியுடனும் கடுஞ்சினத்துடனும் வட்டத்திற்கு வெளியே தலையை நீட்டி முன்னங்கால்களை எடுத்துப் பாய்ந்து கிளம்புவது போல மாற்றி வடிவமைக்கப்பட்டது என்றுள்ளார். மொத்தத்தில் இந்த நவீன உகத்திற்குள் தமிழர்களின் தேசிய எழுச்சியை உருவாக்குகின்றோம் என்பதே அவரின் சின்னத்தின் நோக்கமாக இருந்தது. இவ்வடிவிலான சின்னத்தைப் பெற அவர்கள் மிகவும் மினக்கெட்டு கன படங்கள் எல்லாம் தேடித் திரிந்தார். அவ்வாறு தேடித் திரிந்தது புலி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவே என்று முடிவடைகிறது அவ் ஆவணப்படத்தில் கொடி தொடர்பான வரலாறு. அந்தப் பண்டாரவன்னியனின் வாள்களிற்குப் பகரமாக புலிகள் இயக்கத்தில் முதன்முதல் பாவனைக்கு வந்த .303 துமுக்கியின் துவக்குச்சொண்டும் அதில் பொருத்தப்பட்ட சனியன்களும் (குத்துக்கத்தி) வரையப்பட்டன. அடியில் அத்துமுக்கியின் பிடங்கு (butt) புலியின் கால்களுக்கு பின்புலத்தில் இருக்கத்தக்கனையாக வரையப்பட்டன. சன்னங்களும் .303 இயின் சன்னங்களே ஆகும். முதல் சின்னம். இதில் "THAMIL EALAM" என்று எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் 1985 சனவரிக்கு அண்மையாக "TAMIL EELAM" என்று மாற்றப்பட்டது. | படிமப்புரவு (Img. courtesy): விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1 முதல் நிறச் சின்னம். இதில் "THAMIL EALAM" என்று எமது நாட்டின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் "TAMIL EELAM" என்று 1985 சனவரிக்கு அண்மையாக மாற்றப்பட்டது. | படிமப்புரவு: விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1 01/11/1994 அன்று பாவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடியும் சின்னமும். இதில் "TAMIL EELAM" என்று மாறியுள்ளதைக் காண்க. அதே நேரம் லையன்னாவின் வடிவமும் மாறியுள்ளதை நோக்குக. மேலும் ஆங்கில எழுத்துக்களின் எழுத்துருவும் மாறியுள்ளது. விடுதலைப்புலிகள் கொடியின் இறுதி விருத்து. இதனையே புலிகள் இறுதிவரை பாவித்தனர். இதில் லையன்னாவின் வடிவம் மீண்டும் பழைய நிலைக்கே மாறியுள்ளதை நோக்குக. | படிமப்புரவு: meethaku.com தமிழீழத் தேசியக் கொடி: இக்கொடியானது தவிபு இன் கொடியிலுள்ள எழுத்துக்களை நீக்குவதால் உருவாகிய கொடியாகும். இக்கொடியினை 1990ம் ஆண்டு மாவீரர் கிழமையின் முதல் நாளன்று தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியாக சாற்றாணைப்படுத்தியதோடு அதனைத் தானே ஏற்றி வைத்து எமது நாட்டின் முதல் கொடியினை அறிமுகமும் செய்து வைத்தார். இவ்வாறாக தமிழீழம் என்ற நாடு முற்றாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே எமக்கு எமது கொடி பிறந்திருந்தது. இக்கொடியில் புலியே முதன்மைச் சின்னமாக உள்ளதாலும் புலிகள் அமைப்பின் கொடியிலிருந்து பிறப்பிக்கப்பட்டதாலும் இது 'புலிக்கொடி' என்றும் அழைக்கப்பட்டது. புலிக்கொடியானது தமிழீழத் தமிழர்கள் வாழ்ந்த அனைத்து நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் போது எமது நாட்டின் கொடியாக ஏற்றிவைக்கப்பட்டது. இப்புலிக்கொடியானது ஒரு மாவீரரின் (நிரந்தரப்படை மற்றும் மக்கள்படை) வித்துடல் மீது போர்த்தப்பட்ட பின்னர் திரும்ப எடுக்கப்பட்டு அன்னாரின் குடும்பத்தினரிடத்தில் மிகுந்த மரியாதையுடன் கையளிக்கப்படும். இது தொடர்பில் இக்கொழுவியினை சொடுக்கி வாசிக்கவும். முதலில் சின்னத்தைப் பற்றி தவிபு இன் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பற்றி காண்போம்: தேசியக்கொடியில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மற்றும் கறுப்பு ஆகிய நிறங்கள் உள்ளன. இவற்றின் குறித்து நிற்பவையாக நான்காம் ஈழப்போரில் வெளியிடப்பட்ட 'தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை' இல் உள்ள குறிக்கோள்கள்: புலிக்கொடியானது தொடர்ந்து ஒரே சீராக இருக்கவில்லை. அதன் சின்னத்தில் மாற்றங்கள் ஏற்படவிட்டாலும் ஒவ்வொரு காலத்திலும் புலிக்கொடியின் நிறங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் பயிற்சிப் பாசறைகளில் ஏற்றப்பட்ட கொடி 1988ம் ஆண்டு புலிகளால் பாவிக்கப்பட்ட அலுவல்சாரில்லா தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: சோசலிசத் தமிழீழம்: விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம், 1988 அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை, 1994 அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடியின் இறுதி விருத்து (version) வெற்றிக்கொடி: இது ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடியாகும். இது நீள்சதுர வடிவிலே கிடைமட்டமாக நிறங்கள் இணைக்கப்படுவதால் வந்த கொடியாகும். இதுவே இதன் செந்தரமான வடிவமுமாகயிருந்தது. ஆயினும் மாவீரர் துயிலுமில்லங்களில் இதனோடு சேர்த்து மேலும் சிலதைக் காணக்கூடியதாகயிருக்கும். இவற்றிற்கு பெயருண்டோ என்பது குறித்து தெரியவில்லை. இவை யாவும் நீள்சதுர வடிவிலே காணப்பட்டன. இவ்வாறாக மாவீரர் துயிலுமில்லங்களில் பறக்கவிடப்பட்ட செந்தரமான வடிவம் தவிர்ந்த ஏனைய 4 வடிவமைப்புகளையும் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன: செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடி ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடி. செந்தரமான வெற்றிக்கொடி புனிதபூமி மாவீரர் துயிலுமில்லத்தில் செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடிகளும் செந்தரமான வெற்றிக்கொடிகளும் பறப்பதைக் காண்க நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி பறப்பதைக் காண்க நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடிகள் பறப்பதைக் காண்க 2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடிகள் பறப்பதைக் காண்க செந்தரமான கொடியின் வடிவமானது சமர்க்களங்களிலும் புலிகளால் பாவிக்கப்பட்டது. சிங்களப் படையினரின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளுக்குள் ஊடறுத்து செல்லும் போதும் படைத்தளங்களின் படைவேலிகள் உடைக்கப்பட்டு நுழையும் போதும் எம்மவரின் முன்னணி அணிகள் இதனை தடியில் கட்டி தலைக்கு மேலே பிடித்தபடி ஓடிப்போவர். சமர்க்களத்தில் நடந்து செல்லும் இப் புலிவீரனின் நெஞ்சில் இருப்பதே செந்தரமான வெற்றிக்கொடியாகும் எழுச்சிக்கொடி: இவைதான் எழுச்சி நாட்களின் போதும் வீரச்சாவு வீடுகளிலும் ஊர்வழிய சோடினைகளுக்குப் பாவிக்கப்படும் கொடியாகும். இது சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு நிறங்களும் தனித்தனியாக முக்கோண வடிவில் ஓர் நூலில் கட்டப்பட்டிருக்கும். முக்கோணத்தின் அகண்ட பரப்பே நூலில் கட்டப்பட்டு கூரானது கீழே தொங்கும் படியாக விடப்பட்டிருக்கும். இதனை உணர்ச்சிப் பெருக்கில் சிலர் உடலிலும் ஊசிகொண்டு குத்திருப்பர். ஒக் 10, 2002 அன்று 2ம் லெப். மாலதியின் நினைவு நாளில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டின் போது இந்த ஐயா சிவப்பு மஞ்சள் முக்கோண நிறங்களை (எழுச்சிக்கொடி) ஊசியால் தன் உடலில் குத்தியுள்ளார். அணிநடை போடுபவர்கள் சோதியா படையணியினர் ஆவர். | படிமப்புரவு: Associated Press 27/1//2005 அன்று வீட்டிற்கு முன்னுள்ள தெருவின் ஒரு மருங்கில் எழுச்சிக்கொடியால் சோடினை செய்து வாழைத்தண்டில் ஈகைச்சுடரேற்ற காத்திருக்கும் ஓர் தமிழீழக் குடும்பம் வன்னியிலிருந்த துயிலுமில்லமொன்று மாவீரர் நாளன்று எழுச்சிக்கொடிகளால் சோடிக்கப்பட்டுள்ளதைக் காண்க மாவீரர்கொடி: இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இதில் சின்னமாக கறுப்பு நிறத்தில் மாவீரர் பொதுத் திருவுருவப்படம் இருக்கும். பின்புலத்தில் தேசிய நிறங்களான சிவப்பு அல்லது மஞ்சள் இருக்கும். (படிமம் கிடைக்கப்பெறவில்லை) வீரவணக்கக்கொடி: இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இவற்றை மாவீரர் துயிலுமில்லங்களில் காணலாம். இவை தேசிய நிறங்களான மஞ்சள் அல்லது சிவப்பை கொண்டிருக்கும். ஒவ்வொரு கொடியிலும் இரு சின்னங்கள் காணப்படும்: 1) இரு நிறக் கொடிகளிலும் வெளுறிய சிவப்பு நிறத்தில் தான் தாயகத்தின் தேசப்படம் பின்புலத்தில் காணப்படும். 2) இரு நிறக் கொடிகளிலும் கறுப்பு நிறத்தில் மாவீரர் வீரவணக்கச் சின்னமான 'உறுதியின் உறைவிடம்' உம் அதன் அடியில் சுடர்கொண்ட சிட்டிகளும் முன்புலத்தில் காணப்படும் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் வெற்றிக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க அண்மையாக்கப்பட்ட படிமம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் தேசியக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க நிறக்கொடிகள்: இவை முழுமையாக ஒன்றில் சிவப்பையோ அ மஞ்சளையோ நிறமாக கொண்டு நீளசதுர வடிவில் இருக்கும். 2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் நிறக்கொடிகள் பறப்பதைக் காண்க படையணிக்கொடிகள்: இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படைத்துறைக் கட்டுமானத்திற்குமென அவர்களின் சண்டை உருவாக்கத்தின் சின்னத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதை அவர்கள் பொதுநிகழ்வுகள், அணிநடை போன்றவற்றில் அணிநடை சீருடையுடன் சேர்த்து தாங்கிச் செல்வர். அப்போது தமிழீழத் தேசியக் கொடியினையும் தேவைப்படின் பாவிப்பர். 2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி' அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள் (Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, நளாயினி சிறப்பு கடல் தாக்குதலணி இக்கொடிகளில் கடற்புலிகளின் சண்டை உருவாக்கங்களுக்குமிருந்த கொடிகளும் உள்ளடங்கும். 'போராளிகளுக்குப் பின்னால் தேசியக்கொடியுடன் கடற்புலிகளின் சண்டை உருவாக்கங்களின் கொடிகளும் கடற்புலிகளின் கொடியும் பறப்பதைக் காண்க.' நீலக்கொடி: கடற்புலிகளின் வீரத்தை பறைசாற்றுகின்ற விதமாக இருந்த கடுநீலம் மற்றும் வான்நீல நிறத்தை உடைய கொடி நீலக்கொடி எனப்படும். இது கடற்புலிகளின் ஆழுமைக்குள்ளிருந்த துயிலுமில்லங்களிற்குள்ளும் அவர்கள் சார் நிகழ்வுகளிலும் பறக்கவிடப்படும். கடற்புலிகளின் நிகழ்வொன்றில் வெற்றிகொடியுடன் நீலக்கொடியும் அடுத்தடுத்து பறக்கடிடப்பட்டுள்ளதைக் காண்க கரும்புலிகள் வீரவணக்கக்கொடி இது கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும். இது மஞ்சள் நிறத்திலும் உண்டு. இதிலுள்ள இலச்சினையானது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை ஆகும். எனினும் இது அனைத்து கரும்புலிகளையும் ஒருங்குசேரவும் குறிக்கிறது. இவ்வாறாக தமிழீழத்தில் கொடிகள் பாவிக்கப்பட்டன. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
Last version of the Tamil Eelam Flag of LTTE era.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Tamil Eelam flag 1994
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 10 25.9.90 அன்று திரு. மாத்தயா அவர்களைப் பார்க்க கூடியிருந்த மக்களிடம் சென்று நிலைமையை உரையாடிப் பார்ப்போம் என நினைத் தேன். ஒரு சைக்கிளுடன் மரத்தடியில் நின்ற ஒருவரிடம் சென்றேன். “உங்கள் ஊர் எது?” என்று கேட்டேன். “தம்பலகாமம்” என்றார். தம்பலகாமத்திற்கும் இந்த இடத்திற்கும் எக்கச்சக்கமான தூரமாயிற்றே ஏன் யாழ்ப்பாணப் பக்கம் போகாமல் இந்தப் பக்கமாக ஓடிவந்தீர்கள்? என்றுகேட்டேன். யாழ்ப்பாணம் நோக்கிப் போகும் ஆட்களை இரவில் மறைந்திருந்து தாக்குவதால் இந்தப் பக்கமாக வந்ததாக சொன்னார். தம்பலகாமத்தில் தான் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளனவே அங்கு நடந் தவற்றைக் கூறுங்கள். என்றேன். நீங்கள் என்னென்ன விடயங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டார். அகதிமுகாம் விடயங்கள், கிண்ணியாவில் தமிழர்களை தடுத்து வைத்திருத்தல், பஸ்ஸில் இருந்து ஆட்களை இறக்கியெடுத்தல், இந்திய இராணுவம் ரின்னர் ஊற்றிக் கொழுத்தியது என்று பட்டியல் போட்டுக் காட்டினேன். “தம்பலகாமம் கோவிலடி முகாம் தான் மிகப் பயங்கரமானது” என்ற முன்னுரையுடன் கூறத்தொடங்கினார். தம்பலகாமம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஒரு நாள் பொதுமக்களைக் கூப்பிட்டுக் கூறினான்: “இங்கு 18 குடும்பங்கள் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்ற தகவல் எனக்குக்கிடைத்துள்ளது. இவர்களை அழிப்பது. எனக்குப் பெரிய விடயமல்ல, ஜே. வி. பி. பிரச்சினையில் ஐம்பது சிங்கள இளைஞர்களை எனது கையால் கொன்றுள்ளேன். எனது சொந்த இனத்திலேயே ஐம்பதுபேரைக் கொன்ற எனக்கு இது ஒரு சின்ன விடயம்” என்று கூறினான் என்றார். முஸ்லிம் மக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சொல்லுங்கள் என்றேன். முன்னரெல்லாம் கலவரம் வரும்போது முஸ்லிம் மக்கள் தான் உதவுவார்கள். இந்த முறை எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். பள்ளிவாசல் மட்டத்தில் தமிழருக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதுதான் காரணம் என்றார். தொடர்ந்து இந்தமுறையும் கலவரம் வந்தவுடன் கிண்ணியாவையும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களையும் நோக்கித்தான் தமிழர்கள் ஓடினார்கள். ஆனால் அங்கே நடந்த விடயங்களைப் பார்த்தால்... என்று சொல்லி சற்று நிறுத்திவிட்டுத் தம்பலகாமம் கூட்டாம்புளியைச் சேர்ந்த நடராசாவும் அவரது மனைவி பங்கயலட்சுமியும் காக்கா முனை என்ன இடத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் குடியிருந்தனர். அங்கே பங்கய லட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றாம் நாள் பங்கயலட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது. ஒரு முஸ்லிம் இளைஞன் வந்து சாப்பாட்டுக் கோப்பைக்கு காலால் அடித்தான். கோப்பை பறந்தது. தொடர்ந்து தமிழர்களை எவரும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்ற பள்ளிவாசலின் முடிவு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது வீடுகளில் இருந்த தமிழர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெளியேற்றினார்கள். அத்துடன் ஒரு பகல் கொள்ளையும் நடந்தது என்றார். என்ன நடந்தது, என்று கேட் டேன். தமிழர்களின் ரீ.வி., டெக், றேடியோ போன்ற விலையுயர்ந்த சாமான்களை வைத்திருந்த முஸ்லிம் வீட்டுக்காரர்கள் அனைவரும் தங்களது சாமான்களை நாம் வைத்திருந்தால் எமக்கு ஊர்காவல் படையாலோ, இராணுவத்தாலோ பிரச்சினை வரும். ஆனபடியால் இவற்றை எமக்கு விற்றுவிட்டதாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அப்படியே அனைவரும் எழுதிக்கொடுத்தனர். நடராசாகூட அப்படி எழுதிக் கொடுத்து வீட்டுத்தான் வெளியேறினார். ஆனால் எவருக்கும் ஒரு சதமும் கிடைக்கவில்லை என்றார். ஏன் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி எழுதி வாங்கியிருக்கக் கூடாது? இவர்கள் திரும்பியதும் திருப்பிக் கொடுப்பதற்காக எழுதி வாங்கியிருக்க மாட்டார்களா? என்று கேட்டேன். நிச்சயமாக அப்படி இல்லை. பள்ளிவாசல் அறிவிப்பின் பின்னரே ஒரே நேரத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் வாங்கிய சாமானுக்காக இல்லாவிட்டாலும் வழிச்செலவுக்கு ஒரு பத்து ரூபா வைத்திருங்கள் என்று கொடுத்திருக்க மாட்டார்களா என்று வினவினார். தமிழர் அழிப்பில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் பெயர் தெரியுமா என்று கேட்டேன். பாரூக் என்பவன் தலைமையில் ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்த ஐம்பது பேர் ஈரோஸ் இயக்கத்தின் பெயரால் இந்திய இராணுவத்திடம் பயிற்சி எடுத்தனர். இன்று இவர்கள் தான் ஊர்காவல் படையில் சேர்ந்து தமிழரை அழிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் என்றார். மழை விட்டும் தூவானம் போகவில்லை என்பதா? அல்லது இந்திய இராணுவம் விதைத்த நச்சு விதைகள். இன்று விருட்சமாகின்றதா? பதில் தெரியாது விழித்தேன். அப்போது பதுமன் ஈ. பி. ஆர். எல். எவ். இல் இருந்த கச்சி முகம்மது ஷேக் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனை தேசிய இராணுவத்தின் மீதான நடவடிக்கையின் போது கைது செய்தோம். முஸ்லிம் இளைஞன் என்பதால் மன்னித்தோம். சில காலம் எமது இயக்கத்தில் இருக்க அனுமதித்தோம். இவனுக்கு இந்தப் பகுதிப் பாதைகள் நாம் எங்கெங்கு இராணுவத்தினரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியும். இவன் தான் நாம் எதிர்பார்க்காத பாதையினுள்ளால் இராணுவத்தைக் கூட்டிவந்தவன் என்றார். தொடர்ந்து இன்னுமொரு முஸ்லிம் இளைஞன் ஒருநாள் இரவு மூன்று றைபிளையும் ஒரு வாக்கிடோக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறான். எமது முகாமிலிருந்து இராணுவமுகாமுக்கு செல்லும் வழியில் ஆறு ஒன்று உண்டு. இருட்டில் இடம் தெரியாமல் ஆழமான பகுதியில் இறங்கிவிட்டான். ஆற்று நீரோட்டத்தில் ஆள் இழுத்துச் செல்லப்பட்டான். அத்துடன் அவனது சாரம் றைபிளுக்குள் சிக்கியதால் அவனால் நீந்தமுடியாமல் போய் விட்டது. மூன்று நாள் செல்ல ஒரு றைபிளுடன் இவனது சடலம் ஒதுங்கியது. மற்ற இரண்டும் ஆற்றில் எங்கேயோ கிடக்கிறது. ஊம்... சிலரை நம்பிக் கெட்டோம்! என்றார் பதுமன். (தொடரும்)
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 9 எமது இந்தப் பயணத்தின் இடையில் பொதுமக்கள் கூட்டங் கூட்டமாகக் காணப்பட்டார்கள். அனைவருக்கும் இவர் மாத்தயா என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. சில காலத்துக்கு முன்னர்தான். அப்பகுதிகள் எல்லாம் சுற்றிப் பார்த்து மக்களைச் சந்தித்திருந்தார் மாத்தயா. மக்கள் மாத்தயாவைப் பார்த்துச் சிரித்தும், கையசைத்தும் தமது நட்புணர்வை வெளிப்படுத்தினர். அப்போது பதுமன் இந்தச் சனங்கள் சரியான மெமறிச் சனம் அண்ணே. தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி நடந்தபோது நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்பாட்டுத் தொடங்கியவுடனேயே நிகழ்ச்சி முடிஞ்சிட்டுது எண்டு வீட்டுக்குப் போகத் தொடங்கி விட்டுகள்” என்றார். மாத்தயா சிரித்துக்கொண்டார். போகும் வழியில் ஒரு இராணுவ முகாமிலிருந்து எம்மை நோக்கி டோர்ச் லைட் அடித்துப் பார்த்தார்கள். ஒன்றும் புரியாததாலோ, கொழுவினால் வீண்வம்பு என்று நினைத்தார்களோ ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. எம்மைப் பொறுப்பேற்க வந்திருந்த குழுவினர் இடையில் ஒரு ஜீப் போயுள்ளது இப்போது வரவேண்டாம் என்றனர். சிலவேளை திரும்பிப் போகலாமா என்றுகூட ஆராயப்பட்டது. அப்போது மாத்தயா திரும்பிப் போவது என்பது சரி வராது. வழியில் ஆமி கிடந்தால் நல்ல அடி கொடுத்துவிட்டுப் போவோம் என்றார். அப்போது அவரது உறுதியின் வெளிப்பாட்டை உணர முடிந்தது. ஆனால் சென்றது செஞ்சிலுவைச் சங்க ஜீப் என்பது பின்பு தெரியவந்தது. திரு மாத்தயா அவர்களுக்கு சென்ற முறை எங்கெங்கு மாலை போட்டார்கள், தமது பகுதிகளுக்கு வராததற்காக எங்கெங்கு கோபித்துக் கொண்டார்கள். என்னென்ன மாதிரி வரவேற்பளிக்கப்பட்டது என்பதையெல்லாம் வழியெங்கும் போராளிகள் எனக்குக் காட்டினார்கள். 25.9.90 அன்று பி. ப 3.00 மணிக்கு திருமலை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக அண்மையிலுள்ள முகாமைச் சென்றடைந்தோம். போகும் வழியில் நின்ற மக்களிடம் மாதயா உரையாடினார். முந்தநாளே இங்கு உங்களை எதிர்பார்த்தோம் என்றார்கள் அந்த மக்கள். வானொலி தொலைக்காட்சிகளை விட என்னமாதிரிச் செய்தி பரவுகிறது என்று நினைத்துக் கொண்டேன். அவர் ஒவ்வொரு முகாமிலும் போராளிகளுடனும் குழுத்தலைவர் களுடனும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் உரையாடுவதும் ஆலோசனை நடத்துவதுமாக இருந்தார். ஒரு முகாமில் போராளி களிடையே உரையாற்றும் போது “இந்திய இராணுவத்துடனான மோதல் எமக்குப் பல படிப்பினைகளைத் தந்துள்ளது. எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இன்றிப் போராடும் நாம் எமது சொந்த மூலவளங்களை உபயோகித்து புதுப்புது ஆயுதங்கள், பொறிவெடிகள் (ஜொனி போன்றவை) போன்றவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டோம். சூழ்நிலைதான் இக்கண்டுபிடிப்புகளுக்கான வழிகளை ஏற்படுத்தியது. ஜொனியை நாம் கண்டுபிடித்ததால் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தும் காலிழந்தும் போயினர் அவர்களை இந்தியாவுக்கு ஓடவைத்ததில் ஜொனியின் பங்கு கணிசமானது. தற்போது இலங்கை இராணுவத்தினரும் ஜொனியினால் பாரிய அளவில் இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள். ஆகவே புதுப்புது ஆயுதங்கள் பொறி வெடிகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொருவரும் முயல வேண்டும். அத்துடன் போராட்டத்தில் காலையோ, கையையோ அல்லது வேறு எந்த அங்கத்தையோ இழந்தாலும் மனந் தளராதீர்கள். அதற்காக சயனைட் அருந்த நினைக்காதீர்கள். வாழ்வில் எந்தச் சவாலையும் சமாளிக்க வேண்டும். ஒரு காலை இழந்த கிட்டு இன்று போராட்டத்தில் தன் பங்களிப்பை வழங்கவில்லையா? அதுபோல் கையையோ காலையோ இழந்தாலும் வேறொரு துறையில் உங்களால் சாதனை புரிய முடியும்” என்று உரையாற்றினார். இன்னொரு முகாமில் சிறுவர்களே கூடுதலாக இருந்தார்கள். அந்த முகாமில் ‘இந்திய இராணுவத்துடனான மோதலில் சிறுவர்களே பெரும் பங்கெடுத்தார்கள். எமது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும், ஏன் உலகமே இந்திய இராணுவத்துடன் மோதுவது புத்திசாலித்தனமல்ல என்று கூறியபோது புதிதாக இயக்கத்தில் சேர்ந்த சிறியவர்கள்தான் இந்திய இராணுவத்தை விரட்டியடித்து சாதனை புரிந்தவர்கள். ஆகவே உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். 25-9-90 அன்று தங்கிய முகாமில் குழுத் தலைவர்களுடன் உரையாடும்போது மக்களின் பட்டினி நிலையைத்தான் மிகவும் கவனமாக ஆராய்ந்தார்கள். அப்போது திரு. மாத்தயா அவர்கள் போராளிகளான நீங்கள் உங்களுடைய சாப்பாட்டில் ஒரு நேரச் சாப்பாட்டை பொது மக்களுக்கு கொடுப்பது என்ற முடிவை எடுக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பாருங்கள். 1978 ஆம் ஆண்டு மட் டக்களப்பில் சூறாவளியினால் சேதம் ஏற்பட்டபோது அங்குள்ள மக்கள் அகதிகளானார்கள். அப்போது எமது இயக்கத்தவர்கள் கூடி ஐயாயிரம் ரூபா கொடுப்போமா, பத்தாயிரம் கொடுப்போமா எப்படி உதவி செய்வோம் என்றெல்லாம் ஆராய்ந்தார்கள். அப்போது எமது தலைவர் “நாம் எமது உணவில் ஒரு நேரச் சாப்பாட்டை அகதிகளுக்கென ஒதுக்குவோம் நாம் அகதிகளுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக் கியமல்ல. எப்படிக் கொடுக்கிறோம் என்பதே முக்கியமானது. எமது சாப்பாட்டின்- ஒரு பகுதியை நாம் உணர்வு பூர்வமாகக் கொடுக்கும் உதவி தான் எமக்கு ஆத்மதிருப்தியைக் கொடுக்கக் கூடியது” என்று சொன்னார். அப்போது நாம் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள். எமது உணவுக் காக ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து நாம் கொடுத்தது சில நூற்றுக் கணக்கான ரூபாய்கள்தான். ஆனால் எமக்கு அது பெரிய திருப்தியைக் கொடுத்தது என்றார் மாத்தயா. 87 ஆம் ஆண்டுக்கு முதல் 36 இயக்கங்கள் இருந்தன. விடுகலைப் புலிகளால் மட்டும் இப்படி நிலைத்து நிற்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பது அப்போது எனக்குப் புரிந்தது. நாங்கள் இப்போது இருந்த இடத்திலிருத்து நாங்கள் புறப் பட்டமுகாமுக்கு ஒவ்வொருவரும் கால் நடையாக கால்மூடை அரிசி, சீனி என்பன சுமந்து சென்றார்கள். எமது பயணத்தில் இது போன்ற காட்சிகளை அடிக்கடி கண்டேன். பத்துமணித்தியாலம் பன்னிரண்டு மணித்தியாலம் என்று சுமக்கப்போகிறார்கள். இல்லாவிட்டால் அங்கிருப்பவர்களுக்குச் சாப்பாடு இல்லை. ஒரு முறை சிரித்திரன் ஆசிரியர் சிவா அவர்கள் தமது தலையங்கம் ஒன்றில் “தன்மானம் மிக்க தமிழினம் சிலுவை சுமக்க நேரினும் சலுகை ஏந்தாப்பண் புடையது” என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. யேசுபிரான் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் சிலுவை சுமந்தார். இப்போராளிகள் நாள்தோறும் சுமக்கிறார்கள். இந்தத் தியாகங்களை சிறிலங்கா அரசு நினைப்பது போல் அழித்து விட முடியுமா? இது வெட்ட வெட்டத் தழைக்கும் என நினைத்துக் கொண்டேன். (தொடரும்)
-
Kfir class boat of sea black tigers
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Manned Explosive Float/ MEF
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Notes Very Slender Vessel 1 (class name lost in time) OBM (2) Night view: Day light view: (craft name lost in time) 1 - Used up in the Operation Unceasing Waves-1. Image taken during the operation: 'Thermal imaging by SLAF aircraft during the battle' - Production was stopped for unknown reasons
- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Tritoon 1 (class name lost in time) OBM (1) 1-3) Bow: Stearn: 4) (craft name lost in time) At least 4 - Blue ones: SLN captured one after a failed attempt. 2 others were used up on this same mission to sink the MV Nimalawa and to damage the MERCS Ruhunu. - Ash: It was captured by SLA in the Mullivaikkal - The explosives are in the middle cylinder 2 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Tritoon - Under Construction 1 Not named IBM Not named At least 1
- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 8 'முகாமுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் வருவார்கள், மிகக்கடுமையான நோயாளிகளை திருக்கோணமலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டியிருக்கும், “நாங்கள் எங்களுடைய வாகனத்தில் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறோம். ஆனால் இடையில் இராணு வமோ, முஸ்லிம் ஊர்காவல் படையோ உங்களை எமது வாகனத்திலிருந்து இறக்கிக் கொண்டு போனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்குச் சம்மதமானால் வாகனத்தில் ஏறுங்கள்” என்று கூறுவார்கள். யாராவது போகச் சம்மதிப்பார்களா? நடப்பது நடக்கட்டும் என்று இங்கே கிடந்து சாக வேண்டியதுதான்!” என்றார்? வாகனங்களில் இருந்து இவ்வாறு யாராவது இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆலங்கேணியில் மூன்றுபேரும் ஜெயபுரவில் ஒன்பது பேரும் இவ்வாறு இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது சண்டை தொடங்கியவுடன் இ.போ.ச. பஸ்களில் இருந்து என்றார். சரி செஞ்சிலுவைச் சங்கத்தை விடுங்கள். வேறு யார்யாரிடம் இந்த விடயங்கள் தொடர்பாகமுறையிட்டிருக்கிறீர்கள்: என்றேன். பச்சநூர் முகாமுக்கு பாராளுமன்றத் தூதுக்குழுவொன்று அகதிகளைப் பார்வையிட வந்தது. அதில் மாவை சேனாதிராசாவும் வந்திருந்தார். அகதி முகாம் கொடுமைகளை அவரிடம் சொல்லி எமது பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரிடம் அகதிகள் கேட்டார்கள். "எங்களுக்கே பாதுகாப்பு இல்லை உங்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் என்ன செய்வது என்றார் மாவை சேனாதிராசா. இதற்குப் பின் அவர்களோடு பேச என்ன இருக்கிறது? என்று வினாவினார். உயர் இராணுவ அதிகாரிகள் யாரிடமாவது இது சம்பந்தமாகக் கதைக்க வில்லையா? என்று கேட்டேன். இந்தப் பகுதியில் சுரேஸ் காசிம் என்ற முஸ்லிம் இராணுவ அதிகாரிதான் எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருக்கிறான். அவனிடமும் மக்கள் கேட்டார்கள். ‘பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களின் நிலைமை என்ன மாதிரி?’ என்று அதற்கு அவன் சொன்ன பதில் ‘அகதி முகாம்களில் இருந்து பிடிபடுபவர்களைப் பற்றி மட்டும் எதுவும் கேட்க வேண்டாம். சாப்பாடு இல்லை தண்ணீர் இல்லை இதைப் போன்ற குறைபாடுகளைச் சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்’ என்று சொல்கின்றான் என்றார் அவர். நானும் சுரேஸ் காசிமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்தான் என்றேன் நான். 'போன கலவரத்தில் ஆலங்கேணியில் இருந்த ஒரு பெண் பிள்ளையைத் தேடிப் போயிருக்கிறான் சுரேஸ் காசிம். அந்தப் பிள்ளை இயக்கத்துக்கு நல்ல உதவி. வீட்டுக்குப் போய் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவுடன் அந்தப் பிள்ளையின் தங்கச்சிதான் முன்னுக்குப்போனது. அக்காவுக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு நான்தான் அவள் என்று சொன்னது. தலையிலிருந்து கால்வரை மூன்று மகஸீன் பொழிந்து தள்ளினான். ஆள் இரண்டாகப் போய்விட்டது என்றார். ‘என்ன இயக்கப் பாஷையெல்லாம் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டேன். நாளாந்தம் இயக்கத்தோடுதான் பழகுகிறோம். திருக்கோணமலையைப் பொறுத்தவரை இயக்கமும் பொதுமக்களும் வேறு வேறல்ல. எல்லாப் பிரச்சினையும் எல்லோருக்கும் தான் என்றார் அவர். சரி மீண்டும் சந்திப்போம் என்று அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டோம். போகும் வழியில் பதுமனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 22-09-90 அன்று புதுக்காவே என்ற இடத்தில் சிங்கள ஊர் காவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் மூன்று ஊர் காவல் படையினர் கொல்லப்பட்டதாயும் இரண்டு சொட் கண்கள், எட்டுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாயும் அச்செய்தியில் விபரமாக எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. நாம் போய்ச் சேர்ந்த முகாமில் இருதினங்கள் தங்கினோம். பின்னர் 24-09-90 அன்று பிற்பகல் எமது பணயம் ஆரம்பமானது. இப்பயணத்தில் 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயக்கத்துடன் ஈடுபாடு கொண்ட ஒருவரைச் சந்தித்தோம். அன்றிலிருந்து இவரும் எமது பயணத்தில் இணைந்து கொண்டார். இவரது பெயர் துரைநாயகம். நான்கு பிள்ளைகளின் தந்தை. சிறிலங்கா, இந்திய இராணுவங்களிடம் பிடிபட்டு சிறையில் இருந்தவர். திருமலை பற்றிய புள்ளி விபரங்கள் நிறையவே வைத்திருந்தார். எந்தச் சம்பவத்தைக் கேட்டாலும் திகதி வாரியாகக் கூறுவார். அவ்வளவு ஞாபகசக்தி படைத்தவர். பொதுமக்களை நாங்கள் சந்தித்த பின்னர்தான் திருமலையில் எவ்வளவு குடும்பஸ்தர்கள் முழுநேர உறுப்பினர்களாக பணியாற்றுகின்றார்கள் என்பதை உணர முடிந்த். இவர்களை வெறும் ஆதரவாளர்களாக கருதமுடியாது. ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு தமது கடமைகளில் முழுமூச்சாக ஈடுபடுவார்கள். “கலியாணம் மட்டும் முடிக்காமலிந்தால் உங்களைவிட நான் தீவிரமாயிருப்பேன்” என்று வீரம் பேசும் யாழ்ப்பாணத்துக் கடும்பஸ்தர்கள் பலரை நினைத்துக் கொண்டேன். இந்தப்பாதை அட்டைகள் முதலைகள் உள்ள பாதையென்றார் பதுமன். கறுப்பு நிறமான அட்டைகள் உடலில் பிடித்துக்கொள்ளும் அப்படியே எமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சியெடுக்கும் இலேசில் பிடுங்கியெறிய முடியாது. பிடுங்கியதும் உடம்பிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கும். நிறுத்துவரு கஷ்டம் என்றார். முதலைகள் பற்றிக்கேட்டபோது கும்புறு பிட்டியைச் சேர்ந்த ராஜன் என்ற போராளி முதலைக்குப் பலியாகியுள்ளான். 85 ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று கூறினார் அவர். பெரும்பாலும் விலங்குகளைத் தான் முதலை பிடிக்கும் என்றாலும் பெரிய முதலைகள் மனிதர்களை இழுத்துக் கொண்டு போகும் என்றார். "முதலைபிடித்து யாராவது தப்பியுள்ளார்களா?” என்று கேட்டேன், அப்போது துரை நாயகம் குறுக்கிட்டு "வள்ளி என்ற பெண்ணை முதலை பிடித்தது. பெரிய போராட்டமே நடத்தித்தான் அப் பெண்ணைக் காப்பாற்றமுடிந்தது இப்போதும் அந்தப்பெண் உயிருடன் இருக்கிறார். இப்போது அவரை “முதலை வள்ளி’ என அழைப்பார்கள்" என்றார்- பொருத்தமான பெயர்- வேறு என்ன மிருகங்களால் தொல்லை எனக் கேட்டேன். பாம்பு, யானை, கரடி இவைதான் மிகக் கூடிய தொல்லை கொடுக்கக் கூடியன. மட்டக்களப்புத் தளபதி கருணாவைக்கூட கரடி ஒரு தடவை பிடித்தது” என்றார் பதுமன். மட்டக்களப்பில் உள்ள கரடியனாற்றைச் சேர்ந்த துமிலன் (விஜய குமார்) என்ற போராளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வரவே திருமலையில் யாருக்காவது பாம்பு கடித்ததா என்று கேட்டேன், ‘‘சமீபத்தில் கூட காயமடைந்த ஒரு போராளியைக் கொண்டு வரும் போது இராணுவத்தினர் தாக்கினார்கள். இராணுவத்தினருடன் மோதிக் கொண்டு ஒரு பற்றைக்குள் போகும் போது ஒருவனுக்கு பாம்பு கடித்தது. இருக்கும் இடத்தில் பாம்பு. எதிரில் இராணுவம். போராளிகளின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்' என்றார். தொடர்ந்து “இப்படி காயமடைந்தவர்களைக் கொண்டு வரும்போது மட்டும் பன்னிரண்டு போரா ளிகளை இழந்துள்ளோம்' என்றார். சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை, முஸ்லிம் ஊர்காவல்படை, அட்டை, பாம்பு, கரடி, யானை, காட்டிக் கொடுப்போர் இப்படி எத்தனை விலங்குகளுடன் தான் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என் நினைத்துக் கொண்டேன். (தொடரும்)