Everything posted by நன்னிச் சோழன்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் தரையிறக்கம் இரண்டாவதாக 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 353- 360 நேரம் அப்போது ஏழரையைத் தாண்டியிருந்தது. இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் முதலில் படகேறின. கடற்புலி அணியினர் தமது பணியினை மிகுந்த வேகத்துடன் செய்யத் தொடங்கினர். தர்சாவின் தலைமையிலான எமது படையணி அலை மீது தாவ, ஓங்கியடித்தது அலை. ஆரம்பத்தில் படகேறிய அணிகளுக்குக் கடலின் மாறுதலான போக்கைத்தவிர வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. எனினும் நேரம் செல்லச் செல்ல படைத் தரப்புக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்போலும். அந்தப் பகுதியில் கடற்படைப் படகுகள் உலாவத்தொடங்கின. காத்திருந்த கடற்புலிகளின் சண்டைப் படகுகள் அவற்றை மறிப்பதற்காக அத்திசைநோக்கி விரைந்தன. தாக்குதலணிகளை ஏற்றும் படகுகள் தமது வேகத்தை இன்னும் அதிகரித்தன. அவர்களின் செயலில் தெரிந்த வேகம் எம்மையும் விரைவாகச் செயற்படவைத்தது படகேறிப் பழக்கம் அற்றவர்கள்கூடப் பாய்ந்து உள்ளே ஏறினர். தொடர்ந்து ஏற்றுவதும், கொண்டுசென்று தரையிறக்குவதுமாக இருக்க, கடலில் தாக்குதல் தொடங்கியது. "இந்தத் தரையிறக்கிற நடவடிக்கையில் தாக்குதலணிக்குச் சின்னக் கீறல் கூட வரக்கூடாது" என்ற தலைவரின் கண்டிப்பான பணிப்பை நிறைவேற்றுவதற்காகக் கடற்புலி அணியினர் தமது உயிரைக் கொடுக்கவும் தயராகநின்றனர். கடற்படைப் படகு எமது படகுகளுக்கு அருகில் வரமுன்பே, அவற்றுக்குப் போக்குக்காட்டி வேறு திசையில் வலிந்திழுந்துச் சென்று சண்டையிட்டனர் அவர்கள். நெருப்புத் தணல்களாகப் புறப்பட்ட சன்னங்கள் கடலின் இருளைக் கிழித்தன. இரண்டு கடற்படைகளின் மோதலை நேரடியாகக் கண்ட புளுகத்துடன், பயணத்தில் எந்தவித இடையூறும் வந்துவிடக்கூடாது என்ற பயமும் இடையிடையே வந்துபோனது. ஒவ்வொரு தடவை கடற்படைப் படகுகள் மோதுகின்றபோதும் தலைவர் எம்மோடு கதைத்த காட்சிகள் மனதில் நிறைந்து, வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதுள் விரித்தது. இதுவரை எந்தவிதப் பாதிப்புமின்றித் தாக்குதல் அணிகள் தரையிறங்கிக் கொண்டிருந்தன. தர்சாவின் அணியில் கீர்த்தி, தனுசா ஆகியோரின் பிளாட்டூன்கள் கிட்டத்தட்ட இரவு 10.00 மணியளவில் குடாரப்புப் பகுதியில் தரையிறக்கப்பட்டன. ஒரு போதுமே கடற்பயணத்தில் பழக்கப்படாத போராளிகள் மயங்கிவிழாத குறையாக கடற்கரை மண்ணில் வந்து இறங்கினர். கடுங்குளிரில் நடுங்கி உப்புக் காற்றைச் சுவாசித்தபடி வந்து கரையேறும்போது கடற் தண்ணீருக்குள்ளே வீழ்ந்து முற்றுமுழுதாக நனைந்துவிட்டிருந்தனர். இதற்குள் கரையைநோக்கிக் கடற்படைப் படகுகள் தாக்கத்தொடங்கின. மயக்கத்தோடு இறங்கியவர்கள் கடற்கரை மண்ணிலே வீழ்ந்துபடுத்தனர். நல்ல காலமாக எல்லாச் சன்னங்களுமே தலைக்கு மேலே விரிந்திருந்த தென்னைகளை உரசிப் பறந்தன. இப்போது வெவ்வேறு பக்கங்களில் கடற்சமர் வலுத்திருந்தது. சமரணிகள் பயணம் செய்த படகுகளில் கடற்தாக்குதலுக்குரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக எம்மைச்சூழ சண்டைப் படகுகள் நின்றன. நேரம் கிட்டத்தட்ட ஒரு மணியை அண்மிக்க கேணல் விதுசாவை ஏற்றிய படகு புறப்பட்டது. ஆர்.பி.யீ. போராளிகள் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் அதில் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சற்று நேரத்திலேயே, "இப்ப படகு எதுக்கு நேரே போகுது?" "இப்ப வெற்றிலைக்கேணி தாண்டிற்றம்" "கரையிலிருந்து எவ்வளவு உயரத்தில போய்க்கொண்டிருக்கிறம்?" "இரண்டு கடல்மைல் உயரத்தில போறம். இப்ப மருதங்கேணிக்கு நேரே போறம். அடுத்தது தாழையடி." இப்படியே படகினுள் கலகலப்பான உரையாடல் நடந்துகொண்டிருக்க, நடுக்கடலில் கடும் எதிர்ப்பு உண்டானது. தூரத்தே இருந்து தாக்கியபடியே வந்த கடற்படைப் படகு எமது படகை அண்மித்தது. மேலால் சீறிப் பறந்தன சன்னங்கள். 'சடார்' என்ற ஓசையுடன் கையில் பட்ட காயத்தின் வேகத்தில் படகுக்கு வெளியே தலை தொங்கக் கிடந்தார் கப்டன் தண்ணிலா. அவரை வேகமாக இழுத்தெடுக்கவும், "ஒரு எஞ்சின் பழுதாய்ப்போட்டுது. இனி வேகமாய்ப் போக ஏலாது. கெதியாய் அறிவியுங்கோ" படகோட்டிய போராளி சொன்னார். அந்த சன்னம் இயந்திரத்தின் பணியையும் தடைசெய்திருந்தது. 'இனி முடிஞ்சுதா கதை. நேவிக்காரன் துரத்தி துரத்தி அடிக்கப்போறான்' என நினைத்துக்கொண்டு எமது ஆயுதங்களைத் தயார்ப்படுத்தவும், கடற்படைப் படகைநோக்கித் தாக்கியபடி கடற்புலிப் படகு ஒன்று முன்னேறியது. பிறகு இரண்டையுமே காணவில்லைப் போலிருந்தது. சிறிது நேரத்தில் எம்மிலிருந்து அதிக தூரத்தில் இரு படகுகளுக்குமிடையே சண்டை நடந்தது. அதேநேரம் இன்னுமொரு தாக்குதலணிப் படகு வந்து எமது படகைக்கட்டி இழுத்துக்கொண்டு விரைந்தது. தொடர்ந்து கடற்படையினர் வருவதும், சண்டைப் படகுகள் மறிப்பதுமாக ஒரு விளையாட்டுப்போன்று கடற் பயணம் நடந்துகொண்டிருந்தது. திடீரெனக் கடற்படைப் படகு ஒன்று அருகில் வருவது போன்று இருந்தது. பின்னர் ஒன்றையும் காணவில்லை. இருள்நேரத்தில் நுரைத்து எழும் அலைகளை அண்டிய பகுதி கடும் இருட்டாகத் தெரிய, அது எமது கண்களுக்குப் படகுபோலத் தெரிந்தது போலும். மனம் நிம்மதி அடைந்தது. இப்போது குடாரப்பை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே பெரும் கடற்சமர் நடந்துகொண்டிருக்க, எமது படகு கரையை நோக்கித் திரும்பியது. இடையில் காற்றுப் படகுகள் நிற்க, அதற்குள் தாவினோம். சில நிமிடங்களிலேயே கரையில் இறங்கியதும் எங்காவது கீழே இருக்கவேண்டும்போல் இருந்தது. ஆகக் கூடுதலாக மயக்கமுற்றவர்கள் மண்வெட்டிகளை வைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்தார்கள். கும் கும் என அருகில் உள்ள தென்னந்தோப்பினுள் வீழ்ந்த எறிகணைகள் எம்மை அங்கு இருக்கவிடவில்லை. கரையில் நின்ற கேணல் பால்ராஜ் ஏற்கனவே நகர்ந்த அணியுடன் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தபடி நின்றார், தரையிறங்கிய கேணல் விதுசாவுடன் அப்போதைய நிலைமைபற்றிக் கதைத்துவிட்டு, அவர் இத்தாவில்நோக்கி நகரத்தொடங்க, எமது அணிகள் நாகர்கோயில் பகுதியை நோக்கியதான வெளிப்பாதுகாப்புக்கு நகர்த்தப்பட்டன. அவர்களுடன் ஒரு ஆண் போராளி புவிசார் நிலைகாண் முறைமையுடன் நிலையமைக்கப்படும் இடங்களைப் பதிவுசெய்தபடியே நகர்ந்தார். "தரையிறக்க நடவடிக்கையின் போது எங்களுடைய .50 கலிபர்கள் இரண்டையும் மாலதி படையணியுடன் விடும்படி தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார். பெருங்கடற் பரப்பருகே மாலதி படையணி நிற்கப் போவதால் அவர்களுக்கு அவை தேவை என்று அவர் குறிப்பிட்டார். எனவே தரையிறங்க முன்பே .50 கலிபர்களை அவர்களோடு விட்டுவிட்டோம்" என்று அந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றார் கேணல் துர்க்கா. கேணல் விதுசா வந்த படகு பழுதடைந்ததால் அதனைக் கட்டி இழுத்துவந்த படகு காயமடைந்த போராளியுடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தாக்குதலணிகள் இன்னும் முழுமையாக வந்துசேராத நிலையில் கடற்சமர் பலமடையத் தொடங்கியிருந்தது. தாம் கடும் தாக்குதலுக்கு மத்தியில் வந்துகொண்டிருயப்பதாக கேணல் விதுசாவுக்கு அறிவித்தார் சாந்தகுமாரி. அறிவித்த அந்தக் கணத்திலயே நடுக்கடலில் படகு ஒன்று தீப்பற்றத்தொடங்கியது. "சேரா-01 மெயின், சேரா-01 மெயின்" அந்த தொடர்புக் கருவிக்குமே தொடர்பு கிடைக்கலை, எல்லோர் மனதிலும் இடி விழுந்தது. சாந்தகுமாரியுடன் ஒரு பிளாட்டுன். ஏற்க முடியுமா? கடல் நடுவில் கண்ணெதிரே எம் தோழிகளைச் சாவிழுங்கிய துயரத்தில் முழ்கிப்போனோம். எதுவும் செய்யமுடியாத நிலையில் சோகம் இதயத்தைப் பிழிந்து, கணப்பொழுதுக்குள் எல்லாமே முடிந்துவிட்டதான உணர்வு, அவர்களது பணியை யார் செய்வார்? ஒவ்வொருவருக்கும் ஆளை மிஞ்சிய பணிகளல்லவா காத்திருந்தன. எல்லாவற்றுக்கும் விடையாக சாந்தகுமாரியின் குரலைச் சுமந்துவந்தது காற்று. "மெயின் சேரா-01, எங்களுக்குப் பிரச்சனை இல்லை. முதல் அடிவேண்டின போட்தான் இப்ப எரியுது" விடயம் சங்கேத மொழியில் வந்துசேர்ந்தது. "அது விதுசாக்கா வந்த போட்தான்" எல்லோர் வாய்களும் உரத்துச் சொல்லிக்கொள்ள எல்லோரின் மனதுக்குள்ளும் கடவுள்கள் வந்துபோயினர். சற்று நேரத்தில் சாந்தகுமாரியின் அணி தரையிறங்க குதூகலம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. வேகமாக அவரவர் இடங்களுக்கு அணிகளை அனுப்பிய விதுசா, நாகர்கோயில் பக்க நிலைகளிலிருந்து 100 மீட்டரில் தனது கட்டளைப் பீடத்தை அமைத்தார். இதுவரை நேரமும் தரையிறங்கும் அணிகளுக்கான பாதுகாப்பில் ஈடுபட்ட தனுசாவின் அணி கொம்பனி மேலாளர் தர்சாவுடன் தொண்டைமானாறு நீரேரியை நோக்கி மணல் வீதியூடாக நகரத்தொடங்கியது. நாகர்கோயில் பகுதியிலிருந்து பருத்தித்துறை செல்லும் பழுதடைந்த தார் வீதியைக் கடந்து, ஆள் உயரப் புற்களை விலக்கியபடி நீருக்குள் கால் வைத்தனர். அடுத்து தரையிறங்கிய கீர்த்தியின் பிளாட்டூன், தரையிறங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அணிகளின் பாதுபாப்புக்காகக் கொம்பனியின் கட்டளை அதிகாரி லக்சனாவுடன் செம்பியன்பற்றுப் பகுதியில் தயாராக நிற்க, மற்றைய அணிகள் தத்தமது திசைகளைநோக்கி நகரத்தொடங்கின. அது இருள் கலையாத நேரம். மக்களின் குடியிருப்புக்கள் எங்கே என்று தெரியாதநிலையில் எமக்கு வாய்ப்பான இடங்களிலே வேகவேகமாக நிலை அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. பொழுது புலர்ந்தால் சண்டை தொடங்கும் என்பது நிச்சயம். அதனால் அமைதியாகப் பணிகள் அரங்கேறின. மெல்லிய குளிர் காற்று மேனியை வருட, மண்வெட்டி மண்ணில் ஆழமாக இறங்கியது. சிறிய வாளியும் கையில் நாலைந்து குவளைகளுமாக சிவப்பு உடையணிந்த ஒரு சிறிய உருவம் திடீரென அங்கே தோன்றியது. எல்லோர் விழிகளும் அங்கேயே நிலைத்தன. பற்றைகளை விலக்கியபடி எம்மைநோக்கி வந்து கொண்டிருந்தது ஓர் அன்னை. எனினும் எங்கள் இராணுவ உணர்வு எச்சரிக்கை செய்தது. அப்பாலே உற்றுப் பார்த்தோம். எதையுமே காணவில்லை. புன்னகையுடன் வந்த அன்னை தேநீரைக் குவளைகளில் ஊற்றி எம்மிடம் நீட்டினார். வீட்டில் விடியற்காலை குளிருக்குள் படிப்பதற்காக எம்மை எழுப்பிவிட்டபின்னர், சுடச் சுடத் தேநீரைத் தயாரித்துத் தரும் எங்கள் அம்மாவின் பரிவும் கனிவும் அவர் பார்வையில் இருந்தது. வீட்டிலே 'நன்றாகப் படிக்கவேண்டும்' என்பதற்காக அம்மா தேநீரைத் தந்தார். இந்த அம்மா, நன்றாகச் சண்டை பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்தத் தேநீரைத் தந்திருப்பாரா? எதுவாக இருந்தாலும் ஐதீகக் கதைகளில் வருகின்ற அமுதம்கூட அந்த அன்னையின் தேநீருக்கு ஈடாகாது என்பதுமட்டும் உண்மை. தேநீரை அருந்துகின்றபோது எல்லோர் விழிகளிலும் நீர் திரையிட்டது. சாந்தகுமாரியின் கொம்பனி மாமுனைக் கடற்கரை தொடக்கம் நீரேரிக்கரைவரை நிலையெடுத்திருந்தது. நேரம் ஏழரையைத் தாண்டியிருக்கும். மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தத்தமது வேலைகளுக்காகப் புறப்பட்டவேளைதான் போராளிகள் அங்கு நிற்பதைப் புரிந்துகொண்டனர். வீதியால் விற்பனைக்குப் பாண் கொண்டுவந்த தந்தையொருவர் திகைத்துப்போனார். "எப்...ப பிள்ளையள் வந்தனீங்கள்?" ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் தடுமாறிக்கொண்டு நின்ற ஐயாவிடம் "விடியத்தான் ஐயா வந்தனாங்கள். நீங்கள் அங்கால போக ஏலாது. சண்டை தொடங்கப்போகுது. திரும்பிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போங்கோ" என்று சொல்ல 'நீங்கள் வந்ததே காணும் பிள்ளைகள்’ என்ற எண்ணப் பார்வையுடன் பெட்டியோடு பாணை இறக்கி எம்மிடம் தந்துவிட்டுப் போய்விட்டார். அள்ளி அள்ளி வெளியில் எறிந்தாலும், மீளவும் பள்ளத்தைநோக்கி வழிந்து விழுகின்ற மணலுடன் போட்டி போட்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில் இருந்தவாறு பகை இருக்கும் திசைநோக்கிச் சுடுகலன்களுக்கு ஏற்றவாறு நிலைகளைச் சரிபார்த்துக்கொண்டு இருந்தோம். ******
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் தரையிறக்கம் அடுத்து, தரையிறக்கத்தின் போது என்வெல்லாம் நடந்தன என்பதை பற்றிப் பார்போம். இது பற்றிய தகவல்கள் யாவும் 'வேருமாகி விழுதுமாகி' என்ற மாலதி படையணியின் வரலாறு கூறும் நூல், 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாறு கூறும் நூல் மற்றும் 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்' என்ற குடாரப்புத் தரையிறக்கத்தில் தொடங்கி சமாதான காலத்தில் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்டு யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் நுழைவது வரையிலான அனைத்து அனுபவங்களையும் ஆவணப்படுத்திய நூல் ஆகியவற்றில் இருந்து எடுத்துள்ளேன். இவற்றை வாசிப்பதன் மூலம் அற்றைய வரலாற்றுச் சிறப்பு மிக்க தரையிறக்கம் எப்படி இருந்தது என்பதை அறிவதோடு, நீங்களும் அத்தரையிறக்கம் நடந்த குடாரப்பில் நிற்பது போன்ற உணர்வினையும் உங்களுக்கு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 10/27/2021 முதலாவதாக 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 86-87 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் முக்கிய பணிகள் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதிலேயே நடவடிக்கையின் வெற்றி தங்கியிருந்தது நடவடிக்கையின் முதற்கட்டமாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணிகள் அதன் துணைத்தளபதி லெப் கேணல் நேசனின் தலைமையில் முன்னரே குடாரப்புவில் தரையிறக்கப்படும். அந்த அணி ஒரு வெற்றிகரமான இரகசிய நகர்வை மேற்கொண்டு ஏ௯ வீதியால் சென்று, மேஜர் கோபித், மேஜர் இலக்கியன் ஆரியோரின் தலைமையிலான இரு அணிகளாகப் பிரிந்து ஆனையிறவை நோக்கியும் யாழ்ப்பாணத்தை நோக்கியும் உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து எதிரித்தளத்தைப் பிளந்து நிலைகொள்ளும். இந்த ஆரம்பச் செயல்களின் வெற்றிகளிலேயே அடுத்தகட்டங்களின் எதிர்காலம் தங்கிநின்றது. லெப் கேணல் நேசனின் அணிகள் வெற்றிகரமாகத் தம் பணியை முடித்து நிற்க, அடுத்ததாகத் தரையிறக்கப்படும் படைத்தொகுதிகளுடன் தரையிறங்கும் சிறப்புத் தளபதி லெப் கேணல் ராஜசிங்கன் தனது மேஜர் நகுலன், மேஜர் ரோய் ஆகியோரின் அணிகளுடன் நகர்ந்துவந்து இணைப்பை ஏற்படுத்துவர். எல்லாப் படையணிகளையும் இணைத்து கேணல் பால்ராஜ் அவர்கள் கண்டி வீதியிலிருந்து பெருங்கடல் வரையான நீண்ட பகுதியில் எதிரித் தளத்தைப் பிளந்து, உறுதியான, உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து, வியூகத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனையிறவுத் தளத்தின் பிரதான வழங்கல் பாதையைத் துண்டித்து, எதிரியின் போர்ப்பலத்தைக் கவர்ந்து சிதறடித்தபடி நிலைமைகளுக்கேற்ப முன்னகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். தலைவர் அவர்களால் இறுதிக்கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆனையிறவுத்தளம் வீழ்த்தப்படும்வரை இத்தாவிற் களத்திற் போரிடவேண்டும். இரண்டாவதாக 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 353- 360 நேரம் அப்போது ஏழரையைத் தாண்டியிருந்தது. இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் முதலில் படகேறின. கடற்புலி அணியினர் தமது பணியினை மிகுந்த வேகத்துடன் செய்யத் தொடங்கினர். தர்சாவின் தலைமையிலான எமது படையணி அலை மீது தாவ, ஓங்கியடித்தது அலை. ஆரம்பத்தில் படகேறிய அணிகளுக்குக் கடலின் மாறுதலான போக்கைத்தவிர வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. எனினும் நேரம் செல்லச் செல்ல படைத் தரப்புக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்போலும். அந்தப் பகுதியில் கடற்படைப் படகுகள் உலாவத்தொடங்கின. காத்திருந்த கடற்புலிகளின் சண்டைப் படகுகள் அவற்றை மறிப்பதற்காக அத்திசைநோக்கி விரைந்தன. தாக்குதலணிகளை ஏற்றும் படகுகள் தமது வேகத்தை இன்னும் அதிகரித்தன. அவர்களின் செயலில் தெரிந்த வேகம் எம்மையும் விரைவாகச் செயற்படவைத்தது படகேறிப் பழக்கம் அற்றவர்கள்கூடப் பாய்ந்து உள்ளே ஏறினர். தொடர்ந்து ஏற்றுவதும், கொண்டுசென்று தரையிறக்குவதுமாக இருக்க, கடலில் தாக்குதல் தொடங்கியது. "இந்தத் தரையிறக்கிற நடவடிக்கையில் தாக்குதலணிக்குச் சின்னக் கீறல் கூட வரக்கூடாது" என்ற தலைவரின் கண்டிப்பான பணிப்பை நிறைவேற்றுவதற்காகக் கடற்புலி அணியினர் தமது உயிரைக் கொடுக்கவும் தயராகநின்றனர். கடற்படைப் படகு எமது படகுகளுக்கு அருகில் வரமுன்பே, அவற்றுக்குப் போக்குக்காட்டி வேறு திசையில் வலிந்திழுந்துச் சென்று சண்டையிட்டனர் அவர்கள். நெருப்புத் தணல்களாகப் புறப்பட்ட சன்னங்கள் கடலின் இருளைக் கிழித்தன. இரண்டு கடற்படைகளின் மோதலை நேரடியாகக் கண்ட புளுகத்துடன், பயணத்தில் எந்தவித இடையூறும் வந்துவிடக்கூடாது என்ற பயமும் இடையிடையே வந்துபோனது. ஒவ்வொரு தடவை கடற்படைப் படகுகள் மோதுகின்றபோதும் தலைவர் எம்மோடு கதைத்த காட்சிகள் மனதில் நிறைந்து, வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதுள் விரித்தது. இதுவரை எந்தவிதப் பாதிப்புமின்றித் தாக்குதல் அணிகள் தரையிறங்கிக் கொண்டிருந்தன. தர்சாவின் அணியில் கீர்த்தி, தனுசா ஆகியோரின் பிளாட்டூன்கள் கிட்டத்தட்ட இரவு 10.00 மணியளவில் குடாரப்புப் பகுதியில் தரையிறக்கப்பட்டன. ஒரு போதுமே கடற்பயணத்தில் பழக்கப்படாத போராளிகள் மயங்கிவிழாத குறையாக கடற்கரை மண்ணில் வந்து இறங்கினர். கடுங்குளிரில் நடுங்கி உப்புக் காற்றைச் சுவாசித்தபடி வந்து கரையேறும்போது கடற் தண்ணீருக்குள்ளே வீழ்ந்து முற்றுமுழுதாக நனைந்துவிட்டிருந்தனர். இதற்குள் கரையைநோக்கிக் கடற்படைப் படகுகள் தாக்கத்தொடங்கின. மயக்கத்தோடு இறங்கியவர்கள் கடற்கரை மண்ணிலே வீழ்ந்துபடுத்தனர். நல்ல காலமாக எல்லாச் சன்னங்களுமே தலைக்கு மேலே விரிந்திருந்த தென்னைகளை உரசிப் பறந்தன. இப்போது வெவ்வேறு பக்கங்களில் கடற்சமர் வலுத்திருந்தது. சமரணிகள் பயணம் செய்த படகுகளில் கடற்தாக்குதலுக்குரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக எம்மைச்சூழ சண்டைப் படகுகள் நின்றன. நேரம் கிட்டத்தட்ட ஒரு மணியை அண்மிக்க கேணல் விதுசாவை ஏற்றிய படகு புறப்பட்டது. ஆர்.பி.யீ. போராளிகள் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் அதில் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சற்று நேரத்திலேயே, "இப்ப படகு எதுக்கு நேரே போகுது?" "இப்ப வெற்றிலைக்கேணி தாண்டிற்றம்" "கரையிலிருந்து எவ்வளவு உயரத்தில போய்க்கொண்டிருக்கிறம்?" "இரண்டு கடல்மைல் உயரத்தில போறம். இப்ப மருதங்கேணிக்கு நேரே போறம். அடுத்தது தாழையடி." இப்படியே படகினுள் கலகலப்பான உரையாடல் நடந்துகொண்டிருக்க, நடுக்கடலில் கடும் எதிர்ப்பு உண்டானது. தூரத்தே இருந்து தாக்கியபடியே வந்த கடற்படைப் படகு எமது படகை அண்மித்தது. மேலால் சீறிப் பறந்தன சன்னங்கள். 'சடார்' என்ற ஓசையுடன் கையில் பட்ட காயத்தின் வேகத்தில் படகுக்கு வெளியே தலை தொங்கக் கிடந்தார் கப்டன் தண்ணிலா. அவரை வேகமாக இழுத்தெடுக்கவும், "ஒரு எஞ்சின் பழுதாய்ப்போட்டுது. இனி வேகமாய்ப் போக ஏலாது. கெதியாய் அறிவியுங்கோ" படகோட்டிய போராளி சொன்னார். அந்த சன்னம் இயந்திரத்தின் பணியையும் தடைசெய்திருந்தது. 'இனி முடிஞ்சுதா கதை. நேவிக்காரன் துரத்தி துரத்தி அடிக்கப்போறான்' என நினைத்துக்கொண்டு எமது ஆயுதங்களைத் தயார்ப்படுத்தவும், கடற்படைப் படகைநோக்கித் தாக்கியபடி கடற்புலிப் படகு ஒன்று முன்னேறியது. பிறகு இரண்டையுமே காணவில்லைப் போலிருந்தது. சிறிது நேரத்தில் எம்மிலிருந்து அதிக தூரத்தில் இரு படகுகளுக்குமிடையே சண்டை நடந்தது. அதேநேரம் இன்னுமொரு தாக்குதலணிப் படகு வந்து எமது படகைக்கட்டி இழுத்துக்கொண்டு விரைந்தது. தொடர்ந்து கடற்படையினர் வருவதும், சண்டைப் படகுகள் மறிப்பதுமாக ஒரு விளையாட்டுப்போன்று கடற் பயணம் நடந்துகொண்டிருந்தது. திடீரெனக் கடற்படைப் படகு ஒன்று அருகில் வருவது போன்று இருந்தது. பின்னர் ஒன்றையும் காணவில்லை. இருள்நேரத்தில் நுரைத்து எழும் அலைகளை அண்டிய பகுதி கடும் இருட்டாகத் தெரிய, அது எமது கண்களுக்குப் படகுபோலத் தெரிந்தது போலும். மனம் நிம்மதி அடைந்தது. இப்போது குடாரப்பை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே பெரும் கடற்சமர் நடந்துகொண்டிருக்க, எமது படகு கரையை நோக்கித் திரும்பியது. இடையில் காற்றுப் படகுகள் நிற்க, அதற்குள் தாவினோம். சில நிமிடங்களிலேயே கரையில் இறங்கியதும் எங்காவது கீழே இருக்கவேண்டும்போல் இருந்தது. ஆகக் கூடுதலாக மயக்கமுற்றவர்கள் மண்வெட்டிகளை வைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்தார்கள். கும் கும் என அருகில் உள்ள தென்னந்தோப்பினுள் வீழ்ந்த எறிகணைகள் எம்மை அங்கு இருக்கவிடவில்லை. கரையில் நின்ற கேணல் பால்ராஜ் ஏற்கனவே நகர்ந்த அணியுடன் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தபடி நின்றார், தரையிறங்கிய கேணல் விதுசாவுடன் அப்போதைய நிலைமைபற்றிக் கதைத்துவிட்டு, அவர் இத்தாவில்நோக்கி நகரத்தொடங்க, எமது அணிகள் நாகர்கோயில் பகுதியை நோக்கியதான வெளிப்பாதுகாப்புக்கு நகர்த்தப்பட்டன. அவர்களுடன் ஒரு ஆண் போராளி புவிசார் நிலைகாண் முறைமையுடன் நிலையமைக்கப்படும் இடங்களைப் பதிவுசெய்தபடியே நகர்ந்தார். "தரையிறக்க நடவடிக்கையின் போது எங்களுடைய .50 கலிபர்கள் இரண்டையும் மாலதி படையணியுடன் விடும்படி தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார். பெருங்கடற் பரப்பருகே மாலதி படையணி நிற்கப் போவதால் அவர்களுக்கு அவை தேவை என்று அவர் குறிப்பிட்டார். எனவே தரையிறங்க முன்பே .50 கலிபர்களை அவர்களோடு விட்டுவிட்டோம்" என்று அந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றார் கேணல் துர்க்கா. கேணல் விதுசா வந்த படகு பழுதடைந்ததால் அதனைக் கட்டி இழுத்துவந்த படகு காயமடைந்த போராளியுடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தாக்குதலணிகள் இன்னும் முழுமையாக வந்துசேராத நிலையில் கடற்சமர் பலமடையத் தொடங்கியிருந்தது. தாம் கடும் தாக்குதலுக்கு மத்தியில் வந்துகொண்டிருயப்பதாக கேணல் விதுசாவுக்கு அறிவித்தார் சாந்தகுமாரி. அறிவித்த அந்தக் கணத்திலயே நடுக்கடலில் படகு ஒன்று தீப்பற்றத்தொடங்கியது. "சேரா-01 மெயின், சேரா-01 மெயின்" அந்த தொடர்புக் கருவிக்குமே தொடர்பு கிடைக்கலை, எல்லோர் மனதிலும் இடி விழுந்தது. சாந்தகுமாரியுடன் ஒரு பிளாட்டுன். ஏற்க முடியுமா? கடல் நடுவில் கண்ணெதிரே எம் தோழிகளைச் சாவிழுங்கிய துயரத்தில் முழ்கிப்போனோம். எதுவும் செய்யமுடியாத நிலையில் சோகம் இதயத்தைப் பிழிந்து, கணப்பொழுதுக்குள் எல்லாமே முடிந்துவிட்டதான உணர்வு, அவர்களது பணியை யார் செய்வார்? ஒவ்வொருவருக்கும் ஆளை மிஞ்சிய பணிகளல்லவா காத்திருந்தன. எல்லாவற்றுக்கும் விடையாக சாந்தகுமாரியின் குரலைச் சுமந்துவந்தது காற்று. "மெயின் சேரா-01, எங்களுக்குப் பிரச்சனை இல்லை. முதல் அடிவேண்டின போட்தான் இப்ப எரியுது" விடயம் சங்கேத மொழியில் வந்துசேர்ந்தது. "அது விதுசாக்கா வந்த போட்தான்" எல்லோர் வாய்களும் உரத்துச் சொல்லிக்கொள்ள எல்லோரின் மனதுக்குள்ளும் கடவுள்கள் வந்துபோயினர். சற்று நேரத்தில் சாந்தகுமாரியின் அணி தரையிறங்க குதூகலம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. வேகமாக அவரவர் இடங்களுக்கு அணிகளை அனுப்பிய விதுசா, நாகர்கோயில் பக்க நிலைகளிலிருந்து 100 மீட்டரில் தனது கட்டளைப் பீடத்தை அமைத்தார். இதுவரை நேரமும் தரையிறங்கும் அணிகளுக்கான பாதுகாப்பில் ஈடுபட்ட தனுசாவின் அணி கொம்பனி மேலாளர் தர்சாவுடன் தொண்டைமானாறு நீரேரியை நோக்கி மணல் வீதியூடாக நகரத்தொடங்கியது. நாகர்கோயில் பகுதியிலிருந்து பருத்தித்துறை செல்லும் பழுதடைந்த தார் வீதியைக் கடந்து, ஆள் உயரப் புற்களை விலக்கியபடி நீருக்குள் கால் வைத்தனர். அடுத்து தரையிறங்கிய கீர்த்தியின் பிளாட்டூன், தரையிறங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அணிகளின் பாதுபாப்புக்காகக் கொம்பனியின் கட்டளை அதிகாரி லக்சனாவுடன் செம்பியன்பற்றுப் பகுதியில் தயாராக நிற்க, மற்றைய அணிகள் தத்தமது திசைகளைநோக்கி நகரத்தொடங்கின. அது இருள் கலையாத நேரம். மக்களின் குடியிருப்புக்கள் எங்கே என்று தெரியாதநிலையில் எமக்கு வாய்ப்பான இடங்களிலே வேகவேகமாக நிலை அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. பொழுது புலர்ந்தால் சண்டை தொடங்கும் என்பது நிச்சயம். அதனால் அமைதியாகப் பணிகள் அரங்கேறின. மெல்லிய குளிர் காற்று மேனியை வருட, மண்வெட்டி மண்ணில் ஆழமாக இறங்கியது. சிறிய வாளியும் கையில் நாலைந்து குவளைகளுமாக சிவப்பு உடையணிந்த ஒரு சிறிய உருவம் திடீரென அங்கே தோன்றியது. எல்லோர் விழிகளும் அங்கேயே நிலைத்தன. பற்றைகளை விலக்கியபடி எம்மைநோக்கி வந்து கொண்டிருந்தது ஓர் அன்னை. எனினும் எங்கள் இராணுவ உணர்வு எச்சரிக்கை செய்தது. அப்பாலே உற்றுப் பார்த்தோம். எதையுமே காணவில்லை. புன்னகையுடன் வந்த அன்னை தேநீரைக் குவளைகளில் ஊற்றி எம்மிடம் நீட்டினார். வீட்டில் விடியற்காலை குளிருக்குள் படிப்பதற்காக எம்மை எழுப்பிவிட்டபின்னர், சுடச் சுடத் தேநீரைத் தயாரித்துத் தரும் எங்கள் அம்மாவின் பரிவும் கனிவும் அவர் பார்வையில் இருந்தது. வீட்டிலே 'நன்றாகப் படிக்கவேண்டும்' என்பதற்காக அம்மா தேநீரைத் தந்தார். இந்த அம்மா, நன்றாகச் சண்டை பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்தத் தேநீரைத் தந்திருப்பாரா? எதுவாக இருந்தாலும் ஐதீகக் கதைகளில் வருகின்ற அமுதம்கூட அந்த அன்னையின் தேநீருக்கு ஈடாகாது என்பதுமட்டும் உண்மை. தேநீரை அருந்துகின்றபோது எல்லோர் விழிகளிலும் நீர் திரையிட்டது. சாந்தகுமாரியின் கொம்பனி மாமுனைக் கடற்கரை தொடக்கம் நீரேரிக்கரைவரை நிலையெடுத்திருந்தது. நேரம் ஏழரையைத் தாண்டியிருக்கும். மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தத்தமது வேலைகளுக்காகப் புறப்பட்டவேளைதான் போராளிகள் அங்கு நிற்பதைப் புரிந்துகொண்டனர். வீதியால் விற்பனைக்குப் பாண் கொண்டுவந்த தந்தையொருவர் திகைத்துப்போனார். "எப்...ப பிள்ளையள் வந்தனீங்கள்?" ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் தடுமாறிக்கொண்டு நின்ற ஐயாவிடம் "விடியத்தான் ஐயா வந்தனாங்கள். நீங்கள் அங்கால போக ஏலாது. சண்டை தொடங்கப்போகுது. திரும்பிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போங்கோ" என்று சொல்ல 'நீங்கள் வந்ததே காணும் பிள்ளைகள்’ என்ற எண்ணப் பார்வையுடன் பெட்டியோடு பாணை இறக்கி எம்மிடம் தந்துவிட்டுப் போய்விட்டார். அள்ளி அள்ளி வெளியில் எறிந்தாலும், மீளவும் பள்ளத்தைநோக்கி வழிந்து விழுகின்ற மணலுடன் போட்டி போட்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில் இருந்தவாறு பகை இருக்கும் திசைநோக்கிச் சுடுகலன்களுக்கு ஏற்றவாறு நிலைகளைச் சரிபார்த்துக்கொண்டு இருந்தோம். ******
- 34 replies
-
-
- 1
-
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் முன்னேற்பாடுகள் அடுத்து, தரையிறக்கத்திற்கு முன்னர் என்வெல்லாம் நடந்தன என்பதை பற்றிப்பார்போம். இது பற்றிய தகவல்கள் யாவும் 'வேருமாகி விழுதுமாகி' என்ற மாலதி படையணியின் வரலாறு கூறும் நூலில் இருந்து எடுத்துள்ளேன். இவற்றை வாசிப்பதன் மூலம் அற்றைய தரையிறக்கத்திற்கான முன்னேற்பாடுகள் எப்படி இருந்தன என்பதை அறியமுடிவதோடு, அவர்களின் அனுபவங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதையும் நாம் அறியலாம். பக்கங்கள்: 349-353 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 10/27/2021 வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்க நடவடிக்வகைக்கான கடின பயிற்சி அது. ஏனைய படையணிகளுடன் எமது படையணியின் இரு கொம்பனிகள் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தன. மகளிர் படையணிகளின் பயிற்சி நடவடிக்கைக்குப் பொறுப்பாக சுகி நின்றார். எமது படையணிக்கான ஒன்றுகூடல் முடிந்த சில நாட்களிலேயே தரையிறக்கச் சமருக்கான பயிற்சி நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டதால், ஐமுனாவின் கொம்பனியே முதலில் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. கல்லூரியைச் சுத்தப்படுத்தும் வேலையும் இவர்களுக்கே கிடைத்து. 2000.03.01அன்று அணிகளுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. பரந்த வெளியில் புலிக்கொடி கம்பிரமாக ஏறிப்பறக்க, தொடங்கப்பட்ட பயிற்சிகள் குறுகியகாலத்திலேயே வேகமெடுத்தன. மன்னார் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தர்சாவின் கொம்பனியும் சில நாட்களின் பின்னர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சியில் இணைக்கப்பட்டது. தடையணிகள், உள்நுழைந்து தாக்கும் அணிகள் என ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளுக்கேற்றவாறு பயிற்சியினைப் பெற வர்ணா, புரட்சிகா, செய்மதி, பிருதுவி, அங்கயற்கண்ணி ஆகியோரால் எமது அணிகளுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. 2000.03.25 அன்றைய மாலைப் பொழுதில், பயிற்சியை முடித்துக்கொண்ட எமது படையணியின் இருகொம்பனிகளும் உழவு இயந்திரங்களில் ஏறி ஒரு நீரேரிக்கு அண்மையில் இறங்கினோாம். பழுப்பு நிறக் கரையையும், இடையிடையே பச்சைக்குடை விரித்ததுபோல் அடர்ந்த தாவரங்களையும்கொண்ட அந்நீரேரிதான் 'சுண்டிக்குளம் நீரேரி' என அங்கு படகு வைத்துக்கொண்டு நின்ற ஓட்டி ஒருவர் சொன்னார். அந்த அழகிய நிரேரியைச் சிறிய படகுகள்மூலம் கடந்தோம். கத்தரிநீல நிறப் பூக்களைக்கொண்ட புற்கூட்டம் சிறுசிறு தீவுகளைப்போலப் பரந்திருந்தது அந்த அழகினை இரசித்தவாறே உல்லாசப் பயணத்துக்குச் செல்கின்ற உணர்வுடன் கரையை நெருங்க, எறிகளை வீச்சிலே வீழ்ந்து கிடந்த மரங்களும், ஆழத் தோண்டப்பட்டிருந்த குழிகளும் திடீரென இறுக்கமான ஓர் உணர்வை மனதில் தோற்றுவித்தன. கரையில் உழவு இயந்திரங்கள் எமக்காகக் காத்திருந்தன மீண்டும் உழவு இயந்திரப் பயணம் தொடர, கட்டைக்காடு எம்மை வரவேற்றது. ஈச்சம் பற்றைகளும் புல்வெளிகளும், பல்வகை மரங்களுமாக இணைந்த அப்பகுதி நாலைந்து மாதங்களின் முன்புதான் சிறீலிங்காப் படைகளிடமிருந்து எம்மால் மீட்கப்பட்டிருந்தது என்பதால், படையினர் விட்டுச் சென்ற தடங்களெதுவும் மாற்றமுறாமல் அப்படியே இருந்தன. இரவில் அங்கு சென்ற நாம், மறுநாள் காலையில் ஒன்று கூட்டப்பட்டடோம். பரந்த வெளியொன்றில் அனைத்து அணிகளும் வரிசையதாய் நின்ற காட்சி ஓர் வேகத்தை ஏற்படுத்தியது. மரங்களுக்கு மேலால் உயர்ந்த சூரியனின் கதிர்கள் சூரியக் குழந்தைகளைத் தொட்டுத் தழுவ, எமது இயக்கத்தின் மேன்மைமிகு குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான உறுதியுரையை முடித்துக்கொண்டோம். தரையிறக்கத் தாக்குதலை வழிநடத்தும் தளபதிகள் அனைவரும் சண்டைபற்றி உரை நிகழ்த்தினர். தலைவர் அவர்கள் எதிர்பார்க்கின்ற வெற்றியைப் பெறவேண்டியதன் தேவை எல்லோர் மனங்களையும் மீணடும் நிரப்பியது. பின்னர், தாக்குதல் நடவடிக்கைக்கான மேலதிக பொருட்கள், உலர் உணவுகள் என்பன எங்களுக்கு வழங்கப்பட்டன. தமது பணியை இலகுபடுத்துவதற்காகத் தேவையானவற்றை முற்கூட்டியே தயார்ப்படுத்தும் பணியில் அணித்தலைவர்கள் ஈடுபட்டிருக்க, தரையிறக்கச் சமர் நடவடிக்கைக்குத் தாம் தெரிவுசெய்யப்பட்டது குறித்த மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. இதனால் கூச்சலும் கும்மாளமும் அந்த இடத்தை நிறைக்க, மதிய உணவும் வந்து சேர்ந்தது. அதற்கிடையில் கடலில் எப்படிப் பயணிக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துமுகமாக நடக்கவிருந்த படகேறும்பயிற்சிக்கு எல்லா அணித்தலைவர்களும் சென்றிருந்தனர். தாக்குதலின் இடையில் உண்பதற்காகக் கொடுக்கப்பட்ட கன்டோஸ் பொதிகள் சில, இப்போதே இல்லாமற் போகத்தொடங்கின. படகேறும் பயிற்சிக்குப் போனவர்களில் சிலர் கடலின் அடி ஆழத்தையும் பார்த்துவிட்டு வந்துசேர்ந்தனர். போராளிகளின் இனிய கூச்சல், கும்மாளங்களைப் பார்த்தவாறு ஆதவன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். தாக்குதல் அணிகள் புறப்படும் வேளை வந்தது. அனைத்து அணிகளையும் ஏற்றுவதற்கு உழவு இயந்திரங்கள் வந்து நின்றன. ஏற்கனவே தயாராயிருந்த நாம் எமது பொருட்கள் எல்லாம் சரியாக உள்ளதா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டோம். ஒவ்வொரு அணிகளாக ஏற்றிய உழவு இயந்திரங்கள் நீண்ட மணற்பாதையைப் புயல் வேகத்தில் தாண்டி வெற்றிலைக்லைக்கேணியில் இறக்கின. அதுவரை ஆளையாள் இறுக்கிப் பிடித்தபடி நின்ற அனைவரும் கடகடவெனக் கீழே குதித்தனர். அப்போது பனைகளின் இடைவெளியினூடே மஞ்சள் நிலா மேற்கு வானில் மெல்லிய கோலம் காட்டியது . "கடல் இரண்டொரு நாட்களாய் வழமையைவிட வித்தியாசமாய் இருக்கு. எண்டாலும் உங்களைத் தரையிறக்கிற பணி தடங்கலின்றி முடியும்" என எம்மோடு கதைக்கும்போது நம்பிக்கை தந்திருந்த கேணல் சூசையின் கட்டளைப்படி படகுகள் கரையில் நின்றன. கூடவே மனம் நிறைந்த நம்பிக்கைப் புன்னகையுடன் கடற்புலிப் போராளிகளும். குளிர்ந்த மண் காலில் பட, மனம் நெகிழ்ந்தது. கரையில் பாதுகாப்புக்கென இராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த 'உடைந்த' காப்பரண்களையும், முட்கம்பித் தடைகளையும் தாண்டி கரையை அண்மித்தோம். அப்போது தெற்கிலிருந்து வடக்காக வானூர்தி ஒன்று செல்லும் ஒளிர்வு விட்டு விட்டுத் தெரிந்தது. தீடீரென நாம் நின்ற பகுதிக்கு அண்மையாக எறிகணைகள் வீழ்நது வெடிக்க, சலசலவெனத் தெறித்தன சிதறுதுண்டுகள். இது படைத்தரப்பின் வழமையான வேலைகளில் ஒன்று எனப் புரிந்துகொண்ட நாம், உடைந்த காப்பரண்களுக்கு அண்மையில் நின்று கடலைப் பார்த்தோம். அது அலைகளின் வீச்சுக்கு அதிர்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலையெனத் திரண்ட ஒவ்வொருவரதும் மனநிலை சொல்லவொண்ணா உணர்வெழுச்சிக்கு உட்பட்டிருந்தது. உயர வீசும் அலைகளெல்லாம் கடலன்னையின் குழந்தைகள். ஓயாது வீசிக்கொண்டிருக்கும் நாங்கள் தமிழன்னையின் குழந்தைகள். ஆகவே அலையின் வலிமை எங்களுக்கும் வேண்டும். மனம் எங்கோ சிறகடிக்க முற்பட்டது. எல்லோரும் நாம் பயணம் செய்யப்போகும் கடற்தாயின் அலைக்கரங்களை இரசித்துக்கொண்டிருக்க, எம்மை ஏற்றும் படகுகள் தயாராகின. ******
- 34 replies
-
-
- 1
-
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
main-qimg-eb00b93751f870b890e87f74f80cbc72.png
From the album: Tamil Glossary
-
main-qimg-9bd13b7ae64e4e1bb84e75d3b86c3047.png
From the album: Tamil Glossary
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் கருவேங்கைகள் பயணம் மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி, 2000, பக்கம்: 12-13 & 15 மூல எழுத்தாளர்: கிள்ளிவளவன் தட்டச்சு & தகவற்பிழை திருத்தம்: நன்னிச் சோழன் உசாத்துணை: https://eelam.tv/watch/ஈரத-த-eeraththi-தம-ழ-ழத-த-ர-ப-படம-tamil-eelam-movies_6qsjnVEuiBeDkrb.html வழமைக்கு மாறான செயற்பாடுகள், என்றும் இல்லாத முகமாற்றங்கள், நின்று கதைப்பதற்கோ, இருப்பதற்கோ நேரமில்லாது அவசரமாய் கழிந்தது பொழுது. எல்லாம் அன்று மாற்றமானதாகவே இருந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரரும் தன்னையும் தான் கொண்டுசெல்லவேண்டிய ஆயுத தளவாடங்களையும் இறுதி நேரம் தயார்ப்படுத்துவதில் மிக மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிற்கு ஏதோ ஒரு உணர்வு திரும்பத் திரும்ப அவர்களை நிறைவுபடுத்திக்கொண்டிருந்தது. அவர்களிற்காக வந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைக்கூட கவனிக்காது தாங்கள் கொண்டுபோகும் பொருட்சளிற்கு நீர்க்காப்பு போடுவதிலும் அவற்றை சரியா என்று தேர்வாய்வதிலும் அக்கறை கொண்டிருந்தார்கள். 24-03-2000 அன்றைய பகற்பொழுது இப்படித்தான் அவர்களிற்குக் கழிந்தது. பொழுது மங்கத் தொடங்கிய வேளை அவர்கள் தங்களிற்கான பொருட்களோடு புறப்படத் தயாரானார்கள், பாரம் சற்று அதிகமனதாய் இருந்தது. ஒவ்வொருவரும் தங்களிற்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களைவிட மேலதிகமாகவும் சில வெடிபொருட்களை கொண்டு சென்றனர். எத்தனை இரவுகள் இப்படியான எதிர்பார்ப்புகளுடனும், ஆவலுடனும் அவர்கள் வேவுக்காக திரிந்திருப்பார்கள். அவர்களின் அந்த தேடல் முயற்சியிலே எத்தனை தோழர்களை அவர்கள் இழக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை நாட்கள் ஒருதுளி தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் அதற்காக அலைந்திருப்பார்கள். எல்லாம் அவர்களின் நினைவில் நிழவாடுவதாய் இருந்தது. "எங்கட கையால் 'சாஜ்' கட்டி 'ஆட்டி' உடைக்கோணும், எத்தனையோதரம் சந்தர்ப்பம் வந்து நழுவிற்றுது, இனியொருக்காவரும் அந்த சந்தர்ப்பத்தில் 'ஆட்டி'யை உடைச்சு அண்ணை நினைக்கிறதை செய்து காட்ட வேணும்.'' இப்படி ஒவ்வொருவரின் ஆழமான உணரவும், காற்று அவர்களோடு பேசுவதாய் உணர வைத்தது. அவர்கள் அத்தனை பாரங்களோடும் ஒவ்வொருவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். "நாங்கள் போறம், இந்த முறை எப்படியும் நினைச்சத செய்து முடிப்பம் இல்லாட்டி...." சிரித்தார்க்கள். எல்லோரும் ஒரே பொருளோடு சிரித்தார்கள். கைகுலுக்கினார்கள், கட்டித்தழுவினார்கள். "ஒவ்வொருவற்ற காதுக்கும் நிச்சயமா வெற்றிச் சேதிவரும்" என்று மூச்சைப் பேச்சாக்கினார்கள். அவர்களின் பார்வை வானத்தையோ அல்லது பூமியை நோக்கியபடி இறுதியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரது கால்களும் இலக்கை நோக்கி நடப்பதற்காக குறுகுறுத்தன. வெற்றிலைக்கேணிக் கடற்கரையிலிருந்து அவர்களின் பயணம் ஆரம்பமானது. சிறிய படகுகள் அலைகளில் ஓசையின்றி இருளோடு இருளாகப் புறப்பட்டன. வானவிளிம்பு, உயர்ந்த பெருத்த தென்னந்தோப்புக்களையும், அடர்ந்த மரங்களையும், வெளிகளையும் பிரித்துக் காட்டியது. வெள்ளிகளின் மங்கிய வெளிச்சம் வானத்திலும் ஓலைக் குடிசைகள் இருப்பது போலவும், அந்த குடிசைகளின் துவாரங்களினாலேயே இந்த ஒளி கசிவதாகவும் தெரிந்தது. படகு மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருத்தாலும் அவர்களின் இதயம் வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தது. திட்டம், நகர்வு, தாக்குதல் என்று ஒவ்வொன்றையும் சுரம்மாறாது நினைவுகள் அசைபோட்டன. தாழையடி படைத்தளத்திலிருந்து கடற்கரையை நோக்கி வெளிச்சங்கள் தெரிந்தது. அந்த வெளிச்சங்கள் அவனது சின்ன 'மின்சூழ்' வெளிச்சங்களில் இருந்துதான் கசிந்திருக்கும். அவன் சுற்றுக்காவலிற்காகவோ அல்லது வேறு வலுவெதிர்ப்பு ஏற்பாடு ஒன்றிற்காகவோ நகர்ந்துகொண்டிருக்கிறான் அல்லது பயத்தில் இருளை தனக்குக்கிட்டே வரவிடாது விரட்டுவதற்காக இவ்வாது செய்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிரித்தார்கள். படகுகளில் மெளனம் குடிகொண்டிருந்தது. காற்று ஈரத்தை சுமந்து வீசிக்கொண்டிருந்தது. ஓசையில்லாது படகு கரையைத் தொடும் தொலைவிற்குள் வந்துவிட்டது. படகின் இரண்டு கரைகளாலும் இரு கறுப்பு உருவங்கள் தண்ணீருக்குள் குதித்தன. அவர்கள் சுமந்து செல்லும் பொருட்களின் தோற்றம் அவற்றை பெரிய மணிதர்களாக உருமாற்றிக் காட்டியது. தண்ணீருக்குள் இறங்கியவர்கள் சுடுகலனை மூடியிருந்த நீர்காப்பை அகற்றி சுடுவதற்கு தயாரானார்கள். எந்த நேரமும் தாக்குதல் ஆரம்பிக்கலாம், எனென்றால் அது எதிரியின் கோட்டைகள் நிறைந்த இடம். செம்பியன்பற்றுக்கும் மாமுனைக்கும் இடையிலான பகுதியில்தான் இது நிகழ்ந்து கொண்டிருந்தது. இறங்கிய இருவரும் சுடுகலனை சுடுவதற்கு ஏற்றவாறு பிடித்துக்கொண்டு சற்றுக்குனிந்து ஓசையில்லாது இரண்டு முனைகளிலும் பிரிந்து ஓடியது வானவிளிம்பில் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் நிலையெடுத்தபின், எந்தவிதமான ஊறும் தென்படவில்லையென்பதற்கு மணிக்கூட்டு வெளிச்சத்தில் சமிக்கை செய்தார்கள். அதன் பின்னே படகு கரையடைந்தது. அந்த படகிலிருந்து மற்றப் படகிற்கு சமிக்கை காட்டப்படடது. அதுவும் விரைந்துவந்து கரையைத் தொட்டது. ஒவ்வொரும் நிதானமாக எதற்கும் தயாராக படகுகளிலிருந்து குதித்தார்கள். அவர்களின் பார்வை இப்போது முன்னோக்கியதாக கூர்மையடைந்திருந்தது. படகில் ஏற்றிவந்தவர்களிற்கும், இதுவரை ஒன்றாகவே நின்று இறுதிக்கணமும் பிரியமனமின்றி தவித்துநிற்கும் தோழர்களிற்காகவும் ஒருமுறை திரும்பிப் புன்னகைத்தார்கள். அதற்குமேல் அவர்களிற்கு வேளை கிடைக்கவில்லை. நகருவதற்கான வியூகங்கள் அமைத்து முன்னேறத்தொடங்கினார்கள். கால் புதைந்து புதைந்து எழும் அந்த மணல்கடற்கரை பக்கமாகவே வளைந்து நெளிந்துபோகும் பாதை, மணல் மேடுகளின் நடுவில் வளர்ந்திருக்கும் கண்டல்காடுகள் அவற்றினூடு அவர்களின் கால்கள் முன்னேறின. அடர்ந்த கண்டல் காடு நிறைந்த ஒரு இடத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அகற்றப்படாதிருந்த அனைத்து நீர்க்காப்புகளும் அகற்றப்பட்டன. அங்கே தடயங்களாக இருந்த பொருட்களை மணலில் குழிதோண்டிப் புதைத்து விட்டு மிக கவனத்தோடு எழுந்து நடந்தார்கள். அவர்கள் போகும் திசையில் தொலைவில் தெறோச்சிகள் இயங்கிய ஓசை; அதைத் தொடர்ந்து, வானத்தையும் பூமியையும் அதிரவைக்கும் ஓசை எல்லாம் தெளிவாக கேட்டது. எல்லோருடைய மனதிலும் நம்பிக்கை; எங்களுடைய இலக்குகள் இருக்கின்றன. இனி எப்படியும் அவை அழிக்கப்பட்டுவிடும் என்று. நடந்துகொண்டிருந்தபடியே தனது தோளை வெட்டிய வெடிமருந்துப் பொதிகளைச் சீர்செய்து விட்டு "சத்தம் போடுங்கோ, இஞ்ச உங்களுக்கான சாமான்களோட நான் வாறனெண்டு உங்களுக்குத் தெரியாதுதானே?” என்று எல்லோரும் கேட்கும்படியாக கூறிவிட்டுச் சிரித்தான் தனுசன். அவனின் இயல்பே தனித்துவமானது. உச்சி பிரித்து, மேவி வாரப்பட்டிருக்கும் தலைமயிரும் கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருக்கும் அவனது கண்களும் கதைக்கும் போதும் சிரிக்கும் போதும் கண்ணை மூடிமூடித்திறக்கின்ற அசைவுகளும், உயர்ந்த உடற்கட்டான அவனுடைய உருவமும் அவனை ஒருமுறை, பார்த்தவர்க்ளின் மனதைக்கூட பற்றிக்கொள்ளும். அவனது சொற்களிலிருந்த உறுதியும் நகைச்சுவையும் எல்லோரையும் ஒருகணம் சிரிக்க வைத்தது. தனுசனது கவசமே அலட்டிக் கொள்ளாது அதிகமான செயற்பாடுகள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இயல்புதான். இலக்கிற்காக அவன் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து பயிற்சி எடுத்தது, அதற்காக நகர்வது அனைத்திலுமே அவனின் செயற்பாடுகளில் தன்னை இனங்காட்டிக்கொண்டான். எல்லாப் போராளிகளுடனும் அதிகமாக சிரித்துக்கதைத்தான். அடிக்கடி "இந்த ஆட்டிலறிகளை நிச்சயமா உடைப்பன்" என்று உறுதியாய்க்கூறி புன்னகைத்தான். இன்று, இலக்கிற்கும் அவனிற்குமான தொலைவை காலடிகள் குறைத்துக்கொண்டிருந்தன. அவன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான். அவனிற்கென கொஞ்சப் பொதிகள் கொடுத்தபோதும் அவன் மேலதிகமாகவும் புறப்படும்போது தனக்கு வழங்கிய வெடிமருந்துப் பொதிகள் போதாது என்று, "இன்னும் கொஞ்சம் தாங்கோ. நான் கொண்டுபோவன், தேவைப்படும்!" என்று வாங்கி அதையும் சேர்ந்து சுமந்து கொண்டு நடந்தான். ஒவ்வொருவரது நெஞ்சிற்குள்ளும் தலைவர் கதைத்தது, கட்டளையாளர்கள் எடுத்துரைத்தது, போராளிகள் விடை கொடுத்தது என்று, ஒவ்வொன்றும் வந்துபோனது. அணிகள் நகர்ந்து அகிலன்வெட்டைக் கரையை (சிறுநீரேரி) வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது. அகிலன் வெட்டையில் பரந்து நின்றிருந்த நீர் காற்றுவீசும் நேரம் தவிர மீதியெல்லாம் அமைதியாய் இருந்தது. தெறோச்சிகள் ஏவப்படுகின்ற ஓசை அவர்களிற்குள் ஒரு வேகமேற்படுத்தியது. மெல்லமெல்ல ஒவ்வொருவராக நடந்தார்கள். ஆழம் அதிகமான இடங்களில் சத்தியாவும், ஆந்திராவும் தாண்டு மீண்டார்கள். இரண்டு பேருமே உருவத்தில் சிறியவர்கள். அவர்களின் இந்த சிறிய தோற்றம் பலதடவைகளில் அவர்களிற்கு இலக்கு கிடைக்காது போவதற்கு காரணமாய் இருந்தது. என்றாலும், இம்முறை அவர்களிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மலர்விழி தந்தலைமையிலேயே இவ்விருவரையும் அழைத்துச் சென்றாள். தண்ணீரின் ஆழம் அதிகமான இடங்களில் நுனிக்காலில் நடத்தும், அதை விட அதிகமானால் மலர்விழியின் தோள்களில் பிடித்தபடியும் சத்தியா தன் தண்ணீர் கடப்புப் பயணத்தை தொடர்ந்தாள். ஆந்திராவும் அப்படியே. மற்ற கரும்புலி வீரர்களும் அவர்களிற்கு உதவினார்கள். தண்ணீரும் பாதங்களை பிடித்திழுக்கும் சுரிகளும் பயணத்தை சிரமமாக்கியது. யாரும் அதைக் கடினமாகப் பெரிதுபடுத்தவில்லை. எந்தவிதமான தடயமும் ஏற்படாது கரையேறியவர்கள், சற்றுத் தொலைவு நடந்து ஒரு மறைப்பான இடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள். சிலர் தங்கள் சுடுகலன்களைத் துப்புரவு செய்தார்கள். சிலர் அப்படியே அந்த புதர்கள் மண்டிக்கிடந்த இடத்திலேயே படுத்திருந்தார்கள். சிலர் தாங்கள் கொண்டுவந்த உலர் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டும் மற்றவர்களிற்கு அன்பாய் கொடுத்துக்கொண்டுமிருந்தார்கள். அது ஒரு படையவலயம் என்ற உணர்வு தெரியாது அவர்கள் இயல்பாகவே பேசினார்கள், சிரித்தார்கள். ஆளாளாய் கிண்டலடித்தார்கள். அந்த இடத்திலேயே மறுநாள் பகற்பொழுது கழிந்தது. பகற்பொழுதில் தான் அந்த இடமெல்லாம் படை நடமாட்டம் அதிகமான இடமெனத் தெரிந்தது. படையச் சப்பாத்தின் அடையாளங்கள் ஆங்காங்கே பளிச்சிட மாலைச் சூரியன் சற்று மரங்களிற்குள் மறையத் தொடங்கினான். இதுவரையும் ஒன்றாக நகர்ந்த அணி இரண்டாகப் பிரிந்து வேறுதிசையில் இன்னொரு இலக்கைத் தேடப்போகிறது. களத்தினுள்ளும் ஓர் உணர்ச்சிபொங்கும் பிரிவு. பளையில் அமைந்திருந்த சேணேவித்தளம் நோக்கிப் போகின்ற தனுசன், சுகாஜினி அடங்கிய அணியைப் பார்த்து "உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, இதைவிடக்கூடாது, ஆட்டி தகர்க்க வேணுமெண்டது கனபேற்ற எதிர்பார்ப்பு" என்றாள் மலர்விழி. கூறிவிட்டு தனது தோள்ப்பையிலிருந்த 'பழரின்' ஒன்றை எடுத்து வெட்டினாள். ஒரு தாயிற்குரிய பரிவோடும், பாசத்தோடும் ஒவோரு போராளிக்கும் கொடுத்தாள். அந்த கணங்களில் கண்கள் மெல்லக் கசிந்தன. இதே அணிகளில் இனியார் வெற்றிச் சேதியேடு திரும்புவார்கள்? அங்கு தாமதம் என்ற சொல்லுக்கு இடமில்லை. ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு துளி அரத்தமாக மதிக்கப்பட்டது. தனுசன், சுதாயினி அடங்கிய குழு பளை நோக்கியும், மலர்விழி, சத்தியா, ஆந்திரா அடங்கிய குழு தாமரைக்குளம் நோக்கியும், பிரிந்து நடந்தனர். இனி கடக்கவேண்டிய மிகப்பெரும்தடை கண்டி வீதி ஏ9 - முதன்மைச்சாலை. வீதியோரத்தில் முட்கம்பி வேலிகள். அதைக் கடந்தால் சுற்றுக்காவல் வந்துபோகும் படையினர். அதிகளவு ஒளிசிந்தி இரைந்தபடி ஓடித்திரியும் "பாரவூர்தி"கள். அத்தனை ஊறுகளையும் கடந்துவிட்டால் இலக்கு தகர்க்கப்படுவது உறுதியாகிவிடும். இந்தக்கணத்திலும் அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதியை மீண்டும் சொல்லிக்கொண்டனர். "ஓராள் மிச்சமென்டாலும் உள்ளுக்கபோய் ஆட்டியை உடைக்கோணும்". ஒவ்வொருவருமே அதன் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டிய விதத்தையும் நன்கு அறிந்து வைத்திருத்தனர். கண்டி வீதி கடப்பதற்காய் அங்குலம் அங்குலமாக் நகர்ந்து தடைக்கம்பி வெட்டி, மண்ணணை ஏறி ஒவ்வொருவராக சமிக்கை கொடுத்து கிட்ட அழைத்து, அவர்களை நிலையெடுக்கச் செய்து இப்படி ஒவ்வொன்றும் அங்கே நிதானமாக அரங்கேறிக்கொண்டிருந்தன. கண்டி வீதியால் கிடுகிடுத்தபபடி மிதிவண்டியில் சுற்றுக்காவலுக்கு படையினர் போய்வரும் நடமாட்டம் தெரிந்தது. அடுந்தடுத்து சில படையினர் மின்சூழ்களுடன் போவதும் வருவதுமாக இருந்தனர். அவர்கள் போகும் போது சிங்களப் பாடல்களையோ அல்லது வேறு எதனையோ கத்திக்கொண்டே சென்று வந்தார்கள். அவர்கள் கதைக்கும் சிங்களச் சொற்களிற்குள் கலந்துவந்து ஆங்கிலச் சொற்கள் அவர்கள் காவல்கடைமையை மாற்றுகின்றார்கனள் என்று உணரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பின் எல்லாம் மௌனம். பழைய வடிவமைப்பிலான ஒரு சகடம்(car) போன்ற ஊர்தி பளையில் இருந்து முகமாலைப் பக்கமாய் விரைந்தது. அணி வீதிக்கரையை வந்ததும் வேகமாக கடக்க முயன்றார்கள். முன்னேசென்ற ஒருவன் வேகமாகக் நடந்து கண்டிவீதியை கடந்தான். அடுத்தவன் தனது நிலையிலிருந்து எழுந்தான். கடப்பதற்காக விரைவாக நடந்தான். சாவகச்சேரிப் பக்கமிருந்து உறுமலோடு ஏதோ ஒரு ஊர்தி வந்தது. அதன் ஒளிர்மையான வெளிச்சம் அவனை முழுமையாக காட்டியது. கண்ணைப் பறிக்கும் வெளிச்சம். விரைவாய் திரும்பி வந்த இடத்திற்குச் சென்றான். பின்வந்தவர்களை மறைவெடுக்கச் சொன்னான். எல்லாம் ஒரு கணத்திற்குள் நடந்து முடிந்தது. தண்ணீருக்குள் வந்து கொண்டிருந்தவர்கள் அப்படியே அதற்குள்ளே அமிழ்ந்தார்கள். மரங்களிற்குள், பற்றைகளிற்குள், மண்திட்டுகளிற்குள் என்று அவசர அவசரமாக தங்களை மறைத்துக் கொண்டார்கள். அது படைய 'பாரவூர்தி'. அந்தவண்டி நிறைய எறிகணைகளை ஏற்றிச் செல்வது அந்த பெட்டிகள் மூலம் அறியமுடிந்தது. அதைக் கண்ட போது அவர்களிற்கு மெய்சிலிர்த்தது. எங்கோ ஓர் நடவடிக்கைக்கு படைத்துறை தன்னை தயார் செய்கின்றது என்று. மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள். சேணேவிகளின் அதிர்வு மிக கிட்டவாகவும் எத்தனை என்று அறியக்கூடியதாகவும் இருந்தது. அந்த ஊர்தியின் புகையும், அது கிளப்பிச் சென்ற காற்றும் அடங்கமுன் அணி வேகமாக கடந்தது. கண்டி வீதியைக் கடந்ததும் மனதில் நம்பிக்கை பளிச்சிட்டது. இனி எப்படியும் அந்த இலக்குகள் அழிக்கப்பட்டுவிடும் என்று தென்னந்தோப்புகள், பற்றைகாடுகள், வடலிகள் என்று ஒவ்வொரு இடத்தையும் வேகமாகக் கடந்து தளத்திலிருந்து சற்றுத் தொலைவிற்குள் தங்கிக்கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிரித்து, கதைத்து தங்களின் இறுதிநேர ஓய்வையும் உணவையும் பகிர்ந்து கொண்டார்கள். நித்திரை கொள்பவர்களை தட்டியெழுப்பி "ஏன் இப்ப அவசரப்படுறியள், இனி ஒரேயடியா தூங்கலாம் தானே" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் சுதாஜினி. வழமையான அவளது குறும்புப் பார்வை சிரிப்பு எல்லாமே அப்பொழுதும் அப்படியே இருந்தன. முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்த்துப்போயிருந்தது. இயல்பாகவே அவளிற்கு முகம் கைகாலெல்லாம் வியர்த்துப்போய்தான் இருக்கும். எப்போதும் சிரிக்காமல் கதைத்து அவளிற்கு பழக்கம் இல்லை. இன்றும் சிரித்தபடியே. அவளின் உடற்தோற்றத்திற்கு ஏற்றதுபோல அவனிற்கு 'லோ' வழங்கப்பட்டிருந்தது. அது அவளின் மடியில் அவளைப்போலவே அடுத்தகட்ட பூகம்பத்தை நினைத்தபடி மெளமாய்க் கிடந்தது. ஒவ்வொரு உணவுப் பொதிகளையுமே எடுத்து உண்டபடி தங்களிற்குள் பேசிக்கொண்டிருத்தார்கள். "எப்படி வெளிநாட்டுச் சாப்பாடு, கதிர மேசைதான் இல்லை. பத்தையெண்டாலும் சந்தோசமான சாப்பாடு" சொல்லி முடித்து மூச்சு விட்டான் தனுசன். அவர்கள் ஓய்வை முடித்த அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள். தலைகோதிவிட்டு, கசங்கிய உடுப்பை சரிசெய்து, வியர்த்து உருமாறிய முகங்களை துடைத்து ஏதோ கொண்டாட்டத்திற்குப் போவதுபோல அவர்கள் தயாரானார்கள். இலக்கை அண்மிக்க, அண்மிக்க அணிக்கு உணர்வின் வேகம் அதிகமானது. சண்டைக்கான தயார் நிலையில் அவர்கள் நகர்ந்தார்கள். கொண்டுபோன தண்ணீர்க் 'கான்'கள் அவர்களைப் பேலவே தண்ணிருக்காய் தவித்தது. ஒரு மோட்டை! அந்த பரப்பின் ஓர் மூலையில் கொஞ்சம் தண்ணீர்! அது எப்படி என்னமாதிரியென்று தெரியாது. என்றாலும் அதைக் குடித்தார்கள். பனை மரங்களோடு ஒட்டி வளர்ந்திருக்கும் சிறுபற்றைகளும், மணற்பகுதியில்முளைத்த புற்களையும் கவசமாக்கி அங்குலம் அங்குலமாய் நகர்ந்தார்கள். அவர்களின் கண்களிற்குள் அத்த தளதத்தின் பேருருவம் தெரிந்தது. மண்ணணை இடையிடையே காவலரண், முட்கம்பித்தடை என்று அதன் வலத்தை உறுதி செய்யும் ஏற்பாடுகளும், அவர்கள் முன் விரிந்துகிடந்தது. எதிரி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து எட்டு தெறோச்சிகளை இயக்குவது தெரிந்தது. அது இயக்குவதற்காகவும் வேறுபக்கம் திருப்புவதற்காகவும் அவன் கொடுக்கும் கட்டளைகள் காது மடல்களில் அறைந்தன. அந்த எறிகணைகள் பெரும் ஓசையோடு பிளம்பை கிளப்பி வெடிக்கின்றபோது அதன் பிளம்பு அவர்களில் வியர்வையை உலர்த்துவதாய் முகத்தில் சுட்டது. அவை இன்னும்சில நொடிகளிற்குள் நொருங்கப் போகிறது என்று எண்ணியபோது ஒவ்வொருவரது பற்களும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன. பளை புகையிரத நிலைய கட்டடத்தின் கூரை இல்லாத தோற்றம் முகம் இழந்த ஒருவனைப் போலிருந்தது. அந்த இருளையும் ஊடுருவி அவன் அமைத்திருந்த தடைகளிற்கு வெடிமருந்துகளைப் பொருத்திவிட்டு அணிகளுக்கு தாக்குதலை ஆரம்பிக்கும் சமிக்கையை கொடுக்கவென நினைத்தபோது திறந்த காவலரண் ஒன்றிலிருந்து படைவீரன் ஒருவன் வெளியே வந்தான். அவன் கைககளில் சுடுகலன் இல்லை. ஒளிர்மையான் மின்சூழ் ஒன்றை வைத்து எல்லா இடமும் சுற்றியடித்தான். அவனின் பருத்த உருவமும் முரட்டுத்தனமான தோற்றமும் தெளிவான வானவிளிம்பில் தெரிந்தது. முன்னே சென்றவர்களின் முகத்திற்கு நேரே அவன் ஒளிபாச்சியபோது திடுக்குற்று "கவ்த" என்றான் தடுக்கத்துடன். கரும்புலி வீரர்கள் மனதிற்குள் சிரிப்போடும் கூடிய நிதானத்தோடும் நிலையாக நின்றார்கள். மறுமுறையும் தனது ஒளியை வேறுதிசை ஒன்றில் பாச்சியும் ஓசையோடு ''கவ்த'' என்றான். நிதானம் .... சிரிப்பு. மூன்றாம்முறை முகத்திற்கு நேரே ஒளிபாச்சி அதட்டலாகக் "கவ்த" என்றதுதான் தெரியும்; அந்த படைவீரன் அதிலேயே செத்துக்கிடந்தான். அணி மிக வேகமாக உள்நுழைந்தது. “ஓடுங்கோ. வேகமாக முன்னேறுங்கோ” என்ற ஓசையோடு எல்லோரும் மண்ணணை ஏறி உள்நுழைந்தார்கள். காவலரணில் இருந்து சூடுகள் வந்துகொண்டே இருந்தன. “நான் 'லோ' அடிக்கிறென் முன்னேறுங்கோ" என்று சுதாஜினி கத்தியது ஓசைகளுக்குள் அடக்கமாய் கேட்டது. அடுத்து என்ன நடந்தது என்று நிதானிப்பதற்குள் வெடியோசைகள்.... சுதாஜினி நின்ற இடமே தெரியவில்லை. உறுதியாக எதிரியின் குறி அவளாகத்தான் இருந்திருக்கும். சுதாஜினியின் வெடியதிர்வைப்போலவே ஒவ்வொருவரும் வேகமாக இலக்குகளை நெருங்கினார்கள். தெறோச்சிகள், அதற்கான எறிகணைக் களஞ்சியங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. நிலவு வருவதற்கு முன்னதாக வானம் வெளுத்திருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அந்த சேணேவிகளின் உருவங்கள் கருமையாகத் தெரிந்தன. மிகவேகமான தாக்குதலில் அந்த பெரியதளமும் அத்தனை தெறோச்சிகளும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தன. ஆயுதக் களஞ்சியங்கள் ஆங்காங்கே பெரும் ஓசையுடன் வெடித்து சின்னச்சின்ன எரிமலையாய் எரிந்துகொண்டிருந்தன. நிலைமைகள் வெளியில் அறிவிக்கப்பட்டது. உதவிக்குச் செல்லவென இருந்த அணி அங்கே குறித்த நேரத்திற்குள் போய்ச்சேருமா என்பதில் சந்தேகம் எழுந்தது. கரும்புலி வீரர்களிற்கு செம்பியன்பற்று கடலில் சண்டை நடக்கும் ஓசைகளை தெளிவாகக் கேட்க முடிந்தது. உதவியணி வந்து சேராது என்ற முடிவிற்கு வந்தாலும் இயன்றளவு அத்தனை தெறோச்சிகளையும் பாதுகாத்தனர். தனுசன் எல்லா தெறோச்சிகளுக்கும் ஓடி ஓடி வெடிமருந்துப் பொதிகளை கட்டி வெடிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துகொண்டிருந்தான். வேறு வேறு முகாங்களில் இருந்து அந்த தளத்தை இலக்குவைத்து எறிகணைகளை எதிரி ஏவிக் கொண்டிருந்தான். தனுசன் தன் பணிகளை நிறைவேற்றி முடித்தபோது தெறோச்சிக்கு கட்டிய 'சார்ச்' ஒன்று தவறுதலாக வெடித்தது. அதற்குப் பின் தனுசனின் தொடர்பு இல்லை. பொழுது வெழுக்கத் தொடங்கியது. அத்தனை தெறோச்சிகளையும் தகர்த்து விட்டு பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. தெறோச்சிகளையும் ஆயுதக் களஞ்சியங்களையும் தகர்த்துவிட்டு வெற்றியோடு பின்வாங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரது மனதிற்குள்ளும் அவர்களோடு வந்து பிரிந்துசென்ற மலா்விழியின் அணியும் உறுதியாக தனது இலக்குகளை அழித்திருக்கும் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. அறிய ஆவலாயும் இருந்தது. அவர்களோடு வந்தவர்களில் இரண்டு தோழர்கள் இல்லை. ஆனால் அவர்களின் இலக்கை வெற்றிகொண்டுவிட்டார்கள். தீர்மானித்தபடியே வந்த வழியிலே கண்டி வீதியில் நிலைகொண்ட எமது அணிகளோடு கைகுலுக்கியபோது சொன்னான் ஒரு கரும்புலி வீரன் "எத்தனைபேர் எத்தனை இரவுகளாய் தேடி அலைந்த ஆட்டிலறிகள்..... அத்தனை பேற்றை கனவையும் நிறைவேற்றிப் போட்டம்" சமரிற்கு அடித்தளமிட்டுவிட்ட நிறைவு அவர்களிடம் இருந்தது. அவர்கள் அறிய அவலாய் இருந்த மற்றைய மலர்விழியின் அணி தனக்குத் தரப்பட்ட நான்கு தெறோச்சிகள் கொண்ட இயக்கச்சித்தளத்தை அழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையே சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் கரும்புலி வீரர்களில் மலர்விழியும், ஆந்திராவும், சத்தியாவும் திரும்பவில்லை. மேஜர் தனுசன் ============X============ மேஜர் சுதாஜினி ********
- 34 replies
-
-
- 1
-
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் திட்டம் "ஆனையிறவின் மேனி தடவி போனது போனது பூங்காற்று! அதன் மேல் ஏறி ஓயாத அலையில் புலிகள் போயினர் அட நேற்று!" --> அலையின் வரிகள் இறுவெட்டின் 'ஆனையிறவின் மேனி தடவி' பாடலிலிருந்து குறிப்பு: இது விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலும் அவர்களின் நகர்வுப் பாதைகளையும் வைத்து என்னால் எழுதப்பெற்றதாகும். இதை வாசிப்பதன் மூலம் உங்களுக்கு குடாரப்புத் தரையிறக்கத்தின் திட்டம் பற்றிய ஒரு மேலோட்டமான கருத்துரு கிடைக்கும். சிறீலங்கா படைத்துறையால் வல்வளைக்கப்பட்டிருந்த ஆனையிறவில் இருந்த கூட்டுப் படைத்தளத்தினைக் கைப்பற்றி விடுவிப்பதற்காக குடாரப்பில் தரையிறங்கி அங்கிருந்து வெற்றிலைக்கேணி வரை வேகமான தரைத்தொடர்பினை ஏற்படுத்தும் அதே வேளை இந்திரபுரப்பகுதியில் இருந்த ஏ9 வீதியினை ஊடறுத்து, துண்டெடுத்து, ஆனையிறவிற்கான முக்கிய வழங்கல் பாதையினை துண்டித்து ஆனையிறவை விடுவிப்பதே திட்டமாகும். இப்படியான ஒரு தற்கொலைக்கு ஒப்பான அதியுச்ச திகைப்பூட்டும் திட்டத்தினை சிங்களப்படைகள் ஒருகாலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை புலிகள் நன்கறிந்திருந்தனர். ஆகையால்தான் இதனை துணிந்து தேர்ந்திருந்தனர். இதற்கமைவாக மேற்குறிப்பிட்ட படையணிகளில் இருந்து தேரப்பட்ட 1200 பேர் கொண்ட தரைப்புலி படைத்தொகுதி ஆயத்தப்படுத்தப்படுவர். இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து சுண்டிக்குளம் கடனீரேரிக்கு கொண்டுவரப்படுவர். அங்கிருந்து கட்டைப்படகுகள் மூலம் 3 கிமீ தாண்டியிருந்த, நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் சிறீலங்காப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட ஓரிடத்திற்கு ஏற்றிப்பறிக்கப்படுவர். அங்கிருந்து சிலர் நடந்தும் சிலர் உழுபொறிகள் மூலமும் 10கிமீ பயணித்து கட்டைக்காட்டினை அடைவர். அங்குவைத்து இவர்களுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளுக்கும் புலற்றப்படும். தேவையான மேலதிக பொருட்கள் - மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுகள், இனிப்புகள், அன்றைய மதிய உணவு - வழங்கப்படும். அங்கிருக்கும் புலிவீரர்களின் அணித்தலைவர்கள் முன்னரே கடற்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு படகேறும் பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இவர்கள் உழுபொறிகள் மூலம் வெற்றிலைகேணி கோவிலடி கடற்கரைக்கு ஏற்றிப்பறிக்கப்படுவர். அங்கிருந்து ஏற்கனவே அணியமாகவுள்ள தரையிறக்கப் படகுகளாக மாற்றப்பட்டிருந்த உப்பயான விதம் மற்றும் புளூசுரார் விதம் ஆகிய கட்டைப்படகுகளில் கடற்புலிகளால் ஏற்றப்பட்டு தாழையடி தானைவைப்பு மீதிருந்து வரும் தாக்குதல்களையும் கடலில் டோறாக்களின் தாக்குதல்களையும் சமாளித்தவாறு கரையோர காவலரண்களை மேவிக்கடந்து, 13 கிமீ பயணித்து, குடாரப்பு கடற்கரையில் கனவகை படைக்கலன்களுடன் தரையிறக்கப்படுவர், சாள்ஸ் சிறப்பு கடற்தாக்குதல் அணியினரால். கடல்வழி நகர்வின்போது கடற்சமர் மூண்டு படகுகளுக்கு நேர்ச்சிகள் ஏற்பட்டு மூழ்கும் சமயத்தில் படகினில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு நீச்சல் தெரியாதலால் அவர்கள் இலகுவாக நீந்திக் கரைசேர்வதற்கு ஏற்றவாறு கடற்புலிகள் படகுகளை கரையினை அண்டியவாறே ஓட்டிச்செல்லுதல் வேண்டும். தரையிறக்கமானது சூரிய உதயத்திற்கு முன்னர் நடந்தேறியிருக்க வேண்டும். இல்லையேல் பகல் பொழுதில் சிங்கள வான்படையின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்; இதனால் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முக்கியமாக கருத்திலெடுக்கப்பட்டிருந்தது. தரையிறங்குவோர் செல்லும் படகுகளில் எந்தவொரு எதிர்தாக்குதல் செய்யும் வசதிகளும் இல்லாமையால் இவர்களுக்கு சேமமாக கடற்புலிகளின் 7 சண்டைப்படகுகளும் செல்லும். கடற்புலிகளுக்கு எவ்வளவுதான் இழப்புகள், உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் தரையிறக்கப்படுவோருக்கு சிறு கீறலும் இல்லாமல் இறக்கப்பட வேண்டும். அதுவே தேசியத் தலைவரின் ஆணையாகவும் இருந்தது. இவற்றிற்கிடையில் மற்றுமொரு அதிரடித் தாக்குதலும் நடந்தேறும். பளைப்பகுதியில் சிங்களப் படைகள் அமைத்திருந்த சேணேவித்தளமான 'ஆட்டிவத்த' (தமிழில்: சேணேவிவத்தை) மீது 11 பேர்(5 ஆண்கள் 6 பெண்கள்) கொண்ட கரும்புலி அணி மூன்று குழுக்களாகப் பிரிந்து மின்னல்வேகத் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டும். இதற்காக அவர்கள் முன்னொரு நாளில் கடல்வழியாக உப்பயானங்கள் மூலம் உட்கொண்டுசெல்லப்பட்டு பின்னர் தரைவழியாக ஊடுருவி நகர்ந்து பதுங்கியிருப்பர். கைப்பற்றிய பின்னர் தெறோச்சிகளை பின்னகர்த்த புலிகளின் தாக்குதலணியொன்று உதவிக்கு அனுப்பப்படும். அது வர ஏலாமல் போக்கும் சமயத்தில் அங்கிருக்கும் தெறோச்சிகளை வெடிபொதிகள் மற்றும் கான் சார்ச்சுகள் கொண்டு அழிப்பதன் மூலமும் தளத்தினுள் இருந்த எறிகணைகளை வெடிவைத்து தகர்ப்பதன் மூலமும் சேணேவித்தளத்தினை பல மணிநேரத்திற்கு மீளப் பயன்படுத்த முடியாத நிலைக்கு செயலிழக்கச் செய்வர். இதனால் தரையிறங்கப் போகும் அணிகளுக்கு உடனடி சேணேவித் தாக்குதல் ஏதும் நிகழாமல் அவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவர். பின்னர் கரும்புலி அணியினர் பாதுகாப்பாக தளந்திரும்புவர். பேரணி தரையிறக்கப்படுவதற்கு முன்னர், தலையணியாகிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓரணியானது 7 படகுகளில் முன்சென்று தரையிறங்கி, வேகமான மெள்ளத்தில் சதுப்பு நிலத்தைப் பூகோள அமைவிடமாகக் கொண்ட கடனீரேரி வழியாக அவ்ளவு தொலைவையும் இரவின் துணையுடன் நடந்து கடந்து, இத்தாவில் பகுதியில் சச்சரவில்லாமல் கமுக்கமாக நிலைகொள்ள வேண்டும். நிலைகொள்வோர் ஈரணியாகி, தென்மராட்சியில் புதுக்காட்டுச் சந்திக்கும் பளைக்கும் நடுவே இருந்த பகுதியில், தொண்டைமானாறு நீரேரிக் கரைப்பக்கம் 2கிமீ அகலத்தையும், யாழ் நெடுஞ்சாலைப் பக்கம் 800மீ அகலத்தையும், மொத்தமாக 4கிமீ நீளத்தையும் கொண்டு தொண்டைமானாறு நீரேரிக்கு முதுகையும் கிளாலி கடலிற்கு முகத்தையும் காட்டியபடி 'நாக்கு' வடிவில் இத்தாவில்-இந்திரபுரத்தில் இருந்த ஏ9 வீதியில் நிலையெடுக்க வேண்டும். நிலையெடுப்போரில் ஓரணி பளையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் மற்றைய அணி முகமாலையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களமைத்து நிலைகொள்ள வேண்டும். இந்த கமுக்கமான தொடக்க நகர்வின் வெற்றியில்தான் ஏனைய நகர்வுகள் தங்கியிருந்தன. தலையணி நிலைகொள்ளும்போது பேரரையர் பால்ராச்சும் ஏனையோரும் தரையிறக்கப்-படுவர்;பட்டிருப்பர். தரையிறங்கியோரில் கேணல் பால்ராஜ் தலைமையிலான 4 கொம்பனி(Company) முழுதாக வெயில் வருவதற்குள் 2 கிமீ தரைவழியாகவும், பின்னர் 2 கிமீ விரக்களி ஆற்றினூடாகவும் (இத்தாவில் இந்திரபுரம் நோக்கி புலிவீரர்கள் வீறுநடை போடத் தொடங்கிய இடத்தின் ஆட்கூற்று = 9.647583067959973, 80.35144293793446. இந்த மாமுனை பாலமிருக்கும் இடத்திற்குள்ளால் தான்) பேந்து கண்டல் பற்றைகள், சதுப்பு நிலங்களைக் கடந்து இத்தாவில் அடைந்து அங்ஙுள்ள அணியோடு கைகோர்க்க வேண்டும். இவர்களுக்கு முன்னரே தரையிறங்கும் மேஜர் மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலிகள் அணியானது இயக்கச்சி, கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் உள்ள சேணேவித் தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இன்னபிற பணிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஏனையோர் இறங்கியவுடன் அருகில் இருக்கும் மாமுனையில் உள்ள தானைவைப்பினை அழிக்க வேண்டும். பின்னர் அங்கு ஒரு கட்டளைப்பீடம் அமைக்க வேண்டும். சம நேரத்தில் நாகர்கோவில் படைத்தளத்தை பார்த்தவாறு நாகர்கோவில் தெற்கின் வடதிசையில் ஓரணியும், முகமாலை-கிளாலியினை பார்த்தவாறு மற்றொரு ஓரணியும், இத்தாவில் பெட்டிக்குச் செல்லும் எஞ்சிய வழி மூடிடாதபடி பளையை பார்த்தவாறு பிறிதொரு அணியும் உள்தடுப்பு அரண்கள் அமைத்து நிலைகொள்ள வேண்டும். ஏனைய அணிகள் செம்பியன்பற்றினைக் கைப்பற்றி தாழையடியினை வசமாக்கிடும் பணியில் ஈடுபட வேண்டும். அதேநேரம் ஊடறுக்கப்பட்ட கண்டி வீதிக்குச் செல்வோர் சிங்களம் ஏற்படுத்தும் மாற்று வழங்கல் பதையான கறுக்காய்தீவு - புலோப்பளை உள்ளடங்கிய ஒடுங்கிய கிளாலி-கச்சாய்-சாவகச்சேரி வீதி மீதும் எறிகணைத் தாக்குதல் செய்ய வேண்டும். தாழையடி என்பது மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும். ஏனெனில் இவ்வாறு தரையிறக்கப்பட்டோரை மீள எடுப்பது ஏலாத காரியமாகும். அதனால் அவர்கள் தரைவழியாகவே வந்து சேரவேண்டும் என்பதும் மிக முக்கியமாக இருந்தது. அதற்கு தடையாக இருந்த தாழையடி தளத்தினைக் கைப்பற்றி வன்னியோடான தரைவழிப்பதை திறத்தலே ஒரே தீர்வாகும். தரையிறக்கப்படுவோருக்கு தரைவழி வழங்கல் ஏதுமற்ற நிலையில் முழு வழங்கலும் கடல் வழியாகவே நடைபெபெறும். கடல் வழங்கல்கள் பாரிய கடற்சமர்களுக்கும் வான் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்துதான் வந்து சேர வேண்டும். ஆனாலும் தடங்கலின்றி நடைபெறவேண்டும். தொடர் கடல்வழி வழங்கல் சீராக இருக்கப்போவதில்லை என்பதால் தரையிறங்கியோர் தரைவழி வழங்கல் பாதை ஒன்றினை இயன்றளவு கெதியாக ஏற்படுத்த வேண்டும். தரைவழி பாதையினை திறப்பதற்காக கேணல் தீபன் தலைமையிலான மற்றொரு படைத்தொகுதியில் சூட்டி தரைத்தாக்குதல் அணி, சுகன்யா தரைத்தாக்குதல் அணி, ஜெயந்தன் படையணியின் ஒரு பிரிவு, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி உட்பட்ட இம்ரான்-பாண்டியன் படையணியின் சில பிரிவுகள், சிறப்புப்படை ஆகியவற்றுடன் ராதா விமான எதிர்ப்பு அணியும் உதவிக்கு புலனாய்வுத்துறை தாக்குதலணியும் இணைந்து கட்டைக்காட்டில் இருந்து முன்னேறி உடுத்துறை, ஆழியவளை ஆகியவற்றைக் கடந்து தெற்குப் பகுதியில் இருந்து தாழையடியை இரவு நேரத்தில் தாக்கி நெருக்க வேண்டும். இவர்களுக்கு உதவியாக கடலில் இருந்து கரையோரக் காவலரண்கள் மீது கடற்புலிகள் தாக்கவேண்டும். சமநேரத்தில் வடகில் இருந்து தரையிறங்கிய அணிகள் தாழையடியினை தாக்கி நெருக்க வேண்டும். அதே சமயம் சிறப்புப்படையினர் பல குழுக்களாக படைத்தளத்தினுள் ஊடுருவி முக்கிய தாக்குதல்கள் நிகழ்த்த தாழையடி தமிழர் வசமாகும். பேந்து, மருதங்கேணிச் சந்தியில் இருக்கும் சிங்களப் படைத்தளத்தினையும் வீழ்த்திட வேண்டும். அதன் பின்னரே குடாரப்பில் தரையிறங்கியோருக்கான தொல்லையில்லா தரைவழிப் பாதை உடுத்துறை வழியாக திறக்கும். அதன் பின்னர் வடமராட்சி கிழக்கில் சமராடிய போராளிகள் ஏனைய சமர்க்களங்கள் நோக்கி நகர வேண்டும். இதுவே தரையிறக்கத்தோடான தாக்குதல் திட்டம் ஆகும். இவ்வாறாக 2ம் உலகப்போரில் நோர்மண்டியில் நேசநாட்டுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கமானது எவ்வாறு போரின் போக்கில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி ஒரு முழு படைத்துறை வெற்றியினை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்ததோ அதுபோலவே இதுவும் இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர். அவர்கள் நம்பினது போலவே படைவலுச் சமநிலை மாறி மாபெரும் வெற்றியினை ஈட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது உலகின் பெரும் வல்லரசுகளின் பார்வையையும் தமிழர் பக்கம் திருப்பியது என்பது மறுக்கவியலா உண்மைகளாகும். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் ------------------------------------------------------------------ வத்திராயன் பொக்ஸ் - வத்திராயனில் உள்ள ஒரு சமரணியின் தலைமையகத்தையும் முள்ளியானில் உள்ள படைத்தொகுதி தலைமையகத்தையும் உள்ளடக்கிய தானைவைப்பிற்கு சிறீலங்கா படைத்துறை அதிகாரிகள் 'வத்திராயன் பொக்சு' என்று பெயரிட்டனர். முள்ளியான் மற்றும் வண்ணான்குளம் கரையோரச் சிற்றூர்களுக்கு இடையில் நீண்டு செல்லும் இச் செவ்வகப் பரப்பானது 3 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் கொண்டது ஆகும். ******
- 34 replies
-
-
- 1
-
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் பொழிப்பு மூலம்: சமராய்வுப் பிரிவு, தமிழீழம் (ஆண்டு அறியில்லை) முதன்முதலில் எழுத்துருவில் வெளியிடப்பட்டது: 2000 ஆம் ஆண்டு. தமிழ்செய்திக்கதிர்.blogspot.com தனித்தமிழில்: 26/10/2021 கரு: குடாரப்புத் தரையிறக்கத்தின் பொழிப்பு பார்வை மற்றும் ஆனையிறவுச்சமரின் மேலோட்டப் பார்வை. ஆனையிறவு கூட்டுப் படைத்தளத் தாக்குதல் சிறீலங்கா படைத்துறையினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான சிறீலங்கா படைத்துறையினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாழையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்கு தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர். ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய படைத்துறைத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது. அறைகூவல்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கரந்தடிப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகவலுவான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வழங்கல் பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம். தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படைத்தொகுதி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி அனைத்து வழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் வலுவோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் தகரிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மிக இடரான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகுத்தொகுதி ஆழக்கடல் சென்று இரண்டு மணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடுஞ்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறா அதிவேக சுற்றுக்காவல் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் சமராடின. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த சேணேவித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு தெறோச்சிகளை செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைக் கட்டளையாளர்களாக சோதியா படையணிக் கட்டளையாளர் துர்க்கா, மாலதி படையணிக் கட்டளையாளர் விதுசா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளையாளர் (பின்னர் பிறிதொரு நேரத்தில் வீரச்சாவடைந்த) லெப். கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர். புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வழங்கலைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான சமர் கட்டளையாளர்கள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான். வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்பு வரை அரச படையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வழங்கல் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வழங்கலை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாழையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வழங்கலை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாழையடி உட்பட்ட மிகவலுவான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள். அதுவரை சரியான வழங்கலை, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவூர்திகள், சேணேவிகள், படையணிகள் என்று அனைத்தையும் பயன்படுத்தினான். மிகமிக முரட்டாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல ஊர்திகள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான சேணேவிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவூர்திகள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர். தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய தெறோச்சிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத கெதியில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர். முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடியோசையாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான். சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து படைத்துறை மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர். =================================================== கரு: கரும்புலிகளால் பளையில் 11 தெறோச்சிகள் அழிக்கப்பட்டமை. 26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் கமுக்கமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய சேணேவித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை சேணேவித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள். குறிப்பிட்ட சேணேவித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. சேணேவித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தொலைவில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. சேணேவித்தளத்தை காத்து நின்ற நூற்றுக்கணக்கான தரைப்படையினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டமெடுத்துவிட்டனர். சேணேவித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து. சேணேவிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு தெறோச்சிகள் இருந்தன. ஓடிய எதிரி வலுவைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி தெறோச்சிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு தெறோச்சிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். தெறோச்சிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அச்சேணேவித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் கமுக்கமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். பளை சேணேவித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அமையம் தேவைப்பட்டது. ******
- 34 replies
-
-
- 1
-
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
Oyatha1102_04.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Oyatha1102_02.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Oyatha1102_01.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte craft with Unusual helmsman room.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
374064_180653038722681_924756236_n.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images
கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப் கேணல் இரும்பொறை
- 272 replies
-
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
-
Tagged with:
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
- eelam navy
- eelam sea force
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam images
- ltte
- ltte images
- ltte maritime wing
- ltte naval wing
- ltte navy
- ltte navy images
- ltte photos
- ltte pictures
- ltte sea armed wing
- ltte sea tigers
- ltte tami lnavy
- naval guerillas
- sea guerillas
- sea tigers
- sea tigers images
- sea tigers of liberation tigers of tamil eelam
- seatigers
- sri laka navy
- sri lanka navy
- sri lankan naval guerillas
- sri lankan navy
- sri lankan rebel navy
- sri lankan rebels
- sri lankan tamil navy
- srilanka navy
- srilankan rebel navy
- tamil ancient navy
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam navy
- tamil forces
- tamil guerillas
- tamil navy
- tamil tiger navy
- tamil tigers
- tamil tigers anvy
- tamil tigers navy
- tamils navy
- tiger navy
- tmail guirellas
- இலங்கைக் கடற்படை
- ஈழ கடற்படை
- ஈழத் தமிழர் கடற்படை
- ஈழத்தமிழர் கடற்படை
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலிகள்
- கடல் புலிகள்
- சிறீலங்கா கடற்படை
- சிறீலங்காக் கடற்படை
- சிலோன் கடற்படை
- சூசை
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ கடற்படை
- தமிழீழக் கடற்படை
- தமிழ் கடற்படை
- புலிகளின் கடற்படை
- விடுதலைப் புலிகளின் கடற்படை
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
வரைபடம் ஓயாத அலைகள்-3 கட்டம்-4 இன் குடாரப்புத் தரையிறக்கத்தினை காட்டும் நிலவரைபடம் 'படிமப்புரவு: வடமராட்சி தெற்கு வரைபடத்தில் நான் கீறியது. | வெற்றிலைக்கேணி பிள்ளையார் கோவிலடியில் (ஆட்கூற்று = 9.575479037946748, 80.47090101205154) இருந்து புறப்பட்டு குடாரப்பில் (தரையிறக்கம் நடந்த முதன்மை இடத்தின் ஆட்கூற்று = 9.673495324572965, 80.35211666953167) கடற்புலிகள் தரையிறக்கிய 11 மைல் கடல்வழியை வரைபடம் காட்டுகிறது. அடிவேண்டி மூழ்கினாலும் வேளைக்கு நீந்தி கரையைத் தொடுவதற்காக தரையிறக்க கலங்கள் கடற்கரையை அண்டியதாகவே நகர்ந்தன.' தெற்காசியாவின் புத்தியல் காலத்தின்(Modern time) முதலாவது தரையிறக்கமான குடாரப்புத் தரையிறக்கமும் அதனோடான ஆனையிறவு மீட்புச் சமரும் (ஓயாத அலைகள்-3 கட்டம்-3 & 4) 'படிமப்புரவு: 'விடுதலைப்புலிகள்' இதழ் | தென்மராட்சியில் கடற்கரை ஓரமாக உள்ள தடித்த கோடு சிங்களவரின் மாற்றுவழி வழங்கல் பாதையாகும். ' ******
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
Medics Dental Dr. Sudharsan.jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
வானிலை வெப்பநிலை: துல்லியமான வானிலை கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் வேருமாகி விழுதுமாகி புத்தகத்தில் இருக்கின்ற குறிப்புகளின் அடிப்படையிலும் ஆனையிறவுச்சமர் நிகழ்படத்தின் அடிப்படையிலும் பார்க்கும்போது வானிலை வழக்கமான சூரிய வெப்பத்தோடுதான் இருந்துள்ளது. அதேபோல் தரையிறக்கம் நிகழ்ந்து 21 ஆண்டுகள் கழித்து அவ்விடத்தில் உள்ள வெப்பநிலையும் 28 - 31 தான். எனவே இதுதான் அக்காலத்திலுமாக இருந்திருக்கக்கூடும். சிலவேளை தசம் அளவில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. நீரோட்டம்: கடல் நீரோட்டமானது இவர்கள் தரையிறங்கத் தீர்மானித்திருந்த நாளிற்கு முன்னதான, 'இரண்டொரு' நாட்களாக, வழமையைவிட வேறுபாடாக இருந்ததை வேருமாகி விழுதுமாகி என்ற புத்தகத்தில் கேணல் சூசை அவர்களின் அறிவுரை மூலம் நாம் அறியக்கூடியவாக உள்ளது. "கடல் இரண்டொரு நாட்களாய் வழமையைவிட வித்தியாசமாய் இருக்கு. எண்டாலும் உங்களைத் தரையிறக்கிற பணி தடங்கலின்றி முடியும்" --> வேருமாகி விழுதுமாகி, பக்- 352 ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 'வழமையை விட வேறுபாடான' என்ற சொற்றொடரின் பொருள் பிடிபடவில்லை! அற்றை நாளில் மிகு அலைகள் எழுந்திருக்கக் கூடும் என்பது என் துணிபு. ******
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
காலக்கோடு 1/3/2000 - கொடியேற்றப்பட்டு படையணிகளுக்கான பயிற்சிகள் மாதிரி தளத்தில் தொடங்கப்படுகின்றன. அதிகாரிகளானோர் 'அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி'க்கு மேலதிக பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர். ⏬ (பயிற்சிகள் முடிவுற்றன) 24/3/2000 பகல் - கரும்புலிகள் தங்கள் ஆயுதங்களுக்கு நீர்க்காப்பிட்டு வெடிபொருட்களை சரிபார்த்து தம்மை தயார்ப்படுத்துக்கொண்டிருக்கின்றனர். ⏬ 24/3/2000 மாலை - 15இற்கும் மேற்பட்ட கரும்புலிகளை ஏற்றிய இரு உப்பயானங்கள் வெற்றிலைக்கேணிக் கடற்கரையிலிருந்து கடலில் இறக்கப்பட்டு குடாரப்பு நோக்கிய தம் பயணத்தை ஆரம்பித்தன. இவ்வணிக்கு தரைக்கரும்புலி மேஜர் மறைச்செல்வன் தலைமை தாங்கினார். ⏬ 24/3/2000 இரவு - குடாரப்புப் பகுதியில் கரும்புலிகள் தரையிறக்கப்பட்டு இலக்கு நோக்கி நகர்கின்றனர். ⏬ 25/3/2000 காலை - போராளிகள் பேருந்துகள் மற்றும் உழுபொறிகள் மூலம் சுண்டிக்குளம் நீரேரிக்கு அருகில் ஏற்றிப்பறிக்கப்படுகின்றனர். அற்றைநாளே அனைவரும் அந்த 3 கிமீ நீள நீரேரியினைக் கடக்கின்றனர். ⏬ 25/3/2000 இரவு - கடந்தவர்கள் 10கிமீ பயணித்து கட்டைக்காட்டினை அடைகின்றனர். ⏬ 25/3/2000 யாமம் - எதிரியின் காவல்வேலிக்குப் பின்னால் நகர்ந்த கரும்புலிகள் அகிலன்வெட்டையை வந்தடைகின்றனர். ⏬ 26/3/2000 காலை - அனைவரும் ஒரு பரந்தவெளியில் ஒன்று கூடினர். போராளிகள் வரிசையாய் அணிவகுத்து நிற்கின்றனர்; தரையிறக்கத் தாக்குதல் தொடர்பான அறிவுரைகள் கட்டளையாளர்களால் வழங்கப்படுகின்றன. ⏬ 26/3/2000 நண்பகல் - பின்னர் நடவடிக்கைக்கான உலர் உணவுகள் (அதிக கலோரிகள் கொண்ட சொக்லெட்டுகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு போராளிகளுக்கு பக்குகளில் (pocket) எடுத்துச்செல்ல வழங்கப்பட்டது) மற்றும் மேலதிகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மதிய உணவு வழங்கப்படுகின்றது; கூச்சலும் கும்மாளமுமாக இருக்கின்றது அவ்விடம். ⏬ 26/3/2000 பிற்பகல் - படகேறும் பயிற்சிக்கு அணித்தலைவர்கள் செல்கின்றனர்; போராளிகள் தத்தமது பொருட்களை சரி பார்த்துவிட்டு வந்து நின்ற உழுபொறிகளில் ஏறி வெற்றிலைக்கேணி கோவிலடி கடற்கரையினை வந்தடைகின்றனர். ⏬ 26/3/2000 மாலை - கேணல் சூசை தரையிறங்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார். தெற்கில் இருந்து வடக்காக வானூர்தி ஒன்று பறந்துபோனது. சிறிது நேரத்தில் வழமையான எறிகணைகள் அவ்விடத்தில் வீழ்கின்றன. போராளிகள் உடைந்த சிங்களத்தின் காப்பரண்களுக்குள் காப்பெடுக்கின்றனர். தரையிறக்க அணிகளை படகேற்றி அனுப்பும் பணியிற்கு லெப். கேணல் மங்களேஸ் பொறுப்பாகச் செயற்படுகிறார். உதவிக்கு லெப். கேணல் பாக்கி செயற்படுகிறார். ⏬ 26/3/2000 இரவு 6:40ற்கு முன் - முதலில், இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் கடலேறின. இவற்றைத் தொடர்ந்து கடற்புலிகளின் சேமத்திற்கான (escort) சண்டைப்படகுகள் கடலேறின. ⏬ 26/3/2000 இரவு 6:40 - குறித்த நேரத்தில் தரையிறக்க அணிகளைக் கொண்ட தரையிறக்கக் கலத்தொகுதிகள் புறப்படுகின்றன. நீரின் போக்கைத்தவிர இவர்களுக்கு வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. ⏬ 26/3/2000 இரவு - தாழையடி கதுவீ தளத்தில் இருந்த சிங்களப் படையினருக்கு ஐயமேற்பட்டதால் சிங்கள டோறா சுற்றுக்காவல் படகுகள் உலாவத் தொடங்க கடற்புலிகளின் படகுகள் வழிமறிக்க விரைகின்றன. தரையிறக்க கலங்களின் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. ⏬ ( முதலாவது கணத்தின் தரையிறக்கம் நிகழ்கிறது. லெப். கேணல் நேசன் தலைமையிலான ஏழு படகுகளில் சென்ற சாள்ஸ் அன்ரனியின் இரு அணிகள் குடாரப்பில் கால்பதிக்கின்றனர். கண்டிவீதியை பிளந்ததுவாக நிலை கொள்வதற்காக இத்தாவில்-இந்திரபுரம் நோக்கி கமுக்கமாக நகர்கின்றனர்.) 26/3/2000 இரவு 8:30 - முட்டுப்பட்டு கடற்சமர் வெடிக்கின்றது. 6 டோறாக்கள் கடலில் நிற்கின்றன. தரையிறக்க கலன்களை அண்மித்த டோறாக்களை போக்குக்காட்டி வேறிடத்திற்கு வலிந்திழுத்துச் செல்கின்றனர், கடற்புலிகள். ⏬ 26/3/2000 இரவு 8:45 - முதற் கலத்தொகுதி தரையிறங்கியது, கட்டளையாளர் கேணல் பால்ராச்சுடன். (16 மைல் கடற்பயண ஏற்றிப்பறித்தல் தொடர்கின்றது) ⏬ 26/3/2000 இரவு 9:30 - 10:00 - குடாரப்பு-மாமுனை கடற்கரைகளை இலக்குவைத்து டோறாக்கள் தரை நோக்கிய தாக்குதலைத் தொடங்குகின்றன. எம்மவருக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சமநேரத்தில் எறிகணைகளும் வீழத்தொடங்குகின்றன. ⏬ 26/3/2000 நடுச்சாமம் 11:32- இவற்றிற்கிடையில் பளை 'ஆட்டிவத்த' சேணேவித் தளமானது 11 பேர் கொண்ட தரைக் கரும்புலிகளால் செயலிழக்க செய்யப்படுகின்றது. அங்கிருந்த 11 தெறோச்சிகளும் அழிக்கப்பட்டதோடு ஒட்டுமொத்த சேணேவித் தளமும் அதிகாலைவரை செயலிழக்க செய்யப்படுகின்றது. இதில் 2 கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர்; கடலில் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 2 சேதமடைந்து கட்டியிழுத்துச் செல்லப்படுகின்றன. ⏬ 26/3/2000 நடுச்சாமம் 11:30 - ஏ9 வீதியின் இத்தாவில்-இந்திரபுரப் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது ⏬ 26/3/2000 நடுச்சாமம் 11:00 - 12:00 - திரும்பிச் சென்றுகொண்டிருந்த கட்டளையாளர் விதுசா பயணித்த படகு அடி வேண்டி ஏற்கனவே சேதமடைந்திருந்ததால் எரிந்து மூழ்குகிறது. ⏬ 27/3/2000 அதிகாலை 3:00 - டோறாக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்கிறது. சமநேரத்தில் தரையில் இருந்து 5 தகரிகள் கடலை நோக்கி சுட்டுக்கொண்டிருக்கின்றன. ⏬ 27/3/2000 காலை 7:00-7:30 - போராளிகள் வந்தது தெரியாமல் மக்கள் நடமாட்டத்தை தொடங்குகின்றனர். இவர்களை கண்ட சிலர் தத்தமது வீடுகளுக்கு அருகில் நின்றவர்களுக்கு தேநீர் முதலிய சிற்றுணாக்கள் வழங்குகின்றனர். மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு போராளிகள் பணிக்கின்றனர். மாமுனைத்தளம் கைப்பற்றப்படுகிறது, மாலதி படையணியால். ⏬ (மேற்கொண்டு சமர் நடக்கிறது. சிங்களப் படைகளின் கடல்-தரை தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இரு தரப்பினது எறிகணை வீச்சும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. சமநேரத்தில் கடல் வழியான வழங்கல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.) ⏬ 27/3/2000 காலை 6:00-9:00 - கடும் கடற்சமரால் ஆளணிகளை ஏற்றிய தரையிறக்கக் கலங்கள் மிகவும் மெள்ளமாக கடலிலே நகர்கின்றன. ⏬ 27/3/2000 காலை 10:00 அளவில் - தரையிறக்கம் முடிவிற்கு வருகிறது. முழு ஆளணியும் தரையிறக்கப்பட்டுவிடுகின்றன. முதற் தரையிறக்கத்தின் போது கடலில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரில் வீரச்சாவடைந்த 14 போராளிகளின் வித்துடல்களும் தலைவரின் அறிவுறுத்தலின்படி குடாரப்பிலேயே விதைக்கப்படுகின்றன. ⏬ 27/3/2000 நண்பகல் - பின்னுதைப்பற்ற சுடுகலன்களும் வெடிபொருட்களும் கணைகளும் வந்துசேர்கின்றன; கடல் வழங்கலணி கட்டளையாளர் மேஜர் எழிற்கண்ணன் காயமடைகின்றார். படகு தரைதட்ட கள மருத்துவயிடம் நோக்கி கொண்டுசெல்லப்படுகின்றார். ⏬ 27/3/2000 மாலை - தரையிறங்கியோர் தாழையடித் தாக்குதலுக்கான வேவுகளில் ஈடுபடுகின்றனர். தெற்கிலிருந்து (வெற்றிலைக்கேணிப் பக்கத்தால்) தாழையடி நோக்கி கடற்புலிகளின் சூட்டி தரைத்தாக்குதல் அணி உள்ளடங்கிய கேணல் தீபனின் படைத்தொகுதி முன்னேறிக்கொண்டிருக்கின்றது. அவர்களை வழிமறித்து சிங்களவரின் 5/6 தகரிகள் தீரமுடன் சமராடுகின்றன. அவை உதவிக்கு வந்த கடற்புலி படகுகளையும் விரட்டியடிக்கின்றன. இதனால் புலிகள் 500-600 மீ கைப்பற்றிய நிலப்பகுதியை விட்டு பின்வாங்குகின்றனர். (இவற்றிற்கிடையில் கடற்புலிகளின் மற்றொரு படகும் சேதமடைந்து கட்டியிழுத்துச் செல்லப்படுகின்றது. ஏனைய நான்கு படகுகள் மட்டும் தொடர்ந்து சமராடுகின்றன, தளம் திரும்பாமல்!) ⏬ 28/3/2000 அதிகாலை 2:30 - புலிகள், தாழையடி நோக்கி தெற்கில் இருந்து அதிவிரைவாக மீண்டொருமுறை உடைத்துக்கொண்டு முன்னேறுகின்றனர். ⏬ 28/3/2000 காலை - தாழையடித் தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்படுகிறது; அன்றைய உணவும் கடல்வழியாக வந்து சேர்கின்றது. பெரும் சிரமத்திற்கு நடுவிலும் கடல்வழியான வழங்கல் நடைபெறுகிறது; தரையிறங்கியோரால் ஏற்கனவே ஏ9 வீதி இந்திரபுரத்தில் ஊடறுக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இத்தாவில் பெட்டிச் சமர் நடந்துகொண்டிருக்கிறது. (கணைகள் மற்றும் கனவகை படைக்கலன்கள் கொணர்தல், காயமடைந்த போராளிகளை வன்னித் தளத்திற்கு அனுப்புதல், வித்துடல்கள் காவுதல் மற்றும் உணவு கொணர்தல் என ஓயாமல் சுழல்கின்றனர் கடற்புலிகள்) ⏬ 28/3/2000 நண்பகல் - தரையிறங்கியோரே சமைக்கத் தொடங்குகின்றனர். சமையலில் அவ்வூர் பொதுமக்களின் உதவியையும் நாடிப் பெற்றுக்கொள்கின்றனர். மக்களில் சிலர் நேரடியாக உதவுகின்றனர்; இத்தாவில் பெட்டி களமுனைக்கு மட்டும் உணவு சென்றடைவதில் சிக்கல் தொடர்கிறது. ⏬ 28/3/2000 பிற்பகல் 4:00 - கடற்புலிகளின் கடல் நடவடிக்கைகள் ஓய்விற்கு வருகின்றன. ⏬ 28/3/2000 சாமம் 11:00 -12:00 - தாழையடி தளம் மீதான கடும் தாக்குதல் தொடங்குகிறது. ⏬ 29/3/2000 - சமையல் நடந்து கொண்டிருந்த இடம் மீது வான்குண்டுவீச்சு நடக்கின்றது. உயிர்சேதமின்றி சமையல்காரப் பொதுமக்களும் போராளிகளும் தப்புகின்றனர். இடமும் மாற்றியமைக்கப்படுகின்றது. ⏬ 29/3/2000 நண்பகல் 1:00 - வெற்றிலைக்கேணி கடற்கரை வழியாக உடுத்துறையிலிருந்து வத்திராயன் பொக்ஸ் வரை தொடர்ந்து முன்னேறிச் சென்ற கட்டளையாளர் கேணல் தீபனின் படைத்தொகுதியின் தாக்குதலாலும், குடாரப்பில் தரையிறங்கி மாமுனையைக் கைப்பற்றி செம்பியன்பற்று கடற்கரை வழியாக வந்த படையணிகளின் தாக்குதலாலும் மருதங்கேணியில் இருந்த தாழையடித் தளம் தமிழரிடம் வீழ்கிறது. ⏬ 29/3/2000 பிற்பகல் - மருதங்கேணிச் சந்தி படைத்தளமும் கைப்பற்றப்பட்டு தரையிறங்கியோரும் தரைவழியால் வந்தோருமாக இவ்விடத்தில் கைகுலுக்குகின்றனர். தரையிறங்கியோருக்கான 12 கிமீ நீள தரைவழி வழங்கல் பாதையும் திறக்கப்படுகின்றது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 15 கிமீ நீளமும் 2 கிமீ அகலமுமான 30 சதுர கிமீ நிலப்பகுதி புலிகளால் மீட்கப்பட்டது. இத்தோடு ஓயாத அலைகள் மூன்றினது கட்டம் நான்கின் முதலாம் கட்டம் நிறைவடைந்து படையணிகள் யாவும் இரண்டாம் கட்டத்திற்கு நகர்கின்றன. ஆதாரம்: 'வேருமாகி விழுதுமாகி', (பக்கம் 349 - 366) 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்', (பக்கம் 86 - 87) 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்', (சூசை அவர்களோடான நேர்காணல் பகுதி) எரிமலை சூன் 2001, (பக்- 45) உயிராயுதம் - பாகம் 8 விடுதலைப்புலிகள், வைகாசி-ஆனி, 2000 பக்கம்: 12-13 & 15 ஓயாத அலைகள்-3 கட்டம்-4 | நிகழ்படம் ஈரத்தீ திரைப்படம் https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4881 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4884 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4885 https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/000329ltte.htm https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/000422ltte.htm#LTTE ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
Unceasing waves 4 ltte.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
நிகழ்படங்கள் குடாரப்புத் தரையிறக்கமும் அதனோடான ஆனையிறவு மீட்புச் சமர் பற்றிய நிகழ்படம்: https://eelam.tv/watch/க-ட-ரப-ப-தர-ய-றக-கம-ஓய-த-அல-கள-3-கட-டம-4-kudarappu-landing-ஆன-ய-றவ-ம-ட-ப-ச-சமர_mslZYeVtH66ksnM.html 'ஈரத்தீ' | பளை சேணேவித்தளத் தாக்குதல் தொடர்பான திரைப்படம்: https://eelam.tv/watch/ஈரத-த-eerathi-தம-ழ-ழத-த-ர-ப-படம-tamil-eelam-movies_6qsjnVEuiBeDkrb.html ******
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
படிமங்கள் "தடைகள் தாண்டினர் புயற்புலிகள் - வெற்றி தந்துவிட் டோடினர் நரிப்படைகள்" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து வசமான தாழையடியும் வசப்படுத்தியோரும்... 'வசமான தாழையடியினுள் நடந்து செல்லும் தமிழீழ சிறப்புப்படையினர் (கரும்புலிகள்)' 'தாளையடியில் சிங்களவரிடமிருந்து பரம்பிய (overrun) காவலரண்களில் போராளிகள் நிலைகொண்டுள்ளனர்' ''தாளையடி துணை அஞ்சலகத்தினுள் நிற்கும் இம்ரான் பாண்டியன் படையணியின் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியினர்'' ******
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
Screen shot taken based on the video, dated to april 2000.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
படிமங்கள் தரையிறக்கத்தின் பின் மாமுனை பாலத்திலிருந்து நகர்ந்து இத்தாவிலை அடையும் போது... இவர்கள் முதலில் 2கிமீ தரவை வெளியையும், பின்னர் 1 1/2 கிமீ வீரக்களி ஆற்றின் நீரையும், பின்னர் சதுப்பு நிலங்களையும் கண்டல் பற்றைகளையும் கடந்தே இத்தாவில்-இந்திரபுரத்தை அடைந்தனர். 'இத்தாவில் பெட்டி நோக்கி தரவைப் பகுதியூடாக நகரும் தமிழர் சேனையின் "ஆர்.பி.ஜி. கொமாண்டோக்கள்" ' 'இதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் படிமமே' 'இரண்டு "ஆர்.பி.ஜி. கொமாண்டோ" சூட்டணிகள் உட்பட்ட ஒன்பது பேர் கொண்ட ஒரு செக்சன் நீரைக் கடக்கிறது' மாமுனை பாலமூடாக வீரக்களி ஆற்றை பெண் புலிகள் கடக்கும் போது சதுப்பு நிலங்களை பெண் போராளிகள் கடக்கின்றனர் சதுப்பு நிலங்களை பெண் போராளிகள் கடக்கின்றனர் வீரக்களி ஆற்றை கடக்க தயாராகும் போராளிகள் வீரக்களி ஆற்று நீரூடாக இத்தாவில் பெட்டி நோக்கி இழுத்துச் செல்லப்படும் கணையெக்கிகள்: '120 மிமீ கணையெக்கியை களப்பு நீரினூடாக இழுத்துச் செல்லும் பெண் போராளிகள்' '120 மிமீ கணையெக்கிகளை களப்பு நீரினூடாக இழுத்துச் செல்லும் ஆண் போராளிகள்' 'இத்தாவிலை அடைந்த கொஞ்ச நேரத்திற்குப் பின், அடுத்து செய்ய வேண்டிய செயற்பாடுகள் குறித்து கட்டளையாளர் கேணல் பால்ராஜ் விளக்குகிறார். இப்பெட்டிக்குள் வைத்து புலிகள் மொத்தம் 7 நடவடிக்கைகள் செய்தனர்'
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
படிமங்கள் "தரையிறக்கினார் கடற்புலிகள் - பகை தலையிறக்கினார் தமிழ்ப்புலிகள் கரையிறக்கினார் கடற்புலிகள் - கடற்கலம் தரையிறக்கினார் கரும்புலிகள்" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து விடியப்புறம் போல தரையிறங்கிய மகளிர் படையணிகளின் போராளிகள் கரையோரமாக நடந்து செல்லும் காட்சி
- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
large.1730525420_kadalpulikal.jpg.e3c67ea0861dc539c2c420eb69e79b59.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்